Tuesday, July 21, 2020

தமிழிசைப்பொக்கிஷம் வழிமொழிதிருவிராகம் பகுதி : நான்கு

#திருமுறைகளில்_தமிழமுதம்:
#சம்பந்தர்_அமுதம்

#தமிழரின்பொக்கிஷம்:
பதிவு : நான்கு

#வழிமொழி_திருவிராகம், பற்றிய பதிவு.

மூன்றம் திருமுறை பதிகம்: 325
பாடல்கள் 5, 6, 7, 8

🙏🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♂️🙏

👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.
🌬️2. இப்பதிவுகளில் உள்ள தேவாரப் பாடல்களை குறைந்தபட்சம் இரண்டு முறைகளாவது வாய் விட்டு உச்சரித்து படித்தல் அவசியம்.
📚3. இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே. 

🙇‍♂️நன்றி🙏

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
ஞானசம்பந்தர் அருளிய அற்புத இசைத் தமிழ் பதிகங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.

#தமிழரின்பொக்கிஷம்.

#திருவிராகம்,# வழிமொழிதிருவிராகம்,
#வண்ணகம்,#முடுக்கியல்,#அடுக்கியல் 
இவை பற்றி முன்பதிவுகளில் சிந்தித்தோம்.
தொடர்ந்து
#வழிமொழிதிருவிராகம் பதிகப் பாடல் விளக்கங்களயும், சிறப்புகளையும்
தொடர்ந்து இப்பதிவில் பார்ப்போம்.

📕மூன்றாம் திருமுறையில் வரும்
பாடல்கள்:  714 - 725
பதிகம் 325    தலம் திருப்பிரமபுரம்.
'சுரர் உலகு நரர்கள்பயில் தரணிதல'
எனத் தொடங்கும் பதிகப் பாடல்கள்.

⚜️வழிமொழி திருவிராகம் என்னும் வகை சேர்ந்தது.

🅾️#வழிமொழிதிருவிராகம்:
⏺️இலக்கணம் :

⏏️குற்றெழுத்துப் பயின்று வரும் முடுகிய ஓசையுடையதாய் அடி முதற்சீரின் இரண்டாம் எழுத்து சீர்தோறும் ஒன்றி வழியெதுகையால் வரத் தொடுப்பது இவ்வகையாம்.
(முடுகிய என்பது வேகமாக ஓடும் தாள அமைப்பு எனக் கொள்ளலாம்)

🔸இதன் ஓசை அமைப்பில் பாடல் 

தனனதன  தனனதன  தனனதன  
              தனனதன    தனனதனனா

என அமைகிறது.

இப்பதிகத்தின் 1, 2, 3, 4 பாடல்கள் பற்றி முன்பதிவில் பார்த்தோம்.
இப்பதிவில்
இப்பதிகத்தின் 5, 6, 7, 8 பற்றி தொடர்ந்து சிந்திக்கலாம்.

🔵 இதில் திருஞானசம்பந்தர் 'வழிமொழிகள் மொழி தகையவே' என்று குறிப்பிட்டு சிறப்பிப்பதாலே இந்தப் பதிகம் வழிமொழி திருவிராகம் என்னும் பெயர் சூட்டப்பட்டது.

⏺️சந்தப்பாக்களின் சீர்களில் ஒவ்வொர் உயிரும் ஓரசை என்பதால் ஓசை நயமும் தாளமும் நிறைய அமைத்துள்ளதை நாம் சிந்திக்க வேண்டும்.

⏺️இந்தப் பதிகம் 12 பாடல்கள் கொண்டது.

⏹️சீர்காழிப்பதியின் 12 பெயர்கள் வந்த வழியை -  வரலாற்றிணை - விளக்கத் தக்க வகையில் அமைந்துள்ளது.

🔹சாதாரி என்ற பண் வகையினது.

🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐

பாடல் : 5
💠தோணிபுரம் : அர்ச்சுனன் வழிபட்ட இடம்.
பிரளய காலத்தில் தோனி போல் விளங்கி காத்ததால் இத்தலம் தோணிபுரம் என விளங்கிற்றது.

✳️'ண'  சீர் அமைப்பில் உள்ள பாடல்.

பாடல். 718

ஆணியல்பு   காணவன    வாணவியல் பேணியெதிர் பாணமழைசேர்
தூணியற       நாணியற    வேணுசிலை பேணியற       நாணிவிசயன்
பாணியமர்     பூணவருண்  மாணுபிர மாணியிட      மேணிமுறையிற்
பாணியுல       காளமிக        ஆணின்மலி தோணிநிகர்  தோணிபுரமே.
         
                                        -03.325:05 (718)
பொருள் :

ஆண் இயல்புகாண ( விசயனுடைய ) வீரத்தன்மையை உமைகாண.
வன வாணஇயல் - வனத்தில் வாழ்பவர்களாகிய வேடர் வடிவம். 
பேணி - கொண்டு, 
எதிர். அவனுக்கு எதிராக. ( போர் தொடங்கி ) 
பாணமழை - ( அவன் சொரியும் ) மழைபோன்ற அம்புகளும்.
சேர் - அவ்வம்புகள் தங்கிய. 

தூணி - அம்பறாத் தூணியும். 
அற - நீங்கவும். 
நாணி அற - வில்நாண் அறுபடவும். வேணுசிலை பேணி - அவனது மூங்கிலால் ஆகிய வில்லின் வளைவு. அற - நீங்கவும். 
விசயன் - அவ்வர்ச்சுனன். 
நாணி - நாணமுற்று. 

பாணி அமர் பூண - கையால் அடித்துச் செய்யும் மற்போரைச் செய்ய வர. 
அருள் மாணு - அவனுக்கு மிகவும் அருள் புரிந்த, 
பிரமாணி இடம் - கடவுட்டன்மைக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் சிவபெருமானின் இடம். 
ஏணி முறையில் - மிக்கது என்ற முறையினால். 

பாணி - பிரளயகால வெள்ளமானது. உலகு ஆள - உலகம் முழுதும் மூழ்கச் செய்ய. 
மிக ஆணின் - அதனின் மிகவும் பொருந்திய ஆண்மை வலிமையினால். மலி - சிறந்த. 
தோணி நிகர் - அதனைக்கடக்கவல்ல தோணியை யொத்த ( தோணிபுரம் ஆம் ).

🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐
பாடல் 6.
💠பூந்தாராய் : திருமால் வழிபட்ட இடம்.
பூந்தாராய் என்றும் இப்பதி.

✳️'ரா' என்னும் சீர் அமைப்பு அமைந்துள்ளது.

