Sunday, July 24, 2022

AMARNATHYATHRA 2022 - Shankarachariar Temple - 6.07.2022


#அமர்நாத்பனிலிங்கதரிசனம் 
#காஷ்மீர்
#அமர்நாத்யாத்ரா
#பயணஅனுபவக்குறிப்புகள்
2.
#Shankaracharyar Temple

பாரதத்தின் உச்சியில் ஒரு மாகானின் ஆலயம்

6.07.2022 புதன்:

காலை:
நாங்கள் SRINAGAR Hotel லிருந்து
புறப்பட்டு, அருகில் உள்ள
ஆதிசங்கரரால் ஸ்தாபிதம் செய்யப்பட்ட #Shankaracharyar Temple சென்று தரிசித்தோம்.

ஜம்மு & காஷ்மீர் Union Territory பகுதியில் Srinagar City யின் ஒரு பகுதியாக உள்ளது,
சங்கராச்சாரியார் மலை எனப்படும் பகுதி.

இது GOPADRI HILL என்று அழைக்கப்படும் மலைக்குன்றுப் பகுதியில் உள்ளது. 

 சுமார் 6170 அடி உயரத்தில் ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்ட ஆலயம். முதலில் Tempo Traveller மூலம் இம்மலை அடிவாரம் சென்றாலும், குன்றின் மிக அருகில் ஆலய நுழைவு பகுதி செல்ல Auto, மற்றும் Car கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது..

சுமார் 5.6 கி.மீ Border Roads organisation மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த சாலையில், செல்லும் வழியில் Sringar Cityயின் அழகை ரசிக்க View Point கள் உள்ளன.

எல்லா இடங்களும், பாரத ராணுவத் தினரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் நம் ராணுவ வீரர்கள், ஏராளமான அளவில், மக்கள் சேவை செய்து வருவதை காண்கிறோம்.

அதன்பின், Security Checkup செய்யப்பட்டதும், சுமார் 300 மீட்டர் உயரத்தில் உள்ள படிகள் மேல் ஏறி சென்று, ஆலயம் தரிசிக்க வேண்டும்.

கீழ் நுழைப்பகுதியில், ராணுவத்தில் இன்னுயிர் நீத்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தனியாக அவர்கள் பற்றிய விபரக் குறிப்புகளும் உள்ளன. 

பழமையான ஆலயம் கி.பி 371ல் கட்டப்பட்டிருந்தாலும் 1792 - 1857 ஆண்டுகளில் இது மறுவடிவம் பூண்டுள்ளது என்று சரித்திர ஆசிரியர்கள் கருதுகிறார்கள். மீண்டும், மீண்டும் புணரமைக்கப்பட்டும் உள்ளது. சுமார் 1000 அடி உயரத்தில் இவ்வாலையம் உள்ளது.
 
உச்சியில், சுமார் 240 படிகள் ஏறி தான், ஆலயம் தரிசிக்க முடியும். 
அரவிந்தர், மைசூர் மகாராஜா, வினோபா பாஜி, முதலியோர் இங்கு வந்து வழிபட்டு சென்ற குறிப்புகளும் அவர்களால் பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

எட்டு பட்டை வடிவில் கற்றளியாக இந்த ஆலய அமைப்பு உள்ளது. உச்சியில் கலசம் உள்ளது. ஆலயம், மேல்புறம் கருவரை சுற்றுப் பிரகாரம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து #SRINAGAR முழுவதும் மற்றும், ஜீலம் நதி, DAL ஏரி முதலிய அனைத்து இடங்களையும் பார்த்து ரசிக்கலாம்.

ஆலயம் உள் நுழைய சிறிய வாயில் கிழக்குப் புறம் அமைந்துள்ளது. உட்புறம் வட்ட வடிவம். நான்கு சிறிய அளவில் உள்ள தூண்கள் நடுவில் சுமார் 2.5 அடி உயரம் உள்ள பளபளப்பான கருமையான கல்லில் உருவாக்கப்பட்ட லிங்கம்.
செம்பால் ஆன நாகாபரணத்துடன் அமைந்துள்ளார் ஈசன்.
கண்குளிர கண்டு தரிசித்து வணங்கினோம்.

