Wednesday, December 2, 2020

வினாவுரை பதிகம் மூன்றம் திருமுறை பதிகம்.

பதிவு: 5.4.
4. #வினாஉரை_பதிகங்கள் 
#திருமுறைகளில்தமிழமுதம்:
#சைவத்திருமுறைகள்:
🙏🏻🙆‍♀️⚛️❄️✡️🙇‍♂️🔱🕉️🔱🙇‍♀️⚛️🙆🏻‍♂️🙏🏻
#சம்பந்தர்அமுதம்:
💥பதிவு : 5.4.
4. #வினாஉரை_பதிகங்கள் : 
🙏🎪🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♀️🎪🙏
          🙆#ஆன்மீகமே_தமிழ்🙆🏼‍♂️
👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.

🎎2.இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் தமிழின் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே.                        
                 🙏🙇‍♂️நன்றி🙇‍♀️🙏🏻 
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
பதிவு: 5.4.
4. #வினாஉரை_பதிகங்கள் : 
திருஞானசம்பந்தரின் அற்புத பதிக அமைப்பை ப்பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.
பாடல் குறிப்புக்களையும், பொருளையும், சிறப்புகளையும் மிகச் சுருக்கமாகவே தந்துள்ளேன். ஒவ்வொரு பாடலும் தனித்தனியாக  உணர்ந்து சிந்தித்தால் இறை பேராற்றலும், அருளும் உண்மை பொருளும் அவரவர் திறனறிவுக்கு நிச்சயம் கிட்டும். எனவே, இப்பதிவு ஒரு அறிமுகமே. பலன் பெற அன்புடன் வேண்டுகிறேன்.

பொருள் :
#வினாஉரை_பதிகங்கள் =
வினவுதல் வழி உரைத்தல்:
பாட்டுடைத் தலைவன் அருட்செயல்களை  பல்வேறு கோணத்தில், கிண்டல், கேலி செய்வது போன்றும், எளிமை செய்தும் தலைவனின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் வெளியிட்டு அருளப்பட்ட பதிகங்கள்.

இந்த பதிவு : மூன்றாம் திருமுறையில் 
வரும் பதிகம்: 296 பாடல் பற்றியது.
🙏
மூன்றாம் திருமுறை:
பதிகம்: 296
தலம்: திருக்கண்டியூர் வீரட்டம்.
பண் : கொல்லி
பதிகம் முதலடி : 'வினவினேன் அறியாமையில் '
 பாடல் சிறப்பு:
1. வினாவுரைத் திருப்பதிகம்.
மாணிக்கவாசகர் திருச்சாழல் பதிகத்தை ஒப்புநோக்கத்தக்கது. மிகச்சிறப்பான பாடல்கள் அமைந்தது.
2.  இறைவரின் பேராற்றலை, அவர்தம் அடியார்களிடம், வினாவுரையாக அமைத்த அற்புத பதிகம்.
3. ஒவ்வொரு பாடலின்
முதலடியும் அடியாரிடம் அவர் பெருமை கூறி இறைவன் செயல் காரணம் வினவுகிறார்.
4.இரண்டாவது வரி தலப் பெருமை கூறுவது.
5.மூன்றாவது வரி இறைவன் சிறப்பை உணர்த்தியது.
4. கடைசி வரியில், இறைவரின்
 அருட்பேராற்றலை வியந்தது.