பாடல். 7 19

நிராமய     பராபர          புராதன  
பராவுசிவ  ராகவருளென்று
இராவுமெ  திராயது      பராநினை 
புராணன்    அராதிபதியாம்
அராமிசை   யிராதெழில்  தராயர        பராயண     வராகவுருவா
தராயனை   விராயெரி      பராய்மிகு தராய்மொழி  விராயபதியே.

                                       -03.325:06 (719)
பொருள் :

திருமால் வெள்ளைப் பன்றி உருவெடுத்து இரணியாக்கனைக் கொன்று பூமியைக் கொம்பிலேற்றி அவனை வருத்திய பழிபோகச் சிவனை வழிபட்ட புகழ்மிக்க பூந்தராய் என்னும் திருத்தலமாகும்.

நிராமய - நோயற்றவனே. 
பராபர - உயர்வுடையதும், உயர்வற்றதும் ஆனவனே ; 
புராதன - பழமையானவனே. 
பராவு - அனை வரும் துதிக்கின்ற. 
சிவ - சிவனே. 
ராக - விரும்பத்தக்கவனே. 
அருள் என்று - அருள் வாயாக என்று. 

இராவும் - இரவிலும். 
எதிராயது - பகலினும். 
பரா - பரவி. 
நினை - உயிர் அனைத்தும் தியானிக்கின்ற. 
புராணன் - பழமையானவனும். 
அமர ஆதி - தேவர்களுக்குத் தலைவனுமாகிய சிவபெருமானின். 
பதி - இடமாகும். 

அராமிசை - ஆதிசேடனாகிய பாம்பின்மேல். 
இராத - இல்லாத. ( இரணியாக்கனாற் கொள்ளப்பட்டுக் கடலிற் கிடந்த ) 
எழில் - அழகிய பூமியை. 
தரு - கொம்பினால் கொண்டு வந்த. 
ஆய - அத்தகைமை பொருந்திய. அரபராயண - சிவனைத் துதிக்கின்ற. வராக உரு - வெள்ளைப் பன்றி வடிவுகொண்ட. 

வாதராயனை - திருமாலை. 
விராய + எரி
விராய் - கலந்த. 
எரி - தீப்போன்ற பழி நீங்குதற்பொருட்டு. பராய் - அவனால் வணங்கப்பட்டு. ( அதனால் ) 
மிகு - புகழ்மிகுந்த. 
தராய் மொழி - பூந்தராய் என்னும் பெயர். விராய - கலந்த, 
பதி ஆம். 

🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐
பாடல் 7.

💠சிரபுரம் : திருமால் சிலம்பன் என்ற அசுரனை சிரம் அறுக்க, அந்த சிரம் இரு கிரகமாக நின்று வழிபட்டு நின்று பூசித்த தலம்.

✳️'ர' சீரில் அமைத்துள்ளார்.

பாடல். 720.

அரணையுறும்  முரணர்பலர்   மரணம்வர  இரணமதில்     அரமலிபடைக்
கரம்விசிறு       விரகன்அமர    கரணனுயர் பரனெறிகொள்  கரனதிடமாம்
பரவமுது          விரவவிடல்     புரளமுறும் அரவையரி   சிரம்   அரியஅச்
சிரம்அரன        சரணம்அவை   பரவஇரு கிரகம்              அமர் சிரபுரமதே.

                                         -03.325:07 (720)
பொருள் :

அரணையுறும் - மதிலைப்பொருந்திய, முரணர் - திரிபுரத்தசுரர்களால். 
பலர் மரணம்வர - பலருக்கு மரணம் நேர. இரணம் - காயங்கள் முதலியன உண்டாக்கித் துன்புறுத்தும், 
மதில் - அம்மதிலின்மேல். 
அரமலி படை - அரத்தால் அராவப்பட்ட ஆயுதத்தை, 

கரம் - கையினால். 
விசிறு - ஏவிய, 
விரகன் - சமர்த்தனும், 
அமர் கரணன் தன்னை அடைந்தவருக்கு கரணங்களின் சேட்டையை அடக்குவிப்போனும். 
உயர்பரன் - யாவரினும் உயர்ந்த மேன்மை உடையவனும் ). 
நெறி கொள்கரன் அது - உபதேசிக்கும் முறையைக் கொண்ட திருக்கரத்தை உடையவனுமாகிய சிவபெருமானின், 
இடமாம் - தலமாகும். 

பரவு - துதிக்கத்தக்க. 
அமுது - அமிர்தம், 
விரவ - தனக்குக்கிடைக்கும்படி 
உறும் அரவை - பந்தியில் வந்த பாம்பை. விடல் - விடத்தோடு. 
புரளம் உறும் - புரளுதல் உறும், 
அரிசிரம் அரிய - திருமால் அதன்தலையை வெட்ட. 
அச்சிரம் - அந்தத் தலையானது, 
அரன் - சிவபெருமானது, 
சரணமவை - பாதங்களை, 
பரவ - துதித்ததினால் 
இருகிரகம் - இரண்டு கிரகங்களாக, 
அமர் - நவக்கிரக வரிசையில் அமரச்செய்த, 
சிரபுரம் - சிரபுரமாம். 

🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐
பாடல் 8.
💠புறவம் :  இந்திரன் பருந்தாகவும், அக்னி புறாவாகவும் சென்று சிபிச்சக்கரவர்த்தியிடம்  சோதிக்க புறாவின் எடைக்காக உடல் அறுத்து ஈடு செய்தான். பாவம் நீக்க புறா வழிபட்டதால் புறவம் எனப்பட்டது.

✳️ ' ற '  சீர் அமைப்புள்ளது.

பாடல் : 721.

அறமழிவு    பெறவுலகு     தெறுபுயவன் விறல்அழிய   நிறுவிவிரல்மா

மறையினொலி    முறைமுரல்செய் பிறையெயிறன்   
உறஅருளும்  இறைவனிடமாம்

குறைவின்மிக   நிறைதையுழி மறையமரர்    
நிறையருள முறையொடுவரும்

புறவனெதிர்   நிறைநிலவு பொறையனுடல்    
பெறவருளும் புறவமதுவே.
     
                                     - 03.325.08 (721)
பொருள் :

புறாவின் எடைக்குச் சமமாகத் தன் சதையை அறுத்து வைத்த சிபிச்சக்கரவர்த்தி குறையில்லா உடம்பைப் பெற அருள் புரிந்ததும், தான் செய்த பழிபோக புறா உருவில் வந்த தீக்கடவுள், தவறு உணர்ந்த ராவணனுக்கு அருள்புரிந்த சிவபெருமானை, 
பூசித்து அருள்பெற்ற புறவம் என்னும் திருத்தலமாகும்.

