Thursday, September 17, 2026

திண்டல் திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் 6.09.26

திண்டல் 
திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில்
வேலாயுதசாமி கோயில், திண்டல் என்பது ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ. தொலைவில் திண்டல் மலை மீது 60 மீட்டர் உயரத்தில் மரங்கள் நிறைந்து காணப்படும் ஒரு முருகன் கோயில் ஆகும். அருணகிரிநாதரால் பாடல் பெற்ற 178 தலங்களில் திண்டல்மலை வேலாயுத சுவாமி கோயிலும் ஒன்று.
திண்டு போன்று மலையின் அமைப்பு உள்ளதால் திண்டல் என்ற பெயர் பெற்றதாகக் கூறப்படும் இந்த திருக்கோயிலுக்கு ஈரோடு- கோவை நெடுஞ்சாலைகளிலேயே நுழைவாயில் அமைந்துள்ளது. நுழைவாயிலைக் கடந்ததும், குன்றின் அடிவாரத்திலேயே நெடுதுயர்ந்த அரச மரத்தின் கீழ் நாகர்கள் சூழ அமைந்திருக்கும் அரச மரத்தடி விநாயகரையும், அடுத்து இரண்டு நாகர்களுடன் ஸித்தி விநாயகரையும் தரிசிக்கலாம். இந்த விநாயகர் தரிசனம் நாகதோஷங்களைத் தீர்க்கும் என்பது நம்பிக்கை. முன்மண்டப முகப்பில் வேலாயுத சுவாமி சிலை அமையப்பெற்றுள்ளது. இந்த திண்டல் மலை 60மீ உயரத்துடன் நூற்று எட்டு படிகளைக் கொண்டுள்ளது. பக்தர்கள் வெயிலிலும், மழையிலும் பாதிக்கப்படாமல் இருக்க படிகள் முழுவதும் நிழல் மண்டபம் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. சில படிகள் கடந்ததும் மலைப் பாதையில் நடுவில் அழகிய மண்டபத்துடன் வடக்கு நோக்கிய சந்நிதியாக இடும்பன் சந்நிதி உள்ளது. இடும்பன் மண்டபம் சுற்றியும் இடும்பர் வரலாறு வரையப்பட்டுள்ளது
இச்சந்நிதிக்கு எதிரில் அழகிய செயற்கை அருவி அமைக்கப்பட்டுள்ளது. மலை உச்சியில் மூன்று நிலை இராஜகோபுரம் அமைந்துள்ளது. கோயிலுக்கு வெளியே ஒரே கல்லால் நீண்டு உயர்ந்து நிற்கும் வண்ணம் தீப ஸ்தம்பம் உள்ளது. பின்னர் உள்ளே நுழைந்தவுடன் தென்மேற்கு மூலையில் விநாயகர் சந்நிதி சுற்று மண்டபத்தின் உட்புறம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு முருகப்பெருமான் கருவறையில் கிழக்கு நோக்கி நின்று குழந்தை வேலாயுத ஸ்வாமியாக தீராவினை தீர்க்கும் வேலுடன் அருள்பாலிக்கிறார். அருகே உற்சவர் சந்நிதியில் விநாயகர். வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், தனியே குழந்தை வேலாயுதனாயும் அருள்பாலிக்கிறார். வடகிழக்கு மூலையில் தங்கரத மண்டபம் உள்ளது. கருவறையின் வடமேற்கு பகுதி மலைச்சரிவில் சற்றுத் தாழ்வான பகுதியில் தன்னாசி குகை உள்ளது. இந்தத் தன்னாசி குகையில் கார்த்திகை தீபத்தன்று சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன. மலையின் வடகிழக்கு பகுதியில் உள்ள அழகிய இயற்கைச் சுனையில் உள்ள வற்றாத நீரூற்றானது முருகப்பெருமானின் அபிஷேகத்திற்கும் மற்றும் பக்தர்களின் தாகம் தீர்க்கவும் பயன்படுகிறது.

குன்றுகளும் குமரன் கோயில்களும் நிறைந்த கொங்கு தேசத்தில் உள்ள திண்டல் மலைக்குத் தனிச் சிறப்பு உண்டு.
தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தேனுலவும் நாககிரி திண்டல்மலை எனப் புகழப்படும் இத்திருத்தலம் பல ஆண்டுகளுக்கு முன்பு சிறிய கோயிலாகக் கட்டப்பட்டு, பின்னர் நாளடைவில் வளர்ச்சி அடைந்து இன்று சிறப்புடன் விளங்குகின்றது.
ஆலயம் அடிவாரத்தில் தனியாக ஒரு சிவன் கோவில் கட்டப்பட்டுள்ளது. சுவாமி அம்பாள் கிழக்கு நோக்கி தனித்தனி முன்மண்டபத்துடன் கருவரைகளுடன் உள்ளனர் கோஷ்ட்டத்தில் வழமையான கோஷ்ட்ட தெய்வங்களும், முன் 
மன்டபப்பகுதிகளில், நால்வருடன் காரைக்கால் அம்மையார், மற்றும் தனி சனி பகவான் சன்னதிகளும் அமைக்கப்பட்டுள்ளது
ஆலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருவதால் ஆலய வளாகம் பெரிதாக்கி வாகன நிறுத்துமிடம் தங்கும் கூடம் முதலிய வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.
 இக்கோயில் முருகன் ஸ்ரீவேலாயுதசுவாமி, குழந்தை வேலாயுதசுவாமி, திண்டல் மலை முருகன், குமார வேலாயுதசுவாமி எனப் பல பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் இடம்பெற்றுள்ள இந்த திண்டல்மலை வேலாயுத சுவாமி கோயில் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற ஸ்தலம்.
ஸ்தல வரலாறு:
பண்டைய கொங்குநாட்டில் உள்ள 24 நாடுகளில் திண்டலும் ஒன்று. அப்போது சேர மன்னர்களால் ஆண்ட கொங்குநாடு, கடந்த காலத்தில் ஆட்சி வசதிக்காகப் பிரிக்கப்பட்டது. இந்த திண்டல் முருகன் கோயில் திராவிட கட்டிடக்கலை அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.
ஒரு சமயம், இப்பகுதியை ஒட்டி அமைந்திருந்த பூந்துறை நாட்டில் மழை பொய்த்து பஞ்சம் ஏற்பட்டது. இதனால் பெரும் துன்பத்துக்கு ஆளான வேளாளர்கள் ஒன்றுகூடி, இங்கு சந்நிதி கொண்டிருக்கும் இடும்ப குமாரனைப் பிரார்த்தித்து, மழை வளம் அருளும்படி வேண்டிக் கொண்டார்களாம். அவர்களின் வேண்டுதலை ஏற்று இடும்பன் மழைவளம் அருளியதாக ஸ்தல வரலாறு. இதனைச் சித்திரிக்கும் படங்களும் கோயில் சுவர்களில் தீட்டப்பட்டுள்ளன. இக்கோயில் கடம்பனுக்கு மட்டுமின்றி, அவன் அணுக்கனான இடும்பனுக்கு சிறப்புகள் தரும் ஸ்தலம். இங்குள்ள மக்கள் தங்களது வேண்டுகோளை இடும்பன் மூலம் தெரிவித்து முருகனின் அருளைப் பெற்று வருவது இன்றளவும் நடைமுறையில் உள்ளது.

ஈரோடு நகரம் பல்வேறு தொழில் வசதிகளுடன் முன்னேறிச் செல்வ வளம் கொழிப்பதற்கு ஈரோட்டை நோக்கி கிழக்கு முகமாகக் குன்றினில் நின்றிருக்கும் திண்டல் முருகன் அருட் கண்பார்வையில் இந்நகரம் அமைந்திருப்பதே காரணம் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.
ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்களால் இச்சிறப்புடைய கோயில் சிறிய கோயிலாகக் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. கடந்த 25 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் திருப்பணி செய்யப்பட்டு வளர்ச்சி அடைந்து இன்று சிறப்புடன் விளங்குகிறது.

சில நூற்றாண்டுகளுக்கு முன் இத்தலத்து முருகனைக் குருசாமி புலவர் என்பவர் போற்றி ‘திண்டல் வேலாயுத சுவாமி சதகம்’ எனும் நூலை இயற்றியுள்ளார்.
கொங்கு நாட்டு ஆலயங்களில் தனிப்பட்ட ஓர் அமைப்பு தீபஸ்தம்பத்தைக் கோயில் வெளியே நிறுத்திக் கட்டுவதாகும். அது போன்ற தீபஸ்தம்பம் திண்டல் மலையில் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. ஸ்தம்பத்தில் அடிப்புறத்தில் நான்கு புறத்திலும் சமயத் தொடர்பான சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. திருக்கார்த்திகை அன்று இந்த தீப ஸ்தம்பத்தில் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.
இங்கு ஒவ்வொரு நாளும் இரவு 7.00 மணிக்குத் தங்க ரதத்தில் குழந்தை வேலாயுத ஸ்வாமி மலை மேல் சுற்றி வலம் வருகின்றார்.
ஒரு நாளைக்கு மூன்றுகாலப் பூசை நடக்கிறது. காலை 7 மணிக்குகீ காலை சந்தி பூசையும், 12 மணிக்கு உச்சிக்கால பூசையும், மாலை 6 மணிக்குச் சாயரட்சை பூசையும் நடக்கிறது. காலை 6 மணி, பகல் 11 மணி, மாலை 5 மணியளவில் அபிடேக ஆராதனை நடக்கிறது.
6.09.2026
6.9.26 #சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
Check out this review of Thindal Murugan Temple on Google Maps
https://goo.gl/maps/aowc347AsQj1K8Y89?g_st=ac

இரட்டை சுற்றி பாளையம் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே ராட்டை சுற்றிபாளையம் காலபைரவர் கோயில் 6.09.26

இரட்டை சுற்றி பாளையம் பைரவர்
இரட்டை சுற்றி பாளையம் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே ராட்டை சுற்றிபாளையம் காலபைரவர் கோயில் அமைந்துள்ளது. இது உலகப் புகழ்பெற்ற பிரம்மாண்டமான பைரவர் கோயிலாகும். முக்கிய சிறப்பம்சங்கள்: உயரம்: இங்குள்ள பிரம்மாண்ட கால பைரவர் சிலை 39 அடி உயரம் கொண்டது. சிறப்பு வடிவங்கள்: சிவபெருமானின் 64 திருவுருவங்களை நினைவூட்டும் வகையில் 64 வெவ்வேறு பைரவர் வடிவங்கள் இக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ளன. மற்றொரு பெயர்: இக்கோயில் 'தென்னக காசி' என்றும் அழைக்கப்படுகிறது.
ஆலயமுன்புறம் ஒரு பெரிய பைரவர் வாசலில் உள்ளார்.
ஆலயம் உள்ளே மிகப்பெரிய தோற்றத்துடன் கால பைரவர் அடுத்து நீண்ட பெரிய மண்டபம் கருவரையில் அலங்காரமாக சொர்ன ஆகாச பைரவர் உள்ளார் மேலும் ஒரு உற்சவர் பிரகாரத்திலேயே உள்ளார்
அமைவிடம்: ஈரோடு - காங்கேயம் முக்கிய சாலையில், அவல்பூந்துறை அருகில் பிரதான சாலையிலேயே இந்த ஆலயம் அமைந்துள்ளது.
6.09.2026
6.9.26 #சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

Check out this review of Kala Bhairavar Temple (Erode) on Google Maps
https://goo.gl/maps/M4uJoEzcnScaeGLw6?g_st=ac

அவல்பூந்துறை அருள்மிகு பாகம்பிரியாள் சமேத புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில் 6.09.2

அவல்பூந்துறை
புஷ்பவனேஸ்வர்
அவல்பூந்துறை அருள்மிகு பாகம்பிரியாள் சமேத புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில்
சிவன் கோயில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும்.

ஈரோட்டிலிருந்து அறச்சலூர் வழியாகச் செல்கின்ற தாராபுரம் சாலையில் பூந்துறை என்னுமிடத்தில் பிரதான சாலையிலேயே உள்ளது. அவல் பூந்துறை, பூந்துறை எனப்படுகின்ற இரு பெயர்களும் ஒன்றேயாகும்.
1500 ஆண்டுகள் பழமையானது. 5 நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது,
கிபி 7ஆம் நூற்றாண்டில் அப்பர் சுவாமிகளால் பாடல் பெற்ற தலம் எனப் புராணங்கள் கூறுகின்றன. லிங்க ரூபத்தில் புஷ்பவனேஸ்வரர் தனி சன்னதியில் மேற்குநோக்கி காட்சி தருகிறார். அம்பாள் பாகம்பிரியாள் என்ற திருநாமத்தில் தனி சன்னதி முன் மண்டபத்துடன் மேற்கு நோக்கி தனி கோவிலில் அருள்பாலிக்கிறார். ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர் தெற்கு நோக்கி ஆறுமுகத்துடன் கல்யாண கோலத்தில் அமர்ந்திருப்பதும் இக்கோவிலின் சிறப்பாகும்.
திருச்சுற்றில் நவக்கிரகங்கள், சனி, பைரவர், கிழக்கு நோக்கிய தனி சன்னதியில் தான்தோன்றீஸ்வரர் லிங்கத்திருமேனி, தர்மசம்வர்த்தனி, 
காசிலிங்கம், சூரியன் ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன.தலவிருட்சம் வன்னி மரத்தடியில் விநாயகர் உள்ளார். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா உள்ளனர்
மேலும், இக்கோவிலின் வளாகத்தில் ஸ்ரீ விசுவேசர், ஸ்ரீ விசாலாட்சி தனி தனி சன்னதியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றனர்.

