Friday, February 6, 2026

திருப்புகழூர் அருள்மிகு கருந்தாள் குழலியம்மை உடனுறை அக்கினிபுரீஸ்வரர் நாயன்மார்தலம் திருமுறைத்தலம், திருப்புகழ்த்தலம்

திருப்புகழூர்
அருள்மிகு கருந்தாள் குழலியம்மை உடனுறை அக்கினிபுரீஸ்வரர்
நாயன்மார்தலம்
திருமுறைத்தலம்,  திருப்புகழ்த்தலம்
தலம்: சோழவள நாட்டில் காவிரித்தென்கரையில் அமைந்துள்ள 75 ஆவது தலம். நாகை மாவட்டத்தில் நன்னிலம் கோட்டத்தைச் சேர்ந்தது. நன்னிலம், சன்னாநல்லூர், நாகையிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
நாகை - நன்னிலம் பாதையில் உள்ளது.

புன்னாகவனம், சரண்யபுரம், ரத்தனாரண்யம் என்பன புராணங்களில் வழங்கும் மறுபெயர்கள். இத்தலத்தின் திருக்கோயில் நாற்புறமும் அகழிசூழ நடுவில் இருக்கிறது.

 திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் கோயில், தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகும்.

சிறப்பம்சங்கள்:
இறைவன் பெயர் அக்னிபுரீஸ்வரர்; இறைவி கருந்தாள் குழலியம்மை.(சூளிகாம்பாள்).
 இறைவன் திருநாமம் தேவாரங்களில் `கோணப் பிரானைக் குறுகக் குறுகா கொடுவினையே` `கருந்தாள் குழலியும் தாமும் கலந்து` என்பன அம்மையப்பர், திருநாமங்களை அறிவிக்கும் அகச்சான்றுகள்.

அக்னி தலம்: அக்னி பகவான் தனது பாவங்களைப் போக்க, இங்குள்ள சிவனை நோக்கி தவம் செய்துள்ளார்.
அப்பர் முக்தி தலம்: அப்பர் பெருமான் சிவபெருமானின் திருவடியில் கலந்த (முக்தி) தலம்.
மூன்று மூர்த்திகள்: வாதீஸ்வரர், வர்த்தமானீஸ்வரர், பவிஷ்யேஸ்வரர் என முக்காலங்களையும் உணர்த்தும் வகையில் லிங்கங்கள் உள்ளன.
சனிபகவான்: நளச்சக்கரவர்த்திக்கு அருளிய 'அனுகிரக சனி' இங்கு தனிச் சன்னதியில் அருள்கிறார். 
முருக நாயனார் அவதாரத் தலமாகவும் இது போற்றப்படுகிறது
திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் திருமுறை பாடல்கள் பெற்றது.

சுந்தரமூர்த்தி நாயனாருக்குச் செங்கல்லைப் பொன்னாக்கிய திருத்தலம். மேகங்கள் பூசித்த தலம்.

வாஸ்து தலம்: வீடு கட்டத் தொடங்குபவர்கள் இங்கு 6 செங்கற்களை வைத்து வழிபடுவது சிறப்பு.
வாஸ்து தோஷ நிவர்த்தி மற்றும் வீடு, மனை அமைய வழிபடப்படும் சிறப்புமிக்க தலம். 

வழிபாடு:
நான்கு தட்டுக்களைக் கொண்ட ராஜகோபுரம் மற்றும் அக்னி தீர்த்தம் உள்ளது.
பாம்பன் சுவாமிகள் பல காலம் தங்கியிருந்த தலம் இதுவாகும்.
குழந்தை வரம் வேண்டி சூளிகாம்பாளை வழிபடும் வழக்கம் உள்ளது. 
திருப்புகலூர், ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் வாஸ்து குறைபாடுகளை நீக்கும் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது.

விழா:

சித்திரைச் சதயத்தைப் பத்தாம் நாளாகக்கொண்டு விழா நடைபெறுகிறது. பத்துநாளிலும் அப்பர் சுவாமிகள் வரலாற்றை ஒட்டிய ஐதீகமே நினைவூட்டப்பெறுகின்றது. வைகாசி மாதம் பருவ இறுதியாகப் பிரமோற்சவம் நடைபெறுகிறது. சந்திரசேகரர் விசேஷ மான மூர்த்தி.

தீர்த்தம்:
அக்னிதீர்த்தம். இதற்குப் பாணதீர்த்தம் என்றும் ஒரு பெயருண்டு. முடிகொண்டான்ஆறு, கோயிலுக்குத் தென்பக்கத்தில் ஓடு கிறது.
தல விருட்சம்: புன்னை. `புன்னைப் பொழிற்புகலூர்`, `புன்நாகம் மணங் கமழும் பூம்புகலூர்` என்ற திருமுறைகள் இதற்கு மேற்கோள்.

ஆலய அமைப்பு:
கோயிலின் முன்பே குளம் உள்ளது. ராஜ கோபுரத்தை அடுத்து, உள் கோபுரம், நந்தி, பலிபீடம் ஆகியவை உள்ளன. மூலவர் சன்னதியின் வலது புறத்தில் திருநாவுக்கரசர் சன்னதி உள்ளது. 

கோஷ்டத்தில் அகத்தியர், நடராஜர், கணபதி, அண்ணாமலை, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் வாதாபி கணபதி, திருநாவுக்கரசர், காசிவிசுவநாதர், சோமநாயகர் சன்னதிகள் உள்ளன. திரிமுகாசுரன், காலசம்காரமூர்த்தி ஆகியோரும் உள்ளனர். அருகில் தலவரலாறு கல்வெட்டாக உள்ளது. 

வெளியே இடதுபுறத்தில் சூளிகாம்பாள் (கருந்தார்குழலி) சன்னதி உள்ளது. கோயில் வளாகத்தின் வெளியில் திருநாவுக்கரசர் மண்டபம் 22 சூன் 1958இல் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டதற்கான கல்வெட்டோடு உள்ளது. மண்டபத்தின் முன்பாக குளம் காணப்படுகிறது

பிற சிறப்புகள்
திருப்புகலூர் முருக நாயனார் அவதாரத்தலம். இவரது திருமடம், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சிறுத்தொண்டர், திருநீலநக்கர் முதலான நாயன்மார்கள் இவருடன் தொண்டர்குழாமாக இருந்து மகிழ்ந்த மடம்.சுந்தர மூர்த்தி நாயனாருக்கு இறைவனார் செங்கல்லைப் பொன் கல்லாக மாற்றிய தலம்.

திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரம்

மூலவர் அக்னிபுரீஸ்வரர் சன்னதியை ஒட்டி, அதன் இடது புறத்தில் மற்றொரு பாடல் பெற்ற தலமான திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரம் கோயிலுக்குள் கோயிலாக உள்ளது. மூலவர் அக்னிபுரீஸ்வரர் சன்னதிக்குள் நுழையும் வாயில் வழியாகவே அடுத்துள்ள வர்த்தமானீஸ்வரர் சன்னதிக்குச் செல்லமுடியும். அதற்கு தனியாக வேறு வாயில் காணப்படவில்லை. அதில் வர்த்தமானீஸ்வரர் உள்ளார். அவருக்கு அருகில் பலி பீடம் உள்ளது. எதிரில் முருக நாயனார் சிற்பம் உள்ளது. 

வேளாக்குறிச்சி ஆதீனத்தின் பராமரிப்பில் உள்ளது.

நன்றி வலைதளம்...🙏📚📡💻
பல முறை தரிசனம் கிடைக்கப்பெற்ற தலம்.

#மீள்தரிசனம் 4.2.2026
4.02.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

இரமணதீச்சரம் அருள்மிகு சரிவார்க் குழலி உடனுறை இராமநாதர் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 77-ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்றது. திருமுறை தலம்

இரமணதீச்சரம்
அருள்மிகு சரிவார்க் குழலி உடனுறை இராமநாதர்
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 77-ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்றது.

நாகப்பட்டினம் - நன்னிலம் - கும்பகோணம் சாலையில் உள்ள திருப்புகழுரில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது.
 நன்னிலம் - நாகப்பட்டினம் சாலையில் உள்ள திருப்புகலூருக்கு தெற்கில் 2. கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்தத் தலம் திருப்புகலூரிலிருந்து முடிகொண்டான் ஆற்றைக் கடந்து, திருக்கண்ணபுரம் சென்று 1/2 கி.மீ. கிழக்கே சென்றால் இத்தலத்தை அடையலாம்.

அருளோடு பொருளும் அள்ளித் தரும் திருத்தலங்கள் சோழ நாட்டில் எண்ணற்றவை. அவற்றுள் ஸ்ரீராமபிரான் வழிபட்ட தலமாகப் பேசப்படுவது இராமனதீஸ்வரம். ""இராம நந்தீஸ்வரம்'' என்று முன்பு அழைக்கப்பட்டது இந்தத் தலம். திருக்கண்ணபுரம் ஊரின் சைவ ஆலயமாக இந்த இராமனதீஸ்வரமும், வைணவாலயமாக ஸ்ரீசெளரிராஜப் பெருமாள் ஆலயமும் அமைந்திருப்பது சிறப்பாகும்.

தல வரலாறு
சீதையை கடத்திச் சென்று சிறை வைத்தான் ராவணன். அவன் மீது போர் தொடுத்து, அவனை அழித்தார் ராமன். பரமேஸ்வரனின் அதிதீவிர பக்தனான ராவணேஸ்வரனைக் கொன்ற பாவம் பிரம்மஹத்தியாய் ராமபிரானை பற்றிக் கொண்டது. பிரம்மஹத்தி தோஷம் விலக வேண்டி, சேதுக் கரையில் மணலால் லிங்கம் அமைத்து வழிபட்டார் ராமர். இதுவே "இராமேஸ்வரம்' ஆனது. 

ராவண சம்ஹார பாவம் தீர ராமன் சிவலிங்க வழிபாடு செய்ததாக தலபுராணம் கூறுகின்றது. அந்த பாவம் நீங்குவதற்காக பல தலங்களுக்குச் சென்ற ராமன், அதன் ஒரு பகுதியாக இந்த தலத்திற்கும் வந்தார். 

ரகுராமர் இங்கே தீர்த்தம் ஒன்றை ஏற்படுத்தி சிவபெருமானை வழிபட்டுள்ளார். இதனால் ஆலயத்தின் எதிரே உள்ள திருக்குளம் "இராமதீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது. 

அவர் இத்தலத்தில் உள்ள புஷ் கரணி தீர்த்தத்தில் நீராடி, பின் அய்யனை தரிசிக்க வரும் போது நந்தி தேவன் அவரை மறித்து நிற்கிறார். ‘ராவணனை கொன்ற பாவம் உங்களுக்கு நீங்கவில்லை. எனவே தாங்கள் உள்ளே செல்லக்கூடாது' என்பது அவரின் வாதம். ஆனால் அம்பிகை அந்த சம்பவத்தைப் பார்த்து திகைத்தார். உடனே அங்கு வந்து நந்தியை தனது திருக்கரத்தால் பிடித்து, ராமனை உள்ளே செல்ல வழி விடுகிறார். ராமபிரானும் உள்ளே சென்று லிங்கத்தை வழிபடுகிறார். அதன் பின் சாப விமோசனம் பெறுகிறார். ராமனுக்கு சாப விமோசனம் கொடுத்த ஈசன், ‘ராமநாதேஸ்வரர், ராமலிங்கேஸ்வரர்’ என பெயர் பெற்றார். நந்தி வழி மறித்தும் ராமன் உள்ளே வந்து சிவனை வணங்கி நின்ற காரணத்தினால், இந்த திருத்தலம் ‘ராமநந்தீஸ்வரம்’ என்று பெயர் பெற்றது. அதுவே நாளடைவில் மருவி தற்போது ‘ராமனதீச்சரம்’ என்று அழைக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தை உண்மை என நிரூபிக்கும் வகையில், சான்றாக இத்தல உற்ஸவ மூர்த்தியான சோமாஸ்கந்தர் விக்கிரகத்தில், அம்பாளின் இடது கரத்தில் நந்தி உள்ளதைக் காணலாம். இந்த விக்கிரகம் பாதுகாப்பு காரணமாக திருப்புகலூர் சிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ராமபிரானால் வழிபாடு செய்யப்பெற்ற ராமேஸ்வரத்தைப் போல, ராமனதீச்சரமும் ராமனால் பூஜை செய்யப் பெற்றது. மேலும் இங்குள்ள சிவலிங்கத் திருமேனியில் ஜோதி புலப்படுவதாலும், ராமன தீச்சரமும் பன்னிரு ஜோதிர்லிங்க தலங்களுக்கு ஒப்பானதாக போற்றப்படுகிறது. இந்த தலத்தில் அருள்பாலிக்கும் இறைவனை வணங்கினால், இந்தியாவில் உள்ள பன்னிரு ஜோதிர் லிங்கங்களையும் தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள். 

துர்வாச முனிவர் இங்கே தவம் புரிந்ததால் தவ பூமியாகத் திகழ்கிறது.
துர்வாசர் பூஜித்த லிங்கம் : இந்த ஆலயத்தில் மற்றுமொரு சிறப்பு துர்வாச முனிவர். இவர் அத்ரி மகரிஷியின் மகன் ஆவார். இவர் பல இடங்களுக்குச் சென்று சிவபெருமானை பிரதிஷ்டை செய்து வணங்கி வந்துள்ளார். இவர் சென்ற இடங்களை எல்லாம், காளகஸ்தி கோவிலுக்கு இணையான கோவில் என்பார்கள். அந்த வகையில் இந்த திருத்தலத்திற்கும் வந்து, சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு பேறு பெற்றுள்ளார் துர்வாச முனிவர். அந்த வகையில் இந்தத் திருத்தலமும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. துர்வாச முனிவர் பூஜித்த சிவலிங்கம், பைரவர் திருமேனிக்கு அருகில் அமைந்திருக்கிறது. 

தலசிறப்புகள்

மூலவர் பெரிய திருவுருவம். உயரமான பெரிய சுற்றுடைய ஆவுடையாருடன் கூடிய உயர்ந்த பாணம். சுவாமியின் விமானம் வேசர அமைப்புடையது. கல்வெட்டில் சுவாமியின் பெயர் இராமனதீச்சர முடையார் என்று காணப்படுகிறது. குலோத்துங்கன் இக்கோயிற் பூசைக்காக சிவபாதசேகர மங்கலம் என்னும் பெயருடைய நிலப்பகதியை தானமாக அளித்த செய்தியும் கல்வெட்டு வாயிலாக தெரியவருகிறது.

ஆலய அமைப்பு

பேருந்து சாலையின் தென்புறமாய் முதலில் இராமதீர்த்தக் குளம் அமைந்திருக்க, எதிரே தோரண வாயிலுடன் ஆலயம் திகழ்கிறது.
உள்ளே நுழைந்தால், வாயிலுக்கு வெளியே நந்தியெம்பெருமான் வீற்றிருக்கின்றார். பலிபீடம், உள்ளது

வலது புறம் அன்னை கருவார் குழலியம்மை, ராமருக்கு தடை நீங்க நந்தியை கையில் பிடித்தது போல், அனைவர் வாழ்விலும் உள்ள இடர்பாடுகளை களைய இன் முகத்தோடு காத்திருக்கிறார்.
அம்பாள் ‘குழலி’ என்ற பெயரில் இந்த சுற்று வட்டாரத்தில் மட்டுமே அழைக்கப் படுகிறார். நந்தியை தடுத்து ராமரை தரிசனம் செய்ய அனுமதித்த தலம் என்பதால் இத்தலம் ராமேஸ்வரத்துக்கு இணையானது

 ஒரே பிராகாரம் கொண்ட விசாலமான ஆலயம். ஆலயத்தின் மையமாக அமைந்த அகண்ட மேடை. அதன் மேற்குப் பகுதியில் சுவாமி சந்நிதியும், வட புறத்தில் அம்பாள் சந்நிதியும் அமைந்துள்ளன. தென்முகம் கொண்டது அம்பாள் சந்நிதி. அதனுள் ரம்மியமாய் காட்சி தருகின்றாள் அன்னை ஸ்ரீசூளிகாம்பாள். "சரிவார்க்குழலி' என்றும், "கருவார்க்குழலி' என்றும் அழைக்கப்படுகிறாள். கரத்தினில் ருத்ராட்ச மாலை ஏந்திக் காணப்படுகிறாள்.

பின், சுவாமி சந்நிதி அடையும் முன் இரண்டாம் வாயிலின் மேல் கயிலை தரிசனம் காணலாம். உள்ளே பெரியதொரு மகா மண்டபம். அடுத்து இடை மண்டபம். பின்னர் ஈசன் கருவறை. கருவறையுள் பளபளக்கும் கல்லாலான பச்சை இழையோடும் பாண லிங்கம் வட்ட ஆவுடை நடுவே உள்ளது. இவர் இராமநாதீஸ்வரர் என்றும் இராமலிங்கேஸ்வரர் என்றும் போற்றப்படுகின்றார். பக்தர்களை ஈர்க்கும் வண்ணம் ஜோதி வடிவாய் ஜொலிக்கின்றார். 

சுவாமி கருவறை விமானம் பிரம்மாண்டத்தை பிரதிபலிக்கின்றது. 
இக்கோவில் விமானத்தை மாதிரியாக வைத்துதான் தஞ்சை பெருவுடையார் கோவில் கட்டப்பட்டது என்பர். எனவே இந்த கோவில் தஞ்சைக்கு நிகரானதாகும்.
இந்த ஆலயமானது, 32 அடி உயரத்தில் நான்கு தளங்களை கொண்ட விமானத்தோடு அமைந்துள்ளது. இதன் கலசம் செம்பினால் அமைக்கப்பட்டுள்ளது. 

கோவிலைச் சுற்றி வந்தால்

 இரண்டு தூண்களைக் கொண்ட தனி மண்டபமாக, தட்சிணாமூர்த்தி மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தை இரண்டு யாழிகள் தாங்குவது போன்ற அமைப்பு சிறப்பாக வடிக்கப்பட்டிருக்கிறது. சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நால்வரும், சின்முத்திரையைக் காட்டி சிவ ரகசியத்தை அருளும் வண்ணம் வீற்றிருக்கிறார்கள். 

ஆலய வலம் வருகையில் கன்னி மூலையில் தனிச் சந்நிதியில் கணபதியையும், வருண பாகத்தில் கந்தனையும், வாயு திக்கில் கஜலக்ஷ்மியையும் வணங்கி மகிழ்கின்றோம். மேலும்,, லிங்கோத்பவர், வள்ளி - தெய்வானை சமேத முருகப்பெருமான், திருமால், பிரம்மா, சண்டிகேஸ்வரர், துர்க்கை, நவக்கிரகங்கள், பைரவர், துர்வாச முனிவர் வணங்கிய லிங்கம், மற்றொரு லிங்கம், அகத்தியர், அப்பர், திருஞானசம்பந்தர், காமதேனு, சூரியன் ஆகிய திருமேனிகள் காணப்படுகின்றன. 

அம்மன் சன்னிதியில் கோவில் தல புராணத்தை விளக்கும் வண்ணம், ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

தல விருட்சமாக மகிழமரம் மணம் பரப்புகின்றது.. அம்பாள் சன்னிதிக்கு நேரில் எதிரில் பிரகாரத்தில் இந்த தல விருட்சம் இருக்கிறது.

மகிழ மரத்தை தல விருட்சமாக கொண்டதால், இத்தல இறைவனுக்கு ‘மகிழம்பூவனநாதர்’ என்ற பெயரும் உண்டு. மகிழ மரத்துக்கு என்று தனிச் சிறப்புகள் பல இருக்கின்றன.

 திருவொற்றியூரில் சுந்தரமூர்த்தி சுவாமி களுக்காக சிவபெருமான் காட்சியளித்தது, மகிழ மரத்தின் அடியில் என்று பெரிய புராணம் கூறுகிறது. எனவே இந்த மரம் இருக்கும் இடத்தில் சிவபெருமானின் அருள் பல மடங்காக பெருகி இருக்கும் என்பது ஐதீகம். 

