Saturday, June 5, 2021

சம்பந்தர் அமுதம் - ஏகபாதம் பாடல் 7,8

#திருமுறைசிந்தனைகள் :
#சம்பந்தர்அமுதம்
#ஏகபாதம் :
பதிவு : நான்கு  (பாடல்:7, 8 )

ஏகபாதம் :
ஒரே அடியில் உள்ள சொற்கள் நான்கு அடிகளிலும் வரும்போது பொருள் வேறு, வேறு பெற்று விளங்குவதுதான் திருஏகபாதம்.
🙏🏿🙇‍♀️🙏🏻🙇🙏🏾🙇🏾‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇🏻‍♀️🙏🏻🙇‍♀️🙏
தமிழ் ஞானசம்பந்தரின்  பதிகங்களில் ஏகபாதம் என்னும் மிகச்சிறந்த இந்த
வகை யாப்பு அமைந்த பதிக பாடல்களைப் பற்றி தொடர்ந்து சிந்திப்போம் வாருங்கள்.
இன்றைய சிந்தனை 
பாடல்கள்: 7 பற்றியது.
🙏🗻🙏🏻🏔️🙏🏾🗻🙏🏼🏔️🙏🏽🗻🙏🏔️🙏🏿

பாடல் 1376.

சீர்காழி சிரபுரம்  
என்ற மற்றொரு பெயரால் அழைக்கப்படுகிறது. இராகு கிரகம் பூசித்ததால் இப்பெயர் பெற்றது.
🙏🙇‍♀️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏽‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇‍♀️🙏🏾🙇🏾‍♂️🙏🏿

முதல் திருமுறை
பதிகம்: 127 - தலம் : திருப்பிரமபுரம்
பாடல். 7.

செருக்கு வாய்ப்  புடையான்  சிரபுரம் என்னில்
செருக்கு வாய்ப்  புடையான்  சிரபுரம் என்னில்
செருக்கு வாய்ப்  புடையான்  சிரபுரம் என்னில்
செருக்கு வாய்ப்  புடையான்  சிரபுரம் என்னில்

🙏🙇‍♀️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏽‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇‍♀️🙏🏾🙇🏾‍♂️🙏🏿
பொருள் :
1. சிரம் அறுபட்ட ராகு பூசித்த இந் திருத்தலத்தில் எழுந்து அருளி, பேறு நல்கும் பெருமான், யான் எனது என்னும் செருக்கு அறுமாறு செய்பவன்.

2. செருக்குன் முனைந்து ஆணவ மலம் தோன்ற நின்ற பிரமனின் சிரத்தை அறுத்துப் புடைத்தவன்.

3. என்னிடம் தலையானவனாய் விளங்கி மொழியும் பெரும் சொற்களாக மலர்பவன். மன்னுயிர்கள் செருக்குற்று நலியாதவாறு, அவர்தம் சிரத்தில் பதிந்து காத்து அருள்பவன். 

4. பக்தர்களின் உள்ளத்தில் பதிந்து நின்று விளங்கி, அச்சமற்ற செம்மையுடையவர்களாய்ச் செய்பவன்.
அவ் இறைவனை வணங்கித் துதிப்பீராக.

🙏🏿🙇‍♀️🙏🏻🙇🙏🏾🙇🏾‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇🏻‍♀️🙏🏻🙇‍♀️🙏
மிக மிகப் பழைய உரை மூலம்:
தத்துவப் பொருள் குறிப்பு சுருக்கம்.

சேர்  வாய்ப்  புடையான்  சீர் புரம் என்னில்

சேர் எனற்பாலது செர் எனவும், 
சீர் எனற்பாலது சிர் எனவும்
குறுகிநின்றன. 

1.தனது திருவடிப் பிரசாதமில்லாதார்க்கு மல மயக்கத்தின் மேலீட்டைக் கெடாத சிவனுக்கு விசுவாதீதமான இருப்பிடம் எனது சைதன்னியமே. 

2. சத்தாதிகள் அஞ்சும் சேரப்பட்ட உலகத்தைத் தன் வாயினில் இடமாகவுடைய விஷ்ணுவின் களேபரத்தைத் திருமேனியிலே தரித்துள்ளான். 

3. ஆத்தும விகாரமாகிய கர்மத்தினாலே இந்திரியங்களுக்கு விடயமாகிய சுவர்க்கத்திலிச்சையுடையானுக்கு 
அந்தச் சுவர்க்கம் மெய்யாக விசேடித்திருக்குமன்றே.

4. இந்திரிய வன்மையாகிய யுத்தத்துக்கு இளையாமல் அந்த இந்திரியமாகிய பாணங்கள் தனது அறிவுக்குள் தைக்கப்படான். 

ஒருகால் சிரபுரம் என்று சொன்னவிடத்துப் பஞ்சேந்திரியங்களையும் அவியப்பொருது சிவனுடைய திருவடியிலே அடையாநிற்பன் என்பதாம்.

