Tuesday, June 22, 2021

சம்பந்தர்இசையமுதம் திருவிராகம் #முடுகியல் #அராகம் பற்றிய பதிவு. தேவார இசைப்பாடல்கள் பற்றியது பதிவு : 1.

#சம்பந்தர்இசையமுதம்
#திருவிராகம் 

#முடுகியல்  

  #அராகம்           பற்றிய பதிவு.

தேவார இசைப்பாடல்கள் பற்றியது
பதிவு : 1.

பக்தியும், தமிழ் ஆர்வமும் உள்ளவர்கள் தொடரலாம்.

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾

'இசைத்தமிழ் ...  நீ செய்த பெருஞ்சாதனை .....'

ஏழாம் நூற்றாண்டில் வேத நெறி தழைத்தோங்க, அவதாரம் செய்த ஆளுடையப் பிள்ளையாம் அருள் ஞானசம்பந்தர் இயற்றிய திருக்கடைக் காப்பு என்னும் தேவாரத் திருமுறைகளே தமிழரின் பிற்கால சிற்றிலக்கியத்திற்கு  அடிப்படையாய் அமைந்திருக்கிறது.

சம்பந்தர் , புதிய புதிய பாவகைகளை அமைத்து அருளிய பல பதிகங்கள், தமிழின் சிறப்புக்கு மகுடமாய் ஒளிர்கிறது.

சம்பந்தர் இசைத்தமிழுக்குச் சிறப்பான பதிகங்கள் பல அருளிச் செய்துள்ளார். அவரின் சிறப்புகளை, சாதனைகள் பற்றி இப்பதிவில் தொடர்ந்து சிந்திப்போம்.

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐

🔷 #திருவிராகம், #அராகம், #முடுகியல்

#அராகம்
#திருவிராகம்:

❇️விளக்கம்:

முதல் திருமுறையில் வரும் ...
123 வது பதிகம். தலம்: திருவலிவலம்
'பூவியல் புரிகுழல்' எனத் தொடங்கும் பதிகத்தில் வரும் 5வது பாடல்

பிடியதன் உருஉமை  கொளமிகு  கரியது
வடி கொடு  தனதடி  வழிபடும் அவர்இடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி  வலம்உறை     
              இறையே.
                                              01.123.05
(முதல் திருமுறை - 1330).

❇️ மேல எடுத்துக்காட்டப்பட்டுள்ள பாடல்
அமைப்பு திருவிராகம் எனப்படும்.
வியாழக் குறிஞ்சி என்னும் பண்ணில் அமைந்துள்ள பாடல்.

✴️பிடியதன் என்று ஆரம்பித்து, தொடர்ந்து வரும் வார்த்தைகள் சந்த அமைப்பில் ஓசையும் நயமும் கொண்டு வேகமாக கடகடவென அடுத்தடுத்த வார்த்தைகள் வந்து பாடல் இனிமை தருகிறது அல்லவா?

🔼இது போன்றுவிரைந்து செல்லும் ஓசையும் நடையும் கொண்ட பாடல்கள் அராகம் என்று பழந்தமிழ் இலக்கணத்தில் இருந்தாலும்,  இதுவே பின் இராகம் எனப்பட்டது என்பார்  அறிஞர்*

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐

#திருவிராகம்:

🔼திருஞானசம்பந்தரால் இவ்வகைப் பதிகங்கள், இயற்றப்பெற்றதால் திருவிராகம் எனப்பட்டது.

♦️ #திருவிராகம்: இதன் இலக்கணம்:

⏺️வழியெதுகை பெறாது முடுகியல் மட்டும் பெற்ற திருஞானசம்பந்தர் இயற்றிய பதிகங்கள் திருவிராகம் எனப்படும்.

#முடுகியல்:

🔷#முடுகியல் அல்லது முடுகியல் ராகம் என்பது விரைவு நடையும், ஓசையும் அமைந்த சந்தப்பாடல்.

🔼நெகிழ்ந்த ஓசையாகிய நெட்டெழுத்துக்கள் விரவாது குற்றெழுத்துக்களால் இயன்று இடையறவு படாது பாடப்படுவது.

🔸இசை நீட்டத்திற்கு இடமின்றிப் பாடலுக்குரிய நடையில் ஒரு வகைச் சந்த ஓசையுடன்  விரைந்து செல்லுமாறு அமைக்கப்பட்ட சீர்களை உடையது முடுகியல் அடியாகும்.

🔷 பின்னாளில் தோன்றிய திருப்புகழ் போன்ற சந்த விருத்தங்கள் தோன்றக் காரணமாயிற்று என்பது அறிஞர் கூற்று*

♦️இவ்வாறு இசையும், தாளமும் இணைந்து சந்த வேகத்துடன் பாமரரும் சேர்ந்து பாட பதிகங்கள்  அமைத்து அருளியவர் நம் தமிழ் ஞானசம்பந்தரே,

🔹இவையே திருவிராகப் பதிகங்கள் என்று அழைக்கப்படுகிறது.

⚜️திருவிராகப் பதிகங்களில்
     இசைத்தன்மையும்,
     தாளச் சிறப்பும்
பெற்ற சில பாடல்களை  
     மிகவும் சிறப்பானதாக இசை நூல்   
     ஆராய்ச்சியாளர்கள்* குறிப்பிட்டு    
     சிறப்பித்துள்ளார்கள்.

🎵இசைத்தன்மை  மிகவும் சிறப்புப் பெற்றதாக குறிக்கப்படும் பாடல்கள்*....

