#சம்பந்தர்_அமுதம்
#ஆலயவழிபாடு:
"கற்றதனால் ஆய பயன் என் கொல் நற்றாள் தொழார் எனின்''
என்றும்,
"ஆலயம் தொழுவது சாலவும் நன்று"
என்றும் நமது முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள் அல்லவா?
நடைமுறையில் மக்கள் எவ்வாறு?
🙏
🗣️நாங்க வருடம் குடும்பத்துடன் ஒரு முறை தவறாமல் திருச்செந்தூர் சென்று சாமி கும்பிட்டு வருவோம். அப்படியே, குற்றாலம் முதலிய இடங்களுக்கும் சென்று வருவோம்.
: 🗣️மாங்கனித்திருவிழாவில் சுவாமி பார்க்க செல்வோம்.
:🗣️ திருவாரூரில் தேர் திருவிழா கண்டிப்பாக அன்று சென்று வருவோம்.
: 🗣️நாங்க சார் மாதம் ஒருமுறை திருவண்ணாமலை கிரிவலம் சென்று வருவோம்.
:🗣️ கார்த்திகை அன்று மட்டும் சுவாமிமலை அல்லது வைத்தீஸ்வரன் கோவில் சென்று வழிபடுகிறோம்.
: 🗣️பெளர்ணமி, அஷ்டமி பூசைக்கு நாங்க உபயம் கொடுத்துவருகிறோம். அப்பொழுது கோவில் சென்று வருகிறோம்.
: 🗣️வாரம் ஒரு முறை சனிக்கிழமை மட்டும் திருநள்ளாறு சென்று வருவோம்.
: 🗣️ஜோசியர் கூறியதால், பிரார்த்தனை செய்ய திருவெண்காடு சென்றோம்.
:🗣️எல்லா பிரதோஷம் நாட்களிலும் ஏதேனும் சிவன் ஆலயம் கண்டிப்பாக செல்கிறேன்.
: 🗣️எப்பவாது ஒரு முறை நேரம் கிடைக்கும் போது தான் ஆலயம் செல்ல முடிகிறது.
:🗣️ எங்க சார் நேரம் இருக்கிறது. கிடைக்கும் அவகாசத்தில் மனதில் வழிபட்டு ஓடவேண்டியிருக்கிறது என்று அலுத்த குரல்கள்.
🛐
இப்படிப்பட்ட பக்தர்கள் தான் மிக அதிகம். சுற்றுலா, திருவிழா, சிறப்பு நாட்கள், பிரார்த்தனை, பரிகாரம், இவற்றிற்காக செல்பவர்கள்தாம் அதிகம்.
🕉️
:அம்மாவாசை, பெளவுர்ணமி, அஷ்டமி, நவமி, கார்த்திகை, பிரதோஷம், செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு என்று வாரத்தில் சில நாட்களில் மட்டுமே ஆலயம் செல்லும் பழக்கம் உள்ளது.
🛐
: ஏதேனும், வாழ்க்கையின் வசதி தேடி, கல்வி, வேலைவாய்ப்பு, பொருள் சேர்க்கை குறித்தும், சுயதேவைக்காக மட்டுமே ஆலயம் செல்வது.
🛐
:நோய், பிணி, எதிரிகள் சூழ்ச்சி, என்ற வாழ்க்கையின் முன்னேற்றத் தடை நீக்கவும், ஆண்டவனை ஆலயம் சென்று பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும் என்ற பழக்கமே மிகுந்துள்ளது.
🛐
நடைமுறையில், நாள்தோறும் ஆலயம் சென்று வழிபடும் முறை குறைந்து, இந்த அளவில்தான் நம் பக்தியும் வழிபாடும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது; இது தான் உண்மை. இல்லையா?
🛐
இந்த அளவில் தான் பெரும்பாலோருக்கு நமது பக்தியும்,ஆலய பிரவேசமும் உள்ளது.
🛐
: வேலை, பிழைப்பு, வருமானம், புகழ் இவைதான் நம் வாழ்வில் மிக முக்கியம் என்று கருதுவதால்,
ஆலய வழிபாட்டின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது.
🛐
பொருளும், புகழும் தேடும் உலகில் ஆண்டவர் அருள்தேடல் முக்கியம் இல்லாமல் சென்றுவிட்டதோ.
🛐
உண்மையில், எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி, நம்மை இவ்வுலகில் படைத்து நம் உயிர்காத்து, முற்பிறவி பாவ புன்னியம் நீக்கி, இகபர சுகம் அளித்து, நம் உயிர் இப்பிறவியில் செய்ய வேண்டிய கடமையை உணர்த்தி, அதை செம்மையாக வழி நடத்தி நமக்கு அருள் புரியும் இறைவனை நாம் எப்போதும் நினைத்து வாழ வேண்டும். இதுதான் நமது பிறப்பின் பலன் என்று முன்னோர்கள் அருளுரைத்திருக்கின்றனர்.