அறம் அழிவுபெற - தர்மம் அழியும் படியாக. 
உலகு - உலகத்தை, 
தெறு - அழித்த, 
புயவன் - தோள்களையுடைய இராவணனது. 
விறல் அழிய - வலிமை யொழியும்படி, விரல் நிறுவி - விரலை அழுத்தி ; ( பின் )

மாமறையின் ஒலி - சிறந்த சாமவேத கானத்தை, 
முறை - வரிசையாக, 
முரல் செய் - பாடிய, 
பிறை எயிறன் - பிறை போன்ற பற்களையுடைய அவ்விராவணன். 
உற - நாளும், வாளும் பெற. 
அருளும் இறைவன் இடமாம். 

மறை அமரர் - வேதங்களுக்கும் தேவர்களுக்கும் ஒத்ததாகிய, 
நிறை - நீதியை. 
அருள - வழங்கும்படி. 
முறையொடு வரும் - முறையிட்டு வந்த,

புறவன் - புறாவிற்குரியவனாகிய வேடன், எதிர் - எதிரே, 
குறைவில் - புறாவின் எடைக்குச் சரியாக இட்ட மாமிசத்தின் குறைவில். 
மிக - அதிகரிக்க, 
நிறைதை உழி - நிறைவுவேண்டியிருந்த பொழுது. 
நிறைதை - நிறைவு. 
பொறை - பாரம், எடை
நிறை நிலவு - அந்த எடையின் நிறை சரியாகப் பொருந்த இட்ட. 
பொறையன் - உடலின் அரிந்த மாமிசத்தை எடையாக்கினவனாகிய சிபி, உடல் பெற - தன் உடம்பைப்பெற, 
அருள் - அவன் வந்து பணிய அருள் புரிந்த 
புறவம் அது - புறவம் என்னும் பெயருடைய திருத்தலமாம். 

🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐

#வழிமொழிதிருவிராகம் என்னும் இவ்வற்புத பதிகத்தின் பாடல்களின் விளக்கத்தையும் சிறப்புகளையும் அடுத்தடுத்த பதிவில் தொடர்ந்து சிந்திக்கலாம்.

🙏நன்றி.

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்.🙇‍♂️🙏🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐

மூன்றம் பதிவின் #வழிமொழிதிருவிராக பாடல்கள்: 1 முதல் 4 வரை விளக்கம் காண:
https://m.facebook.com/story.php?story_fbid=4176651552410070&id=100001957991710

தமிழிசைப்பொக்கிஷம் வழிமொழிதிருவிராகம் பதிவு : மூன்று

#திருமுறைகளில்_தமிழமுதம்:
#சம்பந்தர்_அமுதம்

#தமிழரின்பொக்கிஷம்:
பதிவு : மூன்று

#வழிமொழிதிருவிராகம், பற்றிய பதிவு.
மூன்றம் திருமுறை பதிகம்: 325 
பாடல் 1 முதல் 4 பாடல்கள்.

🙏🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♂️🙏

👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.

🌬️2. இப்பதிவுகளில் உள்ள தேவாரப் பாடல்களை குறைந்தபட்சம் இரண்டு முறைகளாவது வாய் விட்டு உச்சரித்து படித்தல் அவசியம்.

📚3. இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே. 

🙇‍♂️நன்றி🙏

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
ஞானசம்பந்தர் அருளிய அற்புத இசைத் தமிழ் பதிகங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.

#தமிழரின்பொக்கிஷம்:

#திருவிராகம்,# வழிமொழிதிருவிராகம்,
#வண்ணகம்,#முடுக்கியல்,#அடுக்கியல் 
இவை பற்றி முன்பதிவுகளில் சிந்தித்தோம்.
தொடர்ந்து
#வழிமொழிதிருவிராகம் பதிகப் பாடல் விளக்கங்களயும், சிறப்புகளையும்
தொடர்ந்து இப்பதிவில் பார்ப்போம்.

📕மூன்றாம் திருமுறையில் வரும்
பாடல்கள்:  714 - 725
பதிகம் 325    தலம் திருப்பிரமபுரம்.
'சுரர் உலகு நரர்கள்பயில் தரணிதல'
எனத் தொடங்கும் பதிகப் பாடல்கள்.

⚜️#வழிமொழிதிருவிராகம் என்னும் வகை சேர்ந்தது.

🅾️#வழிமொழிதிருவிராகம்:
⏺️இலக்கணம் :

⏏️குற்றெழுத்துப் பயின்று வரும் முடுகிய ஓசையுடையதாய் அடி முதற்சீரின் இரண்டாம் எழுத்து சீர்தோறும் ஒன்றி வழியெதுகையால் வரத் தொடுப்பது இவ்வகையாம்.
(முடுகிய என்பது வேகமாக ஓடும் தாள அமைப்பு எனக் கொள்ளலாம்)

🔸இதன் ஓசை அமைப்பில் பாடல் 

தனனதன  தனனதன  தனனதன  
              தனனதன    தனனதனனா

என அமைகிறது.

🔵 இதில் திருஞானசம்பந்தர் 'வழிமொழிகள் மொழி தகையவே' என்று குறிப்பிட்டு சிறப்பிப்பதாலே இந்தப் பதிகம் வழிமொழி திருவிராகம் என்னும் பெயர் சூட்டப்பட்டது.

⏺️சந்தப்பாக்களின் சீர்களில் ஒவ்வொர் உயிரும் ஓரசை என்பதால் ஓசை நயமும் தாளமும் நிறைய அமைத்துள்ளதை நாம் சிந்திக்க வேண்டும்.

⏺️இந்தப் பதிகம் 12 பாடல்கள் கொண்டது.

⏹️சீர்காழிப்பதியின் 12 பெயர்கள் வந்த வழியை -  வரலாற்றிணை - விளக்கத் தக்க வகையில் அமைந்துள்ளது.

🔹சாதாரி என்ற பண் வகையினது.

🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐

பாடல்: 01   -
💠 திருப்பிரமபுரம்: படைப்புத் தொழில் வேண்டி, பிரம்மன் தங்கி வழிபட்டு இறையருளைப் பெற்றதால் இப்பெயர்.

🔹இந்தப் பதிகத்தின் முதல் பாடல் பிரம்மபுரம் என்ற சீர்காழி பதியின் பெயர் வந்த வழியை சொல்லும்  

✳️பாடலில் 'ர' கரமாக சீர் அமைத்துள்ளார்.

