Saturday, January 17, 2026

திருக்கருகாவூர்சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 81 வது தேவாரத்தலம் ஆகும்.*அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில், திருக்கருகாவூர்.

திருக்கருகாவூர்
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 81 வது தேவாரத்தலம் ஆகும்.*
அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில், திருக்கருகாவூர்.
இது ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரப்பாடல் பெற்ற சிவதலம்
சுவாமி : முல்லைவனநாதர்
அம்பாள் : கர்ப்பகரஷட்சம்பிகை
கருகாத்த நாயகி

*தல விருட்சம்:முல்லை*
*தீர்த்தம்:பால்குளம், ஷீரகுண்டம், பிரம்மதீர்த்தம்*
*புராண பெயர்:கருகாவூர், திருக்களாவூர்*
.*கி.பி. ஏழாம் நூற்றாண்டு கோயில் இது.

**பிரார்த்தனை**மகப்பேறு:*
*திருமணம் ஆகி பல ஆண்டுகள் கழித்தும் குழந்தை வரம் இல்லாதவர்கள் இத்தலத்தில் வந்து வழிபடுவதற்கும்,கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம் அடைவதற்காக செய்யும் பிரார்த்தனைக்கும் புகழ்பெற்றது இத்தலம்.*

*மேலும் மாதவிடாய் கோளாறு உள்ள பெண்கள் , கர்ப்பப்பை சம்பந்தமான நோயுள்ள பெண்கள், திருமணம் தடைபடும் பெண்கள் ஆகியோரும் இத்தலத்திற்கு பெருமளவில் வந்து வழிபட்டு தங்கள் பிரச்சினைகள் நீங்க பெறுகின்றனர்*

*தீராத நோய் உடையவர்கள், குறிப்பாக சரும நோய் உள்ளவர்கள் சுவாமிக்கு புனுகுச் சட்டம் சாத்தி தம் நோய் நீங்கப் பெற்று வருகிறார்கள்.இது இன்றளவும் நடைபெற்று வரும் கண்கூடான உண்மையாகும்.*

*இத்தலத்து முல்லைவனநாதனை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
முல்லைக்காடாக இருந்த இந்த இடத்தில் சிவலிங்கத்திருமேனியை முல்லைக் கொடிகள் தழுவிப்படர்ந்திருந்தன. குழைவான இத்திருமேனியில் இன்றும் முல்லைக் கொடி படர்ந்து இருந்த வடுவை காணலாம்.*

வைகாசி – வைகாசி விசாகம் – 10 நாட்கள் – பிரம்மோற்சவம் – கொடி ஏற்றி தீர்த்தவாரி திருவிழா *புரட்டாசி – நவராத்திரி – அம்பாளுக்கு லட்சார்ச்சனை – 10 நாட்கள் திருவிழா*

*ஆடிபூரம் – பிரகாரம் வருவார் – 10 ம் நாள் காவேரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறும்.*

*இவை தவிர நடராஜருக்கு ஆறு அபிசேகங்கள், நிறைபணி அன்னாபிசேகம் , கந்தர் சஷ்டி, கார்த்திகை சோமவார நாட்கள் அனைத்து கார்த்திகை ஞாயிறுகளில் தீர்த்தவாரி, கார்த்திகை தீபம் மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை தலத்தின் விழாக்கள்.

*இத்திருத்தலம் மிகப்பழைய காலந்தொட்டு கருவுற்ற மகளிருக்கு, மிகச்சிறந்ததோர் ஆரோகியஸ்தலமாக இருந்து வந்துள்ளது. இத்திருக்கோயிலில் மூர்த்தியும், அம்பாளும் மகளிரின் கருச்சிதையா வண்ணம் காத்து, அவர்கள் எளிதில் மகப்பேறு எய்தி திருவருள் பாலித்த வண்ணம் உள்ளனர்.*

*சுவாமி, விநாயகர், நந்தி மூன்றுமே இத்தலத்தில் சுயம்பு மூர்த்திகள்.இதில் சுவாமி மட்டும் மண்ணால் ஆனது.மற்ற இரண்டும் சிலா அம்சங்கள்.*

*சுவாமிக்கும் அம்பாளுக்கும் நடுவில் சுப்ரமணியர்(சோமாஸ்கந்தர்) உள்ளார்.இவரை வழிபட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.*
*நவகிரகங்களில் எல்லா கிரகங்களும் சூரியனை நோக்கியே இருக்கும்.சூரியனுக்கு எதிரில் குரு.எல்லாமே அனுகிரக மூர்த்தி.*
*வக்கிர மூர்த்திகள் கிடையாது.*
*அம்பாள் இடது கையை இடுப்பில் வைத்தபடி கர்ப்பத்தை தாங்கியபடி உள்ளது சிறப்பம்சம்.

