Thursday, June 27, 2024

முக்திநாத்திருப்பயணம் - 20 #NepalYatra 20.04.2024 - 4.5.24

Sri Venkatesh mukti Narayan temple
SALIGRAM Musiam temple 
#முக்திநாத்திருப்பயணம் -
#NepalYatra 20.04.2024 - 4.5.24
20

Visited on 28.4.24 Sri Venkatesh mukti Narayan temple. Wonder ful collection of Saligram. Hindu culture demonstration. On return from Jomsom to Pokhra.
Shreedharacharya Saligram Museum( || श्रीधराचार्य शालिग्राम संग्राहलय)
#சுப்ராம்ஆலயதரிசனம்
#முக்திநாத்திருப்பயணம் -
#Nepal Yatra 20.04.2024 - 4.5.2024 -
#சுப்ராம்ஆலயதரிசனம் 
#என்றும்_அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

முக்திநாத்திருப்பயணம் 19 -#NepalYatra 20.04.2024 - 4.5.2024

#முக்திநாத்
#முக்திநாத்திருப்பயணம் -
#NepalYatra 20.04.2024 - 4.5.2024 
19
🕊️ #பயணஅனுபவக்குறிப்புகள்.
27.04.2024

✨26.04.2024 அன்று விடியற்காலையில் காட்மண்டிலிருந்து புறப்பட்டு போக்ரா இரவு சென்று சேர்ந்தோம். Hotel Mount Everest என்ற Hotel லில் இரவு உணவுக்குப் பின் தங்கினோம்.
🚕27.04.24 அன்று விடியற்காலையில்  5 - 6 பேர்களாக தனித்தனிக்குழுவாக Bolero வண்டியில் புறப்பட்டு காலை உணவு வழியில் முடித்துக் கொண்டு, ஜாம்சம் சென்று முக்திநாத் அடைந்தோம்.

#முக்திநாத்
🛐108 திவ்ய தேசத்தில் முக்கியமான தலமாக இது விளங்குகிறது.
முக்திநாத் பெருமாளின் அற்புத தரிசனம்.

🛐முக்திநாத், நேபாள நாட்டின், முஸ்தாங் மாவட்டம் அமைந்த இமயமலையில், முக்திநாத் பள்ளத்தாக்கில், 3,710 மீட்டர் உயரத்தில் அமைந்த, இந்து 
மற்றும் பௌத்தர்களின் 
புனித தலமாகும்.

🛐வைணவர்கள் போற்றும் 108 திவ்ய தேசங்களில், முக்திநாத் சிறந்த திவ்ய தேசமாகும்.

🛐பயண காலம் & வழி

🛐ஆண்டின் மார்ச் மாதம் முதல் சூன் மாதம் முடிய முக்திநாதரை தர்சனம் செய்ய ஏற்ற காலமாகும். 
கடும் குளிர் மற்றும் மேக மூட்டத்தால் முக்திநாத் பயணம் கடுமையானது. எனவே முதலில் காட்மாண்டிலிருந்து, பொக்காராவை அடைந்து, அங்கிருந்து வான் வழியாக ஹெலிகாப்டர் அல்லது சிற்றுந்து மூலம் முக்திநாதரை தரிசிக்கலாம். 

🛐பொக்காராவிலிருந்து முக்திநாத் செல்லும் வழியில் ராணிபௌவா, ஜோர்கோட், ஜார்கோட், சோங்கூர், காக்பெனி அல்லது ஜோம்சோம் ஆகிய இடங்களில் தங்க வசதியுள்ளது. சிற்றுந்து மூலம் காத்மாண்டிலிருந்து 377 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முக்திநாத் கோயிலை அடைய 10 மணி நேரமாகும். காத்மாண்டிலிருந்து வான் வழியாக 194 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

🛐எனவே முதலில் காட்மாண்டிலிருந்து, 
பொக்காராவை அடைந்து, 
ஜீப் மூலம் ஜொம்ஸம் சென்று, பின்னர் ஜுப்  மூலமே அடிவாரம் அடைந்து சுமார் 300 படிகள் மூலம் நடந்தோ அல்லது மற்றும்  சிறிது துரம் குதிரை மூலம் அல்லது தோலி மூலமாகவோ, முக்திநாதர் ஆலயம் சென்று தரிசிக்கலாம்

🛐திருமங்கையாழ்வார் மற்றும் பெரியாழ்வார் ஆகியவர்கள் முக்திநாதரை போற்றிப் பாடி மங்கள்சாசனம் செய்துள்ளனர். 

