Tuesday, August 2, 2022

அமர்நாத் பனிலிங்க தரிசனம் -5-07-2022 - 10-7-2022 பயண அனுபவக்குறிப்புக்கள்

7
அமர்நாத்பனிலிங்கதரிசனம் 
#காஷ்மீர்
#அமர்நாத்யாத்ரா 2022
5-07-2022 to 10-07-2022
#பயணஅனுபவக்குறிப்புகள்
#அமர்நாத்_பனிலிங்கம்
7.
அமரநாதரின்  அருள் 

" அவனருளாளே அவன் தாள் வணங்கும்' 
பாக்கியம் அடைந்தோமே.

இந்துக்கள்மட்டுமன்றி, உலகத்தில் உள்ள எல்லோருக்கும், இறைவனாக விளங்கும், சிவபெருமான், உலகத்தில் ஒரே ஒரு இடத்தில் மட்டும், இயற்கையான பனிலிங்க வடிவத்தில் தோன்றுகிறார்.  இது இமயமலையில், பாரத தேசத்தில் உள்ள தெற்கு காஷ்மீரப் பகுதியில் உள்ள ஒரு மலையில் உள்ள இயற்கையான குகையில் உள்ளது. 

ஒவ்வொரு வருடத்திலும் வரும் கோடை காலத்தில், இந்த இயற்கையான பனிலிங்கத்தை தரிசிக்க  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்,  உலகத்தின் பல இடங்களிலிருந்து புறப்பட்டு, கடும் மலைப்பாதைகளை கடந்து வந்து, இந்தக் குகையை அடைந்து, தங்கள் ஆன்மீக கடமையை நிறைவேற்றி செல்லுகிறார்கள். 

ஒரு முறை, அன்னை பார்வதிதேவி, சிவபெருமானிடம், 'தாங்கள் மண்டை ஓட்டை மாலையாக ஏன் அணிந்து உள்ளீர்கள்' என்று கேட்க, 

 அதற்கு அப்பெருமான், 'ஒவ்வொரு உயிரும் இறந்து இறந்து பிறக்கும்போதும் நான் ஒவ்வொரு மண்டை ஓட்டு தலையையும் மாலையாக அனிந்து கொள்ள வேண்டியது இருக்கிறது'. என்று கூற,

அன்னையும், ' நாங்கள் மட்டும் இறந்து இறந்து பிறக்கும் போது, நீங்கள் அழியாத பிறவியாய் வீற்றிருப்பது எப்படி? அந்த ரகசியத்தை எனக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன்,' என்று கெஞ்சிக் கேட்க, 

பெருமான், ' நீ அந்த அமர்கதையை உற்று உணர்ந்து  கேட்டால், நீ புரிந்து கொள்ளலாம் என்று கூறி,  அதை உனக்கு சொல்கிறேன், கேள். ஆனால் அந்த சிவரகசியத்தைச் சொல்லவும், கேட்கவும், தனி இடம் தேவை,  எந்த உயிரினமும் இல்லாத இடத்தில்தான் உனக்குக் கூற முடியும். அதை நீ கேட்கும் போது, வேறு எந்த உயிரினங்களும் அதைக் கேட்க அனுமதி இல்லை,''. என்றார்.

அன்னைக்கு சிவரகசியத்தை  உணர்த்த, எந்த ஜீவராசியும் இல்லாத இடத்தைத் தேடி அமர்நாத் குகை உள்ள இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தார். 

இந்தக்குகை வருவதற்கு முன்பு, தன்னுடை வாகனமாகிய காளையை பகல்காம் என்ற இடத்திலும், சந்திரனை சந்தன் வாடி என்ற இடத்திலும், சடாமுடியை ஜாட்டான் என்ற இடத்திலும், நாகத்தை ஷேசநாக் என்ற இடத்திலும், விட்டுச்சென்றார்.

 மகன் கனேசரை மகாகுனபர்வதத்திலும், பஞ்சதரணி என்ற இடத்தில், பூமி, நீர், காற்று, தீ, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களையும் விட்டுச் செல்கிறார்.

