Monday, May 29, 2023

பீம சங்கரம் - பீம சங்கரர் திருக்கோயில்* #பீமாசங்கர் #மகாராஷ்ட்ரா #ஜோதிர்லிங்கம்#பயணஅனுவக்குறிப்புகள்🕊️20.10.22

⚜️ *பீம சங்கரம் - பீம சங்கரர் திருக்கோயில்* 
#பீமாசங்கர் #மகாராஷ்ட்ரா  #ஜோதிர்லிங்கம்
#பயணஅனுவக்குறிப்புகள்🕊️
20.10.22

🕉️ *இது பன்னிரு  ஜோதி லிங்கத் தலங்களில் ஒன்று*.

🌟பீமாசங்கர் கோயில் (Bhimashankar Temple) என்பது மகாராட்டிர மாநிலம், புனே மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், அம்பேகாவ்ன் தாலுகாவில் டாங்கினி என்ற இடத்தில் உள்ள ஒரு குன்றிமீது அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும்.

🌟இத்தலம் புனேக்கு அருகில் உள்ள கெட் என்னும் இடத்திலிருந்து வடமேற்கில் 50 கிமீ தொலைவில் உள்ளது. இது புனேயில் இருந்து 110 கிமீ தொலைவிலும், நாசிக்கிலிருந்து 120 கிமீ தொலைவிலும் உள்ளது.

🌟பீமாஸ்கந்தர் பகுதியிலிருந்தே பீமா ஆறு உருவாகின்றது. இது தென்கிழக்காகச் சென்று ராய்ச்சூருக்கு அருகில் கிருஷ்ணா ஆற்றுடன் கலக்கிறது.

🌟 கடல் மட்டத்தில் இருந்து 3,000 அடி உயரத்தில் அடர்ந்த காடுகளிடையே, பீமா ஆற்றங்கரையில் உள்ளது.

💥பீமாசங்கரர் கோயில் புதியனவும் பழையனவுமான கட்டிடங்களின் கலவையாக உள்ளது. இக்கட்டிடங்கள் நாகரக் கட்டிடக்கலைப் பாணியில் அமைந்துள்ளன.

🌼மிதமான அளவுள்ள இக் கோயில் 18 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் கட்டப்பட்டது. இக் கோயிலின் சிகரம் நானா பட்னாவிஸ் என்பவரால் கட்டப்பட்டது.

🌼புகழ் பெற்ற மராட்டிய மன்னன் சிவாஜியும் இக் கோயிலுக்கு நன்கொடைகள் அளித்துள்ளார்.

🌼இப் பகுதியில் உள்ள பிற சிவன் கோயில்களைப் போலவே இதன் கருவறையும் கீழ் மட்டத்தில் அமைந்துள்ளது.

🌼இக் கோயில் கட்டிடங்கள் ஒப்பீட்டளவில் புதியவையாக இருந்தாலும், பீமாசங்கரம் என்னும் இக் கோயில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#பயணஅனுவக்குறிப்புகள்🕊️

🏵️மகாராஷ்ட்ரா - ஜோதிர்லிங்க யாத்ராவில்,
19.10.2022 அன்று  அஷ்ட்ட விநாயகர் ஆலயங்கள் உள்ள, சித்தக், Moron, மற்றும் Thevur, முதலிய இடங்கள் சென்று விநாயகப்பெருமான் தரிசனம் முடித்துக் கொண்டு Thevur தங்கினோம்.

🌻20.10.22 காலையில் புறப்பட்டு, ரன்ஜன்கான் என்ற ஊரில் உளள, அஷ்ட்ட விநாயகர் தரிசித்து விட்டு,  மலைப் பாதையில்   ஓரிடத்தில் தங்கி மதிய உணவு முடித்துக்கொண்டு பீமாசங்கரம்
ஆலயம் சென்றோம்.

🍁வழியெல்லாம் மலைக்காட்சிகள், மிக அற்புதமாக இருந்தது. ஒரு பெரிய அணைக்கட்டும் கண்டு களிக்கலாம்.

🌟பீமாசங்கரர் ஆலயம், இது எங்களுக்கு,   மூன்றாவது முறை தரிசனம்.  தற்போது நிறைய மாற்றங்கள் உள்ளன. சிறிய ஹோட்டல்கள், Tea shops, சிறு வணிக வளாகங்கள் அமைக்கப்ட்டு வருகிறது.