🛐ஆழ்வார்கள், இத்தலத்தை, 12-பாசுரங்களால், 
சாளக்கிராமம் என்றே மங்களாசாசனம் செய்துள்ளனர்.

வடதிசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி
இடமுடை வதரி யிடவகை யுடைய எம் புருடோத்த மனிருக்கை
தடவரை யதிரத் தரணி விண்டிடியத் தலைப்பற்றிக் கரை மரம் சாடி
கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்ட மென்னும் கடி நகரே.

🛐பெரியாழ்வார் திருமொழி-4.7.9 (399)

கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்,
சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செறுக்களத்து,
மலை கொண்டலை நீரணைகட்டி மதிள் நீரிலங்கை வாளரக்கர் தலைவன்,
தலை பத்தறுத்துகந்தான் சாளக்கிராமமடை நெஞ்சே.

🛐திருமங்கையாழ்வார்-பெரிய திருமொழி-1.5.1 (988)

🛐முக்திநாத்தை நூறு புனித நீர் நிலைகள் எனப் போற்றி வழிபடுகிறார்கள்.

🛐வைஷ்ணவ சம்பிரதாயத்தில் பிரதானமாக கருதப்படும் 108 புராண திவ்ய தேச ஆலயங்கள் சிலவற்றில் சாளக்கிராம கற்கள் கொண்டே மூல 
மூர்த்தி சிலை அமைத்து வைக்கப்பட்டுள்ளது. 

🛐அந்த சிலைகள் உச்சந்தலை தொடங்கி, நாபி வரையில் நீண்ட துளை உடையதாக இருக்கும். 

🛐உட்புறத்தில் சங்கு, சக்கரம், தாமரை ஆகிய விஷ்ணுவின் சின்னங்களும் இருக்கும்.

🛐*அப்படிப்பட்ட சாளக்கிராம* *சிலைகள் மூலவராக* *இருக்கும் ஆலயங்கள்* *பக்தர்களுக்கு விரைவில்* *பலன் தருவதாக* *கூறப்படுகிறது*. 

🛐முக்திநாத்தில் பாயும் கண்டகி ஆற்றில் கிடைக்கும் சாளக்கிராமத்தை, வைணவர்கள் நாரயாணனின் அம்சமாக கருதி வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடுகிறார்கள்.

🛐நேபாளத்தில் உள்ள 
முக்திநாத் என்னும் சாளக்கிராமத் தலம், தாமே சுயம்புவாக தோன்றியதால் ‘ஸ்வயம் வியக்தம்’ என்னும் சிறப்பினைக் கொண்டு விளங்குகிறது. 

🛐அங்கு இறைவன் நிரந்தரமான நிலையில், நித்ய சாந்நித்யமாக எழுந்தருளியிருக்கிறார் என்று வைணவ பெரியோர்களால் குறிப்பிடப்படுகிறது. 

🛐கண்டகி என்ற புண்ணிய நதியில் நீராடி முக்தி நாதன் எனப்படும் சாளக்கிராம மூர்த்தியை பக்தியுடன் வழிபடுபவர்கள், பூவுலகில் சுகமாக வாழ்ந்த பின்னர் வைகுண்டத்தில் வசிப்பார்கள் என்று ‘விஷ்ணு புராணம்’ தெரிவிக்கிறது. 