இவைகளை விட்டுவிட்டு, அமர்நாத் குகையை அடைகிறார்.  குகைக்குச் சென்றதும், காளக்கினி யைத் தோற்றுவித்து குகையின் அருகில், யாரும் வாராதவாறு, தீயை உண்டாக்கச் செய்தார். 

இதன் பிறகு அமர்கதையை பார்வதிதேவியிடம் கூறத்தொடங்கினார்.

ஆனாலும், அந்த குகையில் வசித்து வந்த இரண்டு புறாக்கள் மட்டும் அமர் கதையை கேட்டுவிடுகிற காரணத்தால், அவைகள் இறப்பு இல்லா நிலை அடைகிறது. அவைகளே  சுகபிரம்மரிஷி முனிகள் என்பார்கள். 

இன்றைக்கும் கூட, வரும் பக்தர்களுக்கு,  அந்தப்புறாக்களின்  தரிசனம் கிட்டுகிறது. 
இவைகள் எப்படி இந்த இயற்கை கால சூழலில் - கடும் உறை பணியில் - பல்லாயிரம் அடி உயரத்தில் வாழுகின்றன என்ற வியப்பு உள்ளது.

அமர்நாத் குகை  இந்துக்களின் மிக முக்கியமான புனித இடங்களில் ஒன்று. இது பரம்பொருளான, பரமேஸ்வரரின் இருப்பிடம் என்பதால், வருடாவருடம் இயற்கையாக உருவாகும், பனி  லிங்க தரிசனம் காண்பது வாழ்வின் புண்ணியம் என்ற நம்பிக்கை ஆழமாக உள்ளது.
🙏🏻🙇🏼‍♂️

ஒரு புராணப்படி, காஷ்மீர் முழுதுமே நீர் நிறைந்த பனியால் முடி கிடக்க, அங்கு வந்த காசிப முனிவர், அங்கு உரைந்திருந்த நீரை ஆதாரமாக்கி, பல்வேறு ஆறுகளை உருவாக்கி, அங்கு  உள்ள நீரை ஒழுங்குபடுத்தி நலம்  செய்வித்தார்.  

இந்த சமயத்தில், இமாலய பிரதேசத்தில் வலம் வந்த பிருகு முனிவர், இந்த அமர்நாத் குகையைக் கண்டுபிடித்தார். அவர் மூலமே, இந்த இடம் பத்தர்களால், வணங்கிப் போற்றத்தக்கதாக மாறியது என்பதும் ஒரு புராண வரலாறு.
 🙏🏻🙇🏼‍♂️

புராணங்களின் கூறியபடி இக்குகை சிவன் தேடி அடைந்தது என்று கூறப்பட்டிருந்தாலும்,  இக்குகையைப் பற்றிய செவிவழிக்கதை ஒன்றும் உள்ளது.

ஒரு காலத்தில்  இடையர் ஒருவருக்கு சாது ஒருவர்,  ஒரு பை நிறைய கரியை கொடுத்து அனுப்ப அதை வீட்டில் வந்து கொட்டி பார்க்கிறார். 

அவ்வளவும் தங்கப் பொற்காசுகளாக மாறி உள்ளது கண்டு மகிழ்வுடன் அந்த சாதுவை சந்தித்து நன்றி தெரிவிக்க  ஆவலுடன் செல்கிறார்; 

ஆனால், சாது - முனிவரைக் காணவில்லை  ஆனால், அந்த இடத்தில்  இந்தக் குகையும், பனிலிங்கத்தையும் கண்டு வியந்து, ஊரில் வந்து தெரிவிக்கிறார். எல்லோரும் கேள்விபட்டு வியந்து வந்து வணங்கிச் செல்ல ஆரம்பித்தனர், என்பதும் ஒரு வரலாறு. 
 🙏🏻🙇🏼‍♂️

பொதுவாக, ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் இயற்கையாகவே இந்த குகையில், பனிலிங்கம் தோன்றி மறைகிறது என்பதே மறுக்க இயலாத உண்மை.

