#திருமுறைசிந்தனைகள்
#சம்பந்தர்காட்சிகள்
தமிழ்நாட்டில் அக்காலத்தில், கல்விமுறை பாடத்திட்டத்தின்படி, சிறுபிள்ளைகள் அனைவருக்கும் முதன் முதலில் கட்டாயமாக கற்றுக்கொடுப்பது நல்ல ஒழுக்கமும், பண்பாடும் உள்ள நல்ல பாடல்கள்தான்.
'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்'
'ஆலயம் தொழுவது சாலவும் நன்று''
என்று இந்த மாதிரி கற்றுக் கொடுக்கும் போது தமிழ் பண்பாடும், கலாச்சாரமும், நல்லொழுக்கமும் வளர்ந்து, நல்லக் குடும்பங்களாக மேம்பட்டிருந்தது; இதை யாராலும் மறுக்க இயலாது.
💙
நமது தமிழ் மொழியில் உள்ள நூல்களில் எல்லாம் தமிழ் பண்பாடுகளைப் பக்தியுடன் கலந்து வைத்து இருந்ததால், இப்படிப்பட்ட உயர்ந்த நல்லொழுக்கமான அன்பு, பாசம், பக்தியும் கொண்ட வாழ்க்கை அமைப்பு உடையவர்களாகத் தமிழகம் வளர்ந்து இருந்தது. இதனால், உலக அளவில் நம் பன்பாடுகள் சிறப்பானது என்று ஏற்று , பல நாடுகளுக்கும் பரவி பார்போற்றும் அளவிற்கு வளர்ந்து சிறப்பு பெற்றிருந்தோம்.
🧡
அதிகாலையில் எழுவது, நீராடுவது, ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும், ஆலயம் சென்று இருவேளைகள் தொழவேண்டும் என்ற பண்பாடுகள் இருந்து வந்திருக்கிறது. பக்தியும், நல்லொழுக்கம் மிக்க நல்ல மாந்தர்கள் மிகுந்து வசித்து வந்த அந்நகரில் பல தொழில்களும் வளர்ந்து, செழிப்புடன் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.
இதை நாம் ஆதாரம் செய்துகொள்ள பல பாடல்கள் நமது திருமுறைகளில் உள்ளது.
தேவாரம் முதலாம் திருமுறையில், தமிழ் விரகனார், நம் தமிழ் ஞானசம்பந்தர் தன்னுடைய பல பாடல்கள் மூலம் விவரித்துள்ளார்.
அப்படியுள்ள ஒரு பாடலைப் பற்றி சற்று சிந்திப்போம்.
1.
இந்த பாடல்களை கவனியுங்கள்.
அந்நாளில், திருப்புகலி (சீர்காழி) நகர் எப்படி பொலிவுடன் விளங்கிற்று என்று.
🛐
மனம் கமழும் நீண்ட கூந்தல் கொண்ட பெண்டீர்கள் சோலைகள் மிகுந்த சுனைகளில் நீராடி நாள்தோறும் இறைவனை துதிசெய்வார்கள்.
அந்நகரில் உள்ள கரும்பு ஆலைகளில் மிகுந்த புகையானது, ஆகாயத்தில் சூழ்ந்து, மூடி, கதிரவனின் ஒளியைத் தடுத்து, இருள் சூழ வைத்து காலைப் பொழுதை மாலை நேரம் போல மாற்றியிருந்தது.
☸️
நம் தமிழக நகரங்கள் ஆலைகளும், சோலைகளும் சிறப்பான வளத்துடன் மட்டுமல்ல,
காலையில் எழுந்து நீராடி, இறைவனை மகளிரும் இறைவனை இசைபாடி துதிசெய்யும் பண்பாட்டையும் இப்பாடலின் மூலம் விளக்குகிறார் நம் தமிழ் விரகனார்.
💚
காலை மாலையாகும் புகலிப் பாடல் இதோ...
♥️
தேவாரம் முதல் திருமுறை:
தலம் : திருப்புகலி : பதிகம்: 104. பாடல் 2. (1123):
🔯
ஏல மலிகுழலார் இசைபாடி
எழுந்தருளால் சென்று
சோலை மலிசுனையில்
குடைந்தாடித் துதிசெய்ய
ஆலை மலிபுகைபோய் அண்டர்வானத்தை
மூடிநின்று நல்ல
மாலை யது செய்யும்
புகலிப் பதியாமே.
🛐
பொருள் :
நறுமணம் கமழ்கின்ற கூந்தலையுடைய மகளிர் இசைபாடி, காலையில் எழுந்து ஈசன் வண்ணத்தில் பதிந்து சோலைகளில் விளங்கும் சுனையில் குடைந்து நீராடித் துதிசெய்ய, ஆலைகளிலிருந்து எழும்புகையானது மேலே ஆகாயத்தில் பரவி மூடும்படியாகத் தவழ்ந்து, கதிரவன் ஒளியைத் தடுத்து நிறுத்தும் அமைப்பில் திகழ, அது மாலை நேரம் போன்று பொலியச் செய்யும் எழில் மிக்க புகலிநகராகும்.
(ஆலை மலி புகை - வெல்லம் தயாரிக்கும் வகையாகக் கரும்பாலையிலிருந்து வரும் புகை.)
💜💚❤️
இன்றைய நிலமையில், நாட்டு நடப்புகளை ஆராய்ந்தால்;
நமது நல்ல பண்பாடு, கலாச்சாரம், பக்தி, பாரம்பரியம், பண்பாடு, சுய ஒழுக்கம் எல்லாவற்றையும் கொஞ்ச கொஞ்சமாக இழந்து கொண்டு இருக்கின்றோமோ, இதற்கு யார் காரணமாவார்கள்? என்ற சிந்தனையும்,
பகுத்தறிவுவாதிகள் என்ற போர்வையில், தங்கள் சுயநல பதவி வெறியாலும், மதவெறியாலும்,
நாம் பழமையான, பக்தி உணர்வுகளையும், தமிழ் பண்பாடுகளும் குறைந்து, செல்வ சிறப்பும், வளமும் குன்றுமோ என்ற அச்சமும் மனதில் சில சமயங்களில் எச்சரிக்கையும், நம் சிந்தனையில் வருகிறது. இல்லையா?
நன்றி,
வணக்கம்.
💜🙏❤️🙏💚🙏💛🙏💙🙏💜🙏❤️🙏💚🙏
என்றும் அன்புடன் #சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
💜🙏❤️🙏💚🙏💛🙏💙🙏💜🙏❤️🙏💚🙏
No comments:
Post a Comment