ஆலயத்தின் சுற்றுப் பிரகாரத்தின் கீழ் தென் பகுதியில் சிறிய சுனை நீர் ஊற்றும் அமைந்துள்ளது. 

வடபுறத்தில், சிறிய குகை அமைப்பில், ஸ்ரீ ஆதிசங்கரர் தபம் செய்த இடம் உள்ளது. இங்குதான் சௌந்தர்யலகரி பூர்த்தி செய்யப்பட்டது என்பர்.

இதனுள், ஒரு மூலையில் ஆதிசங்கர் படம் வைத்துள்ளனர். உள்ளே தபம் | பூசை செய்வதற்கேற்றவாறு சிறிய அளவில், கருங்கல்லால், குகை அமைக்கப்பட்டுள்ளது. நுழைவுவாயில், கிழக்குப்புறம் சிறிய தலைவாயில் கொண்டது.

குன்றின் ஒரு புறம் உயரமான படிகளுடன் இவ்வாலயப் பகுதிகள் இருந்தாலும், எதிர்புறத்தில், Trust அலுவலகம், சிறிய தோட்டம், viewpoints முதலிய இடங்களும் உள்ளன.

அனைத்து இடங்களும் தொல்பொருள் துறையின் ஆளுமையில் உள்ளது.

ஆலயத்தின் அன்றாட பூசை நடவடிக்கைகளுக்கும், மற்ற அனைத்துக்கும் தர்ம டிரஸ்ட் ஏற்படுத்தப்பட்டு நல்ல முறையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இங்கு, அமர்நாத் யாத்திரை காலத்திலும், சிவராத்திரி சமயத்திலும், பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்கிறார்கள்.

இதை தரிசித்துவிட்டு, மலையிலிருந்து கீழிறங்கினோம். அதன்பின், ஷேஸ்ட்டாதேவி ஆலயம் சென்று தரிசித்தோம். 

தொடரும்.... பயணங்கள்

6.07.2022
#அமர்நாத்பனிலிங்கதரிசனம் 
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

#Shankaracharyar Temple

#காஷ்மீர்
#அமர்நாத்யாத்ரா
பதிவு : 1
https://m.facebook.com/story.php?story_fbid=7861532467255275&id=100001957991710


Friday, July 22, 2022

AMARNATH YATRA-2022 SRINAGAR LALCHOWK 5.07.2022

#அமர்நாத்பனிலிங்கதரிசனம் 
#காஷ்மீர்
#அமர்நாத்யாத்ரா
#பயணஅனுபவக்குறிப்புகள்
#AMARNATH_YATRA_2022
#SRINAGAR
#LALCHOWK

ஸ்ரீ கைலாசநாதர், ஸ்ரீ சுந்தராம்பாள் பேரருளாலும்,  குல தெய்வ, முன்னோர்கள் ஆசீர்வாதத்தாலும், இந்த வருடம் 2022 ஜூலை மாதம் 8ம் தேதி வெள்ளிக்கிழமை  அமர்நாத் பனிலிங்க தரிசனம் கிடைத்தது.

பயண விபரம்...

3.07.2022 ஞாயிறு 
காரைக்காலிலிருந்து, ஜூலை மாதம் 3ம் தேதி ஞாயிறு காலையில், புறப்பட்டு சென்னை சென்று, மாலை, GT Express ல் Chennai யிலிருந்து Delhi புறப்பட்டோம். 

04.07.2022 திங்கள்   ரயில் பயணம்
5.07.2022 செவ்வாய் 
காலை New Delhi, Nizamudeen Station இறங்கி, அங்கிருந்து ஒரு Hotel  சென்று, சற்று Relax ஆகி பிறகு,  Airline மூலமாக #SRINAGAR அடைந்தோம்.  
TAJ RESIDENCY என்ற Hotel லில் தங்கினோம்.

1
காசுமீர கடைத்தெருக்கள்:

மாலையில் #SRINAGAR ல் உள்ள 
#LALCHOWK என்ற இடத்திற்கு சென்று Shopping செய்தோம். இந்த இடத்தில் புகழ்பெற்ற Clock Tower உள்ளது.

#GHANTA_GHAR  என்று இந்த இடத்தை அழைக்கிறார்கள். 1980ம் ஆண்டில், BAJAJ ELECTRICALS என்ற Company இந்த Towerஐக் கட்டியதாக குறிப்பு உள்ளது.

