Monday, May 29, 2023

பரலிவைத்திநாத் / பரலிவைஜயநாதம் வைஜயநாதர் / வைத்தியநாதர் - மகாராஷ்ட்ரா - ஜோதிர்லிங்கம் .

பரலிவைத்திநாத் / பரலிவைஜயநாதம் வைஜயநாதர் / வைத்தியநாதர் - மகாராஷ்ட்ரா  - ஜோதிர்லிங்கம் .

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

🔥 *இது பன்னிரண்டு ஜோதி லிங்கத் தலங்களில் ஒன்று* 

🛕வழிபட்டு அருள்பெற்றவர்கள்: முப்பெரும் சக்திகளான, பராசக்தி, லட்சுமி, சரசுவதி, மற்றும் பலர்.    

🍁வைஜய நாதம் மகாராட்டிரத்தில் பரலி என்ற ஊரில் உள்ளது. 

🌟பரல்யாம் வைஜய நாதம்* என்பது ஜோதி லிங்க சுலோகம். 
 காளையார் கோயில், வைதீசுவரன் கோயில், ஆளுடையார் கோயில், இராமேசுவரம் போன்று வைஜய நாதர் திருக் கோயில் உள்ள ஊரும் பரலி வைஜய நாதம் என்றே பெயர் பெற்றுள்ளது.  

🕉️ஔரங்காபாது என்ற ஊரிலிருந்து மன்மாடு சென்று அங்கிருந்து பரலி வைஜய நாதம் செல்ல வேண்டும். 
தொடர் வண்டி நிலையத்திற்கு அருகே கோயில் உள்ளது. 

🌼மற்றொரு ஜோதி லிங்கத்தலமான ஔண்டா நாகேசுவரத்திலிருந்து மூன்று மணி நேரப் பயண தூரத்தில் பரலி வைஜய நாதம் உள்ளது. 

🌼 *பரா சக்தி லட்சுமி சரசுவதி ஆகிய மூன்று தேவியரும் அசுரனோடு செய்ய இருந்த போரில் வெற்றி பெறுவதற்காக சிவபெருமானைப் பூசித்தனர்.

 🌼தேவியர்களுக்கு *வெற்றி அருளிய ஈசனுக்கு வைஜய நாதர்* என்று பெயர். வைஜய நாதர் எழுந்தருளிய தலம் வைஜய நாதம் எனப்பட்டது.  

🛕கர்நாடகத்தில் உள்ள திருக் கோகர்ணம் மிருதேஸ்வரர் கோயில் வரலாற்றை ஜார்க்காண்டு வைதிய நாதத்திற்கு ஏற்றி உரைக்கின்றனர். 

🛕பரலியில் உள்ள வைஜய நாதமே பன்னிரண்டு ஜோதி லிங்கத் தலங்களில் ஒன்று என்பதைப் *பரல்யாம் வைஜய நாதம்* என்ற ஜோதி லிங்கப் பாடல் தொடர் மிகத் தெளிவாகக் கூறுகிறது.

🍁இருப்பினும், தற்காலத்தில் சிலர் பீகாரிலிருந்து பிரித்து அமைக்கப்பட்ட ஜார்க்காண்டு என்ற மாநிலத்தில் உள்ள வைதிய நாதர் கோயிலைப் பன்னிரு ஜோதி லிங்கத் தலங்களில் ஒன்றாகக் கூறுகிறார்கள்.

🌟வட நாட்டில் பெரும்பாலான கோயில்கள் அந்நியர்களால் இடிக்கப்பட்டுப் பெரும்பாலான ஆலயங்கள் அழிக்கப்பட்டதால், பல கோயில்களுக்கு ஆலய வரலாறு தெரியாமல் போனது.

🌟பரலியிலும் பழைய வைஜய நாதர் கோயில் பயங்கரவாத மதபாவிகளால் இடிக்கப்பட்டதால் இப்போது உள்ள வைஜய நாதர் கோயில் பிற்காலத்தில் கட்டப்பட்ட சிறிய கோயிலாகவே உள்ளது. 

🍁ஆலயத்தினை ஒட்டி சிறிய சிறிய புதிய ஆலயங்களும் பிற்காலத்தில் கட்டப்பட்டும் வழிபாடுகளில் உள்ளன.

