5.
#அமர்நாத்பனிலிங்கதரிசனம்
#காஷ்மீர்
#DalLake
#அமர்நாத்யாத்ரா 2022
#பயணஅனுபவக்குறிப்புகள்
6.07.2022
ஏரி (யில்)யால் வாழ்வு
#FLOOTING_MARKET - #மிதக்கும்_சந்தை
#DAL_LAKE #BOATING
6.07.2022 மாலையில் DAL ஏரியில் சென்று சுற்றிப் பார்த்தோம்.
புராதான காலத்தில், காஷ்மீரின் ஒரு பகுதியில், டால் ஏரியின் கிழக்குப்பகுதியில் சிறிய கிராமத்தில் துர்கா வழிபாடு இருந்ததாகவும், டால் ஏரியின் கிழக்குப் புறத்தின் ஒரு சிறிய கிராமப்பகுதியே துர்க்கையின் இருப்பிடம் என்று காஷ்மீர் புராணத்தில் உள்ளது என்றும் கூறுவர்.
முகலாயர் காலத்தில் பல்வேறு வளர்ச்சிகளும், குறிப்பாக பூந்தோட்டங்கள் அமைப்பும், அதைத் தொடர்ந்து ஆண்ட, ஆப்கானியர்கள் மற்றும் சீக்கிய மகாராஜா ரன்ஜித் சிங் அவர்கள் காலத்திலும், பிறகு வந்த டோக்ரா மகா ராஜாக்கள் ஆண்டபோதிலும், ஆங்கிலேயர்கள் வசம் வந்த போதிலும், பல்வேறு மாற்றங்களும், வளர்ச்சிகளும் டால் ஏரியில் ஏற்பட்டுள்ளன.
டோக்ரா மகாராஜா, கட்டிடங்களுக்குத் தடை விதித்தாலும், பின்னாள் வந்த ஆங்கிலேயர்கள் காலத்தில், பல்வேறு படகு வீடுகளும், பல்வேறு கட்டிடங்களும் ஏற்படுத்தப்பட்டன.
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு ஹன்ஜி என்ற சமூகத்தினர் நிறைய, மிதக்கும் படகுவீடுகள் ஏற்படுத்தி சரியாகப் பராமரித்தனர்.
Dal ஏரி சுமார் 316 Sq.கி.மீ பரப்பளவு உடையது.
ஆழம் சுமார் 5 முதல் 20 அடி அளவு உள்ளது.
இதனுள் இரண்டு சிறிய தீவுகள் உள்ளன.
கரையின் பகுதி சுமார் 15.5 கி.மீயில், ஹோட்டல்கள், வீடுகள், படகுவீடுகள், ஷிகார் என அழைக்கப்படும் சுற்றுலா படகுகள், உள்ளன.
கரையில் புகழ்பெற்ற முகலாயர் தோட்டங்களும் உள்ளன.
ஏரி 18 Square கி.மீ தூரம் பரவியுள்ளது.
மிதக்கும், தோட்டங்கள், கடைகள், வீடுகள், விடுதிகள் அனைத்தும் நிறைந்துள்ளன.
ஏரியின் முழுமையான புரைமைப்புத் திட்டத்திற்கு, மத்திய அரசு கிட்டத்தட்ட ரூ 11 பில்லியன் அளவிற்கு, நிதி உதவியுள்ளது.
#FLOOTNG_MARKET - #மிதக்கும்_சந்தை
காய்கறிகள் மற்றும் அனைத்துவிதமான பொருட்களையும் விளைவித்து, மிதக்கும் சந்தையாக, ஏரியின் ஒரு புறத்தை மேம்படுத்தியுள்ளனர். இதனால், இவர்களின் வாழ்வாதாரமும், பொருளாதார முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது என்பது உண்மையே.
இந்த வளர்ச்சியினால், காஷ்மீரின் கிரீடத்தின் ஒளி வீசும் வைரமாகத் DAL ஏரி திகழ்கிறது.
கடும் குளிர்காலத்தில் இவ்வேரி குளிர்ந்தும் உறைந்தும் காணப்படும்.
ஏரியின் ஒரு பகுதியில், நீண்ட சாலை வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், புகழ்பெற்ற ஷாலிமர் தோட்டம், நிஷாத் தோட்டம் உள்ளது.
சுற்றுலா பயணிகள் விரும்பும் அளவிற்கு படகுத்துறைகள் சுமார் 15 நீண்டு உள்ளன.
ஒவ்வொரு துறைகளிலும், படகுக்குழாம் அமைக்கப்பட்டுள்ளன.
பயணிகள் உரிய கட்டணத்தில் படகு அல்லது ஷிகார் என அழைக்கப்படும் படகில் நம்மை அழைத்து, வசதியாக அமர வைக்கப்பட்டு சுற்றி வருகிறார்கள்.
வசதி, காலம், சூழல் தகுந்தார்போல வாடகை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
முதல் இரு படகுத் துறைகளில் பல்வேறு வீடுகளும், கடைகளும் ஏராளமாக உள்ளன.
சற்று அமைதியையும், தனிமையும் வேண்டுபவர்கள். 7,8 படகுக்குழாம் அடுத்து பயணிக்கலாம்.
நாங்கள் 6.07.2022 மாலை, தங்கியிருந்த Hotel அருகில் சற்று தள்ளி உள்ள இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஒரு படகுக்கு, 4 முதல் 6 வரை நபர்கள் ஏற்றிச் செல்லப்பட்டோம்.
நாங்கள் படகு ஏரிய இடம் ஒரு தனியான நீர்வழிப்பாதை. அங்கிருந்து, அந்நீர்வழி பாதையில் சென்று, தால் ஏரியின் ஒரு புறத்திற்கு சென்றோம்.