🙏🏿🙇‍♀️🙏🏻🙇🙏🏾🙇🏾‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇🏻‍♀️🙏🏻🙇‍♀️🙏🙇🏻‍♂️🙏🏼

பாடல். 1377
சீர்காழியின் மற்றெரு பெயர் புறவம்.
புறா வடிவத்தில் வந்த அக்கினியால் சிபிச் சக்கரவர்த்தி நற்கதியடைந்தது இத்தல புராணம்.

🙏🏿🙇‍♀️🙏🏻🙇🙏🏾🙇🏾‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇🏻‍♀️🙏🏻🙇‍♀️🙏🙇🏻‍♂️🙏🏼.

முதல் திருமுறை
பதிகம்: 127 - தலம் : திருப்பிரமபுரம்
பாடல். 8.

பொன்னடி மாதவர் சேர்புற  வத்தவன்
பொன்னடி மாதவர் சேர்புற  வத்தவன்
பொன்னடி மாதவர் சேர்புற  வத்தவன்
பொன்னடி மாதவர் சேர்புற  வத்தவன்

🙏🏿🙇‍♀️🙏🏻🙇🙏🏾🙇🏾‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇🏻‍♀️🙏🏻🙇‍♀️🙏🙇🏻‍♂️🙏🏼
பொருள் : 
1. புறா வடிவத்தில் தோன்றிய அக்கினி தேவன் வழிபட்ட பெருமான், அழகிய ஒளி பெறும் திருவடியை உடையவன்.

2. மாதவ வேந்தர்கள் சார்ந்து தொழுதற்கு உரியவன். 

3. தவத்தின் மேலாய், மாதவத்தின் சீராய், அவன் பொன்னடிக் கமலத்தைச் சேர்ந்தவர்களுக்கு, மேலான சிறப்புகளைத் தருபவன்.

4. உலக மாதாவாகிய உமையவளைச் சேர்ந்து அர்த்தநாரியாக இணைந்தும், வேறாகியும் விளங்குபவன். அப்பெருமான் திருவடியைப் போற்றுதல் தவமாகும்.
🙏🏿🙇‍♀️🙏🏻🙇🙏🏾🙇🏾‍♀️🙏🏽🙇🏾‍♂️🙏🏼🙇🏻‍♀️🙏🏻🙇‍♀️🙏🙇🏻‍♂️🙏🏼
விளக்கம்:
பொன்னடி மாதவர் சேர்புற  வத்தவன்
என்பதை பிரிக்கும் போது வரும் பொருள்...

பொன்னடி   மாது அவர்
பொன் அடி  மா  தவத்தவர்
சேர் புறம் வைத்தவன்
சேர்புற  வைத்தவன்

பழைய தத்துவ விளக்க உரை சுருக்கம்:

1. பொலிவினையுடைய  மாயா நிருத்தம் புரிகின்ற பத்திரகாளியும்  பூதபசாசும் பொருந்திய  மயானமே  திருக்கோயிலாக உள்ளவன்.

2 சுத்தமான வழியைத் தரப்பட்ட மகாரிஷிகள் திரண்டு தவம் பண்ணாநிற்கும் ஆரணியத்தில் தனித்துத் தவம் புரியாநிற்கும் தபோதனன்.

3. அழகிய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள இலக்குமியையொத்த இருடி பத்தினிகள் பிச்சையிட வந்து அணையுமிடத்துத் தனக்குள்ள நிருவாணத்தை அவர்களுக்குக் கொடுத்தவன்.

4. பொன்னாற் செய்யப்பட்ட
 பாடக நூபுராதிகளைப் பாதங்களிலேயணிந்துள்ள 
கன்னியர் திரண்டு விளையாடும் 
புறவம் என்னும் திருப்பதியில் 
வாழ்கின்ற சிவன். 

புறவம் என்பதும் சீகாழி.

பத்தி இலக்கியத்தில் தமிழின் பெருமையை உலகறியச் செய்த 
ஆளுடைய பிள்ளையாரின் அமுத பாடல்களின் ஒரு துளி பருகினோம்; இறையருளால்.
இதன் பெருமையை எண்ணிப் போற்றுவோம். 

வணக்கம்.
நன்றி
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🛐என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🛐
#தமிழரின்பொக்கிஷம் 
#திருமுறைகளில்தமிழமுதம் 
#ஆன்மீகமேதமிழ் 
முதல் பதிவு : பாடல் 1,2.
முதல் பாடல் முதல் பதிவில் காண:
https://m.facebook.com/story.php?story_fbid=5676936402381570&id=100001957991710
இரண்டாவது பதிவு: பாடல் 2, 3, 4.
https://m.facebook.com/story.php?story_fbid=5681849521890258&id=100001957991710
மூன்றாம் பதிவு : பாடல்: 5,6
https://m.facebook.com/story.php?story_fbid=5687921837949693&id=100001957991710

🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🛐

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள்பதிவு - 15.#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️11.08.2024 /குலசேகரபுரம்.18திருகுலசேகரபுரம் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவில்,

#KERALAYATRA2024 பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள் பதிவு - 15. #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ 11.08.2024 / குலசேகரபுரம். 18 திருக...