🛐இப்படிபட்ட சிறப்புகளையுடைய
முக்திநாத் பெருமாளை
நேரில் சென்று தரிசிப்பது மிக மிக புன்னியம். நாங்கள் சென்ற போது மிக நல்ல தட்பவெட்ப நிலை. மிகவும் அதிகம் கூட்டம் இல்லை. அவ்வளவு அழகு,  அவ்வளவு சிறப்பான தரிசனம்

🛐முக்திநாத் இருப்பிடத்தை 51 சக்தி பீடங்களில் ஒன்றாக சாக்தர்கள் கருதுகின்றனர்.

🛐திபெத்திய பௌத்தர்கள் முக்திநாத்தை நூறு புனித நீர் நிலைகள் எனப் போற்று வழிபடுகிறார்கள்.

🛐தாந்திரீக திபெத்திய பௌத்தர்கள், முக்திநாத்தில் உள்ள டாகினி என்ற பெண் தெய்வத்தின் இருப்பிடமாக கருதுகின்றனர். 

🛐ஆலயம் மலை மீது உள்ளது.
மலை அடிவாரத்தில் கடைகள், வீடுகள், சிறிய ஹோட்டல்கள் உள்ளன.

🛐நாங்கள் 2023 ல் இங்கு வந்து நல்ல தரிசனம் பெற்றோம். தற்போது, அடிவாரத்திலிருக்கும் Arch முதல், ஆலய வளாகம் வரை செல்ல நல்ல சாய்வுடன், அகலமான அளவில் கைப்பிடியுடன் தாழ்வான அமைப்புடன் சுமார் 300 படிகள் அமைத்துள்ளார்கள். 
வயதானவர்களும் மெல்ல ஏறி சென்று தரிசித்துவரலாம்.

🛐குதிரை, டோலி மூலமும், வாகன நிறுத்தும் இடத்திலிருந்து, ஆலய வளாகம் வரையிலும் செல்லலாம்.

🛐ஆலயம் மேற்கு நோக்கிய அமைப்பில் உள்ளது. முன்புறம் அழகிய இரண்டு குளங்கள் உள்ளன. அவற்றில் முதலில் நீராடினோம். பிறகு, கருவரை உள்ள ஆலயப்பகுதியின் பிரகாரத்தில்  அரைவட்ட வடிவத்தில் ஆலயத்தைச்சுற்றி அமைக்கப்பட்டுள்ள 108 கற்குழாய்கள் மூலம், அருவி போல வெளியேறும் நீரில் குளித்தோம்.

🛐பிறகு உடை மாற்றிக் கொண்டு ஆலயம் சென்று கருவரையில் மிக அருகில் அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கும் பெருமாளை சேவித்து, கருவரையை வலம் வந்தோம். 

🛐மிக நல்ல வெப்ப நிலை. அதிக கூட்டம் இல்லை.

🛐கருவரைப் பகுதியில் மட்டும் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. 

🛐முக்திநாதரிடம் உலக ஷேமத்திற்காக 
நல்ல பிரார்த்தனை செய்து கொண்டோம்.

💥ஜ்வாலா மாய் கோயில் :

💥வெட்டவெளிப்பகுதியாக இருந்தாலும், மிக அதிக குளிர் இல்லை.
தரிசனம் முடித்துக் கொண்டு, மலையின் தென் பகுதியில் அமைந்துள்ள புத்தர் ஆலயம், மற்றும், அனையா ஜோதியாக விளங்கும் ஜ்வாலா மாய் கோயிலும் சென்று தரிசித்தோம்.

💥ஜ்வாலா மாய் கோயிலும் அதன் நித்திய சுடரும்ஃ முக்திநாத் கோயில் வளாகத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் ஜ்வாலா மாய் கோயில் ஆகும், இது ஜ்வாலா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் அதன் நித்திய சுடருக்கு பிரபலமானது, இது இயற்கை எரிவாயு மூலத்திலிருந்து தொடர்ந்து எரியும் என்று கூறப்படுகிறது. இந்த சுடர் தெய்வத்தின் தெய்வீக சக்தியைக் குறிக்கும் என்று நம்பப்படுகிறது, மேலும் பக்தர்கள் அவரது ஆசீர்வாதங்களையும் பாதுகாப்பையும் பெற கோயிலுக்கு வருகை தருகின்றனர். 