இது பூ நிறைந்த ஊராக இருந்தமையால் பூத்துரை என அழைக்கப்பட்டு, பின்னர் மருவி பூந்துறை எனப் பெயர் பெற்று விளங்குகிறது. 
பழமையான ஆலயம் சமீபத்தில் குடமுழுக்கு செய்விக்கப்பட்டு புதுப்பொலிவுடன் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது
6.09.2026
6.9.26 #சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
Check out this review of Pushpavaneswarar Sivan Temple on Google Maps
https://goo.gl/maps/1q9423DS1yRYgGYV7?g_st=ac

சென்னிமலைகைலாசநாதர் பெரியநாயகியம்மன் ஆலயம் 6.09.26

சென்னிமலை
கைலாசநாதர் பெரியநாயகியம்மன் ஆலயம்
சென்னிமலை ஊரின் நடுவில் உள்ள கிழக்குப்பார்த்த ஆலயம்
முன்புறம் மிகப்பழமையான அரச மர விநாயகர், கல் விளக்குத் தூண் உள்ளது
 ராஜகோபுரம் அடுத்து பலிபீடம் கொடிமரம், முன்மண்டபம் அடுத்து உள் மன்டபம் கிழக்கு நோக்கிய கருவரையில் கைலாசநாதர்
கோஷ்ட்டத்தில் விநாயகர் தட்சினா மூர்த்தி லிங்கோத்பவர், பிரும்மா, துர்க்கை மற்றும் சண்டீஸ்வரர்
பிரகாரத்தில் தனித்தனி சன்னதிகளில் விநாயகர் பஞ்சலிங்கங்கள் சுவாமி இடது புறம் தனி சன்னதியில் சுப்பிர மணியர் சன்னதி அடுத்து அம்பாள் பெரியநாயகி தனி ஆலயமாக அமைக்கப்பட்டுள்ளது கல் விளக்குத்தூண் முன்மன்டபம் உள் மண்டம் அடுத்து கிழக்கு நோக்கிய கருவரையில் அம்பாள் அருள்பாலிக்கிறார்கள்.
காலபைரவர் தெற்கு நோக்கிய சன்னதியில் உள்ளார்.
பழமையான ஆலயம் சமீபத்தில் குடமுழுக்கு செய்விக்கப்பட்டு புதுப்பொலிவுடன் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது
6.09.2026
6.9.26 #சுப்ராம்தரிசனம் 
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

Check out this review of Kailasanathar Temple on Google Maps
https://goo.gl/maps/W72MYsTCV8uZ8hJo9?g_st=ac

சென்னிமலைசென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் 6.09.26

சென்னிமலை
சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் 
 தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், சென்னிமலை என்னும் ஊரில் அமைந்துள்ள மலை மீதுள்ள முருகன் கோயிலாகும்.
இந்தியப் புகழ்பெற்ற இந்த கோவிலில் முருகனுக்கு அபிஷேகம் செய்தபின் தயிர் புளிப்பதில்லை என்ற அதிசயமும் நிகழ்கிறது
ஈரோடு - பெருந்துறை சாலையில் அமைந்த இக்கோயில், ஈரோட்டிலிருந்து 30 கி.மீ. தொலைவிலும், பெருந்துறையிலிருந்து 13 கி.மீ. தொலைவிலும், ஈங்கூர் தொடருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் உள்ள சென்னிமலை அருகே உள்ள இச்சிப்பாளையத்தின் மலைக் குன்றின் மீது அமைந்துள்ளது.
மலைக்கு சென்றுவர ஆலய பேருந்து வசதி உள்ளது
மலைப்படி ஆரம்பம் முதல், மலை உச்சிவரை கடம்பனேசுவரர், இடும்பன், வள்ளியம்மன் பாதம், முத்துக்குமாரவாசர் என்ற மலைக்காவலர், ஆற்றுமலை விநாயகர் என்று சிறுசிறு சன்னதிகள் உள்ளன. நீண்ட இலைகளுடன் கூடிய துரட்டி மரம் என்ற மிகப் பழைய மரம் ஒன்று இங்கு மலைப்படி வழியில் உள்ளது. சென்னிமலை முருகன் கோவில் கிபி 9ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது. சென்னிமலை முருகன் கோயிலுக்கு செல்ல 1,320 படிகள் உள்ளன.
ஆலயம் ராஜகோபுரம் முன் கல் விளக்குத்தூண், வேம்பு விநாயகர் பக்தர்கள் தங்கும் கூடம் உள்ளன.

ஆலயம் உட்புறம் பலிபீடம், கொடிமரம் உள்ளது. உயரமான முன் மன்டபம்
உன்மன்டபம் அடுத்து தண்டாயுதபாணி கருவரையில் உள்ளார் கோஷ்ட்டத்தில் நவகிரகங்கள் தனித்தனியே சுற்றிலும் உள்ளார்கள்
சென்னிமலை ஆண்டவர் மூலவர் சிலை சுமார் மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலை இந்த சென்னிமலை முருகன்.
பிரதான முருகன் சன்னதி பிரகாரத்தில் கைலாசநாதர் மற்றும் உமையவள்ளி சன்னதிகள் உண்டு.
மலைக் கோவிலின் பின்புறம் உள்ள படிக்கட்டுகளின் (300 படிகள்) வழியாக சென்றால், தனி ஆலயமாக அமிர்தவள்ளி சுந்தரவள்ளி ( இவர்கள் தவம் செய்து சென்னிமலை ஆண்டவரை மணம் செய்தவர்கள்) கிழக்கு நோக்கி ஒரே கருவரையில் உள்ளனர்
 அதற்குப்பின்னால் சிறிது தூரம் சென்றால், பிண்ணாக்கீசர் சித்தர் குகை உள்ளது. அங்கே பிண்ணாக்கீசர் சித்தர் தவம் செய்த குகையும், பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான அரச மரமும் உள்ளது. இந்த மரத்தடியில் தான் சித்தர் ஐக்கியமானதாக சொல்லப்படுகிறது.
முழுதும் எளிதாக எறிவர சரிவான படிகளும் கூரையும் அமைக்கப்பட்டுள்ளது எளிதாக சென்று தரிசித்தும் வரலாம்.
பகலில் மட்டுமே 5.30 வரை திறந்திருக்கும்
சிறப்புகள்
தேவராய சாமிகள் என்ற முருகபக்தர் இயற்றிய கந்தர் சஷ்டிக்கவசம் என்ற என்ற கவசமாலை இத்தலத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

இத்தலத்தின் குன்றில் இரண்டு காளை மாடுகளைப் பூட்டிய மாட்டு வண்டி ஒன்று இந்த மலைப்படிக்கட்டுகள் வழியே ஏறிச்சென்று மலை உச்சி அடைந்த சம்பவம் இங்கு சமீபத்தில் நடந்துள்ளது.
விழாக்கள்
தைப்பூசத் தேர்த்திருவிழா மற்றும் பங்குனி தேர்த்திருவிழா
செவ்வாய் கிழமை, சஷ்டி திதி, கார்த்திகை நட்சத்திரம், அமாவாசை மற்றும் பௌர்ணமி சிறப்பு பூசை நாட்கள்

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
6.09.2026
6.9.26 #சுப்ராம்தரிசனம் மீள்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

Check out this review of Chennimalai Murugan Temple on Google Maps
https://goo.gl/maps/TZck43YgrYeytMca6?g_st=ac
பின்னாக்குசித்தர்
Check out this review of Pinnaku Siddhar Cave (Jeeva Samathi) on Google Maps
https://goo.gl/maps/QqKPwD8YX1K2j74R9?g_st=ac

பவானி சங்கமேஸ்வரர் ஆலயம் 6.09.26

பவானி
 சங்கமேஸ்வரர் ஆலயம்
பவானி சங்கமேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். ’திருநாணா’ என்றும் அழைக்கப்படுகின்ற இத்தலம் தமிழ்நாடு, (பவானி) என்னும் ஊரில், சேலத்தில் இருந்து 56 கி.மீ. தொலைவிலும், ஈரோட்டில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
கோயில் அமைப்பு
தென் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகின்ற இத்தலம் நான்கு மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளது. பவானி, காவேரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான கூடுதுறையில் உள்ளது. மூன்று ஆறுகளும் கூடுமிடத்தில் உள்ளதால் இக்கோயிலில் சிவன் சங்கமேஸ்வரர் எனப் பெயர் கொண்டுள்ளார். பவானியும் காவிரியும் கூடும் இடத்தில் வடகரையில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்தக் கோயிலுக்கு இரண்டு வாயில்கள் உள்ளன. கோயிலின் முதன்மை கோபுரம் வடக்கு திசையில் 5 நிலைகளையும் 7 கலசங்களையும் கொண்டு அமைந்துள்ளது.
மூலவர், பிற சன்னதிகள்
சுயம்புலிங்க மூலவர் சங்கமேஸ்வரர் ஆவார். இறைவி வேதநாயகி அல்லது வேதாம்பிகை என்றழைக்கப்படுகிறார். இக் கோயிலில் ஆதிகேசவப் பெருமாளுக்கும், நரசிம்மர் மற்றும் சௌந்திரவல்லி தாயாருக்கும் சந்நிதிகள் அமைந்து சைவ, வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்கட்டாக விளங்குகிறது. இறைவியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அதன் வலப்பக்கம் அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ள சுப்பிரமணியர் சந்நிதி உள்ளது. அதற்கடுத்து மூலவர் சன்னதி உள்ளது. அருகில் ஜ்வரஹரேஸ்வரர் திரு உருவம் மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் காணப்படுகிறது. திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்தபோது அவருடைய அடியார்களை சுரநோய் பீடிக்க, இங்குள்ள ஜ்வரஹரேஸ்வரரை வழிபட்டு அவர்கள் நோய் நீங்கப் பெற்றனர் என கூறப்படுகிறது. கோயிலின் தெற்குப் பக்கம் 63 நாயன்மார்கள் திரு உருவங்கள் உள்ளன.
இலந்தை மரம் இக்கோயிலின் தலவிருட்சமாகும். வேதமே மரவடிவெடுத்து வந்திருப்பதாக மரபு. இக்கோயிலில் உள்ள சனீஸ்வர பகவான் சந்நிதி மிகவும் சக்தி வாய்ந்தவர் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. மேலும் இக்கோயிலில் உள்ள அமுதலிங்கம் சிறப்புடையதாகும். லிங்கத்தின் பாணப் பகுதியை எடுத்து இடையில் வைத்துக் கொண்டு ஆவுடையாரை வலம் வர குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு ஏற்படும் என்பதும் மக்களின் நம்பிக்கையாகும்.
எல்லா முக்கிய சன்னதிகளும் கிழக்கு நோக்கியே அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
திருவிழாக்கள்
இங்கு ஆடிப்பதினெட்டில் நீராடுவதை சிறப்பாகக் கருதுகின்றனர். சித்ரா பௌர்ணமி, ரத சப்தமி, சித்திரையில் 13 நாள்கள் திருவிழா போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
சிறப்புகள்
1804 ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் ஆட்சியராக இருந்த வில்லியம் காரோ ஆபத்து வேளையில் தன்னுயிரைக் காப்பாற்றியதற்காக, இக்கோயில் அம்மனுக்குக் காணிக்கையாக அளித்த தந்தக் கட்டில் ஒன்று இங்கு உள்ளது. அதில் அவரது கையொப்பமும் உள்ளது. இச்சம்பவம் நடந்தது 1804ம் வருடம் ஜனவரி மாதம் 11ம் நாள் ஆகும்.
முன்னோர் வழிபாடு பிரார்த்தனை தலமாக விளங்குவதால் கூடுதுறையில் கூட்டம் எப்போதும் உண்டு.
6.09.2026
6.9.26 #சுப்ராம்தரிசனம் மீள்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

Check out this review of Arulmigu Sri Sangameshwarar Temple on Google Maps
https://goo.gl/maps/TPoZbjeeTQUw77q96

