பதிவு: 5.3.
4. #வினாஉரை_பதிகங்கள்
#திருமுறைகளில்தமிழமுதம்:
#சைவத்திருமுறைகள்:
🙏🏻🙆♀️⚛️❄️✡️🙇♂️🔱🕉️🔱🙇♀️⚛️🙆🏻♂️🙏🏻
#சம்பந்தர்அமுதம்:
💥பதிவு : 5.3.
4. #வினாஉரை_பதிகங்கள் :
🙏🎪🙇♂️அன்பு வேண்டுகோள்:🙇♀️🎪🙏
🙆#ஆன்மீகமே_தமிழ்🙆🏼♂️
👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.
🎎2.இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் தமிழின் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே.
🙏🙇♂️நன்றி🙇♀️🙏🏻
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
பதிவு: 5.3.
4. #வினாஉரை_பதிகங்கள் :
திருஞானசம்பந்தரின் அற்புத பதிக அமைப்பை ப்பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.
பாடல் குறிப்புக்களையும், சிறப்புகளையும் மிகச் சுருக்கமாகவே தந்துள்ளேன். ஒவ்வொரு பதிகமும் தனித்தனியாக உணர்ந்து சிந்தித்தால் இறை பேராற்றலும், அருளும் உண்மை பொருளும் அவரவர் திறனறிவுக்கு நிச்சயம் கிட்டும். எனவே, இப்பதிவு ஒரு அறிமுகமே. பலன் பெற அன்புடன் வேண்டுகிறேன்.
பொருள் :
வினவுதல் வழி உரைத்தல்:
பாட்டுடைத் தலைவன் அருட்செயல்களை பல்வேறு
கோணத்தில், கிண்டல், கேலி செய்வது போன்றும், எளிமை செய்தும் தலைவனின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் வெளியிட்டு அருளப்பட்ட பதிகங்கள்.
இந்த பதிவு : இரண்டாம் திருமுறையில்
வரும் சில பாடல்கள் மட்டும்.
🙏1.
இரண்டாம் திருமுறை
பதிகம்:2.137
தலம் : பூந்தாராய்
பாடல் முதலடி: 'செந்நெல்'
பண்: இந்தளம்
பதிக சிறப்பு:
I' 'சொலீர்' என்று அனத்துப் பாடலிலும் கேள்வி வைத்துள்ளார்.
1.செஞ்சடையில் பாம்பு வைத்தது,
2.இடப வாகனம் ஏறியது,
3.யானை தோல் உரித்தது,
அங்கத்தில் பங்கமாக அர்த்தநாரியாக இருப்பது,
4.காமனை சாம்பல் பொடியாக்கியது,
5. கங்கையை சடையில் வைத்தது,
6. காதில் குழையும், தோடும் அணிந்தது.
7. அரக்கன் ஆற்றலை அழித்தருள் செய்தது;
8. மாலும், அயனும் தேடியும்
காணதது.
9. பிறமதத்தவர், பொருளற்றதை
உரைப்பது ஏன்.
இவ்வாற்றலுக்கும், அருளுக்கும் என்ன காரணம் என்பதாக 'சொலீர்' என்று ஒவ்வொரு திருப்பாடலிலும் வினா
கேட்டுபாடல் அமைத்துள்ளார்.
II. மேலும், முதல் இருவரிகளில் தலத்தின் சிறப்பை விளக்கும் முகமாக அதன் இயற்கை வளத்தையும், வனப்பத்தையும், மிக அழகாக சுட்டிக் காட்டி, இப்படிப் பட்ட பூந்தாராய் என்னும் தலத்தில் வசிக்கும் இறையே என்று குறிப்பையும் கூறி வியக்க வைக்கும் பாடல்கள் சிறப்பு வாய்ந்தது.
Ill. திருக்கடைக்காப்பில்
"மகர வார் கடல் வந்தனவும் மணற் கானல்வாய்ப்
புகலி ஞானசம்பந்தன் எழில்மிகு பூந்தாராய்ப்
பகவனாரைப் பரவு சொல்மாலைப் பத்தும் வல்லார்
அகல்வர் தீவினை நல்வினை யோடுடன் ஆவரே."
