Wednesday, July 3, 2024

பதிவு - 12 ஓம்பர்வத் தரிசனம் நாள் - 6 குன்ஞ்ஜி - நாபிடாங் - குன்ஞ்சி

பதிவு - 12
#ஓம்பர்வத் தரிசனம்
 0m Parvat  செல்லும் வழியில் உள்ள சில முக்கிய இடங்கள் குறித்து முன்பதிவில் குறிப்பிட்டோம். 

இந்த பதிவில், இந்திய எல்லையின், கடைசி இடமாகிய நபிடாங் மற்றும் OMPARVAT தரிசனம் மற்ற அனுபவங்கள்.

நாள் - 6 குன்ஞ்ஜி - நாபிடாங் - குன்ஞ்சி
22 + 22 Kms. 6-7 hrs.
31.05.24- வெள்ளி

காலை 7.00 - குன்ஞ்ஜியில் காலை உணவு முடித்து, Bolero/Camper மூலம் புறப்பாடு.
நபிடாங் (4266 mts.)  சென்று ஓம்பர்வத்  தரிசனம்.
மதியம் 12.00 உணவு நபிடாங் 

மாலை - 4.00 மாலை டீ, இரவு உணவு & இரவு தங்குதல் at
KMVN  Yatra Campaign in Gunji.

நாள் - 6
இந்த பயணத்தின் முக்கிய நாள். இன்று ஓம் பர்வத், தரிசனம்.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

🛐குன்ஞ்ஜியிலிருந்து, காலை 7 மணிக்குள் காலை உணவு முடித்துக் கொண்டு அவரவர் ஜீப்பில் கிளம்பினோம். நல்ல பருவநிலை. வெய்யில் இருந்தாலும், இமயமலையின் குளிர் காற்று வீசிக் கொண்டு இருந்ததால், Swetter, மற்றும் கம்பளி உடைகளுடனும் Shoeம் அனிந்து இருந்தோம்.  மேலே செல்ல செல்ல குளிர் இருந்தாலும், இறையருள் துணையிருந்ததால், அருமையான வெய்யிலும், Clear Blue Sky ஆக அமைந்து இருந்ததால், பயணம் மிகச்சிறப்பாக அமைந்தது.

🛐குன்ஞ்ஜி பள்ளத்தாக்கிலிருந்து மெல்ல உயரம் சென்றோம். சில இடங்கள் சாலை மிக நன்றாகவும், சில இடங்கள் மிக மிக மோசமாகவும் இருந்தது.  சாலைப்பணி வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது.

🕉️குன்ஞ்ஜியிலிருந்து நடைபாதையாக மட்டுமே இருந்த மலைப் பாதையை, அரசாங்கம், BRO மூலம் சிறிது சிறிதாக மலைக்கற்களை வெட்டி அகற்றியும், மன் சரிவுகளை கெட்டிப்படுத்தியும், தற்போது Bolero /Camper /ஜீப் செல்லும் வழியாக்கி சவால் நிறைந்த பணியை மிகச் சிறப்பாக செய்து வருகிறார்கள். மிகவும் போற்றத்தக்க காரியங்கள்.

💥வழியில் இரு இடங்களில் INNER PERMIT Check செய்து பயணம் தொடர அனுமதி தருகிறார்கள்.

 🕉️ஒரு புறம் காளி நதி நம்மோடு கூட வந்து கொண்டே இருக்கிறது. காளி என்ற சாரதா நதி பாரதத்திற்கும், நேப்பாள நாட்டிற்கும் எல்லைப்பகுதியாக உள்ளது.

🕉️செல்லும் வழியிலேயே கனேஷ்பர்வத்,ஷீஷ் நாக் பர்வத் என்ற நாகபர்வத், காலபாணி, வியாசர் குகை  இருந்தாலும், OM Parvat தரிசித்துப் பிறகு திரும்ப வரும் போது காளி ஆலயம் தரிசித்தோம். 

🕉️நபிடாங் அருகில் உள்ள 0m Parvat View point சென்றோம். ஒரு தனியார் Tent Shop ல், Tea, சமோசா சாப்பிட்டோம். சிறிய கடையில் பல்வேறு பொருட்கள் விற்பனை செய்கிறார்கள்.
வேறு மக்கள் வசிப்பிடங்கள் அருகில் எங்கும் கிடையாது. தற்காலிக வசிப்பிடங்கள் தான் ஒன்றிரண்டு உள்ளன. பருவநிலை மாறியதும், கீழே வந்து விடுகிறார்கள். 