பள்ளிப்பாளையம் விஸ்வேஸ்வரர் விசாலாட்சியம்மன் ஆலயம் 6.09.26

பள்ளிப்பாளையம் 
விஸ்வேஸ்வரர் விசாலாட்சியம்மன் ஆலயம்
6.09.26 
தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அக்ரஹாரம் ந ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்
பதினாறாம் நூற்றாண்டுக்கும் முன் அமைத்தவர்: கிருஷ்ண தேவராயர்
இக்கோயில் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கோயில் அமைப்பு
இக்கோயிலில் விஸ்வேஸ்வரர்சுவாமி சன்னதியும், அம்பாள், விநாயகர், பெருமாள், முருகன், சனிபகவான் உபசன்னதிகளும் உள்ளன. 
ஆலயம் அருகில் காவிரியாறு உள்ளது
மேற்குப் பார்த்த சிவன் ஆலயம் சதுரபீடம்
அம்பாள் கிழக்குப்பார்த்த தனி சன்னதி 63வர் பிரகாரத்தில் பெருமாள் ஆஞ்சனேயர் பாலசுப்பிரமணியர்
நவகிரகம் கிழக்கில் மற்றும் பைரவர் சூரியன் சந்திரன் ஆலயம் வடக்கில் சிறிய சந்து வழியில் விநாயகர் திண்டல் முருகன் தனி ஆலயம் தரிசிக்கலாம்  
இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 
பூசைகள் இக்கோயிலில் காமிகாகம முறைப்படி நான்கு காலப் பூசைகள் நடக்கின்றது.
6.09.2026
6.9.26 #சுப்ராம்தரிசனம் மீள்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

Check out this review of Vishweshwarar Temple ஸ்ரீ விஸ்வேஸ்வரர் திருக்கோவில் on Google Maps
https://goo.gl/maps/x17DuqXCPPzqG6aq8

திருச்செங்கோடு கைலாசநாதர் ஆலயம் 6.09.26

திருச்செங்கோடு
கைலாசநாதர் ஆலயம்
ஸ்ரீ கைலாசநாதர் கோவில், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம், இந்த சிவன் கோயில் திருச்செங்கோடு நகரின் மையத்தில் அமைந்துள்ளது.
மூலவர் : ஸ்ரீ கைலாசநாதர்
அம்பாள் : ஸ்ரீ சுகுந்த குந்தளாம்பிகை
இந்தக் கோவிலின் சில முக்கிய அம்சங்கள் இக்கோயில் 5 நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி உள்ளது. ராஜகோபுரத்தின் முன் ஒரு கல் தீபஸ்தம்பம் உள்ளது. திறந்த முக மண்டபத்தின் முன் பலிபீடம், த்வஜஸ்தம்பம், ரிஷபம் ஆகியவை உள்ளன. மூலவர் சுற்று ஆவுடையார் மீது இருக்கிறார். கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை. அர்த்த மண்டபத்தில் உற்சவர், நடராஜர் உள்ளனர்.

முக மண்டபத்தில் 63 வர், நால்வர், விநாயகர், துவாரபாலகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சுப்பிரமணியர் ஆகியோரின் செப்பு சிலைகள் உள்ளன.

பிரஹாரத்தில் விநாயகர், முக்கூட்டு விநாயகர் (வரிசையாக மூன்று விநாயகர்கள்), சப்தமாத்ரிகைகள், விநாயகர், சிவலிங்கம், அம்பாள், 63 வர், வன்னி விநாயகர், சிவலிங்கங்கள், முருகன், சண்டிகேஸ்வரர், பைரவர், நவக்கிரகங்கள், சனிஸ்வரர், சந்திரன், சூரியன், மற்றும் ஒரு முனிவர்.
அம்பாள், பிரதான கோயிலின் இடதுபுறத்தில் உள்ள ஒரு தனி கோயிலில் எழுந்தருளியுள்ளார். அபய வரத ஹஸ்தமத்துடன், அம்பாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.
கட்டிடக்கலை
கோயில் கருவறை, அந்தரளம், அர்த்த மண்டபம் மற்றும் முக மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இக்கோயில் அதிஷ்டானம் முதல் பிரஸ்தாரம் வரை கல்லால் கட்டப்பட்டது. கருவறையில் ஜகதி, மூன்று பட்டா குமுதம், பட்டிகை ஆகியவற்றுடன் பாத பந்த அதிஷ்டானம் உள்ளது. பிட்டி வேதிகாவில் தொடங்குகிறது. பைலஸ்டர்கள் என்பது சதுர அடித்தளம் மற்றும் நாகபந்தம், கலசம், குடம், பலகை, புஷ்ப பொத்தியல் ஆகியவற்றைக் கொண்ட விஷ்ணு காண்ட பைலஸ்டர்கள். பிரஸ்தாரம் நாசி குடுவை மற்றும் வியலாவரியுடன் வலபி மற்றும் கபோதம் கொண்டது. விமானத்தின் மேற்கட்டுமானம் செங்கற்களால் கட்டப்பட்டது. விமானம் வேசர பாணியில் உள்ளது.
சிவன், தட்சிணாமூர்த்தி, மகா விஷ்ணு, பிரம்மா ஆகியோர் தல மற்றும் கிரீவ கோஷ்டத்தில் உள்ளனர்.
முக மண்டபத்தின் முன்பக்கத் தூண்கள், விஜயநகரக் கட்டிடக்கலைக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கும் யாழித் தூண்களைக் கொண்டுள்ளன. ராஜகோபுரத்தின் கூரையில் அழகான புடைப்புச் சிற்பங்கள் உள்ளன.
வரலாறு மற்றும் கல்வெட்டுகள்
அசல் கோயில் 10 முதல் 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் மற்றும் விஜயநகர நாயக்கர் காலத்தில் புனரமைக்கப்பட்டிருக்கலாம்.
சதாசிவ பண்டிதர் எழுதிய கவிதை வடிவில் உள்ள அதிஷ்டானத்தின் தெற்குச் சுவரில் உள்ள கல்வெட்டு சதாசிவ ராயரின் புகழை விவரிக்கிறது

 1989-ஆம் ஆண்டு ஏப்ரல் 10- ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது .
தற்போது ஆலயம் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
பூஜைகள் மற்றும் கொண்டாட்டங்கள்
வழக்கமான பூஜைகள் மட்டுமின்றி, பிரதோசம், மகா சிவராத்திரி, தேய்பிறை அஷ்டமி, விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, பௌர்ணமி, கிருத்திகை, தைப்பூசம், போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
கோவில் நேரங்கள்
கோயில் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கைலாசநாதர் கோயில் திருச்செங்கோடு நகரின் மையத்தில், பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 650 மீட்டர் தொலைவில் உள்ளது.
6.09.2026
6.9.26 #சுப்ராம்தரிசனம் மீள்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

Check out this review of Arulmigu Kailasanathar Temple on Google Maps
https://goo.gl/maps/k3noPUwiPf7ZFwQ37?g_st=ac

திருச்செங்கோடுதிருச்செங்கோடு -அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் 6.09.26

திருச்செங்கோடு
திருச்செங்கோடு -அர்த்தநாரீஸ்வரர்
சிவனின் 64 அவதாரங்களில் ஒன்றான சிவன் மற்றும் பார்வதியின் ஒற்றுமையைக் குறிக்கும் அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் திருச்செங்கோட்டில் உள்ளது.
 தமிழ்நாட்டின் கொங்குப் பகுதியில் உள்ள 7 தேவார ஸ்தலங்களில் நான்காவதாகக் கருதப்படுகிறது .
மலை உச்சியில் அமைந்துள்ள இந்தக் கோயில், பழமையான சுவர்கள், மண்டபங்கள் மற்றும் சிற்பத் தூண்களால் மேலும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. புதுப்பிக்கப்பட்ட ராஜகோபுரமும் சமீபத்தில் கட்டப்பட்டவை. நாககிரி என்ற பெயருக்கேற்ப, இந்த மலையில் 60 அடி நீளமுள்ள ஒரு பாம்பு செதுக்கப்பட்டுள்ளது.
மலைக்கோவில் செங்கோட்டு வேலவன் சன்னதி கிழக்கு நோக்கியும் அர்த்தநாரீஸ்வரர் மேற்கு நோக்கியும் உள்ளனர். அர்த்தநாரீஸ்வரர் சிலை கீழ் பிருங்கி முனிவர் உள்ளார்.
கருவறை மேற்கு திசையை நோக்கியிருந்தாலும், அதன் நுழைவாயில் தெற்கு திசையில் உள்ளது. கருவறையை கம்பீரமான அர்த்தநாரீஸ்வரர் திருவுருவம் அலங்கரிக்கிறது. 
முன் மண்டபத்தில் கிழக்கு நோக்கி தனி பெருமாள் சன்னதியும் பிரகாரத்தில் 63 மூவர் சப்த மாதா முதலியவர்களும் உண்டு.
திருவுருவத்தின் அடிவாரத்தில் தெய்வீகமாகத் தோன்றியதாகக் கூறப்படும் (உளிபாத உருவம்) ஒரு நீரூற்று உள்ளது. இங்கு பராந்தக சோழன் கங்கைகொண்ட சோழன், விஜயநகர மற்றும் மைசூர் மன்னர்கள் மற்றும் நாயக்கர்களின் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் உள்ளன.
இந்தக் கோயிலின் உற்சவமூர்த்தி அமெரிக்காவின் ஓஹியோவில் உள்ள கிளீவ்லேண்ட் கலை அருங்காட்சியகத்தில் உள்ளது. 

பிரதான கோயில் அமைந்துள்ள மலையின் உச்சியில் மிக உயரமான இடத்தில், உச்சிப் பிள்ளையார் கோயில் என்றழைக்கப்படும் விநாயகர் கோயில் ஒன்றும் அமைந்துள்ளது.
உடன் பயணிப்பவர்களின் துன்பத்தைப் போக்க உதவும் பொருட்டு, சம்பந்தர் இங்கு திருநீலகண்டபதிகத்தை இயற்றினார். 

திருச்செங்கோட்டின் மற்றொரு புகழ்பெற்ற கோயிலான கைலாசநாதர் கோயில், மலையடிவாரத்தில் உள்ளது.

திருச்செங்கோட்டின் முக்கியத் திருவிழா, வைகாசி விசாகம் என அழைக்கப்படும் அர்த்தநாரீஸ்வரர் தேரோட்டம் ஆகும் (இது தமிழ் மாதமான வைகாசியில் கொண்டாடப்படுகிறது). செங்கோட்டுவேலவர், அர்த்தநாரீஸ்வரர் மற்றும் பல சிறு தெய்வங்களை ஏற்றிச் செல்லும் தனித்தனி தேர்களுடன், இத்திருவிழா 15 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா அருகிலுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது.
இங்கு இரவு நேர வழிபாட்டு சேவை (அர்த்த ஜாம பூஜை) முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அமாவாசை நாட்களும் சிறப்பு வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.

மலைக்கோவில் செல்ல ஆலய பேருந்து வசதி உள்ளது சிறு வாகனங்கள் மட்டும் கட்டனத்துடன் மலைக்கு அனுமதி வேன் பஸ் அனுமதி கிடையாது
மலைக் கோவில் மேல் வேறு எந்தக் கடைகள் வீடுகள் கட்டிடங்கள் கிடையாது
6.09.2026
6.9.26 #சுப்ராம்தரிசனம் மீள்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
Check out this review of Arulmigu Thiru Ardhanareeswarar Temple Tiruchengode on Google Maps
https://goo.gl/maps/F4xeKmk3FAoynPhE8

காங்கேயம்காசிவிஸ்வநாதர் விசாலாட்சியம்மன் ஆலயம் 5.09.26

காங்கேயம்
காசிவிஸ்வநாதர் விசாலாட்சியம்மன் ஆலயம் வள்ளி தெய்வானை சுப்பிரமணியர் நடுவில் சோமஸ்கந்தர் அமைப்பு ஆலயம்.
ஊரின் பிரதான சாலையில் உள்ளது
நுழைவு ராஜகோபுரம் தென்புறம் அமைந்துள்ளது ஆலயம் கிழக்கு நோக்கிய அமைப்பு . முன்புறம் ஆழமான குளம். சுடுகாடு பின்னாள் இருக்கிறது புராதான காசிஅமைப்பில் அமைந்துள்ளதால் காசிதரிசன பலன் உண்டு என்கிறார்கள். வேறு எங்கும் இல்லாத வகையில் தனியார் முயற்சியில் குளக்கரை சுற்றி புதிய அமைப்பாக 63 நாயன்மார்கள் வரலாற்று கற்சிறப்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது; அருமையாக உள்ளது.
ஆலயம் புதிய முறையில் சீர்படுத்தி குடமுழுக்கும் செய்து உள்ளார்கள். பொலிவுடனும் நல்ல வழிபாடுகளுடனும் உள்ளது.
5.09.2026
5.9.26 #சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
Check out this review of Eswaran Kovil on Google Maps
https://goo.gl/maps/wXNQb6SdRUVRZ2j1A

வளவநல்லூர் தான்தோன்றீஸ்வரர் ஆலயம்வளவநல்லூர் காங்கேயம், திருப்பூர் மாவட்டம் 5.09.26

