#பயண அனுபவக் குறிப்புகள்
#KAUSANI (கவுசானி): 11.04.2022
#பையிஜியநாத் (11.04.2022) என்ற ஆலயம் தரிசித்தபின், மதியம் புறப்பட்டு, கவுசானி என்ற ஊருக்கு சென்று, Hotel SAGARல் தங்கினோம். மாலையில், இவ்வூரில் உள்ள காந்தி ஆசிரமம், மற்றும் ஒரு சிவன் ஆலயம் தரிசித்துவந்தோம்.
🌼'இந்தியாவின் சுவிட்சர்லாந்து, ' என்று மகாத்மா காந்தி அவர்களால் அழைக்கப்பட்ட இடம்.
🏞️இது, இமயமலைப்பகுதியில் சுமார் 6200 அடி உயரத்தில் உள்ளது.
🏝️உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள மிகப் பழமையான, இயற்கையான அழகான ஊர்.
🌈இங்கிருந்து, 250 - 300 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள பல இமயசிகரங்களை குறிப்பாக, திரிசூல், நந்ததேவி, பஞ்சூலி, முதலிய சிகரங்களை ரசித்து காணலாம்.
பைன் மரக்காடுகள் அமைந்துள்ளன.
✨உத்திரகாண்ட் பாகேஸ்வரர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பாகேஸ்வரரிலிருந்து 40 கி. மீ தூரத்திலும், அல்மோரா என்னும் நகருக்கு வடக்கில் 52 கி.மீயும்,, நைனிட்டாலிருந்து வடகிழக்கில் 123 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது.பைஜியநாத் என்ற வைத்தியநாத் என்ற ஊரிலிருந்து 16.5 கிமீ.தூரத்திலும், மற்றும் பாகேஸ்வரர் ஆலயமும் அருகில் உள்ளது.
📒பிரபல ஹிந்தி கவிஞர் சுமித்தரனந்தன் பண்டிட் இவர் பிறந்த ஊர். இவர் பெயரில் ஒரு மியூசியம் அமைத்துள்ளனர்.
🏡மிக முக்கிய சுற்றுலாதலம். இங்குள்ள காந்தி ஆசிரமம் மிகவும் புகழ் பெற்ற இடம். இங்கு மகாத்மா காந்தி 1929ல் 14 நாட்கள் இங்கு வசித்து இருந்தார். இவ்விடத்தை மிகவும் ரசித்து இங்குள்ள தொண்டு ஆசிரமத்தில் (ANASHAKTI ASHRAMAM) தங்கியிருந்தார்.
🛕இப்போது இதை காந்தி ஆசிரமம் என்று அழைத்து வருகிறார்கள். ஆசிரமத்தில்
மகாத்மாவுக்கு சிலைக்களும், வாழ்க்கை வரலாற்று புகைப்படங்களும் காட்சி படுத்தி அருமையாக அமைத்துள்ளனர். ஒரு பெரிய மண்டபம் இதற்காக கட்டப்பட்டுள்ளது. மற்றும், தியானமண்டபம், சிறிய நூல் நிலையம், உணவுக்கூடம், காதி கதர் கிராம கைவினைப் பொருட்கள் விற்பனைக்கூடம், மற்றும் வரலாற்று ஆராய்ச்சிக்கூடமும், அமைந்துள்ளது.
🏔️VIEW POINT என்ற இடத்திலிருந்து 8 இமய சிகரங்களைப் பார்த்து களிக்கும் வன்னம், மேடை அமைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
🏖️ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். எந்த நுழைவுக்கட்டணமும் வசூலிக்கப்படவில்லை.
🏯அருகில் தங்கும் விடுதிகள் உள்ளன.
🌌கௌசானி யில் மேலும் ஒரு வானிலை தொலைக்காட்சி இடமும் உள்ளது. புதிய கருவிகளைக் கொண்டு தொலைக்காட்சி கூடம் உள்ளது. ஆர்வம் உள்ளவர்கள், இமய சிகரங்கள், மலை, பனி, பகுதிகளை இங்கு வந்து இந்தக் கருவிகள் மூலம் ஆய்வு செய்கிறார்கள்.
🏢HOTEL SAGAR என்ற பெரிய Hotel லில், தங்கியிருந்தோம். இங்கிருந்து நடந்தே காந்தி ஆசிரமம் சென்று வந்தோம்.
🛕மேலும் சற்று தூரத்தில் உள்ள சிவன் ஆலயம் சென்றோம்.தனியார் TRUST மூலம் நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது. யோகி ஒருவரால் துவக்கப்பட்டு ஆலயம் புதிதாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கருவரை மண்டபம் உயரக் கோபுரம். கருவறையில், சிவன், ராதா கிருஷ்ணர், அம்மன், முதலிய அழகிய சிறிய பளிங்கு சிலைகள் வைக்கப்பட்டு, அழகாக ஆடை ஆபரணங்களுடன் வண்ண வண்ண விளக்கு அமைப்புக்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஆலயம் சுற்றில் மண்டபம் உள்ளது. அறைகளும் உள்ளன.
🏔️மலை பிரதேசம் என்பதால், எல்லா இடங்களும் படிகளும், சற்று உயரமாகவும் அமைந்துள்ளன. சாலை, மின் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சிறிய, சிறிய கடைகளும் அமைந்துள்ள ஊர்.
🌀இந்த இடங்களைப் பார்த்து விட்டு, 11.04.2022 இரவு Hotel SAGAR ல் தங்கிவிட்டு, 12.04.2022 முன்காலையிலேயே DWRAHAT என்ற ஊர் சென்றோம்.
அதன் அருகில் உள்ள புகழ்பெற்ற பாபா குகை தரிசனம் செல்ல புறப்பட்டோம்.
பயனங்கள் தொடரும்...
🙏தகவல்கள் உதவி :
wikepedia மற்றும் பல வலைதளங்கள்
(11.4.2022)
🙏நன்றிகளும் வணக்கங்களும்🙇🏼♂️
#ஆலயதரிசனம்
#UTTRAKANT_TOUR_2022
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
No comments:
Post a Comment