Sunday, July 25, 2021

வினாவுரை - சம்பந்தர் அமுதம் - திருத்தெளிச்சேரி- பகுதி 9 - பாடல் த

#சம்பந்தர்அமுதம்
#தலப்பெருமை #பேரருட்திறன்
#வினாவுரை
    
🌈#அமுதப்பதிகங்கள்   
              அமைப்புச்சிறப்புகள்
பதிவு: 9
வினாவுரை அமைப்பு என்றால் என்ன?
♻️இறைவன் சிறப்புகளை வினவுதல் போல கேள்வி எழுப்பி அதன் விடையை உட்பொருளாக உணர்த்தும் அமைப்பில் பாடல் அமைந்து வருவது. 

🛐9️⃣
9.கடற்காற்றானது அலைகளாகிய கைகளால் கரைக்கு நீரை அள்ளி வீச, கானலும் சேல் என்னும் மீன்கள் பாயும் வயல் வளமும் விளங்கும் பதி எது?

திருமாலும், பிரமனும் ஓலமிட்டு ஓடியது ஏன்?

விளக்கம்: 
இரண்டாம் திருமுறை 
பதிகம்.2.139
தலம் - திருத்தெளிச்சேரி 
பாடல் முதலடி:  'பூவலர்ந்தன
பண்: இந்தளம்
வினாவுரைப் பதிகம்
பாடல்:9.

காலெ டுத்த திரைக்கை கரைக்கெறி கானல்சூழ்
சேல டுத்த வயற்பழனத் தெளிச்சேரியீர்

மால டித்தல மாமல  ரான்முடி தேடியே
ஒல மிட்டிட எங்ஙனம் ஓருருக் கொண்டதே

பொருள் :
கடற்காற்றானது அலைகளாகிய கைகளால் கரைக்கு நீரை அள்ளி வீச, கானலும் சேல் என்னும் மீன்கள் பாயும் வயல் வளமும் விளங்கும் தெளிச்சேரியில் வீற்றிருக்கும் பெருமானே!
திருமால் உமது திருவடியும், பிரமன் உமது திருமுடியும் தேடியும் காணப்பெறாமல் ஓலம் இட்டு வருந்த, ஓர் உருவத்தைக் கொண்டு விளங்கியது எங்ஙனம்!

சிறப்பு:
கால்களால் திருக்கோயில் வலம் வருதலையும், கைகளால் கூப்பித் தொழுதலும் போன்று, கடல்காற்றையும் கடல் அலையையும், கரைக்கு நீரைத் தருவது உவமைக் கவிதை சிறப்பாகும். 
🛐ஞானசம்பந்தரின் பதிகச் சிறப்பு
 ஒவ்வொரு பாடலும் 4 வரிகள், அதில் முதல் இரு வரிகளில், 
தலச்சிறப்பும், அடுத்த இரு வரிகளின் இறைவரின் அருட்சிறப்பும் வெளிப்படுத்தும் அற்புத பதிகம்.
முதல் இருவரிகளில் ......

1.திருத்தளிச்சேரி தலத்தின் இயற்கை வளம் பக்திச் சிறப்பும், மனிதர் மான்பும், குறிப்பிட்டு இப்பதியில் வசிப்பவரே - திருத்தெளிச்சேரியீர் என்ற இறைவரை விளித்தது.

அடுத்த இருவரிகளில்
2.இறைவரின் அருட்பேராற்றலை குறிப்பிட்டு, வியந்து வினவுகிறார்.

🌺 *திருத் தெளிச்சேரி பார்வதீசுவரர் திருக்கோயில்* :  பற்றிய சில சிறப்புக் குறிப்புகள்:

🟪திருத் தெளிச்சேரி காரைக்கால் மாநகரின் வடபால், காரைக்கால் பெருவண்டி நிலையத்திற்கு மேற்கில் மிக அருகே உள்ளது.

✡️மேற்கு பார்த்த தலம்
சுவாமி : பார்வதீஸ்வரர்
அம்பாள் : சுயம்வர தபஸ்வினி அம்பாள்.