இக்கோயிலில் காணப்பட்ட கல்வெட்டில் இறைவன் பெயர் இராமநதீச்சர முடையார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தல இறைவனை, ராமநந்தீஸ்வரர், ராமநாதேஸ்வரர், ராமலிங்கேஸ்வரர் போன்ற பெயர்களில் அழைக்கிறார்கள். அதே போல் இறைவியையும், கருவார்குழலியம்மை, சூளிகாம்பாள், சரிவார்குழலி என்ற திருநாமங்களில் போற்றுகிறார்கள். 

சூரிய புஷ்கரணி, சூரிய பூஜை ஆகியவை இந்த ஆலயத்தின் தீர்த்தங்கள் ஆகும்
மணிகங்கை என்றொரு தீர்த்தமும் இத்தலத்துக்கு உண்டு.
இத்தலம் ஞான சம்பந்தரால் பாடப்பட்ட தலமாகும். தேவாரப்பாடல்கள்: சம்பந்தர் : சங்கொளிர் முன்கைய....

திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீனத்தின் மூலமாக இந்தக் கோவில் பராமரிக்கப்பட்டு, அனைத்து பூஜைகளும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
நந்தன ஆண்டு ஐப்பசி 26-ஆம் நாள், 11.11.2012 ஞாயிறு அன்று குடமுழுக்கு ஆனதற்கான கல்வெட்டு கோயிலில் உள்ளது.

இந்த ஆலயத்தில் ஐப்பசி மாதம் வரும் கந்த சஷ்டியை முன்னிட்டு 10 நாள் உற்சவம் நடைபெறும். இந்த உற்சவத்தில் சுப்பிரமணியர் தீர்த்தவாரி நடக்கிறது. இங்குள்ள சுப்பிரமணியர் திருச்செந்தூர் முருகனுக்கு இணையானவர். எனவே இங்கு வந்து வணங்கினால் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ததற்கு சமமாகும். கார்த்திகை மாதம் சஷ்டி திதியில் சண்முகருக்கு சிறப்பு அர்ச்சனை நடைபெறும். இந்த கோவிலை பொறுத்தவரை சகல தோஷமும் நீங்கும் தலமாகும். ராமர் வழிபட்ட தலம் என்பதால் இந்த தலம் ராஜராஜ சோழன் ஆட்சிக்கு முற்பட்டதாக கருதப்படுகிறது. 

 அம்மனை வழிபட்டு சுமங்கலி பூஜை செய்தால், அவர்கள் குடும்பம் செழிப்படையும். கணவர்கள் நோய் பிடியில் இருந்து விடுபடுவார்கள். பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள். பெண்களுக்கு சுக பிரசவம் நடை பெறும். திருமணத் தடை நீங்கி, குழந்தை பேறு கிடைக்கிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணியில் இருந்து 10 மணி வரையிலும், மாலை 5 மணியில் இருந்து இரவு 8 மணி வரையிலும் திறந்து இருக்கும்.

நன்றி வலைதளம்...🙏📚📡💻
பல முறை தரிசனம் கிடைக்கப்பெற்ற தலம்.

#மீள்தரிசனம் 
4.02.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
🌼

செங்காட்டாங்குடிஅருள்மிகு திருக்குழல் நன்மாது உடனுறை கணபதீச்சரத்தார்திருமுறைத்தலம், திருப்புகழ் தலம்

செங்காட்டாங்குடி
அருள்மிகு திருக்குழல் நன்மாது உடனுறை கணபதீச்சரத்தார்
திருமுறைத்தலம், திருப்புகழ் தலம்

திருச்செங்காட்டங்குடி (Thiruchenkattankudi), தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமருகல் வட்டாரத்தில் அமைந்துள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க கிராமம் ஆகும். இது தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 79-வது சிவத்தலமாகப் போற்றப்படுகிறது. இக்கோயில் உத்தராபதீசுவரர் திருக்கோயில் எனப்படுகிறது. 

 நாகைமாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ளது. திருவாரூரிலிருந்தும் பேருந்து வசதி உள்ளது. 
இறைவன் - கணபதீச்சரத்தார். பைரவ கோலத்துடன் உத்திராபதியார் எழுந்தருளியிருக்கிறார். ஆத்திவனநாதர், மந்திரபுரீசுவரர், கணபதீஸ்வரர், பிரமபுரீஸ்வரர், பாஸ்கரபுரீஸ்வரர்.  
இறைவியார் திருப்பெயர்: சூளிகாம்பாள் (குழலம்மை), திருகுகுழல் உமைநங்கை.  

தல மரம்: ஆத்தி மரம் தீர்த்தம் : சூரிய தீர்த்தம், தீர்த்தக் குளம் கோயிலுக்கு எதிரில் உள்ளது.   

வழிபட்டோர்: சம்பந்தர்,அப்பர் , சுந்தரர், பரணதேவ நாயனார், சேக்கிழார், விநாயகர், பிரமன், சத்பாஷாடர் முதலியோர். Sthala Puranam

விநாயகப்பெருமான் கஜமுகாசுரனைக் கொன்றகாலத்து அவன் உடலினின்றும் பெருகிய இரத்தவெள்ளத்தால் இவ்விடம் முழுதும் செந்நிறமாயிற்று. ஆதலால் இத்தலம் செங்காடு, செங்காட்டங்குடி எனப் பெயர்பெற்றது. விநாயகப்பெருமான் கயமுகனைக் கொன்ற கறை நீங்கச் சிவலிங்கப்பெருமானைத் தாபித்து வழிபட்டார். அதனால் `கணபதீச்சரம்` எனத் திருக்கோயில் வழங்கப்பெறுவ தாயிற்று. இவ்வரலாற்றைக் கந்தபுராணத்து,

ஏடவிழ் அலங்கல் திண்டோள் இபமுகத் தவுணன் மார்பில்
நீடிய குருதிச் செந்நீர் நீத்தமாய் ஒழுகும் வேலைப்
பாடுற வருங்கான் ஒன்றிற் பரத்தலின் அதுவே செய்ய
காடெனப் பெயர்பெற் றின்னுங் காண்டக இருந்த தம்மா!
மீண்டும்செங் காட்டில் ஓர்சார் மேவிமெய்ஞ் ஞானத்தும்பர்
தாண்டவம் புரியுந் தாதை தன்னுருத் தாபித் தேத்திப்
பூண்டபேர் அன்பிற் பூசை புரிந்தனன் புவியு ளோர்க்குக்
காண்டகும் அனைய தானம் கணபதீச் சரம தென்பர்.
என்ற செய்யுட்களான் அறியலாம்.
மிகப் பழமையான திருவாத்திவிருக்ஷம் ஒன்று, எழுந்தருள் நாயகர் திருமுன்பு இருக்கின்றது. பிராகாரத்தின் கீழ்ப்பக்கத்தில் இத்தலத்து வாழ்ந்த சிறுத்தொண்டர், திருவெண்காட்டு நங்கை, சீராளன், சந்தன நங்கை இவர்கள் திருவுருவங்கள் இருக்கின்றன. சிறுத்தொண்டர், உத்தராபதியினின்றும் வந்த பைரவ வேடம் தாங்கிய பரமனுக்குத் தம்மகன் சீராளனையே கறிசமைத்திட்டு முத்தியடைந்தனர் என்பது வரலாறு. 

இந்த அடியார் பெருமகனார், திருஞானசம்பந்தப் பெருமானும், அப்ப மூர்த்திகளும் எழுந்தருளியகாலத்து அவர்கள் நட்பைப்பெற்று அவர்கள் பதிகத்துச் சிறப்பிக்கப்பெறும் தகுதியைப்பெற்றவர். சித்திரைப் பூர்ணிமையில் சிறுத்தொண்டர் திருவமுதுபடைத்த திருவிழா நடைபெறும். அமுதுபடையல் என்றே அது வழங்குகிறது.

சிறப்பம்சங்கள்:
மூலவர்: உத்தராபதீசுவரர் (இத்தலம் மந்திரபுரீசம், ஆத்திவனம் எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது).
சிறப்பு: பார்வதி தேவிக்கு சிவபெருமான் நர்த்தனமாடிக் காட்டிய தலம். விநாயகர், "வாதாபி கணபதி"யாகப் போற்றப்படுகிறார்.
வரலாறு: சிறுத்தொண்ட நாயனார் அவதரித்த தலம். இவரது மகனைப் பலியிட்டு சிவனுக்கு உணவு படைத்த பக்தி கதை இத்தலத்துடன் தொடர்புடையது.
திருவிழா: கணபதிக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் உத்தராபதீசுவரர் வெள்ளை சாத்தி உலா போன்றவை முக்கிய நிகழ்வுகளாகும்.

சந்தான பாக்கியம் (குழந்தை வரம்) அருளும் தலமாகவும், ஞானசம்பந்தர், நாவுக்கரசரால் பாடப்பெற்ற தலம். 

திருச்செங்காட்டங்குடி கோயில் தலவரலாறு Sthala puranam of Thiruchengattangudi Temple

கணபதி இறைவனை வழிபட்டதால் இக்கோயிலுக்கு "கணபதீச்சரம்" என்று பெயர். ஆலயம் கணபதீச்சுரம் எனவும், ஊர் திருச்செங்காட்டங்குடி எனவும் வங்கி வருகிறது. விநாயகர், கயமுகாசூரனைக் கொன்ற பழிதீர இங்கு இறைவனை வழிபட்டார். அசுரனைக் கொன்றபோது அவனுடைய உடற்குருதி படிந்து இப்பகுதி செங்காடாக ஆயினமையின் 'செங்காட்டங்குடி' என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது

. பைரவ வேடத்தில் இறைவன் வந்து சிறுத்தொண்டரிடம் பிள்ளைக்கறியமுது கேட்டு அவருக்கும் அவர் மனைவி, மகன், வேலைக்காரி ஆரியோருக்கும் அருள்புரிந்து தலம். 

"உத்ராபதியார் " திருமேனி உருவான விதம் பற்றி சொல்லப்படும் வரலாறாவது - ஐயடிகள் காடவர்கோன் என்னும் பல்லவ மன்னன், சிறுத் தொண்டருக்கு இறைவன் அருள் புரிந்த செய்தியைக் கேட்டு, இத்தலத்திற்கு வந்து, பல நாட்கள் தங்கி வழிபட்டு வந்தார். உத்திராபதியாரின் தோற்றத்தைக் காண விரும்பினார். இறைவன், "இத்திருக்கோயிலைத் திருப்பணி செய்து, உத்தராபதியார் திருவுருவம் அமைத்துச் சித்திரைத் திருவோணத்தில் குடமுழுக்கு செய்வாயாகில், யாம் சண்பகப்பூ மணம் வீசக் கட்சி தருவோம்" என்றருளினார். ஐயடிகள் அவ்வாறே செயல்படலானார். கொல்லர்கள் உத்ராபதியார் உருவம் அமைக்கத் தொடங்கினர். பல இடர்பாடுகள் - கும்பாபிஷேக நாள் நெருங்கியது. மன்னனோ விரைவில் முடிக்க கட்டளையிட்டான். வடிவம் நன்கு அமைய வேண்டுமே என்ற கவலையுடன் உலைக்களத்தில் ஐம்பொன்னை உருக்கிக் கொண்டிருந்தனர். இறைவன் சிவயோகியார் வடிவில் அங்கு வந்து நீர் கேட்டார். இருந்தவர்கள், "உலைக்களத்தில் நீர் ஏது? காய்ச்சிய மழுதான் உள்ளது; வேண்டுமானால் ஊற்றுகிறோம்" என்றனர். சிவயோகியார், "நல்லது; அதையே ஊற்றுங்கள்" என்றார். கொல்லர்கள் காய்ச்சிய மழுவை ஊற்ற, வாங்கியுண்ட சிவயோகியார் அங்கிருந்து மறைந்தார் - உத்தராபதீஸ்வரர் உருவானார். செய்தியறிந்த மன்னன் வியந்து போற்றி, அத்திருவுருவை கோயிலில் எழுந்தருளுவித்து - கும்பாபிஷேகம் செய்வித்தான். ஐயடிகள் காடவர்கோனுக்கு இறைவன் சண்பகப்பூவின் மணம் வீச, காட்சித் தந்தருளினார். (ஆதாரம் - கோயில் வரலாறு.)

இத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம், தலவிருட்சம் ஆகிய நான்காலும் சிறப்புடையது. சிறுத் தொண்டர் அருள் பெற்றத் தலம். மந்திரபுரி, செங்காடு, சத்தியபுரி, பிரமபுரி, தந்திரபுரி, ஆத்திவனம், பாஸ்கரபுரி, சமுத்திரபுரி, கணபதீச்சரம் ஆகிய ஒன்பது திருநாமங்களைக் கொண்டு விளங்குகின்றது. 

தல தீர்த்தம் - தீர்த்தக் குளம் கோயிலுக்கு எதிரில் உள்ளது; இத்தலத்தில் ஒன்பது தீர்த்தங்கள் உண்டென்று சொல்லப்படுகிறது; அவை:- சத்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்கினி தீர்த்தம், இந்திர தீர்த்தம், யம தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம், சீராள தீர்த்தம் என்பன அவ்வொன்பதாகும். இறைவனார், அடியார் பொருட்டு பூமியில் வந்து, தம் பாதம் தோய நடந்து அருள் செய்தத் திருத்தலங்களான சிதம்பரம், திருஆலவாய், திருவாரூர், திருக்கச்சூர் ஆலக்கோயில், திருகுருகாவூர் வெள்ளடை, திருஅம்பர்மாகாளம், திருமறைக்காடு, திருவாய்மூர், திருப்பஞ்ஞீலி, திருப்பெருந்துறை, திருச்சாய்க்காடு, திருவெண்ணைநல்லூர், திருநாவலூர் ஆகிய தலங்கள் வரிசையில் இத்தலம் இறைவன் உத்திராபதீஸ்வரராகத் தோன்றி, சிறுத்தொண்ட நாயனார் இல்லம் முதலாக கணபதீச்சர ஆலய ஆத்திமரம் வரை தனது பொற்பாதம் பதித்த சிறப்புடையது. 

இறைவன் அமர்ந்திருக்க, சிறுத்தொண்டர் அவரை அமுதுசெய்ய அழைக்கும் சிற்பம் இங்குள்ளது. 

விநாயகர், பிரமன், வாசுதேவன், சூரியன், சந்திரன், சத்யாஷாட முனிவர், சிறுத்தொண்டர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோர் வழிபாடு செய்து பேறு பெற்ற தலம்.

 நாயன்மார்கள் வரலாற்றில், சரவணத்துத் தனயரான முருகப் பெருமானுடன் கூட இறைவியாரும் இறைவரும் சோமாஸ்கந்தர் திருக்கோலம் காட்டி அருளியது இத்திருத்தலத்தில்தான் என்ற தனிச் சிறப்பு பெற்றத் திருத்தலமாகும்.

 சுவாமி கருவறை அகழி அமைப்புடையது. மூலவர் கணபதீச்சரமுடையார். இங்கு பேழையில் மரகத லிங்கம் உள்ளது. 

சிறுத்தொண்டர் பல்லவ மன்னனின் தளபதியாக 'வாதாபி ' சென்று சாளுக்கியரோடு போர் செய்து வாகை சூடி வந்தபோது உடன் கொண்டு வந்த (வாதாபி) விநாயகரை இக்கோயிலில்தான் பிரதிஷ்டை செய்துள்ளார். 

சிறுத்தொண்டர் மாளிகை இன்று கோயிலாகவுள்ளது. இங்குச் சிறுத்தொண்டர், உத்ராபதீஸ்வரர் (உற்சவ காலங்களில் வீதி உலா வருபவர் இவரே),

 திருவெண்காட்டு நங்கை அன்னம் பரிமாறும் கோலத்தில் திருவுருவங்கள் உள்ளன. இத்தலத்தில் சில மருந்துப் பொருள்களும் சேர்த்து செய்யப்படும் சீராளங்கறி எனும் பிரசாதம் - அமுது படையல் விழா நாளன்று மட்டுமே கிடைக்கும்; மக்கட்பேறில்லாதவர்கள் உத்ராபதியாரை வழிபட்டு, இப்பிரசாதத்தை உண்டால் புத்திரப் பேறு அடையப் பெறுவர். 

கல்வெட்டுக்களில் இறைவன், 'செங்காடுடைய நாயனார் ', 'கணபதீச்சரமுடைய மகாதேவர் ', 'கணபதீஸ்வரமுடையார் ' எனவும்; தலத்தின் பெயர் "கயா மாணிக்க வளநாட்டு மருகல் நாட்டு திருச்செங்காட்டங்குடி" என்று குறிப்பிடப்படுகிறது.

நன்றி வலைதளம்...🙏📚📡💻
பல முறை தரிசனம் கிடைக்கப்பெற்ற தலம்.

#மீள்தரிசனம் 4.2.2026
4.02.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

Check out this review of SCN079 Sri Uthirapasupatheeshwarar Swamy Temple, Thiruchengattangudi, Thevaram padal pettra sthalam on Google Maps
https://goo.gl/maps/VXDrd7SjrQJVLgv96

செங்காட்டாங்குடிஅருள்மிகு திருக்குழல் நன்மாது உடனுறை கணபதீச்சரத்தார்திருமுறைத்தலம், திருப்புகழ் தலம்

செங்காட்டாங்குடி
அருள்மிகு திருக்குழல் நன்மாது உடனுறை கணபதீச்சரத்தார்
திருமுறைத்தலம், திருப்புகழ் தலம்

திருச்செங்காட்டங்குடி (Thiruchenkattankudi), தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமருகல் வட்டாரத்தில் அமைந்துள்ள ஒரு வரலாற்று சிறப்புமிக்க கிராமம் ஆகும். இது தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 79-வது சிவத்தலமாகப் போற்றப்படுகிறது. இக்கோயில் உத்தராபதீசுவரர் திருக்கோயில் எனப்படுகிறது. 

 நாகைமாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ளது. திருவாரூரிலிருந்தும் பேருந்து வசதி உள்ளது. 
இறைவன் - கணபதீச்சரத்தார். பைரவ கோலத்துடன் உத்திராபதியார் எழுந்தருளியிருக்கிறார். ஆத்திவனநாதர், மந்திரபுரீசுவரர், கணபதீஸ்வரர், பிரமபுரீஸ்வரர், பாஸ்கரபுரீஸ்வரர்.  
இறைவியார் திருப்பெயர்: சூளிகாம்பாள் (குழலம்மை), திருகுகுழல் உமைநங்கை.  

தல மரம்: ஆத்தி மரம் தீர்த்தம் : சூரிய தீர்த்தம், தீர்த்தக் குளம் கோயிலுக்கு எதிரில் உள்ளது.   

வழிபட்டோர்: சம்பந்தர்,அப்பர் , சுந்தரர், பரணதேவ நாயனார், சேக்கிழார், விநாயகர், பிரமன், சத்பாஷாடர் முதலியோர். Sthala Puranam

விநாயகப்பெருமான் கஜமுகாசுரனைக் கொன்றகாலத்து அவன் உடலினின்றும் பெருகிய இரத்தவெள்ளத்தால் இவ்விடம் முழுதும் செந்நிறமாயிற்று. ஆதலால் இத்தலம் செங்காடு, செங்காட்டங்குடி எனப் பெயர்பெற்றது. விநாயகப்பெருமான் கயமுகனைக் கொன்ற கறை நீங்கச் சிவலிங்கப்பெருமானைத் தாபித்து வழிபட்டார். அதனால் `கணபதீச்சரம்` எனத் திருக்கோயில் வழங்கப்பெறுவ தாயிற்று. இவ்வரலாற்றைக் கந்தபுராணத்து,

ஏடவிழ் அலங்கல் திண்டோள் இபமுகத் தவுணன் மார்பில்
நீடிய குருதிச் செந்நீர் நீத்தமாய் ஒழுகும் வேலைப்
பாடுற வருங்கான் ஒன்றிற் பரத்தலின் அதுவே செய்ய
காடெனப் பெயர்பெற் றின்னுங் காண்டக இருந்த தம்மா!
மீண்டும்செங் காட்டில் ஓர்சார் மேவிமெய்ஞ் ஞானத்தும்பர்
தாண்டவம் புரியுந் தாதை தன்னுருத் தாபித் தேத்திப்
பூண்டபேர் அன்பிற் பூசை புரிந்தனன் புவியு ளோர்க்குக்
காண்டகும் அனைய தானம் கணபதீச் சரம தென்பர்.
என்ற செய்யுட்களான் அறியலாம்.
மிகப் பழமையான திருவாத்திவிருக்ஷம் ஒன்று, எழுந்தருள் நாயகர் திருமுன்பு இருக்கின்றது. பிராகாரத்தின் கீழ்ப்பக்கத்தில் இத்தலத்து வாழ்ந்த சிறுத்தொண்டர், திருவெண்காட்டு நங்கை, சீராளன், சந்தன நங்கை இவர்கள் திருவுருவங்கள் இருக்கின்றன. சிறுத்தொண்டர், உத்தராபதியினின்றும் வந்த பைரவ வேடம் தாங்கிய பரமனுக்குத் தம்மகன் சீராளனையே கறிசமைத்திட்டு முத்தியடைந்தனர் என்பது வரலாறு. 