இந்த இடம் Srinagar ன் ஒரு Landmark ஆக உள்ளது. ஒரு பூங்கா அமைத்துள்ளார்கள்.  Parking வசதி மிகவும் கடினம். நெருக்கடியான இடம்.  #Srinagar  Cityக்கு கிட்டத்தட்ட Central point ஆன இடமாகவும் உள்ளது. உள்ளூர் மக்கள் மட்டும் இன்றி சுற்றுலா வருபவர்களும் இந்த இடத்தில் காஷ்மீர் பொருட்கள் வாங்க குவிகின்றனர்.

Clock Tower மேலும் சிறப்பு என்ன வென்றால், பாரதத்தின் சுதந்திரத்திற்குப் பிறகு பிரதமர் மோடி அவர்கள் ஆட்சியில்தான் இந்த இடத்தில் முதன்முதலாக, மூவர்ண கொடியும்,  இரவில் மூவர்ண Colorful ஆக illumination செய்தும்  உள்ளார்கள் என்று கூறுகிறர்கள்.  மாலை / இரவு  நேரங்களில் மக்கள் கூட்டம் மிக அதிகம் வருகிறார்கள்.  மிகப்பழமையான 100 வருட கட்டிடங்கள் இந்தப் பகுதி முழுவதும் ஏராளமாக உள்ளன.  இப்பகுதி முழுவதும் ராணுவ வீரர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ராணுவ வாகனங்களும் நிறைந்துள்ளன.

Clock tower பகுதியிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் ஒரு Bridge உள்ளது. அதை ஒட்டி மிக புராதானமான Hanuman Temple  ஒன்றும் இருந்தது. நாங்கள் விரும்பி சென்று தரிசனம் செய்ய முயன்றோம். ஆனால் சில Security காரணங்களால், உள்நுழைய அனுமதி கிடையாது என்று ராணுவ அதிகாரிகள் மென்மையாக மறுத்துவிட்டார்கள்.

அனுமார் ஆலயத்தின் அருகிலும், மிக அதிக கடைகள். அது ஒரு பெரிய நெருக்கடி நிறைந்த சந்தைப் பகுதி போல உள்ளது. போக்குவரத்தும் மிகுந்துள்ளது. உள்ளுர் போக்குவரத்து வாகனங்கள்  வந்து நிறுத்தி மக்களை ஏற்றி இறக்கி செல்கிறது. ஒரு mini bus stop போன்றது.
குறுகிய தெருக்கள், ஏராளமான கடைகள், மக்கள் நெருக்கம் மிகுந்து காணப்படும் இடம். 

இந்த Shopping Area வில் நமது குழுவில் பயணித்தவர்கள், தங்களுக்கு விருப்பமான சில காஷ்மீர் பொருட்களை மகிழ்வுடன்  வாங்கிக் குவித்தனர்.

இரவில்,  Srinagar முழுதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுவிடும் அபாயம் உள்ளதால்,  உடன் மாலை (?) 7.00 மணி அளவில்  புறப்பட்டு Hotel வந்துசேர்ந்தோம். இந்த மாநிலப் பகுதிகள் இரவு 7.40 மணிவரை வெய்யில் வெளிச்சம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மாலையில், எங்கள் மதிப்புமிக்க, SUJANA TOURS Administrator, திரு S.R. பாலசுப்பிரமணியன் அவர்கள், எங்கள் அமர்நாத் யாத்ராவின் பயண முழு விபரங்களையும் விளக்கி,  எப்படி செயல்படுத்தப்படும் என்பது பற்றியும், யாத்ரா பயணிகள் மேற்கொள்ள  வேண்டிய முக்கிய  நெறிமுறைகளையும் தெளிவாக விளக்கினார். மிகவும் உபயோகமாக இருந்தது.
உணவு முடிந்து இரவு தங்கினோம்.

