Monday, June 13, 2022

UTTARAKANNT_TOUR_2022#பயண அனுபவக் குறிப்புகள்#KAUSANI (கவுசானி): 11.04.2022

#UTTARAKANNT_TOUR_2022
#பயண அனுபவக் குறிப்புகள்

#KAUSANI (கவுசானி): 11.04.2022

#பையிஜியநாத் (11.04.2022) என்ற ஆலயம் தரிசித்தபின், மதியம் புறப்பட்டு, கவுசானி என்ற ஊருக்கு சென்று, Hotel SAGARல் தங்கினோம். மாலையில், இவ்வூரில் உள்ள காந்தி ஆசிரமம், மற்றும் ஒரு சிவன் ஆலயம் தரிசித்துவந்தோம்.

🌼'இந்தியாவின் சுவிட்சர்லாந்து, ' என்று மகாத்மா காந்தி அவர்களால் அழைக்கப்பட்ட இடம். 

🏞️இது, இமயமலைப்பகுதியில் சுமார் 6200 அடி உயரத்தில் உள்ளது. 

🏝️உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள மிகப் பழமையான, இயற்கையான அழகான ஊர். 

🌈இங்கிருந்து, 250 - 300 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள பல இமயசிகரங்களை குறிப்பாக, திரிசூல், நந்ததேவி, பஞ்சூலி, முதலிய சிகரங்களை ரசித்து காணலாம்.
பைன் மரக்காடுகள் அமைந்துள்ளன.

✨உத்திரகாண்ட் பாகேஸ்வரர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பாகேஸ்வரரிலிருந்து 40 கி. மீ தூரத்திலும், அல்மோரா என்னும் நகருக்கு வடக்கில் 52 கி.மீயும்,, நைனிட்டாலிருந்து வடகிழக்கில் 123 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது.பைஜியநாத் என்ற வைத்தியநாத் என்ற ஊரிலிருந்து 16.5 கிமீ.தூரத்திலும், மற்றும் பாகேஸ்வரர் ஆலயமும் அருகில் உள்ளது.

📒பிரபல ஹிந்தி கவிஞர் சுமித்தரனந்தன் பண்டிட் இவர் பிறந்த ஊர். இவர் பெயரில் ஒரு மியூசியம் அமைத்துள்ளனர்.

🏡மிக முக்கிய சுற்றுலாதலம். இங்குள்ள காந்தி ஆசிரமம் மிகவும் புகழ் பெற்ற இடம். இங்கு மகாத்மா காந்தி 1929ல் 14 நாட்கள் இங்கு வசித்து இருந்தார். இவ்விடத்தை மிகவும் ரசித்து இங்குள்ள தொண்டு ஆசிரமத்தில் (ANASHAKTI ASHRAMAM) தங்கியிருந்தார்.

🛕இப்போது இதை காந்தி ஆசிரமம் என்று அழைத்து வருகிறார்கள். ஆசிரமத்தில்
மகாத்மாவுக்கு சிலைக்களும், வாழ்க்கை வரலாற்று புகைப்படங்களும் காட்சி படுத்தி அருமையாக அமைத்துள்ளனர். ஒரு பெரிய மண்டபம் இதற்காக கட்டப்பட்டுள்ளது. மற்றும், தியானமண்டபம், சிறிய நூல் நிலையம், உணவுக்கூடம், காதி கதர் கிராம கைவினைப் பொருட்கள் விற்பனைக்கூடம், மற்றும் வரலாற்று ஆராய்ச்சிக்கூடமும், அமைந்துள்ளது.

🏔️VIEW POINT என்ற இடத்திலிருந்து 8 இமய சிகரங்களைப் பார்த்து களிக்கும் வன்னம், மேடை அமைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

🏖️ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். எந்த நுழைவுக்கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. 

🏯அருகில் தங்கும் விடுதிகள் உள்ளன.

🌌கௌசானி யில் மேலும் ஒரு வானிலை தொலைக்காட்சி இடமும் உள்ளது. புதிய கருவிகளைக் கொண்டு தொலைக்காட்சி கூடம் உள்ளது. ஆர்வம் உள்ளவர்கள், இமய சிகரங்கள், மலை, பனி, பகுதிகளை இங்கு வந்து இந்தக் கருவிகள் மூலம் ஆய்வு செய்கிறார்கள்.

