கோவையின் மிகப்பிரசித்தி பெற்ற குன்றக் கோவில். மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை எழில் கொஞ்சும் மூலிகை காற்று நிறைந்த சூழலில்
அமைந்துள்ள மருதமலை, முருகப் பெருமானின் அறுபடை வீடு
இவ்வாலயம் மலைக்குன்றின் மேல் உள்ளது.
ஆதிமூலஸ்தானம், தண்டாயுதபானி சன்னதி, பஞ்ச விருட்ஷ விநாயகர் அடுத்து பாம்பாட்டி சித்தர் குகைக் கோவில் இவைகள் மிக முக்கியமான சன்னதிகள்
பாம்பாட்டி சித்தர் முருகனின் அருள்பெற்றவர் பாம்பாட்டிச் சித்தர், முருகனுக்கு புதிய சிலை வடித்தார் என்றும், இந்த சிலையே மூலஸ்தானத்தில் இருக்கிறது, இரண்டு கரங்களுடன் உள்ள இவர், பழநி முருகனைப் போலவே, கையில் தண்டத்துடன், இடதுகையை இடுப்பில் வைத்தபடி தண்டபாணியாக காட்சி தருகிறார் என்றும் நம்பப்படுகிறது.
முக்கியத்துவம் மிக்க இந்த சித்தருக்கு தனிக் குகையில் மண்டபம் அமைத்து வழிபட்டு வருகிறார்கள்.
கோவிலின் தெற்குமூலையில் பாம்பாட்டி சித்தர் குகைக்கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டுகள் கீழிறங்குகின்றன. இக்குகைக்கோயில் சிறு குடைவரை அமைப்பில் உள்ளது. உட்புறத்தில் ஒரு பாறை பாம்பு வடிவில் உள்ளது.
பாம்பாட்டி சித்தர்க்கு முருகப்பெருமான் மருதமலையில் மருதமரத்தடியில் பெருகும் மருததீர்த்தம் அளித்து சர்ப்ப ரூபத்தில் காட்சி கொடுத்ததாக வரலாறுகள் உண்டு. மருதமலை முருகர் சன்னதிக்கும் சித்தர் குகைக்கும் வழி உள்ளதாகவும், அதன் வழியே பாம்பாட்டி சித்தர் தினமும் முருகப்பெருமானை தரிசிப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றது.
பாம்பாட்டி சித்தர் சன்னிதி முன்புறமுள்ள தியான மண்டபத்தில் இங்கு வருகை தருவோர் அமர்ந்து அமைதியாக தியானம் செய்து வழிபடுகின்றனர்.
தண்டாயுதபாணி கோயில் தலவிருட்சம் இக்கோயிலுக்கு முன்னால் உள்ளது. இக்கோயிலுக்கு இறங்கி வரும் பாதையில் சப்த கன்னியருக்கு ஒரு சிறு சன்னிதி அமைந்துள்ளது.
மருதமலையின் முக்கிய சித்தர் ஆலயம்
பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
மலைவாழ் விலங்குகள் அச்சுறுத்தல் உள்ளதால் மலைக்கோவிலுக்கு செல்ல.
மலைப் பாதை மற்றும் வாகனப்பாதைகள் காலை 6.00 மணிக்கு திறப்பு மற்றும் மாலையில் பூட்டி விடுவார்கள்.
அடிவார ஊரில் ஏராளமான கடைகள் ஹோட்டல்கள் தங்குமிடங்கள் உண்டு. வாகணங்களில் வருபவர்கள் பொருட்கள் வைத்துவிட்டு, குளியல் கழிவறைகள் பயன்படுத்தி தங்கி செல்ல நபர் கட்டணம் வசூல் செய்கிறார்கள். வாகனங்களும் அங்கேயே நிறுத்திக் கொள்ளலாம்.
மலையில் மீது வாகன நிறுத்தம் இடத்திலிருந்து ஆலயம் அடைய சுமார் 50 படிகள் மேல ஏறி சென்று தரிசிக்கவும் இப்போது மின்தூக்கி ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மலைமீதும் கழிவரைகள் முதலிய வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.
ஆலயம் தூய்மையாகவும் சிறப்பாகவும் பராமரிப்பு செய்யப்படுகிறது. ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
சில முறைகள் தரிசனம் செய்து உள்ளோம். 14.06.2026 மீள் தரிசனம்
நன்றி🙏
14.6.2026 Subbram🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#கொங்குத்தலங்கள்
Temple worship is truly virtuous🙆🏼🔱
Spiritual Bharat: The Pinnacle of the World🇮🇳🕉️
No comments:
Post a Comment