Monday, November 24, 2025

உலகியநல்லூர் -அர்த்தநாரீஸ்வரர் கோயில் - சேலம் - பஞ்சபூத தலங்கள் அருகில் - பிரதோஷக் குழு யாத்ரா - 9.11.2025

உலகியநல்லூர்
அர்த்தநாரீஸ்வரர் கோயில்

 🛕தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உலகியநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும்.

🛕அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோவில்
அமைவிடம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், 
 கள்ளக்குறிச்சி வட்டம் , உலகியநல்லூர்.

கோயில் தகவல்
🛕மூலவர்: அர்த்தநாரீஸ்வரர்
இறைவன்:ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர்
இறைவி: ஸ்ரீபிரஹன்நாயகி, பெரிய நாயகி
பதினான்காம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்டது.
🛕2003ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.
இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ளது.

🛕கோயில் அமைப்பு

🙇முதலில் இந்த ஆலயம் மூன்றாம் குலோத்துங்கன்- வீரராஜேந்திர சோழ மன்னாரால் கி.பி.1184 லில் கட்டப்பட்டது. செழியத் தாரையர்கள் மரபில் வந்த அந்தால தீர்த்த செழியன் ராஜகோபுரம் கட்டினான்
🛕 அர்த்தநாரிஸ்வரர் ஆலயத்தின் கருவரை மற்றும் அர்த்த மண்டபம் கி.பி 1184-ல் மூன்றாம் குலோத்துங்கன் என்று பெயர் பெற்ற வீரராஜேந்திரன் சோழர் காலத்தில் கட்டப்பட்டது.

🛕 ஆலய ஏழு நிலைக் கோபுரம், மதில்கள் மற்றும் பிற பகுதிகள் சோழ மன்னர்கள் ஆட்சிப் பிறகு வந்த குறுநில மன்னன் அந்தாலந்தீர்த்த செழியன் காலத்தில் கட்டப்பட்டது..

⚡இக்கோயிலில் அர்த்தநாரீஸ்வரர், அம்பாள் சன்னதிகளும், விநாயகர், முருகர், நவகிரகம், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் உபசன்னதிகளும் உள்ளன. 

⚡இங்குக் கோயில் கல்வெட்டு உள்ளது. 

⚡இக்கோயிலில் ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மரபு சாராத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகின்றது.

🌟மிகப்பெரிய கற்றளி ஆலயம்.
🌟கிழக்குப் பார்த்த ஆலயங்கள்
🌟சுவாமி வலது புறம் அம்பாள் தனி சன்னதி 
🌟சிவாலயவிதிகள்படி மற்ற தெய்வ சிலைகளும் பிரகாரத்தில் அமைந்துள்ளன.
🌟அம்பாள் சன்னதி முன் ராகு கேது சன்னதி புதிதாக அமைக்கப்பட்டுள்ளது
🌟ஆலயவளாகத்தில் வடகிழக்கில் குளம் ஒன்றும் உள்ளது.

மக்களின் விழிப்பு
🛕சின்னசேலம் அருகே உலகியநல்லூர் கிராமத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. 

🛕இந்த கோவிலில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 
அதன் பிறகு முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால், இந்த கோவில் சிதிலமடைந்தது. இதனால் கோவிலில் அன்றாட பூஜைகள் கூட நடத்தப்படவில்லை. 
கல் வெட்டில் உள்ள கோயிலுக்குரிய 4 வேலி நிலம் முதலியவை இப்போது யாரிடம் உள்ளது என்று தெரியவில்லையாம்!

🍀இந்த நிலையில் கோவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதி பக்தர்கள் முடிவு செய்தனர். அதனை தொடர்ந்து பக்தர்கள், திருப்பணி உபயதாரர்கள், பொதுமக்கள், நன்கொடையாளர்கள் ஒன்று சேர்ந்து கோவிலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
2023ல் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.

(வலைதள - தகவல்கள்)

⛳ #பயண அனுபவகுறிப்புகள்🕊️

🪴மிகப்பழமையான ஆலயம் மீட்கப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டு பராமரிப்பில் உள்ளது.
💦குருக்களுக்கு முன் தகவல் தந்து தரிசித்தோம்.
💦ஆலயம் வரை சாலைவசதிகளும் நல்ல நிலையில் உள்ளது.
💦சிறிய கிராமம் பெரிய கடைகள், வசதிகள் இல்லை. 
💦ஆலயம் நித்திய கால பூசையுடன், வழிபாட்டில் உள்ளது.

🙇நன்றி🙏
🛕#சுப்ராம்ஆலயதரிசனம் 9.11.2025🛐
# என்றும்அன்புடன்💟
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🙇🛕
#ஆன்மிகபரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🗻

⛳ #பிரதோஷேக்குழுயாத்ரா 
🛕#ஆன்மீகதலயாத்திரை: 
சேலம் 8, 9 நவம்பர், 2025.
நன்றி🙏 9.11.2025
🔱🧘🏼♻️😂⛳🙏🛕🏘️💐⛳🛐

கள்ளக்குறிச்சி மாவட்டம் ,சின்னசேலம் அடுத்த தென்பொன்பரப்பி கிராமத்தில் அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. - சேலம் - பஞ்சபூத தலங்கள் அருகில் - பிரதோஷக்குழு யாத்ரா - 9.11.2025

🪷கள்ளக்குறிச்சி மாவட்டம் ,சின்னசேலம் அடுத்த தென்பொன்பரப்பி கிராமத்தில் அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

🪷இச்சிவாலயத்தின் மூலவர் சொர்ணபுரீசுவரர் என்றும், அம்பிகை உமையாள் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலம் 1300 ஆண்டுகள் பழமையானதாகும்.

தல வரலாறு

🛐காகபுஜண்டர் 18 சித்தர்களின் தலைவராக கருதப்படுகிறார். அவர் இத்தலத்தில் 16 ஆண்டுகள் கடும்தவமிருந்து அதன் பயனாக 16 முகங்கள் கொண்ட சோடச லிங்கத்தின் தரிசனம் பெற்றார். அதைப் போன்ற சிவலிங்கத்தினை உருவாக்கி தென் பொன்பரப்பி பகுதியை ஆட்சி செய்த வானகோவராயன் எனும் மன்னனிடம் அளித்தார். மன்னர் இந்த லிங்கத்தினை வைத்து கோயில் அமைத்தார்.

தல சிறப்பு

⛳இச்சிவாலயத்தின் மூலவரான சொர்ணபுரீசுவரர் லிங்க வடிவில் காட்சிதருகிறார். இந்த லிங்கம் சோடச லிங்கம் எனப்படும் 16 பட்டைகளுடன் கூடியதாகும்.

⛳இங்கு 1300 ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்களின் தலைமை குருவாக கருதப்படும் காகபுஜண்டர், 16 ஆண்டுகால தவத்தின் பலனாக 16 முகங்களுடன் கூடிய சிவலிங்கத்தை தரிசனம் செய்தார்.அதேபோல் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, எதிர்காலத்தில் பக்தர்கள் வணங்க வேண்டும் என கருதினார். அப்போது, தென்பொன்பரப்பி பகுதியை ஆட்சி செய்த, வானகோவராயன் என்ற மன்னன் மற்ற சிவாலயங்களில் இல்லாத சிறப்புகளுடன் இந்த லிங்கத்தை உருவாக்கினார் என்பது வரலாறு.இக்கோவிலில், சிவலிங்கம் 16 பட்டைகளுடன் அருள்பாலிக்கிறார்.

ஆலய அமைப்பு

🛕மிகப்பெரிய கற்றளி ஆலயமாக இருந்து காலவெள்ளத்தில் சிதைக்கப்பட்டு,  தற்போது மீட்கப்பட்டு வருகிறது.

🛕கிழக்குப் பார்த்த ஆலயம். கருவரை விமானம் தஞ்சாவூர் விமான அமைப்பை ஒத்து இருக்கிறது.

🛕ராஜகோபுரம் இல்லை. ரிஷபத்தில் சுவாமி அம்பாள் காட்சிக் கோபுரம் உள்ளது. ஆலயம் புதிய சுற்றுச் சுவற்றுடன் உள்ளது.

🌼மிக மிகப்பழமையான ஆலயம் சிதைந்து விட்டிருந்து தற்போது திருப்பணிகள் தொடங்கி நடை பெற்று  வருகின்றன.

🌼ஏகப்பிரகாரம், தனி விநாயகர் மற்றும் முருகன் மயில்மீதமர்ந்து, வள்ளிதெய்வானையுடன், 
விநாயகர், தட்சினாமூர்த்தி, விஷ்ணு, பிரும்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், கருவரைக் கோஷ்ட்டத்தில் அற்புதமான கல்சிலைகள்.

 ⛳கருவரை, அர்த்தமண்டபம், முன்மண்டபத்துடன் உள்ளது.  நவபாஷாணத்துக்கு நிகரான சூரியகாந்த தன்மை கொண்ட ஒரே கல்லினால் செய்யப்பட்ட லிங்கம் இது. இந்த கல்லை கையால் தட்டிபார்த்தால், வெண்கலச் சத்தம் எழுவது பிரத்யேக சிறப்பிற்குச் சான்று.

🛕கருவறை வாசலில் துவாரபாலகர்களுக்கு பதிலாக, இரு லிங்கங்கள் ,. மூலஸ்தானத்தில் காகபுஜண்டரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

🌼சுமார் 5.5 அடி உயரத்திற்கு, பிரம்மா மற்றும் விஷ்ணு பீடங்கள் மீது கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது. உலகையே கட்டியாளும் மும்மூர்த்திகளும் இவ்வாறு ஒரே வடிவமைப்பில் இணைந்திருப்பது தனிச்சிறப்பு ஆகும்.

🌼அதேபோல், காகபுஜண்டர் இந்த கோவிலின் அருகில் சமாதி அடைந்ததை ஒட்டி சமாதி பீடம் அமைக்கப்பட்டு விளக்கு ஏற்றப்பட்டு வருகிறது.

 🍀எல்லா சிவாலயங்களிலும் நந்திதேவர் தனி மண்டபத்தில் உள்ளார். தன் தலையை ஒரு பக்கமாக சாய்த்திருப்பதைக் காணலாம். ஆனால், இக்கோவிலில் பால நந்தியாக வீற்றிருப்பதுதால், கொம்புகளின் இடையூறின்றி பிரதோஷ காலங்களில் நேரடியாக சிவதரிசனம் கிடைக்கிறது.
🌼சுவாமி இடது புறம் அம்பாள் தனி சன்னதி கிழக்கு நோக்கிய அமைப்பு. முன்புறம் தனி நந்தி.

🛕இத்தலத்து அம்பாள் மகாலட்சுமி அம்சத்துடன் சுவர்ணாம்பிகை என்ற பெயருடன் நின்ற கோலத்தில் அருளுகிறாள். இவள் கிழக்கு பார்த்து நின்றிருந்தாலும், இவளது முகம் சிவன் இருக்கும் திசைநோக்கி சற்று திரும்பியுள்ளது.

சூரிய பூசை

🏵️ஆவணி பவுர்ணமி மற்றும் பங்குனி உத்திரத்தில் காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் பாலநந்தியின் இரு இளம் கொம்புகளின் வழியே சூரிய ஒளி இரு கோடுகளாக இறங்கி கர்ப்பகிரகத்தில் உள்ள சிவலிங்கத்தில் படிவதைக் காணலாம். (பாலநந்திக்கும் கருவறைக்கும் உள்ள தூரம் 70 அடியாகும்).
🌼இந்த லிங்கம் நவபாசாணத்துக்கு நிகரான சூரியகாந்த தன்மை உடையது. மேலும் 5.5 அடி உயரம் கொண்டது.
🌼காகபுஜண்டரின் சமாதி இக்கோயிலின் வடகிழக்கில் உள்ளது. 
🌼மேலும், ராகு கால வேளையில் தேன், தயிர், பால் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் நடக்கிறது. சிவனுக்கு பின்னால் மகாவிஷ்ணு ருத்ராட்சம் அணிந்து காட்சி தருகிறார். சிவனும் தானும் ஒன்றே என்பதை காகபுஜண்டருக்கு உணர்த்துவதற்காக இவ்வாறு காட்சி தருகிறார்.

விழாக்கள்
 
🌼ஆவணி பவுர்ணமி, பங்குனி உத்திரம், பிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்ட நாட்களில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டும் 

மகிமைகள்

🌼திருமணத்தடையின் காரணமாக நீண்ட காலமாக திருமணமாகாதவர்கள், 16 பிரதோஷ தினங்களில் தொடர்ந்து ஈசனை தரிசித்து வந்தால் திருமணத்தடை நீங்கும். ராகு, கேது, செவ்வாய் மற்றும் களத்திரதோஷம் உள்ளவர்கள் மற்றும் பலவித கிரக தோஷங்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், மனபாரம் உள்ளவர்கள், நிலத்தகராறு, பில்லிசூனியம் ஏவல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், சொர்ணபுரீஸ்வரரை தொடர்ந்து பிரதோஷ காலங்களில் வழிபட்டு வந்தால் பிரச்சனைகள் தீருவதோடு, கைவிட்டுப் போன சொத்துக்கள் அனைத்தும் திரும்ப கிடைக்கும். மேலே குறிப்பிட்ட  பிரச்சனைகளுக்கு தேன் அபிஷேகம் செய்தால் சுப பலன்கள் கிடைக்கும். 

🌼செவ்வாய், வெள்ளி ஞாயிறு, ராகு காலங்களும் மற்றும் திங்கட்கிழமை, பெளர்ணமி, அமாவாசை, பிரதோஷ நாட்களும், தேன் அபிஷேகம் செய்ய உகந்த நாட்களாகும். தோஷமுடையவர்கள் தேன் அபிஷேகம் செய்த தேனை 16 தினங்களுக்கு காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சுப பலன்கள் கிடைக்கும்.
🏵️எல்லா சிவாலயங்களிலும் நந்திதேவர் தன் தலையை ஒருபக்கமாகசாய்த்திருப்பதைக் காணலாம். ஆனால், இக்கோயிலில் பால நந்தியாக வீற்றிருப்பதால், கொம்புகளின் இடையூறின்றி பிரதோஷ காலங்களில் நேரடியாக சிவதரிசனம் கிடைக்கிறது.

🛕இக்கோயிலானது வாயு ஸ்தலத்திற்கும், பஞ்சபூத ஸ்தலத்திற்கும் இணையாக இருப்பதால் இதன் கருவறையானது மிகவும் உக்கிரமானதாக இருக்கும். இதன் கருவறையில் ஏற்படும் தீபமானது துடித்துக்கொண்டே இருக்கும் என்று காகபுஜண்டர் நாடி சுவடியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

🌼இதனால் கருவறையின் மையத்தில் அமைந்த தீபம் மட்டும் இன்றும் துடிப்புடன் எரிந்து கொண்டிருப்பது நாடி சுவடியின் பூரணத்துவத்தை நமக்கு உணர்த்துவதாக உள்ளது.

🌼மேலும் ராகு கால வேளையில், தேன், பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள், விபூதி, சந்தனம், திருமஞ்சனம், கரும்புச்சாறு, எலுமிச்சம்பழ சாறு, பஞ்சாமிர்தம், நெய், அரிசிமாவு, நல்லெண்ணெய், புண்ணிய நீர் தீர்த்தம் போன்ற 16 வகை அபிஷேகம் சிவலிங்கத்தின் உச்சியில் அபிஷேகம் ஆரம்பித்ததும் அவைகள் தானாகவே சிறிது பிசிறு கூட இல்லாமல் தனித்தனியாக 16 கோடுகளாக லிங்கத்தின் அடிபாகம் வரை வந்து லிங்கத்தின் பீடத்தில் ஐக்கியமாவதைக் காணலாம்.

🌟ராகு தோஷ நிவர்த்திக்காக இந்த நந்திக்கு பால் அபிஷேகம் செய்யப்படுகிறது. அப்போது அபிஷேகப்பால் நீல நிறமாக மாறுகிறது. சிவனுக்கு பின்னால் மகாவிஷ்ணு ருத்ராட்சம் அணிந்து காட்சி தருகிறார்.
🌼 சிவனும் தானும் ஒன்றே என்பதை காகபுஜண்டருக்கு உணர்த்துவதற்காக இவ்வாறு காட்சி தருகிறார்.காகபுஜண்டர் இந்த கோயிலின் அருகில் சமாதி அடைந்ததை ஒட்டி சமாதி பீடம் அமைக்கப்பட்டு திருவிளக்கு ஏற்றப்பட்டு வருகிறது.

⛳ #பயண அனுபவகுறிப்புகள்🕊️

🪴மிகப்பழமையான ஆலயம் மீட்கப்பட்டு வருகிறது.
💦ஆலயம் வரை சாலைவசதிகளும் நல்ல நிலையில் உள்ளது.
💦சிறிய கிராமம் பெரிய கடைகள், வசதிகள் இல்லை. 
💦ஆலயம் நித்திய கால பூசையுடன், வழிபாட்டில் உள்ளது.
💦திருப்பணி வேலைகளும் நடைபெற்று வருகின்றன.
💦காகபுஜண்டர் மற்றும் அனைத்து சன்னதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றது.
💦பிரதோஷம் மிகவும் விஷேசம்.
💦ஒரு முறையாவது இந்த பழமையான புராதான ஆலயம் சென்று தரிசிக்கலாம்.

