Friday, July 16, 2021

வினாவுரை - சம்பந்தர் அமுதம் - திருத்தெளிச்சேரி - பதிவு - 5 பாடல் 5

#சம்பந்தர்அமுதம்
#தலப்பெருமை #பேரருட்திறன்
#வினாவுரை
 பதிவு: 5

🌈#அமுதப்பதிகங்கள்   
              அமைப்புச்சிறப்புகள்

🛐தமிழும், திருநெறியும், உலகம் முழுதும் விளங்க, தெய்வப் பதிகங்கள் அருளிச் செய்த தமிழாகரர், திருஞானசம்பந்தப் பெருமானின் தேவார பதிகப் பாடல்களை சிந்தித்து வருகிறோம்.

அவ்வகையில் இதோ ஒரு வினாவுரை அமைப்பு பாடல்.

பதிவு: 5
வினாவுரை அமைப்பு என்றால் என்ன?
♻️இறைவன் சிறப்புகளை வினவுதல் போல கேள்வி எழுப்பி அதன் விடையை உட்பொருளாக உணர்த்தும் அமைப்பில் பாடல் அமைந்து வருவது. 

🛐5️⃣
வினா?
பார்வதி பக்கத்தில் இருந்து பூசிக்கும், மதிதவழ் மதில் சூழ்ந்த தலம் எது?

உலகெங்கும் பிச்சையேந்து நடந்தது ஏன்?

விளக்கம்: 
இரண்டாம் திருமுறை 
பதிகம்.2.139
தலம் - திருத்தெளிச்சேரி 
பாடல் முதலடி:  'பூவலர்ந்தன
பண்: இந்தளம்
வினாவுரைப் பதிகம்
பாடல்: 5

பக்க நுந்தமைப் பார்பதி யேத்திமுன் பாவிக்கும்
செக்கர் மாமதி சேர்மதில்சூழ் தெளிச்சேரியீர்

மைக்கொள் கண்ணியர் கைவளை மால்செய்து வெளவவே
நக்க ராயுலகு எங்கும் பலிக்கு நடப்பதே

பொருள்:
பார்வதி பக்கத்தில் இருந்து பூசிக்க, மதிதவழ் மதில் சூழ்ந்த தெளிச்சேரிப் பெருமானே.
தாருகாவனத்து மாதர்கள் மயக்கம் கொண்டு கையில் அணிந்துள்ள வளையல்கள் கழன்று விழுமாறு மெலியச் செய்து, அவர்களைக் கவரும் வகையில் ஆடையற்றவராய் உலகெங்கும் பிச்சையேந்து நடந்தது.

சிறப்பு:
இத்தலத்து இறைவியை பார்வதி என்று ஏற்றி உணர்த்தியதும்,  உமாதேவியார் ஈசனோடு கூறாகி இருந்து விளங்குவதும், வேறாகிய 
தனித்துப் பக்கம் சார்ந்து பூசனை செய்வதும் ஒரு சேர உணர்த்துதல் சிறப்பு.
🛐ஞானசம்பந்தரின் பதிகச் சிறப்பு
 ஒவ்வொரு பாடலும் 4 வரிகள், அதில் முதல் இரு வரிகளில், 
தலச்சிறப்பும், அடுத்த இரு வரிகளின் இறைவரின் அருட்சிறப்பும் வெளிப்படுத்தும் அற்புத பதிகம்.
முதல் இருவரிகளில் ......

1.திருத்தளிச்சேரி தலத்தின் இயற்கை வளம் பக்திச் சிறப்பும், மனிதர் மான்பும், குறிப்பிட்டு இப்பதியில் வசிப்பவரே - திருத்தெளிச்சேரியீர் என்ற இறைவரை விளித்தது.

அடுத்த இருவரிகளில்
2.இறைவரின் அருட்பேராற்றலை குறிப்பிட்டு, வியந்து வினவுகிறார்

💥தலச்சிறப்பு:
🌺 *திருத் தெளிச்சேரி பார்வதீசுவரர் திருக்கோயில்* :  பற்றிய சில சிறப்புக் குறிப்புகள்:

🟪திருத் தெளிச்சேரி காரைக்கால் மாநகரின் வடபால், காரைக்கால் பெருவண்டி நிலையத்திற்கு மேற்கில் மிக அருகே உள்ளது.

