#சம்பந்தர்அமுதம்
#மொழிமாற்று
பதிவு : இரண்டு (பாடல் 2, 3.)
🙏🛐🙇🙏🏻🙇♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼♀️🙏🙇🙏🏻
நம் பக்தி இலக்கியத்தில்
ஒப்பற்ற நம் தமிழ் மொழியின்
அற்புத யாப்பமைந்த சிறப்பான ஒரு பதிகப் பாடல் அமைப்புக் குறித்து
ஒரு துளியேனும் நாம் சிந்திக்க முயலலாமே என்ற வகையில் பதிவிடப்படுகிறது.
🙏🙇♂️🙏🏻🙇🏻♂️🙏🏼🙇🏼♂️🙏🏽🙇🏻♂️🙏🏽🙇🏽♂️🙏🏾🙇🏾♂️🙏
⚜️இதுவரை நாம் திருஞான சம்பந்தரின் தேவாரத் திருமுறைப் பாடல்களில்
#சம்பந்தர்தூது
#எண்ணலங்காரம்
#ஏகபாதம்
#மடக்கணி
என்ற தலைப்பின் கீழ் தூது பாடல்களும், எண்ணலங்காரம், ஏகபாதம் மற்றும் மடக்கணி என்னும் இயமகம் முதலிய யாப்பு வகைப் பாடல்களைப் பற்றி சிந்தித்து வந்தோம்.
தற்போது #மொழிமாற்று என்ற வகை யாப்பு அமைப்பு பாடல்கள் பற்றி சிந்திக்கலாம்.
🙏🙇♂️🙏🏻🙇🏻♂️🙏🏼🙇🏼♂️🙏🏽🙇🏻♂️🙏🏽🙇🏽♂️🙏🏾🙇🏾♂️🙏
👂மொழிமாற்று என்றால் என்ன? அதன் அமைப்பை பற்றியும் கூறவும்.
👄தமிழ் இலக்கியத்தில் 20 க்கும் மேற்பட்ட அமைப்பில் பாடல்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இவை
யாப்பு வகைகள் என்று அறியப்படும்.
இவற்றின் ஒரு வகையே மொழிமாற்று எனப்படுகிறது. ஒரு பாடலில்
💠ஒரே அடியில் மாறியிருக்கின்ற சொற்களைப் பொருளுக்கேற்றவாறு மாற்றி அமைத்துக்கொள்ளுதல் மொழிமாற்று எனப்படும். இதனை இலக்கண நூலார் “மொழிமாற்றுப் பொருள்கோள்” என்பர்.
🙏🙇♂️🙏🏻🙇🏻♂️🙏🏼🙇🏼♂️🙏🏽🙇🏻♂️🙏🏽🙇🏽♂️🙏🏾🙇🏾♂️🙏
👂இந்த வகை அமைப்பில் சம்பந்தர் அருளிய பதிகம் எது? இதன் சிறப்பு யாது?
👄 தேவாரம் - முதல் திருமுறையில் வரும் ஞானசம்பந்தர் பதிகம் - 117
தலம் திருப்பிரமபுரம்
பாடல் - 1259 முதல் 1270 வரையில் உள்ளது. 12 பாடல்கள் அடங்கியுள்ளது.
❇️பதிகத்தின் சிறப்பு:
❄️சிறு குழந்தையாகிய அருள் ஞானசம்பந்தர் சொற்களை மாற்றி மாற்றி வைத்து விளயாட்டுப் போல அமைந்த பாடல்கள்.
❄️அப்படியே படித்தால் பொருள் விளங்காது.
❄️முதலில் முழு பாடலையும் உணர்ந்து படித்து பின்பு பொருளுக்கு ஏற்ப முன் பின்னாக வார்த்தைகளை மாற்றிக் கொண்டு கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்.
💠இதை மிறை கவி என்றும் கூறுவர்.
மிறைக்கவி என்பது எளிதில் பொருள் புரியாமல் மூளையைக் கசக்கி, சிந்தித்து சொற்களை மாற்றி அமைத்து தான்
பொருள் உணர வேண்டும்.