☀️ஆலயம் அருகில் தற்போது வாகனங்கள் நிறுத்தவசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

💫மலை மேல் சென்ற பின் மிகவும் அமைதியான சூழலில் உள்ள  இந்த மலைக் கோயிலை அடையப் படிகள் இறங்கிச் செல்ல வேண்டும். மிகவும் நீளமான அகலமான படிகள் ஆதலால் இறங்கி ஏறுவது சுலபம். காலந்தோறும் பல மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டுத் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.

✨கோயிலின் சிகரங்களும் சபா மண்டபமும் 18ஆம் நூற்றாண்டில் நாநாபட்டனவீஸ் என்பவரால் கட்டப்பட்டது. 1733 இல் சிம்மானாஜி சுந்தாஜி பிடேநாயக் என்ற குறுநில மன்னரால் கோயில் பலவாறு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

🌼ரகுநாத பேஷ்வாவினால் கோயிலின் பின்பக்கத்தில் அகண்ட கிணறு அமைக்கப்பட்டுள்ளது. சத்ரபதி சிவாஜி கரோகி என்ற சிற்றூரை கோயிலுக்கு கொடையாக அளித்துள்ளார்.

🌼இக்கோயிலைச் சுற்றி அகண்ட திருச்சுற்று அமைந்துள்ளது. கோயிலின் முன்மண்டபம் விசாலமானது.
கோயிலின் துண்கள், கதவுகள், விதானம் போன்றவை கலைவேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.

🌼கோயிலானது புரு மண்டபம், சபா மண்டபம், கருவறை ஆகியவற்றைக் கொண்டதாக உள்ளது.

🌼கோயிலில் வித்தியாசமான இரு நந்திகள் உள்ளன.

🌼வெளிப்புற தரைமட்டத்துக்குக் கீழே கருவறை அமைந்துள்ளது. படிக்கட்டுகளில் இறங்கிச் செல்லவேண்டும். கருவறை தரையை ஒட்டியுள்ள ஆவுடையாரில் ஒரு அடி உயர லிங்க மூலவர் உள்ளார்.

🌼பக்தர்கள் கருவறையில் லிங்கத்தை சுற்றி அமர்ந்து வழிபடுகின்றனர்.

✨கோயில் வளாகத்தில் சனியீஸ்வரன் சிற்றாலயம் அமைந்துள்ளது.

🏞️மலைப் பிரதேசம். தற்போது வாகனங்கள் நிறுத்த நல்ல வசதிகள் செய்துள்ளார்கள்.

🌄மலைப் பகுதிக்கு நேர்மேற்கில் மும்பை மாநகரம் தெரியும்.

🌸மலையின் இன்னொரு பகுதியில் மிகவும் கீழே இறங்கி சென்றால், பீமாநதி உற்பத்தி ஆகி ஓடிவரும் இடம்.

🌺பீமாசங்கரர் ஜோதிர்லிங்க ஆலயம் சுமார் 800 படிகள் கீழே இறங்கி சென்று தரிசனம் செய்ய வேண்டும். படிகள் நல்ல அகலமாகவும், நீளமாகவும் உள்ளதால், தாராளமாக இறங்கி சென்று தரிசனம் செய்யலாம்.

🍂படிகளின் இரு புறங்களிலும், வழமையான கடைகள், தின்பண்டங்கள், இனிப்புக் கடைகள் ஏராளம்.

🍀படிகளில் இறங்கி ஏரி வர முடியாதவர்களுக்காக, தற்போது, சிறிய வகை வாடகை வாகனங்கள்  ஏராளம் இருக்கின்றன.   சகப்பயணிகளில் சிலர் அவைகளில் தேவை உள்ளவர்கள், இந்த வசதிகளைப் பயன்படுத்திக்கொண்டனர்.

🌿நுழைவுவாயில்படி  இறங்குமுன்புறம் ஒரு இரும்பு Archம் உள்ளது.

🍃ஆலயம் பலமுறை  சிதைக்கப்பட்டும், சீர்த்திருத்தம் செய்யப்பட்டும் உள்ளது. இன்னமும் முழுமையான அளவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.