🕉️ஆலயம் முழுதும் கற்கோவில். சுவாமி மேற்கு பார்த்தும், அம்மன் தெற்கு பார்த்தும் தனித்தனி சன்னதியாக இருப்பினும் ஒரே பிரகாரத்தால்  இணைக்கப்பட்டது.

⚛️வெளிப் பிரகாரத்தில் நந்தவனம் அமைத்து அடியார்கள் பராமரிப்பில் உள்ளது.

✡️வேடுவ மூர்த்தி கோலத்துடன் சுவாமி அம்மன் தனி.

🔯தெற்கு புறம் 63 மூவர்.

🕉️திருமண தடை நீங்க வழிபட இவ்வாலயம் சிறப்பு. 

🔯பங்குனியில் 7 நாள்கள் சூரிய பூசை
- விதை தெளி உற்சவம் சிறப்பு.

☸️அடியார்களால் மாதம் ஒரு முறை 63 நாயன்மார்களுக்கும் அபிஷேக ஆராதனை மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.

 🟩 *காரைக்கால் அம்மையார்  வழிபட்டுத் திருப்பணி செய்த கோயில்*.    

🛐புதுவை மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள 4 பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஒன்று.

✡️- புதுவை மாநில அரசின் கட்டுப்பாட்டில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

- ☸️புதுவை மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள 4 பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஒன்று.

- 🛐மிகப் பழமையான ஆலயம் நகரத்தார்களால், புனரமைக்கப்பட்ட ஆலயம்.
💥இதுகாறும், திருமுறையில் தமிழ் ஞானசம்பந்தர் அருளிய வினாவுரை அமைப்பு பதிகங்களை சிந்தித்தோம்.

🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி மூல நூல்களையும் , கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

☸️இவைகளில் சில பதிகங்களின் சிறப்பு பற்றித் தனித்தனியாக சிலக்குறிப்புகளுடனும், பொருள் விளக்கமுடனும் அடியேன் சிந்தைக்கு எட்டியவரை பல்வேறு அறிஞர்கள், சான்றோர்கள் நூல்களிலிருந்து தொகுத்து சில துளிகளாக அவ்வப்போது வழங்கப்படுகிறது. 
பருக விரும்புவோர்; பொறுமையுடன் சென்று முன்பதிவுகளைப் பார்க்கவும்.

🔯படித்துப் பலன் பெறுங்கள்.
 தமிழின் வளத்தை, சிறப்பை, பக்திப் பெருமையை உணருங்கள்; உலகுக்கு உணர்த்துங்கள்.

 தொடர்ந்து சிந்திப்போம்..... ......

🙏நன்றி🙇‍♂️     
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்     🙇‍♂️🙏🙇‍♂️ 🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽
முன்பதிவு :
https://m.facebook.com/story.php?story_fbid=5920923011316240&id=100001957991710

Saturday, July 24, 2021

வினாவுரை - சம்பந்தர் அமுதம் - திருத்தெளிச்சேரி - பதிவு 8 பாடல் 8

#சம்பந்தர்அமுதம்
#தலப்பெருமை #பேரருட்திறன்
#வினாவுரை
    
🌈#அமுதப்பதிகங்கள்   
              அமைப்புச்சிறப்புகள்

பதிவு: 8
வினாவுரை அமைப்பு என்றால் என்ன?
♻️இறைவன் சிறப்புகளை வினவுதல் போல கேள்வி எழுப்பி அதன் விடையை உட்பொருளாக உணர்த்தும் அமைப்பில் பாடல் அமைந்து வருவது. 
🛐8️⃣
8.கொத்தாக உள்ள மலர்கள் இரைந்தது போன்ற அடர்ந்த மென்மையான கூந்தலும், குயில் போன்று இனிமையான இசைக் குரலும், சித்திரக்கொடி போன்ற நுண்மையான இடையும் கொண்ட மகளிர் விளங்கும், மாளிகைகள் கொண்ட தலம் எது?

இரவணனின்,  இருபது கரங்களையும் நெறித்தது ஏன்?

