#சம்பந்தர்இசைஅமுதம்
#வழிமொழிதிருவிராகம்
பதிவு : மூன்று பாடல் 3.
🙏🙇♂️அன்பு வேண்டுகோள்:🙇♂️🙏
🗣️வாய்பேச்சுக் கோளாறு இன்றி நல்ல உரையாடல், குரல் வளம் நிச்சயம் கிடைக்க இப்பதிகம் உதவும்.
👱குழந்தைகளுக்கு அவசியம் கற்றுக்கொடுக்க வேண்டிய பாடல்
📚தமிழ் மொழி வளம் உயர்வு உணர்ந்து அறிய உதவும் அற்புத பதிகம் இது.
👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.
🌬️2. இப்பதிவுகளில் உள்ள தேவாரப் பாடல்களை குறைந்தபட்சம் இரண்டு முறைகளாவது வாய் விட்டு உச்சரித்து படித்தல் அவசியம்.
📚3. இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே.
🛐🙏
🌀ஞானசம்பந்தர் அருளிய அற்புத இசைத் தமிழ் பதிகங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.
இத்தகைய பாடல்கள் தமிழரின் இசை பொக்கிஷம்:
#திருவிராகம், #வழிமொழிதிருவிராகம்,
#வண்ணகம் #முடுக்கியல் #அடுக்கியல்
இவை பற்றி முன்பதிவுகளில் சிந்தித்தோம்.
#வழிமொழிதிருவிராகம் பதிகப் பாடலையும் அதன் விளக்கங்களயும், சிறப்புகளையும் தொடர்ந்து இப்பதிவில் பார்ப்போம்.
🅾️#வழிமொழிதிருவிராகம்:
⏺️இலக்கணம் :
⏏️குற்றெழுத்துப் பயின்று வரும் முடுகிய ஓசையுடையதாய் அடி முதற்சீரின் இரண்டாம் எழுத்து சீர்தோறும் ஒன்றி வழியெதுகையால் வரத் தொடுப்பது இவ்வகையாம்.
(முடுகிய என்பது வேகமாக ஓடும் தாள அமைப்பு எனக் கொள்ளலாம்)
🔸இதன் ஓசை அமைப்பில் பாடல்
தனனதன தனனதன தனனதன
தனனதன தனனதனனா
என அமைகிறது.
🧿இப்பதிகத்தின் திருக்கடைக்காப்பில் (இறுதிப் பாடலில்) திருஞானசம்பந்தர் 'வழிமொழிகள் மொழி தகையவே' என்று குறிப்பிட்டு சிறப்பிப்பதாலே இந்தப் பதிகம் வழிமொழி திருவிராகம் என்னும் பெயர் சூட்டப்பட்டது.
🔵
🌟ஞானசம்பந்தர் அருளிய அற்புத இசைத் தமிழ் பதிகங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.
🔹சம்பந்தர் தேவாரம் மூன்றாம் திருமுறை: தலம்: திருப்பிரமபுரம்:
பதிகம்: 325 (67)
பாடல்: 1-12 (714-725)
இந்தப் பதிகம் 12 பாடல்கள் கொண்டது.
🌟சீர்காழிப்பதியின் 12 பெயர்கள் வந்த வழியை - வரலாற்றிணை - விளக்கத் தக்க வகையில் அமைந்துள்ளது.
🌀சாதாரி என்ற பண் வகையினது.
🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐
பாடல் :3. சீர்காழி பதியின் 12 பெயர்களில் ஒன்றான புகலி பற்றியது:
🛐புகலி :
சனகாதி முனிவர்களுக்கு அருள குருமுகமாய் அருளிய இடம். தேவர்கள் புகலிடமான இடம்.
🌟புகலி என்று வருவதால் "ல' கர சீரில் பாடல் வருமாறு அமைத்துள்ளார்.
பாடல் : 716
பகல்ஒளிசெய் நகமணியை முகைமலரை
நிகழ்சரண அகவு முனிவர்க்கு
அகலமலி சகலகலை மிகவுரைசெய்
முகமுடைய பகவன்இடமாம்
பகைகளையும் வகையில்அறு
முகஇறையை
மிகஅருள நிகரில் இமையோர்
புகவுலகு புகழஎழில் திகழநிகழ்
அலர்பெருகு புகலிநகரே.
-03:325:03 (716)
பொருள் :
சூரியனுடைய ஒளியை நிகர்த்த, மலையில் தோன்றும் மணிகளும், செந்தாமரை மலரின் மணமும் பெருக விளங்கும் ஒளி போன்ற திருவடியைச் சரண் அடைந்த சனகாதி முனிவர்களுக்கு, விரிந்து மேவும் எல்லாக் கலைகளும் நன்கு உணருமாறு உரை செய்தருளிய குருமூர்த்தமாக விளங்குபவர், சிவபெருமான். அத்தகைய பெருமானின் இடமாவது, பகை கொண்ட அசுரர்களை வேரறுக்கும் வகையில் ஆறுமுகமுடைய குமாரக் கடவுளை மிகுந்து விளங்குமாறு முகிழ்த்தருளிய காலத்தில், தேவர்கள் எல்லாம் புகலிடமாக விழைந்து மேவிய எழில் திகழும் புகலிநகரே.
