Tuesday, August 2, 2022

அமர்நாத் பனிலிங்க தரிசனம் -5-07-2022 - 10-7-2022 பயண அனுபவக்குறிப்புக்கள்

7
அமர்நாத்பனிலிங்கதரிசனம் 
#காஷ்மீர்
#அமர்நாத்யாத்ரா 2022
5-07-2022 to 10-07-2022
#பயணஅனுபவக்குறிப்புகள்
#அமர்நாத்_பனிலிங்கம்
7.
அமரநாதரின்  அருள் 

" அவனருளாளே அவன் தாள் வணங்கும்' 
பாக்கியம் அடைந்தோமே.

இந்துக்கள்மட்டுமன்றி, உலகத்தில் உள்ள எல்லோருக்கும், இறைவனாக விளங்கும், சிவபெருமான், உலகத்தில் ஒரே ஒரு இடத்தில் மட்டும், இயற்கையான பனிலிங்க வடிவத்தில் தோன்றுகிறார்.  இது இமயமலையில், பாரத தேசத்தில் உள்ள தெற்கு காஷ்மீரப் பகுதியில் உள்ள ஒரு மலையில் உள்ள இயற்கையான குகையில் உள்ளது. 

ஒவ்வொரு வருடத்திலும் வரும் கோடை காலத்தில், இந்த இயற்கையான பனிலிங்கத்தை தரிசிக்க  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்,  உலகத்தின் பல இடங்களிலிருந்து புறப்பட்டு, கடும் மலைப்பாதைகளை கடந்து வந்து, இந்தக் குகையை அடைந்து, தங்கள் ஆன்மீக கடமையை நிறைவேற்றி செல்லுகிறார்கள். 

ஒரு முறை, அன்னை பார்வதிதேவி, சிவபெருமானிடம், 'தாங்கள் மண்டை ஓட்டை மாலையாக ஏன் அணிந்து உள்ளீர்கள்' என்று கேட்க, 

 அதற்கு அப்பெருமான், 'ஒவ்வொரு உயிரும் இறந்து இறந்து பிறக்கும்போதும் நான் ஒவ்வொரு மண்டை ஓட்டு தலையையும் மாலையாக அனிந்து கொள்ள வேண்டியது இருக்கிறது'. என்று கூற,

அன்னையும், ' நாங்கள் மட்டும் இறந்து இறந்து பிறக்கும் போது, நீங்கள் அழியாத பிறவியாய் வீற்றிருப்பது எப்படி? அந்த ரகசியத்தை எனக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன்,' என்று கெஞ்சிக் கேட்க, 

பெருமான், ' நீ அந்த அமர்கதையை உற்று உணர்ந்து  கேட்டால், நீ புரிந்து கொள்ளலாம் என்று கூறி,  அதை உனக்கு சொல்கிறேன், கேள். ஆனால் அந்த சிவரகசியத்தைச் சொல்லவும், கேட்கவும், தனி இடம் தேவை,  எந்த உயிரினமும் இல்லாத இடத்தில்தான் உனக்குக் கூற முடியும். அதை நீ கேட்கும் போது, வேறு எந்த உயிரினங்களும் அதைக் கேட்க அனுமதி இல்லை,''. என்றார்.

அன்னைக்கு சிவரகசியத்தை  உணர்த்த, எந்த ஜீவராசியும் இல்லாத இடத்தைத் தேடி அமர்நாத் குகை உள்ள இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தார். 

இந்தக்குகை வருவதற்கு முன்பு, தன்னுடை வாகனமாகிய காளையை பகல்காம் என்ற இடத்திலும், சந்திரனை சந்தன் வாடி என்ற இடத்திலும், சடாமுடியை ஜாட்டான் என்ற இடத்திலும், நாகத்தை ஷேசநாக் என்ற இடத்திலும், விட்டுச்சென்றார்.

 மகன் கனேசரை மகாகுனபர்வதத்திலும், பஞ்சதரணி என்ற இடத்தில், பூமி, நீர், காற்று, தீ, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களையும் விட்டுச் செல்கிறார்.

இவைகளை விட்டுவிட்டு, அமர்நாத் குகையை அடைகிறார்.  குகைக்குச் சென்றதும், காளக்கினி யைத் தோற்றுவித்து குகையின் அருகில், யாரும் வாராதவாறு, தீயை உண்டாக்கச் செய்தார். 

இதன் பிறகு அமர்கதையை பார்வதிதேவியிடம் கூறத்தொடங்கினார்.

ஆனாலும், அந்த குகையில் வசித்து வந்த இரண்டு புறாக்கள் மட்டும் அமர் கதையை கேட்டுவிடுகிற காரணத்தால், அவைகள் இறப்பு இல்லா நிலை அடைகிறது. அவைகளே  சுகபிரம்மரிஷி முனிகள் என்பார்கள். 

இன்றைக்கும் கூட, வரும் பக்தர்களுக்கு,  அந்தப்புறாக்களின்  தரிசனம் கிட்டுகிறது. 
இவைகள் எப்படி இந்த இயற்கை கால சூழலில் - கடும் உறை பணியில் - பல்லாயிரம் அடி உயரத்தில் வாழுகின்றன என்ற வியப்பு உள்ளது.