பாடல் : 714

சுரர்உலகு   நரர்கள்பயில்  தரணிதல
           முரன் அழிய   அரணமதில்முப்

புரம்எரிய  விரவுவகை  சரவிசைகொள்
           கரமுடைய  பரமன்  இடமாம்

வரம்அருள  வரன்முறையின் 
     நிரைநிறைகொள்
           வருசுருதி  சிரவுரையினாற்

பிரமன்உயர்  அரன்எழில்கொள் 
      சரணஇணை
              பரவவளர்  பிரமபுரமே.

                                             - 0:3:325:01
பொருள் :

சுரர் உலகும் - தேவலோகமும்
நரர்கள் பயில் - மனிதர் வாழும்.
தரணி தலம் - பூலோகமும், 
முரண் அழிய - வலிமை அழியும்படி. ( அதனால்,) 
அரணம் - காவலாகிய. 

முப்புரம் - முப்புர முடிய. 
விரவுவகை எரிய - கலந்து பல இடமும் எரியும்படி. 
சரவிசை - அம்பின் விசையால்
கொள் - ( அவ்அம்பைக் ) கொண்ட, 
கரம் உடைய, பரமன் இடமாம். 

நிரை - வரிசையாக, 
வரன்முறையின் வரு - வரன்முறையில் ஓதிவருகின்ற. 
நிறைகொள் - நிறைவையுடைய.
சுருதி சிரம் - வேத முடிவாகிய உபநிடதங்களின், 
உரையினால் - வசனங்களினால். 

உயர் - எவரினும் உயர்ந்த, 
அரன் - சிவபெருமானின். 
எழில் கொள் - அழகையுடைய, 
சரண இணை - இரு திருவடிகளையும். வரம் அருள - தனக்கு வரம் அருள்வான் வேண்டி, (பிரமன்)
பரவ - துதிக்க. 
வளர் - புகழால் ஓங்கிய. 
பிரமபுரமே - பிரமபுரம் என்னும் பெயர்பெற்ற தலமாம்

🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐

♦️இதே முறையில் வரும் அடுத்தடுத்தப் பாடல்களையும் சீர் அமைப்பு முறையும் கவனிக்க வேண்டும்.

🔹இரண்டாவது பாடலில் வேணுபுரம் என்ற பெயர் வருவதால் 'ண' கரவரிசை வருமாரு அமைத்துள்ளார்.

பாடல் : 02. (வேணுபுரம்): 

💠இந்திரனுக்காக, விநாயகரைப் படைத்து
கஜாசுரனை அழித்து, இறைவன் அருளியதால், மூங்கில் உருவம் கொண்டு இந்திரன் தவம் செய்த தலம்.

பாடல் : 715

தாணுமிகு  ஆணிசைகொடு   ஆணுவியர்
பேணுமது    காணுமளவிற்
கோணுநுதல்  நீள்நயனி       கோணில்பிடி
மாணிமது    நாணும்  வகையே
ஏணுகரி       புணழிய     ஆணியல்கொண்
மாணிபதி    சேண்அமரர்      கோன்
வேணுவினை  யேணிநகர்   காணிதிவி
காணநடு  வேணுபுரமே.
               
                                  -03.325.02 (715)
தாணு - சிவபெருமான்
ஆணு - ( தன் ) அன்பர்களாகிய தேவர்கள். 
வியர் பேணு மது - (கயமுகாசுரனால்) அச்சம் கொள்வதை. 
காணும் அளவில் - அறிந்ததும்.
மிகு - வலிமை மிகுந்த. 
ஆண் இசைகொடு - ஆண் யானையின் வடிவைக்காண இசைந்து. ( நிற்க - அதற்கேற்ப.) 

கோணுநுதல் - வளைந்த நெற்றியை. நீள்நயனி - நீண்ட கண்ணையுமுடையவளாகிய அம்பிகை. கோண்இல் - குற்றமில்லாத படி. 
பிடி - பெண் யானையின் உருவை. 
மாணி - பெருமையையுடையவளாய்க் காண. 
மது - மது என்ற அசுரனும். 
நாணும் வகை ஏணு - வெட்கும்படி வலிமைகொண்ட. 

கரி - கயமுகாசுரன். 
பூண் - தான் மேற்கொண்ட தீய தொழில்கள். 
அழிய - அழியும்படி. 
ஆண் - ஆண் தகையாகிய விநாயகக் கடவுள். ( கயமுகாசுரனுக்குப் பேடியர் போல் அஞ்சிய தேவர் துயரந் தவிர்த்த வீரம் குறிக்க ஆண் என்றனர் ) 
இயல் - ( அன்பர்க்கு அனுக்கிரகிக்கும் ) அருளை, 
கொள் - கொள் வித்த. 
மாணி - பெருமையுடையோனாகிய சிவபெருமானின். 
பதி - இடம். 
சேண் - வானுலகில் உள்ள, 
அமரர்கோன் - இந்திரன். 

வேணு வினை - மூங்கிலை. 
ஏணி - ஏணியாகக்கொண்டு. 
காண்இல் - தான் நேரேகாண முடியாத. திவி - தேவலோகத்தின் நிலையைக் காண - ஒளிந்து காணும் பொருட்டு. 
நடு - நட்ட, 
வேணுபுரம் - வேணுபுரமாம் 
ஆணு - அன்பு

🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐

பாடல்: 3:  புகலி (என்பதால் 'ல' கர சீர்)
சனகாதி முனிவர்களுக்கு அருள குருமுகமாய் அருளிய இடம்.  தேவர்கள் புகலிடமான இடம்.

பாடல் : 716

பகல்ஒளிசெய்  நகமணியை முகைமலரை
        நிகழ்சரண  அகவு  முனிவர்க்கு
அகலமலி  சகலகலை  மிகவுரைசெய்
        முகமுடைய  பகவன்இடமாம்
பகைகளையும்  வகையில்அறு  
முகஇறையை
          மிகஅருள   நிகரில்  இமையோர்
புகவுலகு  புகழஎழில்   திகழநிகழ்
           அலர்பெருகு  புகலிநகரே.

                               -03:325:03 (716)
பொருள் :

நகம் = மலை
முகை மலர் = தாமரை மலர்
பகவன் = சிவபெருமான்

பகல் ஒளி செய் - சூரியனைப்போற் பிரகாசிக்கும். 
நகம் மணியை - மலையிற் பிறக்கும் பத்மராக மணிகளையும். 
முகை மலரை - அரும்பு விரிந்த செந்தாமரை ( நாண் ) மலரையும். 
நிகழ் - போன்ற. 
சரண - திருவடிப் பேற்றுக்குரிய. 
அகவு - விருப்பம் மிக்க. 
முனிவர்க்கு - சனகாதி முனிவர்களுக்கு,

அகலம்மலி - விஸ்தார மாகிய, 
சகலகலை - கலைகளனைத்தையும். 
மிக - ( தெளிவு ) மிகும்படி. 
உரை செய் - உபதேசித்தருளிய. 
முகம் உடைய - திருவருள் நோக்கம் உடைய. 
பகவன் இடமாம் - சிவபெருமானின் இடம் ஆகும். 
முகை மலர்ந்த மலர் - புதுப்பூ. பகவன் - சிவபெருமான் 
 முகம் - என்னும் சொல் திருவருள் நோக்கம் என்னும் பொருளில் வந்தமை காண்க. 

