#சம்பந்தர்அமுதம்
நண்டைக்குப் புறம்பான கருத்துக்களைப் பேசிப் பொழுதை வீணாக்கி தாமும் கெட்டு வாழும் புறநெறியினர் வழியில் செல்லாமல்,
நம் வினை போக்கும் ஈசனைச் சார்ந்து வழிபடுங்கள், என்று அறிவுறுத்தும் அற்புத பாடல்.
✅ முதல் திருமுறை பதிகம்: 45
தலம்: திருவலங்காடு
திருவாலங்காடு பதிகம்
' எம்மைப் பாட மறந்தனையோ '
என ஈசன் கூறி சம்பந்தர் தரிசனம் செய்து பதிகம் அருள் பெற்றது.
(481. துஞ்சவரு வாரும் தொழுவிப் ....
எனத் தொடங்கும் பதிகத்தில்,
11 வது பாடல் (491):
💜
போழம் பலபேசிப் போதுசாற்றித் திரிவாரும்
வேழம் வருமளவும் வெயிலேதுற்றித் திரிவாரும்
கேழல் வினைபோகக் கேட்பிப்பாரும் கேடிலா
ஆழ்வர் பழையனூர் ஆலங்காட்டுஎம் மடிகளே.
❤️
பொருள்.
நண்டைக்குப் புறம்பான மாறுபட்ட சொற்களையும், காலத்துக்கு ஏற்ற வாறு உண்மைக் கருத்துக்களையும் கூறியும், பேசியும், பொழுதை வீணாக்கியும், நன்மையல்லாதவற்றை உபதேசங்களாகக் கூறும்,
யானைத் தீ வரும் அளவும் வெயிலிடை உண்டு திரியும் மதவாதிகளுமாகிய புறச்சமயிகளைச் சாராது விலகி வந்து தம்மைச் சார்ந்த அடியவர்களைப் பற்றிய வினைகள் அகலுமாறு அவர்கட்கு உபதேசங்களைப் புரியச் செய்பவர், அழிவற்ற ஆளுமையுடையவர் ஆலங்காட்டு எம் ஈசன். அவரையே தொழுங்கள் என்பது சிறப்பு.
🛐
தலச்சிறப்பு:
அருள்மிகு ஸ்ரீ வண்டார்குழலி அம்மன்உடனுறை ஸ்ரீ வடாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோவில். திருவாலங்காடு.
🌸மாந்தி மற்றும் சனி தோஷம் நீக்கும் தலம்.
👉திருவாலங்காடு.
👉திருவள்ளூர் மாவட்டம்.
🌸காரைக்கால் அம்மையார் முக்தி தலம்.
🌸இரத்தின சபை. பெருமான் ஊர்த்துவத் தாண்டவம் ஆடிய தலம்.
🤍நால்வர் பாடிய தலம்.
🌸 அருணகிரியார், இராமலிங்க அடிகளார், கச்சியப்பர், பாம்பன் சுவாமிகள் பாடியருளியுள்ள பதி.
நன்றி🙏
❤️🙏💜🙏💚🙏💛🙏🧡🙏
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
❤️🙏💜🙏💚🙏💛🙏🧡🙏
No comments:
Post a Comment