#உஜ்ஜியினிஆலயங்கள்💫
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#உஜ்ஜியினிஆலயங்கள்
♻️ உஜ்ஜியினி பெருநகரம் சார்ந்துள்ள கோயில்கள்:
💥உஜ்ஜியினி, பாரதத்தின் முக்கிய ஆன்மீக பெருநகரம்; ஏராளமான புராதானமான ஆலயங்கள் நிறைந்த அற்புத தலம். ஜோதிர்லிங்கம் உள்ள மகாகாளேஸ்வரர் ஆலயம் பெரிய வளாகப் பகுதி, ருத்தர சாகர் ஏரிக்கரையில் உள்ளது. சுற்றிலும் சில முக்கிய புராதான ஆலயங்களும், புதிய ஆன்மீக ஆலயக் கட்டிடங்களும், கட்டப்பட்டுள்ளது.
மூன்று முறை உஜ்ஜயினி சென்றுள்ளோம்.
ஒவ்வொரு முறையும் பல பல மாறுதல்கள் காணுகிறோம்.
⛳சுற்றுப்புறத்திலும், ஷிப்ரா நதிக்கரையிலும், உஜ்ஜியினியின் புறநகர் பகுதிகளிலும் நிறைய ஆன்மீக ஆலயங்கள் மற்றும் புராதான இடங்கள் உள்ளன. இவற்றில் சில குறிப்பிட்ட ஆலயங்கள், ஆன்மீக இடங்களை 12.10.2022 அன்று சென்று தரிசித்து வந்தோம்.
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#உஜ்ஜியினிஆலயங்கள்💫
1🛐ஸ்ரீ பாத கணபதி ஆலயம்:
12.10.2022
🌟மகாகாளேஸ்வரர் புனித ஆலயத்தின் வடக்குப்புறம் உள்ள ஸ்ரீபாத கணபதி என்ற படா கணபதி ஆலயம், புராதானமானது. பிரதான சாலையின் ஓரத்தில் உள்ளது. நுழைவில் சிறிய மன்டபம் உள்ளது. இதன் உள் நுழைந்ததும் மிகப் பெரிய உருவத்தில் கணபதி உள்ளார்.
🌟ஆலயத்தின் உட்பகுதியில் பஞ்சமுக ஹனுமான் உலோகத்தால் அமைக்கப்பட்டு நடுநாயகமாக ஒரு சிறிய மண்டபத்தில் உள்ளார்.
🌟இடைவெளியில் ஒரு தொட்டில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள அம்மன் வைத்து அதை அசைத்தும், தொட்டும் வழிபாடு நடைபெறுகிறது.
🌟இவ்வாலயம், மகாகாளேஸ்வரர் ஆலயம் அருகில் உள்ளது. இதுவும் பிரார்த்தனை ஆலயம் போன்று வழிபடுகிறார்கள்.
முதலில், இவரை தரிசித்து விட்டே, மகாகாளேஸ்வரர் தரிசிக்க வேண்டும் என்று சிலர் கூறுவார்கள்.
(10.3.2021 ல் தரிசித்த அனுபவக் குறிப்புகள்:
https://m.facebook.com/story.php?story_fbid=5409904815751398&id=100001957991710)
12.10.2022
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#உஜ்ஜியினிஆலயங்கள்💫
2.🛕பாரதமாத ஆலயம்:
12.10.2022
🌟மகாகாளேஸ்வரர் ஆலய முன்புறம், தென்கிழக்குப்பகுதியில் ஒரு பாரதமாத ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இது சுமார் 20 படிகள் உயரத்தில் மிகப்பெரிய முன்மண்டபம் மற்றும், உள்மன்டபம் கொண்டது. அடுத்துள்ள கருவரையில் பிரமிக்க வைக்கும் பாரதமாத சிலை கையில் கொடியுடன் பின்புறம் சீறிப் பாயும் சிங்கம் ஒன்றுடன், மிக அற்புதமாக உள்ளது.
🌟இதன் புறச்சுற்றுப் பாதை, பால்கனி அமைப்பில்உள்ள பகுதியும் உள்ளது.
இதிலிருந்து ருத்ரசாகர் எரியின் அழகிய அமைப்பும், ஏரி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆன்மீக பூங்கா பகுதிகளையும், உஜ்ஜியினி நகரம், ஆலய வளாகம் அனைத்தையும் காணலாம்.
🌟முன்புறம் ஆலய நுழைவுப்படிகளின் நடுவில் பாரததேசம் இயற்கையான நில அமைப்புடன் (3Dயில்) வடிவமைக்கப்பட்டு, அதில் பாரத நதிகளை வடிவமைத்தும் அனைவரையும் கவரும் வகையில், கருத்துடன் நல்ல அமைப்பில் உள்ளது.
🌟பாரதமாதா ஆலயம் மிகப்பெரிய வளாகத்தில் அமைந்துள்ளது, அருகில் தங்கும் இடங்கள், Car Parking வசதிகளும் உள்ளன.
