Friday, June 25, 2021

வழிமொழிதிருவிராகம் - சம்பந்தர் இசையமுதம் - பதிவு - 1 - பாடல் - 1

#திருமுறைகளில்_தமிழமுதம்
#சம்பந்தர்இசைஅமுதம்
#வழிமொழிதிருவிராகம்
பதிவு : ஒன்று. 

🙏🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♂️🙏

🗣️வாய்பேச்சுக் கோளாறு இன்றி நல்ல உரையாடல், குரல் வளம் பெறுவதற்கு, ஆர்வமும், பயிற்சியும் கொண்டு முயற்சி செய்தால், 
இப்பதிகம் பலன் தருவது நிச்சயம்.

👱குழந்தைகளுக்கு அவசியம் கற்றுக்கொடுக்க வேண்டிய பாடல்

📚தமிழ் மொழி வளம் உயர்வு உணர்ந்து அறிய உதவும் அற்புத சந்தமும், தாளமும் நிறைந்த பாடல்கள் உடைய பதிகம் இது.

👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.

🌬️2. இப்பதிவுகளில் உள்ள தேவாரப் பாடல்களை குறைந்தபட்சம் இரண்டு முறைகளாவது வாய் விட்டு உச்சரித்து படித்தல் அவசியம்.

📚3. இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே. 

🛐🙏
🌀ஞானசம்பந்தர் அருளிய அற்புத இசைத் தமிழ் பதிகங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.
இத்தகைய பாடல்கள் தமிழரின் இசை பொக்கிஷம்

#திருவிராகம், #வழிமொழிதிருவிராகம்,
#வண்ணகம் #முடுக்கியல் #அடுக்கியல் 
இவை பற்றி முன்பதிவுகளில் சிந்தித்தோம்.
#வழிமொழிதிருவிராகம் பதிகப் பாடலையும் அதன் விளக்கங்களயும், சிறப்புகளையும் தொடர்ந்து இப்பதிவில் பார்ப்போம்.

🅾️#வழிமொழிதிருவிராகம்:
⏺️இலக்கணம் :
⏏️குற்றெழுத்துப் பயின்று வரும் முடுகிய ஓசையுடையதாய் அடி முதற்சீரின் இரண்டாம் எழுத்து சீர்தோறும் ஒன்றி வழியெதுகையால் வரத் தொடுப்பது இவ்வகையாம்.
(முடுகிய என்பது வேகமாக ஓடும் தாள அமைப்பு எனக் கொள்ளலாம்)

🔸இதன் ஓசை அமைப்பில் பாடல் 

தனனதன தனனதன தனனதன  
              தனனதன தனனதனனா

என அமைகிறது.

 🧿இப்பதிகத்தின் திருக்கடைக்காப்பில் (இறுதிப் பாடலில்) திருஞானசம்பந்தர் 'வழிமொழிகள் மொழி தகையவே' என்று குறிப்பிட்டு சிறப்பிப்பதாலே இந்தப் பதிகம் வழிமொழி திருவிராகம் என்னும் பெயர் சூட்டப்பட்டது.
🔵
🌟ஞானசம்பந்தர் அருளிய அற்புத இசைத் தமிழ் பதிகங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.

🔹சம்பந்தர் தேவாரம் மூன்றாம் திருமுறை: தலம்: திருப்பிரமபுரம்:
பதிகம்: 325 (67) 
பாடல்: 1-12 (714-725)
இந்தப் பதிகம் 12 பாடல்கள் கொண்டது.
🌀சாதாரி என்ற பண் வகையினது.

🌟சீர்காழிப்பதியின் 12 பெயர்கள் வந்த வழியை - வரலாற்றிணை - விளக்கத் தக்க வகையில் அமைந்துள்ளது.

🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐
பாடல்: 01 -
💠 திருப்பிரமபுரம்: படைப்புத் தொழில் வேண்டி, பிரம்மன் தங்கி வழிபட்டு இறையருளைப் பெற்றதால் இப்பெயர்.

🔹இந்தப் பதிகத்தின் முதல் பாடல் பிரம்மபுரம் என்ற சீர்காழி பதியின் பெயர் வந்த வழியை சொல்லும்.

✳️பாடலில் 'ர' கரமாக சீர் அமைத்துள்ளார்.

சுரர்உலகு நரர்கள்பயில் தரணிதல
           முரன் அழிய அரணமதில்முப்

புரம்எரிய விரவுவகை சரவிசைகொள்
           கரமுடைய பரமன் இடமாம்

வரம்அருள வரன்முறையின் 
     நிரைநிறைகொள்
           வருசுருதி சிரவுரையினாற்

பிரமன்உயர் அரன்எழில்கொள் 
      சரணஇணை
              பரவவளர் பிரமபுரமே.