பயணம் தொடரும்

நன்றி
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#AMARNATH_YATRA_2022
#SRINAGAR
#LALCHOWK


Monday, June 13, 2022

UTTARAKANNT_TOUR_2022#பயண அனுபவக் குறிப்புகள்#KAUSANI (கவுசானி): 11.04.2022

#UTTARAKANNT_TOUR_2022
#பயண அனுபவக் குறிப்புகள்

#KAUSANI (கவுசானி): 11.04.2022

#பையிஜியநாத் (11.04.2022) என்ற ஆலயம் தரிசித்தபின், மதியம் புறப்பட்டு, கவுசானி என்ற ஊருக்கு சென்று, Hotel SAGARல் தங்கினோம். மாலையில், இவ்வூரில் உள்ள காந்தி ஆசிரமம், மற்றும் ஒரு சிவன் ஆலயம் தரிசித்துவந்தோம்.

🌼'இந்தியாவின் சுவிட்சர்லாந்து, ' என்று மகாத்மா காந்தி அவர்களால் அழைக்கப்பட்ட இடம். 

🏞️இது, இமயமலைப்பகுதியில் சுமார் 6200 அடி உயரத்தில் உள்ளது. 

🏝️உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள மிகப் பழமையான, இயற்கையான அழகான ஊர். 

🌈இங்கிருந்து, 250 - 300 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள பல இமயசிகரங்களை குறிப்பாக, திரிசூல், நந்ததேவி, பஞ்சூலி, முதலிய சிகரங்களை ரசித்து காணலாம்.
பைன் மரக்காடுகள் அமைந்துள்ளன.

✨உத்திரகாண்ட் பாகேஸ்வரர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பாகேஸ்வரரிலிருந்து 40 கி. மீ தூரத்திலும், அல்மோரா என்னும் நகருக்கு வடக்கில் 52 கி.மீயும்,, நைனிட்டாலிருந்து வடகிழக்கில் 123 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது.பைஜியநாத் என்ற வைத்தியநாத் என்ற ஊரிலிருந்து 16.5 கிமீ.தூரத்திலும், மற்றும் பாகேஸ்வரர் ஆலயமும் அருகில் உள்ளது.

📒பிரபல ஹிந்தி கவிஞர் சுமித்தரனந்தன் பண்டிட் இவர் பிறந்த ஊர். இவர் பெயரில் ஒரு மியூசியம் அமைத்துள்ளனர்.

🏡மிக முக்கிய சுற்றுலாதலம். இங்குள்ள காந்தி ஆசிரமம் மிகவும் புகழ் பெற்ற இடம். இங்கு மகாத்மா காந்தி 1929ல் 14 நாட்கள் இங்கு வசித்து இருந்தார். இவ்விடத்தை மிகவும் ரசித்து இங்குள்ள தொண்டு ஆசிரமத்தில் (ANASHAKTI ASHRAMAM) தங்கியிருந்தார்.

🛕இப்போது இதை காந்தி ஆசிரமம் என்று அழைத்து வருகிறார்கள். ஆசிரமத்தில்
மகாத்மாவுக்கு சிலைக்களும், வாழ்க்கை வரலாற்று புகைப்படங்களும் காட்சி படுத்தி அருமையாக அமைத்துள்ளனர். ஒரு பெரிய மண்டபம் இதற்காக கட்டப்பட்டுள்ளது. மற்றும், தியானமண்டபம், சிறிய நூல் நிலையம், உணவுக்கூடம், காதி கதர் கிராம கைவினைப் பொருட்கள் விற்பனைக்கூடம், மற்றும் வரலாற்று ஆராய்ச்சிக்கூடமும், அமைந்துள்ளது.

🏔️VIEW POINT என்ற இடத்திலிருந்து 8 இமய சிகரங்களைப் பார்த்து களிக்கும் வன்னம், மேடை அமைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

🏖️ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். எந்த நுழைவுக்கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. 

🏯அருகில் தங்கும் விடுதிகள் உள்ளன.

🌌கௌசானி யில் மேலும் ஒரு வானிலை தொலைக்காட்சி இடமும் உள்ளது. புதிய கருவிகளைக் கொண்டு தொலைக்காட்சி கூடம் உள்ளது. ஆர்வம் உள்ளவர்கள், இமய சிகரங்கள், மலை, பனி, பகுதிகளை இங்கு வந்து இந்தக் கருவிகள் மூலம் ஆய்வு செய்கிறார்கள்.

🏢HOTEL SAGAR என்ற பெரிய Hotel லில், தங்கியிருந்தோம். இங்கிருந்து நடந்தே காந்தி ஆசிரமம் சென்று வந்தோம். 