🏢HOTEL SAGAR என்ற பெரிய Hotel லில், தங்கியிருந்தோம். இங்கிருந்து நடந்தே காந்தி ஆசிரமம் சென்று வந்தோம். 

🛕மேலும் சற்று தூரத்தில் உள்ள சிவன் ஆலயம் சென்றோம்.தனியார் TRUST மூலம் நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது. யோகி ஒருவரால் துவக்கப்பட்டு ஆலயம் புதிதாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கருவரை மண்டபம் உயரக் கோபுரம். கருவறையில், சிவன், ராதா கிருஷ்ணர், அம்மன், முதலிய அழகிய சிறிய பளிங்கு சிலைகள் வைக்கப்பட்டு, அழகாக ஆடை ஆபரணங்களுடன் வண்ண வண்ண விளக்கு அமைப்புக்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஆலயம் சுற்றில் மண்டபம் உள்ளது. அறைகளும் உள்ளன.

🏔️மலை பிரதேசம் என்பதால், எல்லா இடங்களும் படிகளும், சற்று உயரமாகவும் அமைந்துள்ளன. சாலை, மின் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சிறிய, சிறிய கடைகளும் அமைந்துள்ள ஊர்.

🌀இந்த இடங்களைப் பார்த்து விட்டு, 11.04.2022 இரவு Hotel SAGAR ல் தங்கிவிட்டு, 12.04.2022 முன்காலையிலேயே DWRAHAT என்ற ஊர் சென்றோம்.
அதன் அருகில் உள்ள புகழ்பெற்ற பாபா குகை தரிசனம் செல்ல புறப்பட்டோம்.

பயனங்கள் தொடரும்...

🙏தகவல்கள் உதவி :
 wikepedia மற்றும் பல வலைதளங்கள்
(11.4.2022)

🙏நன்றிகளும் வணக்கங்களும்🙇🏼‍♂️

#ஆலயதரிசனம் 
#UTTRAKANT_TOUR_2022
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

Saturday, June 4, 2022

#UTTARAKANNT_TOUR_2022 - #பையிஜியநாத் என்ற வைத்தியநாத்(11.04.2022)

#UTTARAKANNT_TOUR_2022
#பயண_அனுபவக்_குறிப்புகள்
#பையிஜியநாத்  என்ற வைத்தியநாத்
(11.04.2022)

🌼கோமதிக்கரையில் உள்ள பாகேஸ்வரர் என்ற புராதான ஆலய தரிசனம் முடித்துக் கொண்டு கௌசானி என்ற ஊருக்கு சென்றோம்.
வழியில், கோமதி நதியின் கரையில்தான் வந்தோம். வழியில் உள்ள #பையிஜியநாத்    என்ற ஊருக்கு சென்று மதிய உணவு முடித்துக் கொண்டு இங்குள்ள புராதான ஆலயத்தை தரிசித்தோம். 

#பையிஜியநாத் , என்னும் வைத்திநாதர் ஆலயம் உத்திரகாண்ட் மாநிலத்தில், கோமதி நதிக்கரையில், குமான் மாவட்டத்தில் வாழ்ந்த கட்யூரி வம்ச அரசர்களால்  கட்டப்பட்டது.  இது ஒரு காலத்தில் கார்த்திகேயபுரா என்றும் அழைத்தார்கள்.

🌟07 முதல் 13ம் நூற்றாண்டுகளில், கட்யூரி அரசவம்சத்தினரின், ஜோஷிமத் என்ற இடத்தில் இருந்த தங்கள் தலைநகரை
பைஜியநாத்க்கு மாற்றி கொண்டிருந்தார்கள் என்பது வரலாறு. 

🪱பாகேஸ்வர் - கெளசானி முக்கிய சாலையில் இவ்வூர் அமைந்துள்ளது.