பகை - தேவர் பகைவர்களாகிய அரக்கர் முதலாயினோரை. ` பகை ` பகைவருக்கு ஆயினமையின் பண்பாகுபெயர்.
இறை - கடவுள். 
மிக - அறச்செயல்கள் அதிகரிக்க. 
அருள - தர. அதனால். 
நிகரில் இமையோர் - மகிழ்ச்சியில் நிகர் இல்லாத தேவர்கள். 

புக - சரண்புக, 
எழில் திகழ - அழகு விளங்க. 
நிகழ் - ( இவற்றால் ) நேர்ந்த ( புகலியெனும் பெயர் ). 
அலர்பெருகு - அனைத்துலகினும் மிக்குப் பெருகிய ( புகலி நகர் என்க.)

🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐
பாடல்:04 - வெங்குரு  =
💠குருபகவான் வழிபட்ட இடம்.
✳️('ங்' - சீர் அமைப்பில் பாடல்)

பாடல்: 717

அங்கண்மதி   கங்கைநதி    வெங்கண்அர
வங்கள்எழில்  தங்கும்  இதழித்
துங்கமலர்        தங்குசடை    அங்கிநிகர்
எங்கள்இறை   தங்கும்  இடமாம்
வெங்கதிர்வி   ளங்குலகம்    எங்கும்எதிர்
பொங்கெரிபு    லன்கள் களைவோர்
வெங்குருவி     ளங்கிஉமை   பங்கரசர
ணங்கள்பணி  வெங்குருவதே.

                                    -03.325:04 (717)
பொருள் :

இதழி=கொன்றை மலர்
வெங்குரு விளங்கி = குருபகவானைச் சுட்டியது.
வெம்மை = விருப்பம் என்னும் பொருள்.

அங்கண்மதி - அழகிய ஆகாயத்தினிடத்தில் உள்ள சந்திரனும், வெங்கண் அரவங்கள் - கொடிய பாம்புகளும். 
எழில் தங்கும் இதழித் துங்கமலர் - அழகு தங்கிய கொன்றையின் தூயமலரும். தங்கு சடை - பொருந்திய சடையானது. 
அங்கி நிகர் - தீயையொக்கும். 
எங்கள் இறை - எங்கள் தலைவன்.  

வெங்கதிர் - சூரியனால், 
விளங்கும் - விளங்குகின்ற. உலகமெங்கும் - உலகில் உள்ள அனைவரும். 
எதிர் - நல் வழிக்குமாறாக. 
பொங்கு - மிக. எரி - வருத்துகின்ற. புலன்கள் - மனம் முதலிய அந்தக் கரணங்களின் சேட்டையை. 
களைவோர் - நீக்க விரும்புவோர். 

வெங்குரு - கொடிய தேவ குருவினால். விளங்கி - தமது துயர் களைதற்கிடமிதுவேயென்று தெளிந்து. உமைபங்கர் - சிவபெருமானின் - சரணங்கள் பணி - பாதங்களைப்பணிந்த. 
வெங்குரு அது - வெங்குரு என்னும் அத்தலமாம்.
🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐

#வழிமொழிதிருவிராகம் என்னும் இவ்வற்புத பதிகத்தின் பாடல்களின் விளக்கத்தையும் சிறப்புகளையும் அடுத்தடுத்த பதிவில் தொடர்ந்து சிந்திக்கலாம்.

நன்றி.

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்.🙇‍♂️🙏🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
பதிவு : ஒன்று
https://m.facebook.com/story.php?story_fbid=4163567850385107&id=100001957991710
பதிவு : இரண்டு
https://m.facebook.com/story.php?story_fbid=4167871086621450&id=100001957991710

தமிழிசைப் பொக்கிஷம் திருவிராகம் பதிவு : இரண்டு

#திருமுறைகளில்_தமிழமுதம்:
#சம்பந்தர்_அமுதம்
#தமிழரின்பொக்கிஷம்
பதிவு : இரண்டு

#திருவிராகம்   
#வழிமொழிதிருவிராகம் 
#வண்ணகம்
#முடுக்கியல்
#அடுக்கியல் 

தேவார இசைப்பாடல்கள் பற்றியது
பதிவு : இரண்டு.

பக்தியும், தமிழ் ஆர்வமும் உள்ளவர்கள் தொடரலாம்.

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾

ஞானசம்பந்தரின்  தமிழ் இசை மற்றும் தாள சந்தங்கள் சிறப்புக்கள்
கொண்டு அமைந்த பதிகப் பாடல்களைப் பற்றி மேலும் சிந்திக்கலாம்.

#வண்ணகம்
#முடுகியல்
#அடுக்கியல் 

 🔽இவ்வுறுப்பு இசை, இனிமை, உடையது. அதனால் #வண்ணகம் எனவும் பெயர் பெறும். 

🔼விரைந்து செல்லும் ஓசையுடையது என்பதனால் #முடுகியல் எனவும் பெயர் பெறும். 

குறில் அல்லது நெடில் கலந்த விரைவு நடைப் பாடல்வரிகளில் அமைந்தது. இதில் குறில் தாளச் சிறப்பையும் நெடில் ஓசை நயத்தையும் உணர்த்தும்.

 🔽ஓசை அடுக்கி வருவது என்பதனால் #அடுக்கியல் எனவும் பெயர் பெறும்.

♦️சந்தவாய்பாடுகளைக் கொண்டு அமையும் பாடல்கள். இந்த வகைப் பாடல்களுக்குரிய சந்தவாய்ப்பாடுகள் பல சேர்ந்து துள்ளலாகவும் வரும்.

இந்த சந்த அமைப்புப் பாடல்களை
 #வண்ணகம் - வண்ணப்பாக்கள் என்கிறார்கள் இசை இலக்கண ஆராய்ச்சியாளர்கள்*.

⚜️ #வண்ணகம் : சந்தத்துடன் தொடர்புடையது. 
'எந்தக் கவியினும் சந்தக் கவி மேல்'
வல்லிசை, மெல்லிசை, நெடுஞ்சீர், குறுஞ்சீர், அமைப்பு வண்ணம், இயைபு வண்ணம் என்றல்லாம் வகைப்படுத்துகிறார்கள்; இசையிலக்கணவிலார்கள்.