விளக்கம்: 
இரண்டாம் திருமுறை 
பதிகம்.2.139
தலம் - திருத்தெளிச்சேரி 
பாடல் முதலடி:  'பூவலர்ந்தன
பண்: இந்தளம்
வினாவுரைப் பதிகம்
பாடல் : 8
கொத்தி ரைத்த மலர்க்குழ லாள்குயில் கோலஞ்சேர்
சித்தி ரக்கொடி மாளிகை சூழ்தெளிச்சேரியீர்

வித்த கப்படை வல்ல அரக்கன் விறற்றலை
பத்தி ரட்டிக் கரநெரித் திட்டதும் பாதமே

பொருள் :
கொத்தாக உள்ள மலர்கள் இரைந்தது போன்ற அடர்ந்த மென்மையான கூந்தலும், குயில் போன்று இனிமையான இசைக் குரலும், சித்திரக்கொடி போன்ற நுண்மையான இடையும் கொண்ட மகளிர் விளங்கும், மாளிகைகள் கொண்ட தெளிச்சேரி பெருமானே!

பிரமதேவனால், வரம் பெற்று, உயர்ந்த படைகள் கொண்ட இராவணனின் வலிமை பொருந்திய தலைகள் பத்தும், இருபது கரங்களும் தெரியுமாறு செய்து, அருள் புரிந்தது உமது திருப்பாதமே.

சிறப்பு:
அழகும், வளமும் மிக்க பெண்கள் வசிக்கும் தலச்சிறப்பும்,
பத்து தலைகள், இருபது கரங்கள், கொண்ட இராவணனை நெரித்த ஆற்றலை வியந்தது.
🛐ஞானசம்பந்தரின் பதிகச் சிறப்பு
 ஒவ்வொரு பாடலும் 4 வரிகள், அதில் முதல் இரு வரிகளில், 
தலச்சிறப்பும், அடுத்த இரு வரிகளின் இறைவரின் அருட்சிறப்பும் வெளிப்படுத்தும் அற்புத பதிகம்.
முதல் இருவரிகளில் ......

1.திருத்தளிச்சேரி தலத்தின் இயற்கை வளம் பக்திச் சிறப்பும், மனிதர் மான்பும், குறிப்பிட்டு இப்பதியில் வசிப்பவரே - திருத்தெளிச்சேரியீர் என்ற இறைவரை விளித்தது.

அடுத்த இருவரிகளில்
2.இறைவரின் அருட்பேராற்றலை குறிப்பிட்டு, வியந்து வினவுகிறார்.

💥இதுகாறும், திருமுறையில் தமிழ் ஞானசம்பந்தர் அருளிய வினாவுரை அமைப்பு பதிகங்களை சிந்தித்தோம்.

🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி மூல நூல்களையும் , கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

☸️இவைகளில் சில பதிகங்களின் சிறப்பு பற்றித் தனித்தனியாக சிலக்குறிப்புகளுடனும், பொருள் விளக்கமுடனும் அடியேன் சிந்தைக்கு எட்டியவரை பல்வேறு அறிஞர்கள், சான்றோர்கள் நூல்களிலிருந்து தொகுத்து சில துளிகளாக அவ்வப்போது வழங்கப்படுகிறது. 
பருக விரும்புவோர்; பொறுமையுடன் சென்று முன்பதிவுகளைப் பார்க்கவும்.

🔯படித்துப் பலன் பெறுங்கள்.
 தமிழின் வளத்தை, சிறப்பை, பக்திப் பெருமையை உணருங்கள்; உலகுக்கு உணர்த்துங்கள்.

 தொடர்ந்து சிந்திப்போம்..... ......