🛕12ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டது இவ்வாலயம்; உத்திரகாண்ட் மாநிலம், குமான் பகுதியில் உள்ள பழமையும், புராதானமும் வாய்ந்த மிக முக்கிய ஆலயங்களில், இதுவும் ஒன்றாகும்.  சிவனின் புராதான கேந்திர முக்கிய நான்கு தலங்களில் இதுவும் ஒன்று.

🏔️இந்திய இமயமலைப்பகுதியில், சுமார் 1130 மீட்டர் (3,707 அடி) உயரத்தில், புகழ்பெற்ற பாகேஸ்வர் நகருக்கு வடமேற்கில், 20 கி.மீ. தூரத்திலும், கெளசானியிலிருந்து 16 கி.மீ. தூரத்திலும், உள்ளது.

🚏இந்திய தொல்பொருள் துறையின் வசம் ஒப்படைக்கப்பட்டு பராமரிப்பில் உள்ளது.

🌈மிகவும், அற்புதமான பார்வதி தேவியின் சிலை கருங்கல்லில் அமைந்துள்ளது; மிக அழகாக உள்ளது.

✨கட்யூரி அரசியின் முயற்சியால், நதியின் கரையின்  ஓரத்தில்உள்ள இந்த ஆலயம் செல்ல, பிரதான சாலையிலிருந்து அழகிய கற்படிகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. 

🏯பிரமினி இனப் பெண்மனி ஒருவரால் உருவாக்கப்பட்டு பின் சிவ ஆலய வழிபாடு தொடர்ந்தது என்றும் கூறுகிறார்கள்.

💮கோமதி நதியின் சங்கமிக்கும்இடமாகிய  #பையிஜியநாத் என்ற இவ்விடத்தில்தான் சிவன் - பார்வதி திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
 
🏞️பைஜியநாத் என்னும் வைத்தியநாதர் ஆலயம் 18 தனித்தனி கற்றளிகளாக 102 சிலைகள் கொண்டது. 
(தனித்தனி சன்னதிகளை சிறியதும், பெரியதுமாக, முழு ஆலய அமைப்பிக்கப்பட்டுள்ளதாலும், எல்லா சன்னதிகளும் / ஆலயங்களும், ஒருங்கே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாம்)

🌀#பையிஜியநாத் ஆலயம் பல தெய்வங்கள் அமைந்துள்ள கூட்டு ஆலயம் என்றும்  கூறுவார்கள். 

🛕இங்கு வைத்திநாதர், கேதாரஸ்வரர், பார்வதி, நிருத்திய கணபதி, கார்த்திகேயன், சண்டிமாதா,  நரசிம்மர்,  பிரும்மா, மகிஷாசூரமர்த்தினி, சப்தமாதர்கள் பிரும்மரி தேவி, சூரியன், கருடன் மற்றும் குபேரன் ஆலயங்கள்  அமைத்துள்ளனர். 

🛕மூலவர் ஸ்ரீவைத்திநாதர் லிங்க வடிவில் உள்ளனர்.   பார்வதிதேவியின் சிலை வடிவமைப்பு, மிகமிக அற்புதம். 

🛕1202 AD க்கு முன் உள்ள கல்வெட்டுக்கள் ஆலயத்தில் உள்ளன. கியான் சந்த் அரசர்களால் மீண்டும் புனரமைக்கப்பட்டும், ரோகிலா என்ற முகலாயர் இனத்தவர்களால், கொள்ளை அடிக்கப்பட்டும், ஆலயங்கள், கலசங்கள்  சிதைக்கப்பட்டுவிட்டதாகவும் வரலாற்று குறிப்புகள் உள்ளன.

🛕சிலவற்றில் தற்போது, பல சிலைகளும் இல்லை, சிதைந்த நிலையில் பல அமைந்திருந்தாலும்,  சில முக்கிய தெய்வ சிலைகள் மட்டுமே பூசனையில் உள்ளது.

🛕சிவன் - பார்வதிதேவி திருமணம் நடந்த இடம் என்பதால், சிவராத்திரி, மகர சங்கராந்தி நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகைதருகிறார்கள்

🛕இவ்வாலயம் மிக அருகில், சப்தமாதர்களுள் ஒன்றான, பிரம்மரி தேவி ஆலயம் ஒன்றும் உள்ளது. இதுவும் மிகவும் புகழ்வாய்ந்த, புராணசிறப்புமிக்க ஆலயம்.