*சுவாமி சுயம்பு மூர்த்தியாக இங்குள்ளார் என்பது சிறப்பு. லிங்கம் புற்று மண்ணினால் ஆகியதாகும்.*
*எனவே சுவாமியின் திருமேனியில் சுவாமிக்கு நேரடியாக அபிசேகம் செய்வது இல்லை.சுவாமியின் திருமேனியில் புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்படுகிறது*

*சுவாமி, விநாயகர், நந்தி மூன்றுமே இத்தலத்தில் சுயம்பு மூர்த்திகள்.இதில் சுவாமி மட்டும் மண்ணால் ஆனது.மற்ற இரண்டும் சிலா அம்சங்கள்.*

*சுவாமிக்கும் அம்பாளுக்கும் நடுவில் சுப்ரமணியர்(சோமாஸ்கந்தர்) உள்ளார்.இவரை வழிபட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.*
*நவகிரகங்களில் எல்லா கிரகங்களும் சூரியனை நோக்கியே இருக்கும்.சூரியனுக்கு எதிரில் குரு.எல்லாமே அனுகிரக மூர்த்தி.*
*வக்கிர மூர்த்திகள் கிடையாது.*
*அம்பாள் இடது கையை இடுப்பில் வைத்தபடி கர்ப்பத்தை தாங்கியபடி உள்ளது சிறப்பம்சம்.*
மீள் தரிசனம்.
18.03.2023 மகாசிவராத்திரி/ சனி மகா பிரதோஷம்.
மேலும் பல முறை தரிசித்த ஆலயம்.
28.12.2025 மீள் தரிசனம்.

#சுப்ராம் தரிசனம்
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
https://www.facebook.com/share/p/1GVowcdWsN/

கொறுக்கை கொறுக்கை: புஷ்பவல்லியம்மன் சமேதபிரம்மஞானபுரீஸ்வரர் ஆலயம்.

கொறுக்கை 
கொறுக்கை: புஷ்பவல்லியம்மன் சமேத
பிரம்மஞானபுரீஸ்வரர் ஆலயம்.

அவிட்ட நட்சத்திர பரிகார கோவில்.
கிழக்குப் பார்த்த ஆலயம். 
இராஜ கோபுரம் இல்லை. மிகவும் புராதான தலம். சிதைந்து போய் மீட்டு தற்போது புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.

சுவாமி கிழக்கு நோக்கியது. அர்த்த மண்டபம், நிருத்த மண்டபம் மற்றும் முன் மண்டபம் கொண்டது.

அம்பிகை தனியாக தெற்கு நோக்கி அமைப்பில் உள்ளார்.

ஏகபிரகாரம். கோஷ்ட்டத்தில் தட்சினாமூர்த்தி, அர்த்த நாரீஸ்வரர், பிரும்மா, துர்க்கையும்.

மேற்கில் பிரகார விநாயகர், சுப்பிரமணியர், மகாலெட்சுமி, சண்டிகேஸ்வரர் அமைந்துள்ளனர்.

கிழக்கில், பைரவர், சூரியன்

தகவல் தெரிவித்து தரிசனம் செய்யலாம்.
வழி: 1. பட்டீஸ்வரம் கிழக்கில், 3 கி.மீ.
2. குடந்தை - ஆலங்குடி வழியில், சாக்கோட்டை அடுத்து மருதாநல்லூர் வந்து மேற்கில் பட்டீஸ்வரம் செல்லும் சாலையில் 2 கி.மீ.தூரத்தில் கொறுக்கை உள்ளது. பிரதான சாலையில் வரும் சிற்றூரில் நடுவில் உள்ளது.

28.12.2025- #மீள் தரிசனம்
#சுப்ராம் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மிகபாரதம்அகிலத்தின்சிகரம்
https://www.facebook.com/share/p/1PUG3LMVeK/

சாக்கோட்டை - கலயநல்லூர்ஶ்ரீ அமிர்தகலேசர் - ஸ்ரீ அமிர்தவல்லி அம்மன் ஆலயம்.

சாக்கோட்டை - கலயநல்லூர்
ஶ்ரீ அமிர்தகலேசர் - ஸ்ரீ அமிர்தவல்லி அம்மன் ஆலயம்.

கும்பகோணம் - ஆலங்குடி பிரதான சாலையில், குடந்தையிலிருந்து 5 கி.மீ.
பிரதான சாலை ஒட்டி, மேற்கில் பிரியும் சிறிய சாலையில் கிழக்கு நோக்கிய ஆலயம்.
3 நிலை ராஜகோபுரம் உடையது.

மிக மிக பழமையன ஆலயம்.
சுந்தரர் திருமுறை பாடல் தலம்

பிரளய காலத்தில் உயிர்களை கலசத்தில் வைத்து அந்த கலசம் ஒரு பகுதி லிங்கமாக மாறிய இடம்.

முன் நீண்ட மண்டபம், சுவாமி கிழக்கு நோக்கி, அர்த்தமண்டபம், முன் மண்டபம்.
அதற்கு முன்னே தெற்கு நோக்கிய தனி கருவரையில் அம்பிகை.