இந்த அடியார் பெருமகனார், திருஞானசம்பந்தப் பெருமானும், அப்ப மூர்த்திகளும் எழுந்தருளியகாலத்து அவர்கள் நட்பைப்பெற்று அவர்கள் பதிகத்துச் சிறப்பிக்கப்பெறும் தகுதியைப்பெற்றவர். சித்திரைப் பூர்ணிமையில் சிறுத்தொண்டர் திருவமுதுபடைத்த திருவிழா நடைபெறும். அமுதுபடையல் என்றே அது வழங்குகிறது.

சிறப்பம்சங்கள்:
மூலவர்: உத்தராபதீசுவரர் (இத்தலம் மந்திரபுரீசம், ஆத்திவனம் எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது).
சிறப்பு: பார்வதி தேவிக்கு சிவபெருமான் நர்த்தனமாடிக் காட்டிய தலம். விநாயகர், "வாதாபி கணபதி"யாகப் போற்றப்படுகிறார்.
வரலாறு: சிறுத்தொண்ட நாயனார் அவதரித்த தலம். இவரது மகனைப் பலியிட்டு சிவனுக்கு உணவு படைத்த பக்தி கதை இத்தலத்துடன் தொடர்புடையது.
திருவிழா: கணபதிக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் உத்தராபதீசுவரர் வெள்ளை சாத்தி உலா போன்றவை முக்கிய நிகழ்வுகளாகும்.

சந்தான பாக்கியம் (குழந்தை வரம்) அருளும் தலமாகவும், ஞானசம்பந்தர், நாவுக்கரசரால் பாடப்பெற்ற தலம். 

திருச்செங்காட்டங்குடி கோயில் தலவரலாறு Sthala puranam of Thiruchengattangudi Temple

கணபதி இறைவனை வழிபட்டதால் இக்கோயிலுக்கு "கணபதீச்சரம்" என்று பெயர். ஆலயம் கணபதீச்சுரம் எனவும், ஊர் திருச்செங்காட்டங்குடி எனவும் வங்கி வருகிறது. விநாயகர், கயமுகாசூரனைக் கொன்ற பழிதீர இங்கு இறைவனை வழிபட்டார். அசுரனைக் கொன்றபோது அவனுடைய உடற்குருதி படிந்து இப்பகுதி செங்காடாக ஆயினமையின் 'செங்காட்டங்குடி' என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது

. பைரவ வேடத்தில் இறைவன் வந்து சிறுத்தொண்டரிடம் பிள்ளைக்கறியமுது கேட்டு அவருக்கும் அவர் மனைவி, மகன், வேலைக்காரி ஆரியோருக்கும் அருள்புரிந்து தலம். 

"உத்ராபதியார் " திருமேனி உருவான விதம் பற்றி சொல்லப்படும் வரலாறாவது - ஐயடிகள் காடவர்கோன் என்னும் பல்லவ மன்னன், சிறுத் தொண்டருக்கு இறைவன் அருள் புரிந்த செய்தியைக் கேட்டு, இத்தலத்திற்கு வந்து, பல நாட்கள் தங்கி வழிபட்டு வந்தார். உத்திராபதியாரின் தோற்றத்தைக் காண விரும்பினார். இறைவன், "இத்திருக்கோயிலைத் திருப்பணி செய்து, உத்தராபதியார் திருவுருவம் அமைத்துச் சித்திரைத் திருவோணத்தில் குடமுழுக்கு செய்வாயாகில், யாம் சண்பகப்பூ மணம் வீசக் கட்சி தருவோம்" என்றருளினார். ஐயடிகள் அவ்வாறே செயல்படலானார். கொல்லர்கள் உத்ராபதியார் உருவம் அமைக்கத் தொடங்கினர். பல இடர்பாடுகள் - கும்பாபிஷேக நாள் நெருங்கியது. மன்னனோ விரைவில் முடிக்க கட்டளையிட்டான். வடிவம் நன்கு அமைய வேண்டுமே என்ற கவலையுடன் உலைக்களத்தில் ஐம்பொன்னை உருக்கிக் கொண்டிருந்தனர். இறைவன் சிவயோகியார் வடிவில் அங்கு வந்து நீர் கேட்டார். இருந்தவர்கள், "உலைக்களத்தில் நீர் ஏது? காய்ச்சிய மழுதான் உள்ளது; வேண்டுமானால் ஊற்றுகிறோம்" என்றனர். சிவயோகியார், "நல்லது; அதையே ஊற்றுங்கள்" என்றார். கொல்லர்கள் காய்ச்சிய மழுவை ஊற்ற, வாங்கியுண்ட சிவயோகியார் அங்கிருந்து மறைந்தார் - உத்தராபதீஸ்வரர் உருவானார். செய்தியறிந்த மன்னன் வியந்து போற்றி, அத்திருவுருவை கோயிலில் எழுந்தருளுவித்து - கும்பாபிஷேகம் செய்வித்தான். ஐயடிகள் காடவர்கோனுக்கு இறைவன் சண்பகப்பூவின் மணம் வீச, காட்சித் தந்தருளினார். (ஆதாரம் - கோயில் வரலாறு.)

இத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம், தலவிருட்சம் ஆகிய நான்காலும் சிறப்புடையது. சிறுத் தொண்டர் அருள் பெற்றத் தலம். மந்திரபுரி, செங்காடு, சத்தியபுரி, பிரமபுரி, தந்திரபுரி, ஆத்திவனம், பாஸ்கரபுரி, சமுத்திரபுரி, கணபதீச்சரம் ஆகிய ஒன்பது திருநாமங்களைக் கொண்டு விளங்குகின்றது. 

தல தீர்த்தம் - தீர்த்தக் குளம் கோயிலுக்கு எதிரில் உள்ளது; இத்தலத்தில் ஒன்பது தீர்த்தங்கள் உண்டென்று சொல்லப்படுகிறது; அவை:- சத்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்கினி தீர்த்தம், இந்திர தீர்த்தம், யம தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம், சீராள தீர்த்தம் என்பன அவ்வொன்பதாகும். இறைவனார், அடியார் பொருட்டு பூமியில் வந்து, தம் பாதம் தோய நடந்து அருள் செய்தத் திருத்தலங்களான சிதம்பரம், திருஆலவாய், திருவாரூர், திருக்கச்சூர் ஆலக்கோயில், திருகுருகாவூர் வெள்ளடை, திருஅம்பர்மாகாளம், திருமறைக்காடு, திருவாய்மூர், திருப்பஞ்ஞீலி, திருப்பெருந்துறை, திருச்சாய்க்காடு, திருவெண்ணைநல்லூர், திருநாவலூர் ஆகிய தலங்கள் வரிசையில் இத்தலம் இறைவன் உத்திராபதீஸ்வரராகத் தோன்றி, சிறுத்தொண்ட நாயனார் இல்லம் முதலாக கணபதீச்சர ஆலய ஆத்திமரம் வரை தனது பொற்பாதம் பதித்த சிறப்புடையது. 

இறைவன் அமர்ந்திருக்க, சிறுத்தொண்டர் அவரை அமுதுசெய்ய அழைக்கும் சிற்பம் இங்குள்ளது. 

விநாயகர், பிரமன், வாசுதேவன், சூரியன், சந்திரன், சத்யாஷாட முனிவர், சிறுத்தொண்டர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோர் வழிபாடு செய்து பேறு பெற்ற தலம்.

 நாயன்மார்கள் வரலாற்றில், சரவணத்துத் தனயரான முருகப் பெருமானுடன் கூட இறைவியாரும் இறைவரும் சோமாஸ்கந்தர் திருக்கோலம் காட்டி அருளியது இத்திருத்தலத்தில்தான் என்ற தனிச் சிறப்பு பெற்றத் திருத்தலமாகும்.

 சுவாமி கருவறை அகழி அமைப்புடையது. மூலவர் கணபதீச்சரமுடையார். இங்கு பேழையில் மரகத லிங்கம் உள்ளது. 

சிறுத்தொண்டர் பல்லவ மன்னனின் தளபதியாக 'வாதாபி ' சென்று சாளுக்கியரோடு போர் செய்து வாகை சூடி வந்தபோது உடன் கொண்டு வந்த (வாதாபி) விநாயகரை இக்கோயிலில்தான் பிரதிஷ்டை செய்துள்ளார். 

சிறுத்தொண்டர் மாளிகை இன்று கோயிலாகவுள்ளது. இங்குச் சிறுத்தொண்டர், உத்ராபதீஸ்வரர் (உற்சவ காலங்களில் வீதி உலா வருபவர் இவரே),

 திருவெண்காட்டு நங்கை அன்னம் பரிமாறும் கோலத்தில் திருவுருவங்கள் உள்ளன. இத்தலத்தில் சில மருந்துப் பொருள்களும் சேர்த்து செய்யப்படும் சீராளங்கறி எனும் பிரசாதம் - அமுது படையல் விழா நாளன்று மட்டுமே கிடைக்கும்; மக்கட்பேறில்லாதவர்கள் உத்ராபதியாரை வழிபட்டு, இப்பிரசாதத்தை உண்டால் புத்திரப் பேறு அடையப் பெறுவர். 

கல்வெட்டுக்களில் இறைவன், 'செங்காடுடைய நாயனார் ', 'கணபதீச்சரமுடைய மகாதேவர் ', 'கணபதீஸ்வரமுடையார் ' எனவும்; தலத்தின் பெயர் "கயா மாணிக்க வளநாட்டு மருகல் நாட்டு திருச்செங்காட்டங்குடி" என்று குறிப்பிடப்படுகிறது.

நன்றி வலைதளம்...🙏📚📡💻
பல முறை தரிசனம் கிடைக்கப்பெற்ற தலம்.

#மீள்தரிசனம் 4.2.2026
4.02.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

Check out this review of SCN079 Sri Uthirapasupatheeshwarar Swamy Temple, Thiruchengattangudi, Thevaram padal pettra sthalam on Google Maps
https://goo.gl/maps/VXDrd7SjrQJVLgv96

திருமருகல் அருள்மிகு வண்டுவார்குழலி உடனுறை மாணிக்கவண்ணர்திருமருகல், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம். திருமுறைத்தலம் திருப்புகழ்தலம்

திருமருகல்
அருள்மிகு வண்டுவார்குழலி உடனுறை மாணிக்கவண்ணர்
திருமருகல், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம்.
திருமுறைத்தலம்
திருப்புகழ்தலம்
இத்தலம் நாகப்பட்டினத்திலிருந்து நன்னிலம் செல்லும் வழியில், திட்டச்சேரிக்கு அடுத்து உள்ளது. (நாகப்பட்டினத்திலிருந்து 22 கி.மீ). 
நன்னிலம், நாகை, திருவாரூர், மயிலாடுதுறைகளிலிருந்து பேருந்துகளில் செல்லலாம்.
இறைவன் மாணிக்கவண்ணர் (ரத்தினகிரீஸ்வரர்). இறைவி வண்டுவார்குழலி (ஆமோதள நாயகி) .

திருமருகல் கோவில் சிறப்பம்சங்கள்:

கோச்செங்கட் சோழநாயனார் எழுப்பிய எழுபது மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று. யானையேறாப் பெருங்கோயில்.

இத்தலம் திருமணத் தடை நீக்கும் தலமாக விளங்குகிறது. இங்கு, ஞானசம்பந்தப் பெருமான் விஷம் நீங்கப் பாடிய பதிகம், திருமணத் தடை நீக்கும் பதிகமாகவும் விளங்குகிறது. இதன்படி, விநாயகர், சுவாமி, அம்பாளுக்கு நெய் தீபம் ஏற்றி, சடையா யெனுமால் சரண்நீ யெனுமால் என்ற பதிகத்தைப் பாராயணம் செய்வோருக்கு, தடைகள் அனைத்தும் அகன்று திருமணம் கைகூடும் என்பது இத்தலத்தின் சிறப்பு

பாடல் பெற்ற தலம்: திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் பதிகம் பாடப்பட்டது. சோழநாட்டுக் காவிரித்தென்கரைத்தலங்களில் 80ஆவது தலம்
அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் உள்ளது.

தல விருட்சம்: மருகல் (ஒரு வகை கல் வாழை). தீர்த்தம்: லட்சுமி தீர்த்தம் / மாணிக்க தீர்த்தம்.
அமைப்பு :
கோச்செங்கோட்சோழனின் திருப்பணியுடன் மாடக்கோயிலாக அமைந்துள்ளது இக்கோயில். இரு பிராகாரங்கள், 5 நிலை ராஜகோபுரம், அதன் எதிரே நீராழி மண்டபத்துடன் கூடிய தீர்த்தம் என எழில் சூழ் திருத்தலமாக உள்ளது இத்தலம். மருகல் என்ற வாழை நிறைந்திருந்த பதி என்பதால், இப்பகுதிக்கு திருமருகல் எனப் பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 
இக்கோயில் வளாகத்தில் உள்ள மருகல் வாழை மரங்கள், அங்கிருந்து வெளியே கொண்டு சென்றால் வளராது என்ற நம்பிக்கை உள்ளது.

கிழக்கு நோக்கிய ராஜ கோபுரத்தை அடுத்து கொடி மர விநாயகரைக் கொண்ட கொடி மரம் உள்ளது. உயரமான மேடை மீது வித்தியாசமான நந்தி பலிபீடத்துடன் உள்ளது. தென்புறம் வன்னி மரம் மேடையுடன் அமைந்துள்ளது. 

அடுத்து தெற்கு நோக்கிய அம்பாள் முன்மண்டபத்துடன் உள்ளது
வண்டுவார்குழலி (ஆமோதளநாயகி) தனி சன்னதியும் உள்ளன.
அம்மன் சன்னதியின் திருச்சுற்றில் யமுனா சண்டிகேஸ்வரி சன்னதி உள்ளது.

மூலவர் சன்னதியின் நுழைவாயிலின் வலப்புறம் சனீஸ்வரர், 
மேலே படி ஏறினால், மூலவர் ரத்னகிரீஸ்வரர் சன்னதியின் வலது புறம் சோமாஸ்கந்தர் சன்னதி உள்ளது. சுவாமி கிழக்கு நோக்கிய கருவரையில் உள்ளார். மூலவர் கோஷ்டத்தில் கணபதி, 63 மூவர், தட்சிணாமூர்த்தி, , பிரம்மா, துர்க்கை உள்ளனர். வள்ளிதெய்வானையுடன் முருகர் அமைந்துள்ளார். திருப்புகழ் பாடல் பெற்ற தலம். மேலும், மகாலெட்சுமி, , சண்டிகேஸ்வரர் சன்னதிகளும் உண்டு. தீர்த்தக்கினறு வடகிழக்கில் உள்ளது. தலமரம் கல்வாழையும் உள்ளது.

அடுத்து சுவாமி வெளிமண்டபம். , நடராஜர் சன்னதியும்,
கிழக்கில், நவகிரகம், பராசரர் பூசித்த லிங்கம், செட்டிப்பெண், செட்டிப்பிள்ளை,
பைரவர், சூரியன் உள்ளனர்.

வெளிச்சுற்றில் தென்புறம் சாஸ்தா, பிராம்ஹி, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, மாஹேந்திரி, சாமுண்டி, சுரம் தீர்த்த விநாயகர், வடக்கில் சந்தான விநாயகர் ஆகியோர் உள்ளனர். வடகிழக்கில் தனி சன்னதியில் மேற்குப் பார்த்த மருகல் உடையார், தெற்கு பார்த்த சவுந்தரநாயகி சன்னதியும் இச்சுற்றில் உள்ளது. 
மற்றும் யாக சாலை, அலங்கார மண்டபம் உடையது.

தல புராணம்.
முன்னொரு காலத்தில் மருகல் நாட்டை குசகேது என்ற மன்னன் ஆட்சி செய்துள்ளான். ஒருமுறை இப்பகுதியில் காடு திருத்தும் பணி நடைபெற்றபோது, சுயம்புவாக தோன்றியிருந்த சிவலிங்கத் திருமேனியின், பாணத்தில் மண்வெட்டி பட்டு ரத்தம் பீறிட்டுள்ளது. இதையறிந்த மன்னன் ஓடோடி வந்து, மனம் மொழி மெய்களால் இறைவனைத் துதித்து, இறைத் திருவருளால் எழுப்பித்த ஆலயமே, இக்கோயில் எனப்படுகிறது. 

நீதி நெறி தவறாத குசகேது மகாராஜாவின் ஆட்சிக் காலத்தில், விதியின் பயனாக கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. 9 ஆண்டுக் காலம் மழையில்லாததால் மக்கள் சொல்லொண்ணா துயரத்துக்கு உள்ளாகினர். பசிப் பிணியாலும், வாட்டிய வறுமையாலும் மக்கள் நீதி நெறிகளைப் புறந்தள்ளினர். இதனால், மனமுடைந்த மன்னன் குசகேது, மக்களின் பசியைப் போக்க முடியாமல், மக்களை நீதி நெறி நடத்த முடியாமல் வாழ்வதை விட, இறப்பதே மேல் எனக் கருதி, தன் துயரை எல்லாம் இறை திருமுன் நின்று கதறிய அவன், இறுதியில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றான். 

தன்னலம் கருதாமல், தன் குடிகளின் நலனுக்காக தன்னுயிரையும் துறக்கத் துணிந்த மன்னனைத் தடுத்தாட்கொண்டு, சிவகணங்களுடன் காட்சியளித்த சிவபெருமான், மருகல் நாட்டின் வறுமை தீர திருமருகல் மற்றும் சுற்றுப் பகுதிகளில் மாணிக்கம், நெல், முத்து, நீர் ஆகிய மழைகளைப் பொழியச் செய்து அருளியுள்ளார். மாணிக்க மழை பெய்யச் செய்து மக்களின் வறுமையைப் போக்கிய வள்ளல் என்பதால் இத்தல இறைவனுக்கு அருள்மிகு மாணிக்கவண்ணர் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

செட்டிப்பெண், செட்டிப்பிள்ளை திருமணம்

வைப்பூரைச் சேர்ந்த வணிகன் ஒருவனுக்கு 7 பெண் பிள்ளைகள். ஆண் மகவு இல்லாத அவன், தன் தமக்கையின் மகனை தன்னுடன் அழைத்து வந்து வளர்த்துள்ளான். மேலும், தன் பெண் பிள்ளைகளில் ஒருத்தியை அவனுக்குத் திருமணம் செய்து வைப்பதாகவும் தமக்கைக்கு அவன் வாக்களித்திருந்தான். ஆனால், காலப்போக்கில் தன் வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியவனாக அந்த வணிகன், தன்னுடைய 7 பெண்களில் 6 பெண்களை செல்வந்தர்களாகத் தேடிப்பிடித்து மணம் முடித்தான். 