💥ஜ்வாலா மாய் கோயிலும் பௌத்தர்களால் மதிக்கப்படுகிறது, அவர்கள் குரு ரின்போச்சே மேதியர் என்று நம்புகிறார்கள்.

💥இந்த ஆலயமும் சென்ற முறை தரிசனம் செய்தோம் தற்போது மிகவும் முன்னேற்றம் அடைந்து உள்ளது.
கட்டிடங்கள் பழமை நீக்கி பொலிவுடன் உள்ளது.
 
💥அருகில் உள்ள பிரமாண்டமான உருவத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையும் தரிசித்து, மலைப்பாதையில் இறங்கி அடிவாரம் அடைந்தோம்.

💥அடிவாரத்தில் எங்களுக்கான ஜீப்பில் ஏறி மாலையில் ஜோம்சம் என்ற ஊருக்கு வந்து Hotel லில் தங்கினோம்.
எல்லோரும் உணவு முடித்த பிறகு அவரவர்களுக்கான தங்குமிடங்கள் சென்று தங்கினோம்.

🌟வாழ்வில் மிக முக்கிய நாளாக அற்புத தரிசனம் பெற்ற நாளாக அனைவருக்கும் அமைந்தது.

🌟விடியற்காலையில் நாங்கள் தங்கியிருந்த ஜோம்சம் நகரில் இருந்து தவளகிரி சிகரம், மற்றும் அன்னபூர்ணா மலைகளின் சிகர அழகை கண்டு ரசித்தோம்.

🌟சூரிய உதயத்தின் போது பொன்சிகரமாகி அற்புத பொன்னார் மேனிய காட்சிகள் கண்டது என்றும் நினைவில் இருக்கும்.

🌟மறுநாள் 28.04.2024 அன்று காலை உணவு முடித்துக்கொண்டு Pokhara மதியம் வந்து சேர்ந்தோம்.

நன்றி🙏🏼
26.4.24 #மீள்தரிசனம் 
#சுப்ராம்ஆலயதரிசனம்
#முக்திநாத்திருப்பயணம் -
#Nepal Yatra 20.04.2024 - 4.5.2024 -
#சுப்ராம்ஆலயதரிசனம் 
#என்றும்_அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

முக்திநாத்திருப்பயணம் - 18 #NepalYatra 20.04.2024 - 4.5.2024

#மனக்கனாமாஆலயம்
#காத்மாண்டு
#முக்திநாத்திருப்பயணம் -
#NepalYatra 20.04.2024 - 4.5.2024 
18
🕊️ #பயணஅனுபவக்குறிப்புகள்.
26.04.2024

✨26.04.2024 அன்று விடியற்காலையில் காட்மண்டிலிருந்து புறப்பட்டு போக்ரா செல்லும் வழியில் மனக்கனாமா ஆலயம் சென்றோம்.
முதன்முறை முக்திநாத் 5 ஆண்டுகளுக்கு முன் சென்று வந்த போது, இந்த ஆலயம் சென்று தரிசித்து வந்தோம். மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் எப்போதும் உள்ள நேப்பாள் தேசத்தின் முக்கிய சக்தி பீடமாகும்.

🩸நேபாளத்தின் கந்தகி மாகாணத்தில், கோர்கா மாவட்டத்தில் மனகமனா கிராமத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. 

💧இது பார்வதியின் அவதாரமான இந்து தெய்வமான பகவதியின் புனித இடமாகும். மனகமனா என்ற பெயர் இரண்டு சொற்களிலிருந்து உருவானது, மன - இதயம் என்று கமனா - விருப்பம் என்றும் பொருள்படும்.

🍥பகவதி தேவி 'அதன் பக்தர்களின் விருப்பங்களை வழங்கும் கோயில்' என்பது பார்வதியின் அவதாரமான பகவதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயிலாகும், எனவே, பலர் மணகமனாவை "இதயத்தின் விருப்பங்களின் தெய்வம்" என்று அழைக்கிறார்கள்.

