Monday, November 24, 2025

பாலசுப்பிரமணியர் கோயில், வடசென்னிமலை, காட்டுக்கோட்டை - சேலம் - பஞ்சபூத தலங்கள் அருகில் - பிரதோஷக்குழு யாத்ரா - 9.11.2025

பாலசுப்பிரமணியர் கோயில், வடசென்னிமலை, காட்டுக்கோட்டை - சேலம்

இருப்பிடம்
🌼சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம் காட்டுக்கோட்டை அருகே வடசென்னி மலை முருகன் கோயில் அமைந்துள்ளது. குன்று அமைந்துள்ள இடங்கள் எல்லாம் குமரன் குடியிருக்கும் இடம். அந்தவகையில் வட சென்னி மலையும் இயற்கையாக அமைந்த மலையாகும்.

🌼 இம் மலை மீது அமைந்த கோவிலில் வர்ணஸ்ம தர்ம விதிகளைக் குறிக்கும் வகையில் முருகன் 3 வடிவங்களில் காட்சியளிக்கிறார்: 
முருகன் குழந்தை பருவத்துடனும் , திருமணக் கோலத்திலும் , முதிர்ந்த பருவ தண்டாயுதபாணியாகவும் மக்களுக்கு காட்சித் தருகிறார்.

🏵️மூலவர்: பாலசுப்ரமணியர் 
உற்சவர்: சுப்பிரமணியர் ,வள்ளி, தெய்வானை 
தீர்த்தம் (புனித நீர்): வசிஷ்ட தீர்த்தம்

தல வரலாறு
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு, வடசென்னிமலை பகுதியைச் சுற்றிய கிராமங்களைச்சேர்ந்த சிறுவர்கள் மலை அடிவாரத்தில் ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அழகு மிகுந்த ஒரு சிறுவன், அடிவாரத்தில் இருந்து மேல் நோக்கி ஓடுவதை அவர்கள் கண்டனர். அந்த சிறுவனை பின் தொடர்ந்து கிராமத்துச் சிறுவர்களும் சென்றனர். மலை உச்சியை அடைந்ததும் அந்தச் சிறுவன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று பேரொளிப் பிழம்புடன் மறைந்து விட்டான். இதைக் கண்ட கிராமத்து சிறுவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். அவர்கள் இந்தக் காட்சியை ஊரில் உள்ள பெரியவர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து ஊர் மக்கள் அனைவரும், சிறுவர்கள் கூறிய இடத்திற்குச் சென்று பார்த்தனர். அங்கு வடிவமற்ற மூன்று சிலைகள் தோன்றி இருந்தன. அந்த இடத்தில் வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம் வைத்து வழிபட்டதற்கான அறிகுறியும் காணப்பட்டன. இதனால் ஊர் பெரியவர்கள் "முருகப்பெருமான் இந்த இடத்தில் கோவில் கொள்ள விரும்புகிறார். எனவே அவருக்கு இங்கு கோவில் கட்டி வழிபடுவோம்" என்று முடிவு செய்தனர்.
பின்னர் மூன்று சிலைகளில் பெரியது முருகன் என்றும், சிறியவை இரண்டும் வள்ளி, தெய்வானை என்றும் கருதி ஊர் மக்கள் வழிபட்டு வந்தனர். அந்த இடத்தை தூய்மைப் படுத்தி, சிலைகளைச் சுற்றி, கற்களை அடுக்கி வைத்து மறைவை ஏற்படுத்தினர். தொடர்ந்து சுற்று வட்டார கிராம மக்களின் முயற்சியால் அங்கு சிறு கோவில் கட்டப்பட்டது. தற்போது மகா மண்டபத்துடன் கோவில் அழகாக காட்சி அளிக்கிறது.

முருகன் சிலை
💦சுமார் 300 ஆண்டுகால பழமையான இக்கோயிலில் சுயம்பு வடிவமாக முருகன் வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பிறகு வடகுமரை என்ற ஊரை சார்ந்த அப்பன்ன சுவாமிகள் வைணவ சமயத்தின் மீது அதிகம் பற்றுள்ளவர். இருப்பினும் வடசென்னிமலை சுயம்புவாக உள்ள முருகனிடத்தில் அதீத பக்தி கொண்டவர். இதனால் முருகனின் குழந்தை வடிவ சிலை ஒன்றை செய்வதற்காக காஞ்சிக்கு சென்று மாகாப்பெரியவரை நேரில் சந்தித்து வடசென்னிமலை முருகன் கோயிலுக்கு குழந்தை வடிவ சிலையை எந்த சிற்பியிடம் செய்தால் சிலை நன்றாக இருக்கும் என்று கேட்டார். அதற்கு மகாப்பெரியவர் திருவண்ணாமலையில் உள்ள இரமணர் ஆசிரமத்தில் வைத்தியநாத சிற்பி என்றொருவர் இருக்கிறார் அவரிடம் சிலையை செய்து பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். 