🛕ஒரு முறை பத்ரிநாத் செல்லும் வழியில், ஆதிசங்கரர் இங்கு தங்கி இருந்து வழிபட்டு இருந்தார்கள். என்ற குறிப்பும் உள்ளது. 

🛕இந்த ஆலயங்கள் அமைவிடத்தால்தான், இந்நகருக்கும் இப்பெயர் வைக்கப்பட்டது.

🌈இமாலயத்தில், வளைந்து நெளிந்து ஓடும் கோமதி ஆற்றின், இடது கரையில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

🛕கோமதி நதி, இவ்விடத்தில் வளைந்து, சற்று அகன்று, ஒரு அரை வட்டவடிவில் அமைந்துள்ளதால், உத்திரகாண்ட் அரசு 2007-2008ல் இந்த இடத்தில் ஒரு செயற்கை ஏரி அமைக்க முடிவு எடுத்து, அதன்படி ஒரு சிற்றனை சிறப்பாகக் கட்டியபின், 14.01.2016 அன்று அப்போதுள்ள முதல்வர் மூலம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

⚡இந்த ஏரியில் தங்கமீன் வளர்ப்பு திட்டமும் செயல்படுத்தப்பட்டது.  அழகிய படகு சவாரி முதலியனவும், சுற்றுலா வசதிகளும் செய்யப்பட்டு, மிகப்பெரிய முக்கிய  சுற்றுலாத்தலமாகவும் உள்ளது.

✨ஒரு புறம் புராதான ஆலயம், மறுபுறம் அழகிய செயற்கை ஏரி, அனை முதலியவற்றால் இந்த இடம் அனைவராலும் கவரப்பட்டுள்ளது. 

💮அருகில் உள்ள காரூர் (GARUR) என்னும் நகர் முக்கிய கேந்திரமாக உள்ளது. 

🌟பிராதான சாலை சற்று அகலம் குறைவாக இருப்பதால், எங்கள் பேருந்து 500 மீ. அப்பால் நிறுத்திக் கொண்டோம். மதிய உணவுக்குப் பின் சென்று, இவ்வாலயம் தரிசித்து வந்தோம்.

🌼9-10ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட இவ்வாலயம், நாகர அமைப்பில் உள்ளது.
நடுவில் முக்கிய மூலவர் கருவறை ஆலயமும், சுற்றிலும் பஞ்சரத அமைப்பிலும் கட்டப்பட்டிருப்பினும், ஆலயம் கொள்ளையடிக்கப்பட்டும், சிதலமடைந்தும், இருந்தாலும், மிக நேர்த்தியான முறையில், பெரிய அளவில், வடிவமைக்கப்பட்டும், மிகச்சிறப்பான வழிபாடுகளை ஒரு காலத்தில் மேற்கொண்டிருக்க வேண்டும் என்பதை இப்போதும் உணரலாம்.

💮பல ஆலய சிலைகள் ஒருங்கிணைத்து ஒரே சன்னதியில் வைத்தும் உள்ளார்கள்.

✨வைத்திநாதர் ஆலயத்தில், கருவறையில் சிறிய சிவலிங்கமாக ஆவுடையுடன் உள்ளார். பல பகுதிகள் சிதலமடைந்துவிட்டாலும், மண்டபம் முதலியவற்றை பராமரித்து, வைக்கப்பட்டுள்ளது. சப்தமாதர் பிரும்ராமி பூட்டப்பட்டுள்ளது.

🌟தொல்பொருள் துறையினரால், பாதுகாக்கப்பட்டாலும், ஆலயம் மிக மிக புராதானமானதாகவும், சிதைந்தும் உள்ளது. 

🚏சிவன், ஸ்ரீ வைத்திநாதர், ஸ்ரீபார்வதி தேவி சன்னதிகள் மட்டும் சற்றே பராமரிப்பில் உள்ளது.