🙏நன்றி🙇‍♂️     
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️

     🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽
முன்பதிவு:
https://m.facebook.com/story.php?story_fbid=5906357959439412&id=100001957991710

Tuesday, July 20, 2021

வினாவுரை - சம்பந்தர் அமுதம் - திருத்தெளிச்சேரி - பதிவு - 7 பாடல் 7

#சம்பந்தர்அமுதம்
#தலப்பெருமை #பேரருட்திறன்
#வினாவுரை
    
🌈#அமுதப்பதிகங்கள்   
              அமைப்புச்சிறப்புகள்
பதிவு: 7
வினாவுரை அமைப்பு என்றால் என்ன?
♻️இறைவன் சிறப்புகளை வினவுதல் போல கேள்வி எழுப்பி அதன் விடையை உட்பொருளாக உணர்த்தும் அமைப்பில் பாடல் அமைந்து வருவது. 
🛐7️⃣
7.மலர்க் கொம்புகள் மல்கும் பொழிலில் குயிலின் இசை பெருக, பெருமை மிக்க நாட்டு வளம் பெருக்கும் புறத்தொழிலும், அருள் வளம் பெருக்கும் புறத்தொழிலும், அருள் வளம் பெருக்கும் வேள்வி புரிதல், வேத கீதங்கள் பாடுதல், திருவிழாக்கள் நடத்துதல் போன்றனவும் மிகுந்து மேவும் தலம் எது? 
 - தலையில் கங்கையைத் தாங்கியது ஏன்? என்று வியந்தது.
விளக்கம்: 
இரண்டாம் திருமுறை 
பதிகம்.2.139
தலம் - திருத்தெளிச்சேரி 
பாடல் முதலடி:  'பூவலர்ந்தன
பண்: இந்தளம்
வினாவுரைப் பதிகம் 
பாடல்: 7

கோட டுத்த பொழிலின் மிசைக்குயில் கூவிடும்
சேட டுத்த தொழிலின் மிகுதெளிச்சேரியீர்

மாட டுத்தமலர்க் கண்ணினாள் கங்கை  நங்கையைத்
தோட டுத்த மலர்ச்சடை என்கொல்நீர் சூடிற்றே

பொருள்:
மலர்க் கொம்புகள் மல்கும் பொழிலில் குயிலின் இசை பெருக, பெருமை மிக்க நாட்டு வளம் பெருக்கும் புறத்தொழிலும், அருள் வளம் பெருக்கும் புறத்தொழிலும், அருள் வளம் பெருக்கும் வேள்வி புரிதல், வேத கீதங்கள் பாடுதல், திருவிழாக்கள் நடத்துதல் போன்றனவும் மிகுந்து மேவும் தெளிச்சேரியின்கண் விற்றிருக்கும் பெருமானே !
கங்கை என்னும் நங்கையை, இதழ் கொண்டு விளங்கும் கொன்றை தரித்த செஞ்சடையில் பொருந்துமாறு சூடியது என்கொல்?

சிறப்பு:
தலத்தின் வளம், அழகு, புறத்தொழிலும், அறத்தொழில்களான வேள்வியும், வேத கீதங்கள் பாடியும் அருளுடன் விளங்கிய தலம் என்ற சிறப்பும்,

கங்கையை தன் கொன்றைச் சடையில் அடக்கியருளிய சிறப்பும் விளக்கப்படுகிறது.

🛐ஞானசம்பந்தரின் பதிகச் சிறப்பு
 ஒவ்வொரு பாடலும் 4 வரிகள், அதில் முதல் இரு வரிகளில், 
தலச்சிறப்பும், அடுத்த இரு வரிகளின் இறைவரின் அருட்சிறப்பும் வெளிப்படுத்தும் அற்புத பதிகம்.
முதல் இருவரிகளில் ......

1.திருத்தளிச்சேரி தலத்தின் இயற்கை வளம் பக்திச் சிறப்பும், மனிதர் மான்பும், குறிப்பிட்டு இப்பதியில் வசிப்பவரே - திருத்தெளிச்சேரியீர் என்ற இறைவரை விளித்தது.

அடுத்த இருவரிகளில்
2.இறைவரின் அருட்பேராற்றலை குறிப்பிட்டு, வியந்து வினவுகிறார்.

🌺 *திருத் தெளிச்சேரி பார்வதீசுவரர் திருக்கோயில்* :  பற்றிய சில சிறப்புக் குறிப்புகள்:

🟪திருத் தெளிச்சேரி காரைக்கால் மாநகரின் வடபால், காரைக்கால் பெருவண்டி நிலையத்திற்கு மேற்கில் மிக அருகே உள்ளது.

