3.
#அமர்நாத்பனிலிங்கதரிசனம்
#காஷ்மீர்
#அமர்நாத்யாத்ரா 2022
#பயணஅனுபவக்குறிப்புகள்
ஆன்மீக குன்றில் ஆலய வழிபாடு
#ஜேஷ்ட்டாதேவி_ஆலயம்
Srinagar பகுதியில் உள்ளது.
இது 5600 அடி உயரத்தில் ஒரு மலைப்பகுதியில் உள்ளது.
காஷ்மீர் மக்களின் புரான தெய்வமாக
ஜேஷ்ட்டாதேவி வணங்கப்படுகிறார்.
இங்குள்ள ஆலயம் சிறிய சரிவான மலைப்பகுதியில், அடுத்து அடுத்து 4 பகுதிகளாக அமைந்துள்ளது.
ஒவ்வொரு பகுதிகளையும், ஏறி சென்று வழிபட நல்ல படிகட்டுக்கள் அமைத்துள்ளனர்.
இயற்கையான சூழலில் அமைதியான, அழகாக அமைத்துள்ளனர். முழுவதும், தனியார் Trust மூலம் நிர்வாகம், மற்றும் பராமரிப்பில் உள்ளது.
சுமார் 50 படிகள் ஏறினால், முதலில் விநாயகர், மற்றும், Hanuman தனித்தனி சன்னதிகள் பிறகு, ஷேஸ்ட்டா தேவி தனி சன்னதி.
ஜேஷ்ட்டாதேவி ஒரு நீள் சதுர நீர்த்தொட்டியில் ஒரு மூலையில் அமைக்கப்பட்டுள்ள தனிக்கருவரை மண்டபம், அதனுள் அமர்ந்த கோலத்தில் அழகு வெள்ளை பளிங்கு சிலையில் 4 கரத்துடன் தேவி, கிழக்கு முகமாக இருந்து அருள் செய்கிறார்.
நீர்த் தொட்டியின் இன்னொருபுறத்தில், 'தேவியைப் போற்றி வணங்குவதற்காக தனி மண்டபத்தில் Prayer Hall , இங்கிருந்து தேவியை வணங்குகிறார்கள். இடையில் நீர்த்தொட்டி உள்ளது.
இந்தப் பகுதி ஆலயத்திற்கு சற்று மேல்புறம் சில படிகள் ஏறிச்சென்றால், தனி சிவன் ஆலயம் உள்ளது.
தனி கருவறை மண்டத்துடன், மேற்கு நோக்கியவாறு லிங்க வடிவில் உள்ளார். சுமார் 3 அடி லிங்கம் பளபளவென்ற கருங்கல்லில் உள்ளது.
ஆவுடையின் வடக்குப் புறம் சிறிய வெள்ளை பளிங்கு நந்தி ஆதிசங்கரர் படம்/ இன்னொரு புறத்தில் சிறிய சாய் படம் மற்றும் விநாயகர் அமைத்துள்ளனர். லிங்கம் உள்ள கட்டிடம் உட்புறம் வட்டவடிவமாக உள்ளது.
நாமே சென்று, அபிஷேகம் செய்து வணங்கலாம்.
இதை அடுத்து இன்னும் சற்று மேல்புறம் ஒரு பெரிய மண்டபத்தில் இயற்கையான தோற்றத்தில் ஒரு மிகப்பெரிய பாறை சுயம்புவாக அமைந்துள்ளது. இந்த லிங்கத்தை படியேறி சுற்றி வரலாம். பாறையை இயற்கையான சுயம்பு லிங்கமாக வழிபடுகிறார்கள். இதன் மீது சிவப்பு சூர்ணம் தடவப்பட்டுள்ளதால், சிவந்த நிறத்துடன் உள்ளது. அருகில் அம்மன் சிலையும், விநாயகர் சிலையும் வைத்து வணங்கப்படுகிறது.
இதன் அடுத்த மேல்புறத்தில் பெரிய யாக மண்டபம், மற்றும் சமையல் கூடம் அமைக்கப்பட்டு, முறையான யாக ஹோமம் செய்து வழிபாடு நடைபெற்று வருகிறது. நாங்கள் சென்றபோது யாகத்தில்/ஹோமத்தில் கலந்துகொண்டு அனைவரும் பிரசாதங்கள் பெற்றுக் கொண்டோம்.
இதன் மேற்புறம் இன்னும் சற்று உயரத்தில், ருத்திர லிங்கம் சன்னதி உள்ளது. சில மீட்டர் உயரம் படிகள் ஏறி வழிபட்டு வர வேண்டும்.
இவ்வாலய பகுதிகளின் ஒரு பகுதியில், பக்தர்கள் வந்து தங்கி, ஹோமம் செய்து செல்வதற்காக, தனித்தனிப்பெரிய அறைகளும்,. இதன் நிர்வாகக் கட்டிடங்களும் உள்ளன.
இவ்வாலய பகுதியின் அனைத்துப்பகுதிகளும், பூஞ்செடிகள், மலர்த்தோடங்கள், புல்வெளிகள், பளிங்குப்படிகளுடன் மிக அற்புதமாக உள்ளது. மலைப் பிரதேசத்தில், மிக மிக அமைதியான இயற்கை சூழல்.
6.07.2022
#ஆலயதரிசனம்
#காஷ்மீர்
#அமர்நாத்யாத்ரா 2022
#ஜேஷ்ட்டாதேவி_ஆலயம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
ஜேஷ்ட்டாதேவி_ஆலயம்
No comments:
Post a Comment