#திருமுறைகளில்_தமிழமுதம்
#சம்பந்தர்இசைஅமுதம்
#வழிமொழிதிருவிராகம்
பதிவு : இரண்டு பாடல் 2.
🙏🙇♂️அன்பு வேண்டுகோள்:🙇♂️🙏
🗣️வாய்பேச்சுக் கோளாறு இன்றி நல்ல உரையாடல், குரல் வளம் நிச்சயம் கிடைக்க இப்பதிகம் உதவும்.
👱குழந்தைகளுக்கு அவசியம் கற்றுக்கொடுக்க வேண்டிய பாடல்
📚தமிழ் மொழி வளம் உயர்வு உணர்ந்து அறிய உதவும் அற்புத பதிகம் இது.
👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.
🌬️2. இப்பதிவுகளில் உள்ள தேவாரப் பாடல்களை குறைந்தபட்சம் இரண்டு முறைகளாவது வாய் விட்டு உச்சரித்து படித்தல் அவசியம்.
📚3. இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே.
🛐🙏
🌀ஞானசம்பந்தர் அருளிய அற்புத இசைத் தமிழ் பதிகங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.
இத்தகைய பாடல்கள் தமிழரின் இசை பொக்கிஷம்:
#திருவிராகம், #வழிமொழிதிருவிராகம்,
#வண்ணகம் #முடுக்கியல் #அடுக்கியல்
இவை பற்றி முன்பதிவுகளில் சிந்தித்தோம்.
#வழிமொழிதிருவிராகம் பதிகப் பாடலையும் அதன் விளக்கங்களயும், சிறப்புகளையும் தொடர்ந்து இப்பதிவில் பார்ப்போம்.
🅾️#வழிமொழிதிருவிராகம்:
⏺️இலக்கணம் :
⏏️குற்றெழுத்துப் பயின்று வரும் முடுகிய ஓசையுடையதாய் அடி முதற்சீரின் இரண்டாம் எழுத்து சீர்தோறும் ஒன்றி வழியெதுகையால் வரத் தொடுப்பது இவ்வகையாம்.
(முடுகிய என்பது வேகமாக ஓடும் தாள அமைப்பு எனக் கொள்ளலாம்)
🔸இதன் ஓசை அமைப்பில் பாடல்
தனனதன தனனதன தனனதன
தனனதன தனனதனனா
என அமைகிறது.
🧿இப்பதிகத்தின் திருக்கடைக்காப்பில் (இறுதிப் பாடலில்) திருஞானசம்பந்தர் 'வழிமொழிகள் மொழி தகையவே' என்று குறிப்பிட்டு சிறப்பிப்பதாலே இந்தப் பதிகம் வழிமொழி திருவிராகம் என்னும் பெயர் சூட்டப்பட்டது.
🔵
🌟ஞானசம்பந்தர் அருளிய அற்புத இசைத் தமிழ் பதிகங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.
🔹சம்பந்தர் தேவாரம் மூன்றாம் திருமுறை: தலம்: திருப்பிரமபுரம்:
பதிகம்: 325 (67)
பாடல்: 1-12 (714-725)
இந்தப் பதிகம் 12 பாடல்கள் கொண்டது.
🌟சீர்காழிப்பதியின் 12 பெயர்கள் வந்த வழியை - வரலாற்றிணை - விளக்கத் தக்க வகையில் அமைந்துள்ளது.
🌀சாதாரி என்ற பண் வகையினது.
🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐
பாடல் 2
🔹இரண்டாவது பாடலில் வேணுபுரம் என்ற பெயர் வருவதால் 'ண' கரவரிசை வருமாரு அமைத்துள்ளார்.
பாடல் : 02. (வேணுபுரம்):
💠இந்திரனுக்காக, விநாயகரைப் படைத்து
கஜாசுரனை அழித்து, இறைவன் அருளியதால், மூங்கில் உருவம் கொண்டு இந்திரன் தவம் செய்த தலம்.
பாடல் : 715
தாணுமிகு ஆணிசைகொடு ஆணுவியர்
பேணுமது காணுமளவிற்
கோணுநுதல் நீள்நயனி கோணில்பிடி
மாணிமது நாணும் வகையே
ஏணுகரி புணழிய ஆணியல்கொண்
மாணிபதி சேண்அமரர் கோன்
வேணுவினை யேணிநகர் காணிதிவி
காணநடு வேணுபுரமே.
-03.325.02 (715)
பொருள் :
இனிமையாக அன்பு செலுத்தி வணங்கும் தேவர்கள், கொடுமை புரியும் அசுரர்களால் நலிவடைந்து, அஞ்சியும் வியர்த்தும் வணங்கி ஏத்திய நிலையில், ஈசன் வலிமை மிகுந்த ஆண்யானயின் வடிவத்தைக் கொண்டருளினார். வளைந்த நெற்றியும் நீண்ட விழியும் உடைய உமாதேவியானவர் குற்றம் இல்லாத பெண் யானையாகத் தோன்றினார். அந்நிலையில் மது என்னும் அசுரன் நாணுமாறும், வலிமை கொண்டு தீமை செய்த கயமுகாசுரன் அழியுமாறும் ஆற்றல் மிக்க அழகிய விநாயகக் கடவுளைத்தோன்ற செய்வித்த பெருமைக்கு உரிய ஈசன் விளங்கும் பதியாவது, தேவர்களின் தலைவனாகிய இந்திரன் மூங்கிலின் மேலிருந்து தனது பதியை நோக்கும் வேணுபுரமே.