இந்த குகையின் உள்புறம், பெரிய லிங்கம் தோன்றும் இடத்திற்கு  மிக அருகில் மேலும் இரண்டு லிங்கங்கள் தோன்றுகிறது.  ஒரு பணி லிங்கம் அன்னை பார்வதி தேவியாகவும், மற்றொன்று சிறிய வடிவில் உள்ளது. கணபதியாகவும் பக்தர்கள் வழிபடுகின்றனர்.

மேலும், அவ்விடத்தில் வாழும் கிளிகளையும் கண்டு வணங்கிச் செல்கிறார்கள்.

பயண அனுபவங்கள்... தொடரும்   
 
நன்றி.

#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#அமர்நாத்யாத்ரா 2022
#அமர்நாத்_பனிலிங்கம்

முன்பதிவுகளில் :
#LalChowk
#Sankarachaiyar_temple
#ஜேஷ்ட்டாதேவி_ஆலயம்
#Nisht_mohal_garden
#Dallake #மிதக்கும்_சந்தை

LINKS:
முன்பதிவு ..
பதிவு: 1 - #LalChowk
https://m.facebook.com/story.php?story_fbid=7861532467255275&id=100001957991710
பதிவு : 2 - #Shankarachariartemple
https://m.facebook.com/story.php?story_fbid=7870068123068376&id=100001957991710
பதிவு: 3 #ஜேஷ்ட்டாதேவி ஆலயம்
https://m.facebook.com/story.php?story_fbid=7875067092568479&id=100001957991710
பதிவு : 4: #nishat_mohal_garden 
https://m.facebook.com/story.php?story_fbid=7889040434504478&id=100001957991710
#LalChowk
#shankarachariartemple 
#ஜேஷ்ட்டாதேவி
#nishat_mohal_garden
பதிவு:5 - #DalLake 
பதிவு: 6- #nilgrith

Friday, July 29, 2022

#அமர்நாத்யாத்ரா 2022 6.07.2022 ஏரி (யில்)யால் வாழ்வு#FLOOTING_MARKET - #மிதக்கும்_சந்தை#DAL_LAKE #BOATING

5.
#அமர்நாத்பனிலிங்கதரிசனம் 
#காஷ்மீர்
#DalLake 
#அமர்நாத்யாத்ரா 2022
#பயணஅனுபவக்குறிப்புகள்
6.07.2022
ஏரி (யில்)யால்  வாழ்வு
#FLOOTING_MARKET  - #மிதக்கும்_சந்தை
#DAL_LAKE  #BOATING

6.07.2022 மாலையில் DAL ஏரியில் சென்று சுற்றிப் பார்த்தோம்.

புராதான காலத்தில்,  காஷ்மீரின்  ஒரு பகுதியில், டால் ஏரியின் கிழக்குப்பகுதியில் சிறிய கிராமத்தில் துர்கா வழிபாடு இருந்ததாகவும், டால் ஏரியின் கிழக்குப் புறத்தின் ஒரு சிறிய கிராமப்பகுதியே துர்க்கையின் இருப்பிடம் என்று காஷ்மீர் புராணத்தில் உள்ளது என்றும் கூறுவர்.  

முகலாயர் காலத்தில் பல்வேறு வளர்ச்சிகளும்,  குறிப்பாக பூந்தோட்டங்கள் அமைப்பும், அதைத் தொடர்ந்து ஆண்ட, ஆப்கானியர்கள் மற்றும் சீக்கிய மகாராஜா ரன்ஜித் சிங் அவர்கள் காலத்திலும், பிறகு வந்த டோக்ரா மகா ராஜாக்கள் ஆண்டபோதிலும்,  ஆங்கிலேயர்கள் வசம் வந்த போதிலும், பல்வேறு மாற்றங்களும், வளர்ச்சிகளும் டால் ஏரியில்  ஏற்பட்டுள்ளன. 

டோக்ரா மகாராஜா, கட்டிடங்களுக்குத் தடை விதித்தாலும், பின்னாள் வந்த ஆங்கிலேயர்கள் காலத்தில், பல்வேறு படகு வீடுகளும், பல்வேறு கட்டிடங்களும் ஏற்படுத்தப்பட்டன.