வளவநல்லூர் 
தான்தோன்றீஸ்வரர் ஆலயம்
வளவநல்லூர் காங்கேயம், திருப்பூர் மாவட்டம்
காங்கேயம் செல்லும் பிரதான வழியில் ஊதியூருக்கும் வட்டமலைக்கும் இடையில் உள்ளது பிரதான சாலையில் இருந்து மேற்கில் 2 கி.மீ. தூரத்தில் உள்ள சிற்றூரில் உள்ள ஆலயம் 
இங்கு கிழக்குப் பார்த்த பழமையான ஆலயம் தான்தோன்றீஸ்வரர் ஆலயம் தற்போது முழுவதும் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் ஆலயம் அமைந்துள்ளது
ராஜகோபுரம் பதிலாக காட்சிக் கோபுரத்துடன் முழுமையான சுற்றுச்சுவர்களுடன் அமைந்துள்ள ஆலயம் சுவாமி முன் உயர அமைப்புள்ள மண்டபத்தில் நந்தி உள்ளார்.
கிழக்கு நோக்கிய கருவரையில் சுவாமி தான் தோன்றீஸ்வரர் தனி முன்மண்டபம் கருவரையில் உள்ளார். 
சமயக்குரவர்கள் மற்றும் சந்தானக் குடவர்கள் வடக்கு நோக்கியும் சுவாமி கருவரை இருபுறமும் விநாயகர், முருகர் தனிதனியாகவும் முன் மண்டபத்தில் உள்ளார். 
அம்பாள் தையல்நாயகியம்மன் இடதுபுறம் கிழக்கு நோக்கி தனி முன்மண்டபத்துடன் கருவரையில் உள்ளார்.
நடுவில் முருகன் கருவரை சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. 
5.09.2026
5.9.26 #சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
Check out this review of Sri Thanthondreeswarar Sivan Temple on Google Maps
https://goo.gl/maps/m5oKUD3gK7Gfi6Rp6?g_st=ac


குண்டடம் கொங்குவடுகநாதர் ஆலயம் 5.09.26

குண்டடம்
  கொங்குவடுகநாதர் ஆலயம்
எட்டு பிராகாரங்களுடன், எட்டுத் தெப்பக்குளங்களுடன் பிரமாண்டமாக இந்தக் குண்டடம் ஆலயம் அமைந்திருந்ததாக புராணங்கள் சொல்கின்றன. அவையெல்லாம் எங்கே போயின என்பது காலச்சக்கரத்தைச் சுழற்றும் கால பைரவருக்கே வெளிச்சம்!
வடுகபைரவர், சுவாமி விடங்தீஸ்வரர், அம்பாள் விசாலாட்சி கிழக்கு நோக்கிய ஆலயம் 
ஆலயத்தின் எதிரில் அழகுற அமைந்திருக்கிறது திருக்குளம். நடுவில் அழகிய மண்டபம். அங்கே ஒரு நந்தி. கொஞ்சம் நடந்தால் பழமையான விளக்குத்தூண் காட்சியளிக்கிறது. அதில் விநாயகர், திரிசூலம், லிங்கத்தின் மேல் பால் சுரக்கும் பசு போன்ற வடிவங்கள் பளி்ச்சிடுகிறது.

ராஜகோபுரத்திற்குத் தலைவணங்கி உள்ளே நுழைந்து பிராகாரத்தை வலம் வரலாம். சூரியன், சந்திரன், நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, பட்டக்காரர், வரதராஜ பெருமாள், சனீஸ்வரர், நவகிரக நாயகர்கள் ஆகியோரைக் காணலாம். நந்தவனத்தில் மரங்கள் அசைந்தாடுகின்றன.
இக்கோயிலில் மூலவராக விடங்கீஸ்வரர்கிழக்கு நோக்கியும் அவருக்கு முன், உபசன்னதியாக கால பைரவரும் (வடுகநாத சுவாமி) தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர்.

இங்கே முருகப் பெருமானின் வாகனமான மயிலின் தலை, வழக்கத்துக்கு மாறாக, இடதுபக்கம் நோக்கி அமைந்திருக்கிறது. சூரசம்ஹாரத்திற்கு முன்பு, இந்திரன் மயிலாக இருந்து போருக்குச் சென்ற வடிவம்.

தனித்தனி கோயில்களில் விசாலாட்சி அம்மனும், விடங்கீஸ்வரரும் அருள்பாலிக்கிறார்கள். காசி விசாலாட்சியும், காசி விஸ்வநாதருமே இவர்கள். முனிவருக்காக பைரவரை அனுப்பியவர்கள் இவர்கள்தான் என்று நினைக்கும்போது நெஞ்சம் நெகிழ்கிறது.

அடுத்ததாய், இந்த ஆலயத்தின் கதாநாயகனான கால பைரவ வடுகநாதரின் சன்னதி. காசியிலிருந்து வந்தவர் இங்கேயே தங்கி, இங்கே லீலைகளைப் புரிந்து கொண்டிருக்கிறார். தேய்பிறை அஷ்டமி தினங்களில் கால பைரவருக்கு அபிஷேக ஆராதனைகள் மிகச் சிறப்பாக நடைபெறுகினறன.
பைரவர், சுவாமி கருவரை முன் மண்டபத் தூணில் கருவில் உள்ள குழந்தை வளர்ச்சியை படிப்படியாகக் காட்டும் சிற்பம் கவனிக்கத்தக்கது
வெளி நுழைவு மண்டபத்தில் ஆலயதல வரலாற்றை விளக்கும் ஓவியங்கள் மிகவும் அழகாக வைத்துள்ளனர்.
சமீபத்தில் குடமுழுக்கு செய்யப்பட்டிருப்பதால், ஆலயம் மிகவும் சுத்தமாகவும் மிக அழகாகவும் உள்ளது
அமைவிடம்
குண்டடத்தில் உள்ள கால பைரவர் கோயில் (கொங்கு வடுகநாத சுவாமி கோயில்) தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்தில் உள்ள குண்டடம் என்னும் ஊரில் அமைந்துள்ளது.
கோவை - மதுரை நெடுஞ்சாலையில் பல்லடத்திற்கும் தாராபுரத்திற்கும் நடுவில் அமைந்துள்ளது.
5.09.2026
5.9.26 #சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
Check out this review of Kongu Vadukanatha Swamy Temple, Kundadam on Google Maps
https://goo.gl/maps/SXVRM96EQMRBY8vJA?g_st=ac


Tuesday, September 15, 2026

தாராபுரம் அகத்தீஸ்வரர் ஆலயம் - தாராபுரம் அகத்தீஸ்வரர் ஆலயம்விடாராபுரம் - தாராபுரம் - வைப்புத்தலம்தாராபுரம் அகஸ்தீஸ்வர சுவாமி கோயில் 5.09.26

தாராபுரம் 
அகத்தீஸ்வரர் ஆலயம்

விடாராபுரம் - தாராபுரம் - வைப்புத்தலம்
தாராபுரம் அகஸ்தீஸ்வர சுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.
இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.
கோயில் அமைப்பு
இக்கோயிலில் அகஸ்தீஸ்வரர் சுவாமி, அகிலாண்டேஸ்வரி சன்னதிகளும், சனீஸ்வரர், காசி விஸ்வநாதர், விநாயகர், பாலதண்டாயுதபானி, பைரவர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் கோசாலை உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.

பூசைகள்
இக்கோயிலில் காமிகாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மாசி, மார்கழி, ஆணி, புரட்டாசி, ஐப்பசி, ஆடி, மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது.
தாராபுரம் அகஸ்தீஸ்வரர் கோவில் வரலாறு:-
பராந்தசுபுரம் என்றும் இராஜபுரம் என்றும் விராடபுரம் என்றும் பெயர்கொண்டு விளங்கும் தாராபுரம் நகர் சரித்திர புகழ் பெற்ற ஸ்தலமாகும். இந்நகரில் அமராவதி நதிக்கரையில் (ஆண் பொருணை நதி) கோவில் கொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் ஆவார்.
 முன்பு ஒரு காலத்தில் பார்வதி தேவியார் திருமண நாளில் பிரம்மா, திருமால் முப்பத்தி முக்கோடி தேவர்கள்
முதல் யாவரும் மேரு மலையில் ஒன்று சேர்ந்தார்கள். சுமை ஏறிய மேரு மலையின்; வடதிசை இறங்கியது. இதனால் தென்புலி மேல் எழுந்தது. பூமியை சமநிலை ஆக்க சிவபெருமான் அகஸ்தியரை தென் மலையான பொதிகைக்கு செல்லுமாறு கட்டளையிட்டார். அகஸ்தியரும் பொதிகை மலை செல்லும் வழியில் உள்ள கொங்கு நாடான தாராபுரத்தில் அமராவதி நதிக்கரையில் தங்கினார்.

தினசரி ஒவ்வொரு நாளும் ஆர்மாத்த பூஜையை தங்கும் ஊர்களில் நடத்தி வந்தார். அச்சமயத்தில் அமராவதி ஆற்றங்கரையில் தன்னுடைய பூஜைக்கு உரிய சிவலிங்கத்தை காசியில் இருந்து சீடர்கள் கொண்டு வருவதற்கு தாமதம் ஏற்பட்டு விட்டதால் சிவ பூஜையை முடிக்க தன்னுடைய திருக்கரங்களால் அமராவதி புனித நீரின் மணலை பிடித்து வைத்து பூஜித்தார். ஆகவே அதற்கு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் என பெயர் வர காரணமாயிற்று. மேலும் தனது சீடர்கள் காசியில் இருந்து லிங்கத்தை தாமதமாக எடுத்து வந்ததால் இவர் பிடித்து வைத்த லிங்கமே மூலஸ்தானம் ஆகியது. சீடர்கள் கொண்டு வந்த லிங்கம் வலது பக்கம் காசி விஸ்வநாதர் என்ற பெயரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது

மேலும் மகாபாரத புராண கதையில் அஞ்ஞான வாசம் பாண்டவர்கள் இவ்வூரில் தங்கி வழிபட்டனர். இத்திருக்கோயிலானது மூர்த்தி தீர்த்தம் ஸ்தலம் ஒருங்கே அமைந்தது.

இக்கோவிலை புத்தூர் திருமலைசாமி பகவான் போன்றோர் வழிபட்டுள்ளனர். இக்கோவிலின் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் மனம் உருகி பிரார்த்தனை செய்தால் திருமண தடை, வேலைவாய்ப்பு, புத்திர தோஷம் மற்றும் சித்த பிரமை தோஷம் நிவர்த்தி ஆகும். சுகல ஷேமங்களும் பெறுவார்கள். புண்ணிய நதியாகிய அமராவதியல் நீராடி தரிசனம் செய்தால் சகல நன்மைகளும் அடைவர்.
5.09.2026 
5.9.26 #சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

https://www.facebook.com/share/p/1ByLj8aQh8/

Check out this review of Easwaran Temple on Google Maps
https://goo.gl/maps/vwCZ2JjKtj8unKLB6?g_st=ac
Check out this review of Easwaran Temple on Google Maps
https://goo.gl/maps/66XhwcPnpn9s955j9

https://www.youtube.com/@Subbram.ARUNACHALAM




கோதைமங்கலம் பெரியவுடையார் ஆலயம் 5.09.2026

கோதைமங்கலம் 
பெரியவுடையார் ஆலயம்
🌺#திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கு அருகில் சண்முக நதிக்கரையில் அமைந்துள்ள கோதைமங்கலம் அருள்மிகு பெரிய ஆவுடையார் (பெருவுடையார்) திருக்கோவில் மிகவும் தொன்மை வாய்ந்த சிவத்தலமாகும்.🌺

🌺#அமைவிடம் & பஸ் வசதி
அமைவிடம்: பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில், சண்முக நதிக்கரையில் கோதைமங்கலம் பகுதியில் இயற்கை சூழலில் அமைந்துள்ளது 🌺

🌺#தலவரலாறு & சிறப்புகள்
சுயம்பு லிங்கம்: மூலவர்
#பெரியஆவுடையார் (பிரகதீஸ்வரர்/பெருவுடையார்) ஒரு சுயம்பு லிங்க மூர்த்தியாக வழிபடப்படுகிறார். 🌺

🌺#போகர் காலத்திற்கு முந்தைய தலம்: நவபாஷாண முருகர் சிலையை பிரதிஷ்டை செய்த போகர் சித்தரின் காலத்திற்கும் முற்பட்ட பழமையான வரலாற்றைக் கொண்ட தலமாக இது கருதப்படுகிறது. 🌺

🌺#பழனி தேவஸ்தான நிர்வாகம்: இக்கோவில் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தேவஸ்தானத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. 🌺

🌺#கல்வெட்டுகள் & சிற்பங்கள்: சோழர் மற்றும் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த 16-க்கும் மேற்பட்ட பழமையான கல்வெட்டுகளும்,
கோஷ்ட்டத்தில் தனி பிரும்மா பெருமாள் தட்சிணாமூர்த்தி சிற்பம் குருந்தமரம் அழகிய அமைப்பு, தனி ருத்ரன் உள்ளிட்ட அழகிய மிக அழகிய கற்சிற்பங்களும் இங்கு அமையப்பெற்றுள்ளன. 🌺
மேற்குப்பார்த்த ஆலயம்

🌺நடராஜர் பெருமானின் சிற்ப அழகு சிறப்புகள் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு நடராஜர் பெருமான், சிவகாமசுந்தரி அம்பாளுடன் ஆனந்த தாண்டவக் கோலத்தில் காட்சியளிக்கிறார். 🌺

🌺#ஆருத்ரா தரிசனம், மார்கழி திருவாதிரை மற்றும் மகா சிவராத்திரி நாட்களில் நடராஜர் பெருமானுக்கு 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் வெகு விமரிசையாக நடைபெறும். 🌺

🌺இத்தல #நடராஜரை வணங்கினால் கலைகள் சிறக்கும், மன அமைதியும் குடும்பத்தில் சுபிட்சமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 🌺

