ஸ்ரீ சுக்ரீஸ்வரர் கோயில்
குரக்குத்தளி என்ற பழம் பெயர் உடையது. பழமையான கோவில்களில் ஒன்று. பார்க்க வேண்டிய இடம். தமிழ்நாட்டின் திருப்பூரில் உள்ள ஸ்ரீ சுக்ரீஸ்வரர் கோயில், இந்திய தொல்லியல் துறையால் உறுதிப்படுத்தப்பட்டபடி, 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய செழுமையான வரலாற்றைக் கொண்ட புகழ்பெற்ற சிவன் கோயிலாகும். திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி சாலையில் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சர்க்கார் பெரியபாளையத்தில் அமைந்துள்ள இந்த பழமையான கோயில் ஆன்மீக மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பொக்கிஷமாகும்.
வரலாறு மற்றும் முக்கியத்துவம்
• ராமாயணத்துடனான தொடர்பு: ராமாயண இதிகாசத்தின்படி, தனது சகோதரனைக் கொன்றதற்குப் பிராயச்சித்தமாக இங்கு லிங்கம் ஒன்றைக் கட்டிய சுக்ரீவனுடன் கோயில் இணைக்கப்பட்டுள்ளது.
• பாண்டியர்கள் மற்றும் சோழர்கள்: பாண்டிய ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது, சோழ வம்சத்தின் தாக்கங்களை பிரதிபலிக்கும் கட்டமைப்புகள்.
• பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம்: இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது.
கோவில் அம்சங்கள்
இறைவன் : சுக்ரீஸ்வரர் (லிங்க வடிவில் உள்ள சிவன்), கிழக்கு நோக்கிய தனி சன்னதி
• அம்பாள் : ஆவுடைநாயகி தேவிக்கும் கிழக்கு நோக்கிய தனி சன்னதி
தனி சன்னதி.
• தனித்துவ அம்சங்கள்: இரண்டு நந்திகள்; பஞ்ச பூதங்களைக் குறிக்கும் ஐந்து சிவலிங்கங்கள் (பூமி, நீர், நெருப்பு, காற்று, ஈதர்).
• கட்டிடக்கலை: லிங்கத்திற்கான சதுர வடிவ ஆவுடை தளம்; சிக்கலான கல் சிற்பங்கள்.
ஆன்மீக மற்றும் கலாச்சார சிறப்பம்சங்கள்
• சுந்தரரின் பாடல் பெற்ற வைப்பு ஸ்தலம்: சுந்தரர் பாடிய கோயில்களில் ஒன்று.
• பண்டிகைகள்: மகாசிவராத்திரி மற்றும் பிற குறிப்பிடத்தக்க பண்டிகைகளைக் கொண்டாடுகிறது.
இது 2500 ஆண்டுகள் முன்பான பழமையான கோயில் என்று சொல்லப்படுகிறது. சிதம்பரம், பேரூர் கோவிலுக்கு அடுத்து, சிறப்பான வேலைப்பாடுகளுடன், சக்தி வாய்ந்ததாக, சுக்ரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சிவன் கோவில்கள் கிழக்கு பார்த்து அமைந்திருக்கும். இக்கோவிலில், தெற்கு, வடக்கு பகுதியில் மட்டும் வாசல் அமைந்துள்ளது.
இரண்டு நந்தி;
இக்கோவிலில் இரண்டு நந்திகள் உள்ளன. முதலில் உள்ள நந்திக்கு கொம்பு, காது இருக்காது.
கோவில் நந்தி, அருகிலுள்ள விவசாய நிலத்துக்கு சென்று மேய்ந்துள்ளது. ஆத்திரமடைந்த விவசாயி, இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து, மாட்டின் காதையும், கொம்பையும் அறுத்துள்ளார்.
மறுநாள் கோவிலுக்கு வந்து பார்த்த போது, கற்சிலையான நந்தியின் காதிலிருந்து ரத்தம் வழிந்துள்ளது.
அதிர்ச்சியடைந்த விவசாயி, தனது தோட்டத்துக்கு வந்தது நந்தி என உணர்ந்து, தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு, வணங்கியுள்ளார்
பின், தவறுக்கு பிராயசித்தமாக, மற்றொரு நந்தி சிலை செய்து, புதிய நந்தியை பிரதிஷ்டை செய்துள்ளார்.
பழைய நந்தியை அகற்ற முயற்சித்து முடியாமல் விட்டுள்ளார். மறுநாள் வந்து பார்த்த போது, பழைய நந்தி முன்பும், புதிய நந்தி பின்னாலும் மாறி இருந்துள்ளது.
சிவன் கனவில் வந்து, உறுப்புகள் இல்லை என்றாலும், அதுவும் உயிர்தான் எனவும், பழைய நந்தி முன்னால் இருக்க வேண்டும்; மற்றது பின்னால்தான் என கூறியுள்ளார்.
அதன் அடிப்படையில், இன்றும் இரண்டு நந்திகள் அமைந்துள்ளன. பிரதோஷ காலங்களில், இரண்டு சிலைக்கும் பூஜை நடத்தப்படுகிறது. தொல்லியல் துறை 1952ம் ஆண்டு, தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆய்வு செய்தது. மீண்டும் புனரமைக்கும் வகையில், அஸ்திவாரத்தை பலப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்தது.
கோவில் கற்களை பிரித்து, பார்த்த போது, அதிர்ச்சியடைந்தனர். தற்போதுள்ள கோவிலை போலவே, பூமிக்கடியிலும், இதே கட்டுமானத்தில் ஒரு கற்கோவில் அமைந்துள்ளது.
இதனால்தான், பல ஆயிரம் ஆண்டுகளானாலும், கோவில் பூமியில் இறங்காமல், கட்டியபடியேயும், வயது முதிர்ச்சி கூட தெரியாத அளவுக்கு கல் கோவில் கட்டுமானங்கள் அப்படியே உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
சிதம்பரம், பேரூர் கோவிலுக்கு அடுத்து, சிறப்பான வேலைப்பாடுகளுடன், சக்தி வாய்ந்ததாக, சுக்ரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சுந்தரரால் பாடல் பெற்ற தலம் என கூறப்படுகிறது.
• திறந்திருக்கும் நேரங்கள்: பொதுவாக காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணி, மாலை 5:30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்
நன்றி🙏
13.6.2026 சுப்புராம் மீள் தரிசனம்,,🙏🛕🇮🇳
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#கொங்குத்தலங்கள்
No comments:
Post a Comment