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு ஹன்ஜி என்ற சமூகத்தினர் நிறைய, மிதக்கும் படகுவீடுகள் ஏற்படுத்தி சரியாகப் பராமரித்தனர்.   

Dal ஏரி சுமார் 316 Sq.கி.மீ பரப்பளவு உடையது. 
ஆழம் சுமார் 5 முதல் 20 அடி அளவு உள்ளது.

இதனுள் இரண்டு சிறிய தீவுகள் உள்ளன.

கரையின் பகுதி சுமார் 15.5 கி.மீயில், ஹோட்டல்கள், வீடுகள், படகுவீடுகள்,  ஷிகார் என அழைக்கப்படும் சுற்றுலா படகுகள்,  உள்ளன. 

கரையில் புகழ்பெற்ற முகலாயர் தோட்டங்களும் உள்ளன.

ஏரி 18 Square கி.மீ தூரம் பரவியுள்ளது. 

மிதக்கும், தோட்டங்கள், கடைகள், வீடுகள், விடுதிகள் அனைத்தும் நிறைந்துள்ளன.

ஏரியின் முழுமையான புரைமைப்புத் திட்டத்திற்கு, மத்திய அரசு கிட்டத்தட்ட ரூ 11 பில்லியன் அளவிற்கு,  நிதி உதவியுள்ளது.

#FLOOTNG_MARKET - #மிதக்கும்_சந்தை
காய்கறிகள் மற்றும் அனைத்துவிதமான பொருட்களையும் விளைவித்து, மிதக்கும் சந்தையாக, ஏரியின் ஒரு புறத்தை மேம்படுத்தியுள்ளனர்.  இதனால், இவர்களின் வாழ்வாதாரமும்,  பொருளாதார முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது என்பது உண்மையே.

இந்த வளர்ச்சியினால், காஷ்மீரின் கிரீடத்தின்  ஒளி வீசும் வைரமாகத் DAL ஏரி திகழ்கிறது. 

கடும் குளிர்காலத்தில் இவ்வேரி குளிர்ந்தும் உறைந்தும் காணப்படும்.

ஏரியின் ஒரு பகுதியில், நீண்ட சாலை வசதி செய்யப்பட்டுள்ளது.  மேலும், புகழ்பெற்ற  ஷாலிமர் தோட்டம், நிஷாத் தோட்டம் உள்ளது. 

சுற்றுலா பயணிகள் விரும்பும் அளவிற்கு படகுத்துறைகள்  சுமார் 15 நீண்டு உள்ளன.
ஒவ்வொரு துறைகளிலும், படகுக்குழாம் அமைக்கப்பட்டுள்ளன.

 பயணிகள் உரிய கட்டணத்தில் படகு அல்லது ஷிகார் என அழைக்கப்படும் படகில் நம்மை அழைத்து, வசதியாக அமர வைக்கப்பட்டு சுற்றி வருகிறார்கள். 

வசதி, காலம், சூழல்  தகுந்தார்போல வாடகை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

முதல் இரு படகுத் துறைகளில் பல்வேறு வீடுகளும், கடைகளும் ஏராளமாக உள்ளன.   

சற்று அமைதியையும், தனிமையும் வேண்டுபவர்கள். 7,8 படகுக்குழாம் அடுத்து பயணிக்கலாம்.

நாங்கள் 6.07.2022 மாலை, தங்கியிருந்த Hotel அருகில் சற்று தள்ளி உள்ள இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஒரு படகுக்கு, 4 முதல் 6 வரை நபர்கள் ஏற்றிச் செல்லப்பட்டோம்.

நாங்கள் படகு ஏரிய இடம் ஒரு தனியான நீர்வழிப்பாதை. அங்கிருந்து, அந்நீர்வழி பாதையில் சென்று,  தால் ஏரியின் ஒரு புறத்திற்கு சென்றோம்.

ஏராளமான மக்கள் DAL ஏரியை நம்பி வாழுகிறார்கள் என்பது கண்கூடு.