🚊இது 1678 இல் அர்மான் ராயமாஜியால் நிறுவப்பட்டது.

🌺காத்மாண்டுவுக்கும் மணகமனாவுக்கும் இடையிலான தூரம் 77 கிமீ ஆகும். சாலை தூரம் 123 கிமீ ஆகும். 

🪔காத்மாண்டுவுக்கு மேற்கே உள்ள மார்ஷியாங்டி மற்றும் திரிசுலி நதிகளைக் கடந்து  1300 மீட்டர் உயரமுள்ள மலையில் மனகமணா கோயில் அமைந்துள்ளது

கோயிலின் அமைப்பு :

🌟2018 ஆம் ஆண்டில், மர கட்டிடக்கலை பாணியில் செதுக்கப்பட்ட ஜன்னல்கள், கதவுகள் மற்றும் தண்டல்கள் மூலம் கோயில் புதுப்பிக்கப்பட்டது. அதேபோல், சுண்ணாம்புடன் இணைக்கப்பட்ட களிமண் செங்கற்களால் சுவர்கள் கட்டப்பட்டன, மேலும் சுமார் பத்தொன்பது கிலோகிராம் தங்கம் பூசப்பட்டு கூடுதலாக கோயிலின் சூழலை பிரகாசமாக்கியது. மற்றும் மேம்படுத்தியது.

 🌟இரண்டு மாடியுடன் கூடிய மனகாமனா தேவி கோயில் சுமார் பதினைந்து அடி உயரத்துடன் ஐம்பத்து மூன்று சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. செம்பு கூரைகளால் நிழலிடப்பட்ட இந்த கோயில் அதன் வளாகத்திற்குள் பல்வேறு தெய்வங்களின் சிலைகளைக் கொண்டுள்ளது.

🌟இந்து மத சடங்குகளைச் செய்ய விரும்பவில்லை என்றால், திருமணமாகாத தம்பதிகள் மணகமனா கோயிலுக்குச் செல்லலாம், ஆனால் அவர்கள் கோவிலில் பொருத்தமற்ற செயல்கள் செய்ய தடை செய்யப்பட்டுள்ளன.

🌟ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான மக்களால் மணகாமனா யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. மனகமனாவில் பகவதி தேவியை தரிசனம் செய்வதற்கான இந்த மதப் பயணம் மனகாமன தர்ஷன் என்று குறிப்பிடப்படுகிறது.

🌟இந்து புராணங்களின்படி, பிரபஞ்சம், பூமி, நெருப்பு, நீர், காற்று மற்றும் ஈதர் ஆகிய ஐந்து அண்டத் தனிமங்களால் ஆனது என்று கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் தெய்வத்திற்கு காணிக்கைகள் செலுத்தப்படுகின்றன. 
🪔பின்வருவனவற்றுள் குறைந்தபட்சம் ஒன்று வழிபாட்டுத் தலங்களில் இருக்க வேண்டும்.

[  ] அபிர் (வெர்மிலியன்) 
[  ] கேசர் பாதம் (தூய குங்குமப்பூ மற்றும் பாதாம்)
[  ] பூக்கள் மற்றும் இலைகள்
[  ] துப் (தூபம்) 
[  ] தியோ (எண்ணெய் விளக்கு) 
[  ] பஸ்த்ரா (துணி, பொதுவாக சிவப்பு நிறத்தில் இது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது) 
[  ] பழம் மற்றும் தேங்காய் மற்றும் இனிப்பு இனிப்புகள் 
[  ] பெல் வெற்றிலை மற்றும்
[  ] ஜன்னாய் (புனித நூல்) 
[  ] அண்ணா, 
[  ] தானிய (அரிசி) 
[  ] சவுபாக்யா (சிவப்பு துணி, சூரா, போடா போன்றவை)

🌟கோவிலில் விலங்குகளை பலியிடுவது பாரம்பரியமாக உள்ளது. சில யாத்ரீகர்கள் கோயிலுக்குப் பின்னால் ஒரு பெவிலியனில் ஆடுகள் அல்லது புறாக்களை பலியிடுகிறார்கள்.