இப்பதிகத்தின் 11 பாடல்களின் பொருள் விளக்கத்தை சிறிது சிந்திப்போம்.
1️⃣
முதல் பாடல் :
1. அடியவர் பெருமை அமைத்து கேள்வி கேட்கும் விதம்: 'வினவினேன் அறியாமையில் உரை 
செய்ம்மினீர் அருள் வேண்டுவீர்'
2.. தலப் பெருமை:
'கனவிலார் புனல் காவிரிக்கரை மேய கண்டியூர் வீரட்டன் '
3. இறைவர் பெருமை:
'தனமுனே தனக்கு இன்மையோதமர்
ஆயினார் அண்டம் ஆளத்தான்'.
4. பேரருட் திறன் வியப்பு
'வனனில் வாழ்க்கை கொண்டு ஆடிப்பாடி இவ்
வையமாப்பலி தேர்ந்ததே '
பொருள் :
1.முதல்வரி:
ஈசனைத் தொழுது போற்றி அருள் நாடும் அன்பர்களே. அறியாமையால் வினவுகிறேன். உரைசெய்யுங்கள்.
2. இரண்டாவது வரி:
ஆரவாரமிகுந்து செல்லும் காவிரியின் கரையில் மேவும் கண்டியூர் வீரட்டன்
3. மூன்றாவது வரி:
தனக்கு இணையாக ஒருவரும் இல்லாதவரான ஈசன்
4. நான்காம் வரி:
பேராற்றல் வியப்பு: தனக்குவமையில்லாத, இறைவர்
மயானத்தில் ஆடியும் பாடியும் இவ்வுலகில் கபாலம் ஏந்தி பிச்சை கொண்டு விளங்குவது கண்டு வியத்தல்.
2️⃣
பாடல். 2.
1. 'உள்ள வாறெனக்கு உரை செய்மின் உயர்
வாய மாதவம் பேணுவீர்.
2. கள்ள விழிபொழில் சூழும்கண்டியூர்
வீரட்டத்துறை காதலான்.
3. பிள்ளைவான் பிறை செஞ்சடைம் மிசை வைத்ததும் பெரு நீரொலி
4. வெள்ளத் தாங்கியது என் கொலோமிகு
மங்கையான் உடனாகவே '.
பொருள் :
1.உயர்வாகிய மாதவத்தைப் பேணுகின்றவர்களே! உள்ளவாறு உரைப்பீரே.
2.தேன் கமழும் பொழில் சூழும் கண்டியூரில் வீற்றிருக்கும் வீரட்டநாதன், 
3.பிறை சந்திரனை சடையின் மீது வைத்ததும்,
4.பெருநீராகிய கங்கையைத் தாங்கியதும் என் கொல் !
என்று வினவுகிறார்.
3️⃣
பாடல் 3.
1. 'அடியர் ஆயினீர் சொல்லுமின் அறிகின்றிலேன் அரன் செய்கையைப் '
2. 'படியெலாம் தொழுது ஏத்து கண்டியூர் வீரட்டத்துறை பான்மையான்'
3. 'முடிவுமாய் முதலாய் இவ்வைய முழுதுமாய் அழகாயதோர்'
4. 'பொடியதார் திரு மார்பினிற்புரி
நூலும் பூண்டெழு பொற்பதே'

பொருள் :
1.அடியவர்கள் ஆகியவர்களே அரனின் செய்கையைச் சொல்லுங்கள்.
2. உலகமெல்லாம் தொழுது ஏத்துகின்ற கண்டியூரில் வீரட்டானத்தில் உறைகின்ற பெருமான், 
3.அந்தமாக, முதற் பொருளாய் உலகம் முழுதும் ஆகி இருப்பவர்;
4. திருவெண்ணீற்றினைத் திருமார்பில் பூசி, முப்புரி நூல் அணிந்து மேவும் பொற்பு தான் யாது? என்று வினவுகிறார்.
4️⃣
பாடல் 4.
1. 'பழைய தொண்டர்கன் பகருமின் பல
வாயவேதியன் பான்மையைக் '
2. கழையுலாம் புனல் மல்கு காவிரி
மன்னு கண்டியூர் வீரட்டன்.
3. குழையொர் காதினிற் பெய்து கந்தொரு குன்றின் மங்கை வெருவுறப்
4 புழைநெடுங்கைநன் மாவுரித்தது
போர்த்து உகந்த பொலிவதே. 

பொருள் :
1. வாழையடியாக வந்த திருக்கூட்ட  தொண்டர்களே பலவாகிய தன்மைகள் உடைய ஈசன் பாங்கினை பகருங்கள்.
2. காவிரி வளம் பெருகி மேவும் கண்டியூர் வீரட்டன்
3. குழையணிந்த காதிணன், மலைமகளான உமையவளுடன் இருப்பவர் ஈசன்.
 4. மலைமகள்  வெறுவுமாறு யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டது ஏன் என்று வினவுகிறார்.
5️⃣
பாடல்.5.
1. 'விரவிலாது உமைக் கேட்கின்றேன் ஈசன் அடி விரும்பி ஆட் செய்வீர் விளம்புமின்
2. கரையெலாம் திரை மண்டு காவிரிக் கண்டியூர் உறை வீரட்டன்
3. முரவமொந்தை முழாவொலிக்க முழங்கு பேயொடும் கூடிப்போய்ப்
4. பரவுவானவர்க்காக வார் கடல் நஞ்சம் உண்ட பரிசதே'.