செல்லும் வழியில் அந்நகர் மக்களின் படகு வீடுகள், கரையில் உள்ள சிறிய எளிமையான வீடுகள், தெரு போன்ற அமைப்புகள், அவர்களின் வாழ்வியல் முறைகள்,  அவர்களின் வாழ்வாதரம் அமைந்துள்ள விதம்  முழுதும் அந்த ஏரியின் வழிப்பாதையில்,  கண்டோம்.

சுமார் 1700 படகுகளும், படகு வீடுகளும், கடைகளும், நிறைந்துள்ளன. 

 சிறிய பெரிய படகு கடைகளில் எல்லாவிதமான பொருட்களும் கிடைக்கின்றன. 

 நாங்கள் படகில் ஏறி டால் ஏரியை  அடைந்து பின் சிறிய நீர் வழிபாதையில் சென்றோம். கடைத்தெரு போல, இருபுறமும் படகுக்கடைகள் நிறைந்துள்ளன.

நாம் விரும்பும் படகுக்கடைகளுக்கு சென்று விரும்பிய பொருட்களை வாங்கலாம். அதிகமாக Textiles shops உள்ளன, ஷால்வைகள், காதணிகள், பழங்கள், கைவினைப்பொருட்கள், இன்னும் அனைத்து வித காஷ்மீரிய பொருட்கள் கிடைக்கின்றன.

எல்லாப் பொருட்களும் அதிக விலையில் உள்ளது என்று கூறுகிறார்கள்.

இது மட்டுமல்ல, சிறிய சிறிய படகுகளில் பல்வேறு பொருட்களையும் படகில் மிக அருகில் கொண்டு வந்து நேரடி வியாபாரம் செய்தும் வருகிறார்கள்.

ஒரு இடத்தில் படகு Tea shop  இருந்தது. Tea பொருட்கள் வாங்கிக் குடித்தோம்.

டால் ஏரியிலிருந்து மலைப்பகுதிகள், நீர்ப் பகுதிகள் மிக ரம்யமாக தெரிகிறது. 

SANKARACHARYAR TEMPLE, முதலிய கரையில் உள்ள முக்கிய இடங்களையும் கண்டோம்.

ஒவ்வொரு படகுத்துரைப் பகுதிகளுக்கும், படகுகள் ஏரிக்குள் சென்று வரும் வழிப்பாதைகளும், தனித்தனியே அளவீடு செய்பட்டிருக்கிறது. எல்லா  பகுதிகளிலிருந்தும், குறிப்பிட்ட பகுதியில் உள்ள படகு கடைகள்  உள்ள சந்தைப் பகுதிக்கு வந்து செல்கின்றன.

படகுவீடுகளில் தனித்தனியாகவும், குழுவோடும் தங்கவும் Meeting முதலியன நடத்தும், வசதிகளும் உள்ளன.

இடம், வசதி, காலம் பொறுத்து கட்டணங்கள் அமையும்.

தூய்மைப் பணிகள்..

மிகப்பெரிய நன்னீர் ஏரியான  DAL ஏரியில் மனிதர்களாலும் வாழ்வியல் முறைகளாலும், இயற்கையாலும், ஏராளமாக மாசுபட்டு,  கட்டுப்படுத்த முடியாத அளவில் மாசடைந்துவிட்டதாலும், மேலும் மேலும்,  பெருகிவருவதாலும்,  பல்வேறு அமைப்பினர் போராடியும், வழக்கு முறையீடுகள் செய்தும், தூய்மைப்பணி வேலைகளும் நடைபெற்று வருகின்றன.

சமீபகாலத்தில், ஒரு புரட்சி ஏற்பாடாக பல ஆயிரம் முதலீட்டில், புதிய தூய்மைப் பணிகள் திட்டமிடப்பட்டு, வேலைகள் நடைபெற்று வருகின்றன. அரசின் நல்லத் திட்டங்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு அவசியம் தேவை என்பதை உணருகிறோம்.

காஷ்மீர் சுற்றுலாவின் மிக முக்கிய அங்கமாக DAL ஏரியில் படகு சவாரி செய்வது சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் வழக்கமாக கைக்கொள்கிறார்கள்.