🕉️அருகில் சில தங்கும் இடங்கள் உள்ளன. எங்களைப் போன்று ஒம்பர்வத் யாத்தாரா, சில தனியார் அமைப்பின் மூலம், சுற்றுலா வந்து இருந்தனர், தனி நபர்கள், இருசக்கர வாகனம் மூலம் இங்கெல்லாம் வந்து தரிசனம் செய்கிறார்கள்.

🕉️ நபிதாஸ் பகுதியில், ஓம்பர்வத் மலைக்காட்சி மிகவும் அற்புதமாகத் தெரிந்தது.  நல்ல கால சூழல் இருந்ததால், எல்லோரும் மகிழ்ச்சியுடனும், மன நிறைவுடனும் பிரார்த்தனை செய்து நல்ல தரிசனம் செய்தோம்.

🕉️நபிதாங் என்ற இடம், மலைகளுக்கு இடையில் ஒரு திருப்பமான இடத்தில் உள்ள பகுதியாக இருக்கிறது.
பாதை மேற்கிலிருந்து கிழக்கு சென்று வளைந்து வடக்கில் திரும்புகிறது. இந்த முனையில் இருந்து om Parvat தரிசனம் காணலாம்.
🕉️கிழக்குப் புறத்தில் ஓம்பர்வத்மலை சிகரம் இந்திய பகுதியில் இருந்துப் பார்த்தால் இந்தி எழுத்து ஓம் போன்று மிக அற்புதமாகத் தெரிகிறது.

🕉️எதிர்புறமலையின் அடுத்த பகுதி நேப்பாள் நாட்டிற்கு சொந்தம் என்று கூறுகிறார்கள். அங்கிருந்து பார்த்தால் சாதாரண உயரமான மலையாக மட்டுமே காட்சியளிக்கிறது.

🕉️இந்த இடம், பாரதம், நேப்பாள், திபெத் மூன்றுக்கும் இடையில் எல்லைப்பகுதியாக உள்ளது.

🛐#நபிதாங்

🗻கைலாஷ் - மாசைரோவர் பயண சாலையில், இந்தியா பகுதியின் கடைசி Camp உள்ள நபிதாங் சென்றோம்.

🏔️வடக்கில், நபி பர்வத் என்ற மலை சிகரம் தெரிகிறது. முன்புறம் உள்ள இந்த கனவாய் பாதை வழியே சென்று, இந்த மலையைக் கடந்தால், திபெத்தில் உள்ள தார்ச்சன் - புறாங் என்ற நகர்  வந்துவிடும். அங்கிருந்து, மானசரோவர் ஏரியும் கைலாச மலையின் தென்புறம் சென்று அடையலாம்.

🗻பாரதப் பகுதியில் உள்ள நபியாங், நேப்பாள் பகுதியில் உள்ள ஹில்சா,  திபெத் பகுதியில் உள்ள தக்லாகோட் என்ற புறாங் இந்த மூன்று இடங்களும்  ஒரு Triangle போல உள்ளன. இயற்கையான மலைகளால் பிரிக்கப்பட்டுள்ளது.

🏔️நாங்கள், 2018 ல் கைலாச யாத்திரையில் நேப்பாளின் சிமிகோட் பகுதி வந்து, அங்கியிருந்து மேற்கில் சிறிய ஹெலிகாப்டர் மூலம் 
எல்லாப் பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்ட ஒரு பள்ளத்தாக்கில் உள்ள  சிறிய பகுதியான ஹில்சா என்ற இடம் வந்து அங்குள்ள நதியைக் கடந்து திபெத் பகுதிக்கு வந்து, தக்லாகோட் - தார்ச்சன் அடைந்து கைலாஷ் அடைந்தோம்.

🗻 திபெத் தனித்துவும் பெற்று விட்டால்,  நாம் வாகனத்திலேயே நபியாங் கனவாய் வழிப்பாதையிலேயே, தக்லா கோட் - தார்ச்சன் சென்று பின், மானசரோவர், மற்றும், கைலாயம் சென்று தரிசித்து வரும் காலம் விரைவில் வந்து விடும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. திபெத் - சீனா அரசியல் சூழல் தற்போது உலக நாடுகள் பக்கம் கவனம் பெற்றுள்ளது. இதின் பாரதத்தின் பங்கு மிகக் கனிசமானது. 

🏔️நல்ல பாதை வசதி இந்திய பகுதிகளில் செய்யப்பட்டு வருகிறது. மிக உயரமான, நபிதாங் மலையின் அடுத்த பகுதி சென்றால், கைலாய மலை மிக நன்றாகத் தெரியும்.