🙇நன்றி🙏
🛕#சுப்ராம்ஆலயதரிசனம் 9.11.2025🛐
# என்றும்அன்புடன்💟
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🙇🛕
#ஆன்மிகபரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🗻

பாலசுப்பிரமணியர் கோயில், வடசென்னிமலை, காட்டுக்கோட்டை - சேலம் - பஞ்சபூத தலங்கள் அருகில் - பிரதோஷக்குழு யாத்ரா - 9.11.2025

பாலசுப்பிரமணியர் கோயில், வடசென்னிமலை, காட்டுக்கோட்டை - சேலம்

இருப்பிடம்
🌼சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம் காட்டுக்கோட்டை அருகே வடசென்னி மலை முருகன் கோயில் அமைந்துள்ளது. குன்று அமைந்துள்ள இடங்கள் எல்லாம் குமரன் குடியிருக்கும் இடம். அந்தவகையில் வட சென்னி மலையும் இயற்கையாக அமைந்த மலையாகும்.

🌼 இம் மலை மீது அமைந்த கோவிலில் வர்ணஸ்ம தர்ம விதிகளைக் குறிக்கும் வகையில் முருகன் 3 வடிவங்களில் காட்சியளிக்கிறார்: 
முருகன் குழந்தை பருவத்துடனும் , திருமணக் கோலத்திலும் , முதிர்ந்த பருவ தண்டாயுதபாணியாகவும் மக்களுக்கு காட்சித் தருகிறார்.

🏵️மூலவர்: பாலசுப்ரமணியர் 
உற்சவர்: சுப்பிரமணியர் ,வள்ளி, தெய்வானை 
தீர்த்தம் (புனித நீர்): வசிஷ்ட தீர்த்தம்

தல வரலாறு
சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு, வடசென்னிமலை பகுதியைச் சுற்றிய கிராமங்களைச்சேர்ந்த சிறுவர்கள் மலை அடிவாரத்தில் ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அழகு மிகுந்த ஒரு சிறுவன், அடிவாரத்தில் இருந்து மேல் நோக்கி ஓடுவதை அவர்கள் கண்டனர். அந்த சிறுவனை பின் தொடர்ந்து கிராமத்துச் சிறுவர்களும் சென்றனர். மலை உச்சியை அடைந்ததும் அந்தச் சிறுவன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று பேரொளிப் பிழம்புடன் மறைந்து விட்டான். இதைக் கண்ட கிராமத்து சிறுவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். அவர்கள் இந்தக் காட்சியை ஊரில் உள்ள பெரியவர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து ஊர் மக்கள் அனைவரும், சிறுவர்கள் கூறிய இடத்திற்குச் சென்று பார்த்தனர். அங்கு வடிவமற்ற மூன்று சிலைகள் தோன்றி இருந்தன. அந்த இடத்தில் வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம் வைத்து வழிபட்டதற்கான அறிகுறியும் காணப்பட்டன. இதனால் ஊர் பெரியவர்கள் "முருகப்பெருமான் இந்த இடத்தில் கோவில் கொள்ள விரும்புகிறார். எனவே அவருக்கு இங்கு கோவில் கட்டி வழிபடுவோம்" என்று முடிவு செய்தனர்.
பின்னர் மூன்று சிலைகளில் பெரியது முருகன் என்றும், சிறியவை இரண்டும் வள்ளி, தெய்வானை என்றும் கருதி ஊர் மக்கள் வழிபட்டு வந்தனர். அந்த இடத்தை தூய்மைப் படுத்தி, சிலைகளைச் சுற்றி, கற்களை அடுக்கி வைத்து மறைவை ஏற்படுத்தினர். தொடர்ந்து சுற்று வட்டார கிராம மக்களின் முயற்சியால் அங்கு சிறு கோவில் கட்டப்பட்டது. தற்போது மகா மண்டபத்துடன் கோவில் அழகாக காட்சி அளிக்கிறது.

முருகன் சிலை
💦சுமார் 300 ஆண்டுகால பழமையான இக்கோயிலில் சுயம்பு வடிவமாக முருகன் வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பிறகு வடகுமரை என்ற ஊரை சார்ந்த அப்பன்ன சுவாமிகள் வைணவ சமயத்தின் மீது அதிகம் பற்றுள்ளவர். இருப்பினும் வடசென்னிமலை சுயம்புவாக உள்ள முருகனிடத்தில் அதீத பக்தி கொண்டவர். இதனால் முருகனின் குழந்தை வடிவ சிலை ஒன்றை செய்வதற்காக காஞ்சிக்கு சென்று மாகாப்பெரியவரை நேரில் சந்தித்து வடசென்னிமலை முருகன் கோயிலுக்கு குழந்தை வடிவ சிலையை எந்த சிற்பியிடம் செய்தால் சிலை நன்றாக இருக்கும் என்று கேட்டார். அதற்கு மகாப்பெரியவர் திருவண்ணாமலையில் உள்ள இரமணர் ஆசிரமத்தில் வைத்தியநாத சிற்பி என்றொருவர் இருக்கிறார் அவரிடம் சிலையை செய்து பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். 

💦உடனே அப்பன்ன சுவாமிகள் திருவண்ணாமலைக்குச் சென்று இரமணர் ஆசிரமத்தில் இருக் கும் வைத்தியநாத சிற்பியை சந்தித்தார். ஆனால் வைத்தியநாத சிற்பிக்கு பார்வை தெரியாத குருடராகவும் , வாய்ப்பேச முடியாத ஊமை யாகவும் இருப்பதை கண்டு பயந்தார். பார்வையற்ற இந்த சிற்பியால் எப்படி சிலை செய்யமுடியும் என்ற சந்தேகத்தோடு இருந்தார். காஞ்சிப்பெரியவர் தம்மை சோதிப்பதாக நினைத்து வைத்தியநாத சிற்பியிடம் வடசென்னி மலை முருகன் கோயிலுக்கு குழந்தை வடிவ சிலை ஒன்றை வடித்து தருமாறு உரத்த குரலில் வேண்டினார். சைகையால் சம்மதம் தெரிவித்த வைத்தியநாத சிற்பி சில தினங்களிலேயே அற்புதமான அழகிய முருகனின் குழந்தை வடிவ சிலையை செய்து அப்பன்ன சுவாமியிடம் தந்தருளினார்.

ஆலயசிறப்பு

🛕மலை மீதுள்ள கோவிலுக்குச் செல்லும் வழியில், முதலில் மலை அடிவாரத்தில் வரசக்தி விநாயகர் வீற்றிருக்கிறார். இவரை வணங்கி விட்டுதான், நாம் மலை மீது ஏற வேண்டும். முன்னதாக நம்மை வரவேற்கும் விதமாக, மலையடிவாரத்தில் வடசென்னிமலை கோவிலுக்கான நுழைவு வாசல் வளைவு இருக்கிறது. இதன் பின்புறத்தில் வடசென்னிமலையின் அழகிய தோற்றத்தை காணலாம். 

🏵️வரசக்தி விநாயகரை தரிசித்து விட்டு, படிக்கட்டுகள் வழியாகவும், சாலை மார்க்கமாகவும் மலை மேல் உள்ள முருகன் கோவிலுக்குச் செல்லலாம். சாலைமார்க்கமாக செல்லும் போது 5-க்கும் மேற்பட்ட கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. படிக்கட்டு வழியாக செல்லும் போது அவ்வை சன்னிதி, உடும்பன் சன்னிதியைக் காணலாம்.

🏵️மலையை அடைந்ததும், கோவிலின் ராஜகோபுரத்தை தரிசிக்கலாம். இதைத்தொடர்ந்து 16 கால் மகா மண்டபம் உள்ளது. 50 அடி நீளம், 50 அடி அகலம் கொண்ட இந்த மகா மண்டபம், கடந்த 2001-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த மண்டபத்துக்குள் உற்சவர் பாலசுப்பிரமணியசாமி, வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். அருகில் பாலதண்டாயுதபாணி உள்ளார். அதையடுத்து குழந்தை வடிவில் மூலவர் பாலசுப்பிரமணியர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 

🌟இக்கோயில் மேற்கு நோக்கியவாறு அமைத்துள்ளது. மூன்று சன்னதிகளைக் கொண்ட இக்கோயிலில் முருகனின் குழந்தை பருவ முருகனானவும், முதிர்ந்த பருவ தண்டாயுதபாணியாகவும், வள்ளி , தெய்வானையுடன் திருமணக்கோலத்தில் காட்சியளிக்கிறார். குறிப்பாக முருகனின் மூன்று பருவத்தையும் ஒரேயிடத்தில் இக்கோயிலில் மட்டுமே காணமுடியும். 

🪷கருவறையில் சிரிக்கும் குழந்தையாகவும், அருகில் துறவியாக வள்ளி, குடும்பத்தலைவராகவும் தேவசேனா.

🪷இக்கோயிலில் உள்ள அபூர்வ சிலைகள் இவை அனைத்தும் சுயம்புவாகும்.

🌼கோவிலில் 5 அடுக்கு ராஜகோபுரம் கம்பீரமாக உள்ளது. ஆதிவாரவிநாயகராக கணபதி பகவான் அருள்பாலிக்கிறார்.  

பிரார்த்தனைகள்
🪷இந்த ஆலயம் குழந்தை வரம் அருளும் திருத்தலமாக விளங்குகிறது

🪷இங்குள்ள குழந்தை வடிவில் உள்ள முருகனை அம்மாவசை முடிந்து வளர்பிறை சஷ்ட்டியில் விரதம் இருந்து வழிபட்டு வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதாவது சஷ்ட்டி எனும் திதியில் விரதம் இருந்தால் அகம் என்னும் பையில் கருவளரும் என்பது ஐதீகம். 

🪷இங்கு குழந்தை வடிவில் முருகன் இருப்பதால்தான், இந்தக் கோவிலில் குழந்தை இல்லாத தம்பதிகள் வேண்டிக்கொண்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகமாக இருக்கிறது

🪷இங்குள்ள முருகனிடம் வேண்டிக்கொண்ட பின், குழந்தை பாக்கியம் கிடைத்த தம்பதிகள், தங்களது வேண்டுதல் நிறைவேறியதும், கரும்பில் தொட்டில் கட்டி அதில் குழந்தையை வைத்து கோவிலை வலம் வருவார்கள். இன்னும் சிலர் கோவில் தேரோட்டத்தின் போது, ஒருபுறம் குழந்தையின் பெற்றோர் நின்று கொண்டும், மறுபுறம் உறவினர்கள் நின்றும் குழந்தையை தேருக்கு முன்பாக தூக்கிப்போட்டு பிடித்து வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.

🍀கிரிவலம் - மலையைச் சுற்றி நடப்பது - தீய மற்றும் தீங்கு விளைவிக்கும் சக்திகளிடமிருந்து தங்களைப் பாதுகாக்கும் என்று பக்தர்கள் வலுவான நம்பிக்கை கொண்டுள்ளனர்.

🌟 பெரும்பாலான மக்களும் தங்கள் மன அமைதிக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். கட்டடம் /வீடு, அல்லது நிலம் வாங்க விரும்புவோர் கிரிவலத்தின் போது அவ்வையார் சிலைக்கு முன்னால் கையில் ஒரு கல்லை வைத்து பிரார்த்தனை செய்கிறார்கள். 

🏵️நன்றி செலுத்தும் விதமாக பக்தர்கள் வஸ்திரங்களைச் செலுத்துகிறார்கள், சிறப்பு பூஜைகளைச் செய்கிறார்கள் மற்றும் இறைவனுக்கு அபிஷேகம் செய்கிறார்கள். 

விழாக்கள்

🌼பங்குனி உத்திரம் மார்ச் - ஏப்ரல் மாதங்களில் கொண்டாடப்படுகிறது. ஸ்கந்த சஷ்டி அக்டோபர் - நவம்பர் மாதங்களில் கொண்டாடப்படுகிறது. திருக்கார்த்திகை நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கொண்டாடப்ப|டுகிறது. ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் தைப்பூசம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் பல்வேறு வழிபாடுகளை மேற்கொண்டு இந்த விழாக்களில் அதிகமாக பங்கேற்கிறார்கள்.
இந்த விழாக்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. 

கோயில் நேரங்கள்:
 🔱காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை.

அமைவிடம்
சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்திலும், தலைவாசலில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், வடசென்னிமலை அமைந்திருக்கிறது. சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தலைவாசல் அருகே காட்டுக்கோட்டை என்ற இடத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில்தான் வடசென்னிமலை உள்ளது. ஆத்தூர், தலைவாசலில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆத்தூரில் இருந்து கள்ளக்குறிச்சி செல்லும் பஸ்கள் காட்டுக்கோட்டையில் நின்று செல்லும்.

⛳ #பயண அனுபவகுறிப்புகள்🕊️
⛳நங்கள் சிறிய பேருந்தை கொண்டிருந்ததால், வாகனப்பாதையை தேர்வு செய்து அதன் வழியில் மேலே சென்று தரிசித்தோம்..
⛳பக்தர்கள் அளவு வெகு சுமாராக இருந்ததால், எளிதான தரிசனம் கிடைத்தது.
⛳மலை மீது வேறு கடைகள், கட்டிடங்கள் ஏதும் கிடையாது.
⛳மிக மிக அமைதியான இடம் பக்திபூர்வமாக தரிசித்து வரலாம்.

🙇நன்றி🙏
🛕#சுப்ராம்ஆலயதரிசனம் 9.11.2025🛐
# என்றும்அன்புடன்💟
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🙇🛕
#ஆன்மிகபரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🗻

⛳ #பிரதோஷேக்குழுயாத்ரா 
🛕#ஆன்மீகதலயாத்திரை: 
சேலம் 8, 9 நவம்பர், 2025.
நன்றி🙏 9.11.2025
🕊️🔱🛐🙏🇮🇳🙇⛳🛕🌏🗻

முத்துமலை முருகன் கோவில், (சேலம், டு, சென்னை - தேனி Hwy, ) ஈத்தாப்பூர், - சேலம் - பஞ்சபூத தலங்கள் அருகில் - பிரதோஷ க்குழு யாத்ரா - 9.11.2025

முத்துமலை முருகன் கோவில் , சேலம்

முத்துமலை முருகன் கோவில், சேலம், டு, சென்னை - தேனி Hwy, ஈத்தாப்பூர், தமிழ்நாடு

🌟இந்த கோயில் ஏத்தாப்பூரில் உள்ள பழமையான சிவன் கோயிலுக்கு அருகில் உள்ளது.
🌟சமீபத்தில் (ஏப்ரல் 2022) முத்துமலையில் 146 அடி உயர முருகன் சிலை நிறுவப்பட்டுள்ளது, 
🌟இது உலகின் மிக உயரமான முருகன் சிலையாகும். இது மலேசியாவின் பத்து குகை முருகன் சிலையை விட (140 அடி) ஆறு அடி உயரம் கொண்டது. 
🌟திரு. ஸ்ரீதர் தனது தந்தையின் நினைவாக 2014 ஆம் ஆண்டு தனது நிலத்தில் ஒரு முருகன் சிலையை உருவாக்க முடிவு செய்தார். ஸ்ரீதர் திருவாரூர் தியாகராஜனிடம் (2006 ஆம் ஆண்டு மலேசியாவில் முருகன் சிலையை கட்டியவர்) சிலையை அமைக்கச் சொன்னார். 
🌼இது சேலத்தின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

🌼திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, பழனி, திருத்தணி போன்ற பிரசித்தி பெற்ற "ஆறுபடைவீடு முருகன் கோவில்களில்" மண் கலசத்தில் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது.

⛳பயண அனுபவகுறிப்புகள்🕊️

⛳தனியார் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயம்.
⛳மிகப்பெரிய ஆன்மீக சுற்றுலா வளாகம்.
⛳ஏத்தாப்பூர் - ஆத்தூர் - NH பாதையில் வடபுறம் உள்ளது.
⛳தனி வழி Toll உண்டு. உள்ளே சென்று இலவச வாகன நிறுத்துமிடத்தில் வாகனம் நிறுத்திக் கொள்ளலாம்.
⛳ஆலய கடைகள் ஏராளமாக உள்ளது.
⛳தெற்குப் பார்த்த அளவில் 146 அடி உயர முருகன். Lift ல் சென்று பால் அபிஷேகம் செய்யலாம். தனிக் கட்டணம் வேல் பூசை எல்லாம் உண்டு.
⛳முருகன் காலடியை தொட்டு வணங்க தனி கட்டணம் 
⛳கீழ் புறத்தில் கிழக்குப் பார்த்த தனி பால முருகன் ஆறு பட்டை முக மண்டபத்தில் ஆறுபடை வீடு முருகன் சிலைகள் அமைப்புடன் உள்ள கருவரை.
⛳ முன்புறம் நீண்ட மண்டபம்.
⛳வடபுறம் தனி ஹோமம் பூசை செய்ய ஒரு மண்டபம்.
⛳தியான மண்படம் மற்றும் திருமணக்கூடம், அன்னதானக்கூடம்.உண்டு.
⛳ஆலயவளாகம் சுற்றி வரலாம்.
⛳வளாகம் வடபுறம் இயற்கையான குன்று ஒன்றும் அதன் மீது ஒரு வேல் மன்டபமும் உள்ளது. 
⛳மின்தூக்கி மூலம் உயரே சென்றால் தூரத்தில் மலைக்காட்சி முருகன் கிரிடத்துடன் சயனக் கோலக்காட்சி
⛳ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.
⛳அபிஷேகம், தனி பூசைக்கு மட்டும் கட்டணம் உண்டு. 
⛳சிறந்த ஆன்மீக சுற்றுலா இடமாக உள்ளது.
⛳தங்கும் வசதி, குளியல், கழிப்பிடம், வசதிகளும் உண்டு.