🌺(#பிரதோஷம், சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம் போன்ற விசேஷ நாட்களில் நடை கூடுதல் நேரம் திறந்திருக்கும்).🌺

🌺பஸ் வசதி: #பழனி பேருந்து 🌺நிலையத்திலிருந்து பழைய தாராபுரம் / மானூர் செல்லும் நகரப் பேருந்துகளில் (Town Bus) ஏறி 3 கி.மீ பயணித்து, கோவில் நுழைவு வளைவில் இறங்கி 1 கி.மீ நடைபயணமாகவோ அல்லது ஆட்டோ மூலமாகவோ கோவிலை அடையலாம். பழனி பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்திலிருந்து ஆட்டோ/டாக்ஸி வசதிகள் நேரடியாக உள்ளன.🌺

🌺தரிசன & நடை திறப்பு நேரம் 🌺
🌺#காலை: 8 முதல் மாலை 6 🌺 வரை🌺

இறைவன் / இறைவி: இங்குள்ள இறைவன் பெருவுடையார் (பெரிய ஆவுடையார்) என்றும், இறைவி அண்ணாமலை உண்ணாமுலை நாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர். அமைப்பு: இது சண்முக நதிக்கரையின் இயற்கைச் சூழலில் அமைந்த ஒரு சிறப்பான சிவாலயமாகும்
5.09.2026 மீள் தரிசனம்
5.9.26 #சுப்ராம்தரிசனம் மீள்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

Check out this review of Periya Aavudayaar Temple on Google Maps
https://goo.gl/maps/E9XpRGjvUjNatBRC8

பழனிபெரியநாயகி (சோமஸ்கந்தர்) கைலாசநாதர் ஆலயம் 5.09.2026

பழனி
பெரியநாயகி (சோமஸ்கந்தர்) கைலாசநாதர் ஆலயம்

கைலாசநாதர் சோமஸ்கந்தர் (வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர்) பெரிய நாயகியம்மன்
ஆலயம் - பழனி
கிழக்குப்பார்த்த சன்னதிகள் கொண்ட கற்றளி ஆலயம்
நடுவில் சோமஸ்கந்தர் - சுப்பிரமணியர் இருபுறமும் சுவாமி கைலாச நாதரும், பெரிய நாயகியம்மனும் உள்ளார்கள்
சுப்பிரமணியர் சன்னதிக்கு நேர் எதிரில் உள் நுழைவு சிதைந்து விட்ட ராஜகோபுரம் உள்ளது.
கைலாசநாதர் சன்னதிக்கு முன்பாக பலிபீடம் முன் மண்டபம் உள் மன்டபம் மற்றும் சுவாமி கருவரை உள்ளது 
இது போல சோமஸ்கந்தர் -சுப்பிரமணியர்- சன்னதிக்குமுன் மயில்வாகனம், மண்டபங்கள் தாண்டி தனிக் கருவரையில்
 முருகப்பெருமான் அருள் பாலிக்கிறார். 
அடுத்து பெரியநாயகியம்மனுக்கும் அடுத்தடுத்த மண்டபங்களும் தனிக் கருவரையில் அம்மனும் அருள் பாலிக்கின்றார்கள்
இதை அடுத்து முத்துக் குமரசாமி - உற்சவர் மண்டபம் - கிழக்கு நோக்கி தனியாக அமைந்துள்ளது.
ஆலயம் நுழைவு கல் மண்டபத்தில் அற்புத சிலைகள் உண்டு
ராஜகோபுரம் மேல் பகுதிகள் சிதைந்து விட்டன. முன்மன்டம் முன் கல்விளக்குத்தூன்
பிரதான வாசல் சுப்பிரமணியர் நேர் வாசல் உள்ளது

எல்லா சன்னதிகளும் கிழக்கு நோக்கிய அமைப்பில் உள்ளன.
பிரகாரத்தில் தட்சினாமூர்த்தி
மேற்குபுறம் தலமரம் மற்றும் பைரவர் சன்னதிகளும் உண்டு.

ஆலயம் முன் பெரிய மண்டபம் அழகிய சிற்பங்களுடன் உள்ளது.

காலை முதல் தொடர்ந்து ஆலயம் திறந்து இருக்கும்.
ஆலயம் அமைதியாகவும் தரிசன பலன் கிட்டுமாறும் அமைந்துள்ளது
மதியம் நடை சாத்தப்படுவதில்லை
5.09.2026 மீள் தரிசனம்
5.9.26 #சுப்ராம்தரிசனம் மீள்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

Check out this review of Arulmiku Periya Nayaki Amman Temple (Oorambalam) on Google Maps
https://goo.gl/maps/9EhXAzjbwXGnszYR6?g_st=ac


திருஆவினன்குடிதிருவாவினன்குடி முருகன் கோவில் 5.09.2026

திருஆவினன்குடி
திருவாவினன்குடி முருகன் கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில், மூன்றாம் படை வீடாகத் திகழ்கின்றது. இது பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோயில், குழந்தை வேலாயுத சுவாமி கோயில் என அழைக்கப்படுகிறது. சங்ககாலப் புலவரான நக்கீரரும், பிற்காலத்தவரான அருணகிரிநாதரும் திருவாவினன்குடி முருகனைக் குறித்துப் பாடல்கள் பாடியுள்ளனர். அகத்தியர் இங்குத் தவம் புரிந்து முருகனிடம் தமிழிலக்கணம் பயின்றதாகப் புராணங்கள் கூறுகின்றன
அறுபடை வீடுகளில் சிறப்பாக கொண்டாடப்படும் பங்குனி உத்திரத் திருவிழா, திருவாவினன்குடி திருத்தலத்திலே கொடியேற்றத்துடன், திருக்கல்யாணம் மற்றும் தேர் வடம் பிடித்தல் போன்ற நிகழ்ச்சிகள் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தேவஸ்தானத்தால் நடத்தப்படுகின்றன.
பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்த குழந்தை வேலாயுத சுவாமி கோயில் அறுபடை வீடுகளில் ஒன்று, இதுவே திருவாவினன்குடி மூன்றாம் படைவீடு ஆகும். பலரால் மலை மீதுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலே அறுபடை வீடுகளில் ஒன்று என்று தவறாக எண்ணப்படுகிறது. சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டின் முதல் நூலான திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடுவது ஆவினன்குடியே ஆகும். “தா இல் கொள்கை மடந்தையொடு சில் நாள் ஆவினன்குடி அசைதலும் உரியன்” என்று திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடுகிறார். முருகன் ஆண்டிக்கோலத்தில் இருப்பதாக நக்கீரர் சொல்லவில்லை. வருத்தமே இல்லாத வள்ளியோடு சில நாட்கள் முருகன் தங்கியிருந்து இயங்கிய ஆவினன்குடி என்பது அதன் பொருள். ஆகையால் நக்கீரர் குறிப்பிடும் கோயிலும் இன்று கொண்டாடப்படும் பழனிமலைக் கோயிலும் வேறு வேறு. நக்கீரருக்குப் பிறகு வந்த போகர் உருவாக்கியதுதான் பழனியாண்டவர் மலைக்கோயில்.

வையாவி கோப்பெரும் பேகன் என்று அழைக்கப்படும் கடையெழு வள்ளல்களில் ஒருவரான மயிலுக்குப் போர்வை தந்த பேகன் பிறந்த குடிக்குப் பெயர் ஆவியர்குடி. அந்தக் குடி அமர்ந்து அரசு புரிந்த இடம் தான் ஆவினன்குடி.

திருப்பணிகள்
பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோவிலை நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் மறு கட்டுமானம் செய்தும், புதிதாக மண்டபங்கள், பிரகாரம், ராஜ கோபுரம் அமைத்தும் பெரிய கற்றளியாக எழுப்பியுள்ளனர். 1919 சூன் 26 இல் குடமுழுக்கு இடம்பெற்றது.
முறையான பராமரிப்பில் உள்ள ஆலயம்
2026 ம் ஆண்டில் புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
மேற்குப்பார்த்த ஆலய அமைப்பு ராஜகோபுரம் முன் மயில்வாகணம்
பிராகாரத்தில் ஒரு புறம் அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் தனித்தனி சன்னதிகள் மறுபுறம் சொக்கநாதர் மீனாட்சியம்மன் தனித்தனி சன்னதிகள்
மேலும் துர்க்கை விநாயகர் அமைத்துள்ளர் முன்மன்டபம் அடுத்து உள் மண்டபமும் கருவரையில் குழந்தை வேலாயுதனாரும் உள்ளனர் கோஷ்ட்ட பிரகாரத்தில் துர்க்கை சண்டிகேஸ்வரர் தட்சினாமூர்த்தி உள்ளனர்
ஆலயம் நகரத்தார் திருப்பணி சிறப்பானது.
பத்தர்கள் கூட்டடம் இருந்து கொண்டு இருந்தாலும், பூசைகள் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
திருஆவினன்குடி திரு என்ற இலக்குமி தேவியும், ஆ என்ற காமதேனுவும், இனன் என்ற சூரிய பகவானும், இத்தலத்து முருகப்பெருமானை வழிபட்டமையால் திருஆஇனன்குடி என்று பெயா் பெற்றதாக சொல்லப்படுகிறது.

சங்க காலத்தில் இந்த ஊர் திருவாவினன்குடி என்றே அழைக்கப்பட்டதாகவும், மாம்பழத்திற்காக கோபம் கொண்டு வந்தமர்ந்த முருகப்பெருமானை சிவனும், பார்வதியும், இத்திருத்தலத்திற்கு வந்து ஞானப் "பழம் நீ" என்று முருகனுக்கு சூட்டிய பெயரே, நாளடைவில் மருவி பழநி என்று ஊர் பெயர் வர காரணமானதாக தல புராணம் கூறுகின்றது.
அமைவிடம்
இத்திருத்தலம் பழநி மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில், பழநி மலை அடிவாரத்தில் வையாபுரி ஏரிக்கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலின் வடகிழக்கு திசையில் சரவணப் பொய்கை உள்ளது. இத்தலத்தில் உள்ள பெருமானை வழிபட்ட பின்னரே, மலைக்கோவிலுக்கு சென்று தண்டாயுதபாணித் தெய்வத்தை வழிபடுவது மரபு.

மூன்றாம் படைவீடு விளக்கம்
மூன்றாம் படைவீடு என்பது பழநி மலைக்கோவிலா அல்லது திருவாவினன்குடி திருத்தலமா என்பதில் பலருக்கும் மிகப்பெரிய சந்தேகம் உள்ளது.

திருவாவினன்குடி கோவிலையே நக்கீரர் பெருமான், திருமுருகாற்றுப்படையிலே முருகனின் மூன்றாம் படைவீடாக

"தாஇல் கொள்கை மடந்தையொடு சில்நாள் ஆவி னன்குடி அசைதலும் உரியன்: அதாஅன்று"

அதாவது, குற்றம் இல்லாத கோட்பாடுடன், யாவர்க்கும் நன்மையே விளைவிக்கும் உயர்ந்த கொள்கை உடைய தன் துணைவியோடு சிலகாலம் ஆவினன்குடியில் தங்கியிருப்பதற்கு உரிமை உடையவன் என்று போற்றி பாடியுள்ளார் என்பதாக சொல்லப்படுகிறது.

கோபம் கொண்டு வந்து அமர்ந்த இடமான பழநி மலைக்கோவிலில் தண்டாயுதபாணித் தெய்வமாகவும், திருவாவினன்குடி திருத்தலத்தில் மயில் மீது அமர்ந்த குழந்தை வேலாயுத சுவாமியாகவும் காட்சியளிக்கிறார். சங்க காலத்தில் இந்த இரண்டு திருத்தலங்களையும் சேர்த்தே இந்த ஊரின் பெயர் திருவாவினன்குடி என்று இருந்ததாக புராணங்கள் சொல்கின்றன.

ஆக நக்கீரர் பெருமகனார் பாடிய திருத்தலம் பழநி மலைக்கோவில் மற்றும் திருவாவினன்குடி கோவில் இரண்டையும் உள்ளடக்கிய ஒரு தலமாகவே கொள்ளலாம். எனவே மலைக்கோவில் மற்றும் திருவாவினன்குடி திருத்தலம் இரண்டையுமே மூன்றாம் படைவீடாகக் கொள்ள வேண்டும்.

ஆனால் சிலகாலம் முன்பு வரை இக்கோவிலின் சன்னதிக்கு வெளியே மூன்றாம் படைவீடு என்ற பெயர்ப் பலகை வைக்கப்பட்டிருந்தது. காலப்போக்கில் அப்பெயர்ப்பலகை நீக்கப்பட்டுவிட்டது. இன்றும் பழநி மலை அடிவாரத்தில் படிக்கட்டு நடைபாதை முடிந்து வெளியே வரும் இடத்தில் அரசாங்கத்தால் மூன்றாம் படைவீடு திருவாவினன்குடி செல்லும் வழி என்று வழிகாட்டும் பலகை வைக்கப்பட்டுள்ளது

அறுபடை வீடுகளில் சிறப்பாக கொண்டாடப்படும் பங்குனி உத்திரத் திருவிழா, திருவாவினன்குடி திருத்தலத்திலே கொடியேற்றத்துடன், திருக்கல்யாணம் மற்றும் தேர் வடம் பிடித்தல் போன்ற நிகழ்ச்சிகள் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தேவஸ்தானத்தால் நடத்தப்படுகின்றன

பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோவிலை நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் மறு கட்டுமானம் செய்தும், புதிதாக மண்டபங்கள், பிரகாரம், ராஜ கோபுரம் அமைத்தும் பெரிய கற்றளியாக எழுப்பியுள்ளனர். 1919 சூன் 26 இல் குடமுழுக்கு இடம்பெற்றது.