🏯புதிய ஏரிக்கரையின் ஓரத்தில், புராதானத்தை நிலை நிறுத்திக்கொண்டு, ஒரு பக்தியின் அமைதியுடன் இயற்கை அமைப்புடன், தனிமையில் இவ்வாலயம் இருக்கிறது.

🙏இந்த ஆலயம் வணங்கி, பின் கெளசானி என்ற ஊரை சென்றடைந்தோம். 

⚡பயணங்கள் தொடரும்......

🙏தகவல்கள் உதவி :
 wikepedia மற்றும் பல வலைதளங்கள்
(11.4.2022)
🙏நன்றிகளும் வணக்கங்களும்🙇🏼‍♂️

#ஆலயதரிசனம் 
#uttrakant_tour_2022 
#UTTRAKANT_TOUR_2022
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்



Tuesday, May 31, 2022

#UTTRAKANT_TOUR_2022#பாகேஸ்வர் 11.04.2022

#UTTARAKANNT_TOUR_2022

#பயண_அனுபவக்_குறிப்புகள்

#பாகேஸ்வர்:

#பாதாள்_புவனேஷ்வர் குகைக் கோவில் தரிசனம் செய்து, அங்கிருந்து #சௌக்கோரி என்ற ஊரில் உள்ள HIMSHIKAR என்ற Hotel லில் தங்கினோம். இந்த ஊர் திபெத் எல்லையில் இருக்கிறது. இங்கிருந்து இமாலய மலைத்தொடர்களின் அற்புத இயற்கை காட்சிகளை காணலாம்.
இங்கு 10.04.2022 இரவு தங்கிவிட்டு, அடுத்த நாள் 11.04.2022 காலை உணவு முடித்துக்கொண்டு #பாகேஷ்வர் என்ற முக்கிய ஊருக்குச் சென்றோம்.

#பாகேஸ்வர்:

உத்தரகாண்ட் மாநிலத்தில், ஒரு மாவட்டத்தின் தலைநகர், புதுடெல்லியிலிருந்து 470 கி.மீ.யும், மாநில தலைநகரான டேராடூன் இருந்து 332 கி.மீ.,  நயினிட்டாலிலிருந்து 153 கி.மீ.யும் தூரத்திலும்,  மத்திய இமயமலைப்பகுதியில்,  934 metres (3,064 feet) உயரத்தில் சராயு மற்றும் கோமதி ஆறுகளின் சங்கமத்தில் அமைந்துள்ளது.

மிகப் புராதானமான பாக்நாதர் என்ற பாகேஸ்வர் ஆலயம் அமைந்துள்ளதாலேயே  இந்நகருக்கு பெருமை.  மிக அழகிய இமாலய மலைத் தொடரின் தோற்றங்கள்,  இயற்கையான வனம் மற்றும் மலைபிரதேசமாகும்.

மேலும், இந்நகர் சுற்றி நிறைய மிகப் புராதானமான ஆலய ஊர்களும் மலை நகரங்களும் உள்ளன.

திபெத்திற்கும், பாரத தேசத்திற்கும் முக்கிய வானிபத்தலமாக  அமைந்திருந்தது.  1962 முதல் இந்தோ- சீனாவின் போருக்குப் பிறகு இந்த வழி மூடப்பட்டுள்ளது.

பாக்காத் ஆலய வருடாந்திர உத்திராயாயனி விழா கொண்டாட்டங்களின் போது, சுமார் 15000 பேர் பங்கு பெறுகிறார்கள்.  இது உத்தரகாண்டின் குமான் பிரதேசத்தின் மிகப்பெரிய விழாவாகும். ஹந்தியும், சமஸ்கிருதமும்  இங்கு பேசும் மொழிகள்.

புராண வரலாற்றின்படி, சண்டிஸ்வரரால் உருவாக்கப்பட்டது இந்நகரம்.

மார்க்கண்டேய முனிவர் சிவபெருமானை வழிபட்ட இடம்.  இறைவர் முனிவருக்கு புலி உருவத்தில் காட்சி தந்ததால், வியாக்ரேஸ்வரர் மற்றும்  பாகேஸ்வரர் என்று வணங்கப்படுகிறார். (பாக் =புலி)

புராண வரலாறு:
பிரும்மரிஷி வசிஸ்ட்டமுனிவர், கைலாசத்தில் உள்ள மானசரோவரிலிருந்து சராயு என்ற நதியுடன்  அயோத்திக்கு செல்லுகிறார்.