🙇நன்றி🙏
🛕#சுப்ராம்ஆலயதரிசனம் 9.11.2025🛐
# என்றும்அன்புடன்💟
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🙇🛕
#ஆன்மிகபரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🗻

⛳ #பிரதோஷேக்குழுயாத்ரா 
🛕#ஆன்மீகதலயாத்திரை: 
சேலம் 8, 9 நவம்பர், 2025.
நன்றி🙏 9.11.2025
🕊️🔱🛐🙏🇮🇳🙇⛳🛕🌏🗻

பெரியேரி தான் தோன்றீஸ்வரர் ஆலயம். ஆரகளூர் - சேலம் - பஞ்சபூத தலங்கள் அருகில் - பிரதோஷக்குழு யாத்ரா - 9.11.2025

பெரியேரி தான் தோன்றீஸ்வரர் ஆலயம். ஆரகளூர்
அம்பாள்: ஞானாம்பிகை.
கிழக்குப் பார்த்த ஆலயம்.
கிழக்கில் காட்சி கோபுரம்.
நந்திமண்டபம், சுவாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் ஏக மண்டபம் தனித்தனி கருவரை களுடன்
பிரகாரத்தில், தட்சினாமூர்த்தி தனி விநாயகர், துர்க்கை, மற்றும் ஆறுமுகன் வள்ளிதெய்வானை (சிறிய உருவம்) | சண்டிகேஸ்வரர் மற்றும் நவகிரகத்துடன் உள்ளது.
ஏக காலம்
9.4.2009ல் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.
V. கூட்டு ரோடு - ஆரகளூர் செல்லும் வழியில் ந உள்ளது.
9.11.2025 சுப்ராம் ஆலய தரிசனம். 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம் 
#சுப்ராம்ஆலயதரிசனம் 
#பிரதோஷேக்குழுயாத்ரா

ஆறகளூர் ஸ்ரீ கரிவரதராஜப் பெருமாள் ஆலயம் - சேலம் பஞ்சபூத தலங்கள் அருகில் - பிரதோஷக்குழு யாத்ரா - 9.11.2025

ஆறகளூர் ஸ்ரீ கரிவரதராஜப் பெருமாள் ஆலயம்

மூலவர் : ஸ்ரீ கரிவரதராஜப் பெருமாள்
தாயார் : ஸ்ரீ கமலமங்கை நாச்சியார்

சிறப்பு

வசிட்ட நதிக்கரையில் உள்ள 11 பெருமாள் ஆலயங்களில் இவ்வாலயம் பெரிது.
திருக்குளம் உடையது. மேற்கு நோக்கியது.
தலவிருட்சம் வில்வம். 

ஆலய அமைப்பு:

⛳கோயில் மேற்கு நோக்கி உள்ளது, முன்புறம் ஒரு கோயில் குளமும் உள்ளது. ராஜகோபுரம் 3 நிலைகளைக் கொண்டது, முன்புறத்தில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. கருவறைக்கு முன்னால் பாலபீடம், கருடாழ்வார் மற்றும் துவஜஸ்தம்பம் உள்ளன. கருவறை செவ்வக வடிவ அர்த்த மண்டபம் மற்றும் முக மண்டபத்தைக் கொண்டுள்ளது.  
மூலவர் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கருவறையில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் நின்ற கோலத்தில் உள்ளார் 

⛳முக மண்டபத்தில், பெருமாளின் 10 அவதாரங்களின் ஸ்டக்கோ சிலைகளும் ஒரு புத்தரும் உள்ளனர். புத்தர் பெருமாளின் மற்றொரு அவதாரம் என்று நம்பப்பட்டது. முக மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது, மேலும் அவர்களின் அதிகாரப்பூர்வ சின்னம் கூரையில் காணப்படுகிறது. இடதுபுறத்தில், ஆண்டாள் மற்றும் ஸ்ரீ கோமளவல்லி என்ற ஶ்ரீ கமலமங்கை தாயாருக்கான சன்னதி வலதுபுறத்தில், உயர்ந்த ஆதிஸ்தானத்தில் உள்ளது.

🏵️வரலாறு & கல்வெட்டு

⛳கருவறையின் சுவர்களில் சோழ, பாண்டிய மற்றும் வனவாசரையர் காலத்தைச் சேர்ந்த 9 கல்வெட்டுகள் உள்ளன. இந்தக் கோயில் 12 ஆம் நூற்றாண்டில் பொன்பரப்பின வனக்கோவரையர் மற்றும் புண்ணியவதி ஆகியோரால் தங்கள் குடும்பத்தின் நலனுக்காக கட்டப்பட்டது. 
புராணக்கதைகள் 

🏵️ ஒரு காலத்தில், இந்த இடம் மிகவும் வளமான இடமாக இருந்தது, மக்கள் விஷ்ணுவை வழிபட மறந்துவிட்டார்கள். பாடம் கற்பிக்க, விஷ்ணு மழைக் கடவுளான வருணனை அந்தப் பகுதியில் நிறுத்தச் சொன்னார். மக்கள் தங்கள் தவறை உணர்ந்து விஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்தனர். பகவான் விஷ்ணு ஒரு கருமேக வடிவில் தோன்றி மழை பெய்தார். அந்தப் பகுதி முன்பு போலவே மாறியது.

கோயில் நேரங்கள்:

🏵️கோயில் காலை 06.00 மணி முதல் மாலை 08.30 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும். இது பக்தர்களின் வருகையைப் பொறுத்தது.

எப்படி அடைவது :
🌟சேலம், ஆத்தூர், தலைவாசல், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
ஆத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து 6 மற்றும் 31 ஆகிய வழித்தட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஆத்தூரில் இருந்து ஆறகளூருக்கு சாரதா என்ற தனியார் பேருந்தும் இயக்கப்படுகிறது.
தலைவாசல் மற்றும் வி. கூட் சாலையில் இ
சாலையில் இருந்து மினிபஸ் வசதி உள்ளது.

தகவல்: வலைதளங்கள்
நன்றி🛕

⛳#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

🛐 2017 ல் ஏற்கனவே தரிசித்துள்ளோம். இறையருளால் 9.11.2025 மீள் தரிசனம்

🌼மேற்கு பார்த்த பெருமாள் ஆலயம்.
பெருமாள் நின்ற கோலத்தில் உள்ளார்.
🌟தாயார் கிழக்குப் பார்த்து தனி சன்னதி
ஒரே பிரகாரம். 
🌼ஆரகளூர் சிவன் ஆலயம் எதிர்புறம் உள்ளது.
🍁ஆலயம் வழிபாடு / பராமரிப்பில் உள்ளது.

🙇நன்றி🙏
🛕#சுப்ராம்ஆலயதரிசனம் 9.11.2025🛐
# என்றும்அன்புடன்💟
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🙇🛕
#ஆன்மிகபரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🗻

⛳ #பிரதோஷேக்குழுயாத்ரா 
🛕#ஆன்மீகதலயாத்திரை: 
சேலம் 8, 9 நவம்பர், 2025.
நன்றி🙏 9.11.2025
🕊️🔱🛐🙏🇮🇳🙇⛳🛕🌏🗻

ஸ்வர்ணபுரீஸ்வரர் கோவில், கூகையூர் (வானம்) - சேலம் - பஞ்சபூத தலங்கள் - பிரதோஷக்குழு யாத்ரா - 9.11.2025

ஸ்வர்ணபுரீஸ்வரர் கோவில், கூகையூர் (வானம்)
ஸ்ரீ ஸ்வர்ணபுரீஸ்வரர் கோவில் கூகையூர், தமிழ்நாடு 606301   

🌟 தமிழ்நாட்டில், சேலத்திலிருந்து 88 கிமீ தொலைவிலும், விருத்தாசலத்திலிருந்து 60 கிமீ தொலைவிலும், கூகையூர் அமைந்துள்ளது.
🌟கூகை என்னும் குறுநில மன்னன் ஆண்டதால், இந்தப் பகுதி ‘கூகையூர்’ என்றழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
🌟திருநாவுக்கரசர் தனது ஷேத்திர கோவையில் ‘கூழையூர்’ என்று பாடி வழிபட்டதால் ‘கூழையூர்’ என்றும், 
🌟திருமூலர் இப்பகுதியில் உள்ள குகையில் தங்கி யோகத்தில் ஆழ்ந்ததால் ‘குகையூர்’ என்றும், 
🌟வியாழபகவான் வழிபட்டதால் ‘சொர்ணபுரி’ என்றும் இவ்வூர் அழைக்கப்பட்டது.

கூகையூரில் உள்ள 5 சிவன் கோவில்கள்:

1) ஸ்ரீ பெரியநாயகி சமேத கைலாயமான பொன் பரப்பின ஈஸ்வரமுடைய நாயனார் / ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர் கோவில் - மிகவும் பழமையான மற்றும் பிரபலமான கோவில் மற்றும் உள்ளூர் மக்களால் 'பெரிய கோயில்' என்று அழைக்கப்படுகிறது. தற்போது புனரமைப்பில் உள்ளது.

2) ஸ்ரீ கரியம்புரீஸ்வரர் கோவில் - ஒரு அழகான கிரானைட் கோவில் இப்போது பாழடைந்த நிலையில் உள்ளது, ஆனால் முக்கிய தெய்வமான சிவபெருமான் ஒரு பாழடைந்த கருவறைக்குள் திறந்த வெளியில் அமைதியாக அமர்ந்திருக்கிறார்.

3) ஸ்ரீ ஒப்பிலாஅம்மை சமேத ஸ்ரீ பஞ்சாட்சர நாதர் / ஸ்ரீ திருமூல சித்த நாதர் கோவில் (தேவர்கள் தம்பிரான் கோவில்), வீர சைவர்களின் குலதெய்வ கோவில் மற்றும் உள்ளூரில் சித்தர் கோவில் என்று அழைக்கப்படுகிறது.

4) ஸ்ரீ கைலாச சோழீஸ்வரமுடைய நாயனார் கோவில் - ஒரு சிறிய தனி ஆலயம்

5) ஸ்ரீ பொன் பரப்பின சோழீஸ்வரமுடைய நாயனார் கோவில் - தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

🛕கூகையூரில் உள்ள 5 சிவாலயங்களும் பஞ்ச பூத தலங்களாகக் கருதப்படுகின்றன. 

சுவர்ணபுரீஸ்வரர் கோயில், 
மிகப் பிரமாண்டமான மற்றும் அழகான கோயிலாகும், இது மிகப்பெரிய சுற்றுச்சுவரைக் கொண்டுள்ளது, ஏராளமான சிறந்த கட்டிடக்கலை அம்சங்கள் மற்றும் புராண முக்கியத்துவம் வாய்ந்த ஆலயம்.

சிறப்பு

🌟நவக்கிரக தோஷம் நீக்கும் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்*

🌟வசிஷ்ட நதியின் வடகரையில் 
முனிவர் வசிஷ்டரால் நிறுவப்பட்ட பஞ்ச பூத ஸ்தலங்களில் ஆகாய தலமாக போற்றப்படுகிறது.
🌟நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற இந்தத் திருத்தலத்தை இன்னொரு ‘சிதம்பரம்’ என்கிறார்கள்.
🌟இந்தக் கோயில் திருநாவுக்கரசரால் பாடப்பட்ட தேவார வைப்புத் தலமாகும்.
🌟பிரதான தெய்வம் சுவர்ணபுரீஸ்வரர் ஒரு சுயம்பு லிங்கம்.
🌟இந்த தலத்தில், உயிர்கள் அனைத்தும் உய்யும் பொருட்டு போக வடிவம், யோக வடிவம், வேக வடிவம் ஆகிய மூன்று நிலைகளையும் ஒரே திருமேனியில் தாங்கியபடி, ஆகாயலிங்கமாக இறைவன் எழுந்தருளியுள்ளார்.
🌟மூலவர் : ஸ்ரீ ஸ்வர்ணபுரீஸ்வரர் –
 🌟அம்பாள் : ஸ்வர்ணாம்பிகை, உமையாள்; ஸ்தல விருட்சம் : அரச மரம்.
தலபுராணம்

1. பஞ்சபூததலம்:

🌟சிவபெருமானை மதிக்காமல் யாகம் நடத்தினான் தட்சன். அவன் நடத்திய யாகத்தில் தேவர்கள், சப்த ரிஷிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதனால் இறைவனின் கோபத்திற்கு ஆளான ரிஷிகள் அனைவரும், தங்கள் ரிஷி பதவியை இழந்து, வேதங்களை மறந்து நைமிசாரண்யத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பிறகு
சுக பிரம்ம ரிஷியின் அறிவுரைப்படி, அவர்கள் அனைவரும் இந்தப் பகுதிக்கு வந்தனர்.

🌼 ராமரின் குல குருவான வசிஷ்ட முனிவரும் சிவபெருமானுக்கு தவம் மற்றும் பூஜைகள் செய்ய இங்கு வந்தார். 
அவரது தவத்திற்கு அசுரர்களால் பல இடையூறுகள் வந்தன அவர் பல தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நல்ல தண்ணீர் மற்றும் பூக்களால் சிவனை வணங்க சோதனைகளைக் கடக்கலாம் என 
மகரிஷி நாரதர் முனிவர் கூறியதன் அடிப்படையில், வசிட்டர், தமது தவவலிமையால் ‘வசிஷ்டநதி’ என்ற தீர்த்தத்தை உருவாக்கினார். 

🌟நதிக்கரையில் வெவ்வேறு இடங்களில் பஞ்ச பூத மூர்த்திகளாக ஐந்து இடங்களில் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து சிவபெருமானை நோக்கி தவம் செய்தனர். 

🌟பஞ்ச பூத தலங்களில் கடைசியான கூகையூரில், அவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து விடுபட்டு, இழந்த அறிவையும் சக்தியையும் மீண்டும் .

🌟அந்த 5 தலங்களே வசிஷ்ட நதிக்கரையோர
பஞ்சபூத தலங்கள் என்று போற்றப்படுகிறது.

 🌟இவற்றுள் ஆகாய தலமாக விளங்குகிறது கூகையூர் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோவில்.

🌼வசிஷ்டர் முனிவர் நிறுவிய பஞ்ச பூத ஸ்தலங்களின் பட்டியல் : 1) தான்தோன்றீஸ்வரர் சிவன் கோவில், பேலூர், சேலம் (நிலம்) 
2) சாம்பமூர்த்திஸ்வரர் கோவில், ஏத்தாப்பூர் (நீர்) 3) கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவில், ஆத்தூர் கோட்டை (அக்னி - தீ) 
4) ஸ்ரீ காமநாதர் கோவில்,அரகளூர்.
5) ஸ்வர்ணபுரீஸ்வரர் கோவில், கூகையூர் (வானம்)

2.வியாழ பகவானுக்கு தரிசனம்
🌟ஒரு முறை இந்திரன், தேவலோகத்தில் தனது சிம்மாசனத்தில் தேவர்கள் சூழ அமர்ந்திருந்தான். அப்போது தேவர்களின் குருவான வியாழ பகவான் அங்கு வந்தார். மாயையால் செல்வச் செருக்கும், அதிகார ஆணவமும் இந்திரனின் கண்களை மறைத்த காரணத்தால், தன்னுடைய குருவுக்கு அவன் எழுந்து நின்று மதிப்பளிக்க தவறினான். இதனால் கோபம் கொண்ட வியாழ பகவான் அங்கிருந்து வெளியேறினார். தேவகுரு இல்லாததாலும், அவரது சாபத்தாலும் இந்திரசபை பொலிவிழந்தது. தனது தவறை உணர்ந்த இந்திரன் வியாழ பகவானை பல இடங்களிலும் தேடினான். ஆனால் அவரோ தன்னை யார் கண்ணுக்கும் தெரியாத அரூபியாக மாற்றிக்கொண்டு, தனது கவுரவத்தை இழந்த வருத்தத்தில் வனாந்தரத்தில் வாசம் செய்தார். அப்போது கூகையூரில் நெல்லி வனத்தில் எழுந்தருளி இருந்த இறைவனை, மலர் தூவி, வேதங்கள் ஓதி தம் குறை தீர்க்க வேண்டினார். அவருக்கு சிவபெருமான் தரிசனம் தந்தருளினார்.
அப்போது சாபம் பெற்ற இந்திரனும் தமது தவறை உணர்ந்து, இங்கு வந்து வியாழ பகவானை வணங்கினான். அதன்பிறகு மீண்டும் தேவகுருவாக வியாழ பகவான் புகழுடன் வீற்றிருந்தார். வியாழ பகவானுக்கு அருளாசி புரிந்ததால் பொன்பரப்பின ஈஸ்வரன் (சொர்ணபுரீஸ்வரர்) எனும் திருநாமம் இங்குள்ள இறைவனுக்கு ஏற்பட்டதாக கூறுகிறார்கள். 

🏵️மற்றொரு புராணத்தின் படி, இந்த கோயிலின் ஸ்தபதியின் மகன் பாம்பு விஷத்தால் இறந்தபோது, ​​இந்த கோயிலின் இறைவன் ஒரு சித்தர் வடிவத்தில் வந்து சிறுவனின் உயிரைக் கொண்டு வந்தார்.

ஆலய வரலாறு

🛕கி.பி. 7-ம் நூற்றாண்டில் செங்கற்களால் கட்டப்பட்ட சொர்ணபுரீஸ்வரர் கோவிலை, மூன்றாம் குலோத்துங்க சோழன் உத்தரவின் படி கி.பி.1184-ம் ஆண்டு குறுநில மன்னன் பொன்பரப்பின ராஜராஜ கோவலராயன் கற்கோவிலாக மாற்றிக் கட்டினான்.