தன் தந்தையின் வாக்குத் தவறிய இச்செயலைக் கண்டு வருந்திய 7-ஆவது பெண், தன் தந்தை தன்னையும் தன் மாமனுக்கு மணம் முடிக்கமாட்டார் என்பதையறிந்து, தன் மாமனை மதுரைக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்வது எனத் திட்டமிட்டு, அவனுடன் உடன்போக்குப் புறப்பட்டாள். ஒரு நாள் இரவு, இத்திருத்தலத்தின் தெற்குவீதியில் அவர்கள் இருவரும் தங்கியிருந்தனர். அப்போது, விதி வசத்தால் அந்தச் செட்டிப்பிள்ளை அரவம் தீண்டி இறந்தான். 

இதனால், பெரும் துயருற்ற அந்தச் செட்டிப்பெண், கண்ணீர் விட்டுக் கதறி புலம்பினாள். மணமாகா கன்னிப் பெண் என்ற எல்லையை மீறாமல், இறந்து கிடந்த மாமனின் உடலைத் தீண்டாமல் அருகிலிருந்தே அழுது புலம்பினாள். அரவம் அணிந்த நிமலா, அடியவர் தம்கூட்டம் உய்ய நஞ்சுண்ட அமுதே காத்தருள வருவாய்! என இறைவனை பலவாறு அழைத்தாள், அரற்றினாள்.

தன் அவல நிலையிலும் ஆண்டவனின் மீது நம்பிக்கைக் கொண்டு துதித்த அந்தப் பெண்ணின் அழுகுரல், அங்குத் தங்கியிருந்த ஞானக் குழந்தையாம் திருஞானசம்பந்தரின் செவிகளை அடைந்தது. அப்பெண்ணை சந்தித்து, அவளது அவலங்களைக் கேட்டறிந்த சம்பந்தப் பெருமான் மனம் கனிந்தார். மாணிக்கவண்ணரின் திருவருளை வேண்டி பதிகம் பாடத் தொடங்கினார். 

"சடையா யெனுமால் சரண்நீ யெனுமால்

விடையா யெனுமால் வெருவா விழுமால்

மடையார் குவளை மலரும் மருகல்

உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே"

என்ற பாடலுடன் தொடங்கி 11 பாடல்களைப் பாடி பதிகத்தை நிறைவு செய்தார் சம்பந்தர் பெருமான். 

ஞானக் குழந்தையின் பாடல்களால் மகிழ்ந்த மாணிக்கவண்ணரின் திருவருளால், இறந்து கிடந்த செட்டிப்பிள்ளை உயிர்பெற்று, துயில் எழுந்தவன் போல எழுந்தான். பரம்பொருளின் பெரும் கருணையால் புணர்வாழ்வு பெற்ற செட்டிப்பெண்ணும், செட்டிப்பிள்ளையும் இறைவனை பலவாறு வேண்டித் துதித்தனர்

அப்போது, இறைவன் திருவுளப்படி வண்டுவார்குழலி உடனுறை மாணிக்கவண்ணர் திரு முன்னிலையில், வன்னி மரத்தையும், கிணற்றையும் சாட்சியாகக் கொண்டு செட்டிப்பெண் - செட்டிப்பிள்ளை இருவருக்கும் மணமுடித்து வைத்தார் சம்பந்தர் பெருமான் என்பது இத்தல புராணம் உணர்த்தும் ஆன்மிக அற்புதம்.  

மகாலட்சுமி தவம்

புராண காலத்தில் முனிவர்கள் பலர் ஒன்று கூடி கங்கைக் கரையில் வேள்வி மேற்கொள்ளத் திட்டமிட்டனர். அந்த வேள்வியின் முதன்மையான பயனை மும்மூர்த்திகளில் யாருக்கு அர்ப்பணிப்பது என்பதில் அவர்களுக்கிடையே பேதம் ஏற்பட்டது. பின்னர், பிரம்மனின் மகனான பிருகு முனிவரை மூலோகத்துக்கும் அனுப்பி, தங்கள் கேள்விக்கு விடையறிந்து வரச் செய்ய முடிவெடுத்தனர். 

அதன்படி, பிருகு முனிவர் வைகுந்தம் சென்றார். அங்கு, திருமகளோடும், நித்திய சூரியர்களோடும், விஷ்வக்நேசர் முதலியரோடு வீற்றிருந்த திருமால், பிருகு முனிவரின் வரவை கவனிக்கவில்லை. இதனால், பெரும் கோபமடைந்த பிருகு முனிவர், பள்ளி கொண்ட பெருமாளின் திருமார்பில் உதைத்தார். 
உடனடியாக, பிருகு முனிவரை வரவேற்று உபசரிக்கத் தொடங்கிய திருமால், தன்னை உதைத்த முனிவரின் கால்களுக்கு ஏற்பட்ட வலியைப் போக்கக் கருதி பிருகு முனிவரின் கால்களையும் பிடித்துவிட்டார். 

தன் இருப்பிடமான பெருமாளின் திருமார்பில் உதைத்த பிருகு முனிவருக்குப் பெருமாள் பணிவிடை செய்வதைக் கண்டு கடும் சினம் கொண்ட திருமகள், தான் இருந்த இடத்தை உதைத்தவரை உபசரித்தது நியாயமற்றது எனக் கூறி, தான் இருக்கும் இடம் தேடி வந்து தன்னை அடையும் வரை வைகுந்தத்தை விட்டு விலகியிருந்து கடுந்தவம் இயற்றப் போவதாகக் கூறி பூலோகம் புறப்பட்டார். 

பல தலங்களைக் கண்ட திருமகள், மாணிக்கவண்ணரின் கோயிலைக் கண்டார். இத்தலமே தன் தவத்துக்கு ஏற்றத் தலம் எனக்கருதி திருமருகல் அடைந்தார். மாணிக்கவண்ணர் கோயிலின் கிழக்குப் பக்கத்தில் குளத்தை ஏற்படுத்திய திருமகள், அக்குளத்தில் தீர்த்தமாடி, வில்வங்களைக் கொண்டு மாணிக்கவண்ணரை பூஜித்தார். 

ஆவணி மாதம் பௌர்ணமி திதியுடன் கூடிய வெள்ளிக்கிழமை நாளில், மாணிக்கவண்ணரின் திருவருளால், திருமால் திருமகளை அடைய திருமருகல் வந்தார். வண்டுவார்குழலியுடன் காட்சியளித்த மாணிக்கவண்ணர், திருமாலையும், திருமகலையும் இணைத்து வைத்து அருள்புரிந்தார் என்பது இத்தலத்து ஐதீகம். இதன்படி, இத்தலமே வரலட்சுமி நோன்பு தோன்றிய தலம் எனக் குறிப்பிடப்படுகிறது. மகாலட்சுமி தாயார் உருவாக்கிய தீர்த்தமாதலால், இத்தீர்த்தம் அவரது பெயராலேயே மகாலட்சுமி தீர்த்தம் என்றே விளங்குகிறது.  

மேலும், மன பேதங்களால் பிரிந்த தம்பதிகள் இத்தலத்தில் மகாலட்சுமி தீர்த்தத்தில் நீராடி, மாணிக்கவண்ணரையும், வண்டுவார்குழலி அம்மையும் வழிபாடாற்றினால், மீண்டும் கூடி வாழ்வர் எனப்படுகிறது.

சனிதோஷ நிவர்த்தி
இக்கோயிலில் மூலவர் சன்னதிக்குச் செல்லும் பாதையில் ஶ்ரீ சனீஸ்வர பகவானுக்குத் தனி சன்னதி உள்ளது. இங்குள்ள சனி பகவான் அனுக்கிரக மூர்த்தியாக காட்சியளிக்கிறார். "மந்தனார் கொட்ட மடங்குங்கு கோயிலிது" என்று காக புஜண்டர் குறிப்பிட்டுள்ளார். 
 
"மந்தனுக்குற்ற பெரும் பேறுங் 
கீர்த்தியும் மருகலானுக் கல்லால் 
வேறில்லை நல்லன வேல்லாந் 
தந்தே வேதனை யறுப்பான் 
கொடுமையை யெடுத்துண்பனே" 

என கோரக்கச் சித்தர் அருளியுள்ளார் என்பதால், இத்தலம் சனிதோஷத்தின் உக்கிரம் போக்கும் தலமாகக் குறிப்பிடப்படுகிறது. 

பராசரர் வழிபாடு

புலன்களை வென்ற புண்ணியராக இருந்தவர் பராசரர் முனிவர். கங்கையில் தீர்த்தமாடச் சென்ற அவர், அங்கு தோணி ஓட்டும் பெண் ஒருவளின் அழகில் மயங்கினார். தன்னை மணந்துகொள்ள வேண்டி, அவளின் இசைவைப் பெற்றார். அவர்களுக்கு வியாசர் குழந்தையாக அவதரித்தார். பின்னர், அப்பெண்ணிடம் விடைபெற்ற பராசரர் மீண்டும் தவமியற்ற பதகாச்சிரமம் சென்றார். ஆனால், அவர் மனதை கவலை சூழ்ந்திருந்ததால், அவரால் நிலைகொள்ள இயலவில்லை. 

அப்போது, ஓர் அசிரீரி தோன்றி, கதலி வனத்தை சுற்றி மாணிக்கவண்ணரை வழிபட மனத்தூய்மை கிட்டும் என அருளியது. அதன்படி, பராசர முனிவர் இத்தலத்தில் வன்னி இலையைக் கொண்டு சிவலிங்க வழிபாடு மேற்கொண்டார். சித்திரை மாத பௌர்ணமி நாள் நண்பகலில் மாணிக்கவண்ணர் தோன்றி பராசர முனிவருக்குக் காட்சியளித்தார் என்பது இத்தல ஐதீகம். இதன்படி, இத்தலம் மனக்குழப்பங்கள் போக்கும் தலமாகக் குறிப்பிடப்படுகிறது. 

இக்கோயிலின் முக்கியப் பெருவிழா, சித்திரைத் திருவிழா ஆகும். இத்திருவிழாவின் 7-ஆம் நாளில் செட்டிப்பெண்- செட்டிப்பிள்ளை திருமணமும், மாலையில் மணக்கோலத்துடன் தம்பதியர் பல்லக்கில் வீதிவலம் வரும் உத்ஸவமும் நடைபெறும்.

அளப்பரிய ஆன்மிகச் சிறப்புகளைக் கொண்ட இத்திருக்கோயிலில் மகா குடமுழுக்கு விழா 2025ல் நடைபெற்றுள்ளது.
11 செப்டம்பர் 1974இல் குடமுழுக்கு ஆனதற்கான கல்வெட்டும் உள்ளது.

பதிகங்கள்: அங்கமும்வேதமு -1 -6 திருஞானசம்பந்தர்
சடையா யெனுமால் -2-18 திருஞானசம்பந்தர் பெருகலாந் 
-5 -88 திருநாவுக்கரசர்

பெருகல்ஆம்,தவம்
  பேதைமை தீரல்ஆம்;
திருகல்ஆகிய
  சிந்தை திருத்தல்ஆம்;
பருகல்ஆம்,பரம்
  ஆயதுஓர்ஆனந்தம்-
மருக லான்அடி
  வாழ்த்தி வணங்கவே.
- சம்பந்தர்

நன்றி வலைதளம்...🙏📚📡💻
பல முறை தரிசனம் கிடைக்கப்பெற்ற தலம்.

#மீள்தரிசனம் 4.2.2026
4.02.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

வாழ்மங்கலம் அ/மி. வீரகாளியம்மன்

வாழ்மங்கலம் அ/மி. வீரகாளியம்மன் 
பூசை விழா 4, 5 பிப்ரவரி 2026 தரிசனம்.

திட்டச்சேரி- T.R. பட்டினம் சாலையில் உள்ளது.

செங்குந்த முதலியார் வகையறாவுக்குச் சொந்தமான ஆலயம். வருடம் ஒருமுறை எடுத்து வைத்து பூசை செய்து, 2 நாட்கள் தரிசனம் செய்யப்படும்.
கிழக்குப் பார்த்த ஒரே ஒரு கருவரை நீண்ட அகல மண்டபத்துடன் உடையது.
காளி நின்றகோலம். 
பூசை தரிசனம் முடிந்த பிறகு எடுத்துப் பெட்டியில் வைத்து விடுவார்கள். மீண்டும் வருடம் முடிந்த பிறகே
பூசை.

தினமும், மற்றும் முக்கிய நாட்களில் பெட்டிக்குள் உள்ள காளிக்கே பூசை வழிபாடு நடைபெறும்.

ஏராளமான மருளாளிகளும், பக்தர்களும் இருநாட்களும் தொடர்ந்து வந்து தரிசித்து அருள் பெற்று செல்வார்கள்.

அருகில் தனி (செங்குந்த) விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் ஆலங்கள் உள்ளன.

திட்டச்சேரியிலிருந்து Auto வில் செல்லலாம். அல்லது, காரைக்கால் - திருப் பட்டிணம் - திட்டச் சேரி வழியில் ப.கொந்தகை அருகில் வாழ்மங்கலம் உள்ளது.
சிறிய கிராமம். 
வாகனங்கள் நிறுத்த வசதிகள் உண்டு. வேறு எந்தவித கடைகளும், ஓட்டல்களும் கிடையாது.
பூசை வழிபாடு நடைபெறும் நேரம் விசாரித்து செல்ல வேண்டும்.
வருட பூசை தரிசனம் போது மட்டும் விழாக் கடைகள் இருக்கும்.
காலமுறை பூசைக்காளி, மிகுந்த சக்திவாய்ந்த தெய்வம் என்பதால் பயபக்தியுடன் வணங்கி அருள் பெறுகிறார்கள்.
2026ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 4, மற்றும் 5ம் தேதிகளில் முழு நாளும் தரிசனம் செய்யலாம்.
நன்றி🙏

4.02..2026
சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
4.2.2026

சீயாத்தமங்கைஅ/மி.நீலாத்பவ அம்பாள் சமேதஅ/மி வன்மீகநாதர், காலபைரவர் ஆலயம்.

சீயாத்தமங்கை
அ/மி.நீலாத்பவ அம்பாள் சமேத
அ/மி வன்மீகநாதர், காலபைரவர் ஆலயம்.
நாகூர் - நன்னிலம் சாலையில் பிரதான சாலையை ஒட்டி, கிழக்கு நோக்கிய ஆலயம். முன்கோபுரம் இல்லை. சுவாமி சன்னதி கிழக்கு நோக்கியும், அம்பாள் கருவரை தனியாக தெற்கு நோக்கியும் உள்ளது. பைரவர் மேற்கு நோக்கி தனி சன்னதியில் உள்ளார். சோழ மன்னர்கள்ஆட்சியில் கட்டப்பட்ட ஆலயம்.
காலபைரவர் மிகவும் விசேஷம் பிரார்த்தனை தலம்.
கோஷ்ட்டத்தில், தட்சினாமூர்த்தி லிங்கோத்பவர், பிரம்மn, துர்க்கை.
விநாயகர், சண்டிகேஸ்வரர் சன்னதிகளும் இருக்கின்றன.
28.1.2026 குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
#மீள்தரிசனம்
4.02.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
4.2.2026

சூரியனார் கோவில்சிவசூரியனார் ஆலயம்.சூரியனார் கோவில் - சூரிய பகவானின் புனித நவக்கிரக கோவில்

சூரியனார் கோவில்
சிவசூரியனார் ஆலயம்.
சூரியனார் கோவில் - சூரிய பகவானின் புனித நவக்கிரக கோவில்

தமிழ்நாட்டின் கும்பகோணத்திற்கு அருகில் அமைந்துள்ளது. கும்பகோணம்-மயிலாடுதுறை வழித்தடத்தில் ஆடுதுறைக்கு அருகில் அமைந்துள்ளது

சூரியனுக்கு (சூரியக் கடவுள்) நவகிரக ஸ்தலமாகும். ஒரே வளாகத்தில் உள்ள தனித்தனி சன்னதிகளில் மற்ற எட்டு நவக்கிரகங்களோடும் சூரியன் முக்கிய தெய்வமாக வழிபடப்படுவதால், இந்த கோயில் தனித்துவமானது. மற்ற நவக்கிரக கோவில்களைப் போல் இல்லாமல், இங்கு பக்தர்கள் ஒன்பது கிரகங்களையும் ஒரே இடத்தில் வழிபடலாம்.

மேற்கு பார்த்த ஆலயம்.

3 நிலை ராஜகோபுரம். ஆலயம் வலதுபுரம் சிறிய தீர்த்தக்குளம்.

ராஜகோபுரம் உள் நுழைந்தவுடன் கொடிமரம், குதிரை, தென் மேற்கு மூலையில் விநாயகர்.

கருவரை மாடக்கோவில் அமைப்பு.

கருவரை முன்மண்டபத்தில், விநாயகர், காசிவிசுவநாதர், விசாலாட்சி, சண்டிகேஸ்வரர், பைரவர்.

சூரியன் கருவரையில் மேற்கு பார்த்து, எதிரில் வியாழன் (குரு).

கோயில் கட்டிடக்கலை பாரம்பரிய திராவிட பாணியில் ஒரு சிறிய அமைப்பு மற்றும் சக்திவாய்ந்த கருவறைகளுடன் உள்ளது. சூரியனின் சிலை அவரது துணைவிகளான உஷா மற்றும் பிரத்யுஷாவுடன் ஏழு குதிரைகளால் இழுக்கப்பட்ட தேரில் சவாரி செய்வதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. நவகிரகங்கள் சூரியனை எதிர்கொள்கின்றன, கிரகங்களின் ராஜாவாக அவரது முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன.
சிவசூரியனார் தரிசித்து பின் கோஷ்ட்ட பிரகாரத்தில், சூரியனை சுற்றி உள்ள நவகிரகங்கள் தனித்தனி கருவரை சன்னதிகள்.

தென்புறம், சனிஸ்வரர் தொடங்கி,
வடக்குபுரம் சண்டிகேஸ்வரர் வரை சுற்றி வலம் வந்து வழிபடுகிறார்கள்.

பிரகாரத்தில் வடபுரத்தில் உள்ள பெரிய நீண்ட மண்டபத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் உற்சவர் அபிஷேகம் நடைபெறும். தென்புறமும் நீண்ட மன்டபம் உள்ளது.

மாசியில் ரதசப்தமி உற்சவம். அனைத்து சுவாமிகளுக்கும் சந்தனகாப்பு அலங்காரம்.
பிரார்த்தனை தலம்.

சூர்யன் ஆரோக்கியம், உயிர், அதிகாரம், நம்பிக்கை, தலைமைத்துவம் மற்றும் தந்தையின் ஆசீர்வாதத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக நம்பப்படுகிறது. சூரிய தோஷம், நாள்பட்ட உடல்நலப் பிரச்சினைகள், தொழில் தடைகள், அங்கீகாரம் இல்லாமை மற்றும் நம்பிக்கை தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகிறார்கள்.

தினசரி பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் கடுமையான சடங்குகளுடன் நடத்தப்படுகின்றன. சூரிய வழிபாட்டிற்கு மிகவும் உகந்ததாகக் கருதப்படும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. ரத சப்தமி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகளின் போது இந்த கோவில் மிகவும் சிறப்பாக இருக்கும்.

🕰️ கோவில் நேரங்கள்
காலை: 6:00 AM - 12:30 PM
மாலை: 4:00 PM - 8:00 / 8:30 PM
(திருவிழா நாட்களில் நேரம் மாறலாம்)

🚗 இருப்பிடம் & எப்படி அடைவது
கும்பகோணத்தில் இருந்து தூரம்: ~15 கி.மீ
தஞ்சாவூரில் இருந்து தூரம்: ~45 கி.மீ
அருகிலுள்ள ரயில் நிலையம்: கும்பகோணம்
பேருந்து, டாக்சி அல்லது தனியார் வாகனம் வழியாக சாலை வழியாக எளிதில் அடையலாம்

🙏 சிறப்பு பூஜைகள் & நம்பிக்கைகள்

ஞாயிறு பூஜை மிகவும் சக்தி வாய்ந்தது
சிவப்பு மலர்கள், கோதுமை, வெல்லம், தாமிர பாத்திரங்கள் மற்றும் நெய் விளக்குகள் ஆகியவை பிரசாதங்களில் அடங்கும்.