✡️மேற்கு பார்த்த தலம்
சுவாமி : பார்வதீஸ்வரர்
அம்பாள் : சுயம்வர தபஸ்வினி அம்பாள்.

🕉️ஆலயம் முழுதும் கற்கோவில். சுவாமி மேற்கு பார்த்தும், அம்மன் தெற்கு பார்த்தும் தனித்தனி சன்னதியாக இருப்பினும் ஒரே பிரகாரத்தால்  இணைக்கப்பட்டது.

⚛️வெளிப் பிரகாரத்தில் நந்தவனம் அமைத்து அடியார்கள் பராமரிப்பில் உள்ளது.

✡️வேடுவ மூர்த்தி கோலத்துடன் சுவாமி அம்மன் தனி.

🔯தெற்கு புறம் 63 மூவர்.

🕉️திருமண தடை நீங்க வழிபட இவ்வாலயம் சிறப்பு. 

🔯பங்குனியில் 7 நாள்கள் சூரிய பூசை
- விதை தெளி உற்சவம் சிறப்பு.

☸️அடியார்களால் மாதம் ஒரு முறை 63 நாயன்மார்களுக்கும் அபிஷேக ஆராதனை மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.

 🟩 *காரைக்கால் அம்மையார்  வழிபட்டுத் திருப்பணி செய்த கோயில்*.    

🛐புதுவை மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள 4 பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஒன்று.

✡️- புதுவை மாநில அரசின் கட்டுப்பாட்டில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

- ☸️புதுவை மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள 4 பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஒன்று.

- 🛐மிகப் பழமையான ஆலயம் நகரத்தார்களால், புனரமைக்கப்பட்ட ஆலயம்.

🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி மூல நூல்களையும் , கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

☸️இவைகளில் சில பதிகங்களின் சிறப்பு பற்றித் தனித்தனியாக சிலக்குறிப்புகளுடனும், பொருள் விளக்கமுடனும் அடியேன் சிந்தைக்கு எட்டியவரை பல்வேறு அறிஞர்கள், சான்றோர்கள் நூல்களிலிருந்து தொகுத்து சில துளிகளாக அவ்வப்போது வழங்கப்படுகிறது. பருக விரும்புவோர்; பொறுமையுடன் சென்று முன்பதிவுகளைப் பார்க்கவும்.

🔯படித்துப் பலன் பெறுங்கள்.
 தமிழின் வளத்தை, சிறப்பை, பக்திப் பெருமையை உணருங்கள்; உலகுக்கு உணர்த்துங்கள்.

 தொடர்ந்து சிந்திப்போம்..... ......

🙏நன்றி🙇‍♂️     
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️
     🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽
முன்பதிவு :
https://m.facebook.com/story.php?story_fbid=5879828962092312&id=100001957991710

Thursday, July 15, 2021

வினாவுரை - சம்பந்தர் அமுதம் - திருத்தெளிச்சேரி - பதிவு - 4 பாடல் 4

#சம்பந்தர்அமுதம்
#தலப்பெருமை #பேரருட்திறன்
#வினாவுரை
 பதிவு: 4
🌈#அமுதப்பதிகங்கள்   
              அமைப்புச்சிறப்புகள்
🛐பக்தியால் தமிழும், தமிழால் பக்தியும் வளர்த்த தெய்வப்பிறவி, அருள் ஞானசம்பந்தரின் அற்புத பதிகங்களின் சிறப்புக்களின் சில துளிகள் பருகுவோம்.

வினாவுரை அமைப்பு என்றால் என்ன?
♻️இறைவன் சிறப்புகளை வினவுதல் போல கேள்வி எழுப்பி அதன் விடையை உட்பொருளாக உணர்த்தும் அமைப்பில் பாடல் அமைந்து வருவது. 

