Tuesday, May 23, 2023

அவுண்டா நாகநாதர், - மகாராஷ்ட்ரா- ஜோதிர்லிங்கம்

#அவுண்டா நாகநாதர் ஜோதிர்லிங்கம்.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

வாழ்வில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டிய அற்புத ஆலயங்களில் ஒன்று.

ஔண்டா நாக நாதம்  நாகேசுவரர் திருக்கோயில்* .
    
இது பன்னிரண்டு  ஜோதி லிங்கத் தலங்களில் ஒன்று
    
 இந்த  சோதி லிங்கத் திருத்தலம் மகாராட்டிரத்தில் உள்ளது. ஔரங்கா பாது, பரலி வைஜய நாதம் ஆகிய இடங்களிலிருந்து போக்கு வரத்து வசதி உள்ளது.

பாற்கடல் கடைவதற்குக் கயிறாக உதவிய வாசுகி என்ற நாக ராஜன் லிங்கப் பரம்பொருளைப் பூஜித்து நலம் பெற்றதால் நாகத்திற்கு அருளிய பரம்பொருளுக்கு நாக லிங்கம் என்றும் பரமேசுவரனுக்கு நாக நாதர் நாகேசுவரர் என்றும் அருள் நாமம். நாக நாத் என்று இந்தியில் வழங்கப்படுகிறது.  

திருமால் முதலிய தேவர்கள்  அமிர்தம்  பெறுவதற்காக  அசுரர்களின் உதவியோடு  பாற்கடல் கடைந்த போது  கயிறாக உதவி புரிந்த வாசுகி நாகத்தின் உடலெல்லாம் புண்ணாகி ரணமாய் விஷத்தைக்  கக்கியது. 

எல்லோரும் ஆலகால விஷம் கண்டு அஞ்சி ஓடிய போது வாசுகி தாருகா வனத்தை அடைந்தது.  

ஔண்டா என்ற இடத்தில் லிங்கப் பரம் பொருளைப் பூஜித்து அபிஷேகம் அர்ச்சனை ஆராதனை செய்து வழிபட்டது. மாபெரும் மருந்தும் மருத்துவருமாக உள்ள பரம சிவன் வாசுகி நாகத்திற்கு முன்னை விட அதிக அழகும் வலிமையும் அருள் புரிந்தார். 

 வைதீஸ்வரர் மருந்தீஸ்வரர் அருளால் எழிலும் வல்லமையும் பெற்ற வாசுகி பரபிரும்மத்தின் பேரருளுக்கு மகிழ்ந்து துதி செய்து போற்றிக் களிப்புடன் நாக லோகம் சென்றது. 
            

சிறந்த சிவனடியாராக விளங்கிய சுப்பிரியன் என்ற வணிகர் தாருகா வனம் வழியே பயணம் செய்த போது நாகேசுவரரைப் பூஜித்து வழிபட்டார். பொழுது சாய்ந்ததால் தாருகா வனத்திலேயே தங்கினார். இரவில் வழிப் பறிக் கொள்ளையர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். தப்பி ஓடிய சுப்பிரியன் நாகேசுவரரிடம் தஞ்சம் புகுந்தார்.

 *காஞ்சியில் காமாட்சி  போன்றும்  திருச்சத்தி முற்றத்தில்  பரா சக்தி போன்றும்  திருக் கடவூரில் மார்கண்டேயன் போன்றும் நாக நாதரைக் கட்டிக் கொண்டு நமச்சிவாய நாமம் ஓதினார்* . துரத்தி வந்த கொள்ளையர்கள் சுப்பிரியனை நெருங்கும்போது நாக லிங்கத்திலிருந்து  பாம்பு சீறி வந்தது. கொள்ளையர்கள் அஞ்சி ஓடினர்.

 உயிரையும் பொருளையும் பாதுகாத்து அருளிய வாசுகி நாதரின்  கருணைக்கு மனம் நெகிழ்ந்து பெரிதும் போற்றித் துதித்த சுப்பிரியன் நாக லிங்கத்திற்குக் கோயில் கட்டித் திருப்பணி செய்து மகிழ்ந்தார். 
          
ஔண்டா நாக நாதம் கருங்கல்லால் ஆன பழங்காலத் திருக் கோயில். நாக லிங்கப் பரம்பொருள் சந்நிதி பாதாளத்தில் உள்ளது.

 மண்டபங்களைக் கடந்து சென்று கிணற்றில் இறங்குவது போல் குறுகிய படிகள் வழியே இறங்கிச் செல்ல வேண்டும். 

ஆலயத்தின் உள் தென்கிழக்கு மூலையில் தீர்த்தக்குளம் உள்ளது.

தென்னாட்டுக் கோயில்கள் போல் தூண்களும் மண்டபங்களும் வாயில்களும் மிக மிக அற்புத சிற்ப வேலைப் பாடுகளுடன் விளங்குகின்றன.

இக்கோயில் மாற்றுமத அரசியல் வெறியர்களால் சூரையாடப்பட்டு மீண்டும், அகல்யாபாய் என்னும் தெய்வப் பெண்மனியால் புனருத்தரணம் செய்யப்பட்ட ஆலயம்.

நன்றிக் கடனாக ஆலயம் முன் இவரது சிலை வைக்கப்பட்டுள்ளது.

 குஜராத் மாநிலத்தில் துவாரகைக்கு அருகேயும்  புதிய நாகேசுவரர் கோயில் உள்ளது. இதுவும் சிலரால் சோதி லிங்கத் தலம் என்று கூறப்படுகிறது. பன்னிரண்டு தலங்கள் தொகுக்கப்பட்ட பின் இத் தலம் சோதி லிங்கத் தலம் எனப்பட்டது.
17.10.2022 மீள் தரிசனம் 

#சோதிர்லிங்கம்
#அவுண்டா நாகநாதர்
#மகாராஷ்ட்ரா  
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#ஜோதிர்லிங்கதரிசனம்2022
#ஆலயதரிசனம்

#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0v9ikycrmyJ8vbJCwdCBs57W1ri18usHLyRJBEb5BSX4ZByYcAWi1Cw87KuLBwEx1l&id=100001957991710&mibextid=Nif5oz



















No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...