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐

🎶இந்த வகையில் சந்தப்பாடல்களுக்கு எடுத்துக்காட்டாக,

'பிறையணி   படர்சடை    முடியிடை
பெருகிய    புலனுடை    யவனிறை'
                  01.19.01
எனும் பாடலில்வரும் சந்தம் :

தனதன   தனதன   தனதன
        தனதன   தனதன   தனதன

என்று வருகிறது.

💠இந்த வகையில் இன்னோரு பாடல்
மூன்றாம் திருமுறையில் பதிகம்: 326 தலம்: திருக்கைலாயம். பாடல் 1.

💠 (தயவு செய்து ஒரு முறையாவது திரு சம்பந்தம் குருக்கள் அய்யாவின் 'கயிலைப் பதிக'த்தில் வரும் இந்தப் பாடல்களைக் கேட்டு அவசியம் கேட்டு உணரவேண்டும்).

✳️பாடலில் 'ள' கரத்தை வைத்து அமைத்துள்ள திறன் சிந்திக்கத்தக்கது.

வாளவரி  கோளபுலி  கீளதுரி
     தாளின்மிசை   நாளுமகிழ்வர்

ஆளுமவர்  வேளநகர்  போளயில
       கோளகளிறு   ஆளிவரவில்

தோளமரர்  தாளமதர்  கூளியெழ
        மீளிமிளிர்  தூளிவளர்பொன்

காளமுகில்  மூளும் இருள்  கீளவிரி
         தாளகயி  லாய  மலையே.

🔸மூன்றாம் திருமுறை பாடல்: -726- (3.326.1).

🎶பொருள் :

சிவபெருமான் ஒளிபொருந்திய வரிகளையுடைய புலியின் தோலை உடுத்தவர். அது பாதத்தில் பொருந்த எக்காலத்திலும் ஆனந்தமாய் இருப்பவர். அடியவர்களை ஆட்கொள்பவர். எதிரிட்ட விலங்குகளைக் கிழிக்கும் கூரிய பற்களை யுடைய திரண்ட வடிவுடைய யானையை அடக்கியாண்டவர். சிறந்த வில்லினை ஏந்திய தோளர். கூளிகள் தாளமிட நடனம் புரிபவர். திருவெண்ணீற்றினை அணிந்தவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் கயிலாய மலையானது கரிய மேகங்களால் மூண்ட இருட்டை ஓட்டும் வெண்பொன்னாகிய ஒளியை விரிக்கும் அடிவாரம் உடையதாகும்.

🎶பொருள் விளக்கம்:

வாள - ஒளி பொருந்திய. 
வரி - கீற்றுக்களையுடைய. 
கோள - கொலைபுரிவதாகிய. 
புலி - புலியை. 
கீளது - கிழித்ததாகிய. 
உரி - தோல் ( உடுப்பதால் ) 
தாளின் மிசை - ( அது ) பாதத்தில் பொருந்த. 
நாளும் மகிழ்வர் - என்றும் மகிழ்வர்.

வேள் - கண்டவர் விரும்பும். 
அநகர் - தூயோர். 
ஆளுமவர் - ஆள்பவர். 
போள் - ( எதிரிட்ட விலங்குகளை ) கிழிக்கும்படியான. 
அயில - கூரிய பற்களையுடைய. 
கோள - திரண்டவடிவையுடையதான. களிறு - யானையை. 
ஆளி - அடக்கியாண்டவர். 
வர வில் - சிறந்த வில்லைத் தாங்கிய.

தோள் - தோளையுடைய. 
அமரர் - தேவராவர். 
மதர் - செருக்கிய. 
கூளி - கூளிகள். 
தாளம் எழ - தாளத்தை எழுப்ப. 
மீளி - ( நடனமாடும் ) வலியர். 
மிளிர் - பிரகாசிக்கின்ற. 
தூளி - திருநீற்றைப் பூசியவர். 

காளமுகில் - கரிய மேகங்களாய். 
மூளும் - மூண்ட. 
இருள் - இருட்டை. 
கீள - ஓட்ட. 
பொன் - வெண்பொன்னாகிய. 
விரி - ஒளியை விரிக்கும். 
தாள - அடிவரையையுடைய கயிலாயமலை. 
போழ் - போள் என எதுகை நோக்கி நின்றது.

♦️இந்தப் பாடலின் சந்த அமைப்புமுறையும் மிக அற்புதமானது.

தானதன  தானதன  தானதன  
      தானதன   தானதன  தானதனன.

🔶#வழிமொழிதிருவிராகம் இலக்கனமும் பொருந்தியிருக்கிறது.

🔸பல்வேறு பண், தாளம், இராகத்தில் சுமார் 40 பதிகங்களை திருவிராக அமைப்பில் அருளிச்செய்துள்ளார்.  இவை எல்லாம் திருஞானசம்பந்தர் அருளிய புதிய இசை வடிவம்.

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐

#திருவிராகம் - இதன் இலக்கணம்:

⏺️வழியெதுகை பெறாது முடுகியல் மட்டும் பெற்ற திருஞானசம்பந்தர் இயற்றிய பதிகங்கள் திருவிராகம் எனப்படும்.

💠#திருவிராகப்பதிகங்களில் இசைத்தன்மையும் தாளச் சிறப்பும் 
பெற்ற சில பாடல்களை மிகவும் சிறப்பானதாக இசை நூல் ஆராய்ச்சியாளர்கள்* குறிப்பிட்டு     சிறப்பித்துள்ளார்கள்.