பொருள்.
1. ஈசனடி போற்றும் தொண்டர்களே விளம்புங்கள்.
2. காவிரியின் அலைகள் பெருக மேவும் கண்டியூர் உறையும் வீரட்டனார்
3. மொந்தை, முழவு, வாத்தியங்கள் முழங்க பேய் பூத கணங்களும் சூழ நிற்கும் ஈசன்.
4. வாணவர்க்காக கடலில் தோன்றிய நஞ்சினை உடன் பரிசு என் கொல். என்றார்.
6️⃣
பாடல். 6.
1. 'இயலுமாறு எனக்கு இயம்புமின் இறைவனுமாய்
(வன்னுமாய்)  நிறை செய்கையைக்
2. கயல் நெடுங்கண்ணி னார்கள் தம்பொலி
கண்டியூர்உறை வீரட்டன்
3.புயல் பொழிந்திழி வானுளோர்களுக்
காக அன்றயன் பொய்ச்சிரம் 
4. அயல்நகவ்வது அரிந்து மற்றதில்
ஊணுகந்த அருத்தியே'.

பொருள் :
1. ஈசன் திருவடி வணங்கும் பக்தர்களே, நான் அறிந்து கொள்வதற்கு இயலுமாறு இயம்புவீர்
2. கயல் போன்ற கண்ணுடைய மகளிர் பொலிந்து வாழும் கண்டியூரில் உறையும் வீரட்டன்.
3. உலகில் மழை பெய்வித்து நலம்புரியும் தேவர்களுக்காக பிரமனுடைய (ஆணவத்தை) சிரத்தை கொய்த அருட் திறன். 
4. பிரம்மன் தலையைக் கொண்டு, பிச்சை ஏற்று உண்ணும் விருப்பத்தைக் கொண்டது ஏன் என்று வினவுகிறார்.
7️⃣
பாடல்: 7
1. திருந்து தொண்டர்கள் செப்புமின் மிகச்
செல்வன்றன்னது திறமெலாம்
2.கருந்தடங் கண்ணி னார்கள் நாம் தொழு 
கண்டியூர் உறை வீரட்டன்
3.இருந்து நால்வரோடு ஆல்நிழல் அறம் உரைத்ததும்மிகு வெம்மையார்
4. வருந்தவன்சிலை யால் அம்மாமதில்
மூன்றுமாட்டிய வண்ணமே.

பொருள்:
1. நன்கு சிவஞானத்தை உணர்ந்த சிவதொண்டர்களே, சிவபெருமானின் திறம் நன்கு உரை செய்வீராக.
2. மகளிர் கூடி தொழும் கண்டியூரில் உறையும் சிவன்
3. சனகாதி முனிவர்களாகிய நால்வருக்குக் கல்லால மரத்தின் நிழலில் இருந்து அறப்பொருள் உரைத்த திறன்.
4. முப்புர அரசுகளும், அவர்கள் கோட்டை மதில்களும் எரியுமாறு
மேருமலையை வில்லாக கொண்ட திறன் சிறப்பைக் கூறுக.
8️⃣
பாடல் : 8
1. நாவிரித்தரன் தொல்புகழ் பல
பேணுவீர் இறை நல்குமின்
2.  காவிரித்தடம் புனல்  செய்கண்டியூர்
வீரட்டத்துறை கண்ணுதல்
3. கோவிரிப்பயன் ஆன் அஞ்சு ஆடிய
கொள்கையும் கொடி வரை பெற
4. மாவரைத்தலத் தால் அரக்கனை வலியை  வாட்டிய மாண்பதே.

பொருள். 
1. நாவினால் ஈசன் புகழ் போற்றும் அன்பர்களே விடை கூறுங்கள்.
2. காவிரியின் நீர் வளம் பெருகும் கண்டியூர் சிவன்.
3. பசுவிலிருந்து பெறும் பஞ்ச கெளவியத்தை பூசிக்கும் பொருளாக ஏற்றவர்.
4. இரவணன் கயிலைமலையால் நெரியுமாறு விரலை ஊன்றி, வலிமையை அழித்து விளங்கிய மாண்பு யாது என வினவுகிறார்.
9️⃣
 பாடல் : 9
1. பெருமையேசர ணாக வாழ்வுறு மாந்தர்காள் இறை பேசுமின்
2. கருமையார்பொழில் சூழுந்தண்வயற்
கண்டியூர் உறை வீரட்டன்
3. ஒருமையால் உயர் மாலும் மற்றை
மலரவன் உணர்ந்து ஏத்தவே
4. அருமையால் அவருக்கு உயர்ந்து எரி
யாகிநின்ற அத் தன்மையே.