பொருள் :
சுறாமீன் விளங்கும் கடல் மணல் சேரும் சோலைகளுடைய புகலியின் சம்பந்தன், எழில்மிகு பூந்தராய் பதியின் இறைவரைப் போற்றிய இத் தமிழ் சொல் மாலையாக விளங்கும் பாடல்களை பாட தீவினை அகன்று நல்வினை பெறலாமே; என்று பதிகப் பலனையும் கூறிப்பிட்டுள்ளமையும் சிறப்பே.
2.🌺🌷
இரண்டாம் திருமுறை
பதிகம்:138
தலம் : திருவலஞ்சுழி
பாடல் முதலடி: 'விண்டெலாமர்'
பண் : இந்தளம்
பதிகச் சிறப்பு:
1. ஒவ்வொறு பாடலின் முதல் இருவரிகளும் திருவலஞ்சுழி தலத்தின் சிறப்பை, வனப்பத்தை, வளத்தை, இயற்கையோடு இணைந்து வாழும் உயிரினங்களின் காட்சிகளை ஓவியமாகக் காண்பித்து, இப்படிப்பட்ட தலத்தில் வாழுகிறார் நம் இறைவன்; என்று நமக்கு உணர்த்துவதையும், நாம் உணர வேண்டும்.
2. சொலீர்....என்று எல்லாப் பாடல்களிலும் இறைவனை நோக்கி வினா எழுப்புகிறார்.
3. இறை அருட் செயலான, பிரம்ம கபாலம் ஏந்த விரும்பியது, பலி கொண்டது, ஏன் என்று இறைவனை வேண்டியருளுகிறார்.
மேலும்.
4.திருக்கடைக்காப்பில்.
"வீடு ஞானமும் வேண்டுதிரேல் விரதங்களால்
வாடின் ஞானமென்னாவதும்
எந்தை வலஞ்சுழி
நாடி ஞானசம்பந்தன்
செந்தமிழ் கொண்டு இசை
பாடு ஞானவல்லார் அடி
சேர்வது ஞானமே."
பொருள் :
வெறும் விரதங்களால் வீடு பேறு, முக்தி அடையமுடியாது. தமிழ் ஞானசம்பந்தர் பாடலை செந்தமிழ் கொண்டு இசையோடு பாடினால், ஞானம் கிடைக்கும் முத்தி அடை முடியும் என்கிறது சிறப்பு.
3.🌹🌷🌺
இரண்டாம் திருமுறை பதிகம்.2.139
தலம் - திருத்தெளிச்சேரி
பாடல் முதலடி: 'பூவலர்ந்தன
பண்: இந்தளம்
பதிகச் சிறப்பு.
1. ஒவ்வொரு பாடல்களின் முதல் இரு வரிகளிலும்,
திருத்தளிச்சேரி தலத்தின் இயற்கை வளம் பக்திச் சிறப்பும், மனிதர் மான்பும், குறிப்பிட்டு இப்பதியில் வசிப்பவரே - திருத்தெளிச்சேரியீர் என்று
இறைவரை விளித்து அவர்தம் அருட்பேராற்றலை வியந்து வினவுகிறார்.
1. பன்றி வடிவ அரக்கனை அழித்து, வேடுவத்திருக்கோலம் பூண்டு உமாதேவியுடன் நின்றது
2.காமனை பாணம் எய்து காய்ந்தது.
3. உமாதேவியுடன் காட்சியளித்தது.
4. உமாதேவியரை ஒரு பாகத்தில் வைத்தது.
5. பிச்சை ஏற்க நடந்தது
6. யானையைத் கையால் தாக்கி அழித்தது.
7. கொன்றைமலர் சூடியது
8. அரக்கன் தலைகளையும், கரங்களையும், நெறித்த திறன் மற்றும்,
9.9 வது பாடலில்
'காலெடுத்த திரைக்கை
கரைக்கெறி கால் சூழ்
சேலடுத்த வயற்பழ
னத்தெளிச் சேரியீர்
மால டித்தல மாமலரான் முடி தேடியே
ஓலமிட்டிட எங்ஙனம் ஓருருக் கொண்டதே'.