🛕இந்தக் கோயில் எவ்வாறு கட்டப்பட்டது என்பது பற்றிய ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது: 

🛕1178 ஜூலை 6-8 தேதிகளில் கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழ மன்னர் மூன்றாம் 
குலோத்துங்கரின் முடிசூட்டு விழாவின் போது, ​​ராஜா மற்றும் ராணியிடம் ஒரு தெய்வீகக் குரல் கேட்டது, "உங்கள் முடிசூட்டு விழாவின் போது எனக்கு ஒரு கோயில் கட்டுவதாக நீங்கள் செய்த சபதத்தை மறந்துவிட்டீர்களா?". 

🛕அதே நேரத்தில், கூகையூரிலிருந்து சோழ அரசின் துணை நிலைத் தலைவர் ஒருவர் வந்தார், அப்போது கூகையூர் ஸ்வர்ணபுரீஸ்வரர் கோயிலைப் புதுப்பித்து கிரானைட் கோயிலாக மாற்றுவதற்கான தனது முந்தைய சபதம்/விருப்பத்தை மன்னர் திடீரென்று நினைவு கூர்ந்தார். அவர் உடனடியாக வேலையைத் தொடங்க உத்தரவிட்டார், 6 ஆண்டுகள் பணிக்குப் பிறகு, 24.01.1184 அன்று மன்னர் மூன்றாம் குலேத்துங்கர் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கோயிலின் சரியான தேதி பொறிக்கப்பட்டுள்ளதால், இது "தேதியிட்ட கோயில்" என்று அழைக்கப்படுகிறது.

🛕இரண்டாம் ராஜராஜ சோழன் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலைக் கட்டிய பிறகு, அவனுடைய மகன் மூன்றாம் குலோத்துங்கன் இந்தக் கோயிலைக் கட்டினான். அதனால் தாராசுரம் கோயிலின் செல்வாக்கு பல்வேறு சிற்பங்கள் மற்றும் கட்டிடக்கலை அம்சங்கள் இங்கு காணப்படுகிறது.

ஆலய அமைப்பு

🌼நாம் கோயிலுக்குள் நுழைந்ததும், 46 தூண்களைக் கொண்ட ஒரு பெரிய வசந்த மண்டபம் உள்ளது, அங்கு பல்வேறு கோயில் உற்சவங்கள் நடத்தப்படுகின்றன.

🌟ஸ்ரீ மகாலட்சுமியின் அனைத்து குணங்களுடனும் அன்னை சுவர்ணாம்பிகை, கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 

🌟முருகப்பெருமானின் சன்னதி வெளிப்புற பிரகாரத்தில் உள்ளது; அவர் ஒரு மயில் மீது அமர்ந்து தரிசனம் அளிக்கிறார், சிலை 8 அடி உயரம் கொண்டது. அவர் தனது 6 முகங்கள் மற்றும் 12 கைகளுடன் தனது மனைவியர்களான வள்ளி மற்றும் தெய்வானையுடன் கம்பீரமாகத் தோன்றுகிறார். 

கல்வெட்டுகள் சிற்பங்கள்

🌟அம்மன் சன்னதி மிகவும் சிறப்பு வாய்ந்தது
மற்றும் கட்டிடக்கலை சிறப்பால் நிறைந்துள்ளது. கொடுங்கை (முன் மண்டபத்தின் கூரை) மிகவும் பிரபலமானது, மேலும் "கூகையூர் கொடுங்கை அழகு / கூகையூர் கொடுங்கை அழகு " என்ற பழமொழி அதன் அழகைப் பறைசாற்றுகிறது. அம்மன் சன்னதியைச் சுற்றியுள்ள கோஷ்டச் சுவர்களில் பார்வதி தேவி, கண்ணப்ப நாயனார், குரங்கு, நண்டு போன்றோர் வழிபடும் உருவம் உள்ளது.
🌼இந்தக் கோயிலில் மட்டும் 19 கல்வெட்டுகள் உள்ளன, கூகையூரில் உள்ள 5 கோயில்களிலும் மொத்தம் 32 கல்வெட்டுகள் உள்ளன. இவை ஸ்ரீ ராம அருணாச்சலம் எழுதிய "கூகையூர் கல்வெட்டுகள்" என்ற தனித் தமிழ் புத்தகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன

🏵️கொடுங்கை, 20 x 20 அடி பெரிய சதுரத்திற்குள் 72 சதுரங்களில் சிவனின் பல்வேறு தெய்வீக நாடகங்களின் அழகிய சின்னங்களுடன் மிகவும் கலைநயத்துடன் செதுக்கப்பட்டுள்ளது.

🏵️வெளிப்புறச் சுவர்களில் மூன்றாம் குலோத்துங்க மன்னர் மற்றும் ராணி திருபுவன சுந்தரியின் சின்னங்களும் உள்ளன. மேலும், அம்மன் சன்னதி மண்டபத்தில் இசைத் தூண்கள் உள்ளன, அவை தூண்களின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து அனைத்து சப்த ஸ்வரங்களையும் வெளிப்படுத்துகின்றன.

🌟 இரண்டு வரிசைகளில் 108 சிவலிங்கத் திருவுருவங்களும், வெளிச் சுவர்களில் மூன்றாம் குலோத்துங்க மன்னன் திருபுவன சுந்தரியின் திருவுருவங்களும் உள்ளன. 

🌟தூண்களின் பல்வேறு பகுதிகளிலிருந்து சப்த ஸ்வரங்கள் ஒலி வருமாறு அமைந்துள்ளன.
🌟இந்தக் கோயிலில் உள்ள நந்தி கன்றுக்குட்டியின் அளவு - பால நந்தி / குழந்தை நந்தி என்று அழைக்கப்படுகிறது. 
ராகு - கேதுவின் பாதகமான விளைவுகளை எதிர்கொள்பவர்கள் பால நந்திக்கு அபிஷேகம் செய்கிறார்கள் - அது நீல நிறமாக மாறும்.

தரிசன பலன்
🪴இந்த திருத்தலத்தில் உள்ள சொர்ணம்சொர்ண புரீஸ்வரரை வழிபடுபவர்களுக்கு கல்வியும், தொழிலும் சிறப்பாக அமையும் என்பது ஐதீகம். இத்தல இறைவனை வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது.
 
ஆலய நடைதிறப்பு
🌟 கோயில் காலை 0700 மணி முதல் இரவு 8 மணி வரை தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

⛳#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

🛐 2017 ல் ஏற்கனவே தரிசித்துள்ளோம். இறையருளால் 10.11.2025 மீள் தரிசனம்.

🌟பெரிய ஆலயம் மிகவும் பழமையானது. சிறப்பானது. திருப்பணி வேலைகள் நடந்து வருகிறது.
🌟சிற்றூர் ஆக இருப்பதால், சாதாரண நாட்களில் வெளியூர் பக்தர்கள் மட்டும் வருகிறார்கள். 
🌟அருகில் குருக்கள் வீடு உள்ளதால், நடை திறப்பு நேரம் விசாரித்து தரிசனம் செய்யலாம்.
🌟வாகனங்கள் ஆலயம் முன்புறம் நிறுத்தலாம்.
🌟இவ்வூரில் மேலும் 4 ஆலயங்கள் உள்ளன. சில ஆலயங்கள் மிகவும் சிதைந்து பராமரிப்பு இல்லாமல் உள்ளது. பகலில் சென்று அவற்றையும் தரிசிக்கலாம்.
🌟 சிறப்பான ஆலயம் அவசியம் தரிசிக்க வேண்டியது.
🙇நன்றி🙏
🛕#சுப்ராம்ஆலயதரிசனம் 9.11.2025🛐
# என்றும்அன்புடன்💟
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🙇🛕
#ஆன்மிகபரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🗻

⛳ #பிரதோஷேக்குழுயாத்ரா 
🛕#ஆன்மீகதலயாத்திரை: 
சேலம் 8, 9 நவம்பர், 2025.
நன்றி🙏 9.11.2025
🕊️🔱🛐🙏🇮🇳🙇⛳🛕🌏🗻

காமநாத ஈஸ்வரர் கோவில், ஆரகளூர் (காற்று)ஸ்ரீ காமநாத ஈஸ்வரர் கோவில், அரகளூர் - தலைவாசல் சாலை, அரகளூர், - சேலம் பஞ்சபூத தலங்கள் - பிரதோஷக்குழு யாத்ரா - 9.11.2025

காமநாத ஈஸ்வரர் கோவில், ஆரகளூர் (காற்று)
ஸ்ரீ காமநாத ஈஸ்வரர் கோவில், அரகளூர் - தலைவாசல் சாலை, அரகளூர், தமிழ்நாடு 

🛕சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ளது ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவில். 

🛕 இந்த ஆலயம் சிவத்தலமாக மட்டுமின்றி, அஷ்ட பைரவர்கள் வீற்றிருப்பதால், பைரவத் தலமாகவும் திகழ்கிறது

சிறப்புகள்

🛕வசிஷ்ட நதிக்கரையில் அமைந்துள்ள நான்காவது திருத்தலமான இது, வசிஷ்ட முனிவரால் நிறுவப்பட்ட பஞ்ச பூத ஸ்தலங்களில் வாயுலிங்க தலமாகும்.

🛕பஞ்சபூத தலங்கள் பட்டியல் : 1) தான்தோன்றே ஈஸ்வரர் சிவன் கோவில், பேலூர், சேலம் 
2) சாம்பமூர்த்திஸ்வரர் கோவில், ஏத்தாப்பூர்
3) கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவில், ஆத்தூர் கோட்டை 
4) ஸ்ரீ காமநாத ஈஸ்வரர் கோவில், ஆறகளூர்
5) ஸ்ரீ ஸ்வர்ணபுரீஸ்வரர் கோவில், கூகையூர்

மூலவர்: ஸ்ரீ காமநாத ஈஸ்வரர், அம்பாள்: ஸ்ரீ பெரியநாயகி.

 “அசிதாங்க பைரவர், குரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர் மற்றும் கால பைரவர்” என எட்டு என பொருள்படும் அஷ்ட பைரவர்கள் இக்கோயிலில் இருப்பது சிறப்பம்சமாகும். 

தல சிறப்பு
ஆறு அகழிகளால் சூழப்பட்டிருப்பதால், இந்த ஊர் ‘ஆறகளூர்’ எனப்பெயர் பெற்றது. ஆறும்(நதியும்), அகழியும் உள்ள ஊர் என்பதாலும் ‘ஆறகளூர்’ எனப் பெயர் வந்ததாகவும் கூறுகின்றனர். இந்த தலம் ‘ஆறை நகர்’ என்றும் அழைக்கப்படுகிறது. 

தலபுராணம்

🌟இக்கோயிலில் இருக்கும் சிவபெருமானை வசிஷ்டர் பூஜித்ததால் இந்த சிவனுக்கு வசிஸ்டேஸ்வரர் என்கிற ஒரு பெயரும் உண்டு

🌟இந்த கோயில் தல புராணங்களின் படி அசுரனான “அந்தகன்” மற்றும் அவனது அசுர படைகளால் துன்புறுத்தப்பட்ட தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட வந்த போது, அவர் தியானத்தில் இருப்பதை கண்டு அவர் தியானத்தை கலைப்பதற்கு அனைவரும் அஞ்சினர். சிறிது ஆலோசனைக்கு பிறகு தேவர்கள் அனைவரும் மன்மதனிடம் சென்று தங்களுக்காக சிவபெருமானின் தியானத்தை கலைக்குமாறு தேவர்கள் கூற, அவர்களுக்காக மன்மதன் சிவபெருமானின் மீது மலர் அம்புகளை தொடுத்து அவரின் தியானத்தை கலைத்தார். தியானம் கலைந்ததால் கோபம் கொண்ட சிவன் தனது நெற்றிக்கண் திறந்து, அதிலிருந்து வெளிப்பட்ட நெருப்பால் காமத்திற்கு நாயகனாகிய மன்மதனை அழித்ததால், இக்கோயிலின் இறைவனுக்கு “காமநாத ஈஸ்வரர்” என்கிற பெயர் ஏற்பட்டது.

மன்மதன் வழிபட்ட தலம் : 
🌟இந்த ஆலயத்தின் தல விருட்சமாக மகிழ மரம் உள்ளது. இந்த மரத்தடியில் அமர்ந்துதான் இத்தல இறைவனை மன்மதன் வழிபட்டதாக தல புராணம் எடுத்துரைக்கிறது.

🌟 முருகப்பெருமானின் அவதாரத்திற்கு முன்பாக, அதாவது மன்மதனை சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணால் தகனம் செய்வதற்கு முன்பாகவே, மன்மதன் தனது மனைவி ரதியுடன் இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டுச் சென்றுள்ளான் என்று கூறப்படுகிறது. மன்மதன் வழிபட்டதன் காரணமாகவே இத்தல இறைவனுக்கு ‘காமநாதீஸ்வரர்’ என்ற பெயர் வந்தது. காமம் என்றால் விருப்பம், ஆசை என்ற பொருளும் உண்டு. தமது பக்தர்களின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றி தரும் பெருமான் என்பதாலும் ‘காமநாதர்’ என்று அழைக்கப்படுகிறார்.

ஆலய அமைப்பு : 

🍁 கிழக்கு நோக்கிய ஒரு நுழைவாயில் வளைவுடன் 3 அடுக்கு ராஜகோபுரத்துடன் இருபுறமும் மண்டபங்களும் கொண்டு உள்ள ஆலயம். அம்பாள் சன்னதிக்கு ஒரு தனி நுழைவாயிலும் உள்ளன.

 🍀3 நிலை ராஜகோபுரத்திற்கு முன்னால் துவஜஸ்தம்பம், பலிபீடம் மற்றும் ரிஷபம் ஆகியவை உள்ளன, 

🍀இது கோயிலில் ஒரு குளம் உள்ளது.
இந்த கோயிலில் இருபுறமும் இரண்டு யானைகளுடன் கஜலட்சுமி - லட்சுமிக்கு ஒரு சன்னதி உள்ளது. தனி விநாயகர் சன்னதி உள்ளது.

🍀முதல் சுற்றில் உற்சவ மண்டபம், தலவிருட்சம், பலிபீடம், நந்தி உள்ளன. கருவறை, அந்தரளம், அர்த்த மண்டபம், முக மண்டபம், 16 தூண் மண்டபம் மற்றும் 100 தூண்கள் கொண்ட மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

🍀கருவறையில் ஆனந்த விமானம் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் கருவறை சதுரவடிவமானது. இறைவனின் கருவறைக்கு வடபுறம் தனிச் சன்னிதியில் பெரியநாயகி அம்பாள் அருள்பாலிக்கிறார். அம்பிகை முன்பும் ஒரு தனி ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. 
🍀அம்பாளுக்கு பிரஹன்நாயகி என்ற பெயரும் உண்டு.

🍀2-ம் சுற்றின் தாழ்வறையில் சந்திர, சூரியன், பைரவர், சமயக்குரவர்கள் காட்சி தருகின்றனர். கருவறை சுற்று பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், விஷ்ணு துர்க்கை ஆகியோர் வீற்றிருக்கின்றனர். சண்டிகேஸ்வரர், முருகன், நவக்கிரக சன்னிதிகளும் உள்ளன. இங்கு பிரம்மாவிற்கும், நடராஜருக்கும் தனித்தனி சன்னிதி இருக்கிறது. 

🍀கோவிலின் வடபக்கம் அறுபத்துமூன்று நாயன்மார்களின் திருமேனிகள் காணப்படுகின்றன. 

🍀இத்தலத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட வள்ளி- தெய்வானை சமேத சுப்பிர மணிய சுவாமி மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.

🍀8 பைரவர்கள் (வெவ்வேறு இடங்களில்) உள்ளது. அசிதங்கம், கால, கபால, க்ரோத, ருத்ர, ருரு, சம்ஹார மற்றும் உன்மத்த பைரவர்கள்.

சூரிய பூசை
இந்த கோயிலின் ஸ்ரீ சிவனை சூரியனும் வழிபடுவதாக நம்பப்படுகிறது. பங்குனி 
உத்திரத்திற்கு முந்தைய நாள், ​​பூர நட்சத்திர நாளில் காலையில் மூலவர் மீது சூரியனின் கதிர்கள் விழும்.  

வரலாறு
🌼அரசன் வானகோவராயர் தன் மனைவி புண்ணியவாட்டி நாச்சியாருடன் வழிபட்டது.
இந்த மண்டலத்தை ஆறகளூரை தலைநகராகக் கொண்டு வானகோவராயர் ஆட்சி செய்தார். சோழ, பாண்டிய மற்றும் வானகோவராயர் காலங்களின் கருவறைச் சுவரைச் சுற்றி பல கல்வெட்டுகள் உள்ளன, அவை முக்கியமாக தினசரி பூஜைகளுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகளைப் பற்றிப் பேசுகின்றன. ஒரு கல்வெட்டு கிருஷ்ணதேவராயர் பற்றிப் பேசுகிறது, அவர் அர்ச்சகர்களுக்கு வரி விலக்கு அளித்தார்.

கட்டிடக்கலை
🏵️கருவறை, அந்தரளம், அர்த்த மண்டபம், ஒரு முக மண்டபம், 16 தூண் மண்டபம், 100 தூண் மண்டபம் ஆகியவற்றைக் கொண்டது இக்கோயில். கருவறை, ஜகதி, குமுதம், பட்டிக்கையுடன் கூடிய பாத பந்த அதிஷ்டானத்தில் உள்ளது. பிட்டி வேதிகாவில் தொடங்குகிறது. கலசம், குடம், பலகை, பொத்தியல் ஆகியவற்றைக் கொண்ட விஷ்ணுகாந்த பைலஸ்டர்கள். பிரஸ்தாரம் நாசிகுடுகளுடன் வாலாபி மற்றும் கபோதம் கொண்டது. கருவறையில் மூன்று அடுக்கு திராவிட செங்கல் விமானம் உள்ளது.