🌟ஆலய கருவரை சற்று உயரமான மேடையில் இருந்தாலும், உள்ளே நுழையும் வழி சற்று சிறியது. அம்மன் சன்னதி சற்று பள்ளத்தில் அமைக்கப்பட்டு சிவப்புத் துணியால் அலங்காரம், செய்யப்பட்டுள்ளது. 

🌟மக்கள் மிக நீண்ட வழியில் வரிசையில் நடந்து வந்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

🌟கருவறை பிரகாரத்தில் கிழக்குப் பகுதியில், துர்க்கை, மற்றும் தெய்வ சிலைகள் சிறிய அளவில் உள்ளன.

🌟தற்போது, விலங்குகள் பலியிடுதல் முறைகள் அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.

🌟ஆலய வளாகம் எப்போதும் பக்தர்கள் கூட்டமாகவே நிறைந்து இருக்கும்.

🌟இந்த ஆலயம் அளவில் சிறிய அளவில் உள்ளது. செல்லும் வழியெங்கும் கடைகள், சிறிய உணவுக் கடைகள், ஆலய அர்ச்சணைப் பொருட்கள், மற்றும் பலவித பொருள்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் ஏராளமாக உள்ளன.

🌟நாங்கள் 5 ஆண்டுகளுக்குமுன்னால் 2018ல் முக்தி நாத் பயணத்தின்போது, இவ்வாலயம் வந்து, பத்தர்களுடன் 4 - 5 மணி நேரம் வரிசையில் நின்று, கருவறையில் உள்ள அம்மனை தரிசித்தோம்.

🌟இன்றும் வெள்ளிக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் ஆலயத்தில் மிகவும் அதிகம் இருந்தது.

🚊மனக்கனாமனாகேபிள் கார் 
மனகாமணா என்ற சிற்றூர்,
மலை மீது உள்ளசிறிய ஊர். அதற்கு சாலை வழியில் சுற்றுப்பாதையில் வர வேண்டும்.

🚡மனகமனா கேபிள் கார் வருவதற்கு முன், முந்தைய காலங்களில், மனகமனா  அடைய ஒரே வழி தரைவழியாகவே இருந்தது. சுமார் மூன்று மணி நேரம் நீண்ட கடினமான மலையேற்றமாகும். 
தற்போது, பாதுகாப்பான அமைப்பில் Cable Car மூலம் சென்று அடையலாம்.

🚠இப்போது, குரிந்தாரில் இருந்து கேபிள் கார் வசதி உள்ளது, இது முக்லிங்கிற்கு கிழக்கே 5 கிலோமீட்டர் (கோயிலை3.1 மைல்) தொலைவில் உள்ளது.

🚟கேபிள் கார் 2.8 கிலோமீட்டர் (1.7 மைல்) தூரத்தை 10 நிமிடங்களில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சவாரி செய்கிறது. 

🚊கேபிள் கார் வழக்கமாக பகல் நேரத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்குகிறது மற்றும் மதிய உணவு இடைவேளையின் போது மதியம் முதல் ஒன்றரை மணி வரை நிறுத்தப்படுகிறது.

 🚋ராயல் மேன்மை பட்டத்து இளவரசர் தீபேந்திர பீர் பிக்ரம் ஷா தேவ் 24 நவம்பர் 1998 அன்று மனகமனா கேபிள் காரை திறந்து வைத்தார். 

(இதை நினைவு கூறி, இவருக்கு, மலைமீது சிலை வைக்கப்பட்டுள்ளது)

கேபிள் கார் அமைப்பு :

 🚋ஆஸ்திரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது மற்றும் நூறு சதவீத பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

🚋மின்சாரம் செயலிழந்தால் தானாக இயக்கப்படும் ஜெனரேட்டர்கள் மற்றும் ஹைட்ராலிக் அவசர இயக்கி போன்ற அம்சங்கள் இதில் உள்ளன. கேபிள் கார் சேவையில் பணிபுரியும் ஊழியர்.கள் தகுதியானவர்கள்,  அவசரநிலைகளுக்காக நல்ல துணையாக இருந்து நன்கு பயிற்சி பெற்றவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்கள்.