🛐4️⃣
வினா?
_மேகம் தவழும் கடலில் இருந்து சிப்பிகள் வெளிப்பட்டுக் கரையில் முத்துக்களைக் கொழிக்கவும், தேர் செல்லும் அகன்ற நெடிய வீதிகளையுடைய தலம் எது?

-உமாதேவியை ஒரு பாகத்தில் வைத்தது?

விளக்கம்:
இரண்டாம் திருமுறை 
பதிகம்.2.139
தலம் - திருத்தெளிச்சேரி 
பாடல் முதலடி: 'பூவலர்ந்தன
பண்: இந்தளம்
வினாவுரைப் பதிகம்:
பாடல் : 4

காரு லாம்கடல் இப்பிகண் முத்தம் கரைப் பெயும்
தேருலா நெடுவீதிய தார் தெளிச்சேரியிர்

ஏருலாம் பலிக்கே கிட வைப்பிடம் இன்றியே
வாரு லாமுலை யாளையொர் பாகத்து வைத்ததே.

பொருள் :
மேகம் தவழும் கடலில் இருந்து சிப்பிகள் வெளிப்பட்டுக் கரையில் முத்துக்களைக் கொழிக்கவும், தேர் செல்லும் அகன்ற நெடிய வீதிகளையுடைய தெளிச்சேரியில் விளங்கும் பெருமானே.
 
பலி ஏற்கும் போது, உமாதேவியைத் தாங்குமாறு செய்யத் தகுந்த இடமாக ஈசன் தனது இடது பாகத்தையேக் கொண்டு இருக்கச் செய்யும் சிறப்பு.

சிறப்பு:
நெடுவீதியும், தேரு உலாவும் தலம்
தேவியை ஒரு பாகத்தில் வைத்த சிறப்பும் விளக்கியது.
திருத்தெளிச்சேரி அக்காலத்தில் எத்துனை சிறப்பும், திருவிழா முதலிய ஆலய விழாக்கள் சிறப்புற நடைபெற்று வந்துள்ளதை அறிகிறோம்.

🛐ஞானசம்பந்தரின் பதிகச் சிறப்பு
 ஒவ்வொரு பாடலும் 4 வரிகள், அதில் முதல் இரு வரிகளில், 
தலச்சிறப்பும், அடுத்த இரு வரிகளின் இறைவரின் அருட்சிறப்பும் வெளிப்படுத்தும் அற்புத பதிகம்.
முதல் இருவரிகளில் ......

1.திருத்தளிச்சேரி தலத்தின் இயற்கை வளம் பக்திச் சிறப்பும், மனிதர் மான்பும், குறிப்பிட்டு இப்பதியில் வசிப்பவரே - திருத்தெளிச்சேரியீர் என்ற இறைவரை விளித்தது.

அடுத்த இருவரிகளில்
2.இறைவரின் அருட்பேராற்றலை குறிப்பிட்டு, வியந்து வினவுகிறார்
💥இதுகாறும், திருமுறையில் தமிழ் ஞானசம்பந்தர் அருளிய வினாவுரை அமைப்பு பதிகங்களை சிந்தித்தோம்.

🌺 *திருத் தெளிச்சேரி பார்வதீசுவரர் திருக்கோயில்* : பற்றிய சில சிறப்புக் குறிப்புகள்:

🟪திருத் தெளிச்சேரி காரைக்கால் மாநகரின் வடபால், காரைக்கால் பெருவண்டி நிலையத்திற்கு மேற்கில் மிக அருகே உள்ளது.

✡️மேற்கு பார்த்த தலம்
சுவாமி : பார்வதீஸ்வரர்
அம்பாள் : சுயம்வர தபஸ்வினி அம்பாள்.

🕉️ஆலயம் முழுதும் கற்கோவில். சுவாமி மேற்கு பார்த்தும், அம்மன் தெற்கு பார்த்தும் தனித்தனி சன்னதியாக இருப்பினும் ஒரே பிரகாரத்தால் இணைக்கப்பட்டது.

