#தலப்பெருமை #பேரருட்திறன்
#வினாவுரை
பதிவு: 3
🌈#அமுதப்பதிகங்கள்
அமைப்புச்சிறப்புகள்
🛐பக்தியால் தமிழும், தமிழால் பக்தியும் வளர்த்த தெய்வப்பிறவி, அருள் ஞானசம்பந்தரின் அற்புத பதிகங்களின் சிறப்புக்களின் சில துளிகள் பருகுவோம்.
⚜️வினாவுரை அமைப்பில் உள்ள பாடல்களைப் பற்றிய சிந்தனைகள்.
🌟வினாவுரை அமைப்பு என்றால் என்ன?
♻️இறைவன் சிறப்புகளை வினவுதல் போல கேள்வி எழுப்பி அதன் விடையை உட்பொருளாக உணர்த்தும் அமைப்பில் பாடல் அமைந்து வருவது.
🛐3️⃣
வினா?
- மணம் மிகும் மலர் சோலை சூழ்ந்தும், நிலவு தவழுமாறு உயர்ந்த செம்பு கலந்த மதில்கள் கொண்ட தலம் எது?
- அம்படுத்த கண்ணாளொடு விடைமேல் அமர்ந்தது காரணம்?
விளக்கம்:
இரண்டாம் திருமுறை
பதிகம்.2.139
தலம் - திருத்தெளிச்சேரி
பாடல் முதலடி: 'பூவலர்ந்தன
பண்: இந்தளம்
வினாவுரைப் பதிகம்
பாடல்-3
வம்படுத்த மலர்ப் பொழில் சூழ மதிதவழ்
செம்படுத்த செழும் புரிசைத் தெளிச்சேரியிர்
கொம்படுத்ததொர் கோல விடை மிசைக் கூர்மையோடு
அம்படுத்த கண்ணாளொடு மேவல் அழகிதே.
பொருள் :
மணம் மிகும் மலர் சோலை சூழ்ந்தும், நிலவு தவழுமாறு உயர்ந்த செம்பு கலந்த மதில்கள் கொண்ட தெளிச்சேரியின் பெருமானே.
கூர்மையான விழிகளுடன், அருள் நோக்குடன் விளங்கும் உமாதேவியுடன், கொம்பு உடைய அழகிய இடபத்தின் மீது அமர்ந்து காட்சி தரும் அழகை கண்டு வியப்பது.
சிறப்பு.
அருள்விழி தரும் உமையாள் சிறப்பும், உயர் மதில் உள்ள தலமும் சிறப்பு தருகிறது.
🛐ஞானசம்பந்தரின் பதிகச் சிறப்பு
ஒவ்வொரு பாடலும் 4 வரிகள், அதில் முதல் இரு வரிகளில்,
தலச்சிறப்பும், அடுத்த இரு வரிகளின் இறைவரின் அருட்சிறப்பும் வெளிப்படுத்தும் அற்புத பதிகம்.
முதல் இருவரிகளில் ......
1.திருத்தளிச்சேரி தலத்தின் இயற்கை வளம் பக்திச் சிறப்பும், மனிதர் மான்பும், குறிப்பிட்டு இப்பதியில் வசிப்பவரே - திருத்தெளிச்சேரியீர் என்ற இறைவரை விளித்தது.
அடுத்த இருவரிகளில்
2.இறைவரின் அருட்பேராற்றலை குறிப்பிட்டு, வியந்து வினவுகிறார்.
💥திருமுறையில் தமிழ் ஞானசம்பந்தர் அருளிய வினாவுரை அமைப்பு பதிகங்களைப் பற்றி தொடர்ந்து சிந்தித்தோம்.
🌺 *திருத் தெளிச்சேரி பார்வதீசுவரர் திருக்கோயில்* : பற்றிய சில சிறப்புக் குறிப்புகள்:
🟪திருத் தெளிச்சேரி காரைக்கால் மாநகரின் வடபால், காரைக்கால் பெருவண்டி நிலையத்திற்கு மேற்கில் மிக அருகே உள்ளது.
✡️மேற்கு பார்த்த தலம்
சுவாமி : பார்வதீஸ்வரர்
அம்பாள் : சுயம்வர தபஸ்வினி அம்பாள்.
🕉️ஆலயம் முழுதும் கற்கோவில். சுவாமி மேற்கு பார்த்தும், அம்மன் தெற்கு பார்த்தும் தனித்தனி சன்னதியாக இருப்பினும் ஒரே பிரகாரத்தால் இணைக்கப்பட்டது.
⚛️வெளிப் பிரகாரத்தில் நந்தவனம் அமைத்து அடியார்கள் பராமரிப்பில் உள்ளது.
✡️வேடுவ மூர்த்தி கோலத்துடன் சுவாமி அம்மன் தனி.
🔯தெற்கு புறம் 63 மூவர்.
🕉️திருமண தடை நீங்க வழிபட இவ்வாலயம் சிறப்பு.
🔯பங்குனியில் 7 நாள்கள் சூரிய பூசை
- விதை தெளி உற்சவம் சிறப்பு.
☸️அடியார்களால் மாதம் ஒரு முறை 63 நாயன்மார்களுக்கும் அபிஷேக ஆராதனை மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.
🟩 *காரைக்கால் அம்மையார் வழிபட்டுத் திருப்பணி செய்த கோயில்*.
🛐புதுவை மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள 4 பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஒன்று.
🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி மூல நூல்களையும் , கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.
☸️இவைகளில் சில பதிகங்களின் சிறப்பு பற்றித் தனித்தனியாக சிலக்குறிப்புகளுடனும், பொருள் விளக்கமுடனும் அடியேன் சிந்தைக்கு எட்டியவரை பல்வேறு அறிஞர்கள், சான்றோர்கள் நூல்களிலிருந்து தொகுத்து சில துளிகளாக அவ்வப்போது வழங்கப்படுகிறது.
பருக விரும்புவோர்; பொறுமையுடன் சென்று முன்பதிவுகளைப் பார்க்கவும்.
🔯படித்துப் பலன் பெறுங்கள்.
தமிழின் வளத்தை, சிறப்பை, பக்திப் பெருமையை உணருங்கள்; உலகுக்கு உணர்த்துங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம்..... ......
🙏நன்றி🙇♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்🙇♂️🙏🙇♂️
🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽
முன்பதிவு :
https://m.facebook.com/story.php?story_fbid=5864548653620343&id=100001957991710
No comments:
Post a Comment