Thursday, June 17, 2021

மொழிமாற்று - சம்பந்தர் அமுதம் - பதிவு 3. பாடல் 4, 5

#திருமுறைகளில்_தமிழமுதம்
#சம்பந்தர்அமுதம்
#மொழிமாற்று
பதிவு : மூன்று (பாடல் 4, 5)
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇🙏🏻

நம் பக்தி இலக்கியத்தில்
ஒப்பற்ற நம் தமிழ் மொழியின்
அற்புத யாப்பமைந்த சிறப்பான ஒரு பதிகப் பாடல் அமைப்புக் குறித்து 
ஒரு துளியேனும் நாம் சிந்திக்க முயலலாமே என்ற வகையில் பதிவிடப்படுகிறது.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

⚜️இதுவரை நாம் திருஞான சம்பந்தரின் தேவாரத் திருமுறைப் பாடல்களில்

#சம்பந்தர்தூது  
#எண்ணலங்காரம்  
#ஏகபாதம் 
#மடக்கணி

என்ற தலைப்பின் கீழ் தூது பாடல்களும், எண்ணலங்காரம், ஏகபாதம் மற்றும் மடக்கணி என்னும் இயமகம் முதலிய யாப்பு வகைப் பாடல்களைப் பற்றி சிந்தித்து வந்தோம்.

தற்போது #மொழிமாற்று என்ற வகை யாப்பு அமைப்பு பாடல்கள் பற்றி சிந்திக்கலாம்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

👂மொழிமாற்று என்றால் என்ன? அதன் அமைப்பை பற்றியும் கூறவும்.

👄தமிழ் இலக்கியத்தில் 20 க்கும் மேற்பட்ட அமைப்பில் பாடல்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இவை
யாப்பு வகைகள் என்று அறியப்படும்.
இவற்றின் ஒரு வகையே மொழிமாற்று எனப்படுகிறது. ஒரு பாடலில்

💠ஒரே அடியில் மாறியிருக்கின்ற சொற்களைப் பொருளுக்கேற்றவாறு மாற்றி அமைத்துக்கொள்ளுதல் மொழிமாற்று எனப்படும். இதனை இலக்கண நூலார் “மொழிமாற்றுப் பொருள்கோள்” என்பர்.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
👂இந்த வகை அமைப்பில் சம்பந்தர் அருளிய பதிகம் எது? இதன் சிறப்பு யாது?

👄 தேவாரம் - முதல் திருமுறையில் வரும் ஞானசம்பந்தர் பதிகம் - 117 
தலம் திருப்பிரமபுரம்
பாடல் - 1259 முதல் 1270 வரையில் உள்ளது. 12 பாடல்கள் அடங்கியுள்ளது.

❇️பதிகத்தின் சிறப்பு:

☸️சிறு குழந்தையாகிய அருள் ஞானசம்பந்தர் சொற்களை மாற்றி மாற்றி வைத்து விளயாட்டுப் போல அமைந்த பாடல்கள்.
🔯அப்படியே படித்தால் பொருள் விளங்காது.
✡️முதலில் முழு பாடலையும் உணர்ந்து படித்து பின்பு பொருளுக்கு ஏற்ப முன் பின்னாக வார்த்தைகளை மாற்றிக் கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்.

💠இதை மிறை கவி என்றும் கூறுவர்.
மிறைக்கவி என்பது எளிதில் பொருள் புரியாமல் மூளையைக் கசக்கி, சிந்தித்து சொற்களை மாற்றி அமைத்து தான்
பொருள் உணர வேண்டும்
🛡️அத்தகைய சிறப்பு பாடல்கள் கொண்டது இப்பதிகம்.

🏔️மொத்தம் 12 பாடல்கள். சீர்காழிப் பதியின் 12 பெயர்கள் சிறப்பும் ஒவ்வொரு பாடல்களிலும் வருவது போல அமைத்துள்ளது மேலும் சிறப்பு.
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
பாடல் - 4
உரித்தது பாம்பை உடன்மிசை
              இட்டதோர் ஒண்களிற்றை

எரித்ததொர் ஆமையை இன்புறப்
             பூண்டது முப்புரத்தைச்

செருத்தது சூலத்தை யேந்திற்றுத்
             தக்கனை வேள்விபன்னூல்

விரித்தவர் வாழ்தரு வெங்குரு
            வில்வீற் றிருந்தவரே.

1262. திருமுறை 01.117.04
🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

🔰இதை இப்படி பொருளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொண்டு பொருள் காண வேண்டும்

உரித்தது ஓண்களிற்றை
உடன்மிசை பாம்பை இட்டதோர்
எரித்ததொர் முப்புரத்தைச்
ஆமையை இன்புறப் பூண்டது
தக்கன் வேள்வி செருத்தது
சூலத்தை யேந்திற்று
பண்ணூல் விரித்தவர் வாழ்தரு வெங்குருவில் வீற்றிருந்தவரே.