🛐நாங்கள், ஆலயத்திலிருந்து 2 கி.மீ.தூரத்தில் இருந்த ஒரு Hotel லில் தங்கியிருந்தோம். காலையில் நடந்து சென்று ஆலயத்தை தரிசித்துவந்தோம். 
கூட்டம் அதிகம் இல்லாததால், அமைதியாக இருந்தது. நல்ல தரிசனம்.

💟முன்பு ஒருமுறை சென்றிருந்தபோது, மிகவும் இந்த ஊரில் பேருந்தை நிறுத்துவதற்கும், தங்குவதற்கும் மிக நெருக்கடியான இருந்தது. ஜோதிர்லிங்க ஆலயத்திற்கு மிகஅதிக கூட்டம் வருகிறதால், தற்போது, ஊரில் நல்ல முன்னேற்றம் வளர்ச்சி அடைந்துள்ளதை காண்கிறோம்.

18.10.2022 #மீள்தரிசனம்
#ஜோதிர்லிங்கதரிசனம்2022

#ஆலயதரிசனம்
#பரலிவைத்திநாதர்
#மகாராஷ்ட்ரா

#என்றும்அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று


பீம சங்கரம் - பீம சங்கரர் திருக்கோயில்* #பீமாசங்கர் #மகாராஷ்ட்ரா #ஜோதிர்லிங்கம்#பயணஅனுவக்குறிப்புகள்🕊️20.10.22

⚜️ *பீம சங்கரம் - பீம சங்கரர் திருக்கோயில்* 
#பீமாசங்கர் #மகாராஷ்ட்ரா  #ஜோதிர்லிங்கம்
#பயணஅனுவக்குறிப்புகள்🕊️
20.10.22

🕉️ *இது பன்னிரு  ஜோதி லிங்கத் தலங்களில் ஒன்று*.

🌟பீமாசங்கர் கோயில் (Bhimashankar Temple) என்பது மகாராட்டிர மாநிலம், புனே மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், அம்பேகாவ்ன் தாலுகாவில் டாங்கினி என்ற இடத்தில் உள்ள ஒரு குன்றிமீது அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும்.

🌟இத்தலம் புனேக்கு அருகில் உள்ள கெட் என்னும் இடத்திலிருந்து வடமேற்கில் 50 கிமீ தொலைவில் உள்ளது. இது புனேயில் இருந்து 110 கிமீ தொலைவிலும், நாசிக்கிலிருந்து 120 கிமீ தொலைவிலும் உள்ளது.

🌟பீமாஸ்கந்தர் பகுதியிலிருந்தே பீமா ஆறு உருவாகின்றது. இது தென்கிழக்காகச் சென்று ராய்ச்சூருக்கு அருகில் கிருஷ்ணா ஆற்றுடன் கலக்கிறது.

🌟 கடல் மட்டத்தில் இருந்து 3,000 அடி உயரத்தில் அடர்ந்த காடுகளிடையே, பீமா ஆற்றங்கரையில் உள்ளது.

💥பீமாசங்கரர் கோயில் புதியனவும் பழையனவுமான கட்டிடங்களின் கலவையாக உள்ளது. இக்கட்டிடங்கள் நாகரக் கட்டிடக்கலைப் பாணியில் அமைந்துள்ளன.

🌼மிதமான அளவுள்ள இக் கோயில் 18 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் கட்டப்பட்டது. இக் கோயிலின் சிகரம் நானா பட்னாவிஸ் என்பவரால் கட்டப்பட்டது.

🌼புகழ் பெற்ற மராட்டிய மன்னன் சிவாஜியும் இக் கோயிலுக்கு நன்கொடைகள் அளித்துள்ளார்.

🌼இப் பகுதியில் உள்ள பிற சிவன் கோயில்களைப் போலவே இதன் கருவறையும் கீழ் மட்டத்தில் அமைந்துள்ளது.

🌼இக் கோயில் கட்டிடங்கள் ஒப்பீட்டளவில் புதியவையாக இருந்தாலும், பீமாசங்கரம் என்னும் இக் கோயில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#பயணஅனுவக்குறிப்புகள்🕊️

🏵️மகாராஷ்ட்ரா - ஜோதிர்லிங்க யாத்ராவில்,
19.10.2022 அன்று  அஷ்ட்ட விநாயகர் ஆலயங்கள் உள்ள, சித்தக், Moron, மற்றும் Thevur, முதலிய இடங்கள் சென்று விநாயகப்பெருமான் தரிசனம் முடித்துக் கொண்டு Thevur தங்கினோம்.