அமர்நாத் குகை  இந்துக்களின் மிக முக்கியமான புனித இடங்களில் ஒன்று. இது பரம்பொருளான, பரமேஸ்வரரின் இருப்பிடம் என்பதால், வருடாவருடம் இயற்கையாக உருவாகும், பனி  லிங்க தரிசனம் காண்பது வாழ்வின் புண்ணியம் என்ற நம்பிக்கை ஆழமாக உள்ளது.
🙏🏻🙇🏼‍♂️

ஒரு புராணப்படி, காஷ்மீர் முழுதுமே நீர் நிறைந்த பனியால் முடி கிடக்க, அங்கு வந்த காசிப முனிவர், அங்கு உரைந்திருந்த நீரை ஆதாரமாக்கி, பல்வேறு ஆறுகளை உருவாக்கி, அங்கு  உள்ள நீரை ஒழுங்குபடுத்தி நலம்  செய்வித்தார்.  

இந்த சமயத்தில், இமாலய பிரதேசத்தில் வலம் வந்த பிருகு முனிவர், இந்த அமர்நாத் குகையைக் கண்டுபிடித்தார். அவர் மூலமே, இந்த இடம் பத்தர்களால், வணங்கிப் போற்றத்தக்கதாக மாறியது என்பதும் ஒரு புராண வரலாறு.
 🙏🏻🙇🏼‍♂️

புராணங்களின் கூறியபடி இக்குகை சிவன் தேடி அடைந்தது என்று கூறப்பட்டிருந்தாலும்,  இக்குகையைப் பற்றிய செவிவழிக்கதை ஒன்றும் உள்ளது.

ஒரு காலத்தில்  இடையர் ஒருவருக்கு சாது ஒருவர்,  ஒரு பை நிறைய கரியை கொடுத்து அனுப்ப அதை வீட்டில் வந்து கொட்டி பார்க்கிறார். 

அவ்வளவும் தங்கப் பொற்காசுகளாக மாறி உள்ளது கண்டு மகிழ்வுடன் அந்த சாதுவை சந்தித்து நன்றி தெரிவிக்க  ஆவலுடன் செல்கிறார்; 

ஆனால், சாது - முனிவரைக் காணவில்லை  ஆனால், அந்த இடத்தில்  இந்தக் குகையும், பனிலிங்கத்தையும் கண்டு வியந்து, ஊரில் வந்து தெரிவிக்கிறார். எல்லோரும் கேள்விபட்டு வியந்து வந்து வணங்கிச் செல்ல ஆரம்பித்தனர், என்பதும் ஒரு வரலாறு. 
 🙏🏻🙇🏼‍♂️

பொதுவாக, ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் இயற்கையாகவே இந்த குகையில், பனிலிங்கம் தோன்றி மறைகிறது என்பதே மறுக்க இயலாத உண்மை.

இந்த குகையின் உள்புறம், பெரிய லிங்கம் தோன்றும் இடத்திற்கு  மிக அருகில் மேலும் இரண்டு லிங்கங்கள் தோன்றுகிறது.  ஒரு பணி லிங்கம் அன்னை பார்வதி தேவியாகவும், மற்றொன்று சிறிய வடிவில் உள்ளது. கணபதியாகவும் பக்தர்கள் வழிபடுகின்றனர்.

மேலும், அவ்விடத்தில் வாழும் கிளிகளையும் கண்டு வணங்கிச் செல்கிறார்கள்.

பயண அனுபவங்கள்... தொடரும்   
 
நன்றி.

#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#அமர்நாத்யாத்ரா 2022
#அமர்நாத்_பனிலிங்கம்

முன்பதிவுகளில் :
#LalChowk
#Sankarachaiyar_temple
#ஜேஷ்ட்டாதேவி_ஆலயம்
#Nisht_mohal_garden
#Dallake #மிதக்கும்_சந்தை

LINKS:
முன்பதிவு ..
பதிவு: 1 - #LalChowk
https://m.facebook.com/story.php?story_fbid=7861532467255275&id=100001957991710
பதிவு : 2 - #Shankarachariartemple
https://m.facebook.com/story.php?story_fbid=7870068123068376&id=100001957991710
பதிவு: 3 #ஜேஷ்ட்டாதேவி ஆலயம்
https://m.facebook.com/story.php?story_fbid=7875067092568479&id=100001957991710
பதிவு : 4: #nishat_mohal_garden 
https://m.facebook.com/story.php?story_fbid=7889040434504478&id=100001957991710
#LalChowk
#shankarachariartemple 
#ஜேஷ்ட்டாதேவி
#nishat_mohal_garden
பதிவு:5 - #DalLake 
பதிவு: 6- #nilgrith

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்)பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம் #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️29. வைக்கம் சிவன் கோவில்(Vaikom Temple):

#KERALAYATRA2024 பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்) பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம்  #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024  #பயணஅனுபவக்குறிப்புகள்🕊...