அத்தகைய சிறப்பு பாடல்கள் கொண்டது இப்பதிகம்.
🏔️மொத்தம் 12 பாடல்கள். சீர்காழிப் பதியின் 12 பெயர்கள் சிறப்பும் ஒவ்வொரு பாடல்களிலும் வருவது போல அமைத்துள்ளது மேலும் சிறப்பு.
🙏🙇♂️🙏🏻🙇🏻♂️🙏🏼🙇🏼♂️🙏🏽🙇🏻♂️🙏🏽🙇🏽♂️🙏🏾🙇🏾♂️🙏
பாடல் - 2.
கற்றைச் சடையது கங்கண
முன்கையில் திங்கள் கங்கை
பற்றித்து முப்புரம் பார்படைத்
தோன்றலை சுட்டதுபண்டு
எற்றித்துப் பாம்பை அணிந்தது
கூற்றை எழில் விளங்கும்
வெற்றிச் சிலைமதில் வேணு
புரத்தெங்கள் வேதியரே
1260. திருமுறை 01-117.02
🙏🙇♂️🙏🏻🙇🏻♂️🙏🏼🙇🏼♂️🙏🏽🙇🏻♂️🙏🏽🙇🏽♂️🙏🏾🙇🏾♂️🙏
🔰இதை இப்படி பொருளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொண்டு பொருள் காண வேண்டும்
கற்றைச் சடையது திங்கள் கங்கை
முன்கையில் கங்கணம் பற்றித்து
முப்புரம் சுட்டது
பார்ப் படைத்தோன் தலை பற்றித்து
பாம்பை அணிந்தது
கூற்றை எற்றித்து
எழில் விளங்கும் வெற்றிச் சிலை மதில்
வேணுபுரத்தெங்கள் வேதியரே.
💠📝பொருள் குறிப்பு:
⚛️வேணுபுரத்து வேதியரின் சடையது திங்களும் கங்கையும்;
⚛️முன்கையிற் கங்கணமாக அணிந்தது பாம்பு;
⚛️கையில் பற்றியது பிரமன் தலை;
⚛️சுட்டது முப்புரம் என்கின்றது.
⚛️பண்டு கூற்றை எற்றித்து என மொழிமாற்றிக் காண்க.
⚛️பற்றித்து எற்றித்து என்பன பற்றிற்று எற்றிற்று என்பதன் மரூஉ.
⚛️எற்றித்து - உதைத்து
❇️🗣️ விளக்கம்:
கருங்கல்லால் அழகு விளங்குவதாய் அமைக்கப்பட்ட வெற்றித் திருமதில் சூழ விளங்கும் வேணுபுரத்துள் உறையும் எங்கள் வேதியராகிய இறைவர்;
கற்றையான சடையின்கண் திங்களையும் கங்கையையும் கொண்டவர்.
முன்கையில் பாம்பைக் கங்கணமாக அணிந்தவர்.
கையில் உலகைப் படைத்த பிரமனது தலையோட்டை உண்கலமாகப் பற்றியிருப்பவர்.
முப்புரங்களைச் சுட்டெரித்தவர். முற்காலத்தில் மார்க்கண்டேயர் பொருட்டு எமனை உதைத்தவர்.
பாம்பை அணிகலனாகப் பூண்டவர்.
🏔️தலக்குறிப்பு: வேணுபுரம் :
இத்தலத்தில், சூரபன்மனுக்கு அஞ்சிய இந்திரன் மூங்கில் (வேணு) உருவம் கொண்டு தவம் செய்ததால் இப்பெயராம்.
🙏🙇♂️🙏🏻🙇🏻♂️🙏🏼🙇🏼♂️🙏🏽🙇🏻♂️🙏🏽🙇🏽♂️🙏🏾🙇🏾♂️🙏
பாடல் 3.