🌻20.10.22 காலையில் புறப்பட்டு, ரன்ஜன்கான் என்ற ஊரில் உளள, அஷ்ட்ட விநாயகர் தரிசித்து விட்டு,  மலைப் பாதையில்   ஓரிடத்தில் தங்கி மதிய உணவு முடித்துக்கொண்டு பீமாசங்கரம்
ஆலயம் சென்றோம்.

🍁வழியெல்லாம் மலைக்காட்சிகள், மிக அற்புதமாக இருந்தது. ஒரு பெரிய அணைக்கட்டும் கண்டு களிக்கலாம்.

🌟பீமாசங்கரர் ஆலயம், இது எங்களுக்கு,   மூன்றாவது முறை தரிசனம்.  தற்போது நிறைய மாற்றங்கள் உள்ளன. சிறிய ஹோட்டல்கள், Tea shops, சிறு வணிக வளாகங்கள் அமைக்கப்ட்டு வருகிறது.

☀️ஆலயம் அருகில் தற்போது வாகனங்கள் நிறுத்தவசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

💫மலை மேல் சென்ற பின் மிகவும் அமைதியான சூழலில் உள்ள  இந்த மலைக் கோயிலை அடையப் படிகள் இறங்கிச் செல்ல வேண்டும். மிகவும் நீளமான அகலமான படிகள் ஆதலால் இறங்கி ஏறுவது சுலபம். காலந்தோறும் பல மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டுத் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.

✨கோயிலின் சிகரங்களும் சபா மண்டபமும் 18ஆம் நூற்றாண்டில் நாநாபட்டனவீஸ் என்பவரால் கட்டப்பட்டது. 1733 இல் சிம்மானாஜி சுந்தாஜி பிடேநாயக் என்ற குறுநில மன்னரால் கோயில் பலவாறு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

🌼ரகுநாத பேஷ்வாவினால் கோயிலின் பின்பக்கத்தில் அகண்ட கிணறு அமைக்கப்பட்டுள்ளது. சத்ரபதி சிவாஜி கரோகி என்ற சிற்றூரை கோயிலுக்கு கொடையாக அளித்துள்ளார்.

🌼இக்கோயிலைச் சுற்றி அகண்ட திருச்சுற்று அமைந்துள்ளது. கோயிலின் முன்மண்டபம் விசாலமானது.
கோயிலின் துண்கள், கதவுகள், விதானம் போன்றவை கலைவேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.

🌼கோயிலானது புரு மண்டபம், சபா மண்டபம், கருவறை ஆகியவற்றைக் கொண்டதாக உள்ளது.

🌼கோயிலில் வித்தியாசமான இரு நந்திகள் உள்ளன.

🌼வெளிப்புற தரைமட்டத்துக்குக் கீழே கருவறை அமைந்துள்ளது. படிக்கட்டுகளில் இறங்கிச் செல்லவேண்டும். கருவறை தரையை ஒட்டியுள்ள ஆவுடையாரில் ஒரு அடி உயர லிங்க மூலவர் உள்ளார்.

🌼பக்தர்கள் கருவறையில் லிங்கத்தை சுற்றி அமர்ந்து வழிபடுகின்றனர்.

✨கோயில் வளாகத்தில் சனியீஸ்வரன் சிற்றாலயம் அமைந்துள்ளது.

🏞️மலைப் பிரதேசம். தற்போது வாகனங்கள் நிறுத்த நல்ல வசதிகள் செய்துள்ளார்கள்.

🌄மலைப் பகுதிக்கு நேர்மேற்கில் மும்பை மாநகரம் தெரியும்.

🌸மலையின் இன்னொரு பகுதியில் மிகவும் கீழே இறங்கி சென்றால், பீமாநதி உற்பத்தி ஆகி ஓடிவரும் இடம்.

🌺பீமாசங்கரர் ஜோதிர்லிங்க ஆலயம் சுமார் 800 படிகள் கீழே இறங்கி சென்று தரிசனம் செய்ய வேண்டும். படிகள் நல்ல அகலமாகவும், நீளமாகவும் உள்ளதால், தாராளமாக இறங்கி சென்று தரிசனம் செய்யலாம்.

🍂படிகளின் இரு புறங்களிலும், வழமையான கடைகள், தின்பண்டங்கள், இனிப்புக் கடைகள் ஏராளம்.

