#வழிமொழிதிருவிராகம்
பதிவு : 5 பாடல் 5
👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.
🌬️2. இப்பதிவுகளில் உள்ள தேவாரப் பாடல்களை குறைந்தபட்சம் இரண்டு முறைகளாவது வாய் விட்டு உச்சரித்து படித்தல் அவசியம்.
📚3. இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே.
🌀ஞானசம்பந்தர் அருளிய அற்புத இசைத் தமிழ் பதிகங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.
இத்தகைய பாடல்கள் தமிழரின் இசை பொக்கிஷம்:
#திருவிராகம்,
🅾️ #வழிமொழிதிருவிராகம்
⏺️இலக்கணம் :
⏏️குற்றெழுத்துப் பயின்று வரும் முடுகிய ஓசையுடையதாய் அடி முதற்சீரின் இரண்டாம் எழுத்து சீர்தோறும் ஒன்றி வழியெதுகையால் வரத் தொடுப்பது இவ்வகையாம்.
(முடுகிய என்பது வேகமாக ஓடும் தாள அமைப்பு எனக் கொள்ளலாம்)
🔸இதன் ஓசை அமைப்பில் பாடல்
தனனதன தனனதன தனனதன
தனனதன தனனதனனா
என அமைகிறது.
🧿இப்பதிகத்தின் திருக்கடைக்காப்பில் (இறுதிப் பாடலில்) திருஞானசம்பந்தர் 'வழிமொழிகள் மொழி தகையவே' என்று குறிப்பிட்டு சிறப்பிப்பதாலே இந்தப் பதிகம் வழிமொழி திருவிராகம் என்னும் பெயர் சூட்டப்பட்டது.
🔵
🌟ஞானசம்பந்தர் அருளிய அற்புத இசைத் தமிழ் பதிகங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.
🔹சம்பந்தர் தேவாரம் மூன்றாம் திருமுறை: தலம்: திருப்பிரமபுரம்:
பதிகம்: 325 (67)
பாடல்: 1-12 (714-725)
இந்தப் பதிகம் 12 பாடல்கள் கொண்டது.
🌟சீர்காழிப்பதியின் 12 பெயர்கள் வந்த வழியை - வரலாற்றிணை - விளக்கத் தக்க வகையில் அமைந்துள்ளது.
🌀சாதாரி என்ற பண் வகையினது.
🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐
🗣️வாய்பேச்சுக் கோளாறு இன்றி நல்ல உரையாடல், குரல் வளம் நிச்சயம் கிடைக்க இப்பதிகம் உதவும்.
👱குழந்தைகளுக்கு அவசியம் கற்றுக்கொடுக்க வேண்டிய பாடல்
📚தமிழ் மொழி வளம் உயர்வு உணர்ந்து அறிய உதவும் அற்புத பதிகம் இது.
பாடல் : 5
💠தோணிபுரம் : அர்ச்சுனன் வழிபட்ட இடம்.
பிரளய காலத்தில் தோனி போல் விளங்கி காத்ததால் இத்தலம் தோணிபுரம் என விளங்கிற்றது.
✳️'ண' சீர் அமைப்பில் உள்ள பாடல்.
பாடல். 718
ஆணியல்பு காணவன வாணவியல் பேணியெதிர் பாணமழைசேர்
தூணியற நாணியற வேணுசிலை பேணியற நாணி விசயன்
பாணியமர் பூண அருள் மாணுபிர மாணியிடம் ஏணிமுறையில்
பாணியுல காளமிக ஆணின்மலி தோணிநிகர் தோணிபுரமே.
-03.325:05 (718)
பொருள் :
ஈசன், வீரம் மிகுந்த ஆண் மகன் என்னும் தன்மையில், யாவரும் காணுமாறு காட்டில் வாழும் வேட்டுவ வடிவத்தைக் கொண்டு, விசயனின் அம்புறாத் துணியும் வில்லின் நானும் அறுந்து விழுமாறு செய்து, வளைந்த மூங்கிலால் வடிவமைத்த வில்லையும் துணித்தவர். இவற்றால் நாணம் உற்ற விசயன் மற்போர் செய்ய, அவனுக்கு அருள் புரிந்தவர் அவர். அத்தகைய தெய்வத் தன்மை வாய்ந்தவரின் இடமாவது, பிரளய காலத்தில் நீர் சூழ்ந்து உலகம் யாவும் மூழ்கும் தன்மை கண்டாலும் ஆற்றல் பெருகுமாறு தோணியென விளங்கி, அழியாமை காணும் தோணிபுரமே.
