🌟திருச்செங்கோட்டில் இரண்டு முக்கிய ஆலயங்கள் உள்ளன. மலை மீது உள்ள ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் மற்றும்,
🌟திருச்செங்கோட்டின் நகர் நடுவில் உள்ள ஸ்ரீசுகுந்த குந்தளாம்பிகை சமேத ஸ்ரீகைலாசநாதர் ஆலயம்.
இரண்டும் மிக முக்கிய ஆலயங்கள்.
🌟இந்த யாத்திரையில் நகரின் மையத்தில் உள்ள ஸ்ரீ கைலாசநாதர் ஆலயம் தரிசனம் கிடைத்தது.
கைலாசநாதர் ஆலயம்.
🌟ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
💥5 நிலை ராஜகோபுரம்,
💥இராஜகோபுரம் முன்பகுதியில் கல் தீபதுன் உள்ளது.
💥ஒரு சிறிய முன்மண்டபமும் உள்ளது.
💥இராஜகோரம் அடுத்து பலி பீடம், துவஜஸ்தம்பம், நந்தி மண்டபம் அமைந்துள்ளது.
💥தனியாக பெரிய சுதை நந்தி உருவம், மலைக்கோவிலை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு.
🔰ஆலய அமைப்பு:
💥ஆலயமுகப்பில் - திருநீலகண்டம் என்று அமைக்கப்பட்டுள்ளது.
💥முன்மண்டப முகப்பில் குதிரை வீரர்கள் சிலைகள் சிறப்பான வடிவமைப்பில் உள்ளது.
💥கருவரையில் வட்ட ஆவுடையார்.
அர்த்தமண்டபத்தில் நடராஜர், உற்சவர்கள் உள்ளனர்.
💥கோஷ்ட்டத்தில், விநாயகர், தட்சினாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரும்மா, மற்றும் துர்க்கை உள்ளனர்.
💥முகமண்டபத்தில் செப்பு உலோக 63 வர், நால்வர், மற்றும் விநாயகர், துவாரபாலகர் உள்ளனர்.
💥பிரகாரத்தில் விநாயகர், முக்கூட்டு விநாயகர் (ஒரே வரிசையில் 3 விநாயகர்) சப்தமாதர்,
மற்றும் வன்னிமரவிநாயகர் சிவலிங்கம், சிவலிங்கம், 63 வர், முருகன், சண்டிகேஸ்வரர், பைரவர், நவகிரகம், சனீஸ்வரர், சந்திரன், சூரியன் உள்ளனர்.
💥சுவாமி இடது புறத்தில் அம்பாள் தனி கர்ப்ப கிரகம், தனி சன்னதியில் கிழக்கு நோக்கியபடி , நின்ற கோலத்தில், அபய வரத கரங்களுடன்
உள்ளார்.
💥ஆலயம், கர்ப்ப கிரகம், உள் மண்டபம், அர்த்தமண்டபம், முகமண்டபம் உடையது.
முகமண்டப தூன் யாழியுடன் உள்ள சிற்பங்கள் தாரமங்கலம், பவானி ஆலயங்கள் போன்று ஒப்பீடு செய்யப்படுகின்றன.
💥இவ்வாலயம் 10 - 11ம் நூற்றாண்டுகளில், கட்டப்பட்டிருக்கலாம். விஜயநகரநாயக்கர் காலங்களில் ஆலயம் புனராக்கம் செய்யப்பட்டுள்ளது.
💥1989 கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
தகவல்...வலைதளம்,🙏
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
🔱8.11.2025 சனிக்கிழமை அன்று காலை இவ்வாலயம் தரிசித்தோம்.
ஏற்கனவே இருமுறை தரிசித்தவந்த ஆலயம்.
தற்போது பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நிர்மால்ய தரிசனமும், தொடர்ந்து பால் அபிஷேக தரிசனம் கிடைத்தது.
🔱பிரகாரத்தில் உள்ள 63 வர் பகுதி மண்டபம் உள்ளது.
🔱சோமஸ்கந்தர் அமைப்பில், முருகன் சன்னதி சுவாமி, அம்பாள் நடுவில் உள்ளது.
🔱சனிஸ்வர பகவான் கிழக்குப் புறத்தில், மேற்கு நோக்கி தனி சன்னதி நாங்கள் சென்ற போது அபிஷேகம் நடைபெற்றது.
🔱வடகிழக்கு ப்பகுதிகளில் பைரவர், நவகிரகங்கள் உள்ளன.
🔱தேர்திருவிழா மிகவும் பிரசித்தம்.
🔱ஆலயம் நகர் மத்தியில் பேருந்து நிலையம் அருகில் உள்ளது.
🔱ஆலயம் அருகில் வாகனம் நிறுத்துமிடம், கழிப்பறைகள் உண்டு.
🔱சேலம் மாவட்டத்தில் உள்ள பாடல் பெற்ற திருத்தலமாகிய திருச்சங்கோடு மலை மீதுள்ள ஸ்ரீ அர்த்தநாரிஸ்வரர் ஆலயம் செல்ல தனி பேருந்துகள் உண்டு.
🔱இரண்டு ஆலயங்களும் அரசு துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
🙇நன்றி🙏
🛕#சுப்ராம்ஆலயதரிசனம் 8.11.2025🛐
#என்றும்அன்புடன்💟
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🙇🛕
#ஆன்மிகபாரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🗻
⛳ #பிரதோஷேக்குழுயாத்ரா - சேலம் 8, 9 நவம்பர், 2025.🛕 #ஆன்மீகதலயாத்திரை:
ஆலயம் பற்றிய மேலும் சில செய்திகள்:
💥திருச்செங்கோடு கைலாயநாதர் கோவில் தெற்குச்சுவரின் அடித்தளத்தில் பொறிக்கப் பெற்றுள்ளகல்வெட்டொன்று ( 221 ) விசயநகர அரசர் சதாசிவராயர் ( பொயு 1561) காலத்தைச் சார்ந்தது. அக் கல்வெட்டு சீரிய விருத்தபாவால் அமைந்தது. இப்பாடல் பொயு. 1685 இல் சதாசிவ பண்டிதரால் எழுதப்பெற்ற 'திருச்செங்கோட்டுத் திருப்பணிமாலை' என்னும் நூலில் சதாசிவராயரின் சிறப்பைப் போற்றும் பாடலாக இடம் பெற்றுள்ளது..
சீரார்ச் காப்தத்தி லாயிரமு நானூறு செல்கவெழு பத்துமூன்றின்
திரமான துன்மதிச் சித்திரைத் திங்களைச் சேர்ந்தவிரு பத்தைந்தினிற் பூராய பூர்வபட் சந்திசக ளுந்தசமி பூசமாம் மேனாளிலே
புவியாள் சதாசிவ மகாராயர் ஜெகதேவு பூபால னுக்குதவவே
வீராக மப்பிரபுட நரசிங்க ராமாஞ்சி மிகுகொங்கு நாடாளுனாள்
விப்ரகுல சர்வயன் தேவசா யாதிபன் வீறா வனந்தபூபன்
ஏரான செங்கோட்டில் மேவு கைலாயர்முன் எழிலான கற்கம்பமே
இன்பொடு நிறுத்தினன் கீர்த்திப் பிரதாபமது வீமசேத ளவநிற்கவே
என்பது அப்பாடலாகும்.
No comments:
Post a Comment