🍀படிகளில் இறங்கி ஏரி வர முடியாதவர்களுக்காக, தற்போது, சிறிய வகை வாடகை வாகனங்கள்  ஏராளம் இருக்கின்றன.   சகப்பயணிகளில் சிலர் அவைகளில் தேவை உள்ளவர்கள், இந்த வசதிகளைப் பயன்படுத்திக்கொண்டனர்.

🌿நுழைவுவாயில்படி  இறங்குமுன்புறம் ஒரு இரும்பு Archம் உள்ளது.

🍃ஆலயம் பலமுறை  சிதைக்கப்பட்டும், சீர்த்திருத்தம் செய்யப்பட்டும் உள்ளது. இன்னமும் முழுமையான அளவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.

🌼நுழைவு வாயில் முதல் கருவரை வரை வரிசை அமைப்பு ஏற்படுத்தி உள்ளனர். நாம் முதலில், ஆலய அருகில், இறுதிப்படிகள் அடையும் போதே வரிசை அமைப்பில் செல்லவேண்டும்.

☀️கருவறை கோபுரமே மிக உயரமானது முழுவதும் கற்றளி ஆலயம். கருவரை மண்டம் உள்ளே நடுவில் சிறிய அளவில் லிங்க வடிவில் சுவாமி உள்ளார்.

🕉️பிரகாரம் தாண்டி முன்புறம் உள்ள நீண்ட, பெரிய மண்டபம் உள்ளது. கருவரை நிலைப்படி மேல்புறம்  பெரிய TV வைத்துள்ளார்கள். கருவரையில் நடைபெறும் பூசைகள் நன்கு தெரியும்.

⚛️மண்டபத்தின் வழியில் சென்று கருவரை நிலைப்படி உயரம் தாண்டி உள் சென்று சுவாமியை மிக அருகில் தரிசிக்கலாம்.
🛐கருவரை சற்று ஆழமானது. முன் மண்டபத்தில் அமர்ந்தும் வழிபாடு செய்கிறார்கள்.

☸️ஆலயத்தின் ஒரு புரம் மலைப்பகுதி மறுபுறத்தில், புதிய ஆலயங்கள், மண்டபங்கள் வைத்து, பூசை, ஹோமங்கள் செய்து  வழிபாடுகள் நடத்துகிறார்கள்.

☮️ஆலயத்தின் பிரகாரத்தில், சிறிய புராண தீர்த்தம் உள்ளது. கல்விளக்குத் தூண் உள்ளது. மிகப்பழமையாக ஆலயம் என்பதால், பல்வேறு திருப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

🔯கருவரை கோபுரத்தில், தொன்மையான நுனுக்கமான, பல்வேறு தெய்வ உருவ சிலைகள் அமைந்துள்ளது.

✡️சிதலமடைந்த பகுதிகள் மீட்கப்பட்டு, அவைகளை சரிபன்னும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

⚛️ஆலய பகுதிகள் தரிசித்து படிகள் ஏறி வாகன நிறுத்துமிடம் வந்து நாங்கள் OZAR என்ற இடத்திற்கு வந்து இரவு தங்கினோம்.

💥புராணம் 1.

✨இக் கோயில், சிவன் வெல்லமுடியாத பறக்கும் கோட்டைகளான திரிபுரங்களை எரித்த புராணக் கதையுடன் தொடர்புள்ளது. இப்போருக்குப் பின் சிவனின் உடலிலிருந்து சிந்திய வியர்வையாலேயே பீமாராத்தி ஆறு உருவானது என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

✨பீமன் என்ற அரக்கனை அழிக்க சிவபெருமான் இங்கே தோன்றி சோதிலிங்கமாக விளங்குவதால்,  பீமசங்கரம் எனப் பெயர்பெற்றது.

✨கும்பகருணனின் பல மனைவிகளில் ஒருத்தி கற்கடி என்பவளாவாள். அவள் இப்பகுதியில் உள்ள காடுகளில் வாழ்ந்த அரக்கியாவாள். கற்கடிக்கு பீமன் என்ற மகன் உண்டு. பீமன் குழந்தையாக இருந்தபோதே அவனது தந்தையான கும்பகருணன் இராமனால் கொல்லப்பட்டான். பீமன் வளர்ந்து பெரியவனான பிறகு பிரம்மனை நோக்கி கடும் தவம் செய்து, பிரம்மனிடம் வரத்தை வாங்கி தன் வலிமையை பெருக்கிக்கொண்டான். பின்னர் பூவுலக மன்னர்களை வென்று, பிறகு இந்திர லோகத்தின்மீது படையெடுத்து அவர்களையும் வென்றான்.