⚛️வெளிப் பிரகாரத்தில் நந்தவனம் அமைத்து அடியார்கள் பராமரிப்பில் உள்ளது.

✡️வேடுவ மூர்த்தி கோலத்துடன் சுவாமி அம்மன் தனி.

🔯தெற்கு புறம் 63 மூவர்.

🕉️திருமண தடை நீங்க வழிபட இவ்வாலயம் சிறப்பு. 

🔯பங்குனியில் 7 நாள்கள் சூரிய பூசை
- விதை தெளி உற்சவம் சிறப்பு.

☸️அடியார்களால் மாதம் ஒரு முறை 63 நாயன்மார்களுக்கும் அபிஷேக ஆராதனை மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.

 🟩 *காரைக்கால் அம்மையார் வழிபட்டுத் திருப்பணி செய்த கோயில்*.    

🛐புதுவை மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள 4 பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஒன்று.

🛐புதுவை மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள 4 பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஒன்று.

✡️- புதுவை மாநில அரசின் கட்டுப்பாட்டில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

- ☸️புதுவை மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள 4 பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஒன்று.

- 🛐மிகப் பழமையான ஆலயம் நகரத்தார்களால், புனரமைக்கப்பட்ட ஆலயம்.

🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி மூல நூல்களையும் , கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

☸️இவைகளில் சில பதிகங்களின் சிறப்பு பற்றித் தனித்தனியாக சிலக்குறிப்புகளுடனும், பொருள் விளக்கமுடனும் அடியேன் சிந்தைக்கு எட்டியவரை பல்வேறு அறிஞர்கள், சான்றோர்கள் நூல்களிலிருந்து தொகுத்து சில துளிகளாக அவ்வப்போது வழங்கப்படுகிறது. 
பருக விரும்புவோர்; பொறுமையுடன் சென்று முன்பதிவுகளைப் பார்க்கவும்.

🔯படித்துப் பலன் பெறுங்கள்.
 தமிழின் வளத்தை, சிறப்பை, பக்திப் பெருமையை உணருங்கள்; உலகுக்கு உணர்த்துங்கள்.

 தொடர்ந்து சிந்திப்போம்..... ......

🙏நன்றி🙇‍♂️     
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️
     🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽
முன்பதிவு காண:
https://m.facebook.com/story.php?story_fbid=5874541299287745&id=100001957991710

Wednesday, July 14, 2021

வினாவுரை - சம்பந்தர் அமுதம் - திருத்தளிச்சேரி - பதிவு - 3.

#சம்பந்தர்அமுதம்
#தலப்பெருமை #பேரருட்திறன்
#வினாவுரை
 பதிவு: 3
       🌈#அமுதப்பதிகங்கள்   
              அமைப்புச்சிறப்புகள்

🛐பக்தியால் தமிழும், தமிழால் பக்தியும் வளர்த்த தெய்வப்பிறவி, அருள் ஞானசம்பந்தரின் அற்புத பதிகங்களின் சிறப்புக்களின் சில துளிகள் பருகுவோம்.

⚜️வினாவுரை அமைப்பில் உள்ள பாடல்களைப் பற்றிய சிந்தனைகள்.

🌟வினாவுரை அமைப்பு என்றால் என்ன?
♻️இறைவன் சிறப்புகளை வினவுதல் போல கேள்வி எழுப்பி அதன் விடையை உட்பொருளாக உணர்த்தும் அமைப்பில் பாடல் அமைந்து வருவது. 
🛐3️⃣
வினா?
- மணம் மிகும் மலர் சோலை சூழ்ந்தும், நிலவு தவழுமாறு உயர்ந்த செம்பு கலந்த மதில்கள் கொண்ட தலம் எது?

- அம்படுத்த கண்ணாளொடு விடைமேல் அமர்ந்தது காரணம்?