இந்தப் பகுதிக்கு வரும் போது, மார்க்கண்ட முனிவர், கடும்தவம் செய்யும் காட்சியைக் காணுகிறார்.  
தானும், சராயும் செல்லும் சப்தத்தில், முனிவரின் கடும்தவம் கலைந்து விடும் ஆபத்தை உணருகிறார். 

உடனடியாக, சராயுவுடன் அங்கேயே சற்று நிதானித்து, பயணத்தை நிறுத்தினார்கள். இதனால், நீரின் அளவு அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. உடனே, பிர்மரிஷியும், சராயும், எப்படியாவது இந்த இக்கட்டிலிருந்து விடுவித்துக் கொள்ள, சிவபெருமானை வேண்டுகின்றனர்.

இவர்களின் வேண்டுதலை ஏற்று, சிவபெருமான், புலி வேடத்திலும், பார்வதி அம்மனை பசு வேடத்திலும் இவ்விடத்திற்கு வந்துவிடுகிறார்கள்.

புலி, பசுவை துரத்துகிறது, இந்த சப்தத்தினால், தவம் கலைந்த  மார்க்கண்ட முனிவருக்கு, சிவனே புலி உருவத்திலும், அன்னை பார்வதி தேவி பசு உருவத்திலும் காட்சி கொடுத்து அருள் தருகிறார்கள். 

இதன் பிறகு, பிரும்மரிஷியும் சராயும் தங்கள் பயணத்தைத் தொடருகிறார்கள்.

இந்த நிகழ்வு முதல் இவ்விடத்தில், சிவன் புலியாகவும், பார்வதி பசுவாகவும் பக்தர்கள் அனைவருக்கும் தரிசனம் தருகிறார்கள். 
 
ஆலயம் :
பாகேஸ்வரர் ஆலயம் கருவறை உயரமான கூம்பு வடிவமானது. கலசப் பகுதி தாமரை மலர் அமைப்பு.  உச்சிப் பகுதி மர வேலைப்பாடுகள் செய்து பாதுகாக்கப்பட்டு வருகிறது

ஆலயம் முழுவதும் கற்றளியால் ஆனது.  கோமதி - சராயு நதியின் சங்கமத்தில் அமைந்துள்ளது. சதுர்முகலிங்க வடிவத்தில் அமைந்த சிவபெருமான் கருவரையின் உட்பகுதியில் உள்ளது.

இந்தப் பெருநகர்,  மலை, ஆறுகள் சங்கமத்தில் அமைந்துள்ளதால், முக்கிய போக்குவரத்து சாலைகள் மிகவும் நெருக்கடியாகவே உள்ளது. பிரதான சாலையிலிருந்து, நதியின் கரையோரம் உள்ள இந்த ஆலயத்திற்கு செல்ல ஒரு அழகிய வளைவு சிவன் உருவத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. பிரதான சாலையிலேயே சற்று தூரத்தில் பேருந்து நிறுத்தம், கடைத்தெரு  உள்ளது. 

நாம் பயணம் செய்யும் வாகனத்திலிருந்து இறங்கி, இந்த சாலையில் உள்ள ஆலய வளவு அமைத்துள்ளனர். சிறிய அளவில், சூலத்துடன் கூடிய சிவன், மற்றும், இருபுறமும் பசுகள்  அவரை நோக்கியவாறும் அழகிய முறையில் அமைந்துள்ளார்கள்.

இதன் வழியே நுழைந்து,  அங்கிருந்து சுமார் 200 மீட்டர் சிறு கடைகள் நிறைந்த பாதையில் சென்றால், ஆலயதல விருட்சம் !? மிகப்பெரிய புராதான மரத்தை அழகாக கட்டிட அமைப்பு செய்து பராமரிப்பில் வைத்துள்ளார்கள். இதைக் கடந்து ஆலயம் அடையலாம்.