✳️✍️பொருள் குறிப்பு:

🔹களிறு - யானை. 
🔹செருத்தது - வருத்தியது. 🔹பன்னூல்விரித்தவர் - பல நூல்களையும் விரித்துணர்ந்த அந்தணர்

💠📝பாடல் விளக்கம்:

பல நூல்களைக் கற்றுணர்ந்து விரித்துரைக்கும் புலவர்கள் வாழும் வெங்குருவில் வீற்றிருக்கும் இறைவர்

 ஒப்பற்ற சிறந்த யானையை உரித்தவர். பாம்பைத் தம் திருமேனிமேல்
அணிந்தவர்.
முப்புரங்களை எரித்தவர். 
ஆமையோட்டை மகிழ்வுறப் பூண்டவர். தக்கனை வேள்வியில் அழித்தவர்.
சூலத்தைக் கையில் ஏந்தியவர்.
வேதங்களை விரித்தவர்

🏔️தலக்குறிப்பு: வெங்குரு: அசுர குருவாகிய சுக்கிரன் இத்தலத்தை வழிபட்டுப் பேறு பெற்ற தலம். இயமன் வழிபட்டு பழி நீக்கிக் கொண்டதாலும் இப்பெயர் சீர்காழிக்கு.

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
பாடல் 5.

கொட்டுவர் அக்குஅரை ஆர்ப்பது
                தக்கை குறுந்தாளன

விட்டுவர் பூதம் கலப்பில
               ரின்புகழ் என்புலவின்

மட்டுவ ருந்தழல் சூடுவர்
              மத்தமும் ஏந்துவர்வான்

தொட்டுவ ருங்கொடித் தோணி
              புரத்துறை சுந்தரரே.

1263. திருமுறை 01.117.05

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏

🔰இதை இப்படி பொருளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொண்டு பொருள் காணவேண்டும்.

அக்கு அரையார்ப்பது;
 தக்கை கொட்டுவர்;
 குறுந்தாளன பூதம் இன்புகழ் விட்டுவர்; என்பு கலப்பிலர்; 
உலவின்மட்டு வருந்தழல் ஏந்துவர்
மத்தம் சூடுவர்; 

வான்தொட்டு வருங்கொடித் தோணிபுரத்துறை சுந்தரர்.

 எனக்கூட்டிப் பொருள்காண்க. 

✳️✍️பொருள் குறிப்பு:.

🔸அக்கு - சங்கு மணி. 
🔸அரை - இடை
🔸தக்கை - ஒரு வாத்தியம். 
🔸உலவின் மட்டு வருந்தழல் -     
     உலகத்தையழிக்குமளவு வரும்     
     காலாக்கினி.
🔸மத்தம்- ஊமத்தம்

💠📝பாடல் விளக்கம்:

வானைத் தொடுமாறு உயர்ந்துள்ள கொடிகளைக் கொண்ட தோணிபுரச்சுந்தரராகிய இறைவர்;

தக்கை என்னும் வாத்தியத்தைக் கொட்டுபவர். 
இடையிலே சங்கு மணிகளைக் கட்டியவர். 
குறுகிய தாளை உடைய பூதகணங்களைக் கலத்தல் இல்லாதவர். 
இனிய புகழை ஈட்டுபவர். 
எலும்பையும், 
உலவுகின்ற இனிய தேன்மணம் வெளிப்படும் ஊமத்தம் பூவையும் சூடுபவர். 
தீயை ஏந்துபவர். 

🏔️தலக்குறிப்பு: தோணிபுரம் : ஊழிக்காலத்தில் உலகமெல்லாம் நீரில் மூழ்கினாலும் இத்தலம் மட்டும் அழியாமல் பிரணவ உருவாகத் தோணி போல் மிதந்ததால் சீர்காழிக்கு இப்பெயர்

🙏🙇‍♂️🙏🏻🙇🏻‍♂️🙏🏼🙇🏼‍♂️🙏🏽🙇🏻‍♂️🙏🏽🙇🏽‍♂️🙏🏾🙇🏾‍♂️🙏
3 வயதில் இறைவன் அருள் பெற்று ஞானப்பால் உண்டு பாலகனாய் இருந்து தமிழ்ப் பாடல்களினால் இறைவனை அருச்சித்து, பத்தி இலக்கியத்தில் தமிழின் பெருமையை உலகறியச் செய்த ஆளுடைய பிள்ளையாரின் அமுத பாடல்களின் ஒரு துளி பருகினோம் 

🌟இறையருளால்.
இதன் பெருமையை எண்ணிப் போற்றுவோம். 

வணக்கம்
நன்றி
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
என்றும் அன்புடன்
 #சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🙏🛐🙇🙏🏻🙇‍♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼‍♀️🙏🙇
பதிவு: ஒன்று பாடல் 1 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=4018811291527431&id=100001957991710

பதிவு : இரண்டு பாடல் 2, 3 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=4022950417780185&id=100001957991710
2.
https://m.facebook.com/story.php?story_fbid=5743615612380315&id=100001957991710

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்)பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம் #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️29. வைக்கம் சிவன் கோவில்(Vaikom Temple):

#KERALAYATRA2024 பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்) பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம்  #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024  #பயணஅனுபவக்குறிப்புகள்🕊...