அமைதியும், அழகும் கொட்டிக்கிடக்கும் அந்த கடல் போன்ற ஏரியில் பயணம் செய்யும் போது, அவரவருக்கும் பல்வேறு அனுபவங்கள் கிடைக்கின்றன  என்பதை நிச்சயம்  உணருகிறோம். 

படகுசவாரி சுற்றுலா முடிந்ததும், Hotel  சென்றோம்.  இரவு உண்டு ஓய்வு எடுத்துக்கொண்டோம்.

பயணங்கள் தொடரும்.....
6.07.2022
#என்றும்__அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#பயணஅனுபவக்குறிப்புகள் 
#காஷ்மீர் 
#FLOOTING_MARKET  - #மிதக்கும்_சந்தை
#DAL_LAKE  #BOATING

LINKS:
முன்பதிவு ..
பதிவு: 1 - #LalChowk
https://m.facebook.com/story.php?story_fbid=7861532467255275&id=100001957991710

பதிவு : 2 - 
#Shankarachariartemple
https://m.facebook.com/story.php?story_fbid=7870068123068376&id=100001957991710
பதிவு: 3 
#ஜேஷ்ட்டாதேவி ஆலயம்
https://m.facebook.com/story.php?story_fbid=7875067092568479&id=100001957991710
பதிவு : 4: 
#nishat_mohal_garden 
https://m.facebook.com/story.php?story_fbid=7889040434504478&id=100001957991710
பதிவு : 5

Thursday, July 28, 2022

அமர்நாத்யாத்ரா 2022 NISHAT_MOHAL_GARDEN - 6.07.2022

4.
#அமர்நாத்பனிலிங்கதரிசனம் 
#காஷ்மீர்
#அமர்நாத்யாத்ரா
#பயணஅனுபவக்குறிப்புகள்
#NISHAT_MOHAL_GARDEN

ராசிக்கட்ட தோட்டம்
6.07.2022

 #DALLAKE  அருகில் உள்ள மிகப்பெரிய பிரசித்தப்பெற்ற
 #NISHAT_MOHAL_GARDEN சென்று பார்த்தோம்.
DAL LAKE எதிர்புறத்தில் ஏரியை நோக்கி அமைக்கப்பட்டுள்ள பெரிய மலர்த் தோட்டம் முகலாயர்களால்  அமைக்கப்பட்டுள்ளது.

46 ஏக்கர் அளவில், ஷாஜகான் மனைவி நூர்ஜகான்  அவர்களின் மூத்த  சகோதரர் அசீப் கான் என்பவரால் 1633 ல் இந்தப் பூங்கா வடிவமைக்கப்பட்டது. இதன் அமைப்பைக் கண்டு, ஷாஜகான் பொறாமை கொண்டு, இதன் மீது கவனம் செலுத்தி ஆளுமை செய்ய முயன்றதும்,  இந்த பூங்காவை சிதைக்க முற்பட்டார் என்பதும், பிறகு சமாதானமாகி பூங்காவை பாரமரிக்க அனுமதி தந்தார் என்றும் குறிப்பிடப்படுகிறது.

பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு உள்ளது.

12 ராசிகட்டங்கள் இருப்பது போல, 12 அடுக்குகள் கொண்டது, இப்பூங்கா, DAL ஏரியிலிருந்து படிப்படியாக, உயர அடுக்காக அமைந்துள்ளது. நடுப்பகுதியில் மேலிருந்து நீர் பெருகி ஓடிவரும் வகையிலும்,  ஒவ்வொரு கட்டத்திலும் கருங்கற்களால் அழகிய நீர்வீழ்ச்சி அமைப்பும், நீரேற்று  குழாய்களும், அழகுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேல் அடுக்குகளில், குளியல் தொட்டி போல இருப்பதால், சிறுவர்களும், இளைஞர்களும் குளித்து மகிழ்கிறார்கள்.