🗻நாம்,  நபிதாங் பகுதியில் இருந்து ஓம்பர்வத் மலை தரிசனம் நன்றாக செய்ய முடிகிறது. மேலும், நம் பகுதியில் உள்ள மலையில் உயரம் சுமார் 200 mts  தூரம் treking சென்றால், கைலாய மலையின் சிகரம் தெரியும் என்று கூறுகிறர்கள். அங்கு வாகனங்கள் செல்ல தனிப் பாதை வசதிகளும் ஏற்படுத்தும் வேலைகள் நடைபெறுகிறது என்றும் கூறுகிறார்கள்.  இது அமைக்கப்பட்டால் கூட, நம் பாரத பூமீயில் இருந்து கொண்டே கைலாயமலையின் சிகரத்தைத் தரிசனம் செய்து விடலாம் என்பதால், அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன என்றும் கூறுகிறார்கள்.

🏔️நபிதாங் பகுதியில் பாரத ராணுவப் பிரிவான ITB Camp உள்ளது.  

🛕Camp பகுதியின் முன்புறம் ஒரு சிறிய குன்று போல உள்ள இடத்தில், ஒரு கோவில் உள்ளது. கல்கட்டிடம் ஆன்மீக குரு ஒருவரின் அமைப்பின் மூலம் பூசை நடத்தப்பட்டு வருகிறது. நாங்கள் இந்த ஆலயம் சென்று வணங்கி வந்தோம். கருவரையும், ஒரு முன் மண்டபமும் உள்ளது.
கருவரையில், சிவன் - பார்வதி ஒரு சிறிய லிங்கம் உள்ளது.

🏔️ நபியாங் ரானுவ Camp தாண்டி கைலாஷ் பாதை இருந்தாலும்,   நாம் போக அனுமதி கிடையாது.

🏔️சுமார் 14400 அடி உயரத்தில், 
நபிதாங்கில், KMVN சார்பில் ஒரு Tent Camp அமைக்கப்பட்டு உள்ளது. அதில் சென்று சிலர் தங்கி ஓய்வு எடுத்தார்கள். எங்களுக்கு, ஜூஸ், காபி / டீ வழங்கப்பட்டது. மதிய உணவும் இங்கே எங்களுக்கு கிடைத்தது.

🏔️நாங்கள் KVMN சார்பில், Pithoragarh என்ற இடத்தில் வழங்கப்பட்ட மரக்கன்றுகளை இங்கே நட்டோம்.

🕉️ நபி தாங் பகுதியில் இருந்து
Om Parvat மலை தரிசனம்; நபி பர்வத் மலை தரிசனம், மற்றும், வழியில் இருந்த  கனேஷ்பர்வத், (ஷீஷ்)நாக் பர்வத் என்ற நாகபர்வத், காலபாணி - காளி ஆலயம் - ,  வியாசர் குகை  இவையெல்லாம், தரிசித்தோம். அருமையான,  அற்புதமான வானிலையில் இந்தக் காட்சிகள்  கிடைத்தது இறைவரின் பேரருளே.

🎆மாலை குன்ஞ்சி திரும்பி KMVN Camp வந்து,  மாலை டீ, மற்றும் இரவு உணவு முடித்து, TENT ல் தங்கிக் கொண்டோம். மறுநாள் ஆதிகைலாஷ் தரிசனம் என்ற உற்சாகத்தில் இரவுப் பொழுது கழிந்தது.

🛐💚🤎💜❤️💙
பயணம் தொடருகிறது...... .....
#Uttarakhand   #ADIKAILASH  #OMPARVAT_YATRA_2024
#ஆதிகைலாஷ்  #ஓம்பர்வத்யாத்திரை
26.05.2024 முதல் 6.06.24 வரை 
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
🙏🏻🕉️🙏🏻🛐🙇🏻🕉️🙏🏻🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻

No comments:

Post a Comment

திருஆவினன்குடி - குழந்தை வேலாயுத சுவாமி -பிரதோஷக்குழுயாத்ரா 14.9.25 - கொங்குநாட்டுத்தலங்கள்

திருஆவினன்குடி - குழந்தை வேலாயுத சுவாமி திருஆவினன்குடி - குழந்தைவேலாயுத சுவாமி திரு என்ற இலக்குமி தேவியும், ஆ என்ற காமதேனுவும், இனன் என்ற சூ...