#அமர்நாத்பனிலிங்கதரிசனம்
#காஷ்மீர்
#அமர்நாத்யாத்ரா
#பயணஅனுபவக்குறிப்புகள்
2.
#Shankaracharyar Temple
பாரதத்தின் உச்சியில் ஒரு மாகானின் ஆலயம்
6.07.2022 புதன்:
காலை:
நாங்கள் SRINAGAR Hotel லிருந்து
புறப்பட்டு, அருகில் உள்ள
ஆதிசங்கரரால் ஸ்தாபிதம் செய்யப்பட்ட #Shankaracharyar Temple சென்று தரிசித்தோம்.
ஜம்மு & காஷ்மீர் Union Territory பகுதியில் Srinagar City யின் ஒரு பகுதியாக உள்ளது,
சங்கராச்சாரியார் மலை எனப்படும் பகுதி.
இது GOPADRI HILL என்று அழைக்கப்படும் மலைக்குன்றுப் பகுதியில் உள்ளது.
சுமார் 6170 அடி உயரத்தில் ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்ட ஆலயம். முதலில் Tempo Traveller மூலம் இம்மலை அடிவாரம் சென்றாலும், குன்றின் மிக அருகில் ஆலய நுழைவு பகுதி செல்ல Auto, மற்றும் Car கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது..
சுமார் 5.6 கி.மீ Border Roads organisation மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த சாலையில், செல்லும் வழியில் Sringar Cityயின் அழகை ரசிக்க View Point கள் உள்ளன.
எல்லா இடங்களும், பாரத ராணுவத் தினரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் நம் ராணுவ வீரர்கள், ஏராளமான அளவில், மக்கள் சேவை செய்து வருவதை காண்கிறோம்.
அதன்பின், Security Checkup செய்யப்பட்டதும், சுமார் 300 மீட்டர் உயரத்தில் உள்ள படிகள் மேல் ஏறி சென்று, ஆலயம் தரிசிக்க வேண்டும்.
கீழ் நுழைப்பகுதியில், ராணுவத்தில் இன்னுயிர் நீத்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தனியாக அவர்கள் பற்றிய விபரக் குறிப்புகளும் உள்ளன.
பழமையான ஆலயம் கி.பி 371ல் கட்டப்பட்டிருந்தாலும் 1792 - 1857 ஆண்டுகளில் இது மறுவடிவம் பூண்டுள்ளது என்று சரித்திர ஆசிரியர்கள் கருதுகிறார்கள். மீண்டும், மீண்டும் புணரமைக்கப்பட்டும் உள்ளது. சுமார் 1000 அடி உயரத்தில் இவ்வாலையம் உள்ளது.
உச்சியில், சுமார் 240 படிகள் ஏறி தான், ஆலயம் தரிசிக்க முடியும்.
அரவிந்தர், மைசூர் மகாராஜா, வினோபா பாஜி, முதலியோர் இங்கு வந்து வழிபட்டு சென்ற குறிப்புகளும் அவர்களால் பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
எட்டு பட்டை வடிவில் கற்றளியாக இந்த ஆலய அமைப்பு உள்ளது. உச்சியில் கலசம் உள்ளது. ஆலயம், மேல்புறம் கருவரை சுற்றுப் பிரகாரம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து #SRINAGAR முழுவதும் மற்றும், ஜீலம் நதி, DAL ஏரி முதலிய அனைத்து இடங்களையும் பார்த்து ரசிக்கலாம்.
ஆலயம் உள் நுழைய சிறிய வாயில் கிழக்குப் புறம் அமைந்துள்ளது. உட்புறம் வட்ட வடிவம். நான்கு சிறிய அளவில் உள்ள தூண்கள் நடுவில் சுமார் 2.5 அடி உயரம் உள்ள பளபளப்பான கருமையான கல்லில் உருவாக்கப்பட்ட லிங்கம்.
செம்பால் ஆன நாகாபரணத்துடன் அமைந்துள்ளார் ஈசன்.
கண்குளிர கண்டு தரிசித்து வணங்கினோம்.
ஆலயத்தின் சுற்றுப் பிரகாரத்தின் கீழ் தென் பகுதியில் சிறிய சுனை நீர் ஊற்றும் அமைந்துள்ளது.
வடபுறத்தில், சிறிய குகை அமைப்பில், ஸ்ரீ ஆதிசங்கரர் தபம் செய்த இடம் உள்ளது. இங்குதான் சௌந்தர்யலகரி பூர்த்தி செய்யப்பட்டது என்பர்.
இதனுள், ஒரு மூலையில் ஆதிசங்கர் படம் வைத்துள்ளனர். உள்ளே தபம் | பூசை செய்வதற்கேற்றவாறு சிறிய அளவில், கருங்கல்லால், குகை அமைக்கப்பட்டுள்ளது. நுழைவுவாயில், கிழக்குப்புறம் சிறிய தலைவாயில் கொண்டது.
குன்றின் ஒரு புறம் உயரமான படிகளுடன் இவ்வாலயப் பகுதிகள் இருந்தாலும், எதிர்புறத்தில், Trust அலுவலகம், சிறிய தோட்டம், viewpoints முதலிய இடங்களும் உள்ளன.
அனைத்து இடங்களும் தொல்பொருள் துறையின் ஆளுமையில் உள்ளது.
ஆலயத்தின் அன்றாட பூசை நடவடிக்கைகளுக்கும், மற்ற அனைத்துக்கும் தர்ம டிரஸ்ட் ஏற்படுத்தப்பட்டு நல்ல முறையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இங்கு, அமர்நாத் யாத்திரை காலத்திலும், சிவராத்திரி சமயத்திலும், பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்கிறார்கள்.
இதை தரிசித்துவிட்டு, மலையிலிருந்து கீழிறங்கினோம். அதன்பின், ஷேஸ்ட்டாதேவி ஆலயம் சென்று தரிசித்தோம்.
தொடரும்.... பயணங்கள்
6.07.2022
#அமர்நாத்பனிலிங்கதரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#Shankaracharyar Temple
#காஷ்மீர்
#அமர்நாத்யாத்ரா
பதிவு : 1
https://m.facebook.com/story.php?story_fbid=7861532467255275&id=100001957991710
No comments:
Post a Comment