பக்தர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்:
நல்ல ஆரோக்கியம் மற்றும் ஆற்றல்
தொழில் வெற்றி மற்றும் அதிகாரம்
நம்பிக்கை மற்றும் தலைமை
சூரிய தோஷத்தில் இருந்து நிவாரணம்
அமைதியான தரிசனத்திற்கு அதிகாலையில் வருகை தரவும்
ஞாயிறு மற்றும் பண்டிகை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்
🔱 சூரியனார் கோயிலுக்கு ஏன் செல்ல வேண்டும்?
✔ நவகிரகங்களில் சூரிய கடவுளுக்கான முக்கிய கோவில்
✔ ஒன்பது கிரகங்களும் ஒரே இடத்தில் வழிபாடு
✔ வலுவான ஆன்மீக அதிர்வுகள்
✔ உடல்நலம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு முக்கியமானது
தமிழகத்தின் பிரார்த்தனைத் தலங்களில் முக்கியமானது.

மீள் தரிசனம் 23.11.2022 கார்த்திகை அம்மாவாசை

#மீள்தரிசனம் - #ரதசப்தமி
25.01.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

திருமாந்துறை அட்சய நாத சுவாமி கோயில்.

திருமாந்துறை அட்சய நாத சுவாமி கோயில்.

கும்பகோணம் மைலாடுதுறை சாலையில் திருப்பனந்தாள் செல்லும் வழியில் சூரியனார் கோயிலுக்கு கிழக்கில் 2 கி.மீ தூரத்தில் உள்ளது.

பாடல் பெற்ற தலம் என்ற கருத்து உள்ளது.
பல ஆதாரங்கள் இருந்தும், திருச்சி அருகில் உள்ள திருமாந்துறையை திருமுறை தலமாக குறிப்பிடுகிறார்கள்.

திருமாந்துறை அட்சய நாத சுவாமி கோயில் . இங்குள்ள சந்திர கிணறு தீர்த்தத்தில் குளித்து காலமாமுனிவரும்  நவகிரஹங்களும் ரோக நிவர்த்தி அடைந்ததாக தல புராணம் கூறுகிறது .

முகப்பு ராஜ கோபுரம் இந்த கோயிலில் இல்லை .
கிழக்கு நோக்கிய ஆலயம்..
தனிக் கொடிமரம் புதிதாக வைக்கப்பட்டுள்ளது.

நந்திக்கு சிறு மண்டபத்துடன் சுவாமி ஆலயம் முன்புறம் உள்ளது.

இந்த கோயிலில் உள்ள 
இறைவர்: அட்சயநாத சுவாமி,
 இறைவியின் பெயர் ஸ்ரீ யோகநாயகி . கருவறையில் தட்ஷிணாமுர்த்தி பிரம்மா துர்கை ஆகியோர் உள்ளனர் .

சுவாமி, அம்பாள்  ஆலயம் கிழக்கு நோக்கி
தனித்தனி ஆலய அமைப்பில் உள்ள பெரிய ஆலயங்களில் இதுவும் ஒன்று.

இப்பிரகாரத்தில் விநாயகர் மனைவியுடன் காட்சி அளிப்பது சிறப்பம்சமாகும். உட்பிரகாரத்தில் நால்வர் சன்னிதி உள்ளது .
திருக்கஞ்சனூர் சப்த்த ஸ்தானத்தில் உள்ள ஏழு தலங்களில் இதுவும் ஒன்றாகும்.
அம்பாள் தனி ஆலயமாக, சுவாமி ஆலயத்தின் இடதுபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது சிறப்பு.

ஆலயம் முன்புறம் பெரியகுளம் உள்ளது.
தட்ஷன் நடத்திய யாகத்தில் சிவனின் விருப்பத்தை மீறி கலந்து கொண்டதால் ஷய ரோகத்தால் பாதிக்கப்பட்டார். உடனே சந்திரன் தன் குருவிடம் சென்று பரிகாரம் கேட்க இதற்கு பரிகரமாக மாந்துறை என்கிற இந்த தலத்தில் அட்சய நாத சுவாமியை வழிபட கூறினார் அதே போல் சந்திரன் இங்கு வந்துவழிபட்டு சாப விமோசம் பெற்றதாக புராணம் கூறுகிறது . இன்றும் இத்தலத்தில் உள்ள இறைவனை சந்திரன் தினமும் வழிபடுவதாக நம்பப்படுகிறது . ஜாதக ரீதியாக சந்திரன் உச்சம் நீசம் சத்ரு மற்றும் ரோக ஸ்தானத்தில் இருக்க பெற்றவர்கள் வணங்க வேண்டிய தலம் இது .

ரோகிணி திருவோணம் மற்றும் கடக ராசிக்காரர்கள் இந்த தலத்தில் வழிபாடு செய்யலாம் . சந்திர தோஷத்திற்கு பரிகார தலமாக விளங்கும் இக்கோவிலில் வழிபட்டால் விவசாயம் மற்றும் நீர் வளம் போன்றவையும் மேலோங்கும். ஒரு முறை தேவ லோகத்தில் ஏற்பட்ட பஞ்சத்தை தீர்க்க இந்திரனும் வருணனும் இந்த தலத்தில் வழிபட்டு பரிகாரம் செய்தார்கள் . எனவே இந்த தலத்தில் வழிபட்டால் விவசாயம் செழிக்கும் .

பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ள வாஸ்து நாள் கீழ் நோக்கு நாள் மற்றும் ஏர் கலப்பை பிடிக்க உகந்த நாள் போன்ற நாட்களில் கலப்பை மற்றும் விவசாய பொருட்களுக்கு மஞ்சள் குங்குமம் மற்றும் சந்தனம் வைத்து பூஜை செய்து விவசாயம் தொடங்குவது வழக்கமாக உள்ளது .

சந்திரன் நீர் ராசி , இந்த தலமும் சந்திரன் சம்பந்தப்பட்டது அதன் தாக்கம் இந்த கோவிலில் காண முடிகிறது எப்படி என்றால் கோயிலின் சந்திர கிணற்றில் வளர்பிறையில் நீர் பொங்கி பெருகுகிறது தேய்பிறையில் குறைகிறது. இந்த அதிசயம் இங்கு தவறாமல் நடக்கிறது .

சில வருடங்கள் முன்பு,  கார்த்திகை அம்மாவாசை அன்று ஆலயத்தின் வடக்குப் பிரகாரத்தில், உள்ள சந்திர தினத்தில் கங்கை பொங்கி வந்து கினறு நிரம்பி வழிந்தது. ஏராளமானவர்கள் வந்து தரிசித்தார்கள். இது தொடர்ந்து, கார்த்திகை அம்மாவசை அன்று தீர்த்த பூசை செய்து நீராடி வருவது தொடர்கிறது.

அட்சய த்ரிதியை அன்று இங்குள்ள இறைவனை வழிபடுவதால் குபேர சம்பத்து ஏற்படும், அன்று 64 பொருட்களால் பஞ்சாமிர்தம் செய்து அபிஷேகம் செய்யப்படுகிறது. இதை பிரசாதமாக உண்பதன் மூலம் அனைத்து விதமான உடல் குறைகள் நீங்கும்.
அன்று பகலில் விஷேச பூசைகள் வருடாவருடம் நடைபெற்று வருகிறது.

சூரியனார் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் திருமாந்துறை, அட்சய நாத சுவாமியை வணங்க வேண்டும்.

பிறகு சூரியனார் கோயில் ஆலயத்தின் வடபுறம் உள்ள கைலாசநாதர் ஆலயம் (சூரிய தீர்த்தம் உள்ளது) வணங்கி செல்லவேண்டும்.

பிறகு, திருமங்கலக்குடி ஆலயமும் சேர்ந்து தரிசிப்பது மிகச்சிறப்பு.
மிகப் பழமையான ஆலயம் புரைமைத்து குடமுழுக்கு செய்யப்பட வேண்டிய சூழலில் உள்ளது.

ரதசப்தமியில் சுவாமி, அம்பாள் சந்தனகாப்பு அலங்காரம் சிறப்பு தரிசனம்.

பல முறை தரிசனம் செய்தும் மீள் தரிசனம்.
கார்த்திகை அம்மாவாசை தீர்த்தம்

#மீள்தரிசனம் - #ரதசப்தமி
25.01.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

கீழ சூரிய மூலை, சூரியகோடீசுவரர் கோவில்

கீழ சூரிய மூலை
சூரியகோடீசுவரர் கோவில்

கும்பகோணத்தில் இருந்து, கஞ்சனூர், திருலோகி கிராமங்களின் அருகில் 15.கி.மீ தொலைவில், சூரியனார் கோவிலுக்கு அருகே அமைந்துள்ளது கீழசூரியமூலை என்ற தலம்.   
கும்பகோணத்திலிருந்து கஞ்சனூர் வழியாக திருலோகி செல்லும் பேருந்தில் சென்றால் கோவிலருகே இறங்கிக் கொள்ளலாம்.

ஆலய அமைப்பு:
கிழக்குப் பார்த்த சந்நிதியில் அருள்கிறார் சூரிய கோடீஸ்வரர். தெற்கு நோக்கிய சந்நிதியில் பவளக்கொடி அம்பாள். 
தெற்கு கோட்டத்தில் ஆனந்த தட்சிணாமூர்த்தி புன்னகைத்த நிலையில் காட்சி தருகிறார். வெளித் திருச்சுற்றின் தென் மூலையில் சக்தி விநாயகரும், மேல் திருச்சுற்றில் வள்ளி தெய்வானையுடன் முருகனும், தென் மூலையில் நாகலிங்கமும், வடக்குப் திருச்சுற்றில் துர்க்கை மற்றும் சண்டிகேசுவரர் திருமேனிகளும் உள்ளன.
வடமேற்கு மூலையில் நவக்கிரகங்கள் தங்கள் வாகனங்களுடன் தனிமண்டபத்தில் காட்சி தருகிறார்கள். உள்ளே, சுவாமி மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் பைரவர் மற்றும் சூரியன் திருமேனிகள் உள்ளன. 

இங்குள்ள மூலவரை காலை முதல் மாலை வரை சூரிய பகவான் தனது பொற்கதிர்களால் ஆராதனை செய்வதாக ஐதீகம். அதற்கு ஏற்ப காலை சூரிய உதயம் முதல், மாலை சூரிய அஸ்தமனம் வரை மூலவரின் நிழல் சுவற்றில் தெரியும். மற்ற நேரங்களில் தெரிவதில்லை.
பல ஆலயங்களில் கருவறை இறைவன் மீது ஒரு ஆண்டில் சில நாட்கள் மட்டுமே சூரிய ஒளி படரும். இப்படி ஒளிபடுவதை சூரியன் செய்யும் சிவபூஜை எனக் கூறுவர். ஆனால், இந்த ஆலய இறைவன் மீது தினந்தினம் கதிரவனின் பொற்கதிர்கள் சில நிமிடங்களாவது படர்ந்து செல்வது எங்கும் காணாத அற்புதம் என்கின்றனர் பக்தர்கள்.

பைரவர்:
பைரவரின் கழுத்தில் சிவப்பு ஒளி வெளிப்படும் அற்புதம்.

இக்கோவிலில், சுவாமி மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் பைரவர், சூரியன் திருமேனிகள் உள்ளன. இங்குள்ள பைரவர், சொர்ண பைரவர், என அழைக்கப்படுகிறார். இந்த பைரவருக்கு தீபாராதனை காட்டும்போது அவரது கண்டத்தில் (கழுத்தில்) பவளமணி அளவில் சிவப்பு ஒளி வெளிப்படுவதும், அது மெல்ல அசைவதும் மெய் சிலிர்க்க வைக்கும் காட்சி.
சுவாமி, அம்பாளுக்கு ஆரத்தி காண்பித்து விட்டு, பைரவரிடம் ஆரத்தி காட்டும்போது மட்டும், பைரவரின் கண்டத்தில் (கழுத்தில், குரல்வளை பகுதியில்) சிவப்பு நிறத்தில் பவழம் போல ஓர் ஒளி தோன்றி, அசைந்து மறைகிறது. சிறு பொறி போல வந்து மறையும் அந்தப் பவழ மணியின் ஒளிக்கிரணங்கள்தான், நம் பித்ரு சாபத்தை யும் சூரிய சந்திரர்களின் கிரணங்களால் ஏற்படும் துன்பங்களையும் பிணிகளையும் தீர்த்து வைக்கும் என்பது நம்பிக்கை.

இந்த பைரவர் தன் கழுத்துப் பவளமணியின் ஏழு ஒளிக் கிரணங்களின் மூலம் அனைத்து கோடி சூரிய, சந்திர மூர்த்திகளின் ஒளிக் கிரணங்களால் ஏற்படும் தோஷங்களையும், பிணிகளையும் நிவர்த்தி செய்கிறார். தவிர பணத்தட்டுப்பாடு, வறுமையைப் போக்கக் கூடியவர். இந்த பைரவர் என்ற நம்பிக்கையும் உண்டு.

இந்த பைரவரின் கண்டப்பகுதி ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நிறம் மாறுவதும், பின் பழைய நிலையை அடைவதும் இததலத்தின் சிறப்பு. இத் தலத்தின் பைரவரை தரிசனம் செய்தால் பக்தர்களின் கண்டம் நீங்குமாம்.

துர்க்கை
பக்தர்களை எழுந்து வந்து வரவேற்கும் அபூர்வத் தோற்றத்தில் துர்க்கை அம்மன்

இக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் துர்க்கையின் ஒரு பாதத்தில் மட்டும் மெட்டி உள்ளது. மேலும் துர்க்கையின் இரு பாதங்களும் ஒன்றுக்கொன்று நேரான நிலையில் இல்லை. அதாவது துர்க்கை அம்மன் தன் வலது காலை சற்று முன்பக்கமாக நீட்டி வைத்துக்கொண்டு காட்சி தருகிறாள். இந்த தோற்றமானது, தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களை துர்க்கை அம்மன் வலது காலை முன் வைத்து எழுந்து, அவளே முன்னால் வந்து வரவேற்பது போல தோன்றும். துர்க்கை அம்மனின் இந்த தோற்றத்தை நாம் வேற எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
மகாலட்சுமி
இக்கோயிலில், கோயிலின் குபேர மூலையில், பத்மாசன கோலத்தில் இருக்கும் மகாலட்சுமியின் வலக்காலில் ஆறாவது விரல் அமைந்துள்ளது. ‘ஆறு’ என்பது சுக்கிரனுக்குரிய எண். எனவே சுக்கிரனின் ஆதிக்கம் அவளிடம் நிறைந்திருக்கிறது என்கிறார்கள். மகாலட்சுமி எப்போதும் சுக்கிரனுடைய அனுக்கிரகத் திலேயே இருப்பதால், அவளை வணங்குவோருக்குச் செல்வத்தை அருளுவாள்.

இங்ஙனம் மகாலட்சுமியின் கடாட்சம் கிடைக்கும்படி அருளும் இத்தலத்தின் நாயகனாம் சூரியகோடீஸரரை ஒருமுறை தரிசித்து வழிபட்டால், நம் வாழ்வில் வறுமை என்பதே இருக்காது. எல்லா செல்வங்களும் பொங்கிப்பெருகும்; கடன் பிரச்னைகள் முற்றிலும் நீங்கும் என்பது நம்பிக்கை.

இந்த ஆலய இறைவன் மீது தினந்தினம் கதிரவனின் பொற்கதிர்கள் சில நிமிடங்களாவது படர்ந்து செல்வது எங்கும் காணாத அற்புதம்.
ஒரு கண் பார்வை, மாறுகண் பார்வை, மங்கலான கண் பார்வை, பார்வை இழப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இத் தலத்திற்கு வந்து சூரிய கோடீசுவரரை வழிபட்டால் பலன் கிடைக்கும்.

தமிழ் தாத்தா. உ.வே.சாமிநாதய்யர் பிறந்த ஊர்.
தல புராணம் :
 "கீழச்-சூரிய-மூலை" என்கிற #சூரியகோடீஸ்வரர் திருத்தலம்.
சூரியனுக்கு மூலாதார சக்தியை கொடுத்ததால் சூரிய மூலை என இத்தலம் அழைக்கப்பட்டது. சூரியனார் கோவிலில் தன் குஷ்ட நோய் நீங்கப் பெற்ற சூரியன், இத்தலத்தில் தன் முழு சக்தியையும் பெற்றான்.

அனைத்து லோகங்களில் உள்ளவர்கள் பிரதோ‌ஷ வழிபாட்டில் கலந்து கொண்டு பயனடைவதைக் கண்ட சூரிய பகவானுக்கு, தன்னால் பிரதோ‌ஷ வழிபாட்டில் கலந்துகொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. பிரதோ‌ஷ நேரம் என்பது தினசரி மாலைப் பொழுதுதானே! சூரியன் மறையும் நேரம் அது என்பதால் சூரியனால் வழிபாட்டில் எப்படி கலந்து கொள்ள முடியும்? அந்த நேரம் தன்னுடைய பணி நேரம் என்பதால் அந்த வழிபாட்டில் தன்னால் நிரந்தரமாக எப்போதுமே கலந்துகொள்ள முடியாமல் போய்விடுமே என எண்ணி வேதனை அடைந்தார். தன் வேதனையையும், வருத்தத்தையும் யாக்ஞவல்கிய மாமுனியிடம் எடுத்துரைத்தார் சூரிய பகவான். இந்த மாமுனி சூரியபகவானிடமிருந்து வேதங்களைக் கற்றவர்.

சூரிய பகவானின் வருத்தத்தைக் கேட்ட மாமுனி, அவருக்கு ஆறுதல் கூறினார். பின், தான் தினந்தோறும் வழிபடுகின்ற கீழச் சூரிய மூலையில் உள்ள சூரிய கோடிப் பிரகாசரிடம் தன் சூரியனின் கவலையை எடுத்துரைத்து, தினந்தோறும் அவரை வணங்கினார். தன் குருவின் வேதனையை தீர்த்து வைக்கும்படி வேண்டினார். பின், சூரிய பகவானிடமிருந்து தான் கற்றுக்கொண்ட வேதங்கள் அனைத்தையும் தட்சணையாக, வேதாக்கனி யோகப் பாஸ்கரச் சக்கர வடிவில் அவற்றின் பலன்களைப் பொறித்து சூரிய கோடீஸ்வரருடைய பாதங்களில் அர்ப் பணித்தார். மாமுனி சமர்ப்பித்த வேத மந்திர சக்திகளெல்லாம் சூரிய கோடீஸ்வரருடைய திருவடிகளில் ஓர் அற்புத விருட்சமாக வளர்ந்தது. அதுவே இலுப்பை மரம். இந்தக் கோவிலின் தல விருட்சமும் இதுதான்.

இலுப்பை மரத்தில் உருவான இலுப்பைக் கொட்டையிலிருந்து எடுக்கப்பட்ட இலுப்பை எண்ணெயால் தீபம் ஏற்றத் தொடங்கினார் மாமுனி. அந்த பகுதி இலுப்ப மரக் காடாக மாறியது. தினமும் அந்த மரங்களிலிருந்து கிடைக்கும் இலுப்பை எண்ணெயால், கோடி அகல் தீபங்கள் ஏற்றி சூரிய கோடீஸ்வரரை வழிபடத் தொடங்கினார். தினமும் மாலையில் சந்தியா வேளையில் இந்த வழிபாடு நடந்தது. அந்த நேரம் பிரதோ‌ஷ வழிபாட்டு நேரம் அல்லவா? மறுநாள் காலையில் சூரிய உதயத்தின் போது சூரிய பகவான், இந்த இலுப்பை எண்ணெய் தீபங்களைத் தரிசித்து பிரதோ‌ஷ வழிபாட்டின் பலன் அனைத்தையும் பெற்றார் என்பது புராண வரலாறு. இந்த புராண வரலாற்றுகுரிய தலமே கீழச் சூரிய மூலை.
உலகம் அறிய வேண்டிய அற்புத ஆலயம்.
தகவல்கள்: வலை தளங்கள் நன்றி🙏🏻

#மீள்தரிசனம் - #ரதசப்தமி
25.01.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

திருலோகி : ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலயம்.

திருலோகி : ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலயம்.

