#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#உஜ்ஜியினிஆலயங்கள்💫
12.10.2022
பதிவு. 4
9. Shaktipeeth Shri Gadhkalika Mata Temple,
#GADHKALIKADEVIMANDIR
#காட்காளிகாமாதாஆலயம்.
(பிரார்த்தனை ஸ்தலம்)
🛐ஸ்ரீ கட்கலிகா ஆலயம் என்று பாரம்பரியமாக அறியப்படுகிறது.
🛐காலத்தினால் அழியா காவியம் படைத்த கவிச்சக்கரவர்த்தி காளிதாசர். விக்ரமாதித்யனின் நவரத்தினத்தின் முக்கிய ரத்தினங்களில் ஒன்றான காவியமான சகுந்தலம் படைத்தவர் மகாகவி காளிதாசர், இவர் வணங்கி அருள் பெற்றதலம். மிகவும் புராதானமான ஆலயம்.
🛐கவி காளிதாசர் விக்கிரமாதித்திய அரசவையில் பெரும் புலவராக இருந்தவர். சாகுந்தலம், மேகதூதம், முதலிய நூல்கள் இயற்றிய பாரதத்தின் புகழ் பெற்ற கவிஞர்.
🛐கருவரை மண்டபத்தையும், கருவரையையும் நோக்கி காளியின் வாகனமான அழகிய ஒரு சிங்கம் சிலை வைத்து சிறிய மண்டபத்துடன் உள்ளது.
🛐இவ்வாலயம் சிதைந்துவிட்டிருந்து மீட்டு புதிய அமைப்பில் கட்டி வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. சிறிய ஆலயம்.
🔮ஒரு பெரிய உயரமான மண்டபமும், ஒரு கருவறையும் உள்ளது. கருவறையில் காளிமாதாவின் பெரிய முக உருவம் உள்ளது. உயரமான சற்றுப் பெரிய முன்மண்டபத்தில் இருந்து தரிசனம் செய்யலாம்.
🔮ஒரே சுற்றுப் பிரகாரம். உயரமான கல்விளக்குத் தூன் ஒன்றுள்ளது.
🛐செங்கற்கள் மற்றும் கிமு முதல் நூற்றாண்டின் ஏராளமான பகுதிகள். கோயிலின் அடித்தளத்தில் இருந்து மீட்கப்பட்டது. பேரரசர் ஹர்ஷவர்தன் இந்த கோவிலை புதுப்பித்துள்ளார்.
🛐சங்க (Shung)காலம், கிமு முதல் நூற்றாண்டு, குப்தர் காலம், நான்காம் நூற்றாண்டு மற்றும் பர்மர் காலம், பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் சிலைகள் மற்றும் அடித்தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
🛐ஏழாம் நூற்றாண்டில் பேரரசர் ஹர்ஷவர்தன் இந்த கோவிலை புதுப்பிக்கின்றார். பர்மர் ஆட்சி பத்தாம் நூற்றாண்டில் செய்யப்பட்ட கற்கோவில் பகுதிகள் மறுசீரமைப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
🛐20 ஆம் நூற்றாண்டில், பாரம்பரிய பூசாரி ஸ்ரீ சித்நாத்ஜி மகராஜ் விக்ரம் சம்வத் 1944 இல் புதுப்பித்தார்.
🛐ஆலயத்தினைப் பற்றிய குறிப்பு விபரங்களும் தனியே எழுதி வைத்துள்ளனர். ஏராளமான பக்தர்கள் வந்து வணங்கி அருள் பெற்று செல்கின்றனர்.
🛐உஜ்ஜியினில் தரிசிக்க வேண்டிய முக்கிய இடங்களில் இதுவும் ஒன்று.
இதன் அருகில் உள்ள மற்ற இரண்டு ஆலயங்கள்:
Shree Vaibhav Mahalakshmi mandir
🛐இந்த ஆலயம் மகாலெட்சுமியை மூலவராகக் கொண்டது. பெரிய உருவத்தில் அமைந்தது. இந்த ஆலயமும், காளி ஆலயம் மிக அருகில் உள்ளது.
Sri Sethiman Ganesh temple
🛐இது சீதா, ராமரால் பிரதிஸ்டை செய்யப்பட்ட கணபதி ஆலயம். ஷிப்ரா நதி அருகில் உள்ளது. காளி ஆலயம் அருகில் இருக்கிறது. சிறிய ஆலயம். கணபதி மூலவர்.
மீள் தரிசனம்.
12.10.2022
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#உஜ்ஜியினிஆலயங்கள்💫
🛐பயணங்கள் தொடரும்....
நன்றி🙇🏼♂️🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்_காரைக்கால்
#ஜோதிர்லிங்கதரிசனம்2022
#ஜோதிர்லிங்கதரிசனம்
#மகாகாளேஸ்வரர் #உஜ்ஜியினிஆலயங்கள்
#ஜோதிர்லிங்கம்
#உஜ்ஜியினி , #மத்தியப்பிரதேசம்
🛕#மகாகாலேஸ்வரர்ஆலயம்
No comments:
Post a Comment