பைரவர்:
🔱தேவர்களின் துன்பத்தை தீர்க்க தனது அம்சமான பைரவரை அசுரர்களை அழிக்க அனுப்பினார் சிவபெருமான். திசைக்கு எட்டு பைரவர் வீதம் 64 பைரவர்கள் தோன்றி அந்தகன் மற்றும் அவனது அசுரர் சேனைகளை அழித்தனர். வட இந்தியாவில் காசியில் அஷ்ட பைரவர் கோயில் இருக்கிறது. அதற்கடுத்து தென்னிந்தியாவில் அஷ்டபைரவர்களுக்கென்று இருக்கும் பழமையான கோயிலாக ஆறகளூர் அஷ்ட பைரவர் கோயில் கருதப்படுகிறது.

🔱காசிக்கு சென்று பைரவரை தரிசிக்க முடியாதவர்கள் இங்கு வந்து வழிபடுவதால் காசி அஷ்ட பைரவரை வணங்கியதற்கு ஈடானது என்பது அனுபவம் வாய்ந்த பக்தர்களின் கருத்தாக உள்ளது.

🔱ஆரகளூரில் நிறுவப்பட்ட அஷ்ட பைரவர் சின்னங்கள்: 
கால பைரவர், அசிடங்க பைரவர், சம்ஹார பைரவர், ருரு பைரவர், க்ரோதன பைரவர், கபால பைரவர், ருத்ர பைரவர், உன்மத்த பைரவர் ஆகிய அஷ்ட பைரவர்களுக்காக அறியப்படும் கோயில் இது. ஏழாவது பீஷ்ம பைரவர் ராஜகோபுரத்தின் இடது பக்கத்தில் ஒரு சிறிய மண்டபத்தின் கீழ் பலிபீடம் வடிவில் இருக்கிறார்.
மேலும் ராஜகோபுரத்தின் மேல் அடுக்கில் எட்டாவது பைரவர் கபால பைரவர் தெற்கு நோக்கி இருக்கிறார். கபால பைரவர் கோபுரத்தில் அமைந்துள்ளது

🔱1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவிலாக சேலம் ஆறகழூர் அஷ்டபைரவர் கோவில் கருதப்படுகிறது.

🔱ஆரகளூரில் பௌர்ணமிக்குப் பிறகு வரும்
தேய்பிறை அஷ்டமி திதி தினத்தில் இங்குள்ள அஷ்டபைரவர்களுக்கும் நள்ளிரவில் சிறப்பு யாக பூஜை நள்ளிரவு 12.00 மணிக்கு நடக்கிறது.

🔱பூஜையின்போது காலபைரவருக்கு தேன், பழம், பன்னீர், மஞ்சள் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வார்கள். 

🔱இப்பூஜையின் போது சந்தனக்காப்பு மற்றும் புஷ்ப அலங்காரத்துடன் பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பின்னர் வெள்ளிக்கவசம், சந்தனகாப்பு, உள்ளிட்ட சர்வ சிறப்பு அலங்காரங்களுடன் காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நள்ளிரவு 12 மணி அளவில் காலபைரவர் உள்ளிட்ட எட்டு பைரவர்களுக்கும் பூஜைகள் நடக்கும்.

🔱பைரவர் அவதரித்த கார்த்திகை அஷ்டமி அன்று பைரவாஷ்டமி விழா இக்கோயிலில் கடைபிடிக்கப்படுகிறது. அன்று மாலை நடைபெறும் மகா யாகத்தில் தேனில் தோய்த்த 1008 வடைகளை யாகத்தில் இட்டு பைரவரை பூஜிக்கின்றனர். இந்த யாகத்தில் கலந்து கொண்டு அஷ்டபைரவர்களை வழிபடுபவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும் என இங்கு வழிபடும் மக்கள் கூறுகின்றனர்.

🔱பௌர்ணமிக்குப் பிறகு 8 வது நாளில் (அஷ்டமி நாள்) நடைபெறும் நள்ளிரவு பூஜைக்காக மக்கள் இந்த கோயிலில் அதிக அளவில் கூடுகிறார்கள்.

🔱இந்த பூஜையில் கலந்துகொண்டு பைரவரை வழிபாடு செய்தால் திருமணத்தடை, நவக்கிரக தோஷம் உள்ளிட்ட பிரச்சினைகள் நீங்கும் என்பது ஐதீகம்

 🔱இப்பூஜையில் கலந்து கொண்டு வழிபாடும் பக்தர்களின் கிரக தோஷங்கள், வறுமை நிலை, துஷ்ட சக்திகள் பாதிப்பு, குழந்தை பேறின்மை போன்ற அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் என்பது பக்தர்களின் கருத்தாகும். திருமண தடை மற்றும் தோஷங்கள் நீங்க இங்குள்ள கால பைரவருக்கு செவ்வரளி பூக்கள் சமர்ப்பித்து, வடைமாலை சாற்றி வழிபடுகின்றனர்.
தேய்பிறை அஷ்டமி நாட்களில் பல்வேறு இடங்களில் இருந்து ஆறகளூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

திருவிழாக்கள்: 
🌻ஸ்ரீ காமநாத ஈஸ்வரர் கோவிலில் நள்ளிரவில் பைரவர் பூஜை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

🏵️ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவிலில் மாதந்தோறும் உற்சவங்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆனித் திருவாதிரை, ஆடிப்பூரம், விநாயகர் சதுர்த்தி, கந்தசஷ்டி, கிருத்திகை, கார்த்திகை தேய்பிறை, பைரவாஷ்டமி, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் (மார்கழி மாதம் திருவாதிரை அன்று) ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்படுகிறது. தைப்பூசம், மாசி சிவராத்திரி, நவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை முக்கியமான விழாக்கள் ஆகும்.

தரிசன பலன்
💦ஆறகளூர் காமநாதீஸ்வரரை வழிபட்டால் எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். கல்வி, வியாபாரம், தொழில் செழிக்கும். அரசு சம்பந்தப்பட்ட வாய்ப்புகள், வேலைகள் கிட்டும். இந்த கோவிலின் தலவிருட்சமான மகிழமரத்தின் இலையை அரைத்து தண்ணீரில் கலக்கி குடித்தால் சர்க்கரை நோய் குணமாகும். 

💦அஷ்டபைரவர்கள் : காமநாதீஸ்வரர் கோவிலில் இவர்களை வழிபட்டால் நம்முடைய பயம் நீங்கும், நமது எதிரிகள் பயந்து விலகுவர் என்பது நம்பிக்கை. 

💦அனைத்து பிரச்சனைகளுக்கும் எளிதில் தீர்வு காண மக்கள் இங்கு அஷ்டபைரவரை வழிபடுகிறார்கள்.

💦இந்த திருத்தலம் மன்மதனுக்கு உகந்த இடம் என்பதால், திருமணமான இளம் தம்பதியினர் இங்கு வந்து இறைவனை தரிசித்தால் இல்லறம் இன்பமாக இருக்கும். விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதேபோல பிரிந்த தம்பதியர் இங்கு வந்து மனமுருக இறைவனை தரிசித்தால் ஒன்று படுவார்கள் என்பதும் பக்தர்களது நம்பிக்கை

கோயில் நேரங்கள் 

கோயில் காலை 07.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும். முக்கியமான விழா நாட்கள், அஷ்டமி நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நேரம் மாறும்.

கோயில் சிறப்பு நேரம் காலை 5 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையும். மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் கோயிலின் நடை திறந்திருக்கும்.

அமைவிடம் :

🌻சேலம்-கடலூர் நெடுஞ்சாலையில் தலைவாசலில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் தென்கிழக்கில் காமநாதீஸ்வரர் கோவில் உள்ளது. 

🍀சேலம், ஆத்தூர், தலைவாசல், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
🍀ஆத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து வழித்தட பேருந்து எண்கள் 6 மற்றும் 31 உள்ளன.
🍀ஆத்தூரில் இருந்து ஆறகளூருக்கு சாரதா என்ற தனியார் பேருந்தும் இயக்கப்படுகிறது.
🍀தலைவாசல் மற்றும் வி. கூட் சாலையில் இருந்து மினிபஸ் வசதி உள்ளது.

தகவல்: வலைதளங்கள்
நன்றி🛕

⛳#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

🛐2017 ல் ஏற்கனவே தரிசித்துள்ளோம். இறையருளால் 9.11.2025 மீள் தரிசனம்

🛕பஞ்சபூத தலம், பிரதான சாலையில் இருந்து இவ்வாலயம் தெற்கில் 3 கி.மீ. தூரத்தில் உள்ளது.

🛕ஆலயம் உள்ள சன்னதி தெருவில் எதிரில் ஒரு பெருமாள் ஆலயம் உள்ளது.

🍁ஆலயம் வழிபாடு / பராமரிப்பில் உள்ளது.

🙇நன்றி🙏
🛕#சுப்ராம்ஆலயதரிசனம் 9.11.2025🛐
# என்றும்அன்புடன்💟
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🙇🛕
#ஆன்மிகபரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🗻

⛳ #பிரதோஷேக்குழுயாத்ரா 
🛕#ஆன்மீகதலயாத்திரை: 
சேலம் 8, 9 நவம்பர், 2025.
நன்றி🙏 9.11.2025
🕊️🔱🛐🙏🇮🇳🙇⛳🛕🌏🗻

கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவில், ஆத்தூர் கோட்டை (அக்னி - தீ) - சேலம் - பஞ்சபூத தலங்கள் - பிரதோஷக்குழு யாத்ரா .9.11.2025

கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவில், ஆத்தூர் கோட்டை (அக்னி - தீ)
கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவில், ஆத்தூர் கோட்டை, ஆத்தூர், தமிழ்நாடு

🛕ஆத்தூர் காய நிர்மலேசுவரர் கோயில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

💥அமைவிடம்
சேலத்தில் இருந்து 52 கிலோமீட்டர் தூரத்தில் ஆத்தூர் உள்ளது. ஆத்தூர் பஸ்நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் கோட்டை என்னும் பகுதியில் காயநிர்மலேஸ்வரர் ஆலயம் இருக்கிறது

🛕மூலவர் : காயநிர்மலேஸ்வரர் (கறையற்ற உடல்) / வசிஷ்டேஸ்வரர் (ஒரு சுயம்பு லிங்கம்)
அம்பாள் : அகிலாண்டேஸ்வரி ; 
ஸ்தல விருட்சம் : வில்வம் மரம் ; 
தீர்த்தம் : வசிஷ்ட நதி. 

தல சிறப்புகள்:

💥இது வசிஷ்ட முனிவரால் நிறுவப்பட்ட பஞ்ச பூத ஸ்தலங்களில் மூன்றாவதாகும்.  நெருப்பு (அக்னி) தலம் ஆகும் . 

💥வசிஷ்டருக்கு ஜோதி வடிவாக இறைவன் காட்சியளித்ததால் இத்தலத்தினை அக்னித் தலம் என்று கூறுகின்றனர். 

💥தீபாராதனையின்போது தீபத்தின் ஒளி லிங்கத்திருமேனியின் மேல் அழகாகக் காட்சியளிக்கிறது.

💥வசிட்டரால் ஸ்தாபிக்கப்பட்ட பஞ்சபூத ஆலயங்கள் :
1) தான்தோன்றீஸ்வரர் சிவன் கோவில், பேலூர், 
2) சாம்பமூர்த்திஸ்வரர் கோவில், ஏத்தாப்பூர்.
3) கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவில், ஆத்தூர் கோட்டை 
4) ஸ்ரீ காமநாத ஈஸ்வரர் கோவில், ஆறகளூர்
5) ஸ்ரீஸ்வர்ணபுரீஸ்வரர் கோவில், கூகையூர்

💥சுவேதநதி, மலையாறு, சிற்றாறு என பல நதிகள் இருந்தன. இதனால் இந்த ஊர் ‘ஆற்றூர்’ என்றழைக்கப்பட்டது. இதுவே நாளடைவில் ‘ஆத்தூர்’ என மருவியது. மகரிஷியான வசிஷ்டர் இந்தத் திருத்தலத்தில் யாகங்கள் நடத்தியதால், இங்குள்ள இறைவனுக்கு ‘வசிஷ்டேஸ்வரர்’ என்ற பெயரும் உண்டு. அதேபோல இந்த ஊரை அனந்தன் என்னும் அரசன் ஆண்டு வந்ததால் இத்தல இறைவன் ‘அனந்தேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். இந்த ஊருக்கும் அனந்தகிரி, வசிஷ்டபுரம் என பெயர்கள் உண்டு

தலபுராணம் - 1.

🌟புராணத்தின்படி, ராமரின் குல குருவான வசிஷ்ட முனிவர் சிவபெருமானுக்கு தவம் மற்றும் பூஜைகள் செய்ய இங்கு வந்தார். 

🌟அவரது தவத்திற்கு அசுரர்களால் பல இடையூறுகள் வந்தன அவர் பல தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நல்ல தண்ணீர் மற்றும் பூக்களால்  சிவனை வணங்க சோதனைகளைக் கடக்கலாம் என 
மகரிஷி நாரதர் முனிவர் கூறியதன் அடிப்படையில், வசிட்டர், தமது தவவலிமையால் ‘வசிஷ்டநதி’ என்ற தீர்த்தத்தை உருவாக்கினார். 

💥பின்னர் பூஜை செய்ய தகுந்த இடம் தேடினார்;
அப்போது, மேடான ஓரிடத்தில் அவரது கால் பட்டு இடறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த வசிஷ்டர் அந்த இடத்தைப் பார்த்தபோது, சுயம்பு லிங்கம் ஒன்று இருப்பதைக் கண்டார். அவரது கால் பட்டு லிங்கத்தின் ஒருபகுதி சேதமடைந்து இருப்பதை கண்டு கலங்கினார். பழுதுபட்ட லிங்கத்தை சிவபூஜைக்கு பயன்படுத்தலாமா? எனத் தயங்கினார். அந்த நேரத்தில் இறைவன் அசரீரியாக, ‘வசிஷ்டரே! நீர் தயங்காமல் பூஜை செய்யும். நிறைவாக தீபம் காட்டுகையில் ஓர் அதிசயம் நிகழும்’ என்று கூறினார்.

💥 இதனால் மகிழ்ந்த வசிஷ்டர், அந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து அர்ச்சனை, ஆராதனைகள் செய்தார். நிறைவாக சிவலிங்கத்துக்கு அவர் தீபாராதனை காட்டியபோது ஜோதி சொரூபமாய் பிரகாசமான ஒளி தோன்றியது. அதன் பிரகாசத்தை தாங்கமுடியாமல் வசிஷ்டர் கண்களை ஒரு விநாடி மூடித் திறந்தார். அப்போது பழுதடைந்து இருந்த லிங்கமேனி, குறை ஏதும் இல்லாத பளபளப்பான லிங்கமாக மாறி இருந்தது. வசிஷ்டர் தாம் ஏற்றி வைத்த தீபஒளியே லிங்கத்தின் மீது பட்டு பேரொளியாய் திகழ்வதை கண்டு பிரமித்தார். அவர் பார்த்துக்கொண்டிருந்த போதே அந்த ஒளி வசிஷ்டரின் தவத்திற்கு இடையூறு செய்த அசுரர்களை அழித்தது.

💥முனிவர் இறைவனை அங்கேயே தங்கி மக்களின் மனதில் உள்ள மாயை இருளை விரட்டும்படி கெஞ்சினார்

💥காயம்’ என்றால் ‘உடல்’ என்று பொருள். ‘நிர்மலம்’ என்றால் ‘பழுது இல்லாதது’ என்று அர்த்தம். லிங்கத் திருமேனியில் இருந்த குறையை நீக்கி வசிஷ்டருக்கு காட்சி தந்ததால், இங்குள்ள இறைவன் ‘காயநிர்மலேஸ்வரர்’ என்று அழைக்கப்பட்டார். 

💥மேலும் இறைவன் வசிஷ்டருக்கு ஜோதி சொரூபமாய் அருள்பாலித்ததால் இந்த திருத்தலத்தை ‘அக்னி ஸ்தலம்’ என்றும், லிங்கத்தை ‘தேயுலிங்கம்’ (நெருப்பு) என்றும் அழைக்கிறார்கள்.

🌟மன்னர்கள், பிரபுக்கள் மற்றும் பக்தர்களின் புனிதமான சேவைகளால் கோயில் வளரத் தொடங்கியது. இன்று அது அளவிலும் புகழிலும் கம்பீரமாக நிற்கிறது.

தலவரலாறு

🍃கி.பி.905-945 வரை தஞ்சையை ஆண்ட முதல் பராந்தக சோழன், இந்தக் கோவிலில் கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், மகாமண்டபம் ஆகியவற்றை கட்டியதாக கூறுகிறார்கள். 

🍁அதன் பிறகு இந்த பிரதேசத்தை ஆனந்தர் என்ற மன்னர் ஆட்சி செய்தபோது, ​​அந்த நகரமும் அதன் தலைமை தெய்வமும் அவரது பெயரால் முன்னாள் ஆனந்தகிரி என்றும், பிந்தைய ஆனந்தேஸ்வரர் என்றும் பெயரிடப்பட்டன. 