விளக்கம்:
இரண்டாம் திருமுறை 
பதிகம்.2.139
தலம் - திருத்தெளிச்சேரி 
பாடல் முதலடி: 'பூவலர்ந்தன
பண்: இந்தளம்
வினாவுரைப் பதிகம்
பாடல்-3
வம்படுத்த மலர்ப் பொழில் சூழ மதிதவழ்
செம்படுத்த செழும் புரிசைத் தெளிச்சேரியிர்

கொம்படுத்ததொர் கோல விடை மிசைக் கூர்மையோடு 
அம்படுத்த கண்ணாளொடு மேவல் அழகிதே.

பொருள் :
மணம் மிகும் மலர் சோலை சூழ்ந்தும், நிலவு தவழுமாறு உயர்ந்த செம்பு கலந்த மதில்கள் கொண்ட தெளிச்சேரியின் பெருமானே.

கூர்மையான விழிகளுடன், அருள் நோக்குடன் விளங்கும் உமாதேவியுடன், கொம்பு உடைய அழகிய இடபத்தின் மீது அமர்ந்து காட்சி தரும் அழகை கண்டு வியப்பது.

சிறப்பு.
அருள்விழி தரும் உமையாள் சிறப்பும், உயர் மதில் உள்ள தலமும் சிறப்பு தருகிறது.

🛐ஞானசம்பந்தரின் பதிகச் சிறப்பு
 ஒவ்வொரு பாடலும் 4 வரிகள், அதில் முதல் இரு வரிகளில், 
தலச்சிறப்பும், அடுத்த இரு வரிகளின் இறைவரின் அருட்சிறப்பும் வெளிப்படுத்தும் அற்புத பதிகம்.
முதல் இருவரிகளில் ......

1.திருத்தளிச்சேரி தலத்தின் இயற்கை வளம் பக்திச் சிறப்பும், மனிதர் மான்பும், குறிப்பிட்டு இப்பதியில் வசிப்பவரே - திருத்தெளிச்சேரியீர் என்ற இறைவரை விளித்தது.

அடுத்த இருவரிகளில்
2.இறைவரின் அருட்பேராற்றலை குறிப்பிட்டு, வியந்து வினவுகிறார்.

💥திருமுறையில் தமிழ் ஞானசம்பந்தர் அருளிய வினாவுரை அமைப்பு பதிகங்களைப் பற்றி தொடர்ந்து சிந்தித்தோம்.

🌺 *திருத் தெளிச்சேரி பார்வதீசுவரர் திருக்கோயில்* : பற்றிய சில சிறப்புக் குறிப்புகள்:

🟪திருத் தெளிச்சேரி காரைக்கால் மாநகரின் வடபால், காரைக்கால் பெருவண்டி நிலையத்திற்கு மேற்கில் மிக அருகே உள்ளது.

✡️மேற்கு பார்த்த தலம்
சுவாமி : பார்வதீஸ்வரர்
அம்பாள் : சுயம்வர தபஸ்வினி அம்பாள்.

🕉️ஆலயம் முழுதும் கற்கோவில். சுவாமி மேற்கு பார்த்தும், அம்மன் தெற்கு பார்த்தும் தனித்தனி சன்னதியாக இருப்பினும் ஒரே பிரகாரத்தால் இணைக்கப்பட்டது.

⚛️வெளிப் பிரகாரத்தில் நந்தவனம் அமைத்து அடியார்கள் பராமரிப்பில் உள்ளது.

✡️வேடுவ மூர்த்தி கோலத்துடன் சுவாமி அம்மன் தனி.

🔯தெற்கு புறம் 63 மூவர்.

🕉️திருமண தடை நீங்க வழிபட இவ்வாலயம் சிறப்பு. 

🔯பங்குனியில் 7 நாள்கள் சூரிய பூசை
- விதை தெளி உற்சவம் சிறப்பு.

☸️அடியார்களால் மாதம் ஒரு முறை 63 நாயன்மார்களுக்கும் அபிஷேக ஆராதனை மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.

 🟩 *காரைக்கால் அம்மையார் வழிபட்டுத் திருப்பணி செய்த கோயில்*.    

🛐புதுவை மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள 4 பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஒன்று.

🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி மூல நூல்களையும் , கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

☸️இவைகளில் சில பதிகங்களின் சிறப்பு பற்றித் தனித்தனியாக சிலக்குறிப்புகளுடனும், பொருள் விளக்கமுடனும் அடியேன் சிந்தைக்கு எட்டியவரை பல்வேறு அறிஞர்கள், சான்றோர்கள் நூல்களிலிருந்து தொகுத்து சில துளிகளாக அவ்வப்போது வழங்கப்படுகிறது. 
பருக விரும்புவோர்; பொறுமையுடன் சென்று முன்பதிவுகளைப் பார்க்கவும்.

🔯படித்துப் பலன் பெறுங்கள்.
 தமிழின் வளத்தை, சிறப்பை, பக்திப் பெருமையை உணருங்கள்; உலகுக்கு உணர்த்துங்கள்.

 தொடர்ந்து சிந்திப்போம்..... ......

🙏நன்றி🙇‍♂️     
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️
     🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽
முன்பதிவு :
https://m.facebook.com/story.php?story_fbid=5864548653620343&id=100001957991710

Monday, July 12, 2021

வினாவுரை - சம்பந்தர் அமுதம் - திருத்தளிச்சேரி - பதிவு - 2 பாடல் - 2

#சம்பந்தர்அமுதம்
#தலப்பெருமை #பேரருட்திறன்
#வினாவுரை
🌈#அமுதப்பதிகங்கள்   
              அமைப்புச்சிறப்புகள்
பதிவு: 2
🛐2️⃣
வினா?
 பக்தியால், தேவரும், மாந்தரும் தொழுவதால், அவர்தம் குறைகளைத் தீர்த்து, வேண்டிய வரங்களை அருளி மகிழ்ச்சியில் திளைக்கச் செய்யும், தலம் எது?

காமனை காய்ந்தது ஏன்?

⚜️திருமுறையில் தமிழ் ஞானசம்பந்தர் அருளிய வினாவுரை அமைப்பு பதிகங்களில் விடை தேடுவோம்.

🌟வினாவுரை அமைப்பு என்றால் என்ன?
♻️இறைவன் சிறப்புகளை வினவுதல் போல கேள்வி எழுப்பி அதன் விடையை உட்பொருளாக உணர்த்தும் அமைப்பில் பாடல் அமைந்து வருவது. 

விளக்கம்:
இரண்டாம் திருமுறை 
பதிகம்.2.139
தலம் - திருத்தெளிச்சேரி 
பாடல் முதலடி: 'பூவலர்ந்தன
பண்: இந்தளம்
வினாவுரைப் பதிகம்:
பாடல் : 2.
விளைக்கும் பக்திக்கு விண்ணவர் மண்ணவர் ஏத்தவே
திளைக்கும் தீர்த்தம் அறாத திகழ் தெளிச்சேரியீர்

வளைக்கும் திண்சிலை மேல்ஐந்து பாணமுந் தானெய்து
களிக்குங் காமனை எங்ஙன நீர் கண்ணிற் காய்ந்ததே.

பொருள்.
பக்தியால், தேவரும், மாந்தரும் தொழுவதால், அவர்தம் குறைகளைத் தீர்த்து, வேண்டிய வரங்களை அருளி மகிழ்ச்சியில் திளைக்கச் செய்யும், தெளிச்சேரி பெருமானே!

உறுதியான வில்லை வளைத்து, ஐந்து வித மலர்க்கணைகளைக் கொண்டு, எய்து மகிழ்ந்த மன்மதனை, நெற்றிக் கண்ணால் எரித்தது வியந்தது.

சிறப்பு:
பிறர்பால் காம மலர்க்கணைகளைத் தொடுத்து, வெற்றிக் களிப்பால், மன்மதன் ஆணவம் கொண்டதால், அவனை எரித்தார்.
வழிபாடு செய்யும் தேவருக்கும், மாந்தருக்கும், குறைதீர்த்து, வேண்டிய அருள் தருவது.