🎼முதல் திருமுறை :

🎶பதிக எண்: 19.  தலம் : திருக்கழுமலம் பாடல் :  05
பாடல் :  தலைமதிபுனல்...
பண்   :  நட்டபாடை
இராகம் : கம்பீர நாட்டை
தாளம்   : ஆதி (சதுச்சர நடை)

பாடல் :

🎼இரண்டாம் திருமுறை :

🎶பதிக எண்: 165 .  தலம் : திருப்புகலி
பாடல் : 04
பாடல்  : மை தழுவும்...
பண்     : இந்தளம்
இராகம் : மாயாமாவை கெளவ
தாளம்   : கண்ட சாபு

🎶பதிக எண்: 236 . 
தலம்  : திருக்கோவலூர் வீரட்டம்
பாடல் : 09
பாடல் : ஆறுபட்ட ...
பண்    : நட்டராகம்
இராகம் :  பந்துவராளி
தாளம்   :  ஆதி (திசர நடை)

🎼மூன்றாம் திருமுறை :

🎶பதிக எண்: 310  தலம்: திரு ஆலவாய்
பாடல் : 07
பாடல்: கறையிலங்கு...
பண் : கெளசிகம்
இராகம் : பைரவி
தாளம் : ரூபகம்

🎶பதிக எண்: 345  தலம் : திருநள்ளாறு பாடல் : 05
பாடல் : பண்ணியல்...
பண்    : சாதாரி
இராகம் : பந்துவராளி
தாளம்    : சதுச்ர நடை

🥁தாள ரீதியில் சிறப்பு பெற்ற சில பாடல்கள் **..

⚜️முதல் திருமுறை :

🎶பதிகங்கள்: 120 - 125
பண் : வியாழக்குறிச்சி
ஜதி :  தக  திமி
            தக ஜூனு
நடை: சதுச்ர நடை

பதிகம்: 01:123: (திருவையாறு)
பாடல் :  05
பாடல் :  பிடியதன் ...

⚜️இரண்டாம் திருமுறை :

🎶பதிகங்கள்: 165 - 170
பண் : இந்தளம்
ஜதி  : தக  தகிட
            தக  தகிட
நடை: கண்ட நடை

பதிகம்: 165     தலம்: திருப்புகலி
பாடல் : 01
பாடல் : 
முன்னிய காலை ...

🎶பதிகங்கள்: 233 - 237
பண் : நட்டராகம்
ஜதி  : தகிட தகிட
நடை: திச்ர  நடை

பதிகம்: 236   தலம்: திருக்கோவலூர்.
பாடல் :01
பாடல் : 
படைகொள்கூற்றம்    வந்துமெய்ப்
பாசம்விட்ட    போதின்கண்

இடைகொள்வா    ரெமக்கிலை
யெழுகபோது  நெஞ்சமே

குடைகொள்வேந்தன்    மூதாதை
குழகன்கோவ    லூர்தனுள்

விடையதேறுங்   கொடியினான்
வீரட்டானஞ்   சேர்துமே.

⚜️மூன்றாம் திருமுறை :

🎶பதிகங்கள்: 310 - 311
பண் :  கெளசிகம்
ஜதி  :  தகிட தகிட
நடை:  திச்ர  நடை

பதிகம்: 310   தலம்: திருஆலவாய்
பாடல்  : 01

வீடலால    வாயிலாய்   விழுமியர்கள்
நின் கழல்
பாடலால   வாயிலாய்    பரவநின்ற பண்பனே
காடலால   வாயிலாய்    கபாலிநீள்க டிம்மதில்
கூடலால    வாயிலாய்    குலாயதென்ன
கொள்கையே.

🎶பதிகங்கள்: 325 - 346
பண் : சாதாரி
ஜதி  : தகதகிட  தகதகிட
நடை: கண்ட  நடை

பதிகம்: 325  தலம்: திருப்பிரமபுரம்
பாடல்  : 01
பாடல்  : சுரர் உலகு🔹....
இந்தப்பதிகப் பாடல்கள் பற்றியும் இதன்  சிறப்புகள் பற்றி மிக விரிவாக வேறு வேறு பதிவில் காணுவோம்*

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐

மேற்கண்ட பதிகங்கள் திருவிராகப் பதிகங்கள் என்று வகைப் படுத்தப்பட்டுள்ளது.

🔹தமிழ் மொழியில் - இது போன்ற அமைப்பில் - இவ்வகை சந்த இசை அமைப்பில் - பல்வேறு பண்களில் இசைப் பாடல்களை அமைத்து முதன் முதலாக ஏராளமான பதிகங்களை இயற்றியவர் கி.பி. 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ஞானசம்பந்தரே.

✳️இதனால் இவரை இசைத்தமிழ் இறைவர் என்று போற்றுகிறார்கள்;
அவ்வழி நின்று நாமும் போற்றுவோம்.

🙏பல்வேறு வலைதளத்தில் உள்ள இணைப்பில் உள்ள செயலிகள் மற்றும்

🙏இசை பேரறிஞர்களாகிய,  வீ.ப.கா.சுந்தரம்,  ஞானகுலேந்திரன், சுப்பிரமணியன், அங்கையர்கண்ணி, மு.கவிதா  முதலிய ஒப்பற்ற பேராசிரியர்கள் நூல்களிலிருந்தும் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டு வழங்கப்பெறுகிறது.
🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி நூல்களையும் தொடர் கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு உணர்வோம்.

🙏நன்றி.
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
எண்ணமும் ஆக்கமும்:
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
#திருமுறைகளில்_தமிழமுதம்:
#சம்பந்தர்_அமுதம்
#தமிழரின்பொக்கிஷம்

https://m.facebook.com/story.php?story_fbid=5772553902819819&id=100001957991710

No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...