ஏராளமான மக்கள் DAL ஏரியை நம்பி வாழுகிறார்கள் என்பது கண்கூடு.
செல்லும் வழியில் அந்நகர் மக்களின் படகு வீடுகள், கரையில் உள்ள சிறிய எளிமையான வீடுகள், தெரு போன்ற அமைப்புகள், அவர்களின் வாழ்வியல் முறைகள், அவர்களின் வாழ்வாதரம் அமைந்துள்ள விதம் முழுதும் அந்த ஏரியின் வழிப்பாதையில், கண்டோம்.
சுமார் 1700 படகுகளும், படகு வீடுகளும், கடைகளும், நிறைந்துள்ளன.
சிறிய பெரிய படகு கடைகளில் எல்லாவிதமான பொருட்களும் கிடைக்கின்றன.
நாங்கள் படகில் ஏறி டால் ஏரியை அடைந்து பின் சிறிய நீர் வழிபாதையில் சென்றோம். கடைத்தெரு போல, இருபுறமும் படகுக்கடைகள் நிறைந்துள்ளன.
நாம் விரும்பும் படகுக்கடைகளுக்கு சென்று விரும்பிய பொருட்களை வாங்கலாம். அதிகமாக Textiles shops உள்ளன, ஷால்வைகள், காதணிகள், பழங்கள், கைவினைப்பொருட்கள், இன்னும் அனைத்து வித காஷ்மீரிய பொருட்கள் கிடைக்கின்றன.
எல்லாப் பொருட்களும் அதிக விலையில் உள்ளது என்று கூறுகிறார்கள்.
இது மட்டுமல்ல, சிறிய சிறிய படகுகளில் பல்வேறு பொருட்களையும் படகில் மிக அருகில் கொண்டு வந்து நேரடி வியாபாரம் செய்தும் வருகிறார்கள்.
ஒரு இடத்தில் படகு Tea shop இருந்தது. Tea பொருட்கள் வாங்கிக் குடித்தோம்.
டால் ஏரியிலிருந்து மலைப்பகுதிகள், நீர்ப் பகுதிகள் மிக ரம்யமாக தெரிகிறது.
SANKARACHARYAR TEMPLE, முதலிய கரையில் உள்ள முக்கிய இடங்களையும் கண்டோம்.
ஒவ்வொரு படகுத்துரைப் பகுதிகளுக்கும், படகுகள் ஏரிக்குள் சென்று வரும் வழிப்பாதைகளும், தனித்தனியே அளவீடு செய்பட்டிருக்கிறது. எல்லா பகுதிகளிலிருந்தும், குறிப்பிட்ட பகுதியில் உள்ள படகு கடைகள் உள்ள சந்தைப் பகுதிக்கு வந்து செல்கின்றன.
படகுவீடுகளில் தனித்தனியாகவும், குழுவோடும் தங்கவும் Meeting முதலியன நடத்தும், வசதிகளும் உள்ளன.
இடம், வசதி, காலம் பொறுத்து கட்டணங்கள் அமையும்.
தூய்மைப் பணிகள்..
மிகப்பெரிய நன்னீர் ஏரியான DAL ஏரியில் மனிதர்களாலும் வாழ்வியல் முறைகளாலும், இயற்கையாலும், ஏராளமாக மாசுபட்டு, கட்டுப்படுத்த முடியாத அளவில் மாசடைந்துவிட்டதாலும், மேலும் மேலும், பெருகிவருவதாலும், பல்வேறு அமைப்பினர் போராடியும், வழக்கு முறையீடுகள் செய்தும், தூய்மைப்பணி வேலைகளும் நடைபெற்று வருகின்றன.
சமீபகாலத்தில், ஒரு புரட்சி ஏற்பாடாக பல ஆயிரம் முதலீட்டில், புதிய தூய்மைப் பணிகள் திட்டமிடப்பட்டு, வேலைகள் நடைபெற்று வருகின்றன. அரசின் நல்லத் திட்டங்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு அவசியம் தேவை என்பதை உணருகிறோம்.
காஷ்மீர் சுற்றுலாவின் மிக முக்கிய அங்கமாக DAL ஏரியில் படகு சவாரி செய்வது சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் வழக்கமாக கைக்கொள்கிறார்கள்.
அமைதியும், அழகும் கொட்டிக்கிடக்கும் அந்த கடல் போன்ற ஏரியில் பயணம் செய்யும் போது, அவரவருக்கும் பல்வேறு அனுபவங்கள் கிடைக்கின்றன என்பதை நிச்சயம் உணருகிறோம்.
படகுசவாரி சுற்றுலா முடிந்ததும், Hotel சென்றோம். இரவு உண்டு ஓய்வு எடுத்துக்கொண்டோம்.
பயணங்கள் தொடரும்.....
6.07.2022
#என்றும்__அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#பயணஅனுபவக்குறிப்புகள்
#காஷ்மீர்
#FLOOTING_MARKET - #மிதக்கும்_சந்தை
#DAL_LAKE #BOATING
LINKS:
முன்பதிவு ..
பதிவு: 1 - #LalChowk
https://m.facebook.com/story.php?story_fbid=7861532467255275&id=100001957991710
பதிவு : 2 -
#Shankarachariartemple
https://m.facebook.com/story.php?story_fbid=7870068123068376&id=100001957991710
பதிவு: 3
#ஜேஷ்ட்டாதேவி ஆலயம்
https://m.facebook.com/story.php?story_fbid=7875067092568479&id=100001957991710
பதிவு : 4:
#nishat_mohal_garden
https://m.facebook.com/story.php?story_fbid=7889040434504478&id=100001957991710
பதிவு : 5
No comments:
Post a Comment