அருணகிரியால் திருப்புகழ்பாடப்பெற்றதலம்

பழனி மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் முதலில் திருஆவினன்குடி கோயிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம்.
இது பழமையான கோயில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு முன்பே தோன்றியதாக நம்பப்படுகிறது.

இங்குள்ள முருகப்பெருமான் குழந்தை வேலாயுதசுவாமி என்று அழைக்கப்படுகிறார்.

பழனி மலைக்கோயிலின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.

சங்க காலத்தில் இந்த ஊர் திருஆவினன்குடி என்று அழைக்கப்பட்டது.

அகத்தியர் இங்கு தவம் செய்து முருகனிடம் தமிழ் இலக்கணம் கற்றதாக புராணங்கள் கூறுகின்றன.

குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்த தகவல்கள் திருஆவினன்குடி கோயிலின் முக்கியத்துவத்தையும் வரலாற்று சிறப்பையும் விளக்குகின்றன.
நன்றி 🙏வலைதளம்🌐
#மீள் தரிசனம் 14.09.25 மற்றும் 
5.9.26 #சுப்ராம்தரிசனம் மீள்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் 5.9.26

ப ழ னி
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் 
🏵️முருகனது சிறப்புடைய கோவில்களில் ஒன்றாகும். தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இக்கோயில் இயங்குகிறது.

🏵️இங்குள்ள முருகன் சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. முருகனது கோவில் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது. இது முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றாகும்.

🏵️புராணம்
ஒருநாள் நாரதர் மிக அரிதாகக் கிடைத்த ஞானப்பழத்தைப் பரமசிவனுக்கு படைப்பதற்காகக் கொண்டு வந்தார். அப்பொழுது அருகிலிருந்த உமையாள் அந்தப் பழத்தைத் தன் குமாரர்களான குமரனுக்கும், விநாயகனுக்கும் பகிர்ந்து கொடுக்க விரும்பினாள். ஆனால் பரமசிவனோ பழத்தைப் பகிர்ந்தால் அதன் தனித்தன்மை போய்விடும் எனக்கூறித் தன் மைந்தர்கள் இருவருக்கும் ஒரு போட்டியை அறிவித்தார் அதில் உலகத்தை யார் முதலில் சுற்றிவருகிறார்களோ அவர்களுக்கே அந்த ஞானப்பழம் பரிசாகக் கிடைக்கும் என அறிவித்தார். குமரனோ தனது மயில் வாகனத்தில் ஏறிச் சுழலும் உலகத்தைச் சுற்றி வந்தார். விநாயகனோ தன் பெற்றோரை உலகமாகக் கருதி அவர்களைச் சுற்றிவந்து ஞானப்பழத்தை வென்றார். இதனால் ஏமாற்றமடைந்த குமரன் அனைத்தையும் துறந்து பழனி மலையில் குடியேறினார். அன்றிலிருந்து அவர் நின்ற இடம் "பழம் நீ " (பழனி) என அழைக்கப்படுகிறது.
பழனிமலை அங்கே வருவதற்கு உதவியவர் இடும்பன். அவர் ஒரு பெரிய தராசின் உதவிகொண்டு பழனிமலையையும் இடும்பமலையையும் தூக்கிக்கொண்டு வந்து வைத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.

🏵️புராணங்களில் இப்படியான பெயர்க் காரணங்கள் வழங்கப்பட்டாலும் பழனம் என்ற பழந்தமிழ்ச் சொல்லின் அடிப்படையில் உருவான பெயரே பழனி. பழனம் என்ற சொல் விளைச்சலைத் தருகின்ற நிலத்தைக் குறிக்கும். அப்படிப்பட்ட நல்ல விளைச்சல் நிலம் நிறைந்த பகுதி என்பதால் பழனி என்ற பெயர் உருவானது.
🏵️முருகன் சிலையின் சிறப்பு
முருகனின் சிலை நவபாசாணத்தால், சித்தர்களில் ஒருவரான போகரால் வடிவமைக்கப்பட்டது. நவபாசாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த நவபாசாண சிலை மீன்களைப் போன்ற செதில்களைக் கொண்டதாகக் கூறப்படுகிறது. தற்பொழுது இந்தச் சிலை சிறிது பழுதுபட்டுள்ளது. இரவில் இந்தச் சிலையின் மீது முழுவதுமாகச் சந்தனம் பூசப்பட்டு (சந்தனக்காப்பு) காலையில் விசுவரூப தரிசனம் காணும் அனைத்து அடியவர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது மிகச்சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது.
🏵️போகர் வரலாறு 
போகர் தமிழ் நாட்டிலுள்ள பிரபலமான சித்தராவார். இவர் நவபாஷாண முருகன் சிலையைச் செய்ததே மிகச்சுவையான தகவலாகும். அகத்தியர் தன்னை நாடி வருவோர்க்கு பஸ்பம், வில்லை போன்ற மருந்துகள் அளித்து நோயைக் குணப்படுத்தி வந்தார். போகரோ நவபாஷாணம் கொண்டு செய்த வில்லைகளைத் தன்னை நாடி வருவோர்க்கு அளித்து வந்தார்.

அகத்தியரின் மருந்துகளால் சீக்கிரமாக மக்கள் குணமடைந்து வந்தனர். ஆனால் போகரின் மருந்துகளுக்கு வீரியம் அதிகமானதால் மக்கள் உயிரிழந்தனர். இது கண்ட போகர் நவபாஷணத்தால் ஒரு சிலை செய்து அதன் மீது சந்தனத்தைப் பூசி அதிலிருந்து ஒரு குண்டுமணி அளவுக்கு வில்லையாகத் தன்னை நாடி வருபவர்களுக்கு அளித்து நோயை குணப்படுத்தி வந்தார் என்பது பழனியில் வழங்கி வரும் ஒரு செவிவழி செய்தியாகும்.
காவடி
கேரள மாநிலம் எழபெத்தவீடு என்ற ஊரைச் சேர்ந்த அடியவர் ஒருவர் சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு காவடியைச் சுமந்து வந்தார். மரம் மற்றும் அலுமினியக் கலவையால் தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் காவடியின் ஒரு பக்கத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகரும், மற்றொரு பக்கத்தில் சித்தி, புத்தி சமேத விநாயகரும் பொறிக்கப்பட்டுள்ளனர்.

இக்கோவிலுக்கு வி.வி.சி.ஆர். முருகேச முதலியார் என்பவர் தேவஸ்தான கல்லூரிக்கு இலவச இடம், தங்கத் தேர், வைரவேல், தங்க மயில் வாகனம், விஞ்ச் - மின் இழுவை வாகனம் - ஆகியவற்றை நன்கொடையாகச் செய்து கொடுத்தார்
பழனிமலை குன்றின் உச்சியை அடைவதற்கு இரண்டு வழிகள் உள்ளன:
யானைப் பாதை (ஏறுவதற்கு இதைப் பயன்படுத்தினால் எளிதாக இருக்கும்)
நோ் பாதை இதை இறங்குவதற்கு பயன்படுத்தலாம்
படிப்பாதையில் துவக்கத்தில் விநாயகர் உள்ளார். படிப்பாதை முடிவதற்கு முன் இடும்பன் ஆலயமும் முடிவில் வண்ணி மரவிநாயகரும் உள்ளார்.
உச்சியில் கொடிமரம், கல் விளக்குத்தூன் அடுத்து மயில் உள்ளது. வடக்கு நோக்கிய தனி விநாயகர் சன்னதியும் உள்ளது.
தண்டபானி ஆலயம் மேற்கு நோக்கியது.
முன்மண்டபம் நடு மற்றும் உள் மண்டபம் கடந்தால் அருள்தரும் தண்டபாணி தெய்வத்தை தரிசிக்கலாம்.
கருவரை மேல் தங்கவிமான கூரை அமைக்கப்பட்டுள்ளது.
கோஷ்ட்டம் அடுத்து ஒரு பிரகாரம் தென் பகுதியில் நந்தி மற்றும் தனி சன்னதியில் கைலாசநாதர் கிழக்குப் பார்த்து உள்ளார். சுற்றில் சண்டிகேஸ்வரர் உள்ளார். 
தென் மேற்கு மூலையில் போகர் சன்னதி உள்ளது மேற்கில் பிரகதீஸ்வரர், மீனாட்சி சொக்கநாதர் சன்னதியும் இணைந்து உள்ளது
வெளிப்பிரகாரத்தில் கிழக்குப்பார்த்த பெரிய விநாயகர் மற்றும் புதிய அமைப்பாக 18 சித்தர்கள் சன்னதியும் உள்ளன.
பக்தர்கள் தரிசன (இலவச, ரூ.10 மற்றும் ரூ 100 கட்டன) வரிசைகளும் இழுவை ரயில் கேபிள்கார் ஷெட் மற்றும் அன்னதான கூடம் உள்ளன.
தங்கத் தேர் வழிபாடு மாலை 6 மணிக்கு மலைக்கோவிலில் தினமும் நடைபெறுகிறது
ஆலய வளாகத்தில், பஞ்சாமிர்தம் சுவாமி படங்கள் முதலியன விற்பனைக்கடைகள் உள்ளன.
மலை அடி வரத்தில் கைப்பேசி வைக்குமிடம் இலவச காலனிகள் வைக்குமிடம் பத்தர்கள் கூடம் இலவச கழிப்பிடங்கள் முதலியவை உள்ளன.
கார் வேன் பேருந்துகள் தனி நிறுத்துமிடம் உள்ளது. மலை சுற்றி எங்கும் செல்ல இலவச மின் ஊர்திகள் நிறைய உள்ளன.

கோவில் திருவிழாக்கள்
பழனி திருவிழாக்களுக்குப் பெயர்பெற்ற ஊராகும். இங்கு நடக்கும் குறிப்பிடத்தக்க திருவிழாக்கள்:
தைப்பூசம் பங்குனி உத்திரம் சூரசம்ஹாரம் 
பஞ்சாமிர்தம் - மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு பிரசாதம்.
🏵️ மலை அடிவாரம் படிப்பாதை எதிரில் கிழக்கு நோக்கிய, மீனாட்சிசுந்தரேஸ்வரர் தனி ஆலயம் சிறப்பாக உள்ளது

இங்கிருந்து திரு ஆவினன்குடி நடந்தே செல்லலாம். 
5.09.2026 மீள் தரிசனம்
5.9.26 #சுப்ராம்தரிசனம் மீள்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

https://www.facebook.com/share/p/19kGoZEvCD/https://www.facebook.com/share/p/19kGoZEvCD/
Check out this review of Palani Dhandayudhapani Temple on Google Maps
https://goo.gl/maps/5eLV9nohjW2UMdXs8?g_st=ac

Sunday, August 30, 2026

திருவோத்தூர்வேதபுரீசுவரர் கோயில் 16.8.26

#திருவோத்தூர்
வேதபுரீசுவரர் கோயில்
தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது 240 வது தேவாரத்தலம் ஆகும். தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
வேதங்களை ஓதியுணர்ந்து பிறருக்கு உரைக்கும் முனிவர்களே வேதம் ஓதுதலை மறந்து விடுகிறார்கள். அவர்கள் எல்லோருமாக வேண்ட, இறைவனே வேதியர் உருவில் வந்து தேவர் முனிவர்களுக்கெல்லாம் வேதத்தை விரித்து ஓதுகிறார். வேதம் ஓதுவித்த ஊர் ஓத்துர் எனப் பெயர் பெறுகிறது. இதை இறைவனே சொல்லுவதாக பாலகுஜாம்பிகைகக் காஞ்சிப் புராணம் கூறுகிறது.
மூலவர்:வேதபுரீசுவரர், வேதநாதர்
அம்மன்:இளமுலையம்பிகை, பாலஜகுஜாம்பிகை
தல விருட்சம்:பனைமரம்
தீர்த்தம்:மானச தீர்த்தம், கல்யாண கோடி, திருகுளம்
புராண பெயர்:திருவோத்தூர், திருஓத்தூர்
மக்கள் வழக்கில் செய்யாறு, திருவத்திபுரம், திருவத்தூர் என்றெல்லாம் வழங்கப்படுகிறது. கோயில் உள்ள பகுதி திருவத்திபுரம் ஆகும்.
இத்தலம், திருஞானசம்பந்தரால் தேவாரப்பதிகங்கள் பாடி, இப்பெருமான் அருளால் ஆண்பனை, பெண்பனையான பெரும்பதி. திருநாவுக்கரசரும் தேவாரப்பாடலில் பாடியுள்ளார்கள். இங்குள்ள முருகனை அருணகிரி நாதர் பாடியுள்ளார். விநாயகர், முருகன், வயிரவர், திருமால், பிரமன், சூரியன், தொண்டைமான் ஆகியோர் வேதபுரீஸ்வரரை வழிபட்டுள்ளனர். இங்கு சிவன் வீர நடனம் புரிந்துள்ளார்.
சேயாறு முருகப்பெருமானால் தோற்றுவிக்கப்பட்டு இத்தலத்தின் தீர்த்தமாக உள்ளது. இதனால் இந்த ஊர் “செய்யாறு’ என அழைக்கப்படுகிறது.
வழிபட்டோர்: தொண்டைமான், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் முதலியோர்