ஆணவமலத்தின் இயல்புதனை யானையாக உருவகப்படுத்தப்படும் போது 3 வகை சிறப்பு நோக்கத்தக்கது.
கோண் இல் பிடி=குற்றம் இல்லாத யானை = ஈசன்.
விளக்கம்:
தாணு - சிவபெருமான்
ஆணு - ( தன் ) அன்பர்களாகிய தேவர்கள்.
வியர் பேணு மது - (கயமுகாசுரனால்) அச்சம் கொள்வதை.
காணும் அளவில் - அறிந்ததும்.
மிகு - வலிமை மிகுந்த.
ஆண் இசைகொடு - ஆண் யானையின் வடிவைக்காண இசைந்து. ( நிற்க - அதற்கேற்ப.)
கோணுநுதல் - வளைந்த நெற்றியை. நீள்நயனி - நீண்ட கண்ணையுமுடையவளாகிய அம்பிகை. கோண்இல் - குற்றமில்லாத படி.
பிடி - பெண் யானையின் உருவை.
மாணி - பெருமையையுடையவளாய்க் காண.
மது - மது என்ற அசுரனும்.
நாணும் வகை ஏணு - வெட்கும்படி வலிமைகொண்ட.
கரி - கயமுகாசுரன்.
பூண் - தான் மேற்கொண்ட தீய தொழில்கள்.
அழிய - அழியும்படி.
ஆண் - ஆண் தகையாகிய விநாயகக் கடவுள். ( கயமுகாசுரனுக்குப் பேடியர் போல் அஞ்சிய தேவர் துயரந் தவிர்த்த வீரம் குறிக்க ஆண் என்றனர் )
இயல் - ( அன்பர்க்கு அனுக்கிரகிக்கும் ) அருளை,
கொள் - கொள் வித்த.
மாணி - பெருமையுடையோனாகிய சிவபெருமானின்.
பதி - இடம்.
சேண் - வானுலகில் உள்ள,
அமரர்கோன் - இந்திரன்.
வேணு வினை - மூங்கிலை.
ஏணி - ஏணியாகக்கொண்டு.
காண்இல் - தான் நேரேகாண முடியாத. திவி - தேவலோகத்தின் நிலையைக் காண - ஒளிந்து காணும் பொருட்டு.
நடு - நட்ட,
வேணுபுரம் - வேணுபுரமாம்
ஆணு - அன்பு
🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐
🎶மிக அற்புதமான பாடல். மிக மிக முக்கியமானது.
🌟இப்பாடலை திரும்பத் திரும்ப ஒதிக்கொண்டுவந்தால் நாவிற்கும் உள்ளத்திற்கும் அருமருந்து.
⏺️சந்தப்பாக்களின் சீர்களில் ஒவ்வொர் உயிரும் ஓரசை என்பதால் ஓசை நயமும் தாளமும் நிறைய அமைத்துள்ளதை நாம் சிந்திக்க வேண்டும்.
⏺️ ஒவ்வொறு பாடலிலும் சீர்காழி பதியின் பெயரில் வரும் ஒரு தமிழ் எழுத்தை பாடல் முழுதும் சிறப்புடன் சீர் அமைத்துள்ளது மிகவும் அற்புதமானது.
🔷இது போன்ற சந்தப் பாடல்களை கற்றுணர்ந்து அருணகிரியார் தம்முடைய திருப்புகழ் பாடல்களை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
🔹திருஞானசம்பந்தப்பிள்ளையாரை முருகனின் திரு அவதாரமாகக் கொண்டவர் அருணகிரிநாதர். இதைக் குறிப்பிட்டு தம்பாடல்களில் சிறப்பு செய்துள்ளார்.
✔️இராமலிங்கசுவாமிகளும் இக்கருத்தை ஏற்கிறார்.
💠பிற்கால இசைத் தமிழ் இலக்கியத்தின் அடிப்படையாக அமைந்தப் பாடல்கள்
♦️அருட் செல்வர் தமிழ் விரகனார், திருஞானசம்பந்தரின் இறையருள் பெற்ற இப் பதிகப் பாடல்களை போற்றி பரவுதல் செய்வோம்.
📚பாடல்,பொருள்,விளக்கம் பல நூல், தரவுகளிலிருந்து தொகுத்துத் தரப்பட்டுள்ளது.
🛡️சிந்தனைக்கும் எட்டாத ஞானசம்பந்தரின் அற்புதத் தமிழின் இசைப்பாடல் சிறப்பை உணருவோம். இதுவே, தமிழரின்பொக்கிஷம்.
🙇♂️நன்றி🙏
🛐💚🕉️🧡☸️💜⚛️💙🔯💛🙏🙆🏼🙇🏼♂️
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
முதல் பதிவு : பாடல் 1.
https://m.facebook.com/story.php?story_fbid=5787884447953431&id=100001957991710
No comments:
Post a Comment