(கால் = காற்று)
கடற்காற்றானது அலைகளாகிய கைகளால் கரைக்கு நீரை அள்ளிவீசுகிறது = கவிநயம் வியந்துணரத்தக்கது.
திருமால் உனது திருவடியும், பிரமன் உமது திருமுடியும் தேடியும் காணப்பெறாமல் ஓலம் இட்டு வருந்தி நிற்குமாறு, ஓர் உருவத்தைக் கொண்டு விளங்கியது எங்ஙனம் என்று வினவுகிறார்.
10. சாக்கியர், சமணர்களின் பயனற்ற திறத்தினை நீக்கியது.
மேலும்.
திருக்கடைக்காப்பில் வரும்
'திக்குலாம் பொழில் சூழ்தெளிச்
சேரி எம் செல்வனை
மிக்க காழியுண் ஞானசம் பந்தன் விளம்பிய
தக்க பாடல்கள் பத்தும்வல்
லார்கள் தடமுடித்
தொக்க வானவர் சூழ இருப்பவர் சொல்லிலே,'
என்றார்.
பொருள்:
பொழில் சூழ்ந்த தெளிச்சேரியில் வீற்றிருக்கும் பரமனை, காழி ஞானசம்பந்தன் விளம்பிய தகைமை பொருந்திய இத் திருப்பதிகத்தினை மனதார நாவினால் சொல்லினாலே தேவர் சூழ இருப்பார் என்று உரைத்தார்.
4. 🌹🌷🌺🍁
இரண்டாம் திருமுறை
பதிகம்:140
தலம் :-திருவான்மியூர்
பண் : இந்தளம்
பாடல் முதலடி : 'கரையுலாங் கடலிற்'
பாடல் சிறப்பு:
1. பாடல்களின் முதல் இருவரிகள் தலத்தின் இயற்கை வளம், உயிர் காட்சிகள், மனிதர்கள், குறிப்பாக மங்கையர் பக்திப்பாங்கு, இவற்றின் சிறப்பைக் குறிப்பிட்டு, இத்தலத்தில் வசிக்கும் இறைவரை அழைத்து வினாவுகிறார்..
1. ஒவ்வொறு பாடலிலும் 'சொலீர்.'.. என்று குறிப்பிட்டு
வினவுகிறார்.
1. அம்மை அப்பராக - அர்த்தநாரியாக விளங்குவதன் பொருள்;
2. செம்மையான திருமேனி கொள்ளச் செய்தது;
3. யாணையை உரித்து தோலைப் ஆடையாகப் போர்த்தியது, நெருப்பை கரத்தில் கொண்டு நடனம் புரிந்தது
4.நஞ்சுண்டு வானவர்க்கு இன்னருள் புரிந்தது.
5. செஞ்சடையில் விண்பிறை வைத்தது
6. முப்புரத்தை எரியூட்டிய வல்லமை
7. சனகாதி முனிவர்கட்கு வேதப் பொருளுரைத்தது.
8. பூதகணங்கள், பேய்கள் சூழ நடனம் ஆடுவதும்
9. தாருகாவனத்து மாதர்கள் இல்லம் சென்று பலியேற்றது
10. சமணர், சாக்கிய, பிற
மதத்தவர் பொய்யுரை பகர்வது
இவை எல்லாம் ஈசன் அருளியது ஏன் என்று வினாவின் வழி அறிவுருத்தும் பாடல்களாக அமைத்தருளியுள்ளார்.
மேலும்,
திருக்கடைக்காப்பில்,
'மாதொர் கூறுடைநற்றவ
ணைத்திரு வான்மியூர்
ஆதியெம்பெருமானருள்
செய்ய வினாவுரை
ஒதியன்றெழு காழியுண்
ஞானசம் பந்தன் சொல்
நீதியால் நினைவார் நெடு
வானுலகு ஆள்வரே. '
என்றார்.
பொருள் :
'எம்பெருமானை, அருள் செய்யும் பொருட்டு வினாவுரையாக ஓதும் காழியாரின் இப்பதிகம் ஒதுவார், வானுலகை ஆள்வார்கள்'. என்று அமைத்துள்ளார்.