✨இதனையடுத்து அவனுக்கு அஞ்சிய தேவர்கள் இந்த வனப்பகுதிக்கு வந்து சிவனை நோக்கி கடும் தவம் செய்தனர். அவர்கள் முன் தோன்றிய சிவனிடம் பீமனின் கொடுமைகளில் இருந்து விடுதலை வேண்டினர். பீமனை அழிப்பதாக சிவன் அவர்களுக்கு வரம் அளித்தார்.

✨அதேசமயம் காமரூப நாட்டு அரசனும், சிவபக்கனுமான பிரியதருமன் என்பவனை போரில் வென்ற பீமன் அவரை சிறையில் அடைத்துக் கொடுமைகள் செய்தான். கொடுமைகளுக்கு ஆளான பிரியதருமனும் அவன் மனைவியும் சிறையிலேயே சிவலிங்கத்தை வைத்து சிவபூசை செய்து வந்தனர். தங்களின் துன்பத்தைப் போக்குமாறு வேண்டிவந்தனர். இதை சிறைக் காவலர்கள் பீமனிடம் கூறினர்.

✨கடும் கோபம்கொண்ட பீமன் தன் சூலத்தை எடுத்துக்கொண்டு பிரியதருமனைக் கொல்ல சிறைக்கு வந்தான். அங்கு சிவபூசை செய்துகொண்டிருந்த பிரியதருமன்மீது சூலத்தை ஏவினான். அப்போது லிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட சிவபெருமான் அவன் விட்ட சூலத்தை தன் சூலத்தால் உடைத்தார்.

✨இதனையடுத்து சிவனிடம் போரில் ஈடுபட்ட பீமனை தன் நெற்றிக்கண்ணால் சிவன் எரித்து அழித்தார்.

✨இதனையடுத்து பிரியதருமன் தான் பூசித்த இந்த லிங்கத்தில் சோதியாகத் தங்கியிருந்து என்றும் மக்களைக் காக்குமாறு வேண்டினார்.

✨அவ்வாறே சிவபெருமான் அந்த லிங்கத்திலேயே சோதிவடிவில் ஐக்கியமாகி பக்கத்களைக் காத்துவருவதாக நம்பிக்கை நிலவுகிறது.

💥புராணம் 2.

💫அம்மை யப்பனை உள்ளன்போடு வழிபட்டு வாழ்ந்த  எல்லோருக்கும் அன்னையாகவும் அத்தனாகவும் விளங்கும் பரஞ்சோதிப் பெருமான் பீமனுக்கு அம்மையப்பனாய் திருக் காட்சி தந்து அருள் புரிந்தார். 

💫 சங்காரம் (சம்ஹாரம்) என்றால் அழித்தல் என்று பொருள். இந்த இரண்டு சமசுகிருதச் சொற்களுக்கு வேறுபாடு தெரியாதவர்கள் பீம சங்கரம் என்பதை பீம சங்காரம் என்று கொண்டு பீமனை அழித்தவர் என்ற பொருளுடன் தல வரலாறு கருதுகிறது.

💫பழங்காலந்தொட்டு மலைவாசிகளால் வழிபட்டுவந்த இக்கோயில், அவ்வப்போது பகுதி பகுதியாக கட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. பேஷ்வா காலங்களில் கோயில் முழுமை பெற்று, வைதீக முறைப்படி வழிபாடு தொடங்கியதாம்.

#பயணஅனுவக்குறிப்புகள்🕊️

🌼கோயிலின் அருகே  பெரிய ஊர் ஏதும் இல்லாததால் கோயிலுக்கு அருகில் தங்கும் வசதியும் உணவு வசதியும் தற்போது சிறிய அளவில்தான் உள்ள நிலமையால், புதிய  முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

🌼ஜோதிர்லிங்க தரிசனம் முடிந்து,
0ZAR ஆலயம் சென்று அஷ்ட்ட விநாயகர் தரிசித்து அங்கு இரவு தங்கினோம்.