🛐கனவில் வந்த இறைவன் : 

🌻பல ஆண்டுகளுக்கு பின் கெட்டி முதலி என்ற குறுநில மன்னன் இந்தப் பகுதியை ஆட்சி செய்தான். அவன் தினமும் எம்பெருமானை வணங்கிய பிறகே எந்தச் செயலையும் செய்வான். அப்போது, கோயிலும் நகரமும் இடிந்து விழுந்த நிலையில் இருந்ததாகத் தோன்றியது. ஒருநாள் அவனது கனவில் இறைவன் காட்சி தந்ததாகவும், இறைவனது திருமேனி அழகை கண்டு வியப்புற்று கோயிலைப் புதுப்பிப்பதற்கும் கோட்டை நகரத்தை மீண்டும் நிறுவுவதற்கும் ஏற்பாடுகள் செய்யும் போது, கோயிலில் புதையல் கண்டுபிடிக்கப்பட்டது.  புதுப்பித்தலுக்குப் பிறகு, மூலவரை காயநிர்மலேஸ்வரர் மற்றும் அவரது துணைவியார் அகிலாண்டேஸ்வரி என்று அழைக்கப்பட்டது.

🌟கெட்டி முதலி காலத்தில் ஆத்தூர் கோட்டை, மதிற்சுவர், அகழி, மூன்று நெற்களஞ்சியங்கள், அரண்மனை நீராழிமண்டபம் ஆகியவை அமைக்கப்பட்டது.

ஆலய அமைப்பு

🏵️ஆத்தூர் கோட்டையில் கிழக்கு நோக்கியவாறு ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் இந்தக் கோவில் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. ஒரு முகப்பு மண்டபமும் உள்ளது.

🌼கருவறைக்கு முன்னால் செவ்வக வடிவில் அர்த்தமண்டபம் அமைந்துள்ளது. எட்டு தூண்களால் தாங்கப்பட்ட அர்த்தமண்டபத்திற்கு முன்னால் மகாமண்டபம் அமைந்துள்ளது.

ஒளிரும் சிவலிங்கம் :
🍁கருவறையில் மூலவர் காயநிர்மலேஸ்வரர் பிரகாசமாக அருள்பாலிக்கிறார். .

🌟 திருவண்ணாமலைக்கு இணையாக கருதப்படும் இந்தக் கோவிலில், வெளியே எவ்வளவுதான் பனி, மழை இருந்தாலும் கருவறை எப்போதும் வெப்பமாகவே இருப்பதை உணரலாம். மூலவரான காயநிர்மலேஸ்வரருக்கு அபிஷேகம் முடிந்து தீபாராதனை காட்டும் போது, அந்த தீபத்தின் ஒளி பல மடங்காக பிரகாசித்து ஒளிர்வது அதிசயமான ஒன்றாகும். 

🌻சுவாமிக்கு வலது பின்புறத்தில் முதல் பிரகாரத்தில், கிழக்கு நோக்கியபடி அம்பாள் அகிலாண்டேஸ்வரி தனி சன்னிதியில், நான்கு திருக்கரங்களுடன் உலக உயிர்களை காக்கும் வகையில் கருணை மிளிர காட்சி தருகிறார்.
இதில் தெய்வம் ஐந்தரை அடி நிற்கும் கோலத்தில், பக்தர்களை ஆசீர்வதிக்கும் வலது கையை உயர்த்தி, இடது கையை கீழே வைத்துள்ளது. விமானம் சதுர வடிவில் மாடி வரை உள்ளது, 

🌟கர்ப்பிணி பெண்கள் இத்தல அம்மனை வழிபட்டு, குங்குமத்தை நெற்றில் இட்டுக் கொண்டால் சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. 

🌟காயநிர்மலேஸ்வரரை வணங்குவோர் வாழ்க்கை ஒளி விட்டு பிரகாசிக்கும் என்பது ஐதீகம். மேலும் இந்த ஒளியால்தான் அன்னை அகிலாண்டேஸ்வரியே பிரகாசிப்பதாக கூறப்படுகிறது. இதனால் அன்னையின் சிலையில் ஒருவித ஈர்ப்பு உள்ளதை இன்றும் காணலாம். அம்பிகை இன்முகத்தோடு, கருணை ததும்ப காட்சி அளிப்பது தத்ரூபமாக இருக்கும்.

தரிசனபலன்கள்
காயநிர்மலேஸ்வரரையும், அகிலாண்டேஸ்வரியையும் வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு மணமாலையும், திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை வரமும் தேடி வரும். நாள்பட்ட நோய்கள் தீரும். 

அதிசய தட்சிணாமூர்த்தி சன்னிதி : 

இந்தக் கோவில் வளாகத்தில் தட்சிணாமூர்த்தி தனி சன்னிதியில் எழுந்தருளியுள்ளார். பொதுவாக எல்லா சிவாலயங்களிலும் தட்சிணாமூர்த்தி மரத்தின் அடியில் அமர்ந்து சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய நான்கு பேருக்கு வேத ஞானத்தை அருளும் வகையில் காட்சி அளிப்பார். ஆனால் ஆத்தூர் காயநிர்மலேஸ்வரர் கோவிலில், குரு தட்சிணாமூர்த்தி ரிஷப வாகனத்தில் அமர்ந்து சப்தரிஷிகள் 6 பேருக்கு வேதத்தை அருள்வது போன்று காட்சி தருகிறார். இவர்களில் 3 பேர் அமைதியாகவும், 3 பேர் தங்களது சந்தேகங்களை கேட்டு அதற்கு விளக்கம் பெறும் விதமாகவும் இந்த சிலை வடிக்கப்பட்டுள்ளது. தட்சிணாமூர்த்தியின் இந்த கோலம் மிகவும் அதிசயமான ஒன்றாக கருதப்படுகிறது.

 🏵️இரண்டு அடி உயர வெண்கல நடராஜர் சிலையும், ஒரு அடி உயர சிவகாமி அம்மன் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மகாமண்டபத்தின் வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு மூலையில் முறையே காலபைரவர் மற்றும் சூரிய சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. 

🏵️மகாமண்டபத்தின் நடுவில் மூன்று அடி உயர அமர்ந்த நிலையில் நந்தி  அமைந்துள்ளது
மகா மண்டபத்திற்கு முன்பாக முன் மண்டபம் அமைந்துள்ளது. வலம்புரி விநாயகர் மற்றும் முருகனின் கருங்கல் சிலை அமைந்துள்ளது. 

 🌻கருவறை பிரகாரத்தில் விநாயகர் அநேக வடிவங்களில் விதவிதமான பெயர்களுடன் அருள்பாலிக்கிறார்கள்.  

🌟பஞ்சபூதத் தலங்களில் அருளும் இறைவன், இறைவி, வள்ளி தெய்வானையுடன் முருகன், சதுர்புஜ பைரவர், அஷ்டபுஜ பைரவர், சுவர்ண ஆகார்ஷன பைரவர், மகாலட்சுமி,  மஹா 
சரஸ்வதி, லிங்கோத்பவா, பிரம்மா,  ஐயப்பன், கிரகங்களான சூரியன்,  மற்றும் நாகர்கள் மற்றும் நாக கன்னிகைகள் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. 

🌟தனியாக நவக்கிரக சன்னிதியும் உள்ளது. 
🌼சோழர் காலத்தைச் சேர்ந்த பைரவர், மற்றும் துர்க்கை சிற்பங்கள் உள்ளன.
🏵️சனிஸ்வரர் தனி சன்னதியில் மேற்கு பார்த்து உள்ளார்
 🌼மேலும்,ஸ்ரீஆஞ்சநேயர் சன்னதியில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது போல் காட்சியளிக்கிறார்.

விழாக்கள்:
இந்த தலத்தில் தமிழ் புத்தாண்டு, மாதாந்திர கிருத்திகை, ஆனி திருவாதிரை, ஆடிப்பூரம், நவராத்திரி, கந்தசஷ்டி, கார்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி, ஆருத்ராதரிசனம், தைப் பூசம், மாசி சிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
பிரதோஷம், சிவராத்திரி, சோம வார விரதங்கள் உள்ளிட்ட பல விழாக்கள் நடத்தப்படுகின்றன.

🌻கோயில் காலை 7.00 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தலையாட்டி பிள்ளையார் : 

🛐ஆத்தூர் காயநிர்மலேஸ்வரர் கோவிலுக்கு வெளியே  கிழக்கில், சற்று தூரத்தில், ‘தலையாட்டி பிள்ளையார்’ சன்னிதி உள்ளது. முன் காலத்தில் சோழ அரசுக்கு கட்டுப்பட்ட சிற்றரசன் வானவராயன் இந்தப் பகுதியை ஆண்டுள்ளான். இந்தக் கோவிலை அவன் புனரமைத்து கட்டிய போது, இந்த விநாயகரிடம் உத்தரவு கேட்டு விட்டுத்தான் பணியைத் தொடங்கினான். இந்த விநாயகரே இத்தலத்தின் பாதுகாவலர். கோவில் வேலைகள் முடிந்தபிறகு இந்த விநாயகரிடம் வந்த மன்னன், ‘பணிகளை சிறப்பாக முடித்திருக்கிறேனா?’ என்று கேட்டானாம். அதற்கு பிள்ளையார் ‘நன்றாக கட்டியிருக்கிறாய்’ என்று சொல்லும்விதமாக தனது தலையை ஆட்டினாராம். எனவே இவருக்கு ‘தலையாட்டி பிள்ளையார்’ என்று பெயர் வந்தது. இந்த விநாயகர் தனது தலையை இடப்புறமாக சற்றே சாய்த்தபடி இருப்பதைக் காணலாம்.

🛐காயநிர்மலேஸ்வரர் கோவில் அருகில், ஆத்தூர் கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலும் அமைந்துள்ளது.

தகவல்: வலைதளங்கள்
நன்றி🛕

⛳#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

🛐2017 ல் ஏற்கனவே தரிசித்துள்ளோம். இறையருளால் 9.11.2025 மீள் தரிசனம்

🛕பஞ்சபூத தலத்தில் மூன்றாவது தலம், பிரதான சாலையில் இருந்து இவ்வாலயம் ஆத்தூர் கோட்டைப் பகுதியில் உள்ளது. சாலை வசதிகள் உண்டு தலமாகிய பேளூர், ஏத்தப்பூர் தரிசித்துவிட்டு  இங்கு நேரடியாக வரலாம்.

🛕ஆலயம் உள்ள சன்னதி தெருவில் தலையாட்டி பிள்ளையார் ஆலயம் தரிசித்து வரலாம். ஆலயம் முன்புறம் வாகனம் நிறுத்தலாம்.

🛕வீடுகள் நிறைய உள்ளன. பெரிய வனிக வளாகம் எதுவும் அருகில் இல்லை.
🛕சிவன் ஆலயம் பின்புறம் சற்று தொலைவில்
பெருமாள் ஆலயம் செல்லலாம்.
🛕மற்றொரு சிவன் ஸ்ரீ கைலாசநாதர் ஆலயம் பிரதான சாலையில், திரும்பி ஆற்றுப் பாலத்தை ஒட்டி உள்ளது. 2017 ல் வந்தபோது எல்லா ஆலயங்களும் தரிசிக்க வாய்ப்புக் கிட்டியது.

🍁ஆலயம் வழிபாடு / பராமரிப்பில் உள்ளது.

🙇நன்றி🙏
🛕#சுப்ராம்ஆலயதரிசனம் 9.11.2025🛐
# என்றும்அன்புடன்💟
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🙇🛕
#ஆன்மிகபரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🗻

⛳ #பிரதோஷேக்குழுயாத்ரா 
🛕#ஆன்மீகதலயாத்திரை: 
சேலம் 8, 9 நவம்பர், 2025.
நன்றி🙏 9.11.2025
🕊️🔱🛐🙏🇮🇳🙇⛳🛕🌏🗻

அ /மி. சாம்பமூர்த்தீஸ்வரர் கோவில், ஏத்தாப்பூர் சாம்பமூர்த்தீஸ்வரர் கோயில், வீரகவுண்டனூர், ஏத்தாப்பூர், - சேலம் பஞ்சபூத தலங்கள் - பிரதோஷக்குழு யாத்ரா - 9.11.2025

அ /மி. சாம்பமூர்த்தீஸ்வரர் கோவில், ஏத்தாப்பூர்
சாம்பமூர்த்தீஸ்வரர் கோயில், வீரகவுண்டனூர், ஏத்தாப்பூர்,  தமிழ்நாடு 

💥 ஆலய சிறப்பு

🔱அப்பர் 7ம் திருமுறையில் பாடல் பெற்ற
இது வைப்பு ஸ்தலம்
🔱ஐப்பசி - 9 முதல் 15 வரை மற்றும் மாசி 1 முதல் 7 வரை சூரியன் காலைக்கதிரால் வணங்கும் இடம்
🔱சப்த ரிஷிகளில் ஒருவரான (ஏழு பெரிய ரிஷிகள்) வசிஷ்டரால் பெயரிடப்பட்ட "வசிஷ்ட்ரோனம்" என்றும் எத்தாபூர் குறிப்பிடப்படுகிறது. 
🔱ஐந்து சக்தி ஸ்தலங்களில் - வசிஷ்ட நதியில் உள்ள பஞ்சபூத ஸ்தலங்களில் , இந்த கோவில் அப்பு-நீருக்கு சொந்தமானது. 
🔱நான்கு மறைகளும் வழிபட்ட பெருமைக்குரியது இந்தக் கோவில்.

🍃வசிஷ்டர் முனிவரால் நிறுவப்பட்ட பஞ்ச பூத ஸ்தலங்களின் பட்டியல்  : 1) தான்தோன்றீஸ்வரர் சிவன் கோயில், பேலூர், சேலம் 
2) சாம்பமூர்த்திஸ்வரர் கோயில், ஏத்தாப்பூர்
3) கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோயில், ஆத்தூர் கோட்டை 
4) ஸ்ரீ காமநாத ஈஸ்வரர் கோயில், அரகளூர் கோவூர் நாகபுரி கோயில்.
5)ஸ்வர்ணபுரீஸ்வரர் கோவில், கூகையூர்

🔰ஆலய அமைப்பு : 

🔱கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்தில் பிரதான விநாயகப் பெருமான் வழிபடுகிறார்.
🪴இந்த ஆலயம் அர்த்தமண்டபம், மகாமண்டபம், கருவறை என மூன்று பிரகாரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. 
🍁கோபுரம் மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. 
🔱கருவறையில் மூலவரான சாம்பமூர்த்தீஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கிறார். இறைவன் ஒரு சுயம்பு லிங்கம். 

🍃உற்சவர் உமா மகேஸ்வரர். அம்பாள் திருநாமம் மனோன்மணி என்பதாகும். இவர் தெற்கு நோக்கியவாறு தனி சன்னிதியில் எழுந்தருளியுள்ளார். 

💥சூரிய பூசை
இந்த லிங்க மூர்த்தியின் மீது ஐப்பசி மாதம் 9-ந்தேதி முதல் 15-ந் தேதி வரையும், 
மாசி மாதம் 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரையும் சூரிய கதிர் விழும் அதிசயத்தைக் காணலாம்.

🌻கருவறை சுற்று பிரகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மன், துர்க்கை, முருகன் ஆகியோர் உள்ளனர். இதையடுத்து அஷ்டதிக்கு பாலகர்கள், பைரவர், அறுபத்துமூன்று நாயன்மார்கள் வீற்றிருக்கின்றனர். 
பிரகாரத்தில் சகஸ்ர லிங்கம் தனி சன்னதியில் உள்ளது.
☘️இங்கு அதிசய சண்முகர் சிலை உள்ளது. முன்புறம் மூன்று முகம், பின்புறம் மூன்று முகங்களுடன் இந்த சண்முகர் காட்சி தருகிறார்.
 🍃இந்தக் கோவிலின் மடப்பள்ளி அருகே தென்மூலையில் நான்கு லிங்கங்கள் உள்ளன. இதற்கு ‘சதுர்வேத லிங்கம்’ என்று பெயர்.
🌲கோவில் கருவறையின் பின்புறம் 10 லிங்கங்கள் உள்ளது சிறப்பம்சம். 
🌺பஞ்சலிங்கங்கள், சேஷ்டாதேவி ஆகியோர் தனித்தனி சன்னிதியில் உள்ளனர்.

 🌟தீர்த்தம் : ஆலயம் அருகில் வடக்கு நோக்கி வளைந்து  நோக்கி ஓடும் வசிஷ்ட நதி. 
தலமரம் வில்வம்

🌼விழாக்கள்.
இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆடிப்பூரம், ஆவணிஅவிட்டம், நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை தீபம், மார்கழி ஆருத்ரா தரிசனம், தை பிரம்மோற்சவம், மாசிமகம், பங்குனிஉத்திரம் ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

🔰தலபுராணம் - 1

 🪴முன்னொரு காலத்தில் பார்வதி தேவியின் தந்தையான தக்ஷ பிரஜாபதி தன்னலம் கருதி யாகம் ஒன்றை நடத்தினான். அந்த யாகத்திற்கு சிவபெருமானை அழைக்காதது மட்டுமின்றி, அவருக்குரிய அவிர்பாகத்தையும் தர மறுத்தான். ஆனால் அந்த யாகத்திற்கு ஈசனின் உத்தரவை மீறி பார்வதி தேவி சென்றார். இதனால் அவர் மீது சிவபெருமான் கடும் கோபம் கொண்டார். தனது உத்தரவை மீறியதால் ‘தன்னை விட்டு பிரிந்து வாழக் கடவாய்’ என்று சக்திக்கு சாபமும் கொடுத்தார். பின்னர் சக்தியை விடுத்து, கோபமடைந்த சிவன், மன அமைதியை நாடி, இந்த இடத்திற்கு வந்தார் தனியாக இத்தலம் வந்து லிங்க உருவில் வில்வ மரத்தடியில் தங்கினார்.