விளக்கம்:
நகம் = மலை
முகை மலர் = தாமரை மலர்
பகவன் = சிவபெருமான்
பகல் ஒளி செய் - சூரியனைப்போற் பிரகாசிக்கும்.
நகம் மணியை - மலையிற் பிறக்கும் பத்மராக மணிகளையும்.
முகை மலரை - அரும்பு விரிந்த செந்தாமரை ( நாண் ) மலரையும்.
நிகழ் - போன்ற.
சரண - திருவடிப் பேற்றுக்குரிய.
அகவு - விருப்பம் மிக்க.
முனிவர்க்கு - சனகாதி முனிவர்களுக்கு,
அகலம்மலி - விஸ்தார மாகிய,
சகலகலை - கலைகளனைத்தையும்.
மிக - ( தெளிவு ) மிகும்படி.
உரை செய் - உபதேசித்தருளிய.
முகம் உடைய - திருவருள் நோக்கம் உடைய.
பகவன் இடமாம் - சிவபெருமானின் இடம் ஆகும்.
முகை மலர்ந்த மலர் - புதுப்பூ. பகவன் - சிவபெருமான்
முகம் - என்னும் சொல் திருவருள் நோக்கம் என்னும் பொருளில் வந்தமை காண்க.
பகை - தேவர் பகைவர்களாகிய அரக்கர் முதலாயினோரை. ` பகை ` பகைவருக்கு ஆயினமையின் பண்பாகுபெயர்.
இறை - கடவுள்.
மிக - அறச்செயல்கள் அதிகரிக்க.
அருள - தர. அதனால்.
நிகரில் இமையோர் - மகிழ்ச்சியில் நிகர் இல்லாத தேவர்கள்.
புக - சரண்புக,
எழில் திகழ - அழகு விளங்க.
நிகழ் - ( இவற்றால் ) நேர்ந்த ( புகலியெனும் பெயர் ).
அலர்பெருகு - அனைத்துலகினும் மிக்குப் பெருகிய ( புகலி நகர் என்க.)
🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪
🎶மிக அற்புதமான பாடல். மிக மிக முக்கியமானது.
🌟இப்பாடலை திரும்பத் திரும்ப ஒதிக்கொண்டுவந்தால் நாவிற்கும் உள்ளத்திற்கும் அருமருந்து.
⏺️சந்தப்பாக்களின் சீர்களில் ஒவ்வொர் உயிரும் ஓரசை என்பதால் ஓசை நயமும் தாளமும் நிறைய அமைத்துள்ளதை நாம் சிந்திக்க வேண்டும்.
⏺️ ஒவ்வொறு பாடலிலும் சீர்காழி பதியின் பெயரில் வரும் ஒரு தமிழ் எழுத்தை பாடல் முழுதும் சிறப்புடன் சீர் அமைத்துள்ளது மிகவும் அற்புதமானது.
🔷இது போன்ற சந்தப் பாடல்களை கற்றுணர்ந்து அருணகிரியார் தம்முடைய திருப்புகழ் பாடல்களை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
🔹திருஞானசம்பந்தப்பிள்ளையாரை முருகனின் திரு அவதாரமாகக் கொண்டவர் அருணகிரிநாதர். இதைக் குறிப்பிட்டு தம்பாடல்களில் சிறப்பு செய்துள்ளார்.
✔️இராமலிங்கசுவாமிகளும் இக்கருத்தை ஏற்கிறார்.
💠பிற்கால இசைத் தமிழ் இலக்கியத்தின் அடிப்படையாக அமைந்தப் பாடல்கள்
♦️அருட் செல்வர் தமிழ் விரகனார், திருஞானசம்பந்தரின் இறையருள் பெற்ற இப் பதிகப் பாடல்களை போற்றி பரவுதல் செய்வோம்.
📚பாடல்,பொருள்,விளக்கம் பல நூல், தரவுகளிலிருந்து தொகுத்துத் தரப்பட்டுள்ளது.
🛡️சிந்தனைக்கும் எட்டாத ஞானசம்பந்தரின் அற்புதத் தமிழின் இசைப்பாடல் சிறப்பை உணருவோம். இதுவே, தமிழரின்பொக்கிஷம்.
🙇♂️நன்றி🙏
🛐💚🕉️🧡☸️💜⚛️💙🔯💛🙏🙆🏼🙇🏼♂️
என்னமும் தகவல் ஆக்கமும், தொகுத்து வழங்குவது:
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
பதிவு: ஒன்று பாடல் 1
https://m.facebook.com/story.php?story_fbid=5787884447953431&id=100001957991710
பதிவு : இரண்டு : பாடல் 2
https://m.facebook.com/story.php?story_fbid=5795841430491066&id=100001957991710
No comments:
Post a Comment