💦உடனே அப்பன்ன சுவாமிகள் திருவண்ணாமலைக்குச் சென்று இரமணர் ஆசிரமத்தில் இருக் கும் வைத்தியநாத சிற்பியை சந்தித்தார். ஆனால் வைத்தியநாத சிற்பிக்கு பார்வை தெரியாத குருடராகவும் , வாய்ப்பேச முடியாத ஊமை யாகவும் இருப்பதை கண்டு பயந்தார். பார்வையற்ற இந்த சிற்பியால் எப்படி சிலை செய்யமுடியும் என்ற சந்தேகத்தோடு இருந்தார். காஞ்சிப்பெரியவர் தம்மை சோதிப்பதாக நினைத்து வைத்தியநாத சிற்பியிடம் வடசென்னி மலை முருகன் கோயிலுக்கு குழந்தை வடிவ சிலை ஒன்றை வடித்து தருமாறு உரத்த குரலில் வேண்டினார். சைகையால் சம்மதம் தெரிவித்த வைத்தியநாத சிற்பி சில தினங்களிலேயே அற்புதமான அழகிய முருகனின் குழந்தை வடிவ சிலையை செய்து அப்பன்ன சுவாமியிடம் தந்தருளினார்.

ஆலயசிறப்பு

🛕மலை மீதுள்ள கோவிலுக்குச் செல்லும் வழியில், முதலில் மலை அடிவாரத்தில் வரசக்தி விநாயகர் வீற்றிருக்கிறார். இவரை வணங்கி விட்டுதான், நாம் மலை மீது ஏற வேண்டும். முன்னதாக நம்மை வரவேற்கும் விதமாக, மலையடிவாரத்தில் வடசென்னிமலை கோவிலுக்கான நுழைவு வாசல் வளைவு இருக்கிறது. இதன் பின்புறத்தில் வடசென்னிமலையின் அழகிய தோற்றத்தை காணலாம். 

🏵️வரசக்தி விநாயகரை தரிசித்து விட்டு, படிக்கட்டுகள் வழியாகவும், சாலை மார்க்கமாகவும் மலை மேல் உள்ள முருகன் கோவிலுக்குச் செல்லலாம். சாலைமார்க்கமாக செல்லும் போது 5-க்கும் மேற்பட்ட கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. படிக்கட்டு வழியாக செல்லும் போது அவ்வை சன்னிதி, உடும்பன் சன்னிதியைக் காணலாம்.

🏵️மலையை அடைந்ததும், கோவிலின் ராஜகோபுரத்தை தரிசிக்கலாம். இதைத்தொடர்ந்து 16 கால் மகா மண்டபம் உள்ளது. 50 அடி நீளம், 50 அடி அகலம் கொண்ட இந்த மகா மண்டபம், கடந்த 2001-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த மண்டபத்துக்குள் உற்சவர் பாலசுப்பிரமணியசாமி, வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். அருகில் பாலதண்டாயுதபாணி உள்ளார். அதையடுத்து குழந்தை வடிவில் மூலவர் பாலசுப்பிரமணியர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 

🌟இக்கோயில் மேற்கு நோக்கியவாறு அமைத்துள்ளது. மூன்று சன்னதிகளைக் கொண்ட இக்கோயிலில் முருகனின் குழந்தை பருவ முருகனானவும், முதிர்ந்த பருவ தண்டாயுதபாணியாகவும், வள்ளி , தெய்வானையுடன் திருமணக்கோலத்தில் காட்சியளிக்கிறார். குறிப்பாக முருகனின் மூன்று பருவத்தையும் ஒரேயிடத்தில் இக்கோயிலில் மட்டுமே காணமுடியும். 

🪷கருவறையில் சிரிக்கும் குழந்தையாகவும், அருகில் துறவியாக வள்ளி, குடும்பத்தலைவராகவும் தேவசேனா.

🪷இக்கோயிலில் உள்ள அபூர்வ சிலைகள் இவை அனைத்தும் சுயம்புவாகும்.

🌼கோவிலில் 5 அடுக்கு ராஜகோபுரம் கம்பீரமாக உள்ளது. ஆதிவாரவிநாயகராக கணபதி பகவான் அருள்பாலிக்கிறார்.  

பிரார்த்தனைகள்
🪷இந்த ஆலயம் குழந்தை வரம் அருளும் திருத்தலமாக விளங்குகிறது

🪷இங்குள்ள குழந்தை வடிவில் உள்ள முருகனை அம்மாவசை முடிந்து வளர்பிறை சஷ்ட்டியில் விரதம் இருந்து வழிபட்டு வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதாவது சஷ்ட்டி எனும் திதியில் விரதம் இருந்தால் அகம் என்னும் பையில் கருவளரும் என்பது ஐதீகம். 