நீர் மேலிருந்து ஒவ்வொரு அடுக்குத் தோட்டத்திற்கும் வருமாறு குழாய் அமைப்பு உள்ளது.  முதலில்  சதுரமான அமைப்பில் உருவாக்கப்பட்டிருந்தாலும், பிற்காலத்தில், நீள்சதுரமாகவும், இருபுறமும் மிக நீண்ட பகுதிகளாகவும் வடிவமைப்பு மாற்றி அமைக்கப்பட்டு மிகப் பெரியத்தோட்டமாக மாற்றியமைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பழமை வாய்ந்த சினார், மரங்கள் அடர்ந்த பகுதிகள் உள்ளது. அதை தொடர்ந்து பராமரித்தும் வருகிறார்கள்.

அழகிய நடைபாதை பூங்காக்கள் உள்ளன.

முதல் இரண்டு கட்டங்கள் மிக அழகாகவும் விசாலமானதாகவும் உள்ளதால், பொதுமக்கள் இங்குதான் அதிகம்.

பொதுமக்கள், காஷ்மீர் உடை அணிந்தும் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.

நுழைவுக்கட்டனம் பெரியவர்களுக்கு Rs.24 சிறுவர்களுக்கு Rs.12 ம் வசூல் செய்யப்படுகிறது.

முக்கிய சுற்றுலா இடமாக உள்ளது.
Srinagar City யிலிருந்து 11 கிமீ.யில் வடக்கில, டால் ஏரி பக்கம், இந்தப் பூங்கா  அமைந்துள்ளது.

மதிய உணவுக்கு பின், ஹோட்டல் வந்து ரூமில் ஓய்வு எடுத்துக்கொண்டோம்.

6.07.2022
நன்றி
#என்றும்__அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#அமர்நாத்பனிலிங்கதரிசனம் 
#காஷ்மீர்
#அமர்நாத்யாத்ரா
#பயணஅனுபவக்குறிப்புகள்
#NISHAT_MOHAL_GARDEN

முன்பதிவு ..
பதிவு: 1 - #LalChowk
பதிவு : 2 - 

#Shankarachariartemple
https://m.facebook.com/story.php?story_fbid=7870068123068376&id=100001957991710
பதிவு: 3

 #ஜேஷ்ட்டாதேவி ஆலயம்
https://m.facebook.com/story.php?story_fbid=7875067092568479&id=100001957991710

Monday, July 25, 2022

#அமர்நாத்யாத்ரா 2022 ஜேஷ்ட்டாதேவி_ஆலயம் 6.07.2022

3.
#அமர்நாத்பனிலிங்கதரிசனம் 
#காஷ்மீர்
#அமர்நாத்யாத்ரா 2022
#பயணஅனுபவக்குறிப்புகள்

ஆன்மீக குன்றில் ஆலய வழிபாடு
#ஜேஷ்ட்டாதேவி_ஆலயம்

Srinagar பகுதியில் உள்ளது.

இது 5600 அடி உயரத்தில் ஒரு மலைப்பகுதியில் உள்ளது.

காஷ்மீர் மக்களின் புரான தெய்வமாக 
ஜேஷ்ட்டாதேவி வணங்கப்படுகிறார்.

இங்குள்ள ஆலயம் சிறிய சரிவான மலைப்பகுதியில், அடுத்து அடுத்து  4 பகுதிகளாக  அமைந்துள்ளது. 

ஒவ்வொரு பகுதிகளையும், ஏறி சென்று வழிபட நல்ல படிகட்டுக்கள் அமைத்துள்ளனர். 

இயற்கையான சூழலில் அமைதியான, அழகாக அமைத்துள்ளனர்.  முழுவதும், தனியார் Trust மூலம்  நிர்வாகம், மற்றும் பராமரிப்பில் உள்ளது.

சுமார் 50 படிகள் ஏறினால், முதலில் விநாயகர், மற்றும், Hanuman  தனித்தனி சன்னதிகள் பிறகு, ஷேஸ்ட்டா தேவி தனி சன்னதி.

