Monday, November 24, 2025

அருள்மிகு 1008 சிவலிங்கம் திருக்கோவில் அரியானூர், சேலம் 8 11.2025

அருள்மிகு 1008 சிவலிங்கம் திருக்கோவில் அரியானூர், சேலம் 

🌿சேலம் சங்ககிரி பிரதான சாலையில் சேலம் நகரிலிருந்து சுமார் 14 கி.மீ. தூரத்தில் உள்ளது. 

🍁விநாயக மிஷின் கல்லூரியை அடுத்து, ஒரு குன்றின் மீது இவ்வாலயங்களை அமைத்துள்ளார். தனியார் டிஸ்ட் - விநாயக மெஷின் - அறக்கட்டளை மூலம் 2010ம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்டு பராமரிப்பில் உள்ளது. 

🪻ஒவ்வொரு லிங்கமும், ஒரு தனி கோபுரத்துடன் கூடிய மண்டபத்தில் ஒரு சிவலிங்கமும், எதிரில் சிறிய நந்தி ஒன்றும் 1008 எண்ணிக்கைகளில் மலைக்குன்றின் பாதையில் இருபுறங்களிலும் அமைத்துள்ளனர். இவைகளை தரிசித்துக் கொண்டே மேலே ஏறி செல்ல வேண்டும். 

🌻சற்று உயரம் சென்ற உடன், ஸ்ரீ அக்ஷ்ய ஐஸ்வர்ய லெட்சுமி பெருமாள், நீண்ட மண்டபத்துடன் கூடிய கருவரை சன்னதியில் கிழக்கு நோக்கியவாறு தனி ஆலயத்தில்  அமைந்துள்ளார்.  முன்புறம் கருடாழ்வார் மற்றும் ஒரு கொடிமரம் உள்ளது. 

அடுத்து ஸ்ரீராமர் பட்டாபிஷேகம், ஸ்ரீ அஷ்ட்ட லெட்சுமி, ஆலயம் தெற்குப் பார்த்து உள்ளது.
இதை அடுத்து வடக்குப் பார்த்து, தனி ஹனுமான், மற்றும் ஒரு அய்யப்பன் சன்னதிகளும் தனித்தனி ஆலயங்களாக உள்ளன. 

🌺இதையடுத்து வரும், சிவன் ஆலயத்திற்கு  புதிய 9 அடுக்கு ராஜ கோபுரம் முன்புறம் அமைக்க கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இங்குள்ள சிவன் அருணாசல சோமசுந்தரேஸ்வரர் என்ற பெயரில் உள்ளார். ஆலயம் 5 அடுக்கு ராஜகோபுரத்துடன் கிழக்குநோக்கி உள்ளது. முன்புறம் நீண்ட மண்டபம், மற்றும் பெரிய நந்தி உள்ளது. சிவன் கருவரை பெரிய மண்டபத்துடன் உள்ளார். பெரிய சிவலிங்கம்  வடபுறம் நடராஜர், சிவகாமி அம்மையும், அதற்கு சற்று முன்னாக தெற்குப் பார்த்து, உமையாம்பிகை அம்பாள் சன்னதிக் கருவரையும் உள்ளது. 

🪷சிவன் ஆலயம் சுற்றிலும் தனியாக 108 சிவலிங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

🌱சிவன் ஆலயம் எதிரில் தனித்தனி சன்னதி ஆலயமாக 6 படை முருகன் உள்ளார்.
வடகிழக்குப் பகுதியில்  மண்டபத்தில் பெரிய விநாயகர் உள்ளார். 

🌼இன்னும் சற்று மேலே ஏறினால்,
மலைக் குன்றின் உச்சியில் தெற்குப் பார்த்த ஒரு பெரிய மண்டபத்துடன் கூடிய கருவரை வளாகத்தில்  ஸ்ரீ ராஜேராஜேஸ்வரி பெரிய உருவத்துடன் அழகிய வடிவில் காட்சியருளுகிறார். 