திருவிராக பதிகங்கள் :

முதலாம் திருமுறை : 

பதிகங்கள்   தலம்
      பண் : நட்டப்பாடை
19                 திருக்கழுமலம்
20                 திருவிழிமிழலை
21                 திருச்சிவபுரம்
22                 திருமறைக்காடு

      பண் :  வியாழக்குறிச்சி
120               திருவையாறு
121               திருவிடைமருதூர்
122               திருவிடைமருதூர்
123               திருவலிவலம்
124               திருவிழிமிழலை
125               திருச்சிவபுரம்

இரண்டாம் திருமுறை:

       பண் : இந்தளம்
165               திருப்புகலி
166               திருப்புரம்பயம்
167               திருக்கப்பறியலூர்
168               திருவையாறு
169               திருநள்ளாறு
170               திருப்பழுவூர்

       பண்: நட்டராகம்
233               சீர்காழி
234               திருத்துருத்தி
235               திருக்கோவிலூர் வீரட்டானம்
236               திருஆரூர்

மூன்றாம் திருமுறை :
       பண் : கௌசிகம்
310               திருஆலவாய்
311               திருவாணைக்காக்கா

        பண் : சாதாரி
325               திருபிரம்மபுரம்*
(இது #வழிமொழிதிருவிராகம் எனப்படும்; இது பற்றி தனிப் பதிவில் விளக்கம் பெறலாம்)
326                திருக்கயிலாயம்
327                திருக்காளத்தி
328                திருமயிலாடுதுறை
329                திருவைக்காவூர்
330                திருமாறகல்
331                திருப்பட்டிஸ்வரம்
332                திருத்தேவூர்
333                திருசண்பைநகர்
334                திருவேதவனம்
335                திருமாணிக்குழி
336                திருவேதிக்குடி
337                திருக்கோகரணம்
338                திருவிழிமிழலை
339                திருத்தோணிபுரம்
340                அவளிவனல்லூர்
341                திருநள்ளாறு
342                திருப்புறவம்
343                திருவிழிமிழலை
344                திருச்சேறை
345                திருநள்ளாறு
346                திருவிளமர்

⏹️மேற்கண்ட பதிகங்கள் திருவிராகப் பதிகங்கள் என்று வகைப் படுத்தப்பட்டுள்ளது. இவைகள் தமிழ் இசைப்பாடல்களுக்குப் பொக்கிஷமாகத் திகழ்கின்றன.

🔹தமிழ் மொழியில் - இது போன்ற அமைப்பில் - இவ்வகை சந்த இசை அமைப்பில் - பல்வேறு பண்களில் இசைப் பாடல்களை அமைத்து முதன் முதலாக ஏராளமான பதிகங்களை இயற்றியவர் கி.பி. 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ஞானசம்பந்தரே. 

✳️இதனால் இவரை இசைத்தமிழ் இறைவர் என்று போற்றுகிறார்கள்;
   அவ்வழி நின்று நாமும் போற்றுவோம்.

🙏நன்றி.

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்.
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
பதிவு : ஒன்று
https://m.facebook.com/story.php?story_fbid=4163567850385107&id=100001957991710

தமிழிசைப்பொக்கிஷம் - திருவிராகம் பதிவு: ஒன்று

#திருமுறைகளில்_தமிழமுதம்:
#சம்பந்தர்_அமுதம்

#தமிழரின்பொக்கிஷம்

#திருவிராகம்   #முடுகியல்   #அராகம்           பற்றிய பதிவு.
தேவார இசைப்பாடல்கள் பற்றியது
பதிவு : 1.

பக்தியும், தமிழ் ஆர்வமும் உள்ளவர்கள் தொடரலாம்.

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾

'இசைத்தமிழ் ...  நீ செய்த பெருஞ்சாதனை .....'

ஏழாம் நூற்றாண்டில் வேத நெறி தழைத்தோங்க, அவதாரம் செய்த ஆளுடையப் பிள்ளையாம் அருள் ஞானசம்பந்தர் இயற்றிய திருக்கடைக் காப்பு என்னும் தேவாரத் திருமுறைகளே தமிழரின் பிற்கால சிற்றிலக்கியத்திற்கு  அடிப்படையாய் அமைந்திருக்கிறது.

சம்பந்தர் , புதிய புதிய பாவகைகளை அமைத்து அருளிய பல பதிகங்கள், தமிழின் சிறப்புக்கு மகுடமாய் ஒளிர்கிறது.

சம்பந்தர் இசைத்தமிழுக்குச் சிறப்பான பதிகங்கள் பல அருளிச் செய்துள்ளார். அவரின் சிறப்புகளை, சாதனைகள் பற்றி இப்பதிவில் தொடர்ந்து சிந்திப்போம்.

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐

🔷 #திருவிராகம், #அராகம், #முடுகியல்

#அராகம்
#திருவிராகம்:

❇️விளக்கம்:

முதல் திருமுறையில் வரும் ...
123 வது பதிகம். தலம்: திருவலிவலம்
'பூவியல் புரிகுழல்' எனத் தொடங்கும் பதிகத்தில் வரும் 5வது பாடல்

பிடியதன் உருஉமை  கொளமிகு  கரியது
வடி கொடு  தனதடி  வழிபடும் அவர்இடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி  வலம்உறை      
              இறையே.
                                              01.123.05
(முதல் திருமுறை - 1330).

❇️ மேல எடுத்துக்காட்டப்பட்டுள்ள பாடல்
அமைப்பு திருவிராகம் எனப்படும்.
வியாழக் குறிஞ்சி என்னும் பண்ணில் அமைந்துள்ள பாடல். 

✴️பிடியதன் என்று ஆரம்பித்து, தொடர்ந்து வரும் வார்த்தைகள் சந்த அமைப்பில் ஓசையும் நயமும் கொண்டு வேகமாக கடகடவென அடுத்தடுத்த வார்த்தைகள் வந்து பாடல் இனிமை தருகிறது அல்லவா? 

🔼இது போன்றுவிரைந்து செல்லும் ஓசையும் நடையும் கொண்ட பாடல்கள் அராகம் என்று பழந்தமிழ் இலக்கணத்தில் இருந்தாலும்,  இதுவே பின் இராகம் எனப்பட்டது என்பார்  அறிஞர்*

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐

#திருவிராகம்:

🔼திருஞானசம்பந்தரால் இவ்வகைப் பதிகங்கள், இயற்றப்பெற்றதால் திருவிராகம் எனப்பட்டது.

♦️ #திருவிராகம்: இதன் இலக்கணம்:

⏺️வழியெதுகை பெறாது முடுகியல் மட்டும் பெற்ற திருஞானசம்பந்தர் இயற்றிய பதிகங்கள் திருவிராகம் எனப்படும்.

#முடுகியல்:

🔷#முடுகியல் அல்லது முடுகியல் ராகம் என்பது விரைவு நடையும், ஓசையும் அமைந்த சந்தப்பாடல்.

🔼நெகிழ்ந்த ஓசையாகிய நெட்டெழுத்துக்கள் விரவாது குற்றெழுத்துக்களால் இயன்று இடையறவு படாது பாடப்படுவது.

🔸இசை நீட்டத்திற்கு இடமின்றிப் பாடலுக்குரிய நடையில் ஒரு வகைச் சந்த ஓசையுடன்  விரைந்து செல்லுமாறு அமைக்கப்பட்ட சீர்களை உடையது முடுகியல் அடியாகும்.

