வேலங்குடி பெருமாள் ஆலயம்
#வேலங்குடிபெருமாள் ஆலயம்
🛕 பெருமாள் ஆலயமும் அழகுற அமைந்துள்ளது. ராஜகோபுரம், பிரகாரம், உள்ளே பெரிய மண்டபம். கருடன் எதிரில் பூமீ நீளா வரதராஜபெருமாள் கருவரை, பின்புறம் 4 தனி தனி சன்னதிகளில் மகாலெட்சுமி, சக்கரத்தாழ்வார், தன்வந்திரி, மற்றும் ஆண்டாள் சன்னதிகள் முதலிய ஆலய தெய்வங்கள். உள்ளது. பூசைகள், பராமரிப்பும் நன்றாக உள்ளது.
அருகில் உள்ள விநாயகர் ஆலயம்
சொக்கட்டான் விநாயகர் ஆலயம்
🛕இக்கோயிலுக்கு அருகிலேயே "சொக்கட்டான் விநாயகர்" என்ற கோயில் உள்ளது. அதாவது "சொல் கேட்டான் விநாயகர்" என்பதன் திரிபே சொக்கட்டான் விநாயகர் என்று மருவிவிட்டது. என்ன சொல் சொல்லி பிரார்த்தனை செய்தாலும் உடனே கேட்டு அதற்குல் பலனளித்து விடும் வரப்பிரசாதி. விநாயகரை வேண்டி பலன் கிடைத்ததும் 108 தேங்காய்கள் உடைக்கப்படுகின்றன. சிலர் அன்னதானம் செய்கின்றனர்.
அருகில் உள்ள சிவன் ஆலயம்:
வேலங்குடிகண்டீஸ்வரர்ஆலயம்
நகரத்தார் ஆலயம் ஒன்பதில் இதுவும் ஒன்று.
அ /மி. கண்டீஸ்வரர் - காமாட்சி அம்மன் ஆலயம், வேலங்குடி
⛳காரைக்குடியிலிருந்து பள்ளத்தூர் செல்லும் வழியில் 9 கி.மீ தொலைவில் வேலங்குடி உள்ளது.
⛳ பழங்காலத்தில் வேலமரங்கள் மிகுதியாக இருந்ததால் இவ்வூர் இப்பெயர் பெற்றது.
⛳கோட்டையூரின் ஒரு பகுதியில் இந்த ஊர் உள்ளது.
சுவாமியின் திருநாமம் : கண்டீசர்,
அம்பாள் :காமாட்சி
⛳இது ஒரு தேவார வைப்பு தலமாகும் , இது அப்பரின் பதிகங்களில் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது .
💠நன்றாகப் பராமரிக்கப்படும் கோவில்கள்..
பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
💠பள்ளத்தூர் அல்லது கோட்டையூர் வழியாக செல்வதே நல்லது
💠நன்றாக பராமரிக்கப்பட்டு வரும் சிவன் ஆலயம்.
💠கிழக்குவாசல் அடைத்து விட்டிருந்தாலும், தெற்குவாசல் வழியாக உள்ளே செல்ல வேண்டும்.
💠 ஏற்கனவே பள்ளமாக இருந்த இடத்தில் சிறிய ஆலயமாக இருந்தது, தற்போதுள்ள இடம் மேடாக்கி அதில் ஆலயம் விரிவாக்கி புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
💠சிறிய கிராமப்பகுதியில் தனியாக ஆலய வளாகம் உள்ளது.
💠சொற்கேட்டான் விநாயகர் ஆலயம், மற்றும் ஒரு பெருமாள் ஆலயங்களும் பொலிவுடன் விளங்குகின்றன. பெரிய குளம் ஒன்றும் உள்ளது. அருகில் வேறு 💠கடைகள் வீடுகள் அருகில் கிடையாது.
நன்றி🙏
28.09.25 ஞாயிற்றுக்கிழமை
#சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#பிரதோஷக்குழுயாத்ரா 28.09.2025
No comments:
Post a Comment