🛐தமிழ் விரகனாராகிய, ஞானசம்பந்தரின் இப் பதிகச் சிறப்பு ஒவ்வொரு பாடலும் 4 வரிகள்; அதில் முதல் இரு வரிகளில், 
தலச்சிறப்பும், அடுத்த இரு வரிகளின் இறைவரின் அருட்சிறப்பும் வெளிப்படுத்தும் அற்புத பதிகம்.
முதல் இருவரிகளில் ......

1.திருத்தளிச்சேரி தலத்தின் இயற்கை வளம் பக்திச் சிறப்பும், மனிதர் மான்பும், குறிப்பிட்டு இப்பதியில் வசிப்பவரே - திருத்தெளிச்சேரியீர் என்ற இறைவரை விளித்தது.

அடுத்த இருவரிகளில்
2.இறைவரின் அருட்பேராற்றலை குறிப்பிட்டு, வியந்து வினவுகிறார்.

🌺 *திருத் தெளிச்சேரி பார்வதீசுவரர் திருக்கோயில்* : பற்றிய சில சிறப்புக் குறிப்புகள்:

🟪திருத் தெளிச்சேரி காரைக்கால் மாநகரின் வடபால், காரைக்கால் பெருவண்டி நிலையத்திற்கு மேற்கில் மிக அருகே உள்ளது.

✡️மேற்கு பார்த்த தலம்
சுவாமி : பார்வதீஸ்வரர்
அம்பாள் : சுயம்வர தபஸ்வினி அம்பாள்.

🕉️ஆலயம் முழுதும் கற்கோவில். சுவாமி மேற்கு பார்த்தும், அம்மன் தெற்கு பார்த்தும் தனித்தனி சன்னதியாக இருப்பினும் ஒரே பிரகாரத்தால் இணைக்கப்பட்டது.

⚛️வெளிப் பிரகாரத்தில் நந்தவனம் அமைத்து அடியார்கள் பராமரிப்பில் உள்ளது.

✡️வேடுவ மூர்த்தி கோலத்துடன் சுவாமி அம்மன் தனி.

🔯தெற்கு புறம் 63 மூவர்.

🕉️திருமண தடை நீங்க வழிபட இவ்வாலயம் சிறப்பு. 

🔯பங்குனியில் 7 நாள்கள் சூரிய பூசை
- விதை தெளி உற்சவம் சிறப்பு.

☸️அடியார்களால் மாதம் ஒரு முறை 63 நாயன்மார்களுக்கும் அபிஷேக ஆராதனை மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.

 🟩 *காரைக்கால் அம்மையார் வழிபட்டுத் திருப்பணி செய்த கோயில்*.    

🛐புதுவை மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள 4 பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஒன்று.

🙏 இது ஒரு அறிமுக பதிவே.
 மேற்படி மூல நூல்களையும் , கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்ந்தறிவோம்.

☸️இத்தகைய சில பதிகங்களின் சிறப்பு பற்றித் சிலக் குறிப்புகளுடனும், பொருள் விளக்கமுடனும் அடியேன் சிந்தைக்கு எட்டியவரை பல்வேறு அறிஞர்கள், சான்றோர்கள் நூல்களிலிருந்து தொகுத்து சில துளிகளாக அவ்வப்போது வழங்கப்படுகிறது. 

🕉️ஆன்மீக தமிழின் சிறப்பை, #சம்பந்தர்அமுதம் பருக விரும்புவோர்; பொறுமையுடன் சென்று முன்பதிவுகளையும் பார்க்கவும்.

🔯படித்துப் பலன் பெறுங்கள்.
 தமிழின் வளத்தை, சிறப்பை, பக்திப் பெருமையை உணருங்கள்; உலகுக்கு உணர்த்துங்கள்.

 தொடர்ந்து சிந்திப்போம்..... ......

🙏நன்றி🙇‍♂️     
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️
     🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽
முன்பதிவு:
https://m.facebook.com/story.php?story_fbid=5855753897833152&id=100001957991710

திண்டல் திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் 6.09.26

திண்டல்  திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் வேலாயுதசாமி கோயில், திண்டல் என்பது ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ. தொ...