திருவிசைப்பா, கருவூர் தேவரால் பாடல் பெற்ற வைப்புத்தலம்.
3 நிலை இராஜ கோபுரம் கிழக்கு நோக்கியது. ஆதியில் அகழி அமைப்பு உடைய ஆலயம்.
சுவாமி சுந்தரேஸ்வரர் கிழக்கு நோக்கிய அமைப்பில்.
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி தெற்கு நோக்கிய கருவரை.
கருவரை முன்மண்டபத்தில்,
ரதிமன்மதனுடன் நின்ற கோலம் காட்சி கோலத்தில் தனி சன்னதி அமைப்பில் உள்ளனர், கொற்கையில் மன்மதன் பேறுபட்டு இத்தலத்தில், அருள் பெற்ற புராணம்.
ரிஷபாரூடர் நந்திமேல் சுவாமி அம்பாள் கற்சிலை அமைப்பு வேறு எங்கும் இல்லாத அமைப்பில் உள்ளது
பிரகாரத்தில், தனி தெட்சினாமூர்த்தி விநாயகர், வள்ளிதெய்வானையுடன் சுப்பிரமணியர், லிங்கோத்பவர், பிரும்மா, துர்க்கை சன்டிகேஸ்வரர் உள்ளனர்.

 பிரதோஷத்தில் தரிசனம் மிக சிறப்பாக எண்ணப்படுவதால், பக்தர்கள் வசதிக்காக தனியாக தெற்கு பிரகாரத்தில் தனி சன்னதி அமைப்பில் மாற்றி அமைத்துள்ளனர்.
மிகப் பழமையான ஆலயம்

#மீள்தரிசனம் - #ரதசப்தமி
25.01.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

சிவராமபுரம் - விசாலாக்ஷி - விஸ்வநாதர் ஆலயம். குத்தாலம்

சிவராமபுரம் - விசாலாக்ஷி - விஸ்வநாதர் ஆலயம்.
சிவராமபுரம் அக்ரஹாரத்தில் உள்ள ஸ்ரீ விசாலாக்ஷி சமேத ஸ்ரீ விஸ்வநாதர் ஆலயம்.
குத்தாலத்திலிருந்து,  ஆடுதுறை செல்லும் வழியில் பிரதான சாலையில், மாதிரிமங்கலம் அடுத்து வடபுறம் சிறிய பாதையில் செல்ல ஆலயம்.
காவிரியில் தென்கரைப்பகுதியில் அமைந்த சிறிய ஆலயம். அக்ரஹாரத்தில்,
ஒரு Arch அமைத்துள்ளர்கள். அதன் வழி ஆலயம்.
ஆலயம் பிரதானமாக கிழக்கு நோக்கியது.
தென்புறத்தில் அம்பாள் சன்னதி.
சுவாமி கிழக்கு நோக்கிய சிறிய உருவம், தனி கருவரையிலும், அம்பாள் தெற்கு நோக்கிய தனி கருவரையும் இணைக்கப்பட்ட பெரிய முன்மண்டபம் உடையது. ஆலயத்தில், வலம்புரி விநாயகர், வள்ளிதெய்வானை சுப்ரமணியர் உள்ளனர்.  நந்தியும் உள்ளார்.
பிரகாரகோஷ்ட்ட தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர். அமைத்துள்ளார்கள்.
கிழக்குப்புறம் ஒரு வாசல் இருந்தாலும், சுற்று சுவர் அமைக்கப்பட்டுள்ளதால், தெற்குப்புறத்தில் உள்ள சிறிய சாலை வழியாகத் தான் ஆலயம் வர இயலும்.
ஆலயப்பகுதி சுற்றிலும் வாழை மற்றும் மரங்கள் சூழ உள்ளது.
காவிரி சிறிய அளவில் ஆலயம் வடபுறம் இருப்பதால், பசுமையாக உள்ளது.

தனியார் கட்டுப்பாட்டில் ஆலயம் பராமரிப்பில் உள்ளது.

#மீள்தரிசனம் - #ரதசப்தமி
25.01.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

மாதிரிமங்கலம் - கைலாசநாதர்

மாதிரிமங்கலம் - கைலாசநாதர்
குத்தாலத்திலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் குத்தாலத்திலிருந்து 3 கி.மீ.தூரத்தில் உள்ளது மாதிரிமங்கலம் ஸ்ரீ கைலாசநாதர் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயம்.
பிரதான சாலைக்குத் தென்புறம் செல்லும் சிறிய சாலையில், ரயிலே லைன் கடந்து செல்ல வேண்டும். 
சிற்றூர் தென்புறத்தில் கிழக்கு நோக்கியவாறு ஆலயம் அமைந்துள்ளது. தென்புறம் உள்ள சாலையில் வாசல் உள்ளது. உயர அமைப்பில் கட்டப்பட்ட ஆலயம்.
தலபுராணம்:
தேரழந்தூரில் சொக்கட்டான் ஆடிய சிவன் பெருமாள் ஆட்டத்தில், அம்பாள், சார்புற்றதால், பசு சாபமாகப்பெற்ற அம்பிகையும், கோ மேய்க்கும் பேறு பெற்ற விஷ்ணுவும் ஆவூர், கோவிந்தக்குடி, கூடலூர், மேய்கரை மங்கலம், முதலிய பலதலங்கள் இருந்து, முடிவில், திருவாடுதுறையில் காட்சியளித்தார். அவ்வூருக்கு, ஈசானிய பாகத்தில் உள்ள இவ்வூரில், திருமகளைப் பிரிந்து வந்த பெருமாளுக்குத் திருமணம் செய்துவித்தார், ஈசன் என்பதால், இது மா+ திரு + மங்கலம் எனப்பட்டதாக புராணம் ஆலயத்தில் உள்ளது.
திருமணம் தடை நீக்கும் ஆலயம்.

ஆலய அமைப்பு:
கிழக்குப்புறத்தில் நுழைவில், காட்சி கோபுரம் அடுத்து, ஆலய முன்மண்டபம் உயரமாக இணைக்கப்பட்டுள்ளது. முன்மண்டபத்தில், நந்தியம் பெருமாளுக்கு தனி மண்டபம்.
சுவாமி கிழக்கு நோக்கி கருவரை, அர்த்த மண்டபம், உள் மண்டபத்தில் சிறிய நந்தி மற்றும், அம்பாள் கருவரையும், அர்த்த மண்டபத்துடன் உள்ளது. சுவாமி, அம்பாள் இரு கருவரை மண்டபங்கள் இணைப்புடன் கூடிய நடு மண்டபம் கல்யாணக்கூட அமைப்பில் நடுவில் உயர்த்தி பலகனிகளுடன் கட்டப்பட்டுள்ளது.  
மண்டபத்தின் தென்பகுதியில், திருஞானசம்பந்தர், இயற்பகை நாயனார் சிறிய உருவ சிலைகள், சுவாமி முன் இடத்தில் பெரிய விநாயகர் சன்னதி வலப்புறத்தில் சுப்பிரமணியர் அமைத்துள்ளனர்.

பிரகாரத்தில், கோஷ்ட்ட தட்சிணமூர்த்தி உயரமான மாட அமைப்பு; படிகள் உள்ளன.
மேற்கில், சிறிய லிங்கம், அம்பாள், சுற்று சுவற்றில் இணைந்துள்ளது.
துர்க்கை தனி சன்னதி. கிழக்குப்புறத்தில், பைரவர், சனி, சூரியன் அமைந்துள்ளார்கள்.
நல்ல பராமரிப்பில் வழிபாடுகளில் உள்ள ஆலயம். 
1987, 2002 ல்குடமுழுக்கு நடைபெற்ற குறிப்பு உள்ளது.
#மீள்தரிசனம் - #ரதசப்தமி
25.01.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
🪷

ராஜகோபாலபுரம் : ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம்.

ராஜகோபாலபுரம் : ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம்.
குத்தாலத்திலிருந்து ஆடுதுறை செல்லும் வழியில், குத்தாலம் தாண்டியவுடன் வரும் சிற்றூர்.
பிரதான சாலையில், தெற்கில் பிரியும் சிறிய சாலையில் வரும் ரயில்வே லைன் தாண்டி உள்ளே 200 மீ தூரம். 
ஆலயம் கிழக்குப் பார்த்தது. 
சிறிய முன் காட்சிக்கோபுரம். 
முன்புறம் சிறிய நந்தி.
சுவாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் தனித்தனி கருவரைகளுடன், இணைப்பு முன்மண்டபம்.
பிரகாரத்தில், தட்சினாமூர்த்தி.
விநாயகர், வள்ளிதெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலெட்சுமி, சண்டிகேஸ்வரர் - தனிதனி சன்னதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.

கிழக்குப் புறத்தில், பைரவர், நவகிரகங்களும் உள்ளனர்.
சிறிய ஆலயம்.
தரிசிக்க முன் தகவலுடன் சென்றால், ஆலயம் முழுதும் தரிசிக்கலாம்.

#மீள்தரிசனம் - #ரதசப்தமி
25.01.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

மன்மதீஸ்வரர் - ஆதிசக்திநாயகி அம்மன் ஆலயம், குத்தாலம்.

மன்மதீஸ்வரர் - ஆதிசக்திநாயகி அம்மன் ஆலயம், குத்தாலம்.
குத்தாலம் பேருந்து நிலையம் எதிரில் கிழக்கு நோக்கிய ஆலயம்
சுவாமி கருவரை கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் தனிதனி கருவரைகளில் உள்ளார்கள்.
முன்மண்டபம் இரு சன்னதிகளையும் இணைப்பு.
சுற்றுப் பிரகாரத்தில் தெட்சினாமூர்த்தி
விநாயகர், முருகன், மகாலெட்சுமி தனி அமைப்பு,
வடக்கில் துர்க்கை,
ஆலயம் நல்ல முறையில் பராமரிப்பில் உள்ளது.

#தரிசனம் - #ரதசப்தமி
25.01.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
🙏

சோழீஸ்வரர் ஆலயம்ஸ்ரீ பரிமள சுகந்த நாயகி (சௌந்தரநாயகி) சமேத ஸ்ரீ சோழீஸ்வரர் ஆலயம்.குத்தாலம்.

சோழீஸ்வரர் ஆலயம்
ஸ்ரீ பரிமள சுகந்த நாயகி (சௌந்தரநாயகி) சமேத ஸ்ரீ சோழீஸ்வரர் ஆலயம்.
குத்தாலம்.

 சுந்தரர் பாடிய தேவார வைப்பு தலம். விக்கிரமசோழன் திருப்பணி செய்து வழிபட்டதால் சோழீஸ்வரர் என மூலவர் அழைக்கப்படுகிறார்.
5 நிலை இராஜ கோபுரத்துடன் கூடிய கிழக்கு நோக்கிய மிகப்பழமையான ஆலயம்

10.9.23 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

சோழ மன்னர்களில் ஒருவரான
விக்ரம சோழனால் கட்டப்பட்ட ஆலயத்தின் மூலவர் ஶ்ரீ சோழீஸ்வரர்.

தற்போதைய ஆலயம் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது..

பரத முனிவர் பெண் குழந்தை பெற வேண்டி அம்பாளை வேண்டிக்கொள்ள,
அம்பாள் சிவ பெருமானிடம் பரிந்து உரைக்க, பரிந்து உரைத்த நாயகி (பரிந்துரை செய்பவள்) என இத்தல அம்பாள் அழைக்கப்படுகிறாள்.

ஈஸ்வரன் அம்பாளை அவளை
முனிவரின் மகளாகப் பிறக்கும்படி வேண்டி கொள்ள முனிவரின் மகளாக அம்பாள் பிறந்து பின்னர் சிவ பெருமானை மணந்து கொள்கிறார்.

இந்த ஆலயத்தில் அம்பாள் திருமணமாகாத பரிமளா சுகந்த நாயகியாகவும், பிரதான சந்நிதியில் சௌந்தர நாயகியாகவும், இரண்டு சன்னதிகளில் நமக்கு காட்சி அளிக்கிறார்.

விக்ரம சோழனின் மனைவி கோமளைக்கு மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத தோல் நோய் இருந்தது. சோழன் இத்தலத்தில் பிரார்த்தனை செய்து நோய் நீங்கியதால்
இந்த ஆலயத்தை விரிவாக கட்டினார்.

இன்றும், தோல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், இந்த
கோவிலுக்கு சென்று, திராட்சை சாற்றை கொண்டு சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்கின்றனர்.

இந்த ஆலயம் ஓர் சனி பரிகார தலம்.
இங்கு தனி சன்னதியில் சனீஸ்வரர்
பாதாள சனீஸ்வரர் என வணங்கப்படுகிறார்.

தேவர்கள் மற்றும் ரிஷிகள் இந்த தலத்திற்கு வருகை புரிந்த போது சனிஸ்வரர் அவர்களை அமிர்த கலசம் கொடுத்து வரவேற்றதால் அமிர்த கலச சனி என்றும் அழைக்கப்படுகிறார்.
நள மகாராஜா சனிப்பெயர்ச்சியில் இருந்து விடுபட யாத்திரை மேற்கொண்டபோது,
இந்த ஆலய பாதாள சனிஸ்வரரை வழிபட்ட பின்னர், சனீஸ்வரர் மன்னனை ஆசிர்வதித்து, திருநள்ளாறில் அவரது துன்பங்கள் தீரும் என்று தெரிவித்தார் என்பர்.

ஆலய தூண்களில் அனுமனுக்கு சிறப்பு சன்னதியும் . அனுமனின் பக்தர்கள் சனி தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறுவதால், அமிர்த கலச சனியை வழிபடுவதுடன், அவரை வழிபடுவதும் மிகுந்த ப்பலனைத் தரும்.
பிரகாரத்தில் சித்தி விநாயகர், நால்வர்,
தேவியருடன் சுப்ரமணியர், கஜலட்சுமி, விநாயகருடன் தட்சிணாமூர்த்தி, பைரவர், சண்டிகேஸ்வரர், பாதாள சனீஸ்வரர் தனி சன்னதிகளில் தரிசிக்கலாம்.
கோஸ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை சிற்பங்கள் உள்ளன.
நாகர் சிலைகள் வில்வ விருட்சத்தின் கீழ் அமைந்துள்ளன.
ஆலயம் இரண்டு பிரகாரங்கள் கொண்டது.

#மீள்தரிசனம் - #ரதசப்தமி
25.01.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

ஓம்காளீஸ்வரர் ஆலயம் - குத்தாலம்

ஓம்காளீஸ்வரர் ஆலயம் - குத்தாலம்

பிரணவ உபதேசம் பெற்ற காளிதேவி!

இந்தத் தெய்வத் திருமணத்தில் பங்கேற்க வந்த தேவருலகத்தினர் இப்பகுதி முழுதும் ஆங்காங்கு தங்கியிருந்து, சிவ லிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜித்துள்ளனர். அவ்வகையில் காளிதேவியும் இங்கு வந்தாள். உத்தால வனத்தில் குறிப்பிட்ட ஓரிடத்தில், வில்வ மரத்தின் அடியில் சிவலிங்கம் அமைத்தாள்; தீர்த்தமும் உருவாக்கினாள்.அதில் புண்ணிய நீராடி, மலர்களுடன் வில்வ இலைகளாலும் அர்ச்சனை செய்து, சிவபூஜை செய்யத் துவங்கினாள் அன்னை.

சாந்த சொரூபத்தினளாக மகிழ்ச்சியுடன் காளிதேவி செய்த பூஜையைக் கண்டு மகிழ்ந்த பரமேஸ்வரரும் லிங்கத்திலிருந்து ஆவிர்பவித்து “யாது வரம் வேண்டும்.?” எனக் கேட்டார்.

பிரணவத்தின் பொருளைத் தனக்கு உபதேசித்து அருளும்படி விநயத்துடன் வேண்டினாள் காளி. சிவபெருமானும் மிகவும் சந்தோஷத்துடன் ‘ஓம்’ எனும் பிரணவத்தின் பொருளை உபதேசித் தார். இதனைக் கண்டு மகிழ்ந்த சகல தேவராதிகளும் காளி பூஜித்த லிங்கமூர்த்தியை `ஓம்காளீஸ்வரர்’ என்ற திருநாமத்தால் அழைத்தனர்.

மூல மந்திரங்கள் இங்கே ஸித்தியாகும்!

சிவ அனுக்கிரகத்தால் மகிழ்ந்த காளிதேவி ஆனந்த நடனம் புரிந்தாள். அத்தனும் ஆனந்த தாண்டவம் புரிந்தார். இவ்விருவரின் திருநடனம் கண்டு அம்பிகையும் இங்கு குடியேறி, `ஆனந்தவல்லி’ என்கிற திருநாமத்தினை உவப்புடன் ஏற்றாள்.

ஆக, குத்தாலத்தில் உள்ள தொன்மையான ஆலயமாகத் திகழ்கிறது ஓம்காளீஸ்வரர் கோயில். அளவில் பெரியது. மூலவர் ஓம்காளீஸ்வரர் கிழக்கு நோக்கி அருள்கிறார். கருவறை மிக உயரமாக வித்தியாசமான அமைப்புடன் இருப்பது குறிப்பிடத்தக்கது. மூல மந்திரங்களை ஜபிப்பவர்கள் இங்கு வணங்கிட பலன்கள் ஸித்தியாகும் என்பது நம்பிக்கை.

மகாமண்டபத்தில், மூலவருக்கு இடது புறத்தில் சிறு சந்நிதியில் சிவலிங்க பூஜை செய்யும் காளியின் சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. டமருகம், பாசம் தாங்கிய மேற்கரங்களுடன்... கீழிரு கரங்களில் இடக் கரத்தில் பூக்குடலை திகழ, வலக்கரத்தால் அர்ச்சித்தபடி, சற்றே சிரம் தாழ்த்தி, சிஷ்ய பாவனையில் உபதேசம் பெறும் அமைப்பில் திகழ்கிறாள் காளிதேவி. வேறெங்கும் காண்பதற்கரிய காளிதேவி அம்சம் இது என்கிறார்கள்.

அருகிலேயே கணபதியும் அமைந்துள்ளார். இங்கே காளி தேவி, வழக்கமான தனது உக்கிரத்தை விலக்கி சாந்தத்துடன் திகழ இந்தப் பிள்ளையாரே காரணமாம்.

அபூர்வ அமைப்பில் கிரக மூர்த்திகள்

இங்கு சனைச்சரருக்கும் கேதுவிற்கும் இடையே குருபகவான் அமைந்துள்ளது விசேஷ அமைப்பாகும். அதேபோல் குருவின் பார்வை படும்படியாக நிழல் கிரகங்களான ராகுகேது அமைந் திருப்பதும் குறிப்பிடத் தக்கது. சர்ப்ப கிரகங்களினால் வாடுபவர்கள் இங்கு விளக்கேற்றி வணங்கிட, குருவின் சுப பார்வையினால் தீய பலன்களும் நற்பலன்களாக மாறுவது அதிசயம்.

அதேபோல், சூரியனும் சந்திரனும் எதிரெதிரே நேர்பார்வையில் அமைந்திருப்பதும் சிறப்பான அமைப்பாகும். மேலும், பஞ்ச பூதங்களும் இத்தலத்தில் வழிபட்டுள்ளனர். நெடிய பிராகாரத்தில் பஞ்ச பூதங்களும் வழிபட்ட பஞ்சலிங்கத் திருமேனிகளும் மனோன்மணி அம்மையுடன் நிலைத்திருப்பது அழகு.

ஏனைய சந்நிதிகளில் விநாயகர், லிங்கோத்பவர், சண்முகர், கஜலக்ஷ்மி, துர்காம்பிகை, பைரவர், சூரிய சந்திரர்கள் ஆகியோர் அருள்கிறார்கள்.

அம்பிகை ஆனந்தவல்லி தனித்த கோயிலில் வெளிச்சுற்றில் நிலை பெற்றிருக்கிறாள். வெள்ளிக் கிழமைகளில் இந்தச் சந்நிதியில் விளக்கீடு செய்து வணங்கினால், மகிழ்ச்சியான வாழ்வை அருள் கிறாள் இந்த அன்னை.