                                             - 0:3:325:01
பொருள் :
ஈசன், தேவர்கள் உறைகின்ற விண்ணுலகமும், நரர்கள் எனப்படும் மனிதர்கள் வாழும் இப்பூவுலகமும் மாறுபட்டு அழியுமாறு செய்த கோட்டை மதில்களை உடைய முப்புரங்களும் எரிந்து சாம்பலாகுமாறு, ஒரு சரத்தை விரைவாகச் செலுத்தும் ஆற்றலுடையவர். அப்பெருமானுடைய இடமாவது, பிரமன், தலையாய வேத வாசகங்களால் அரனாரின் எழில் மிகுந்த புகழை ஒதிச் சரணடைந்து இணை மலரடியைப் பரவத் திகழும் பிரமபுரமே.

விளக்கம்:.
சுரர் உலகும் - தேவலோகமும்
நரர்கள் பயில் - மனிதர் வாழும்.
தரணி தலம் - பூலோகமும், 
முரண் அழிய - வலிமை அழியும்படி. ( அதனால்,) 
அரணம் - காவலாகிய. 

முப்புரம் - முப்புர முடிய. 
விரவுவகை எரிய - கலந்து பல இடமும் எரியும்படி. 
சரவிசை - அம்பின் விசையால்
கொள் - ( அவ்அம்பைக் ) கொண்ட, 
கரம் உடைய, பரமன் இடமாம். 

நிரை - வரிசையாக, 
வரன்முறையின் வரு - வரன்முறையில் ஓதிவருகின்ற. 
நிறைகொள் - நிறைவையுடைய.
சுருதி சிரம் - வேத முடிவாகிய உபநிடதங்களின், 
உரையினால் - வசனங்களினால். 

உயர் - எவரினும் உயர்ந்த, 
அரன் - சிவபெருமானின். 
எழில் கொள் - அழகையுடைய, 
சரண இணை - இரு திருவடிகளையும். வரம் அருள - தனக்கு வரம் அருள்வான் வேண்டி, (பிரமன்)
பரவ - துதிக்க. 
வளர் - புகழால் ஓங்கிய. 
பிரமபுரமே - பிரமபுரம் என்னும் பெயர்பெற்ற தலமாம்.
🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐

🎶மிக அற்புதமான பாடல். மிக மிக முக்கியமானது. 

🌟இப்பாடலை திரும்பத் திரும்ப ஒதிக்கொண்டுவந்தால் நாவிற்கும் உள்ளத்திற்கும் அருமருந்து. 

⏺️சந்தப்பாக்களின் சீர்களில் ஒவ்வொர் உயிரும் ஓரசை என்பதால் ஓசை நயமும் தாளமும் நிறைய அமைத்துள்ளதை நாம் சிந்திக்க வேண்டும்.
⏺️ ஒவ்வொறு பாடலிலும் சீர்காழி பதியின் பெயரில் வரும் ஒரு தமிழ் எழுத்தை பாடல் முழுதும் சிறப்புடன் சீர் அமைத்துள்ளது மிகவும் அற்புதமானது. 

🔷இது போன்ற சந்தப் பாடல்களை கற்றுணர்ந்து அருணகிரியார் தம்முடைய திருப்புகழ் பாடல்களை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

🔹திருஞானசம்பந்தப்பிள்ளையாரை முருகனின் திரு அவதாரமாகக் கொண்டவர் அருணகிரிநாதர். இதைக் குறிப்பிட்டு தம்பாடல்களில் சிறப்பு செய்துள்ளார். 

✔️இராமலிங்கசுவாமிகளும் இக்கருத்தை ஏற்கிறார்.

💠பிற்கால இசைத் தமிழ் இலக்கியத்தின் அடிப்படையாக அமைந்தப் பாடல்கள்

♦️அருட் செல்வர் தமிழ் விரகனார், திருஞானசம்பந்தரின் இறையருள் பெற்ற இப் பதிகப் பாடல்களை போற்றி பரவுதல் செய்வோம்.

📚பாடல்,பொருள்,விளக்கம் பல நூல், தரவுகளிலிருந்து தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

🛡️சிந்தனைக்கும் எட்டாத ஞானசம்பந்தரின் அற்புதத் தமிழின் இசைப்பாடல் சிறப்பை உணருவோம். இதுவே, தமிழரின்பொக்கிஷம்.

🙇‍♂️நன்றி🙏
🛐💚🕉️🧡☸️💜⚛️💙🔯💛🙏🙆🏼🙇🏼‍♂️
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்)பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம் #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️29. வைக்கம் சிவன் கோவில்(Vaikom Temple):

#KERALAYATRA2024 பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்) பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம்  #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024  #பயணஅனுபவக்குறிப்புகள்🕊...