🪷இங்கு குழந்தை வடிவில் முருகன் இருப்பதால்தான், இந்தக் கோவிலில் குழந்தை இல்லாத தம்பதிகள் வேண்டிக்கொண்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகமாக இருக்கிறது

🪷இங்குள்ள முருகனிடம் வேண்டிக்கொண்ட பின், குழந்தை பாக்கியம் கிடைத்த தம்பதிகள், தங்களது வேண்டுதல் நிறைவேறியதும், கரும்பில் தொட்டில் கட்டி அதில் குழந்தையை வைத்து கோவிலை வலம் வருவார்கள். இன்னும் சிலர் கோவில் தேரோட்டத்தின் போது, ஒருபுறம் குழந்தையின் பெற்றோர் நின்று கொண்டும், மறுபுறம் உறவினர்கள் நின்றும் குழந்தையை தேருக்கு முன்பாக தூக்கிப்போட்டு பிடித்து வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.

🍀கிரிவலம் - மலையைச் சுற்றி நடப்பது - தீய மற்றும் தீங்கு விளைவிக்கும் சக்திகளிடமிருந்து தங்களைப் பாதுகாக்கும் என்று பக்தர்கள் வலுவான நம்பிக்கை கொண்டுள்ளனர்.

🌟 பெரும்பாலான மக்களும் தங்கள் மன அமைதிக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். கட்டடம் /வீடு, அல்லது நிலம் வாங்க விரும்புவோர் கிரிவலத்தின் போது அவ்வையார் சிலைக்கு முன்னால் கையில் ஒரு கல்லை வைத்து பிரார்த்தனை செய்கிறார்கள். 

🏵️நன்றி செலுத்தும் விதமாக பக்தர்கள் வஸ்திரங்களைச் செலுத்துகிறார்கள், சிறப்பு பூஜைகளைச் செய்கிறார்கள் மற்றும் இறைவனுக்கு அபிஷேகம் செய்கிறார்கள். 

விழாக்கள்

🌼பங்குனி உத்திரம் மார்ச் - ஏப்ரல் மாதங்களில் கொண்டாடப்படுகிறது. ஸ்கந்த சஷ்டி அக்டோபர் - நவம்பர் மாதங்களில் கொண்டாடப்படுகிறது. திருக்கார்த்திகை நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கொண்டாடப்ப|டுகிறது. ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் தைப்பூசம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் பல்வேறு வழிபாடுகளை மேற்கொண்டு இந்த விழாக்களில் அதிகமாக பங்கேற்கிறார்கள்.
இந்த விழாக்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. 

கோயில் நேரங்கள்:
 🔱காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை.

அமைவிடம்
சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்திலும், தலைவாசலில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், வடசென்னிமலை அமைந்திருக்கிறது. சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தலைவாசல் அருகே காட்டுக்கோட்டை என்ற இடத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில்தான் வடசென்னிமலை உள்ளது. ஆத்தூர், தலைவாசலில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆத்தூரில் இருந்து கள்ளக்குறிச்சி செல்லும் பஸ்கள் காட்டுக்கோட்டையில் நின்று செல்லும்.

⛳ #பயண அனுபவகுறிப்புகள்🕊️
⛳நங்கள் சிறிய பேருந்தை கொண்டிருந்ததால், வாகனப்பாதையை தேர்வு செய்து அதன் வழியில் மேலே சென்று தரிசித்தோம்..
⛳பக்தர்கள் அளவு வெகு சுமாராக இருந்ததால், எளிதான தரிசனம் கிடைத்தது.
⛳மலை மீது வேறு கடைகள், கட்டிடங்கள் ஏதும் கிடையாது.
⛳மிக மிக அமைதியான இடம் பக்திபூர்வமாக தரிசித்து வரலாம்.

🙇நன்றி🙏
🛕#சுப்ராம்ஆலயதரிசனம் 9.11.2025🛐
# என்றும்அன்புடன்💟
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🙇🛕
#ஆன்மிகபரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🗻

⛳ #பிரதோஷேக்குழுயாத்ரா 
🛕#ஆன்மீகதலயாத்திரை: 
சேலம் 8, 9 நவம்பர், 2025.
நன்றி🙏 9.11.2025
🕊️🔱🛐🙏🇮🇳🙇⛳🛕🌏🗻

No comments:

Post a Comment

உலகியநல்லூர் -அர்த்தநாரீஸ்வரர் கோயில் - சேலம் - பஞ்சபூத தலங்கள் அருகில் - பிரதோஷக் குழு யாத்ரா - 9.11.2025

உலகியநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயில்  🛕தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உலகியநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். 🛕அ...