🔷 பின்னாளில் தோன்றிய திருப்புகழ் போன்ற சந்த விருத்தங்கள் தோன்றக் காரணமாயிற்று என்பது அறிஞர் கூற்று*
 
♦️இவ்வாறு இசையும், தாளமும் இணைந்து சந்த வேகத்துடன் பாமரரும் சேர்ந்து பாட பதிகங்கள்  அமைத்து அருளியவர் நம் தமிழ் ஞானசம்பந்தரே,

🔹இவையே திருவிராகப் பதிகங்கள் என்று அழைக்கப்படுகிறது.

⚜️திருவிராகப் பதிகங்களில்
     இசைத்தன்மையும்,
     தாளச் சிறப்பும் 
பெற்ற சில பாடல்களை   
     மிகவும் சிறப்பானதாக இசை நூல்    
     ஆராய்ச்சியாளர்கள்* குறிப்பிட்டு     
     சிறப்பித்துள்ளார்கள்.

🎵இசைத்தன்மை  மிகவும் சிறப்புப் பெற்றதாக குறிக்கப்படும் பாடல்கள்*....

🎼முதல் திருமுறை :

🎶பதிக எண்: 19.  தலம் : திருக்கழுமலம் பாடல் :  05 
பாடல் :  தலைமதிபுனல்...
பண்   :  நட்டபாடை
இராகம் : கம்பீர நாட்டை
தாளம்   : ஆதி (சதுச்சர நடை)

 பாடல் :

🎼இரண்டாம் திருமுறை : 

🎶பதிக எண்: 165 .  தலம் : திருப்புகலி
 பாடல் : 04
பாடல்  : மை தழுவும்...
பண்     : இந்தளம்
இராகம் : மாயாமாவை கெளவ
தாளம்   : கண்ட சாபு

🎶பதிக எண்: 236 .  
தலம்  : திருக்கோவலூர் வீரட்டம்
பாடல் : 09
பாடல் : ஆறுபட்ட ...
பண்    : நட்டராகம்
இராகம் :  பந்துவராளி
தாளம்   :  ஆதி (திசர நடை)

🎼மூன்றாம் திருமுறை :

🎶பதிக எண்: 310  தலம்: திரு ஆலவாய்
பாடல் : 07
பாடல்: கறையிலங்கு...
பண் : கெளசிகம்
இராகம் : பைரவி
தாளம் : ரூபகம்

🎶பதிக எண்: 345  தலம் : திருநள்ளாறு பாடல் : 05
பாடல் : பண்ணியல்...
பண்    : சாதாரி
இராகம் : பந்துவராளி
தாளம்    : சதுச்ர நடை

🥁தாள ரீதியில் சிறப்பு பெற்ற சில பாடல்கள் **..

⚜️முதல் திருமுறை :

🎶பதிகங்கள்: 120 - 125
பண் : வியாழக்குறிச்சி
ஜதி :  தக  திமி 
            தக ஜூனு
நடை: சதுச்ர நடை

பதிகம்: 01:123: (திருவையாறு)
பாடல் :  05
பாடல் :  பிடியதன் ...

⚜️இரண்டாம் திருமுறை :

🎶பதிகங்கள்: 165 - 170
பண் : இந்தளம்
ஜதி  : தக  தகிட
            தக  தகிட
நடை: கண்ட நடை

பதிகம்: 165     தலம்: திருப்புகலி
பாடல் : 01
பாடல் :  
முன்னிய காலை ...

🎶பதிகங்கள்: 233 - 237
பண் : நட்டராகம்
ஜதி  : தகிட தகிட
நடை: திச்ர  நடை

பதிகம்: 236   தலம்: திருக்கோவலூர்.
பாடல் :01
பாடல் :  
படைகொள்கூற்றம்    வந்துமெய்ப் 
பாசம்விட்ட    போதின்கண்

இடைகொள்வா    ரெமக்கிலை 
யெழுகபோது  நெஞ்சமே

குடைகொள்வேந்தன்    மூதாதை
குழகன்கோவ    லூர்தனுள்

விடையதேறுங்   கொடியினான் 
வீரட்டானஞ்   சேர்துமே.

⚜️மூன்றாம் திருமுறை :

🎶பதிகங்கள்: 310 - 311
பண் :  கெளசிகம்
ஜதி  :  தகிட தகிட
நடை:  திச்ர  நடை

பதிகம்: 310   தலம்: திருஆலவாய்
பாடல்  : 01

வீடலால    வாயிலாய்   விழுமியர்கள் 
நின் கழல்
பாடலால   வாயிலாய்    பரவநின்ற பண்பனே
காடலால   வாயிலாய்    கபாலிநீள்க டிம்மதில்
கூடலால    வாயிலாய்    குலாயதென்ன
கொள்கையே.

🎶பதிகங்கள்: 325 - 346
பண் : சாதாரி
ஜதி  : தகதகிட  தகதகிட
நடை: கண்ட  நடை

பதிகம்: 325  தலம்: திருப்பிரமபுரம்
பாடல்  : 01
பாடல்  : சுரர் உலகு🔹....
இந்தப்பதிகப் பாடல்கள் பற்றியும் இதன்  சிறப்புகள் பற்றி மிக விரிவாக வேறு வேறு பதிவில் காணுவோம்*

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐

மேற்கண்ட பதிகங்கள் திருவிராகப் பதிகங்கள் என்று வகைப் படுத்தப்பட்டுள்ளது.

🔹தமிழ் மொழியில் - இது போன்ற அமைப்பில் - இவ்வகை சந்த இசை அமைப்பில் - பல்வேறு பண்களில் இசைப் பாடல்களை அமைத்து முதன் முதலாக ஏராளமான பதிகங்களை இயற்றியவர் கி.பி. 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ஞானசம்பந்தரே.

✳️இதனால் இவரை இசைத்தமிழ் இறைவர் என்று போற்றுகிறார்கள்;
அவ்வழி நின்று நாமும் போற்றுவோம்.

🙏பல்வேறு வலைதளத்தில் உள்ள இணைப்பில் உள்ள செயலிகள் மற்றும் 

🙏இசை பேரறிஞர்களாகிய,  வீ.ப.கா.சுந்தரம்,  ஞானகுலேந்திரன், சுப்பிரமணியன், அங்கையர்கண்ணி, மு.கவிதா  முதலிய ஒப்பற்ற பேராசிரியர்கள் நூல்களிலிருந்தும் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டு வழங்கப்பெறுகிறது.
🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி நூல்களையும் தொடர் கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு உணர்வோம்.

🙏நன்றி.

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்.
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐

திண்டல் திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் 6.09.26

திண்டல்  திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் வேலாயுதசாமி கோயில், திண்டல் என்பது ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ. தொ...