கூவிளம் கையது பேரி
சடை முடிக் கூட்டத்தது
தூவிளங் கும்பொடிப் பூண்டது
பூசிற்றுத் துத்திநாகம்
எவிளங் கும்நுத லாளையும்
பாகம் உரித்தனரின்
பூவிளம் சோலைப் புகலியுள்
மேவிய புண்ணியரே
1261. திருமுறை 01-117.03
🙏🙇♂️🙏🏻🙇🏻♂️🙏🏼🙇🏼♂️🙏🏽🙇🏻♂️🙏🏽🙇🏽♂️🙏🏾🙇🏾♂️🙏
🔰இதை இப்படி பொருளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொண்டு பொருள் காண வேண்டும்.
கூவிளம் சடைமுடிக் கூட்டத்தது;
பேரி கையது;
தூவிளங்கும் பொடி பூசிற்று;
துத்திநாகம் பூண்டது
ஏவிளங்கும் நுதலாளையும்
பாகம் உரித்தனரின்
பூவிளம் சோலைப் புகலியுள்
மேவிய புண்ணியரே.
என மொழிமாற்றிப் பொருள்கொள்க.
💠📝பொருள் குறிப்பு:
🔷கூவிளம் - வில்வம்.
🔷பேரி - உடுக்கை.
🔷தூ - தூய்மை.
🔷பொடி - விபூதி.
🔷துத்தி - படப்பொறி.
🔷ஏவிளங்குநுதல் - வில்போல் விளங்கும் நெற்றியையுடையாள் என்றது உமாதேவியை.
🔷ஏ என்றது ஆகுபெயராக வில்லை உணர்த்திற்று.
🔷உரித்தனர் - தோலைத் தனியாக உரித்துப் பூண்டனர்.
🔷புகலி - சீகாழி.
💠📝பாடல் விளக்கம்:
இனிய பூக்களை உடைய இளஞ்சோலைகளால் சூழப்பட்ட புகலியுள் மேவிய புண்ணியராகிய இறைவர்,
அடர்த்தியான சடைமுடியில் வில்வம் அணிந்தவர்.
கையில் பேரி (உடுக்கை) என்னும் தோற்பறையை உடையவர்.
தூய்மையோடு விளங்கும் திருநீற்றுப் பொடியைப் பூசியவர்.
படப் பொறிகளோடு கூடிய நாகத்தை அணிகலனாக் கொண்டவர்.
ஆனையை உரித்தவர்.
அம்பொடு கூடிய வில் போன்று வளைந்த நெற்றியை உடைய உமையம்மையை ஒரு பாகத்தே கொண்டவர்.
🏔️தலக்குறிப்பு: புகலி : சூராதி அவுணர்கட்கு அஞ்சிய தேவர்கள்
இத்தலத்தில் புகலடைந்ததால் இப்பெயர் (புகல் = அடைக்கலம்). (சீர்காழி).
🙏🙇♂️🙏🏻🙇🏻♂️🙏🏼🙇🏼♂️🙏🏽🙇🏻♂️🙏🏽🙇🏽♂️🙏🏾🙇🏾♂️🙏
3 வயதில் இறைவன் அருள் பெற்று ஞானப்பால் உண்டு பாலகனாய் இருந்து தமிழ்ப் பாடல்களினால் இறைவனை அருச்சித்து, பத்தி இலக்கியத்தில் தமிழின் பெருமையை உலகறியச் செய்த
ஆளுடைய பிள்ளையாரின் அமுத பாடல்களின் ஒரு துளி பருகினோம்; இறையருளால்.
இதன் பெருமையை எண்ணிப் போற்றுவோம்.
வணக்கம்.
நன்றி
🙏🛐🙇🙏🏻🙇♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼♀️🙏🙇
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
🙏🛐🙇🙏🏻🙇♀️🙏🏼🔱🔯🙏🏼🙇🏼♀️🙏🙇
பதிவு: ஒன்று பாடல் 1 விளக்கம்:
https://m.facebook.com/story.php?story_fbid=4018811291527431&id=100001957991710
2.
https://m.facebook.com/story.php?story_fbid=5743615612380315&id=100001957991710
No comments:
Post a Comment