முதலில், வடக்கிலிருந்து தெற்கு நோக்கி அகன்று பாய்ந்துவரும் சராயு நதியும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பாய்ந்து வரும் கோமதி ஆறும் இணையும் சங்கமத்தில் சென்று நீராடவும்,
கரையில், தர்ப்பணம் கிரியைகள் செய்து கொள்ளவும் பல இடங்கள் உள்ளன.

சங்கம இடத்தில் கங்கை கரைகளில் செய்வதுபோல இறந்தவர்கள் உடல்கள் பூசைக்கு பிறகு எரியூட்டுகிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகள் செய்து தர பாகேஸ்வரர் ஆலயம் பின் பகுதியில் நதிகள் கலக்கும் இடத்தில், கட்டிடங்களும், பல்வேறு வசதிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தினம் தினம் வரும் உடல்கள் எரியூட்டப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஏதாவது நாட்களில் இறந்த உடல்கள் எரியூட்டக் கிடைக்கப் பெறவில்லை என்றால், கருப்பு துணியை எரியூட்டுவார்கள் என்றும் கூறுகின்றனர்.

ஆலயம் முன் பகுதியில் சிறிய கல்லால் ஆன வளைவுப் பகுதியும், இரும்பு வளைவும், நுழைவுப் பகுதியில் உள்ளது. கருவரை சுற்றி ஏக பிரகாரமாக உள்ளது.

நுழைவு பகுதியில், பிரகாரத்தில் ஒரு பகுதியில், பெரிய புலி உருவம் அமைத்துள்ளது, ஆலய வரலாற்றை நினைவுபடுத்தும்.

தெற்கு நோக்கிய கருவறை முன் பகுதியில் இரண்டு சிறிய நந்திகள் இருக்கின்றன. கருவரை நுழைவுப் பகுதியில், இரண்டு பகுதிகளிலும் சிறிய, சிறிய விநாயகர் சிலைகள் உள்ளன. 

ஆலய கருவறை முன் மண்டபம் உயரமாக, சற்று அகலமாக உள்ளது. உள் நுழைந்தால்,நீள் சதுர முன்மண்டபம் நல்ல உயரம் அடிப்பகுதியில் கருவரை நுழைவுவாயில் சிறிய அளவில், விநாயகர், தட்சினாமூர்த்தி, பெருமாள், சிவன் - பார்வதி கருங்கல் சிலைகள் அழகுற அமைந்திருக்கின்றன.

கருவறை நுழைவு முன் மண்டத்தின் மேல் பகுதியில், ஆலய புரான வரலாற்றை விளக்கும் வகையில் அழகிய பெரிய படம் வரைந்து கண்ணாடி  FRAME உடன் மாட்டப்பட்டுள்ளது.

கருவறை நீள் சதுர வடிவம். நான்குபுறமும், சிறிய மாடத்தில் ஜோதிர்லிங்கங்களில் உள்ள அமைப்பில், தத்தாத்தேரயர், விநாயகர், சிவன் நான்கு முகத்துடன், மேலும் பல்வேறு சுவாமிகளும் உள்ளன.

ஆவுடை சுமார் ஒரு அடி உயரத்தில் மிக பெரிதாக வட்டவடிவ அமைப்பில் உள்ளது. நடுவில், இயற்கையான ஸ்படிக உருவம் லிங்கம் மிகமிக சிறிய அளவில் உள்ளது. சுற்றிலும் பாதுகாப்பிற்காக துருபிடிக்காத இரும்பு குழாய் அமைப்பில் அமைத்துள்ளார்கள். 
இவற்றையெல்லாம் உள்ளே சென்று  மிக அருகில் நின்று சுற்றி பார்த்து வணங்கி வரலாம். பூசைகள் செய்யலாம்.

முமுகருவரை அமைப்பே இந்த ஆலயம். இதைச் சுற்றி சிறிய சிறிய கற்றளியாக சில சன்னதிகளும் உண்டு.

ஆலயத்தை ஒட்டி, நதியின் பக்கம் 
சனிஸ்வரர் காகத்தின் மீது அமர்ந்து, தனி சன்னதியிலும், மேலும், சில தனி தனி சன்னதிகளில் சிவலிங்கங்களும் பல்வேறு தெய்வங்களும் வைக்கப்பட்டுள்ளது. 