🍄இறைவனை பிரிந்த பார்வதி தேவி எங்கு தேடியும் இறைவனை காணாது துயரத்தில் ஆழ்ந்தார். அப்போது சிவபெருமான் அசரீரியாக, தான் பூலோகத்தில் வில்வ விருட்சத்தின் அடியில் சிவலிங்க திருமேனியாக இருப்பதாகவும், தம்மை சூரியன் தினமும் வழிபட்டு கொண்டிருப்ப தாகவும், அப்போது நீ வந்து எம்மை வழிபடு’ என்றார். அதன்படியே பார்வதி தேவி, சிவபெருமானை குளிர்விக்க, அம்பிகாவும் தனது சகோதரர் விஷ்ணுவுடன் இங்கு வந்து தவம் செய்தார். சிவபெருமானும், வில்வ மரத்தின் கீழ் தனது மனைவிக்கு தரிசனம் அளித்து அவளை மன்னித்து, அருள்பாலித்து தன்னுடலில் சரிபாதி தந்து ஏற்றுக்கொண்டார்.

தலபுராணம் - 2.
🌼மனைவியை பிரிந்த கவுதம மகரிஷி :

🪴புராணத்தின்படி, தேவர்கள் மத்தியில் தனது 
அரச பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக இந்திரன் இங்கு ஒரு யாகத்தை - ஹோம பூஜை -  செய்ய நினைத்தான். அவனுக்கு கவுதம மகரிஷி அதி அற்புதமான அமிர்த நேரம் ஒன்றை குறித்துக் கொடுத்தார். ‘பலகோடி யுகங்களுக்கு ஒருமுறை வருகின்ற இந்த அமிர்த நேரத்தை, சுயநலமின்றி இறை பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்’ என இந்திரனுக்கு அறிவுரையும் வழங்கினார். 

🪴கவுதமர் குறித்து கொடுத்த அமிர்தநேரம் அறிந்த இந்திரன் மனம் மாறியது. தானே எப்போதும் இந்திரப் பதவியில் இருக்க வேண்டும் என்ற சுயநலம் அவனுள் எழுந்தது. இந்திரனின் எண்ணத்தை தனது ஞானத்தால் உணர்ந்த கவுதமர், ஓர் அழகிய மலரை படைத்து இந்திரன் மனைவியான இந்திராணியிடம் கொடுத்தார். இந்திராணி அந்த மலரின் அழகில் மயங்கிப்போனதால், அமிர்த நேரத்திற்குள் அவளால் ஹோமத்திற்கு வர இயலாமல் போய்விட்டது. மனைவியின் துணையின்றி ஹோமபூஜையை செய்ய இயலாத இந்திரனின் எண்ணம் தோல்வியடைந்தது. தன் எண்ணத்தை நிறைவேறவிடாமல் செய்த கவுதம மகரிஷி மீது இந்திரனுக்கு கோபம் ஏற்பட்டது. ‘என் மனைவியை ஹோமபூஜையில் கலந்துகொள்ள விடாமல் பிரித்தது போலவே, உமது மனைவியையும் பிரிந்து வாழக்கடவாய்’ என கவுதமருக்கு சாபமளித்தான் இந்திரன். 

🍄 இந்த சாபத்தின் மாயையால் கவுதமர் தனது மனைவி அகலிகையை ‘கல்லாகக் கடவது’ என சாபமிட்டார். பின்னர் கவுதமர் இந்த சாப நிவர்த்திக்காக சிவபெருமானை வேண்டினார்.
அப்போது ஈசன், ‘ஏத்தாப்பூரில் சூரியன் என்னை வழிபடும் வேளையில் வந்து தரிசனம் செய்தால் நீ உன் மனைவியுடன் சேர்ந்து வாழ்வாய்’ என்று திருவாய் மலர்ந்தார். 

🍄அதன்படியே, கவுதமர் மாசி மாதத்தில் (பிப்ரவரி-மார்ச்) சூரியன் பகவானை வழிபட்டுக் கொண்டிருந்தபோது, இந்த திருத்தலத்துக்கு வந்து ஒரு சிவலிங்கத்தை நிறுவி சிவனை வழிபட்டார். ​​முனிவருக்கு தரிசனமும் இந்திரனின் சாபத்திலிருந்து விடுதலையும் கிடைத்தது சாம்பமூர்த்தீஸ்வரரை வணங்கி வழிபாடு செய்ய, இறைவனின் திருவுளப்படி ராமபிரானின் திருப்பாதம் பட்டு அகலிகை சாபவிமோசனம் பெற்றார். அதைத் தொடர்ந்து கவுதமர் தனது மனைவி அகலிகையுடன் இணைந்தார் என தல வரலாறு கூறுகிறது. 

🔱வசிட்டர் வழிபட்டதால் வஷிட்டாரண்யேசுவரம் என்றும் தலப்பெருமையுடையது.

🔰தலபுராணம் - 3.

🍀சாபவிமோசனம் அடைந்த காமதேனு:
 🪷தேவலோகத்தில் உள்ள காமதேனு எனும் தெய்வீக பசு, சகல ஐஸ்வரியங்களும் நிறைந்தது. கேட்டதை எல்லாம் தரும் சக்தி உடையது. அமைதியே வடிவான இந்த காமதேனு, ஒரு முறை மாயையினால் ஆட்கொள்ளப்பட்டு கடும் பசிக்கு ஆளானது. பசியின் கொடுமையால் மாமிசத்தை உண்ணத் தொடங்கியது. இதனால் இறைவனின் சாபத்திற்குள்ளாகி புலியாக மாறியது. தனது தவறுக்கு மனம் வருந்திய புலி வடிவம் கொண்ட காமதேனு, சாபநிவர்த்தி அடைவதற்காக ஏத்தாப்பூர் வந்து இங்குள்ள சாம்பமூர்த்தீஸ்வரரை வழிபட்டு பழைய சுயஉருவத்தை அடைந்தது. காமதேனு, புலி வடிவம் கொண்டு இங்கு வழிபட்டதால், இந்த ஊர் ‘ஏய்ச்சரம்’ என அழைக்கப்பட்டதாகவும் கூறுவார்கள்.

🛕ஆலய உருவாக்கம்
🌟கி.பி. 8-ம் நூற்றாண்டுக்கு முன்பு வரை இந்த ஆலயம், கட்டிடம் இல்லாமல் வில்வ மரத்தின் அடியில் லிங்கத் திருமேனி மட்டும் இருந்துள்ளது. ஒரு நாள் மைசூர் மகாராஜாவின் கனவில் தோன்றிய இறைவன், தனக்கு கோவில் கட்டுமாறு பணித்தார். அதன்படி மகாராஜா உத்தரவின்படி அவரது மந்திரிகளில் ஒருவரான சே‌ஷய்யர் என்பவர் இங்கு வந்து கோவில் கட்டும் பணியைச் செய்தார். கோவில் அமைக்கும் பணிக்காக ஏரி ஒன்று வெட்டப்பட்டது. அப்போது பூமியில் இருந்து பெருமாள் சிலை வெளிப்பட்டது.
சிவபெருமானுக்கு கோவில் அமைக்கும் பணியின் இடையிலேயே, அந்தப் பெருமாளுக்கும் தனி கோவில் கட்டப்பட்டது. அந்தக் கோவில் சாம்பமூர்த்தீஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் ‘லட்சுமி கோபால பெருமாள் கோவில்’ என்ற பெயரில் இருக் கிறது. இதனை அறிந்த மைசூர் மகாராஜா, மந்திரி சே‌ஷய்யரை அழைத்து பாராட்டி, முதல் கும்பாபிஷேகம் பெருமாளுக்கும், பின்னர் சிவனுக்கும் செய்ய உத்தரவிட்டார். இன்றும் முதல் பூஜை பெருமாளுக்கும், அதன்பிறகே சிவனுக்கு விசே‌ஷ பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.

🌺சமாதானப் பெருமாள் : 
🌻சாம்பமூர்த்தீஸ்வரர் ஆலயத்தின் பின்புறம் லட்சுமி கோபாலபெருமாள் ஆலயம் இருக்கிறது. இங்குள்ள பெருமாள் சிலை, சிவன் கோவில் அமைப்பதற்காக ஏரி ஒன்று வெட்டப்பட்டபோது, அதன் அடியில் இருந்து கிடைத்தது. இதையடுத்து அந்த பெருமாளைக் கொண்டு தனிக் கோவில் அமைக்கப்பட்டது.

 🌼சிவபெருமானுடன், தனது தங்கயான பார்வதி தேவியை சேர்த்து வைப்பதற்காக பெருமாளும் அம்பாளுடன் இத்தலம் வந்தார். தங்கைக்காக சிவனை சமாதானப்படுத்தி இருவரையும் சேர்த்து வைக்க வந்ததால், இவர் ‘சமாதானப் பெருமாள்’ என்றும் அழைக்கப்படு கிறார். இந்த பெருமாளின் திருமேனிதான் தற்போது லட்சுமிகோபால பெருமாள் கோவிலில் உள்ளது.

⛳பிரார்த்தனைகள்.
🪴 சாம்பமூர்த்தீஸ்வரரை வழிபட்டால் மகப்பேறு கிடைக்கும். குடும்ப பிரச்சினைகள், நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.
🌴வில்வ மரம் பிரகாரத்தில் உள்ளது. 
🍀ஒருவருக்கொருவர் பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவதற்காக மரத்தை சுற்றி வருகிறார்கள்
 🌿கோவில் பிரகாரத்தில் உள்ள வில்வமரத்தை பிரிந்த தம்பதியர் வலம் வந்து வழிபாடு செய்தால் பிரிந்தவர்கள் ஒன்று சேருவதுடன், சகல செல்வங்களுடன் வாழ்வார்கள் என்று கூறப்படுகிறது

🍃சர்ப்ப தோஷம்,புத்திர தோஷம் - முதலியவற்றிற்கு சிறந்த பரிகாரத்தலமாக வணங்கப்பட்டு வருகிறது.

நன்றி வலைதளங்கள்.

⛳#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

🛐2017 ல் ஏற்கனவே தரிசித்துள்ளோம். இறையருளால் 9.11.2025 மீள் தரிசனம்
🛕பஞ்சபூத தலத்தில் இரண்டாவது தலம், முதல் தலமாகிய பேளூரிலிருந்து இங்கு நேரடியாக வரலாம்.
🛕இக்கோயிலில் சாம்பமூர்த்தி, லட்சுமி கோபாலசுவாமி, மனோன்மணி அம்மையார் சன்னதிகள் உள்ளன. 
🛕இங்குக் கோயில் தேர் உள்ளது. 
🛕இக்கோயிலில் மொத்தம் இரண்டு கோபுரங்கள் உள்ளன.
🛕இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது
🛕மிகவும் பழமையான ஆலயம். 
🛕இராஜகோபுரம் அடுத்து ஏகப் பிரகாரம் கொண்ட கற்றளி ஆலயம். முன்மண்டபம், உள், நடு,அர்த்தமண்டபம் தாண்டி கருவரையில் சுவாமி கிழக்கு நோக்கிய அமைப்பில் உள்ளார்.
முன்மண்டபத்தில் தெற்கு நோக்கிய தனி சன்னதியில் அம்பாள் நின்ற கோலத்தில் உள்ளார்.
🛕ஆலயத்தின் கருவரை சுற்று பிரகார சுவற்றில் வரலாறு குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன.
🛕முன்புறம் பிரதான சாலை உள்ளது. வாகனங்கள் நிறுத்த வசதியும் உள்ளது. ஆலயத்தின் வடபுறத்தில் வீடுகள் உள்ளன. வணிக வளாகம், கடைகள் ஏதும் இல்லை.
🛕அருகில் உள்ள குருக்கள் வீட்டில் தொடர்பு கொண்டு தரிசித்தோம்.

ஆலய திறப்பு:
🍀கோயில் நேரம் காலை 9.30 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை. 

அமைவிடம்
🌟சேலம்-சென்னை தேசிய நெடுஞ் சாலையில் 37 கிலோமீட்டர் தூரத்தில், வாழப்பாடியை அடுத்து, புத்திரகவுண்டன்பாளையம் எனும் ஊருக்கு வடக்கே 2 கிலோமீட்டர் தொலைவில் வசிஷ்டநதியின் வடகரையோரம் இந்த ஆலயம் இருக்கிறது. ஆத்தூர் மற்றும் வாழப்பாடியில் இருந்து பஸ் வசதி உள்ளது.

🍁ஆலயம் வழிபாடு / பராமரிப்பில் உள்ளது.

🙇நன்றி🙏
🛕#சுப்ராம்ஆலயதரிசனம் 9.11.2025🛐
# என்றும்அன்புடன்💟
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🙇🛕
#ஆன்மிகபரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🗻

⛳ #பிரதோஷேக்குழுயாத்ரா 
🛕#ஆன்மீகதலயாத்திரை: 
சேலம் 8, 9 நவம்பர், 2025.
நன்றி🙏 9.11.2025
🕊️🔱🛐🙏🇮🇳🙇⛳🛕🌏🗻

அருள்மிகு அறம்வளர்த்த அம்மை உடனுறை தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், பேளூர்,சேலம்.பேலூர் - சேலம் - பஞ்சபூததலங்கள் -பிரதோஷக் குழு யாத்ரா - 9.11.2025

தான்தோன்றி ஈஸ்வரர் சிவன் கோவில், பேலூர், சேலம்
அருள்மிகு அறம்வளர்த்த அம்மை உடனுறை தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், பேளூர்,சேலம்.பேலூர், தமிழ்நாடு 636104 

🍀சேலம் மாநகரில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்திலும், வாழப்பாடியில் இருந்து வடக்கில் 6 கிலோமீட்டர் தூரத்திலும், அயோத்தியாப்பட்டணத்தில் இருந்து கிழக்கே 18 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ள பேளூரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

தனிச்சிறப்பு: 
💥தேவார வைப்புத்தலம்.
💥கனம் புல்ல நாயனார் தலம்.
💥முனிவர் வசிஷ்டரால் நிறுவப்பட்ட பஞ்ச பூத ஸ்தலங்களில் இதுவும் ஒன்று . 

💥வசிஷ்டர்   மிகப் பழமையான மற்றும் மிகவும் மதிக்கப்படும் வேத ரிஷிகள் அல்லது முனிவர்களில் ஒருவர், மேலும் சப்தரிஷிகளில் (ஏழு பெரிய ரிஷிகள்) ஒருவர். 

💥சப்தரிஷிகள்: அத்ரி, பரத்வாஜர். கௌதம மகரிஷி, ஜமதக்னி, காஷ்யபர். வசிஷ்டர் மற்றும் விஸ்வாமித்திரர். 

💥ரிக்வேதத்தின் 7வது மண்டலத்தின் தலைமை ஆசிரியராக வசிஷ்டர் கருதப்படுகிறார்  . ஆதி சங்கரரால் அவர் இந்து தத்துவப் பள்ளியின் முதல் முனிவர் என்று அழைக்கப்பட்டார்.  யோக வசிஷ்டர் ,  வசிஷ்ட சம்ஹிதை , அத்துடன்  அக்னி புராணம் மற்றும் விஷ்ணு  புராணத்தின் சில பதிப்புகள்  அவருக்குக் காரணம்.

💥வசிஷ்டர் முனிவர் பின்வரும் பஞ்ச பூத ஸ்தலங்களை நிறுவியதாக நம்பப்படுகிறது: 

1) தான்தோன்றி ஈஸ்வரர் சிவன் கோயில், பேளூர், சேலம் (நிலம்) 

2) சாம்பமூர்த்திஸ்வரர் கோயில், ஏத்தாப்பூர் (தண்ணீர்)

 3) கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோயில், ஆத்தூர் கோட்டை (அக்னி – நெருப்பு) 

4) ஸ்ரீ காமநாத ஈஸ்வரர் கோவில், ஆறகளூர் ,ஸ்ரீ கர்மன் கோயில். (காற்று )

 5) ஸ்ரீ ஸ்வர்ணபுரீஸ்வரர் கோவில், கூகையூர், 
(வானம்)
ஒரே நாளில் 5 ஆலயங்களையும் தரிசித்தல் சிறப்பு என்ற வகையில் தரிசித்து வந்தோம்.

💥 பேளூரில் உள்ள தான்தோன்றி ஈஸ்வரர் சிவன் கோவிலானது பஞ்சபூத தலங்களில் நிலம் குறிக்கும் தலமாக கருதப்படுகிறது.

ஆலய சிறப்பு:

🌟சேலம் வாழப்பாடி அருகே, வசிஷ்ட நதிக்கரையில் அமைந்துள்ள ஒரு பழமையான கோவில் ஆகும். பேளூரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

🌟இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கமானது உளி படாமல் சுயம்புவாக தானே தோன்றியதால் இவர் தான்தோன்றீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

🌟இந்தக் கோயில் 1000 ஆண்டுகளுக்கும் மேலானது. வரலாற்றுப் பெயர் வேள்வியூர். பிரம்மாண்ட புராணம் சமஸ்கிருதத்தில் உள்ள 18 புராணங்களில் ஒன்றாகும், இது பெரிய துறவி வேத வியாசரால் எழுதப்பட்டது. இந்த புராணத்தின் 130வது அத்தியாயத்தில், சுதாமுனி தனது சீடர்களுக்கும் பிற துறவிகளுக்கும் இறைவனின் மகிமையையும்
இந்த கோயிலையும் விவரித்தார்.

🛕மூலவர்: தான் தோன்றி ஈஸ்வரர்; அம்பாள் : அறம் வளர்த்த அம்மை (தர்மசம்வர்த்தினி.) 