5-🌸🏵️💮🌼🌷
இரண்டnம் திருமுறை
பதிகம்:165
தலம் - திருப்புகலி
பாடல் முதலடி - 'முன்னிய'
பண் : இந்தளம்
பாடல் சிறப்பு :
1. திருவிராகப் பதிகம்.
2. இது 12 பெயர்கள் கொண்ட
சீர்காழி தலத்தின் ஒரு பெயரான திருப்புகலி என்னும் தலப் பெருமையையும் கூறும் பதிகம்.
3.முதல் இரண்டு வரிகள் இறைவன் பெருமையையும், அருட்சிறப்பையும் வைத்து, ஈசன் வாழும் இடம் (எது) என்று வினாவாகவும், அடுத்துவரும் இருவரிகளில் தலப் பெருமை உரைத்து திருப்புகலியாமே என்று என்ற பதில் அமைப்பில் பாடல் அமைத்துள்ளமை சிறப்பு.
பொருள் :
மூவுலகிலும் சிறப்பு வாய்ந்த தலைவர் வசிக்கும் பதியாது என்றும்,
பாடும் பக்தர்கள் விரும்பிடும் இடம்;
இறைவன் உமையோடு வீற்றிருக்கும் பதி;
அறுவகை சமயத்திற்கும் அருள்புரியும் ஈசன் பதி;
நஞ்சினை உண்டவன் உறையும் பதி;
வல்வினை தீர்த்தருளும் மைந்தன் இடம்;
இராவணை அடக்கியருள் செய்த அண்ணல் இடம்;
பிறையும், அரவமும் வைத்தாடும் ஈசன் உறையும் பதி;
பிற சமய மொழிகளை ஏற்காத அரும் ஞானிகள் வாழும் ஊர் எது என்றும் இறைவரின் அருள்செயல்களை விவரித்து அவர் வசிக்கும் ஊர் எது என்பது வினாவாகவும்,
இதற்கு விடையாக, பதியின் சிறப்புகளாக
தேவர்கள் துதி செய்து வணங்கும் திருப்புகலி என்றும்
தாமரை மலரின் வளம் நீர் வளம், சோலைகளின் மண் வளம் நிறைந்த ஊர்,
சிவகணத்தவர் கூடியிருந்து போற்றும் ஊர்,
செழுமையான வயல்கள் நிறைந்த ஊர்.
தென்னைமரத்திலிருந்து தேன் பெருகும் வளம் மிக்க ஊர்,
செல்வ செழிப்பு மிகுந்தவூர்.
திருப்புகலியாமே என்று;
ஒவ்வொரு பாடல்களிலும், இறைவரின் சிறப்பை உணர்த்தி அவர் உறையும் இடம் எது என்று வினாவி, அதற்கு பதில் தரும் வகையில் தலத்தின் இயற்கை வளம், உயிர்வளம், தலப் பெருமையை விளக்கி அது திருப்புகலியாமே என்று விடையாக அமைத்திடுவார்.
திருக்கடைக்காப்பில்,
'செந்தமிழ் பரப்புறு
திருப்புகலி தன் மேல்
அந்தமுதலாகி நடுவாய பெருமானைப்
பந்தனுரை செய்தமிழ்கள்
பத்தும்இசை கூர
வந்தவணம் ஏத்துமவர்
வானமுடையாரே ''
என்று பதியின் சிறப்பு போற்றி வினா விடையமைப்பு பதிகம் அருளியுள்ளார்.
6.🍂🍀🍁🌻🌸🌹
இரண்டாம் திருமுறை
பதிகம்: 170
தலம் : திருப்பழுவூர்
பாடல் முதலடி : 'முத்தன்மிகு '
பண் : இந்தளம்.
பாடல் சிறப்பு:
1. இது திருவிராக அமைப்புடைய பதிகம்.
2. இந்தப் பதிகம் பழுவூர் என்ற பதியின் சிறப்பை வினா விடையாக ஏற்றி அருள்செய்துள்ளார்.