✡️மேற்கு பார்த்த தலம்
சுவாமி : பார்வதீஸ்வரர்
அம்பாள் : சுயம்வர தபஸ்வினி அம்பாள்.

🕉️ஆலயம் முழுதும் கற்கோவில். சுவாமி மேற்கு பார்த்தும், அம்மன் தெற்கு பார்த்தும் தனித்தனி சன்னதியாக இருப்பினும் ஒரே பிரகாரத்தால்  இணைக்கப்பட்டது.

⚛️வெளிப் பிரகாரத்தில் நந்தவனம் அமைத்து அடியார்கள் பராமரிப்பில் உள்ளது.

✡️வேடுவ மூர்த்தி கோலத்துடன் சுவாமி அம்மன் தனி.

🔯தெற்கு புறம் 63 மூவர்.

🕉️திருமண தடை நீங்க வழிபட இவ்வாலயம் சிறப்பு. 

🔯பங்குனியில் 7 நாள்கள் சூரிய பூசை
- விதை தெளி உற்சவம் சிறப்பு.

☸️அடியார்களால் மாதம் ஒரு முறை 63 நாயன்மார்களுக்கும் அபிஷேக ஆராதனை மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.

 🟩 *காரைக்கால் அம்மையார்  வழிபட்டுத் திருப்பணி செய்த கோயில்*.    

🛐புதுவை மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள 4 பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஒன்று.

✡️- புதுவை மாநில அரசின் கட்டுப்பாட்டில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

- ☸️புதுவை மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள 4 பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஒன்று.

- 🛐மிகப் பழமையான ஆலயம் நகரத்தார்களால், புனரமைக்கப்பட்ட ஆலயம்.

💥இதுகாறும், திருமுறையில் தமிழ் ஞானசம்பந்தர் அருளிய வினாவுரை அமைப்பு பதிகங்களை சிந்தித்தோம்.

🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி மூல நூல்களையும் , கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

☸️இவைகளில் சில பதிகங்களின் சிறப்பு பற்றித் தனித்தனியாக சிலக்குறிப்புகளுடனும், பொருள் விளக்கமுடனும் அடியேன் சிந்தைக்கு எட்டியவரை பல்வேறு அறிஞர்கள், சான்றோர்கள் நூல்களிலிருந்து தொகுத்து சில துளிகளாக அவ்வப்போது வழங்கப்படுகிறது. 
பருக விரும்புவோர்; பொறுமையுடன் சென்று முன்பதிவுகளைப் பார்க்கவும்.

🔯படித்துப் பலன் பெறுங்கள்.
 தமிழின் வளத்தை, சிறப்பை, பக்திப் பெருமையை உணருங்கள்; உலகுக்கு உணர்த்துங்கள்.

 தொடர்ந்து சிந்திப்போம்..... ......

🙏நன்றி🙇‍♂️     
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️
     🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽
முன்பதிவு :
https://m.facebook.com/story.php?story_fbid=5892856360789572&id=100001957991710

Saturday, July 17, 2021

வினாவுரை - சம்பந்தர் அமுதம் - திருத்தெளிச்சேரி - பதிவு - 6 பாடல் 6

#சம்பந்தர்அமுதம்
#தலப்பெருமை #பேரருட்திறன்
#வினாவுரை
 பதிவு: 6  
🌈#அமுதப்பதிகங்கள்   
              அமைப்புச்சிறப்புகள்
தமிழும், திருநெறியும், உலகம் முழுதும் விளங்க, தெய்வப் பதிகங்கள் அருளிச் செய்த தமிழாகரர், திருஞானசம்பந்தப் பெருமானின் தேவார பதிகப் பாடல்களை தொடர்ந்து சிந்திப்போம்.

வினாவுரை அமைப்பு என்றால் என்ன?
♻️இறைவன் சிறப்புகளை வினவுதல் போல கேள்வி எழுப்பி அதன் விடையை உட்பொருளாக உணர்த்தும் அமைப்பில் பாடல் அமைந்து வருவது. 