🛐பயணங்கள் தொடரும்....
நன்றி🙇🏼‍♂️🙏

#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
20.10.2022
#பயண_அனுபவக்_குறிப்புகள் 🕊️
#ஜோதிர்லிங்கதரிசனம்2022

#பீமாசங்கர் #மகாராஷ்ட்ரா  #ஜோதிர்லிங்கம்
#பயணஅனுவக்குறிப்புகள்🕊️
#சுப்ராம்யாத்ரா   #Subbram_Dharshan

Thursday, May 25, 2023

SPLENDORS OF INDIA - TELUNGANA - HYDRABAD - CHARMINAR

#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)
#HYDRABAD_TELUNGANA
(30.8.2021 - MONDAY)
#CHARMINAR

பதிவு : 7
சார்மினார் :

🌟400 yr old Temple Building
காலரா நோய் வந்ததால், இந்நாட்டு அரசர் 4 மினார் வைத்து ஊர் நடுவில் கட்டிடம் கட்டி இங்கு பிரார்த்தனை செய்யப்பட்டது.

💥மினாரின் ஒருபுறத்தில் பாக்கியலட்சுமி ஆலயம் உள்ளது. புரான வரலாற்று சிறப்பால், பாக்கியலெட்சுமி ஆலயமும் சிறப்பாக வழிபடுகின்றனர். 

💥Charminar கட்டிடத்தின் மீது,
குறிப்பிட அளவு தூரம் மேலே சென்று வர தனிக் கட்டணம் உண்டு.

💥மிக அருகில் முன்புறமும், அருகிலும், ஒரு சிவன் ஆலயம் வழிபாட்டில் உள்ளது.
மற்றும், சுற்றிலும், சில பெரிய இந்துக் கடவுள்கள் ஆலயங்களும் வழிபாடுகளுடனும், நல்ல பராமரிப்பிலும் உள்ளன.
💥அருகில் உள்ள சிவன் ஆலயத்தில் நல்ல வழிபாடுகள் நடந்துகொண்டிருந்தன. சிவன், லெட்சுமிநாராயணர், அனுமான், மற்றும் நவகிரக சன்னதிகளும் இருந்தன. நல்ல பராமரிப்பிலும் உள்ளன.
 மசூதிக் கட்டிடங்களும் சுற்றிலும் உள்ளது.

💥சுற்றி ஏராளமான சிறுசிறு கடைகள் உள்ளன. ஒரு பெரிய வியாபார ஸ்தலம் போன்றே அப்பகுதி உள்ளது.

💥சுற்றுலா வருபவர்கள் இடமாக உள்ளது. 

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#SPLENDORSOFINDIA(Aug.29-Sep9)

ஒரு உர









Tuesday, May 23, 2023

அவுண்டா நாகநாதர், - மகாராஷ்ட்ரா- ஜோதிர்லிங்கம்

#அவுண்டா நாகநாதர் ஜோதிர்லிங்கம்.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

வாழ்வில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டிய அற்புத ஆலயங்களில் ஒன்று.

ஔண்டா நாக நாதம்  நாகேசுவரர் திருக்கோயில்* .
    
இது பன்னிரண்டு  ஜோதி லிங்கத் தலங்களில் ஒன்று
    
 இந்த  சோதி லிங்கத் திருத்தலம் மகாராட்டிரத்தில் உள்ளது. ஔரங்கா பாது, பரலி வைஜய நாதம் ஆகிய இடங்களிலிருந்து போக்கு வரத்து வசதி உள்ளது.

பாற்கடல் கடைவதற்குக் கயிறாக உதவிய வாசுகி என்ற நாக ராஜன் லிங்கப் பரம்பொருளைப் பூஜித்து நலம் பெற்றதால் நாகத்திற்கு அருளிய பரம்பொருளுக்கு நாக லிங்கம் என்றும் பரமேசுவரனுக்கு நாக நாதர் நாகேசுவரர் என்றும் அருள் நாமம். நாக நாத் என்று இந்தியில் வழங்கப்படுகிறது.  

திருமால் முதலிய தேவர்கள்  அமிர்தம்  பெறுவதற்காக  அசுரர்களின் உதவியோடு  பாற்கடல் கடைந்த போது  கயிறாக உதவி புரிந்த வாசுகி நாகத்தின் உடலெல்லாம் புண்ணாகி ரணமாய் விஷத்தைக்  கக்கியது. 

எல்லோரும் ஆலகால விஷம் கண்டு அஞ்சி ஓடிய போது வாசுகி தாருகா வனத்தை அடைந்தது.  