🌼நுழைவு வாயில் முதல் கருவரை வரை வரிசை அமைப்பு ஏற்படுத்தி உள்ளனர். நாம் முதலில், ஆலய அருகில், இறுதிப்படிகள் அடையும் போதே வரிசை அமைப்பில் செல்லவேண்டும்.

☀️கருவறை கோபுரமே மிக உயரமானது முழுவதும் கற்றளி ஆலயம். கருவரை மண்டம் உள்ளே நடுவில் சிறிய அளவில் லிங்க வடிவில் சுவாமி உள்ளார்.

🕉️பிரகாரம் தாண்டி முன்புறம் உள்ள நீண்ட, பெரிய மண்டபம் உள்ளது. கருவரை நிலைப்படி மேல்புறம்  பெரிய TV வைத்துள்ளார்கள். கருவரையில் நடைபெறும் பூசைகள் நன்கு தெரியும்.

⚛️மண்டபத்தின் வழியில் சென்று கருவரை நிலைப்படி உயரம் தாண்டி உள் சென்று சுவாமியை மிக அருகில் தரிசிக்கலாம்.
🛐கருவரை சற்று ஆழமானது. முன் மண்டபத்தில் அமர்ந்தும் வழிபாடு செய்கிறார்கள்.

☸️ஆலயத்தின் ஒரு புரம் மலைப்பகுதி மறுபுறத்தில், புதிய ஆலயங்கள், மண்டபங்கள் வைத்து, பூசை, ஹோமங்கள் செய்து  வழிபாடுகள் நடத்துகிறார்கள்.

☮️ஆலயத்தின் பிரகாரத்தில், சிறிய புராண தீர்த்தம் உள்ளது. கல்விளக்குத் தூண் உள்ளது. மிகப்பழமையாக ஆலயம் என்பதால், பல்வேறு திருப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

🔯கருவரை கோபுரத்தில், தொன்மையான நுனுக்கமான, பல்வேறு தெய்வ உருவ சிலைகள் அமைந்துள்ளது.

✡️சிதலமடைந்த பகுதிகள் மீட்கப்பட்டு, அவைகளை சரிபன்னும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

⚛️ஆலய பகுதிகள் தரிசித்து படிகள் ஏறி வாகன நிறுத்துமிடம் வந்து நாங்கள் OZAR என்ற இடத்திற்கு வந்து இரவு தங்கினோம்.

💥புராணம் 1.

✨இக் கோயில், சிவன் வெல்லமுடியாத பறக்கும் கோட்டைகளான திரிபுரங்களை எரித்த புராணக் கதையுடன் தொடர்புள்ளது. இப்போருக்குப் பின் சிவனின் உடலிலிருந்து சிந்திய வியர்வையாலேயே பீமாராத்தி ஆறு உருவானது என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

✨பீமன் என்ற அரக்கனை அழிக்க சிவபெருமான் இங்கே தோன்றி சோதிலிங்கமாக விளங்குவதால்,  பீமசங்கரம் எனப் பெயர்பெற்றது.

✨கும்பகருணனின் பல மனைவிகளில் ஒருத்தி கற்கடி என்பவளாவாள். அவள் இப்பகுதியில் உள்ள காடுகளில் வாழ்ந்த அரக்கியாவாள். கற்கடிக்கு பீமன் என்ற மகன் உண்டு. பீமன் குழந்தையாக இருந்தபோதே அவனது தந்தையான கும்பகருணன் இராமனால் கொல்லப்பட்டான். பீமன் வளர்ந்து பெரியவனான பிறகு பிரம்மனை நோக்கி கடும் தவம் செய்து, பிரம்மனிடம் வரத்தை வாங்கி தன் வலிமையை பெருக்கிக்கொண்டான். பின்னர் பூவுலக மன்னர்களை வென்று, பிறகு இந்திர லோகத்தின்மீது படையெடுத்து அவர்களையும் வென்றான்.

✨இதனையடுத்து அவனுக்கு அஞ்சிய தேவர்கள் இந்த வனப்பகுதிக்கு வந்து சிவனை நோக்கி கடும் தவம் செய்தனர். அவர்கள் முன் தோன்றிய சிவனிடம் பீமனின் கொடுமைகளில் இருந்து விடுதலை வேண்டினர். பீமனை அழிப்பதாக சிவன் அவர்களுக்கு வரம் அளித்தார்.