🛕மேலும் சற்று தூரத்தில் உள்ள சிவன் ஆலயம் சென்றோம்.தனியார் TRUST மூலம் நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது. யோகி ஒருவரால் துவக்கப்பட்டு ஆலயம் புதிதாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கருவரை மண்டபம் உயரக் கோபுரம். கருவறையில், சிவன், ராதா கிருஷ்ணர், அம்மன், முதலிய அழகிய சிறிய பளிங்கு சிலைகள் வைக்கப்பட்டு, அழகாக ஆடை ஆபரணங்களுடன் வண்ண வண்ண விளக்கு அமைப்புக்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஆலயம் சுற்றில் மண்டபம் உள்ளது. அறைகளும் உள்ளன.

🏔️மலை பிரதேசம் என்பதால், எல்லா இடங்களும் படிகளும், சற்று உயரமாகவும் அமைந்துள்ளன. சாலை, மின் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சிறிய, சிறிய கடைகளும் அமைந்துள்ள ஊர்.

🌀இந்த இடங்களைப் பார்த்து விட்டு, 11.04.2022 இரவு Hotel SAGAR ல் தங்கிவிட்டு, 12.04.2022 முன்காலையிலேயே DWRAHAT என்ற ஊர் சென்றோம்.
அதன் அருகில் உள்ள புகழ்பெற்ற பாபா குகை தரிசனம் செல்ல புறப்பட்டோம்.

பயனங்கள் தொடரும்...

🙏தகவல்கள் உதவி :
 wikepedia மற்றும் பல வலைதளங்கள்
(11.4.2022)

🙏நன்றிகளும் வணக்கங்களும்🙇🏼‍♂️

#ஆலயதரிசனம் 
#UTTRAKANT_TOUR_2022
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

Saturday, June 4, 2022

#UTTARAKANNT_TOUR_2022 - #பையிஜியநாத் என்ற வைத்தியநாத்(11.04.2022)

#UTTARAKANNT_TOUR_2022
#பயண_அனுபவக்_குறிப்புகள்
#பையிஜியநாத்  என்ற வைத்தியநாத்
(11.04.2022)

🌼கோமதிக்கரையில் உள்ள பாகேஸ்வரர் என்ற புராதான ஆலய தரிசனம் முடித்துக் கொண்டு கௌசானி என்ற ஊருக்கு சென்றோம்.
வழியில், கோமதி நதியின் கரையில்தான் வந்தோம். வழியில் உள்ள #பையிஜியநாத்    என்ற ஊருக்கு சென்று மதிய உணவு முடித்துக் கொண்டு இங்குள்ள புராதான ஆலயத்தை தரிசித்தோம். 

#பையிஜியநாத் , என்னும் வைத்திநாதர் ஆலயம் உத்திரகாண்ட் மாநிலத்தில், கோமதி நதிக்கரையில், குமான் மாவட்டத்தில் வாழ்ந்த கட்யூரி வம்ச அரசர்களால்  கட்டப்பட்டது.  இது ஒரு காலத்தில் கார்த்திகேயபுரா என்றும் அழைத்தார்கள்.

🌟07 முதல் 13ம் நூற்றாண்டுகளில், கட்யூரி அரசவம்சத்தினரின், ஜோஷிமத் என்ற இடத்தில் இருந்த தங்கள் தலைநகரை
பைஜியநாத்க்கு மாற்றி கொண்டிருந்தார்கள் என்பது வரலாறு. 

🪱பாகேஸ்வர் - கெளசானி முக்கிய சாலையில் இவ்வூர் அமைந்துள்ளது.

🛕12ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டது இவ்வாலயம்; உத்திரகாண்ட் மாநிலம், குமான் பகுதியில் உள்ள பழமையும், புராதானமும் வாய்ந்த மிக முக்கிய ஆலயங்களில், இதுவும் ஒன்றாகும்.  சிவனின் புராதான கேந்திர முக்கிய நான்கு தலங்களில் இதுவும் ஒன்று.

🏔️இந்திய இமயமலைப்பகுதியில், சுமார் 1130 மீட்டர் (3,707 அடி) உயரத்தில், புகழ்பெற்ற பாகேஸ்வர் நகருக்கு வடமேற்கில், 20 கி.மீ. தூரத்திலும், கெளசானியிலிருந்து 16 கி.மீ. தூரத்திலும், உள்ளது.