தல சிறப்பு:
இத்தலத்தில் 9 வாயில்களை கடந்து மூலவரை தரிசிக்க முடியும்.இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சுவாமி மீது தினமும் சூரியஒளி படுவது இத்தலத்தில் விசேசம். ரத சப்தமி அன்று சூரிய ஒளிக்கதிர் விழும்.ஒரே இடத்தில் நின்று தரிசிக்கலாம் : வேறு எந்த தலத்திலும் காண முடியாத அரிய சிறப்பம்சம் இது. அதாவது கோயிலின் மகாமண்டபத்தில் நின்றால் சுவாமி, அம்பாள், முருகன், கணபதி, நவகிரகங்கள், தலமரம் என்று இவை எல்லாவற்றையும் காணலாம். ஒரே இடத்தில் நின்று இவர்கள் எல்லாவற்றையும் தரிசிக்க முடியும் என்பது இத்தலத்தின் முக்கிய சிறப்புகளில் ஒன்று. 
இத்தலவிநாயகர் நர்த்தனவிநாயகர் என்ற திருநாமத்துடனும், முருகன் சண்முகர் என்ற திருநாமத்துடனும் அருள்பாலிக்கின்றனர்.
அம்பாள் கையில் ருத்ராட்ச மாலையும், மற்றொரு கையில் தாமரை மொட்டும், அபய அஸ்தம், வரத அஸ்தம் ஆகியவற்றோடு காட்சி தருகிறார்.
சிவபக்தனான தொண்டைமான் என்ற மன்னனுக்காக சிவனின் ஆணைப்படி நந்தி தேவர் படைத்துணையாக சென்றுள்ளார். இதற்காக இங்கு நந்தி சிவனுக்கு எதிர் திசையில் திரும்பியுள்ளார். சிவனின் 
ஆலயத்துள் வெளிப் பிரகாரத்தில் (தல மரமான) பனைமரங்கள் உள்ளன.
அம்பாள் சந்நிதிக்கு எதிரில் தலத்து ஐதீகமான பனைமரம், ஞானசம்பந்தர், சிவலிங்கம் கல்லில் (சிலா ரூபத்தில்) அமைக்கப்பட்டுள்ளன.
பஞ்சபூதத் தலங்களை நினைவூட்டும் வகையில், தனித்தனி சிவலிங்கத் திருமேனிகள், தனித்தனி சந்நிதிகளாக - திருச்சிற்றம்பலவன், திருக்காளத்தியார், திருஆனைக்காவுளார், திருவண்ணாமலையார், திருவேகம்பன் சந்நிதிகளாக அமைந்துள்ளன.
பஞ்சபூத தலங்கள் அனைத்துக்கும் தனித்தனி சன்னதிகள் இருப்பதால்பஞ்சபூத தலங்கள் அனைத்தையும் இத்தலத்தில் ஒரு சேர தரிசிக்க முடியும்.
8 கோபுரங்களையும் ஒரே இடத்தில் தரிசிக்க முடியும்.
சண்டேஸ்வரர் - ஒரு காலை மடக்கி, ஒரு காலைத் தொங்கவிட்டு, ஒருகையில் மழுவுடன்; ஒரு கையை மடக்கிய காலின் தொடைமீது வைத்தவாறு காட்சி தருகிறார். தட்சிணாமூர்த்திக்கும், துர்க்கைக்கும் தனிக் கோயிலாக உள்ளது.

இராசாதிராசன், குலோத்துங்கன், இராசேந்திரன், விக்ரமசோழன் முதலியோர் காலத்திய கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. கல்வெட்டில் இறைவன், 'ஓத்தூர் உடைய நாயனார் ' என்று குறிக்கப்படுகின்றார். மேலும் வழிபாட்டிற்கும், நிவேதனத்திற்கும், அர்ச்சகர்க்கும் நிலம் விடப்பட்ட செய்திகள் கல்வெட்டுக்களால் தெரியவருகின்றன.

நாகலிங்கம் அபிசேகம் :
கீழே பூமாதேவி, அதற்கு மேல் மீன், அதன்மேல் ஆமை, அதற்கு மேல் 11 யானை அதன்மேல் 11 சர்ப்பம், அதன்மேல் லிங்கம் அதன்மேல் 11 சர்ப்பத் தலைகள் உள்ளது.
தை மாதம் ரத சப்தமியைத் தேர் திருநாளாக பத்து நாள் திருவிழாவாக கொண்டாடுகின்றனர்.
அமைவிடம்
வந்தவாசி, திருவண்ணாமலை, போளூர், ஆரணி முதலிய ஊர்களில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது.
மேலும் சில வலைதல செய்திகள்
வரலாற்று செய்திகள்
புராண வரலாறு:
தந்தை தக்கன் நடத்திய யாகத்திற்கு எல்லாம் வல்ல ஈசனை அழைக்கவில்லை. இதனால் பார்வதி வருத்தப்பட்டாள். இதற்கான காரணத்தை தக்கனிடம் கேட்டு வர புறப்பட்டாள். இதற்கு சிவன் சம்மதிக்கவில்லை. இருந்தாலும் அவரது சொல்லை மீறி யாகத்திற்கு சென்று அவமானத்துடன் திரும்பினாள் பார்வதி.

இந்த பாவச் செயல் தீர இத்தலத்தில் தங்கி தவம் செய்து இறைவனுடன் இணைந்தாள். ஓத்து என்றால் வேதம். மாதவர்க்கும் வானவர்க்கும் வேதத்தை ஈண்டு இறைவன் ஓதுவித்தான். நமது நிரந்தரத் தாய் தந்தையாகிய சிவபெருமான் வேதத்திற்குப் பொருள் சொன்ன இடமாதலால் ஓத்தூர் என அழைக்கப்படுகிறது. அதில் திரு என்னும் அடைமொழி சேர்த்துத் திருவோத்தூர் என்று வழங்கப்படுகிறது.

திருவோத்தூர்த் தலபுராணம் இயற்றியவர் கருணாகரக் கவிராயர்.
இந்த இறைவன் வேதபுரீசுவரர் என்று பெயர்பெற்ற கதை பின்வருமாறு வேதங்களை ஓதியுணர்ந்து பிறருக்கு உரைக்கும் முனிவர்களே வேதம் ஓதுதலை மறந்து விடுகிறார்கள். அவர்கள் எல்லோருமாக வேண்ட, இறைவனே வேதியர் உருவில் வந்து தேவர் முனிவர்களுக்கெல்லாம் வேதத்தை விரித்து ஓதுகிறார். வேதம் ஓதுவித்த ஊர் ஓத்துர் எனப் பெயர் பெறுகிறது. இதை இறைவனே சொல்லுவதாகக் காஞ்சிப் புராணம் கூறுகிறது.

நத்தி சுவாமியை நோக்கியிராமல் முன் கோபுரத்தைப் பார்த்தவண்ணம் உள்ளது. இதுகுறித்து தலப்புராணத்தில் சொல்லப்பட்டுள்ள வரலாறு - விசுவாவசு என்னும் மன்னனின் வலிமைக்கு ஆற்றாது தோற்று, ஓடி, காட்டில் திரிந்த தொண்டைமான் வேதபுரீஸ்வரரைத் துதித்து வழங்கினான். இறைவன் காட்சி தந்து, அவனுக்கு அதிக பலத்தையும் சேனைகளையும் அருளி, விசுவாவசுவுடன் போரிட்டு மீண்டும் தன் அரசை எய்துமாறு பணித்தார். கேட்ட மன்னன் 'எங்ஙனம் போரிடுவேன்' என்று அஞ்சியபோது, 'நந்தி உனக்கு படைத் துணையாக வருவார், நீ அதற்கு முன்பாக யாம் கொடுத்த சேனைகளோடு சென்று போரிடுவாயாக' என்றார். மேலும்; "நாம் கூறியதில் உன் மனத்திற்கு சந்தேகமிருப்பின் சாட்சி காட்டுகின்றோர். நீ போய்ப்பார்; அந்த நந்திதேவன் கீழ்த்திசை நோக்கியிருக்கின்றார்." என்றார். அவ்வாறே தொண்டைமான் வந்து பார்க்க, (அவனுக்கு படைத்துணையாகும் நிலையில்) மேற்கு நோக்கியிருந்த நந்திதேவர் கீழ்த்திசையில் திரும்பியிருப்பதைக் கண்டு பயம் நீங்கினான். இறைவன் நந்தியைத் தளபதியாக்கி, சிவகணங்களைக் குதிரைகள் யானைகள் தேர்களைச் சேனைகளாகச் செய்து தந்து, தொண்டடைமானைப் போர்க்கு அனுப்ப, அவனும் அவ்வாறே சென்று, விசுவாவசுவை வென்று நாட்டாட்சியை அடைந்தான்

கோயிலுக்கு திருஞானசம்பந்தர் வருகை :

பனை மரம் :
இத்தலம் சேயாற்றின் கரையில் உள்ளது. ஆற்றில் அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு அதனால் கோயிலின் சுவர்கள் பாழானது. இதனால் வருத்தமடைந்த சிவனடியார் ஒருவர் ஆற்றின் கரையை உயர்த்தி கரை கரைந்து போகாமல் இருக்க பனங்கொட்டைகளை நட்டு பனைமரங்களை வளர்த்து வந்தார். பனைமரங்கள் அனைத்தும் ஆண்பனைகளாக இருந்தன. இதனால் நுங்கு முதலிய பயன்கள் கிடைக்கவில்லை. இதைக்கண்ட சிலர், சிவனடியார்களிடம், “”எல்லாம் ஆண் பனையாக இருக்கிறது. ஒரு பெண் பனை கூட இல்லை. உமது சிவனின் அருள் இது தானோ? என கேலி செய்தனர். இதனால் வருத்தமடைந்த சிவனடியார், சம்பந்தர் இத்தலத்திற்கு வந்த போது இதுபற்றி கூறினர். உடனே சம்பந்தர் பதிகம் பாடினார். இறுதிப்பாடலில் “குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்’ என முடித்தார். அப்போது ஆண்பனைகள் பெண் பனைகளாக மாறி குலை தள்ளின. இந்த அதிசயத்தை கண்டவர்கள் சைவர்களாக மாறினர். தேவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட ஒரு சாபத்தினால் இத்தலத்தில் பனை மரங்களாக பிறந்து சாப விடுதலைக்காக காத்திருந்தனர். அப்போது சம்பந்தர் இறையருளால் ஆண்பனையை பெண்பனையாக்கினார். இவை அனைத்தும் ஒரு காலகட்டத்தில் சிவபதம் பெற்றன என தல புராணம் கூறுகிறது. இதற்கு சான்றாக அம்மன் சன்னதிக்கு முன் கருங்கல் பனைமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்படுகிறது.
நாகநாதர்:
திருஞான சம்பந்தர் இத்தலத்திற்கு வந்த போது சேயாற்றை சுற்றியுள்ள சமணர்கள் ஒரு வேள்வி செய்து அதிலிருந்து கொடிய பாம்பை சம்பந்தர் மீது ஏவினர். சம்பந்தர் சிவனை குறித்து வேண்டினார். உடனே சிவன் பாம்பாட்டியாக வந்து அப்பாம்பினை பிடித்து மறைந்தார். இதனால் இத்தலத்தில் நாகலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
11 தலையுள்ள இதை சனிக்கிழமை ராகு காலத்தில் வழிபட்டால் தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.

ஒரு சமயம் திருஞானசம்பந்தர் தொண்டை நாட்டிலே உள்ள திருவோத்தூர் என்னும் இந்தத் தலத்துக்கு வருகிறார். இங்கே சமணர்கள் ஆதிக்கம் மிகுந்திருப்பதையே காண்கின்றார். தென்திசையிலிருந்து வந்த ஞானசம்பந்தர், சேயாற்றின் தென்கரையில் இருந்தே, திருவோத்தூர் வேதபுரி நாயகன் கோபுரத்தையும் மதிலையும் தரிசித்து, அந்தக் கரையிலுள்ள திருமடத்தில் தங்குகிறார்.
மதுரையில் ஞானசம்பந்தர் நிகழ்த்தியவைகளைக் கேட்டிருந்த சேயாற்றுச் சமணர்கள், ஒரு வேள்வி செய்து, அதிலிருந்து எழுந்த கொடிய பாம்பொன்றை அவர் மீது ஏவுகின்றார்கள். அவரோ பாம்பைச் சமணர்களது 'வேந்தன் வாழ் இஞ்சி சூழ் திருமனைக்கே ஏகென்று உத்தரவு இடுகிறார். அதனால் துயருற்ற அரசன் வந்து, அடிவணங்க, ஞானசம்பந்தர் வேண்டுகோளை ஏற்று இறைவனும் மகுடி ஏந்திப் பாம்பாட்டியாக வந்து, அதைப் பிடித்துக் கொண்டே கோயிலுக்குள் சென்று மறைகிறார்.