ஜேஷ்ட்டாதேவி ஒரு நீள் சதுர நீர்த்தொட்டியில் ஒரு மூலையில் அமைக்கப்பட்டுள்ள தனிக்கருவரை மண்டபம்,  அதனுள் அமர்ந்த கோலத்தில் அழகு வெள்ளை பளிங்கு சிலையில் 4 கரத்துடன் தேவி, கிழக்கு முகமாக இருந்து அருள் செய்கிறார்.

நீர்த் தொட்டியின் இன்னொருபுறத்தில், 'தேவியைப் போற்றி வணங்குவதற்காக தனி மண்டபத்தில் Prayer Hall , இங்கிருந்து தேவியை  வணங்குகிறார்கள். இடையில் நீர்த்தொட்டி உள்ளது.

இந்தப் பகுதி ஆலயத்திற்கு சற்று மேல்புறம் சில படிகள் ஏறிச்சென்றால், தனி சிவன் ஆலயம் உள்ளது.

தனி கருவறை மண்டத்துடன், மேற்கு நோக்கியவாறு லிங்க வடிவில் உள்ளார். சுமார் 3 அடி லிங்கம் பளபளவென்ற கருங்கல்லில் உள்ளது. 

ஆவுடையின்  வடக்குப் புறம் சிறிய வெள்ளை பளிங்கு நந்தி  ஆதிசங்கரர் படம்/ இன்னொரு புறத்தில் சிறிய சாய் படம் மற்றும் விநாயகர் அமைத்துள்ளனர். லிங்கம் உள்ள கட்டிடம் உட்புறம் வட்டவடிவமாக உள்ளது.

நாமே சென்று, அபிஷேகம் செய்து வணங்கலாம். 

இதை அடுத்து இன்னும் சற்று மேல்புறம்  ஒரு பெரிய மண்டபத்தில் இயற்கையான தோற்றத்தில் ஒரு மிகப்பெரிய பாறை சுயம்புவாக அமைந்துள்ளது.  இந்த லிங்கத்தை படியேறி சுற்றி வரலாம். பாறையை இயற்கையான சுயம்பு லிங்கமாக வழிபடுகிறார்கள். இதன் மீது சிவப்பு சூர்ணம் தடவப்பட்டுள்ளதால், சிவந்த நிறத்துடன் உள்ளது. அருகில் அம்மன் சிலையும், விநாயகர் சிலையும் வைத்து வணங்கப்படுகிறது.

இதன் அடுத்த மேல்புறத்தில் பெரிய யாக மண்டபம், மற்றும் சமையல் கூடம் அமைக்கப்பட்டு, முறையான யாக ஹோமம் செய்து வழிபாடு நடைபெற்று வருகிறது. நாங்கள் சென்றபோது யாகத்தில்/ஹோமத்தில் கலந்துகொண்டு அனைவரும் பிரசாதங்கள் பெற்றுக் கொண்டோம்.

இதன் மேற்புறம் இன்னும் சற்று உயரத்தில், ருத்திர லிங்கம் சன்னதி உள்ளது. சில மீட்டர் உயரம் படிகள் ஏறி வழிபட்டு வர வேண்டும்.

இவ்வாலய பகுதிகளின் ஒரு பகுதியில், பக்தர்கள் வந்து தங்கி, ஹோமம் செய்து செல்வதற்காக, தனித்தனிப்பெரிய அறைகளும்,. இதன் நிர்வாகக் கட்டிடங்களும் உள்ளன.  

இவ்வாலய பகுதியின் அனைத்துப்பகுதிகளும், பூஞ்செடிகள், மலர்த்தோடங்கள், புல்வெளிகள், பளிங்குப்படிகளுடன் மிக அற்புதமாக உள்ளது. மலைப் பிரதேசத்தில், மிக மிக அமைதியான இயற்கை சூழல். 

6.07.2022
#ஆலயதரிசனம் 
#காஷ்மீர்
#அமர்நாத்யாத்ரா 2022
#ஜேஷ்ட்டாதேவி_ஆலயம்

#என்றும்அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
ஜேஷ்ட்டாதேவி_ஆலயம்

திண்டல் திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் 6.09.26

திண்டல்  திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் வேலாயுதசாமி கோயில், திண்டல் என்பது ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ. தொ...