இந்தச் சந்நிதிக்கு எதிரில் தலவிருட்சமாகிய வில்வமரம் உள்ளது. இந்த வில்வத்துடன் ஒரு வேம்பு மரமும் கூடவே பிணைந்து வளர்ந்துள்ளது. அதனையே ஓங்காளீஸ்வரமாக வழிபடத் தொடங்கியும் உள்ளார்கள்.

கோபுர விதானங்களில் காளி சிவலிங்கத்தினைப் பூஜிப்பது போன்ற சுதைச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளதும் அழகு.

தில்லையில் சிவனை எதிர்த்து நடனம் புரிந்த காளி சிவனின் கோபம் குறைய பூஜை செய்து அருள் பெற்ற தலம் .சமய குறவர்கள் நால்வரும் பாடிய தேவார வைப்பு தலம் .சோழர் கால சிற்பங்கள் கோஷ்டத்தில் அழகுற அமைந்துள்ளன. மாயவரம் 11கி .மீ .சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்து கோவில் புது பொலிவுடன் காட்சி தருகிறது .

#மீள்தரிசனம் - #ரதசப்தமி
25.01.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

ஏகாம்பரேஸ்வரர் - காமாட்சியம்மன் ஆலயம், மற்றும், ஶ்ரீ பால தண்டாயுதபானி ஆலயம், குத்தாலம்.

ஏகாம்பரேஸ்வரர் - காமாட்சியம்மன் ஆலயம், மற்றும், ஶ்ரீ பால தண்டாயுதபானி ஆலயம், 
குத்தாலம்.
 நகரில் உள்ள சிறிய சிவன் ஆலயம் ஏகாம்பரேஸ்வரர் - காமாட்சியம்மன் ஆலயம். அருகில் அரசு பள்ளி உள்ளது.
கிழக்குப் பார்த்த ஆலயம். சிறிய காட்சி கோபுரம் நுழைவு. சுவாமி கிழக்கு நோக்கிய கருவரையும், அம்பாள் தெற்கு நோக்கிய கருவரையும் இணைத்த சிறிய முன்மண்டபம் கொண்டது.
சுவாமி கருவரை முன், இருபுறமும் விநாயகர், முருகன் உள்ளனர்.
ஆலயம் முன்பு நம் சிறிய நந்தியும் உள்ளது. கோஷ்ட்டத்தில் தட்சினாமூர்த்தி, லிங்கோத்பவர் மற்றும் தனி சன்டிகேஸ்வரர் சன்னதியும் உள்ள பிரகாரம் கொண்டது. பழமையான ஆலயம், புனரமைப்பு செய்து
சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்று உள்ளதால், ஆலயம் பராமரிப்புடனும், தூய்மையாகவும் நன்றாக உள்ளது.
#சுப்ராம்
https://maps.app.goo.gl/AzERHQe3Nno36ii99

2.சிவன் ஆலயம் மிக எதிரில் உள்ள தனி ஆலயம்
குத்தாலம் ஶ்ரீ பால தண்டாயுதபானி ஆலயம்

மேற்கு நோக்கிய ஆலயம். சிறிய கருவரையில் சுவாமி மேற்கு நோக்கியுள்ளார்.
ஒரு பிரகாரமும், முன் மண்டபமும் உள்ளது.

நகரின் நடுவில் பிரதான சாலையில் High School அருகில் உள்ள திருப்பத்தில் அமைந்துள்ளது.
எதிர்புறம் வடக்குப் பக்கத்தில், கிழக்கு நோக்கிய, ஸ்ரீ காமாட்சியம்மன் சமேத ஸ்ரீ ஏகாம்பரநாதர் சிவன் ஆலயம் ஒன்றும் உள்ளது.
Check out this review of Sri bala dhantayutha pani Temple on Google Maps
https://goo.gl/maps/SGx9XvP3atfn2DPK7
#ரதசப்தமி
25.01.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

வில்லியநல்லூர் -காளீஸ்வர ஸ்வாமி, குத்தாலம்மயிலாடுதுறை மாவட்டம்,

வில்லியநல்லூர் -காளீஸ்வர ஸ்வாமி, குத்தாலம்
மயிலாடுதுறை மாவட்டம், 

குத்தாலம் அருகில் காவிரி நதி பாயும் வடகரையில், பந்தநல்லூர் செல்லும் பாதையில் சிற்றூரின் ஈசான பாகத்தில் உள்ளது.5.வில்லியநல்லூர் ஸ்ரீ காளீஸ்வர ஸ்வாமி, ஸ்ரீ சிவகாமிசுந்தரியம்மன் ஆலயம்.

ஆலயம் எதிரில் குளம் உள்ளது.
கிழக்குப்பார்த்த ஆலயம். காட்சி கோபுரம் மற்றும் சுற்று சுவற்றுடன் இருக்கிறது.

முன்மண்டபத்தில் நந்தி ஆலய கருவரை மண்டபத்தின் நுழைவில் உள்ளது.
சுவாமி கிழக்குப் பார்த்தும், அம்பாள் தெற்கு நோக்கியும் தனித்தனி கருவரைகளுடன் வெளவால் நெற்றி முன் மண்டபத்துடன் இணைந்துள்ளது.
முன் மண்டபத்தில் ஈசான பாகத்தில் சதுர்முக சண்டிகேஸ்வரர் தெற்கு பார்த்து உள்ளார். மற்றும் பைரவர், சூரியன், நாகர்
வைக்கப்பட்டுள்ளனர்.
பெரிய நந்தி வாகனம் ஒன்றும் உள்ளது.
சோமஸ்கந்தர் சன்னதி மட்டும் உள்ளது. விக்ரகங்கள் இல்லை.
பிரகாரத்தில், தனி தட்சினாமூர்த்தி தெற்கு பார்த்த அமைப்பில். 
தென்மேற்கு மூலையில் விநாயகர், அடுத்து முருகர், சன்னதிகளும் உண்டு.
கோஷ்ட்ட துர்க்கை. சன்டிகேஸ்வரர் ஆலய முன்மன்டபத்தில் உள்ளார்.
முன்புறம் சுற்று சுவரில் உள்ள கல்வெட்டுகள் மூலம் 1.07. 1993 ல் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளதை அறியலாம்.
பராமரிப்பில் வழிபாட்டில் உள்ள ஆலயம்.

#தரிசனம் - #ரதசப்தமி
25.01.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
🌼

திருவேள்விக்குடிஅருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் - பரிமளசுகந்தநாயகி - திருக்கோயில்.

திருவேள்விக்குடி
அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் - பரிமளசுகந்தநாயகி - திருக்கோயில்.

 திருவேள்விக்குடி - 609 801, குத்தாலம் 
மயிலாடுதுறை-கும்பகோணம் சாலை குத்தாலம் சந்திப்பில் இருந்து வடகிழக்கு 3 கி.மி தொலைவில் அமைந்துள்ளது.
மயிலாடுதுறை - கும்பகோணம் கல்லணை சாலையில் உள்ளது.

மிகவும் பழமையான தொன்மையான கோயில்.
 இத்தலத்திலுள்ள இறைவன் கல்யாணசுந்தரேஸ்வரர், இறைவி பரிமளசுகந்தநாயகி. இறைவன் மணவாளேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். 
பார்வதியின் துயரத்தை போக்கிட்ட சிவன், இங்கு வந்து வழிபடும் கல்யாணம் ஆகாத ஆண்கள், பெண்களின் துயரத்தை போக்கி திருமணத்தை சிறப்பாக நடத்தி வைக்கிறார்.

சிவன் - பார்வதி திருமணத்துக்கான வேள்வி வளர்த்து யாகம் முதலிய ஏற்பாடுகள் நடைபெற்ற தலமாதலால் திருவேள்விக்குடி என்ற பெயர் ஏற்பட்டது. திருமணத் தடை நீக்கும் ஒரு பிரார்த்தனைத் தலமாக திருவேள்விக்குடி விளங்குகிறது.

இறைவனின் திருமணத் தலம் என்பதால் இங்கு நவக்கிரகங்கள் கிடையாது. அதற்கு பதில் ஈசனே ஈசான்ய மூலையில் அமர்ந்துள்ளார்.

பிரார்த்தனை: நவக்கிரகதோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் இவருக்கு 48 அகல் விளக்கு ஏற்றி வழிபட்டால் தோஷம் நீங்கும்.

இத்தலத்தின் தீர்த்தம் கௌதுகா பந்தன தீர்த்தம். 

நேர்த்திக்கடன்: பவுர்ணமி தினத்தில் காலை 10 முதல் மாலை 4 மணிவரை திருமண தடை நீங்க யாகம் நடக்கிறது. இந்த யாகத்தில் திருமணத் தடை உள்ள ஆண்கள், பெண்கள் இருபாலரும் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபடலாம். திருமணம் முடிந்தவுடன் தம்பதிகள் இத்தலத்திற்கு வந்து சுவாமி அம்பாளுக்கு அர்ச்சனை செய்து நன்றி சொல்லிவிட்டால் போதும்.

திருவிழா: மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம்.

தல வரலாறு - 1
1. திருவேள்விக்குடியின் அருகிலுள்ள குத்தாலத்தில் பரத மகரிஷியின் மகளாக பார்வதி அவதாரம் செய்தாள். அவள் தன்னை திருமணம் செய்ய வேண்டி பரமேஸ்வரனை நினைத்து 16 திங்கள்கிழமை விரதம் இருந்து மண்ணில் லிங்கம் பிடித்து பூஜை செய்தாள். 17வது திங்களில் ஈசன் "மணவாளேஸ்வரர்' ஆக தோன்றி, அவளைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்தார்.
சிவன் தன்னில் ஒரு பகுதி பாகத்தை சக்திக்கு அளித்த தலம் இதுதான்.

அதன்படி அம்மனுக்கு கங்கணம் கட்டி, வேள்விகள் செய்து, பிரம்மா நடத்தி வைக்க மணம் புரிந்து கொண்டார். எனவே தான் இத்தலம் "திருவேள்விக்குடி' என அழைக்கப்பட்டது. இத்தலத்தில் அருள்பாலிக்கும் அன்னையின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.. அவ்வளவு அழகு. தவத்தின் ஆரம்பத்தில் துயரத்துடன் இருந்த அன்னை, சிவன் தன்னை மணந்து கொள்கிறார் என்றவுடன் ஏற்பட்ட ஆனந்தத்தில் புன்னகை பூக்க அருள்பாலிக்கிறாள்.

தல புராணம் - 2.
சிவனை மதிக்காமல் பார்வதி ஒருமுறை நடக்க, சிவன் பார்வதியை பசுவாக பூலோகத்தில் வாழும்படி சாபமிட பார்வதி இத்தலத்தில் பசுவாக மாறி, சாப விமோசனம் பெற்ற தலம். பார்வதியுடன் கலைமகள் மலைமகள் இந்திராணி அனைவரும் பசுவாக மாறி இங்கே வாழ திருமால் இப்பசுக்களை மேய்த்துக் கொண்டு இருந்தார். பசுக்களின் பாலை இங்குள்ள சிவலிங்கத்திற்கு பூஜை செய்ய சிவன் எழுந்தருளியிருந்து பார்வதியின் சாபம் போக்கி, திருமண ஏற்பாடு செய்து இங்கேயே சடங்குகள் கங்கனதாரணம் நடைபெற்ற தலம்.

இங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருமணஞ்சேரியில் சிவன் பார்வதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் பிரம்மா தானே முன்னின்று வேள்வி செய்ததால் திருவேள்விக்குடி என பெயர் பெற்ற தலம்.

3. அகத்தியர் வாதாபியைக் கொன்றதால் ஏற்பட்ட சாபம் நீங்கப்பெற்ற தலம். 

4. அரச குமாரன் ஒருவனுக்கு நிச்சயித்திருந்த பெண்ணின் தாய் தந்தையர் திருமணத்திற்கு முன் இறந்து விட்டனர். பின் பெண் வீட்டார் இத்திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.
அரசகுமாரன் இத்தலம் வந்து இறைவனை வணங்கி, நின்ற திருமணத்தை நடத்தி வைக்கக் கேட்டான். சிவன் ஒரு பூதத்தை அனுப்பி அந்த பெண்ணை அழைத்து வந்து, திருமணம் செய்து வைத்தார்.

தல சிறப்பு:
இத்தல இறைவன் கிழக்கு நோக்கிய சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

இறைவனின் திருமணத் தலம் என்பதால் இங்கு நவக்கிரகங்கள் கிடையாது. அதற்கு பதில் ஈசனே ஈசான்ய மூலையில் அமர்ந்துள்ளார்.

தலபெருமை: சிவனின் தோழரான சுந்தரர் இங்கு வந்து அக்னி தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டு, தனது குஷ்டத்தை போக்கிகொண்டார். 

திருஞானசம்பந்தர் சுந்தரமூர்த்தி நாயனார் இருவராலும் பதிகம் பாடிப் பரவிய 276 சிவாலயங்களில் இது காவிரி வடகரைத் தலங்களில் 23வது தலம்.

இத்தல பதிகங்கள் இரண்டும், திருத்தருத்தி தலத்தோடு இணைந்து பாடப்பெற்றுள்ளன. இத்தல இறைவன் திருத்துருத்தியில் பகல் காலத்திலும், திருவேள்விக்குடியில் இரவிலும் வீற்றிருந்து அருள்பவர் என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார்.

மழைவள ரிளமதி மலரொடு தலைபுல்கு வார்சடைமேல்
கழைவளர் புனல்புகக் கண்டவெங் கண்ணுதற் கபாலியார்தாம்
இழைவளர் துகிலல்கு லரிவையோ டொருபக லமர்ந்தபிரான்
விழைவளர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே‌ - திருஞானசம்பந்தர்

இவ்வாலயம் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

#மீள்தரிசனம் - #ரதசப்தமி
25.01.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

குத்தாலம் - திருத்துருத்தி - உக்தவேதீஸ்வரர் அருள்மிகு அரும்பன்ன வனமுலைநாயகி உடனுறை உத்தவேதீஸ்வரர் திருக்கோயில், குத்தாலம் (திருத்துருத்தி).

குத்தாலம் - திருத்துருத்தி - உக்தவேதீஸ்வரர்
அருள்மிகு அரும்பன்ன வனமுலைநாயகி உடனுறை உத்தவேதீஸ்வரர் திருக்கோயில், குத்தாலம் (திருத்துருத்தி).

அமைவிடம்: மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், மயிலாடுதுறையில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் குத்தாலம் உள்ளது.
குத்தாலம் (திருத்துருத்தி) உத்தவேதீஸ்வரர் கோயில், திருமணத் தடைகளை நீக்கும் புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலமாகும் (காவிரி தென்கரை 37-வது தலம்). சிவபெருமான் பார்வதியை மணந்த தலம், இங்கு சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவர் உத்தவேதீஸ்வரர் (சொன்னவாறு அறிவார்) என்றும், அம்மன் அரும்பன்ன வனமுலைநாயகி (பரிமள சுகந்தநாயகி) என்றும் அழைக்கப்படுகின்றனர். 
கோயில் சிறப்பம்சங்கள்:
திருமணத்தடை நீங்கும் தலம்: பார்வதி தேவி சிவனை மணக்க வேண்டி, இங்கு மணலில் லிங்கம் அமைத்து தவம் செய்த இடம்..திருமணத் தடைகள் நீங்க இங்கு வந்து வழிபடுவது சிறப்பு.

கோயில் அமைப்பு
ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் அம்மன் சன்னதி முன் உத்தால மரம் தனி அமைப்புடன் அமைந்துள்ளது.
கொடிமரம், பலிபீடம், நந்தியைக் காணலாம். கொடிமரத்தில் கொடிமர விநாயகர் உள்ளார். நந்தியைக் கடந்து உள்ளே செல்லும்போது இடப்புறம் அம்மன் சன்னிதி உள்ளது. அதற்கடுத்து உள்ளே மகாலட்சுமி சன்னிதி, சபாநாயகர் சன்னிதிகள் உள்ளன. எதிரில் உற்சவமூர்த்திகள் உள்ளனர். கருவறை கோஷ்டத்தில் அடிமுடிகாணா அண்ணலும், தட்சிணாமூர்த்தியும் உள்ளனர். கருவறை வெளிச்சுற்றில் நவக்கிரகம், மங்களசனீஸ்வரர், பைரவர், விசுவநாதர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன், சூரியன் ஆகியோர் உள்ளனர். அருகே லிங்கத் திருமேனிகள் உள்ளன. அடுத்து 63 நாயன்மார்கள் உள்ளனர். திருச்சுற்றில் வலம் வரும்போது சண்டிகேஸ்வரர் சன்னிதி காணப்படுகிறது.
சுந்தரர் தோல் நோய் நீக்கியத்தலம்.
ஆலயம் வாயு மூலையில், அம்மன் சன்னதி பின்புறம், சுந்தரருக்கு மண்டபத்துடன் தனி சன்னதி உள்ளது. எதிரில் சிறிய தீர்த்தக்குளம் உள்ளது.
சிறப்பு பெயர்கள்: முற்காலத்தில் 'திருத்துருத்தி' என்று அழைக்கப்பட்டது. 'துருத்தி' என்றால் ஆற்றுக்கு நடுவில் உள்ள மேடான பகுதி.
வழிபாடு: இங்குள்ள விநாயகர் 'துணை வந்த விநாயகர்' என அழைக்கப்படுகிறார்.

இந்த ஆலயம் 1000 ஆண்டுகள் பழமையானது மற்றும் சோழர் காலத்தைச் சேர்ந்தது. இத்திருக்கோயில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர்ச் சோழ மன்னர்களால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.
தலபுராணம் வரலாறு: சிவபெருமான் பார்வதியை மணக்க கைலாயத்திலிருந்து புறப்படும்போது, உத்தால மர நிழலில் வந்ததாகவும், இங்கிருந்தே கைலாயம் சென்றதாகவும் வனமாக இருந்த காரணத்தினால் `உத்தாலம்’ என்று அழைக்கப்பட்ட பகுதி தற்போது குத்தாலம் என வழங்கப்படுகிறது. பூவுலகில் - பரத முனிவரின் தவச்சாலையில் வேள்வித் தீயிலிருந்து அவதரித்தாள். சிவச் சிந்தனையிலேயே வளர்ந்துஅவளின் பூஜையால் மகிழ்ந்த சிவப்பரம்பொருள், காலம் கனிந்ததும் உத்தால மரத்தின் கீழ் தோன்றி அவளுக்கு அருள்புரிந்தார். அம்பிகையைத் திருக்கரம் பற்றினார். `அமிர்த முகிழாம்பிகை’ என்ற அரும்பன்ன வனமுலையாளுக்கும், உத்தவேதீஸ்வர சுவாமிக்கும் திருக்கல்யாணம் நிகழ்ந்தது இந்தத் தலத்தில்தான்.
அம்பிகைக்குத் தான் அளித்த வாக்கின்படி, சொன்னவண்ணம் செய்து காட்டிய இறைவன் ‘சொன்னவாறு அறிவார்’ என்கிற திரு நாமத்துடன் இத்தலத்தில் நிலைத்திருக்கிறார். இதுதான் இவ்வூருக்கு பிரதான சிவாலயம். 

இத்தலத்தில் ஸ்ரீ சௌந்திர நாயகி ’ஸ்ரீ சக்கர பீட நிலையாய நம’ என்று ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம வடிவில் அமைந்துள்ளார். ஸ்ரீபரிமளசுகந்த நாயகி ’பிந்து தர்பண விந்துஷ்டாயின நமஹ’ என்ற வடிவிலும் அமைந்துள்ளார். பரத மகரிஷி தமக்குக் குழந்தைப்பேறு வேண்டி செய்த யாகத்தில் தோன்றியவர் ஸ்ரீ பரிமள சுகந்த நாயகி.
பெயர்க்காரணம்
தல விருட்சம் உத்தால மரம். இதைக் கொண்டு உத்தால வனம் எனப்பட்டது மருவி குத்தாலம் ஆயிற்று.
வழிபட்டோர்
அம்பாள், சிவபெருமானை வழிபட்டுத் திருமணம் செய்த திருத்தலம்
அக்கினி, வருணர், காளி, சூரியன், மன்மதன், காசிபர் உட்பட ஏழு முனிவர்கள் (காசிபர், ஆங்கிரசன், கவுதமர், மார்க்கண்டேயர், வசிட்டர், புலத்தியர், அகத்தியர்)
பரிகாரத் திருத்தலம், தல விருட்சம் & தீர்த்தம்: உத்தால மரம் மற்றும் காவிரி.
குடமுழுக்கு : இக்கோவிலில் கடந்த 1960 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது. அதன் பின்பு 62 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் மே மாதம் 8 ஆம் தேதி 2022 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.