திருஞான சம்பந்த பெருமான் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் இங்கு போந்து வேதபுரீசுவரரையும் இளமுலையம்பிகையையும் வழிபட்டு ஆண்பனை பெண்பனையாய்க் காய்க்குமாறு பதினோறு பாசுரங்கள் பாடியருளினார்.

தலவிருட்சமாகிய அப்பனைகள் இன்றும் காய்த்து கனிந்து குலுங்கும் பெற்றி மிக்கவனவாய் எழிலோடு விளங்குகின்றன. அப்பனையின் இனிய கனிகளை உண்பார் குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறுவர் , பிணியுடைவர்கள் பிணி நீங்கப்பெறுவர் என்று பெரியோர்கள் கூறுவதாக தலபுராணம் கூறுகிறது.

அனக்காவூர் செய்யாற்றை வென்றான் பெயர் காரணம் :

இதனால் சமணர் பகை வளர, அரசன் விரும்பியபடி புனல் வாதத்திற்கே ஒத்துக் கொள்கிறார். சமணர்கள் எழுதியிட்ட ஓலையைச் சேயாற்று வெள்ளம் அடித்துக்கொண்டு போய் விடுகிறது. ஆனால் ஞானசம்பந்தர் பாடிய பதிகத்தில் ஒரு பாட்டை ஏட்டில் எழுதி, ஆற்றில் இட, அது புது நீரைக் கிழித்துக் கொண்டு முன்னேறி ஒரு பழம்பதியை அடைகிறது. இவ்வாறு ஏடு எதிர் சென்று நின்று தங்கின இடமே அன்று முதல் சேயாற்றில் வென்றான் என்ற பெயரால் வழங்கப்படுகிறது. தற்போது இது செய்யாற்றைவென்றான் என அழைக்கப்படுகிறது. மேலும் அந்த எடுகல் அனுகாமல் சென்றதால் அனுகாவூர் எனவும் தற்போது அனக்காவூர் என அழைக்கப்படுகிறது.

ஆண் பனைகள் குழையீன்றன :
இப்படியெல்லாம் தோற்றாலும் சமணர்கள் மாத்திரம் தங்கள் வாதத்தை விடுபவர்களாக இல்லை. 'இவ்வூர்க் கோயிலிலும் ஆற்றங்கரையிலும் காயாது நிற்கும் ஆண் பனைகள் நிற்கின்றன. அவைகளைக் காய்க்கும் பென் பனைகளாக ஆக்க முடியுமா?' என்று சம்பந்தரிடமே மறுபடியும் சவால் விடுகிறார்கள். அந்தச் சவாலை ஏற்றுக் 'குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்’ என்ற பாடலைப் பாட, எல்லோரும் அதிசயிக்கும் வண்ணம், கோயிலுக்குள் நின்ற ஆண்பனை குலைதள்ளிப் பெண்பனையாக மாறுகிறது. இன்றைக்கும் அந்தப் பனைகளின் வாரிசாகக் கோயில் பிராகாரத்திலேயே குலை ஈனும் ஐந்து பனைகள் நின்று கொண்டிருக்கின்றன.
🔱
திருஞானசம்பந்தர் தேவாரப்பதிகம்:

குழையார் காதீர் கொடுமழு வாட்படை

உழையாள் வீர்திரு வோத்தூர்

பிழையா வண்ணங்கள் பாடிநின்று ஆடுவர்

அழையா மேயருள் நல்குமே.

-திருஞானசம்பந்தர்

ஓத்து - வேதம். இறைவன் வேதத்திற்குப் பொருள் சொன்ன இடமாதலின் ஓத்தூர் - 'திரு' அடைமொழி சேர்ந்து 'திருஓத்தூர் ' - திருவோத்தூர் என்றாயிற்று.
🔱
நன்றி
#திருமுறைதலம்
மீள் தரிசனம் 23.07.2023 மற்றும் 16.8.26
#மீள்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
நன்றி🙏

காஞ்சிபுரம்#திருக்காலிமேடுதிருக்கச்சி நெறிக்காரைக் காடு (புதன்)

#காஞ்சிபுரம்
#திருக்காலிமேடு
திருக்கச்சி நெறிக்காரைக் காடு

தொண்டநாட்டு திருமுறை தலம்.
ஸ்ரீ ஸத்யநாதர், ஸ்ரீ பிரம்மராம்பிகை ஆலயம். புதன் வணங்கி கிரகம் பெற்ற தலம். எனவே புதன் பெரும் விஷேசம். இந்திரன் வணங்கியது. மேற்கு பார்த்த தலம் மூலவர் செம்மன் நிறமான தான் தோன்றி லிங்கம்
காஞ்சீபுரத்தில் எண்ணற்ற ஆலயங்கள் அமைந்துள்ளன. மன்னர் காலத்தில், சிவகாஞ்சி, விஷ்ணுகாஞ்சி, ஜைனகாஞ்சி என மூன்று பகுதிகளைக் கொண்டு காஞ்சீபுரம் நகரம் விளங்கியது.

இதில் சைவ ஆலயங்களில் திருக்கச்சி ஏகம்பம், திருமேற்றளி, ஓணகாந்தன்தளி, திருக்கச்சி நெறிக்காரைக் காடு, திருக்கச்சி அநேகதங்காவதம் என ஐந்து தேவாரப் பாடல் பெற்ற தலங்களும், கச்சி மயானம், இடபேஸ்வரம் என இரு வைப்புத் தலங்களும் அமைந்துள்ளன. இதில் திருக்கச்சி நெறிக்காரைக்காடு என்ற தேவாரத்தலமே இன்று திருக்காலிமேடு என அழைக்கப்படுகிறது.

இந்திரன், புதன் வழிபட்டுப் பேறு பெற்ற தலம் என்ற பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்கிறது, காஞ்சீபுரம் நகரில் அமைந்துள்ள கச்சி நெறிக்காரைக்காடு எனும் திருக்காலிமேடு திருக்கோவில்
வரலாறு :
காஞ்சீபுரம் பழங்காலத்தில் தற்போதைய திருக்கோவில் இடத்திற்கும் மேற்கே பரந்து விரிந்து இருந்துள்ளது. அதற்குச் செல்லும் வழியில் காரைக் காடுகள் நிறைந் திருந்தன. அந்தக் காட்டுப் பகுதியில் இத்திருக்கோவில் அமைந்திருந்ததால், இத்தலத்தை காரைக்காடு என திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். அதையொட்டி திருக் கச்சி நெறிக்காரைக்காடு என்ற பெயர் வழங்கலானது.

காஞ்சி புராணம், இத்தலத்தினை ‘சத்ய விரத நாதம்’ என அழைக்கின்றது. காஞ்சி மாநகரின் பன்னிரண்டு பெயர்களில் சத்யவிரதநாதமும் ஒன்றாகும். இங்கு எழுந்தருளிய இறைவன் சத்தியநாதர் என வழங்கப்படுகிறார். இவரே காஞ்சீபுரத்தின் ஆதி நாயகராவார். ஜோதிலிங்கத்தை விஷ்ணு வழிபடுவதற்கு முன்பாகவும், மண் லிங்கமான ஏகம்பனை, அம்பிகை வழிபடுவதற்கு முன்பாகவும் தோன்றியது இந்த ஆலயம் என்று கூறப்படு கிறது. அன்னை போக சக்தியாக (உலோகத் திருமேனியில்) கருவறைக்குள் எழுந்தருளி உள்ளார். அன்னையின் திருப்பெயர் பிரமராம்பிகை என்பதாகும். அன்னை வலது கரத்தில் மச்ச ரேகையும், தான்ய ரேகையும், மீனின் வடிவம் மற்றும் நெற்கதிர் வடிவம் அமைக்கப் பட்டுள்ளன.

இறைவன் பெயர் சத்யநாதசுவாமி. செம்மணலால் உருவானவர். செம்மேனி கொண்ட இறைவன், மேற்கு முகமாய் காட்சி தருகிறார். இவரின் திருமேனி பார்ப்பதற்கு மிகவும் ஈர்ப்பு சக்தியுடன் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது. கோவிலுக்கு முன்புறம் இந்திரன் அமைத்த இந்திர தீர்த்தம் உள்ளது. இதன் கிழக்குக் கரையில் இந்திரன் வழிபட்ட விநாயகர் அமர்ந்துள்ளார். தலமரம் காரைச் செடியாகும்.
தனது தவ வலிமையால் விரும்பிய வடிவம் பெறும் வரம் பெற்றவன் இந்திரன். ஒரு முறை கவுதம மகரிஷியின் உருவம் தரித்து, அவரது மனைவி அகல்யாவை அடைந்தான். இதையறிந்த மகரிஷி, இந்திரனுக்கு சாபமிட்டார். அகல்யாவையும் கல்லாக மாற்றினார். அந்த சாபம் நீங்குவதற்காக அகல்யா வழிபட்ட தலம் இது என்று தல புராணம் தெரிவிக்கிறது.

சந்திரனும், வியாழனின் பத்தினியான தாரைக்கும் பிறந்தவர் புதன். தன் பிறப்பின் ரகசியம் அறிந்து மனம் வருந்திய புதன், காரைக்காடு சத்திய விரத நாதரை வழிபட்டு நவக்கிரகங்களில் ஒன்றாகும் வரம் பெற்றார். எனவேதான் இந்த தலத்தில் சிவன் சன்னிதியை நோக்கி புதன் சன்னிதி அமைந்துள்ளது.

ஆலய அமைப்பு :
கோவிலில் எளிய நுழைவு வாசலில் நுழைந்ததும் பலிபீடம், கொடிமரம், நந்திதேவரை தரிசிக்கலாம். மூன்று நிலை ராஜகோபுரம் மேற்குநோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுரத்தின் உள்ளே சென்றால் அகன்ற வெளிப் பிரகாரம் உள்ளது. சங்கிலி மண்டபம், புதன் சன்னிதி, சனி பகவான் சன்னிதி இருக்கின்றன. உட்பிரகாரத்தில் நாற்புறமும் திருமாளிகைப் பத்தி அமைக்கப்பட்டுள்ளது. வலது பக்கத்தில் தெற்கு நோக்கிய நடராஜர் சபை உள்ளது. அருகே நால்வர், புதன், இந்திரன், பைரவர் வீற்றிருக்கின்றனர்.

கிழக்குப் பிரகாரத்தில் மேற்கு நோக்கிய படி விநாயகர், மூன்று லிங்கங்கள், ஆறுமுகன் சன்னிதி இருக்கிறது. இதையடுத்து இரண்டு சிறிய லிங்கங்கள் உள்ளன. தென்மேற்கு முனையில் பிரதோஷ நாயகரும், திருமாலும், திருமகளும் அருள்புரிகின்றனர். தென் மேற்கு முனையில் உலாத் திருமேனிகள், பஞ்சமூர்த்திகள் அமைந்துள்ளன.

புதன்கிழமைகளில் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, புதனுக்கு பச்சைத் துணி சாத்தி, பச்சைப் பயறு படைத்து வழிபட்டால் புதன் கிரகத்தால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் திறந்திருக்கும்.
நன்றி
#திருமுறைதலம்
மீள் தரிசனம் 23.07.2023 மற்றும் 16.8.26
#மீள்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று

காஞ்சிபுரம்சித்திரகுப்தர் கோயில் காஞ்சிபுரம் நெல்லுக்காரர் தெரு 16.8.2026

#காஞ்சிபுரம்
சித்திரகுப்தர் கோயில் 
காஞ்சிபுரம் நெல்லுக்காரர் தெருவில் அமைந்துள்ள இந்துக்கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் இந்து மதக் கடவுள் சித்திரகுப்தரின் அரிய கோயிலாக விளங்குகிறது. இது ஒரு அரிதான கோயிலாகும். ஏனெனில் உலகில் காஞ்சிபுரத்தில் மட்டுமே சித்ரகுப்தனுக்கு ஆலயம் அமைந்துள்ளது. சித்திரை மாதத்தில் சித்ரகுப்தனுக்கு திருவிழா நடைபெறுகிறது. சித்திரை பவுர்ணமிக்கு முன்னாள் சித்ரகுப்தருக்கு கர்ணகி அம்பிகையுடன் திருமணம் நடைபெற்று பவுர்ணமி அன்று நகர்வலம் வருகிறார்.
இந்த ஆலயம் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் ராஜவீதியில் அமைந்துள்ளது. திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டுச் சென்றால் திருமணம் நடைபெற்று இல்லறத்தில் இனிதே வாழ்ந்துவருகிறார்கள். இக்கோயிலின் மூலவர் சித்திரகுப்தரை வணங்கினால், இறப்பிற்குப் பின் ஞானமும், மோட்சமும் எளிதில் கிடைக்கும் என்பது நம்பிக்கை

நன்றி🙏
#சுப்ராம்தரிசனம் 16.08.2026
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று

திண்டல் திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் 6.09.26

திண்டல்  திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் வேலாயுதசாமி கோயில், திண்டல் என்பது ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ. தொ...