ஏக பிரகார அமைப்பு. கோஷ்ட்டதட்சினாமூர்த்தி, பெருமாள், பிரும்மா. துர்க்கை. சண்டிகேஸ்வரர்.

வன்னி தலவிருட்சம்.
சுப்பிரமணியர் மகாலெட்சுமி மேற்கு பகுதியில் உள்ளனர்.

ஆலய சிறப்பாக, தவசு அம்மன் சுப்பிரமணியர் சன்னதி அடுத்து உள்ளார்.

பராமரிப்பில் உள்ள ஆலயம்.

ஆலயம் முன்புறம், சிறிய தோட்டம் உள்ளது.

28.12.2025- #மீள் தரிசனம்
#சுப்ராம் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மிகபாரதம்அகிலத்தின்சிகரம்
https://www.facebook.com/share/p/1A9v5CCWPq/

தஞ்சை: பஞ்ச வைத்தியநாத ஸ்தலங்கள்:5. சுரைக்காயூர் :ஸ்ரீபுஜபதீஸ்வரர் ஆலயம்

தஞ்சை: பஞ்ச வைத்தியநாத ஸ்தலங்கள்:

5. சுரைக்காயூர் :
ஸ்ரீபுஜபதீஸ்வரர் ஆலயம்

💥சுரைக்காயூர்:
திருக்கருகாவூர் - திட்டை சாலையில் வரும் வெட்டாறு பாலம் கடந்து வடக்குகரையில் செல்லும் பாதையில் ஒன்பத்து வேலி, கொடுகிழி என்ற சிற்றூர்கள் கடந்துள்ளது. வடக்குப்புறம் உள்ளது. அருகில் தெற்கில், வெட்டாறு பாலம் கடந்து 2 கி.மீ.தூரத்தில் திட்டை செல்லும் வழியில் மெலட்டூர் வைப்புத்தலம் உள்ளது.

🌼வெட்டாறு வட கரையில் உள்ளது
🌼கிழக்கு நோக்கிய ஆலயம்.

🌼சுவாமி ஸ்ரீபுஜபதீஸ்வரர் - ஸ்ரீ ஒளடதாம்பாள்
நந்தி, அடுத்துள்ள மண்டபம் பெரியது, சுவாமி, அம்பாள் சன்னதிகளை இணைத்து கட்டப்பட்டுள்ளது.

🔰சுவாமி கிழக்கு நோக்கியும்
அம்பாள் தெற்கு நோக்கியும் உள்ளார்கள்.

⛳சுற்று பிரகாரத்தில், விநாயகர், தெட்சினாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், துர்க்கை உள்ளனர்.
⛳கிழக்கில் பைரவர், சனிஸ்வரர், முதலிய தெய்வங்களும் உள்ளது.

🔱புராதானமான தலம், இராமாயண தொடர்புள்ளது. ராமர் வழிபட்டத்தலம்.

🔱ஆயுஷ் தேவி தஞ்சை மாவட்டத்தில் உள்ள இரண்டு ஆலயங்களில் இதுவும் ஒன்று. மற்றொன்று இவ்வூர் அருகில் உள்ள அரிமங்கை ஆலயத்தில் உள்ளது.

🌼புனரமைக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளது.
ஒரு காலம் மட்டும் நடைபெறுகிறது.

ஆலயம் எப்போதும் திறந்திருக்கிறது.
அருகில் அய்யனார் ஆலயம். ஒரு குளம் ஒன்றும் உள்ளது.

🌼தஞ்சாவூர் சுற்றியுள்ள பஞ்சவைத்தியதலங்களில் இதுவும் ஒன்று
நவராத்திரி அம்மன் ஆயூஷ் தேவியை தசமி திதியில் இங்கு தரிசிக்க வேண்டும்
சுரைக்காய் சித்தர் திருவடிபட்ட புண்ணியதலம்.

🌼ஆலயம் நல்ல பராமரிப்பில் உள்ளது.  அருகில் உள்ள பெரிய தலம் - மெலட்டூர்.
தனித்தனி சன்னதிகளில், விநாயகர், வள்ளிதெய்வானையுடன் முருகன்,
கிழக்குப்புறத்தில் ஒரு குளம் மற்றும் ஒரு அய்யனார் ஆலயமும் உள்ளது.

#சுப்ராம்அருணாசலம்
28.12.25 மீள் தரிசனம்
(17.10.2021 - தரிசனம்)
4.3.2023 பிரதோஷம் தரிசனம்.
#பிரதோஷம் - சனி மகாபிரதோஷம்
https://www.facebook.com/share/p/1BsNErLSJp/
(சுரைக்காயூர்)
#சுப்ராம்தரிசனம் 
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

திண்டல் திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் 6.09.26

திண்டல்  திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் வேலாயுதசாமி கோயில், திண்டல் என்பது ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ. தொ...