3. முதல் இரண்டு வரிகள் இறைவன் பெருமை வைத்து, அவ்வீசன் வாழும் இடம் (எது) என்று வினாவாகவும், மற்ற இருவரிகளில் பதியின் சிறப்பு அமைத்து அப்பதி பழுவூரே என்ற பதிலமைத்து பாடல்களை தந்தருளியுள்ளார்.
பொருள்:
1.திரிசூலம் கொண்ட ஈசன் உரையும் இடம்?
சித்தர் வாழும் பழுவூரே.
2.முடியில்அரவம் வைத்த பெருமான் இடம்?
மாளிகையில் வசிக்கும் மகளிர் பாடல் இசைக்கும் பழுவூரே.
3..முப்புரம் எரித்தவர் இடம்?
மகளீர் மகிழ்ந்து நடனமாடுமூர்.
4.எண் எழுத்து, இசைக்கு முதற்
பொருளானவர் வசிக்குமிடம் ?
மலையாளர் தொழுது எத்தும் பழுவூரே.
5. மயானத்தில் நடனம் புரிபவர் இடம்?
வேத மொழி சொல்லும் மறையாளர் வாழும் ஊர்.
6.முப்புரம் எரித்தவர், யானையுரித்தவர் இடம்?
பாவையர்கள் கற்பொரு பொலிந்த ஊர்.
7. தக்கன் யாகம் அழித்தவர் இடம்?
மாதர்கள் தழையப் பெருகி வழிபடும் ஊர்.
8.கண்டத்தில் விடம் வைத்த,
இராவணனை அடக்கிய அப்பன் இடம்?
சோலைகளும், வயல்களும் நிறைந்த பழுவூர்.
9.மாலும், நான் முகனும் தேடியும் தோன்றாதவன் தழலாய் ஓங்கியவன் உறையும் இடம்?
வேதம் நாலும் உணர்ந்தவர் கூடி மகிழுமூர்.
10. சமனர், பெளத்தர்கள் சொல்கின்ற பொருத்தமில்லா மொழிகளை வெறுக்கும் ஈசன் உறைவிடம்
தாழை, தென்னை, பாக்கு செழித்தோங்கும் ஊர்.
மேலும்,
11. திருக்கடை காப்புப் பாடலில்...
'அந்தணர்கள் ஆனமலை யாளர் அவர் ஏத்தும்.
பந்தமலி கின்ற பழு வூர் அரணை ஆரச்
சந்தமிகு ஞானமுணர் பந்தனுரை பேணி
வந்த வணம் ஏத்துமவர் வானமுடையாரே.'
மலைநாட்டவர் பக்தியுடன் வந்து வழிபடுகின்ற ஈசனை ஞானம் உணர்ந்த ஞானசம்பந்தன் சொல்லி உரைத்தவாறு ஏத்தி வழிபடுகின்றவர்கள் தேவர்களாவர்; என்று உரைத்தார்.
🌸 🏵️🙏🙇♀️🌼🙇🌼🙏🏵️🌸📚🌹
💥இதுகாறும், இரண்டாம் திருமுறையில் தமிழ் ஞானசம்பந்தர் அருளிய வினாவுரை அமைப்பு பதிகங்களை சிந்தித்தோம்.
🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி மூல நூல்களையும் , கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.
☸️இவைகளில் சில பதிகங்களின் சிறப்பு பற்றித் தனித்தனியாக சிலக்குறிப்புகளுடனும், பொருள் விளக்கமுடனும் அடியேன் சிந்தைக்கு எட்டியவரை பல்வேறு அறிஞர்கள், சான்றோர்கள் நூல்களிலிருந்து தொகுத்து சில துளிகளாக அவ்வப்போது வழங்கப்படுகிறது.
பருக விரும்புவோர்; பொறுமையுடன் சென்று முன்பதிவுகளைப் பார்க்கவும்.
🔯படித்துப் பலன் பெறுங்கள்.
தமிழின் வளத்தை, சிறப்பை, பக்திப் பெருமையை உணருங்கள்; உலகுக்கு உணர்த்துங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம்..... ......
🙏நன்றி🙇♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்🙇♂️🙏🙇♂️
🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽
No comments:
Post a Comment