புனரமைப்பு பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஆலயத்திலிருந்து கோமதி ஆற்றிற்கு நேரடியாக செல்லவும் படிகள் பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது.

கருவரை/ ஆலயத்தின் கீழ்புறம் நீண்ட கட்டிடம் உள்ளது. அதில்  தனிதனியாக பல்வேறு தெய்வங்களின் உருவங்கள் சிலைகள் வைத்து பூசைகள் செய்யப்படுகின்றன. சாதுக்களும், பூசாரிகளும் ஆங்காங்கே இருக்கிறார்கள்.
Toilet வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.

முக்கிய பாகேஸ்வர் ஆலயம் செல்லுமுன் கிழக்கு நோக்கிய குறுகிய வழியில் சென்றால், சராயு நதிக்கு செல்லலாம். ஒரு புறம் புராதான அமைப்புடன் சிறிய மற்றொரு சிவன் ஆலயமும் உள்ளது. இது மேற்கு பார்த்து கருவரை அமைந்துள்ளது. 

கரையில் பெரிய சூலத்துடன் புலியின் மீது நின்ற கோலத்துடன் அமைந்த சிவன் சிலை அனைவரின் கவனத்தையும் கவருவது போல அமைத்துள்ளமை மிகவும் சிறப்பு.

கிடைத்த நேரத்தில், சராயு நதியில் நீராடி வழிபட்டோம்.
நதிக்கரையில் தொங்கு பாலங்கள் இருபுறமும் கரை கடக்க அமைத்துள்ளார்கள்.
நீராட்டுத் துறையில், விஷேச நாட்களில் மட்டுமல்லாமல், எல்லா நாட்களிலும் நீராடி, வழிபடவும், நீத்தார் கடன், முதலிய பூசைகள் செய்யவும், நீண்ட படித்துறைகளும், மண்டபங்களும் அமைத்துள்ளார்கள். சிறப்பாக நடந்தும் வருகிறது.

இந்த ஆலயம் வணங்கி, பின் கெளசானி என்ற ஊருக்கு செல்லும் வழியில், கோமதிக்கரையியில் உள்ள
வைத்திநாத் என்ற பாயித்திநாத்  என்ற ஊருக்கு சென்று மதிய உணவு முடித்துக் கொண்டு இங்குள்ள புராதான ஆலயத்தை தரிசித்தோம். 

பயணங்கள் தொடரும்......

🙏தகவல்கள் உதவி :
 wikepedia மற்றும் பல வலைதளங்கள்
(11.4.2022)
🙏நன்றிகளும் வணக்கங்களும்🙇🏼‍♂️

#ஆலயதரிசனம் 
#UTTRAKANT_TOUR_2022
#பாகேஸ்வர் 

#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

UTTARAKANNT_TOUR_2022#பயண அனுபவக் குறிப்புகள்#பாகேஸ்வர் #செளக்கோரி 11.4.2022

#UTTARAKANNT_TOUR_2022
#பயண அனுபவக் குறிப்புகள்
#பாகேஸ்வர்: 

#பாதாள் புவனேஷ்வர் குகைக் கோவில் தரிசனம் செய்து, அங்கிருந்து சௌக்கோரி என்ற ஊரில் உள்ள HIMSHIKAR என்ற Hotel லில் தங்கினோம். இந்த ஊர் திபெத் எல்லையில் இருக்கிறது. இங்கிருந்து இமாலய மலைத்தொடர்களின் அற்புத இயற்கை காட்சிகளை காணலாம்.
இங்கு 10.04.2022 இரவு தங்கிவிட்டு, அடுத்த நாள் 11.04.2022 காலை உணவு முடித்துக்கொண்டு பாகேஷ்வர் என்ற முக்கிய ஊருக்குச் சென்றோம்.

11.04.2022
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

https://m.facebook.com/story.php?story_fbid=7614812295260628&id=100001957991710

திண்டல் திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் 6.09.26

திண்டல்  திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் வேலாயுதசாமி கோயில், திண்டல் என்பது ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ. தொ...