ஔண்டா என்ற இடத்தில் லிங்கப் பரம் பொருளைப் பூஜித்து அபிஷேகம் அர்ச்சனை ஆராதனை செய்து வழிபட்டது. மாபெரும் மருந்தும் மருத்துவருமாக உள்ள பரம சிவன் வாசுகி நாகத்திற்கு முன்னை விட அதிக அழகும் வலிமையும் அருள் புரிந்தார். 

 வைதீஸ்வரர் மருந்தீஸ்வரர் அருளால் எழிலும் வல்லமையும் பெற்ற வாசுகி பரபிரும்மத்தின் பேரருளுக்கு மகிழ்ந்து துதி செய்து போற்றிக் களிப்புடன் நாக லோகம் சென்றது. 
            

சிறந்த சிவனடியாராக விளங்கிய சுப்பிரியன் என்ற வணிகர் தாருகா வனம் வழியே பயணம் செய்த போது நாகேசுவரரைப் பூஜித்து வழிபட்டார். பொழுது சாய்ந்ததால் தாருகா வனத்திலேயே தங்கினார். இரவில் வழிப் பறிக் கொள்ளையர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். தப்பி ஓடிய சுப்பிரியன் நாகேசுவரரிடம் தஞ்சம் புகுந்தார்.

 *காஞ்சியில் காமாட்சி  போன்றும்  திருச்சத்தி முற்றத்தில்  பரா சக்தி போன்றும்  திருக் கடவூரில் மார்கண்டேயன் போன்றும் நாக நாதரைக் கட்டிக் கொண்டு நமச்சிவாய நாமம் ஓதினார்* . துரத்தி வந்த கொள்ளையர்கள் சுப்பிரியனை நெருங்கும்போது நாக லிங்கத்திலிருந்து  பாம்பு சீறி வந்தது. கொள்ளையர்கள் அஞ்சி ஓடினர்.

 உயிரையும் பொருளையும் பாதுகாத்து அருளிய வாசுகி நாதரின்  கருணைக்கு மனம் நெகிழ்ந்து பெரிதும் போற்றித் துதித்த சுப்பிரியன் நாக லிங்கத்திற்குக் கோயில் கட்டித் திருப்பணி செய்து மகிழ்ந்தார். 
          
ஔண்டா நாக நாதம் கருங்கல்லால் ஆன பழங்காலத் திருக் கோயில். நாக லிங்கப் பரம்பொருள் சந்நிதி பாதாளத்தில் உள்ளது.

 மண்டபங்களைக் கடந்து சென்று கிணற்றில் இறங்குவது போல் குறுகிய படிகள் வழியே இறங்கிச் செல்ல வேண்டும். 

ஆலயத்தின் உள் தென்கிழக்கு மூலையில் தீர்த்தக்குளம் உள்ளது.

தென்னாட்டுக் கோயில்கள் போல் தூண்களும் மண்டபங்களும் வாயில்களும் மிக மிக அற்புத சிற்ப வேலைப் பாடுகளுடன் விளங்குகின்றன.

இக்கோயில் மாற்றுமத அரசியல் வெறியர்களால் சூரையாடப்பட்டு மீண்டும், அகல்யாபாய் என்னும் தெய்வப் பெண்மனியால் புனருத்தரணம் செய்யப்பட்ட ஆலயம்.

நன்றிக் கடனாக ஆலயம் முன் இவரது சிலை வைக்கப்பட்டுள்ளது.

 குஜராத் மாநிலத்தில் துவாரகைக்கு அருகேயும்  புதிய நாகேசுவரர் கோயில் உள்ளது. இதுவும் சிலரால் சோதி லிங்கத் தலம் என்று கூறப்படுகிறது. பன்னிரண்டு தலங்கள் தொகுக்கப்பட்ட பின் இத் தலம் சோதி லிங்கத் தலம் எனப்பட்டது.
17.10.2022 மீள் தரிசனம் 

#சோதிர்லிங்கம்
#அவுண்டா நாகநாதர்
#மகாராஷ்ட்ரா  
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#ஜோதிர்லிங்கதரிசனம்2022
#ஆலயதரிசனம்

#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0v9ikycrmyJ8vbJCwdCBs57W1ri18usHLyRJBEb5BSX4ZByYcAWi1Cw87KuLBwEx1l&id=100001957991710&mibextid=Nif5oz



















திண்டல் திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் 6.09.26

திண்டல்  திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் வேலாயுதசாமி கோயில், திண்டல் என்பது ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ. தொ...