பொருள் :
1. சிவனார் பெரும்புகழ் பரவி சரன் புகுந்து அருளில் திளைக்கும் பக்தர்காள் பகர்வீராக.
2. வளமையான பொழில் சூழ்ந்தும், குளிர்ச்சியான வயல்களும் உடைய கண்டியூர் உறையும் வீரட்டன்.
3.திருமாலும், பிரமனும் ஏத்தி நிற்பவன்.
4. மாலுக்கும், பிரம்மனுக்கும் எட்டாதவனாய் உயர்ந்து, தீத்திரளாய் நின்ற தன்மை தான் யாது?
🔟
பாடல்: 10
1. நமர் ஏழுபிறப்பு அறுக்கு மாந்தர்காள்
நவிலுமின் உமைக் கேட்கின்றேன்
2. கமரழிவயல் சூழுந்தண்புனற்
கண்டியூர் உறை வீரட்டன்
3. தமரழிந்தெழு சாக்கியச் சமண்
ஆதர்ஓதும் அதுகொளா
4. தமரர் ஆனவர் ஏத்த அந்தகன்
தன்னைச் சூலத்தில் ஆய்ந்ததே.

பொருள் :
1. தம்மைச் சார்ந்து விளங்கும் சுற்றத்தினரின் பிறவிப் பிணியை அறுக்கும் அடியவர்களாகிய மெய்த்தொண்டர்களே
2.வரட்சி இல்லாத குளிர்ந்த நீர் பெருகும் வயல்கள் சூழ்ந்த கண்டியூரில் உறையும் ஈசன்.
3. சமணர், சாக்கியர்தம் சொற்களைக் கருத்துடையதாகக் கொள்ளாதது.
4. அந்தகனைச் சூலத்தால் சம்ஹாரம் செய்த அருள்திறன்
என் கொல்.
1️⃣1️⃣
பாடல்.11
1. கருத்தனைப் பொழில் சூழுங் கண்டியூர்
வீரட்டத்துறை கள்வனை
2. அருத்தனைத்திறம் அடியார்பால்மிக்க மிகக்
கேட்டு கந்த விளைவுரை
3. திருத்தமா திகழ் காழி ஞானசம் பந்தன் செப்பிய செந்தமிழ்
4.ஒருத்தராகிலும் பலர்களாகிலும்
உரைசெய்வார்  உயர்ந்தார்களே.

பொருள் :
1. அன்பர்தம் கருத்தாக விளங்கி, கண்டியூரில் உறையும் ஈசன், பிறரால் காணப்பெறாது, மனத்தைக் கவரும் கள்வராகவும்,
சொல்லின் பொருளாகவும் இருப்பவர். அப்பெருமானின் திறத்தினை அடியவர்களிடம் வினாவுரையாகக் கேட்டு மகிழ்ந்த, திருத்தமாய்த் திகழும் காழியின் ஞானசம்பந்தன் செப்பிய செந்தமிழாகிய இதனை, ஒருவராகத் தனித்தும், பாராகச் சேர்த்தும் பாடுபடுபவர்கள், உயர்ந்தவர்கள் ஆவார்கள்.
சிறப்பு:
திருத்தமாந்திகழ்காழி ஞானசம்பந்தன்:

திருஞானசம்பந்தர், ஈசன் 
அருட்திறத்தை நன்கு உணர்ந்தவர் என்பது இவ்வரிகளால் உணரலாம்.

🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி மூல நூல்களையும் , கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

☸️இவைகளில் சில பதிகங்களின் சிறப்பு பற்றித் தனித்தனியாக சிலக்குறிப்புகளுடனும், பொருள் விளக்கமுடனும் அடியேன் சிந்தைக்கு எட்டியவரை பல்வேறு அறிஞர்கள், சான்றோர்கள் நூல்களிலிருந்து தொகுத்து சில துளிகளாக அவ்வப்போது வழங்கப்படுகிறது. 
பருக விரும்புவோர் ,பொறுமையுடன் சென்று முன்பதிவுகளைப் பார்க்கவும்.

🔯படித்துப் பலன் பெறுங்கள்.
 தமிழின் வளத்தை, சிறப்பை, பக்திப் பெருமையை உணருங்கள்; உலகுக்கு உணர்த்துங்கள்.

 தொடர்ந்து சிந்திப்போம்..... ......

🙏நன்றி🙇‍♂️     
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️
     🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽
முன்பதிவு :
https://m.facebook.com/story.php?story_fbid=4670461403029080&id=100001957991710
மற்றும்
https://subbramarunachalam.blogspot.com/2020/10/53.html?m=1
❤️🙏🔱🔯🕉️📿🕊️🇮🇳🛐☸️🏵️📚🌹

No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...