🚋கேபிள் காரின் கீழ் நிலையம் குரிந்தாரில் (258 மீட்டர் (846 அடி)) மற்றும் மேல் நிலையம் மங்கமானாவில் (1,302 மீட்டர் (4,272 அடி)) அமைந்துள்ளது. 3கோயிலின் அமை1 பயணிகள் கார்கள் மற்றும் 3 சரக்கு கார்களுடன், கேபிள் கார் ஒரு மணி நேரத்திற்கு 600 பேர் வரை கையாள முடியும். ஒரு கேரியருக்கு பயணிகளின் எண்ணிக்கை 6 ஆகும்.

🚊பயணக்கட்டணம் ரூ.1072 /- இருவழிப் பயணத்திற்கும் சேர்த்து (option) கட்டணம் வசூல் செய்கிறார்கள்.

🚊மேலும், கேபில் காரில்  அமர்ந்தவுடன், பயணம் ஆரம்பிக்கும் போது நம்மையும் வைத்து ஒரு படம் பிடித்து வைத்துக் கொண்டு ஒரு டோக்கன் தருகிறார்கள்.  திரும்ப நாம் தரிசனம் முடித்து மலையிலிருந்து வந்தவுடன், நம்மிடம் அவர்கள் Computer திரையில் அவர்கள் எடுத்த படத்தைக் காட்டி சரி செய்து பணம் வசூலித்துக் கொண்டு Photo Copies கொடுக்கின்றார்கள்

நன்றி🙏🏼
26.4.24 #மீள்தரிசனம் 
#சுப்ராம்ஆலயதரிசனம்
#முக்திநாத்திருப்பயணம் -
#Nepal Yatra 20.04.2024 - 4.5.2024 -
#சுப்ராம்ஆலயதரிசனம் 
#என்றும்_அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

முக்திநாத்திருப்பயணம் - 17 NepalYatra 20.04.2024 - 4.5.2024

#AmidevaBuddhaPark,
#SwayambunathTemple
#அமிதேவாபுத்தர்பூங்கா, 
#சுயம்புநாத்கோயில்
#காத்மாண்டு
#முக்திநாத்திருப்பயணம் -
#NepalYatra 20.04.2024 - 4.5.2024 
17
🕊️ #பயணஅனுபவக்குறிப்புகள்.
26.04.2024
🌼 26.04.2024 அன்று விடியற்காலையில் நாங்கள் தங்கியிருந்த Hotel Narayana விலிருந்து புறப்பட்டு, போக்ரா சென்றோம். வழியில் காட்மண்டு நகர வட்டச்சாலையில் உள்ள இந்தஇடத்தில் உள்ள இந்த பிரபலமான புத்தர் ஆலயம் தரிசனம் செய்தோம்.

✨இங்கிருந்து சற்று உயரத்தில் குன்றுப்பகுதியில் உள்ள காட்மண்டு நகரின் 
மிகவும் பிரபலமான சுயம்புநாத் கோவில் செல்ல முடியும்.
✨ இது ஒரு அமைதியான  இடம்.

🌼அமிதேவா புத்த பூங்கா, 2003 இல் கட்டப்பட்டது. 

🌟இதில் பிரம்மாண்டமான முன்று பிரம்மாண்டமான சிலைகளைக் கொண்டுள்ளது.

🌼இதில் நடுநாயகமாக, 67 அடி உயரம் கொண்ட மைய சிலை, சித்தார்த்தா கௌதமாவாக வாழ்க்கையைத் தொடங்கிய வரலாற்று புத்தரான ஷக்யமுனி புத்தரின் சிலை ஆகும். 
இதன் சிறப்பு யாதனின்,
 நீண்ட ஆயுளுடன் தொடர்புடைய புத்தரின் அமிதாபா (அல்லது அமிதேவா) வடிவமாகும். அவர் தனது கைகளில் ஒரு மாபெரும் கிண்ணத்தை வைத்திருக்கிறார், அதில் அழியாமையின் தேன் உள்ளது.