✨அதேசமயம் காமரூப நாட்டு அரசனும், சிவபக்கனுமான பிரியதருமன் என்பவனை போரில் வென்ற பீமன் அவரை சிறையில் அடைத்துக் கொடுமைகள் செய்தான். கொடுமைகளுக்கு ஆளான பிரியதருமனும் அவன் மனைவியும் சிறையிலேயே சிவலிங்கத்தை வைத்து சிவபூசை செய்து வந்தனர். தங்களின் துன்பத்தைப் போக்குமாறு வேண்டிவந்தனர். இதை சிறைக் காவலர்கள் பீமனிடம் கூறினர்.

✨கடும் கோபம்கொண்ட பீமன் தன் சூலத்தை எடுத்துக்கொண்டு பிரியதருமனைக் கொல்ல சிறைக்கு வந்தான். அங்கு சிவபூசை செய்துகொண்டிருந்த பிரியதருமன்மீது சூலத்தை ஏவினான். அப்போது லிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட சிவபெருமான் அவன் விட்ட சூலத்தை தன் சூலத்தால் உடைத்தார்.

✨இதனையடுத்து சிவனிடம் போரில் ஈடுபட்ட பீமனை தன் நெற்றிக்கண்ணால் சிவன் எரித்து அழித்தார்.

✨இதனையடுத்து பிரியதருமன் தான் பூசித்த இந்த லிங்கத்தில் சோதியாகத் தங்கியிருந்து என்றும் மக்களைக் காக்குமாறு வேண்டினார்.

✨அவ்வாறே சிவபெருமான் அந்த லிங்கத்திலேயே சோதிவடிவில் ஐக்கியமாகி பக்கத்களைக் காத்துவருவதாக நம்பிக்கை நிலவுகிறது.

💥புராணம் 2.

💫அம்மை யப்பனை உள்ளன்போடு வழிபட்டு வாழ்ந்த  எல்லோருக்கும் அன்னையாகவும் அத்தனாகவும் விளங்கும் பரஞ்சோதிப் பெருமான் பீமனுக்கு அம்மையப்பனாய் திருக் காட்சி தந்து அருள் புரிந்தார். 

💫 சங்காரம் (சம்ஹாரம்) என்றால் அழித்தல் என்று பொருள். இந்த இரண்டு சமசுகிருதச் சொற்களுக்கு வேறுபாடு தெரியாதவர்கள் பீம சங்கரம் என்பதை பீம சங்காரம் என்று கொண்டு பீமனை அழித்தவர் என்ற பொருளுடன் தல வரலாறு கருதுகிறது.

💫பழங்காலந்தொட்டு மலைவாசிகளால் வழிபட்டுவந்த இக்கோயில், அவ்வப்போது பகுதி பகுதியாக கட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. பேஷ்வா காலங்களில் கோயில் முழுமை பெற்று, வைதீக முறைப்படி வழிபாடு தொடங்கியதாம்.

#பயணஅனுவக்குறிப்புகள்🕊️

🌼கோயிலின் அருகே  பெரிய ஊர் ஏதும் இல்லாததால் கோயிலுக்கு அருகில் தங்கும் வசதியும் உணவு வசதியும் தற்போது சிறிய அளவில்தான் உள்ள நிலமையால், புதிய  முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

🌼ஜோதிர்லிங்க தரிசனம் முடிந்து,
0ZAR ஆலயம் சென்று அஷ்ட்ட விநாயகர் தரிசித்து அங்கு இரவு தங்கினோம்.

🛐பயணங்கள் தொடரும்....
நன்றி🙇🏼‍♂️🙏

#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
20.10.2022
#பயண_அனுபவக்_குறிப்புகள் 🕊️
#ஜோதிர்லிங்கதரிசனம்2022

#பீமாசங்கர் #மகாராஷ்ட்ரா  #ஜோதிர்லிங்கம்
#பயணஅனுவக்குறிப்புகள்🕊️
#சுப்ராம்யாத்ரா   #Subbram_Dharshan

No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...