🚏இந்திய தொல்பொருள் துறையின் வசம் ஒப்படைக்கப்பட்டு பராமரிப்பில் உள்ளது.

🌈மிகவும், அற்புதமான பார்வதி தேவியின் சிலை கருங்கல்லில் அமைந்துள்ளது; மிக அழகாக உள்ளது.

✨கட்யூரி அரசியின் முயற்சியால், நதியின் கரையின்  ஓரத்தில்உள்ள இந்த ஆலயம் செல்ல, பிரதான சாலையிலிருந்து அழகிய கற்படிகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. 

🏯பிரமினி இனப் பெண்மனி ஒருவரால் உருவாக்கப்பட்டு பின் சிவ ஆலய வழிபாடு தொடர்ந்தது என்றும் கூறுகிறார்கள்.

💮கோமதி நதியின் சங்கமிக்கும்இடமாகிய  #பையிஜியநாத் என்ற இவ்விடத்தில்தான் சிவன் - பார்வதி திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
 
🏞️பைஜியநாத் என்னும் வைத்தியநாதர் ஆலயம் 18 தனித்தனி கற்றளிகளாக 102 சிலைகள் கொண்டது. 
(தனித்தனி சன்னதிகளை சிறியதும், பெரியதுமாக, முழு ஆலய அமைப்பிக்கப்பட்டுள்ளதாலும், எல்லா சன்னதிகளும் / ஆலயங்களும், ஒருங்கே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாம்)

🌀#பையிஜியநாத் ஆலயம் பல தெய்வங்கள் அமைந்துள்ள கூட்டு ஆலயம் என்றும்  கூறுவார்கள். 

🛕இங்கு வைத்திநாதர், கேதாரஸ்வரர், பார்வதி, நிருத்திய கணபதி, கார்த்திகேயன், சண்டிமாதா,  நரசிம்மர்,  பிரும்மா, மகிஷாசூரமர்த்தினி, சப்தமாதர்கள் பிரும்மரி தேவி, சூரியன், கருடன் மற்றும் குபேரன் ஆலயங்கள்  அமைத்துள்ளனர். 

🛕மூலவர் ஸ்ரீவைத்திநாதர் லிங்க வடிவில் உள்ளனர்.   பார்வதிதேவியின் சிலை வடிவமைப்பு, மிகமிக அற்புதம். 

🛕1202 AD க்கு முன் உள்ள கல்வெட்டுக்கள் ஆலயத்தில் உள்ளன. கியான் சந்த் அரசர்களால் மீண்டும் புனரமைக்கப்பட்டும், ரோகிலா என்ற முகலாயர் இனத்தவர்களால், கொள்ளை அடிக்கப்பட்டும், ஆலயங்கள், கலசங்கள்  சிதைக்கப்பட்டுவிட்டதாகவும் வரலாற்று குறிப்புகள் உள்ளன.

🛕சிலவற்றில் தற்போது, பல சிலைகளும் இல்லை, சிதைந்த நிலையில் பல அமைந்திருந்தாலும்,  சில முக்கிய தெய்வ சிலைகள் மட்டுமே பூசனையில் உள்ளது.

🛕சிவன் - பார்வதிதேவி திருமணம் நடந்த இடம் என்பதால், சிவராத்திரி, மகர சங்கராந்தி நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகைதருகிறார்கள்

🛕இவ்வாலயம் மிக அருகில், சப்தமாதர்களுள் ஒன்றான, பிரம்மரி தேவி ஆலயம் ஒன்றும் உள்ளது. இதுவும் மிகவும் புகழ்வாய்ந்த, புராணசிறப்புமிக்க ஆலயம்.

🛕ஒரு முறை பத்ரிநாத் செல்லும் வழியில், ஆதிசங்கரர் இங்கு தங்கி இருந்து வழிபட்டு இருந்தார்கள். என்ற குறிப்பும் உள்ளது. 

🛕இந்த ஆலயங்கள் அமைவிடத்தால்தான், இந்நகருக்கும் இப்பெயர் வைக்கப்பட்டது.