🛐
இவ்வுயிரை இவ்வுடலில் படைத்து, உலகில் பெற்ற அறிவைக் கொண்டு இறைவனை உணர்ந்து பிறவி அறுக்க முயல வேண்டும்.
இதுவே மனித பிறப்பின் பலன்.
அதற்கு நாம் செய்ய வேண்டியது, இமைப்பொழுதும் இறை சிந்தனையுடன் இருக்க வேண்டும்.
வாழ்வின் அனைத்து செயல்களும்
இறையின் செயல், முன் வினை நீக்கம் என்று உணர்தல் அவசியம்.
🛐
கானும் ஆலயம் சென்று காலையும், மாலையும், இருபொழுதும், இறைவனைத் துதித்து வணங்கித் தொழுதால், கிடைத்தற்கு அரிதான புண்ணியம் சேரும். நல்வழியில் நம் வாழ்வும் திகழும்.
🛐
இறை ஆலயங்களுக்கு எந்த வேலையில் சென்று தொழுவது சிறப்பு என்பதை அருமையான திருமுறை பாடலில் அறிவுருத்தும் தமிழ் விரகனர் அருளியுள்ளதை உணர்ந்து மற்றவர்களுக்கும் பகர்ந்து செயல்படுவோமா?
🙏🕉️1️⃣
💙💚💛💜❤️❤️🤍💛💚💛💜❤️❤️🤍💛
தேவாரம் - முதல் திருமுறை -
தலம்: திரு ஆரூர்
பதிகம்: 105 - பாடல் 2. (1134)
🛐🙏
💙💚💛💜❤️❤️🤍💛💚💛💜❤️❤️🤍💛காலையும், மாலையும், ஆலயம் சென்று இறைவரை வணங்க வேண்டும்
💙💚💛💜❤️❤️🤍💛💚💛💜❤️❤️🤍💛
சோலையில் வண்டினங்கள் கரும்போடு
இசை முரலச் சூழ்ந்த
ஆலையின் வெம்புகை போய்
முகில்தோயும் ஆரூரில்
பாலொடு நெய்தயிரும் பயின்றாடும்
பரமேட்டி பாதம்
காலையும் மாலையும் போய்ப்
பணிதல் கருமமே
🕉️
பொருள் :
சோலைகளில் சுரும்பு முதலான வண்டினங்கள் இசையெழுப்ப, சூழ்ந்துள்ள ஆலைகளிலிருந்து வெளியேறும் புகையானது, மேகம் போல் பரவும் ஆரூரில், பால், நெய், தயிர் ஆகியவற்றால் பூசைகள் பயின்றாடும் பரமனின் திருக்கழலை, காலை, மாலை ஆகிய இரு காலங்களிலும் சென்று வணங்குதல் கடமையாகும்.
💙💚💛💜❤️❤️🤍💛💚💛💜❤️❤️🤍💛
🛐இருபொழுதும், ஆலயம் சென்று இறைவரை வணங்க வேண்டும்🙏
💙💚💛💜❤️❤️🤍💛💚💛💜❤️❤️🤍💛
2️⃣
தேவாரம் - முதல் திருமுறை -
தலம்: திரு ஆரூர்
பதிகம்: 105 - பாடல் 3. (1135)
உள்ளமோர் இச்சையினால் உதந்தேத்தித்
தொழுமின் தொண்டீர் மெய்யே
கள்ளம் ஒழிந்திடு மின்கரவாது
இருபொழுதும்
வெள்ளம்ஓர் வார்சடைமேல் கடந்திட்ட வெள்ளேற்றான் மேய
அள்ளல் அகன்கழனி ஆரூர்
அடைவோமே.
🛐
பொருள் : தொண்டு செய்பவர்களே! உள்ளத்தில் மிகுந்த வேட்கை கொண்டு, மகிழ்ந்து போற்றித் தொழுவீராக. உண்மையாகவே உம்முடைய அஞ்ஞான இருள் ஒழிந்துவிடும். தடையில்லாது, காலை, மாலை ஆகிய இரு பொழுதும், கங்கைவார்சடையும், இடபமும் கொண்ட ஈசனை, அகன்ற வயல்கள் சூழ உள்ள ஆரூர் நாடிச் சென்று வணங்குவோம்.
நன்றி,
வணக்கம்
🛐
💙💚💛💜❤️❤️🤍💛💚💛💜❤️❤️🤍💛
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
💙💚💛💜❤️❤️🤍💛💚💛💜❤️❤️🤍💛
No comments:
Post a Comment