🏵️சுற்றிலும் 1008 லிங்கங்களும், பாதை முழுதும்  உள்ளது. எண்ணிக்கைக்காக எண்கள் மற்றும், ஒவ்வொரு சிவலிங்கத்திற்கும் தனித்தனிப் பெயரும் சூட்டப்பட்டுள்ளன. 

🍀மேலிருந்து சேலம் மாநகர் மற்றும் ஏற்காடு மலைகள் கண்களுக்குப் பெரிய விருந்து, 

🪴மலை மீதுள்ள ஆலயம் காலை 7.30 முதல் 12.30 வரையிலும், மாலை 4.00 மணி முதல் 8.00 மணிவரையிலும் திறந்து இருக்கும்.
மலைப் பாதை காலை 9 முதல் மாலை 8.வரை திறந்திருகும். (for general viewing) 

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ 

☘️சேலம் சங்ககிரி பிரதானசாலையில், விநாயகா மெடிக்கல் காலேஜ் அடுத்துஅரியானூர் என்ற ஊரில் இந்த மலைக்குன்று ஆலயம் உள்ளது. உள்ளே நுழைய தனிவழி, வாகணங்கள் நிறுத்த இடம் உள்ளது. 

🌴மலை ஏற்றம் முன்பு, ஒரு பெரிய விநாயகர் மண்டபத்துடன் அமர்ந்துள்ளவர். அவரை வணங்கி பின்தொடர்ந்து மலைப்பாதையில் செல்ல வேண்டும்.
அருகில், நேரடியாக அம்மன் ஆலயம் உச்சி மலைக்கு செல்ல, தனி படிக்கட்டுப்பாதையும் உள்ளது. 

🏔️இரு சக்கர வாகனங்கள் உச்சிவரை செல்ல அனுமதிக்கின்றனர். 

🌳நிறைய மரங்கள் செடிகள் இருப்பதால் மலைப்பாதை சரிவு நல்ல முறையில் இருப்பதால், முதியோர்களும் சரிவுப்பாதையில் சென்று தரிசனம் செய்துவரமுடிகிறது. 

🌲மிகவும் அமைதியாகவும், எழிலாகவும், உள்ளதால் மலையில் ஏறி தரிசனம் செய்து வரலாம். 

☘️நாங்கள், பிரதான சாலையில் எதிர்புறத்தில் உள்ள ஒரு உணவகத்தில் மதிய உணவு முடித்துக் கொண்டு, மலையில் ஏறி ஓய்வு எடுத்தோம். மாலை 4 மணி அளவில் ஆலயம் திறந்தவுடன் தரிசித்து திரும்பினோம். 

🍃அடிவாரத்தில், சிறிய தேனீர் கடை உள்ளது. தனி வனிக வளாகம் இல்லை. மலை மீதும் வேறு எந்தக் கட்டிடமும் இல்லை.  கழிப்பறை கட்டடம் மலை மேலே உள்ளது. 

🍄ஆலயம் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. கட்டணம் எங்கும் கிடையாது. 

🌱சேலத்தில் உள்ள ஆன்மீக சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. 

🙇நன்றி🙏
🛕#சுப்ராம்ஆலயதரிசனம் 8.11.2025🛐
# என்றும்அன்புடன்💟
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🙇🛕
#ஆன்மிகபரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🗻 

⛳ #பிரதோஷேக்குழுயாத்ரா  - 
சேலம் 8, 9 நவம்பர், 2025.
🛕 #ஆன்மீகதலயாத்திரை:
நன்றி🙏
8.11.2025
🕊️🔱🛐🙏🇮🇳🙇⛳🛕🌏🗻

No comments:

Post a Comment

சுவாமிமலை முருகன் கோவில் (Arulmigu Swaminatha Swamy Temple) அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடு.

சுவாமிமலை முருகன் கோவில் (Arulmigu Swaminatha Swamy Temple) அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடு. ⛳தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே காவிரி ...