🌈இமாலயத்தில், வளைந்து நெளிந்து ஓடும் கோமதி ஆற்றின், இடது கரையில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

🛕கோமதி நதி, இவ்விடத்தில் வளைந்து, சற்று அகன்று, ஒரு அரை வட்டவடிவில் அமைந்துள்ளதால், உத்திரகாண்ட் அரசு 2007-2008ல் இந்த இடத்தில் ஒரு செயற்கை ஏரி அமைக்க முடிவு எடுத்து, அதன்படி ஒரு சிற்றனை சிறப்பாகக் கட்டியபின், 14.01.2016 அன்று அப்போதுள்ள முதல்வர் மூலம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

⚡இந்த ஏரியில் தங்கமீன் வளர்ப்பு திட்டமும் செயல்படுத்தப்பட்டது.  அழகிய படகு சவாரி முதலியனவும், சுற்றுலா வசதிகளும் செய்யப்பட்டு, மிகப்பெரிய முக்கிய  சுற்றுலாத்தலமாகவும் உள்ளது.

✨ஒரு புறம் புராதான ஆலயம், மறுபுறம் அழகிய செயற்கை ஏரி, அனை முதலியவற்றால் இந்த இடம் அனைவராலும் கவரப்பட்டுள்ளது. 

💮அருகில் உள்ள காரூர் (GARUR) என்னும் நகர் முக்கிய கேந்திரமாக உள்ளது. 

🌟பிராதான சாலை சற்று அகலம் குறைவாக இருப்பதால், எங்கள் பேருந்து 500 மீ. அப்பால் நிறுத்திக் கொண்டோம். மதிய உணவுக்குப் பின் சென்று, இவ்வாலயம் தரிசித்து வந்தோம்.

🌼9-10ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட இவ்வாலயம், நாகர அமைப்பில் உள்ளது.
நடுவில் முக்கிய மூலவர் கருவறை ஆலயமும், சுற்றிலும் பஞ்சரத அமைப்பிலும் கட்டப்பட்டிருப்பினும், ஆலயம் கொள்ளையடிக்கப்பட்டும், சிதலமடைந்தும், இருந்தாலும், மிக நேர்த்தியான முறையில், பெரிய அளவில், வடிவமைக்கப்பட்டும், மிகச்சிறப்பான வழிபாடுகளை ஒரு காலத்தில் மேற்கொண்டிருக்க வேண்டும் என்பதை இப்போதும் உணரலாம்.

💮பல ஆலய சிலைகள் ஒருங்கிணைத்து ஒரே சன்னதியில் வைத்தும் உள்ளார்கள்.

✨வைத்திநாதர் ஆலயத்தில், கருவறையில் சிறிய சிவலிங்கமாக ஆவுடையுடன் உள்ளார். பல பகுதிகள் சிதலமடைந்துவிட்டாலும், மண்டபம் முதலியவற்றை பராமரித்து, வைக்கப்பட்டுள்ளது. சப்தமாதர் பிரும்ராமி பூட்டப்பட்டுள்ளது.

🌟தொல்பொருள் துறையினரால், பாதுகாக்கப்பட்டாலும், ஆலயம் மிக மிக புராதானமானதாகவும், சிதைந்தும் உள்ளது. 

🚏சிவன், ஸ்ரீ வைத்திநாதர், ஸ்ரீபார்வதி தேவி சன்னதிகள் மட்டும் சற்றே பராமரிப்பில் உள்ளது.

🏯புதிய ஏரிக்கரையின் ஓரத்தில், புராதானத்தை நிலை நிறுத்திக்கொண்டு, ஒரு பக்தியின் அமைதியுடன் இயற்கை அமைப்புடன், தனிமையில் இவ்வாலயம் இருக்கிறது.

🙏இந்த ஆலயம் வணங்கி, பின் கெளசானி என்ற ஊரை சென்றடைந்தோம். 

⚡பயணங்கள் தொடரும்......

🙏தகவல்கள் உதவி :
 wikepedia மற்றும் பல வலைதளங்கள்
(11.4.2022)
🙏நன்றிகளும் வணக்கங்களும்🙇🏼‍♂️

#ஆலயதரிசனம் 
#uttrakant_tour_2022 
#UTTRAKANT_TOUR_2022
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்



திண்டல் திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் 6.09.26

திண்டல்  திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் வேலாயுதசாமி கோயில், திண்டல் என்பது ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ. தொ...