#மீள்தரிசனம் - #ரதசப்தமி
25.01.2026 #சுப்ராம்தரிசனம்..
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

எதிர்கொள்பாடி:மத்யனேசுவரர் என்ற ஐராவதீசுவரர் ஆலயம். மேலைத்திருமணஞ்சேரி. நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம்.

எதிர்கொள்பாடி:
மத்யனேசுவரர் என்ற ஐராவதீசுவரர் ஆலயம். மேலைத்திருமணஞ்சேரி. 
நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம்.

தற்போது மேலத் திருமணஞ்சேரி என்று அழைக்கப்படும் எதிர்கொள்பாடி எனும் இத்தலம், மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் குத்தாலம் சந்திப்பில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் திருமணஞ்சேரி மற்றும் வேள்விக்குடி இரு பாடல் பெற்ற தலங்களுக்கு அருகே அமைந்துள்ளது. 

தல இறைவன் மத்யனேசுவரர் எனும் ஐராவதேசுவரர். இறைவி திருநாமம் "சுகந்த குந்தளாம்பிகை' என்ற "மலர் குழல் நாயகி' என்பதுமாகும்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் , சுந்தரமூர்த்தி நாயனாரால் பதிகம் பாடிப் பரவு பெற்ற 24ஆவது காவிரி வடகரைத் தலம்.  சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

மேற்கு பார்த்த ஆலயம் 3 நிலை இராஜகோபுரம் உடையது.  சுவாமி மேற்கு பார்த்தும், அம்பாள் தெற்கு நோக்கியும் தனித்தனி கருவறைகளில் அமைக்கப்பட்டுள்ளது. முன் மண்டம், உள் மண்டபம் உள்ளது.
ஆலயம் முன்புறம் நந்தியும், வலதுபுறம் விநாயகர், இடதுபுறம் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர். மேலும், சுவாமி சன்னதி கோஷ்டத்தில் தாமரை பீடத்தின் மீது துர்க்கை காட்சி தருகிறாள்.  மகாலட்சுமி, ஞானசரஸ்வதி, பைரவர், சனீஸ்வரர், துணைவந்த விநாயகர் சந்நிதிகளும் உள்ளன.
பரத முனிவர் வழிபட்ட பரதலிங்கம் பிரகாரத்தில் இருக்கிறது. 

'வைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்மின் மனத்தீரே! அத்தர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே' என்று பாடி அனைவரையும் சுந்தரர் இந்த கோயிலுக்கு அழைக்கிறார். அந்த அழைப்பை நாம் ஏற்றால் தோழனின் மகிழ்ச்சியை காணும் சிவன் நமது குறைகளை போக்கி அருள்புரிவார்.

தல வரலாறு:

1. பரத்வாஜ மகரிஷி தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினார். அவருக்கு பார்வதியே குழந்தையாகப் பிறந்தாள். மணப்பருவம் அடைந்த போது, சிவனிடம் அவளை மணந்து கொள்ளும்படி வேண்டினார் மகரிஷி. சிவனும் அம்பிகையை மணக்க பூலோகம் வந்தார். வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வெளியே வந்து வரவேற்பது நம் கலாசாரம்.  பரத்வாஜரும் மாப்பிள்ளையாக வந்த சிவனை பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்றார். பரத்வாஜரின் மரியாதையை ஏற்ற சிவன், அவரது வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளினார்.  பரத்வாஜர் எதிர்கொண்டு அழைத்ததால் தலத்திற்கு எதிர்கொள்பாடி என்றும், சுவாமிக்கு திருஎதிர் கொள்பாடி உடையார் என்றும் பெயர் உண்டானது. 

2. திருவேள்விக்குடியில் பரத முனிவர் சிவபார்வதி திருமணத்தை நடத்தி வைத்தார். மணம் முடிந்ததும் தான் குடியிருக்கும் மேல திருமணஞ்சேரிக்கு வர இறைவனுக்கு அழைப்பு விடுத்தார். இறைவனும் ஒப்புக் கொண்டார். இறைவனும், அம்மையும் வருகிறார்கள் என்றால் கேட்கவா வேண்டும். பிரமாதமான வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து விட்டார். மணக்கோலத்தில் வந்த தெய்வத்தம்பதியினரை பரதமுனிவர் எதிர்கொண்டு அழைத்தார். இதனால் இத்தலம் "எதிர்கொள்பாடி' என அழைக்கப்பட்டது. தற்போது "மேலக்கோயில்' என்று அழைக்கிறார்கள்.

3. சிவனுக்கு அணிவிக்கப்பட்ட தாமரை மலரை கைகளில் ஏந்தியபடி தேவலோகத்தில் துர்வாச முனிவர் வந்தார். அசுரர்களை வென்ற இந்திரனுக்கு பரிசாக அளித்தார். இந்திரன் அதை அலட்சியப்படுத்தினான். இதனால் கோபம் கொண்ட முனிவர் பாண்டிய மன்னன் எறியும் கைவளையால் இந்திரனின் முடி சிதறுமாறு சாபமிட்டார். பதறிப்போன இந்திரன் மன்னிப்பு கேட்க, இந்திரனின் தலைக்கு வருவது முடியோடு கழியும் என்று சாபவிமோசனம் தந்தார்.

தாமரை மலரை புறக்கணித்ததில் இந்திரனின் ஐராவத யானைக்கும் பங்குண்டு. துர்வாசரால் சபிக்கப்பட்ட யானை பூமிக்கு வந்து பல இடங்களில் சுற்றி திரிந்தது. பல தலங்களில் பூஜையும் செய்தது. கடைசியாக இத்தலத்திற்கு வந்து இறைவனை பூஜித்து துயரம் நீங்கியது. எனவே இங்குள்ள இறைவன் "ஐராவதேஸ்வரர்' என அழைக்கப்படுகிறார். 

இந்திரனும் இழந்த பொன், பொருள், பதவியை பெற்றான்.

ஐராவதம் என்னும் இந்திரனின் யானை வழிபட்டதால் ஐராவதேஸ்வரர் என்ற பெயர் பிற்காலத்தில் உண்டானது.
ஐராவதம் யானை வழிபட்டதால் இங்குள்ள கர்ப்பக்கிரகம்   யானை சுற்றும் அளவிற்கு மிகவும் பெரிதாக உள்ளது.

பிரார்த்தனை:

பரத்வாஜ முனிவர் நல்ல மருமகன் வேண்டி பிரார்த்தனை செய்ததால், மகளைப் பெற்ற தந்தைகள் நல்ல மருமகன் வேண்டுவோர் இத்தலத்தில் வழிபடுகின்றனர்.  

நல்ல குணம் படைத்த மருமகன் அமையவும், அமைந்த மருமகன் திருந்தவும் பெண்ணின் தந்தை வழிபட வேண்டிய தலம் மேலத்திருமணஞ்சேரி என்னும் எதிர்கொள்பாடி ஆகும்.

 இத்தலத்தில் அருளும் ஐராவதேஸ்வரர்,  சிறந்த மருமகன் கிடைக்க அருள் செய்கிறார். பெண்ணைப் பெற்றவர்கள் மகளுக்கு வரன் பார்க்கும் முன்பு, நல்ல மாப்பிள்ளை அமைய இங்கு மகளை அழைத்து வந்து. சிவனுக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் அணிவித்து பூஜை செய்கின்றனர். மாப்பிள்ளை வீட்டாருடன் மனக்கசப்பு உள்ளவர்களும் இங்கு பூஜை நடத்துகின்றனர். மகளின் வாழ்க்கை நன்றாக அமைய பெற்றோர் வழிபட வேண்டிய தலம் இது.
சிறப்பு:
திருமணம் தடைநீக்கும் ஆலயம்.
திருமணஞ்சேரி ஆலயத்துடன் இணைந்து தரிசிக்க வேண்டிய ஆலயம்.
திருமண வரவேற்பை இத்தலத்தில் நடத்தினால், தம்பதியர் நலம் பலபெற்று வாழ்வர் என்பது நம்பிக்கை.
தகவல்கள் - வலைதளம்  நன்றி🙏🏻

#மீள்தரிசனம் - #ரதசப்தமி
25.01.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

திருமணஞ்சேரி அருள்மிகு கோகிலாம்பாள் சமேத உத்வாகநாதசுவாமி திருக்கோவில்

திருமணஞ்சேரி
அருள்மிகு கோகிலாம்பாள் சமேத உத்வாகநாதசுவாமி திருக்கோவில் 

சிவபெருமான் பார்வதி திருமணம் நடந்த தலம்

மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் திருமணஞ்சேரி. இறைவன் திருநாமம் உத்வாக நாதர். இறைவியின் திருநாமம் கோகிலாம்பாள். இத்தலத்து இறைவி கோகிலாம்பாள், கருவறையில் மணக்கோலத்தில், மணப்பெண்ணுக்குரிய நாணத்துடன் அமர்ந்து உள்ளார். திருமணஞ்சேரி என்றால் திருமணம் நடந்த இடம் என்று அர்த்தம். பூலோகத்தில் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நிகழ்ந்த இடம்தான் இந்த திருமணஞ்சேரி. சிவபெருமானுக்கு பார்வதி தேவியை கன்னிகாதானம் செய்து திருமணத்தை நடத்தி வைத்தவர் மகாவிஷ்ணு. திருமணத்திற்கு புரோகிதராக இருந்தவர் பிரம்மா..
தல புராணம்
சிவ பார்வதி திருமண நிகழ்ச்சிகள் நடந்த தலங்கள்

ஒரு சமயம் பார்வதி தேவி சிவபெருமானிடம், நாதா! தங்களை பூலோக முறைப்படி திருமணம் செய்ய என் மனம் விரும்புகிறது . அவ்விருப்பத்தை நிறைவேற்றி வைக்குமாறு வேண்ட சிவனும் சிறிது காலம் பொறுத்திருக்கும்படி கூறினார் .

தம் எண்ணம் நிறைவேற வெகுகாலம் ஆகுமென்ற எண்ணத்தில் பார்வதி சிவனிடம் அலட்சியமாக நடந்து கொள்ள, அதை கவனித்த சிவபெருமான்,நான் உன் விருப்பத்திற்கு சம்மதித்த போதும் காலம் கடக்கிறதென அலட்சியமாக நடப்பதால் எம்மைப் பிரிந்து நீ பூலோகத்தில் பசுவாக பிறப்பாய் என கட்டளையிட்டார் .

அம்பிகைக்கு பசு சாபம் கொடுக்கப்பட்ட தலம் தேரழந்தூர். திருமால் பசு மேய்ப்போனாக உருவெடுத்து, பசுக்களை பராமரித்து வந்த தலம் கோமல். ஈசனின் சாபத்தால் அம்பிகை பசுவாகி சிவனின் மீது பக்தி கொண்டு உலவி வந்தார் .அப்படி உலவி வந்தபோது, ஒரு இடத்தில் இருந்த லிங்கத்தின் மீது தினம் பாலைப் பொழிந்து அபிஷேகித்து வந்தார் . பசு உருவில் இருந்த அம்பிகையின் பாதக்குளம்புகள் பட்டு ஈசனின் உடல் மீது தழும்புகள் உண்டான ஊர் 'திருக்குளம்பம்'. பின் திருவாடுதுறையில் சிவனால் பசுவுக்கு முக்தி அளிக்கப்பட்டது.

திருத்துருத்தி எனப்படும் குத்தாலத்தில் பரத மகரிஷி பிரமாண்ட யாகவேள்வி நடத்த அந்த யாக வேள்வியில் சிவபெருமானின் அருளால் அம்பிகை தோன்றினார். தெய்வீகப் பெண் ஒருவர் வேள்வியில் வர ஆச்சர்யப்பட்டு பரத மகரிஷி நிற்க, சிவபெருமான் தோன்றி,மகரிஷியே வேள்வியில் வந்தவர் உமாதேவியே! அவரை உமது பெண்ணாக ஏற்று எமக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்யுங்கள். நான் எதிர் கொண்டு வருவேன் எனக்கூறி மறைந்தார் . இறை உத்திரவுப்படி திருமண யாகங்கள் புரிந்து மங்கள ஸ்நானமும் கங்கணதாரமும் செய்த இடம், திருவேள்விக்குடி. பின் பாலிகை ஸ்தாபனம் குருமுலைப்பாலையில் செய்யப்பட்டது.

அதன் பின்னர் மணமகளான உமாதேவியை அழைத்துக்கொண்டு சிவனை தேடி பரத மகரிஷி வர, இறைவன் மாப்பிள்ளை கோலத்தில் எதிர் கொண்டு காட்சி கொடுத்த இடமே 'திரு எதிர்கொள்பாடி' என அழைக்கப்படுகிறது.

பின் மணமகனான சிவனையும் உமாதேவியையும் அழைத்துக்கொண்டு, பூலோக முறைப்படி கல்யாண வைபவம் நடந்த இடம் திருமணஞ்சேரி. திருமணத்தைகாண விண்ணவர்கள், தேவர்கள், நவகிரகங்கள் வந்தனர் . சிவபெருமானும், பார்வதி தேவியும் கைகோர்த்தபடி திருமணக் கோலத்தில் காட்சி தருவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

திருமண தடை நீக்கும் பரிகாரத் தலம்
திருமணஞ்சேரி நித்திய கல்யாண ஷேத்திரம் ஆகும். இங்கு சிவன் ஸ்ரீகல்யாண சுந்தரராக, ஸ்ரீ உத்வாக நாதராக எழுந்தருளி தன்னை நாடி வந்தோர் திருமணத்தை நடத்தி வைக்கிறார். அம்பிகை எப்படி தாம் விரும்பியவாறு சிவனை மணம் புரிந்து கொண்டாரோ, அதுபோல இங்கே வணங்குவோர்க்கு அவரவர் விருப்பம் போல திருமணம் நடைபெறுகிறது. திருமணஞ்சேரி கோவிலை தரிசித்தால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும். நல்ல வரன் கிடைத்து, சிறப்பான இல்வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம்.

கோவில் தரிசன நேரம்- காலை 7.30 மணி முதல் பகல் 01.30 மணிவரை மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணிவரை
திருமண பூஜை மேலே குறிப்பிட்ட நேரத்தில் தொடர்ந்து நடைபெறும்.

பரிகாரம் பூசை:
நீண்ட நாள் திருமணம் தடை பெற்றவர்கள் இத்திருக்கோவில் கல்யாண பூஜையில் கலந்து கொண்டால் 3 மாதத்தில் திருமணம் நடைபெறும்.

திருமண பூஜையில் கலந்துகொள்ள திருக்கோவில் நிர்வாகம் சார்பாக திருக்கோவில் அலுவலகத்தில் ரூபாய் 200 செலுத்தி விட்டால் (2 மாலை, 2 தேங்காய், பூ, மஞ்சள், குங்குமம், கல்கண்டு, எலுமிச்சம் பழம், ) அடங்கிய பை வழங்கப்படும், பூஜை பை வாங்கி கொண்டு திருக்கோவில் உள்ளே செல்லவேண்டும் வெளியில் எந்தப் பொருளும் வாங்கத்தேவையில்லை. திருக்கோவில் உள்ளே சென்றதும் திருக்கோவில் கொடிமரம் அருகில் இருக்கும் விநாயகரை தரிசனம் செய்ய வேண்டும் விநாயகரை வணங்கிவிட்டு உள்ளே சென்றதும் திருமண கோலத்தில் உள்ள உற்சவர் சுவாமிக்கு எதிரில் உள்ள மண்டபத்தில் திருமணம் ஆகாத ஆண்கள் திருமணம் ஆகாத பெண்கள் என தனி தனியாக அமர வேண்டும் பூஜை முடிந்தவுடன் மூலவர் அம்பாளை தரிசனம் செய்ய வேண்டும்
பூஜை முடிந்தவுடன் கோவில் அர்ச்சகர் மாலை, எலுமிச்சம் பழம், பூஜை செய்த பூஜை பை நம்மிடம் வழங்குவார்

பூஜை முடிந்து மறுநாள் வீட்டிற்கு வந்தவுடன் காலை குளித்தவுடன் வீட்டில் விளக்கு ஏற்றி பூஜை செய்த மாலையை அணிந்து சாமி கும்பிடவேண்டும் சாமி கும்பிட்டுவிட்டு மாலையை மஞ்சள் பையில் வைத்து பூஜை அறையில் பத்திரமாக வைக்கவேண்டும் மற்றும் பூஜை செய்த எலுமிச்சம் பழத்தை வெறும் வயிற்றில் உப்பு சர்க்கரை சேர்க்காமல் திருமணபூஜை செய்தவர்மட்டும் குடிக்க வேண்டும் மேலும் பூஜை செய்த விபூதி குங்குமம் பூஜை செய்தவர் மட்டும் தினமும் அணிந்துகொள்ளவேண்டும்
திருமணம் ஆனவர்கள் தன் துணையுடன் மீண்டும் திருக்கோவிலுக்கு வந்து மாலையை கோவிலில் செலுத்தவேண்டும்

குழந்தை பேறு தடைப்பட்டவர்கள் தொடர்ந்து 3 அமாவாசை அன்று இராகு பகவானுக்கு நடைபெறும் சிறப்பு பூஜையில் பங்குபெற்றால் வெகு விரைவில் குழந்தை பேறு உண்டாகும்

மேலும் திருக்கோவிலுக்கு அருகில் ஆங்காங்கே வியாபாரிகள் மஞ்சள் குங்குமம் வாங்க வேண்டும் என்பார்கள் நீங்கள் எந்த பொருளும் வாங்க தேவையில்லை ஆலயத்தில்.ரூபாய் செலுத்தி Ticket வாங்கினால் மட்டும் போதும்.

இத்திருக்கோவிலுக்கு மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் ஆகிய ஊர்களில் இருந்து குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே பேருந்து வசதிகள் உண்டு

குத்தாலம் ஊருக்கு மயிலாடுதுறை கும்பகோணம் தஞ்சாவூர் ஆகிய ஊர்களில் இருந்து நிறைய பேருந்து வசதிகள் உள்ளன.

மேலும் குத்தாலம் ஊரில் இருந்து ஆட்டோ மற்றும் கார்களில் 1 நபருக்கு ரூபாய் 100-150 (விசாரித்து ) செலுத்தி திருக்கோவிலை அடையலாம். திருமணஞ்சேரி மிகவும் சிற்றூர். பெரிய வசதிகள் கிடையாது. கழிவரை குளியல் அறை, ஆலயம் முன்பு உள்ள கட்டிடத்தில் உள்ளன.
மிக அருகில் எதிர்கொள்பாடி பாடல் பெற்ற தலம் உள்ளது தரிசனம் செய்து வாருங்கள். மேலும், திருவேள்விக்குடி, குத்தாலம் ஊர்களும் மிக அருகில் சில கி.மீ.தூரத்திலேயே இருப்பதால், சேர்த்து தரிசனம் செய்யலாம்.
நன்றி🙏🏻

#மீள்தரிசனம் - #ரதசப்தமி
25.01.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

திருப்புகழூர் அருள்மிகு கருந்தாள் குழலியம்மை உடனுறை அக்கினிபுரீஸ்வரர் நாயன்மார்தலம் திருமுறைத்தலம், திருப்புகழ்த்தலம்

திருப்புகழூர் அருள்மிகு கருந்தாள் குழலியம்மை உடனுறை அக்கினிபுரீஸ்வரர் நாயன்மார்தலம் திருமுறைத்தலம்,  திருப்புகழ்த்தலம் தலம்: சோழவள நாட்டில் ...