விளக்கம்:
ஆண் இயல்புகாண ( விசயனுடைய ) வீரத்தன்மையை உமைகாண.
வன வாணஇயல் - வனத்தில் வாழ்பவர்களாகிய வேடர் வடிவம்.
பேணி - கொண்டு,
எதிர். அவனுக்கு எதிராக. ( போர் தொடங்கி )
பாணமழை - ( அவன் சொரியும் ) மழைபோன்ற அம்புகளும்.
சேர் - அவ்வம்புகள் தங்கிய.
தூணி - அம்பறாத் தூணியும்.
அற - நீங்கவும்.
நாணி அற - வில்நாண் அறுபடவும். வேணுசிலை பேணி - அவனது மூங்கிலால் ஆகிய வில்லின் வளைவு. அற - நீங்கவும்.
விசயன் - அவ்வர்ச்சுனன்.
நாணி - நாணமுற்று.
பாணி அமர் பூண - கையால் அடித்துச் செய்யும் மற்போரைச் செய்ய வர.
அருள் மாணு - அவனுக்கு மிகவும் அருள் புரிந்த,
பிரமாணி இடம் - கடவுட்டன்மைக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் சிவபெருமானின் இடம்.
ஏணி முறையில் - மிக்கது என்ற முறையினால்.
பாணி - பிரளயகால வெள்ளமானது. உலகு ஆள - உலகம் முழுதும் மூழ்கச் செய்ய.
மிக ஆணின் - அதனின் மிகவும் பொருந்திய ஆண்மை வலிமையினால். மலி - சிறந்த.
தோணி நிகர் - அதனைக்கடக்கவல்ல தோணியை யொத்த ( தோணிபுரம் ஆம் ).
🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪
🎶மிக அற்புதமான பாடல். மிக மிக முக்கியமானது.
🌟இப்பாடலை திரும்பத் திரும்ப ஒதிக்கொண்டுவந்தால் நாவிற்கும் உள்ளத்திற்கும் அருமருந்து.
⏺️சந்தப்பாக்களின் சீர்களில் ஒவ்வொர் உயிரும் ஓரசை என்பதால் ஓசை நயமும் தாளமும் நிறைய அமைத்துள்ளதை நாம் சிந்திக்க வேண்டும்.
⏺️ ஒவ்வொறு பாடலிலும் சீர்காழி பதியின் பெயரில் வரும் ஒரு தமிழ் எழுத்தை பாடல் முழுதும் சிறப்புடன் சீர் அமைத்துள்ளது மிகவும் அற்புதமானது.
🔷இது போன்ற சந்தப் பாடல்களை கற்றுணர்ந்து அருணகிரியார் தம்முடைய திருப்புகழ் பாடல்களை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
🔹திருஞானசம்பந்தப்பிள்ளையாரை முருகனின் திரு அவதாரமாகக் கொண்டவர் அருணகிரிநாதர். இதைக் குறிப்பிட்டு தம்பாடல்களில் சிறப்பு செய்துள்ளார்.
✔️இராமலிங்கசுவாமிகளும் இக்கருத்தை ஏற்கிறார்.
💠பிற்கால இசைத் தமிழ் இலக்கியத்தின் அடிப்படையாக அமைந்தப் பாடல்கள்
♦️அருட் செல்வர் தமிழ் விரகனார், திருஞானசம்பந்தரின் இறையருள் பெற்ற இப் பதிகப் பாடல்களை போற்றி பரவுதல் செய்வோம்.
📚பாடல்,பொருள்,விளக்கம் பல நூல், தரவுகளிலிருந்து தொகுத்துத் தரப்பட்டுள்ளது.
🛡️சிந்தனைக்கும் எட்டாத ஞானசம்பந்தரின் அற்புதத் தமிழின் இசைப்பாடல் சிறப்பை உணருவோம். இதுவே, தமிழரின்பொக்கிஷம்.
🙇♂️நன்றி🙏
🛐💚🕉️🧡☸️💜⚛️💙🔯💛🙏🙆🏼🙇🏼♂️
என்னமும் தகவல் ஆக்கமும், தொகுத்தும் வழங்குவது:
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾
#திருமுறைகளில்_தமிழமுதம்
#சம்பந்தர்இசைஅமுதம்
No comments:
Post a Comment