🌼ஷக்யமுனி புத்தரின் இடதுபுறத்தில் 64 அடி உயரமுள்ள சென்ரெசிக் (அவலோகிதேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்), "அசைக்க முடியாத கண்ணால் பார்ப்பவர்". அவர் அனைத்து போதிசத்துவர்களிலும் மிகவும் இரக்கமுள்ளவர், மேலும் "ஓம் மணி பத்மே ஹம்" என்ற மந்திரத்தை உச்சரிப்பவர்கள் அவரது உதவியை நாடுகிறார்கள். அவர் பல ஆயுதங்களுடன் சித்தரிக்கப்படுகிறார், அவற்றை அவர் தேவைப்படுபவர்களுக்கு உதவுவதற்காக பயன்படுத்துகிறார். தலாய் லாமா சென்ரெசிக்கின் அவதாரமாக கருதப்படுகிறார்.

🌼ஷக்யமுனி புத்தரின் வலதுபுறத்தில், 64 அடி உயரத்தில், குரு ரின்போச்சே (குரு பத்மசம்பவா என்றும் அழைக்கப்படுகிறார்), "விலைமதிப்பற்ற மாஸ்டர்". முழு அறிவொளி பெற்ற நபராக அவதாரம் எடுத்த குரு ரின்போச்சே, ஆதி ஞானத்தின் பாதுகாவலர் மற்றும் முழுமையான வஜ்ராயனா (தந்திர) போதனைகளை உலகிற்கு வெளிப்படுத்தினார்.

🌼இந்த முப்பெரும் சிலைகள் பிரார்த்தனை சக்கரங்களால் சூழப்பட்டுள்ளன. அவற்றுக்குப் பின்னால் நடந்து செல்கிறார்கள்.

🌼 ஒரு அலங்கரிக்கப்பட்ட ஸ்தூபி, ஒரு மகத்தான பிரார்த்தனை சக்கரத்தைக் கொண்ட  கருவரை அங்கே உள்ளது.

🌼சிலைகளின் அடிவாரத்தைச் சுற்றியுள்ள சிக்கலான கலைப்படைப்புகள் பல கூடுதல் பொக்கிஷங்களை வெளிப்படுத்துகிறது. 

🌼சிவன் வசிப்பதாகக் கூறப்படும் கைலாஷ்நாத் மலை உட்பட புனித மலைகளின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கைலாஷ்நாத்தின் ஒரு பக்கத்தில் ஒரு பெரிய தங்க சிவலிங்கம் உள்ளது, இது ஒரு பல்லாகக் கருதப்படலாம்.

🌼மேலும், புத்தா சம்பந்தப்பட்ட கட்டிடங்கள் அருகில் உள்ளன.
🌼இங்கிருந்து சற்று தூரத்தில் உயரமான இடத்தில் பிரபலமான புத்த ஸ்துபி அமைந்துள்ளது.

🌼அதன் அளவு மற்றும் மத முக்கியத்துவம் இருந்தபோதிலும், இந்த பூங்கா காத்மாண்டுவைச் சுற்றியுள்ள பிற தளங்களைப் போல, மேலும் அதிகமுக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

🌟நகரத்தின் குழப்பத்திலிருந்து ஒரு ஓய்வு மற்றும் அறிவொளியை நோக்கி ஒரு அமைதியான படி எடுக்க ஒரு வாய்ப்பு ,

நன்றி🙏🏼
26.4.24 #மீள்தரிசனம் 
#சுப்ராம்ஆலயதரிசனம்
#முக்திநாத்திருப்பயணம் -
#Nepal Yatra 20.04.2024 - 4.5.2024 -
#சுப்ராம்ஆலயதரிசனம் 
#என்றும்_அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

திருப்போரூர் கந்தசாமிக்கோவில் செங்கல்பட்டு மாவட்டம்

திருப்போரூர் கந்தசாமிக்கோவில் திருப்போரூா் கந்தசுவாமி கோவில் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் இருக்கும...