🛐6️⃣
6.சந்திரன் தோயும் பொழில்சூழ்ந்த மணிமாடங்கள் திகழும் தலம் எது?

யானையைத் திருக்கரத்தினால் மாய்த்தது எங்ஙனம் நிகழ்ந்தது?

விளக்கம்: 
இரண்டாம் திருமுறை 
பதிகம்.2.139
தலம் - திருத்தெளிச்சேரி 
பாடல் முதலடி:  'பூவலர்ந்தன
பண்: இந்தளம்
வினாவுரைப் பதிகம் 
பாடல்: 6
தவள  வெண்பிறை தோய்தரு தாழ்பொழில் சூழநல்
திவள மாமணி மாடம் திகழ் தெளிச்சேரியீர்

குவளை போற்கண்ணி துண்ணென வந்து குறுகிய
கவள மால்கரி எங்ஙன நீர்கையிற் காய்ந்ததே

பொருள் :
சந்திரன் தோயும் பொழில்சூழ்ந்த மணிமாடங்கள் திகழும் தெளிச்சேரி பெருமானே. 
குவளைக் கண்ணியாகிய உமாதேவியார் திகைக்க, யானையைத் திருக்கரத்தினால் மாய்த்தது எங்ஙனம் நிகழ்ந்தது என்று வியந்தது.

சிறப்பு:
உமையவளின் குவளை கண் சிறப்பு.
 கவளமாய் உண்ணும் யானை, மதிமயக்கத்துடன் சினத்துடன் வந்ததும், ஈசன் ஆயுதமின்றி தன் வெறும் கையினால் யானையை அடர்த்த வீரம் வியந்தது.

🛐ஞானசம்பந்தரின் பதிகச் சிறப்பு
 ஒவ்வொரு பாடலும் 4 வரிகள், அதில் முதல் இரு வரிகளில், 
தலச்சிறப்பும், அடுத்த இரு வரிகளின் இறைவரின் அருட்சிறப்பும் வெளிப்படுத்தும் அற்புத பதிகம்.
முதல் இருவரிகளில் ......

1.திருத்தளிச்சேரி தலத்தின் இயற்கை வளம் பக்திச் சிறப்பும், மனிதர் மான்பும், குறிப்பிட்டு இப்பதியில் வசிப்பவரே - திருத்தெளிச்சேரியீர் என்ற இறைவரை விளித்தது.

அடுத்த இருவரிகளில்
2.இறைவரின் அருட்பேராற்றலை குறிப்பிட்டு, வியந்து வினவுகிறார்.

💥இதுகாறும், திருமுறையில் தமிழ் ஞானசம்பந்தர் அருளிய வினாவுரை அமைப்பு பதிகங்களை சிந்தித்தோம்.

🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி மூல நூல்களையும் , கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

☸️இவைகளில் சில பதிகங்களின் சிறப்பு பற்றித் தனித்தனியாக சிலக்குறிப்புகளுடனும், பொருள் விளக்கமுடனும் அடியேன் சிந்தைக்கு எட்டியவரை பல்வேறு அறிஞர்கள், சான்றோர்கள் நூல்களிலிருந்து தொகுத்து சில துளிகளாக அவ்வப்போது வழங்கப்படுகிறது. 
பருக விரும்புவோர்; பொறுமையுடன் சென்று முன்பதிவுகளையும் பார்க்கவும்.

🔯படித்துப் பலன் பெறுங்கள்.
 தமிழின் வளத்தை, சிறப்பை, பக்திப் பெருமையை உணருங்கள்; உலகுக்கு உணர்த்துங்கள்.

 தொடர்ந்து சிந்திப்போம்..... ......

🙏நன்றி🙇‍♂️     
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️
     🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽
முன்பதிவு:
https://m.facebook.com/story.php?story_fbid=5886477541427454&id=100001957991710

திண்டல் திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் 6.09.26

திண்டல்  திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் வேலாயுதசாமி கோயில், திண்டல் என்பது ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ. தொ...