10.3.2021 ல் தரிசித்த அனுபவக் குறிப்புகள்:
https://m.facebook.com/story.php?story_fbid=5419530171455529&id=100001957991710
12.10.2022
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#உஜ்ஜியினிஆலயங்கள்💫
3. 🏞️ருத்திர சாகர் ஏரி வளாகம்-ஆன்மீக பூங்கா:
12.10.2022
⚛️ஆலய மேற்குப் பகுதியில் உள்ள உஜ்ஜியின் ஏரி, அல்லது மகாகாளேஸ்வரர் ஏரி என்ற ருத்திர சாகர் ஏரி, மற்றும் ஏரி வளாகம், பகுதிகளைச் சிறந்த ஆன்மீகப் பூங்காவாக தற்போது மாற்றப்பட்டுள்ளது.
⚛️ஏரியின் கரைப்பகுதிகளை மிக சிறந்த ஆன்மீக பூங்காவாக மாற்றி, நமது பெருமைக்கு உரிய பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடிஜி அவர்களால் நாங்கள் உஜ்ஜியின் சென்ற 10.10.2022 அன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.
☸️இதில், மிகப்பெரிய சிவன், விநாயகர், சுப்பிரமணியர், முதலிய பல்வேறு கடவுளர்களின் மற்றும் சப்தரிஷிகளின் பிரமாண்டமான சிலைகள், மற்றும் பல்வேறு இறை உணர்வு கட்டிடங்களும், சிவபுராண காட்சி சிற்பங்களும் அமைக்கப்பட்டு மிக அற்புத ஆன்மீக பூங்காவாகவடிவமைக்கப்பட்டு உள்ளது. அனைவரும் கான வேண்டிய அற்புத பூங்கா.
☸️ஏரியின் நடுவில் விக்கிரமாதித்திய மகாராஜா சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும், மிகப்பெரிய சிலையும் உள்ளது.
12.10.2022
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#உஜ்ஜியினிஆலயங்கள்💫
4.ராம்தீர்த்தக் கட்டம் (RAM GHAT),
ஷிப்ரா நதிக்கரை:
12.10.2022🌼மகாகாளேஸ்வரர் ஆலயப்பகுதியை அடுத்து இருக்கும் மிகப்பெரிய ருத்ரசாகார் என்ற ஏரி பகுதி உள்ளது. இதை அடுத்து சுமார் 1 கி.மீ. தூரத்தில்தான் ஷிப்ரா நதி உள்ளது.
🌼பொதுவாக உஜ்ஜியினியின் பெரும்பகுதியில் ஷிப்ரா நதி உள்ளது.
🌼ஷிப்ரா நதிக்கரையில் உள்ள ஸ்தான கட்டடங்கள் பல உண்டு.
🌼சிப்ரா நதி புண்ணிய தீர்த்தங்களில் ஒன்று.புராதானமானது.
🌼தேவாமிர்தம் சிந்திய இடங்களில் இதுவும் ஒன்று.
🌼பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா விழாவின் போது ஏராளமான லட்சக்கணக்காண பக்தர்கள் பாரதம் முழுதும் இருந்து இங்கு வந்து நீராடுகிறார்கள்.
🌼பக்தர்கள் நீராடுவதற்கு வசதியாக நீளமான படித்துறைகள் இருபுறமும் உள்ளன. பெரிய சிறிய ஆலயங்கள் இருகரைகளிலும் உள்ளது.
🌼தினம் மாலையில் ஆர்த்தி வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. பக்தர்கள் பிரார்த்தனைகள் செய்யவும், பூசை செய்யவும் பண்டாக்கள் உதவுகிறார்கள்.
🌼எல்லா பொழுதிலும் மனிதர்கள் நடமாட்டம் உள்ளது. இங்கு நீராடி வழிபடுதல் மிகவும் புனிதமானது.
( ஏற்கனவே ஒரு முறையும், மற்றும் 10.3.2021 அன்றுசென்ற போதும், காலையில் சென்று நீராடி வந்தோம்.)
10.3.2021 ல் தரிசித்த அனுபவக் குறிப்புகள்:
https://m.facebook.com/story.php?story_fbid=5404498276292052&id=100001957991710
🛐பயணங்கள் தொடரும்....
நன்றி🙇🏼♂️🙏
12.10.2022
என்றும் அன்புடன்
சுப்ராம்.அருணாசலம்_காரைக்கால்
#ஜோதிர்லிங்கதரிசனம்2022
#ஜோதிர்லிங்கதரிசனம்
#மகாகாளேஸ்வரர் #உஜ்ஜியினிஆலயங்கள்
#ஜோதிர்லிங்கம்
#உஜ்ஜியினி , #மத்தியப்பிரதேசம்
🛕#மகாகாலேஸ்வரர்ஆலயம்
No comments:
Post a Comment