🛕தல விருட்சம்: மா, பலா, இலுப்பை அனைத்தும் ஒரே மரத்தில். கோவிலில் உள்ள சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக இருக்கிறார் (சுயரூபம்).

🔰தலபுராணம்
🍃புராணத்தின் படி, அர்ஜுனன் தனது யாத்திரையின் போது அருகிலுள்ள தீர்த்தமலைக்கு வந்து சிவனை வணங்கினார். விஷ்ணு பகவான் சிவனின் வழிபாட்டு சிந்தனையுடன் தனது அம்பைப் பயன்படுத்துமாறு அவருக்கு அறிவுறுத்தினார். அவரது வழிபாட்டிலும், அம்பு எய்தலிலும் மகிழ்ச்சியடைந்த சிவபெருமான், தனது கட்டுப்பாட்டில் உள்ள கங்கை நீரில் பத்தில் ஒரு பங்கைப் பிரித்தார். அது வெள்ளாறு - வெள்ளை நதியாகப் பாய்ந்த படிக வெள்ளை நீர்.

 🍃வசிஷ்டர் முனிவர் தனது யாகத்தால் அந்த இடத்திற்கு மேலும் நற்பெயரைச் சேர்த்தார். ஐந்து பஞ்ச பூதங்களையும் சிவலிங்கமாக வடித்து நதியின்  5 இடங்களில் பிரதிஷ்ட்டை செய்து பூசித்தார்.
🍃மற்றொரு புராணத்தின் படி, 

🌱பல வருடங்களுக்கு முன்பு இந்தப் பகுதியில், மிளகு வியாபாரம் செய்து கொண்டிருந்த மாணிக்கம் செட்டியார், அவரது மிளகு வியாபாரத்திற்காக தினமும் மிளகு மூட்டைகளை மாட்டு வண்டியில் ஏற்றிச் சென்று சந்தையில் விற்று வருவார்.  ஒரு நாள், தற்போது சன்னதி அமைந்துள்ள அடர்ந்த காட்டைக் கடந்து சென்று கொண்டிருந்தார். கலைப்பு ஏற்பட்டதன் காரணமாகவும், இருள் சூழ்ந்ததாலும், அவர் ஓய்வெடுக்க விரும்பினார்.  அப்போது சமையல் செய்ய சுண்டைக் காய்களை ஒரு கல்லில் நறுக்கும்போது ஒரு குரலானது அவருக்கு கேட்டது. 'எனக்கு கல்லடி பட்டு தலை வலிக்கிறது, உன் மிளகை அரைத்து பற்று போடு' என்றபடி குரல் ஒலித்தது.

🌱மனிதர்களே இல்லாத இடத்தில் குரல் மட்டும் வருவதை கேட்டு பயந்த அந்த வியாபாரி, பயத்தில் 'என்னிடம் மிளகு இல்லை உளுந்து தான் இருக்கின்றது' என்று கூறிவிட்டு ஊருக்கு திரும்பி விட்டார். வீட்டிற்கு வந்ததும் மிளகு மூட்டைகளை திறந்து பார்த்தால் அதிர்ச்சி அடைந்தார். மிளகு முழுவதும் உளுந்தாக மாறி இருந்தது. அதிர்ச்சி அடைந்த அந்த வியாபாரி மீண்டும் அந்தக் குரல் ஒலித்த இடத்திற்கே சென்று இறைவனை வேண்டினார். அப்பொழுது மறுபடியும் அந்த குரல் ஒலித்தது.

'நீ சுண்டக்காய் நறுக்கிய இடத்திலிருந்து மண்ணை எடுத்து உளுந்தின் மீது தூவு' என்று கூறியது அந்த குரல்.

🌱இதன்படி செய்ய உளுந்து மீண்டும் மிளகாக மாறியது. இதன் பிறகு தான் அந்த வியாபாரி, தான் சுண்டக்காய் நறுக்கிய கல்லை உற்று நோக்கினார். அது ஒரு சுயம்பு வடிவமான லிங்கம் என்று தெரியவந்தது. இதன் காரணமாகத் தான் அந்த மிளகு செட்டியார் இந்த கோயிலை கட்டியதாக ஒரு வரலாறு கூறுகிறது.

🌱 இன்றளவும் அந்த மலையில் உள்ள மண் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் மிளகு உளுந்தாக மாறிய இடம் உளுந்தூர்பேட்டை என்று அழைக்கப்படுகிறது. அன்றிலிருந்து அந்த இடம் அதன் பெயரைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. 

🌱வரலாற்றின் படி உள் கருவறை மிலாகு (மிளகு) செட்டியாரால் கட்டப்பட்டது; மீதமுள்ளவை, மன்னர் பராந்தக சோழனால் கட்டப்பட்டது.

கனம்புல்ல நாயனார் - அவதார தலம்

🌱கனம்புல்லர், ஸ்ரீ தான்தோன்றீஸ்வரரின் தீவிர பக்தர்.  இந்தக் கோயிலில் விளக்கு ஏற்றுவதையே தனது முதன்மையான கடமையாகக் கருதி, மிகுந்த அர்ப்பணிப்புடன் அதைச் செய்தார். அவர் ஒரு கடினமான கட்டத்தை கடந்து தனது செல்வத்தையெல்லாம் இழந்தார். வறுமை அவரைத் திருப்பூலீஸ்வரத்திற்கு அழைத்துச் சென்றது, அங்குள்ள ஒரு சிவன் கோவிலில் விளக்கு ஏற்றி வைத்தார். தனது வாழ்க்கைக்கு, கனம்புல் என்ற ஒரு வகையான புல்லை வெட்டி சந்தையில் விற்று வந்தார்.  தனது சொற்ப வருமானத்தை எண்ணெய் மற்றும் திரிகளுக்குச் செலவிட்டார்.

🌱சிவபெருமான் அவரது பக்தியைச் சோதிக்க முடிவு செய்தார். ஒரு நாள் அவரது புல் விற்கப்படவில்லை, மேலும் விளக்குகளை ஏற்ற எண்ணெய் மற்றும் திரி வாங்க அவரிடம் போதுமான பணம் இல்லை. அவர் தனது முடியின் சுருட்டைகளை விளக்கில் திரியாகப் பயன்படுத்தி அதை ஏற்றினார். கனம்புல்லரின் உயர்ந்த பக்தியால் மிகவும் மகிழ்ச்சியடைந்த சிவன், அவருக்கு தரிசனம் அளித்தார், அவர் கடவுளுடன் ஐக்கியமானார். 

🌱பிரதோஷ நந்திக்கு முன்னால் உள்ள இந்த கோவிலில் விளக்கை ஏந்தியிருக்கும் கனம்புல்லரின் சிலையைக் காணலாம்.  அவர் நாயன்மார்களில் 48வதவார்.

ஆலய அமைப்பு

🌟இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கமானது உளி படாமல் சுயம்புவாக தானே தோன்றியதால் இவர் தான்தோன்றீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். 

🌟அம்பாள் ‘அறம் வளர்த்த நாயகி’ என்ற பெயரில் ஈசனின் சன்னிதிக்கு இடதுபுறம் தனிச்சன்னிதியில் வீற்றிருக்கிறார். 

🌟மூலவரான தான்தோன்றீஸ்வரர் சுயம்புலிங்கமாக கிழக்குநோக்கி காட்சி தருகிறார். இவரை வணங்கினால் கல்வி, செல்வம், உத்தியோக உயர்வு கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

🌟இந்த ஆலயம் 97 அடி உயர கோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. கோயிலின் முன்பகுதியில் உள்ள பதினாறு கால் மண்டபத்தில், யாழி மற்றும் குதிரைவீரன் சிற்பங்கள் கலை நுணுக்கத்துடன் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. மேலும் பஞ்சபூத லிங்கங்கள், அறுபத்து மூவர், குபேரலிங்கம், தட்சிணாமூர்த்தி, சகஸ்ரலிங்கம், ஆறுமுகசாமி, கஜலட்சுமி, ஜேஷ்டாதேவி, துர்க்கை, பிச்சாடனர், காலபைரவர் போன்ற சன்னிதிகளும் உள்ளன. வன்னி மரத்தடியில் நவக்கிரகங்கள் வீற்றிருக்கின்றன. சனீஸ்வரர் காக வாகனத்தில் ஒற்றைக்காலுடன் நின்றபடி காட்சி தருவது சிறப்பம்சமாகும்.

தலவிருட்சம்
🪷மா, பலா, இலுப்பை இந்த மூன்று மரமும் சேர்ந்து ஒரே மரமாக காட்சியளிக்கிறது. கோவிலின் தலவிருட்சமான இந்த மரம் கோவிலுக்கு மற்றொரு சிறப்பு.

குபேரலிங்கம்
🪷வசிட்டர் உலக நலனுக்காக தவம் செய்ய முன்வந்தார். அப்போது குபேரன், தாமரை பீடத்தில் எழுந்தருளிய சிவபெருமானை வணங்கி பொன் மாரி பொழிந்தார். இதனை நினைவுறுத்தும் வகையில், தாமரையில் எழுந்தருளியுள்ள குபேரலிங்கத்தை ஆலயத்தில் தரிசிக்கலாம்.

சூரிய பூசை
🪷சூரிய கதிர்கள்: ஆண்டுதோறும் சித்திரை 3-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை, சூரியன் தனது ஒளிக்கதிர்களால் மூலவரை வழிபடுவது சிறப்புக்குரியது; பிரசித்தி பெற்றது.

திருமண பரிகாரம்: 

🪷இந்தக் கோவிலில் கல்யாண விநாயகர் என்று அழைக்கப்படும் வலம்புரி விநாயகர், இடம்புரி விநாயகர் என இரட்டை விநாயகர்கள் உள்ளனர். சங்கட சதுர்த்தி அன்று இந்த இரட்டை விநாயகரை அருகம்புல் அல்லது வெள்ளெருக்கு மாலை சூட்டி வழிபட்டு வந்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். இந்த விநாயகர் சன்னதி முன்பாகவே திருமணங்கள் நடைபெறும். இந்த கோவிலில் வசிஷ்டரும், அருந்ததியும் நேரடியாக இருந்து ஆசிர்வாதம் செய்வதால், அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் சடங்கு இங்கு கிடையாது.

🪷திருமண தடை நீங்க இந்த கோவிலில் சிறப்பு பரிகாரங்கள் செய்யப்படுகின்றன. இங்குள்ள கல்யாண விநாயகர் சிலைக்கு பூமாலை சாத்தினால் திருமணம் விரைவில் நடக்கும் என்பது நம்பிக்கை.

சிற்பங்கள்: ஒரே கல்லில் செய்யப்பட்ட குதிரை வாகனம், சூலாயுத சிற்பம், யாழி வாயில் உருண்டைக்கல் உருள்வது போன்ற அரிய சிற்பங்கள் இங்கு உள்ளன.

🪷இந்த கோவில் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த நான்கு கால் கல்தூண் மண்டபம் போன்ற வரலாற்று சிறப்பு மிக்க அம்சங்களைக் கொண்டுள்ளது. 

 🌿தீர்த்தம் - வசிட்ட நதி.

🍁விழாக்கள்

🪴இங்கு தமிழ் புத்தாண்டு, சித்ரா பௌர்ணமி, திருவாதிரை, பங்குனி உத்திரம், ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, நவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

🪴இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந் திருக்கும்.

⛳#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

🍁2017ல் இந்த பஞ்சபூத தலங்கள் சென்று தரிசிக்கும் வாய்ப்புக்கிடைத்தது. மீண்டும் 9.11.2025 ல் மறுவாய்ப்பாக இந்தப் பயணம் அமைந்தது, இறையருளே.

(ஒரே நாளில் 5 ஆலயங்களையும் தரிசித்தல் சிறப்பு என்ற வகையில் தரிசித்து வந்தோம்)

🍁ஆலயம் கிழக்கு நோக்கிய முழுவதும் கற்றளி அமைப்பில் உள்ளது.
ராஜகோபுரம் கடந்து உள்ள முன்மண்டப தூண்கள் எழில்மிக்க அபூர்வ சிற்பங்கள் கொண்டவை.

🍁முன்மண்டபம் கடந்து உள்மன்டபம், நிறுத்த, அர்த்தமண்டபம், கருவரையில் சுயம்புலிங்கம் - தான்தோன்றீஸ்வரர் கிழக்கு நோக்கி அருள்தருகிறார்.

🍁காலையில் 6.00 மணி அளவில் இந்த ஆலயம் வந்து சேர்ந்தோம். ஆலயம் மீண்டும் திருப்பணிகள் வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் முதலிய சன்னதிகள் தவிர எல்லா சுவாமி சிலைகளிலும் துணி போட்டு மூடி திருப்பணி வேலைகள் நடைபெறுகின்றன.
ஆலயத்தின் தென்புறத்தில் 63 மூவர் மற்றும் ஒரு சிவலிங்கம், நந்தியுடன் உள்ளது.
வடகிழக்கில் கனம்புல்ல நாயனார், பிட்சாண்டவர், கால பைரவர் இவர்களுக்கு ஏகமண்டபம் அமைத்து உள்ளனர். வட கிழக்கில்  நிலம் வழங்கிய நன்கொடை கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது. 
🍁ஆலயம் நல்ல வழிபாடு பராமரிப்பில் உள்ளது.

🙇நன்றி🙏
🛕#சுப்ராம்ஆலயதரிசனம் 9.11.2025🛐
# என்றும்அன்புடன்💟
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🙇🛕
#ஆன்மிகபரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🗻

⛳ #பிரதோஷேக்குழுயாத்ரா  - 
சேலம் 8, 9 நவம்பர், 2025.
🛕 #ஆன்மீகதலயாத்திரை:
நன்றி🙏 9.11.2025
🕊️🔱🛐🙏🇮🇳🙇⛳🛕🌏🗻

பஞ்சபூத தலங்களும் சப்ததுறை தலங்களும்சேலம் - நிவா நதி - பஞ்சபூத - தலங்கள். (9.11.2025)

பஞ்சபூத தலங்களும் சப்ததுறை தலங்களும்

சேலம் - நிவா நதி - பஞ்சபூத - தலங்கள்.

🏵️சிவபெருமானை மதிக்காமல் யாகம் நடத்தினான் தட்சன். அவன் நடத்திய யாகத்தில் தேவர்கள், சப்த ரிஷிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதனால் இறைவனின் கோபத்திற்கு ஆளான ரிஷிகள் அனைவரும், தங்கள் ரிஷி பதவியை இழந்து, வேதங்களை மறந்து நைமிசாரண்யத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பிறகு
சுக பிரம்ம ரிஷியின் அறிவுரைப்படி, அவர்கள் அனைவரும் இந்தப் பகுதிக்கு வந்து தவம் செய்தனர்.

🌟ராமரின் குல குருவான வசிஷ்ட முனிவர் சிவபெருமானுக்கு தவம் மற்றும் பூஜைகள் செய்ய இங்கு வந்தார். 

🌟அவரது தவத்திற்கு அசுரர்களால் பல இடையூறுகள் வந்தன அவர் பல தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நல்ல தண்ணீர் மற்றும் பூக்களால்  சிவனை வணங்க சோதனைகளைக் கடக்கலாம் என 
மகரிஷி நாரதர் முனிவர் கூறியதன் அடிப்படையில், வசிட்டர், தமது தவவலிமையால்
கல்வராயன் மலையிலிருந்து (வெள்ளி மலை)
 🌟‘வசிஷ்டநதி’ என்ற தீர்த்தத்தை உருவாக்கினார். வசிஷ்ட நதியை உருவாக்கி, நதிக்கரையில் பஞ்ச பூத மூர்த்திகளாக ஐந்து இடங்களில் சிவபெருமானை நோக்கி தவம் செய்தனர். 

🏵️மேலும் அதன் கரையில் பல்வேறு சிவாலயங்களை வழிபடுவதற்காக நதியை ஓட அழைத்ததாகக் கூறப்படுகிறது - இதனால் இந்த நதி நீவா - நிவா நதி எனப்பட்டது.

🪷1) தான்தோன்றீஸ்வரர் சிவன் கோவில், பேலூர், சேலம் (நிலம்) 
🪷2) சாம்பமூர்த்திஸ்வரர் கோவில், ஏத்தாப்பூர் (நீர்) 
🪷3) கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவில், ஆத்தூர் கோட்டை (அக்னி - தீ) 
🪷4) ஸ்ரீ காமநாதர் கோவில்,அரகளூர்.
🪷5) ஸ்வர்ணபுரீஸ்வரர் கோவில், கூகையூர் (வானம்)

🌟சிவபெருமானின் 5 பஞ்ச பூத தலங்களை வழிபடுவதாக உறுதிமொழி எடுப்பவர்கள் இங்கு வந்து ஒரே நாளில் 5 கோயில்களையும் வழிபட்டு தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள்.
🌟மேலும், ஒரு நாளில்  தரிசிப்பது மிகவும் புண்ணியம் என்று கருதப்படுகிறது.

சப்ததுறை தலங்கள்
⛳மேற்கண்ட 5 கோயில்களைத் தவிர, இந்த நதியின் கரையில் அமைந்துள்ள சப்த ரிஷிகளால் வழிபடப்படும் மற்ற கோயில்கள்
சப்த துறை தலங்கள் எனப்படுகின்றன.

💦6) ஆதித்துறை (காரியனூர்) 
💦7) திருவாளந்துறை
💦8) திருமாந்துறை
💦9) சு.ஆடுதுறை 
💦10) திருவத்துறை (திட்டக்குடி)
💦11) திருநெல்வாயில் அறத்துறை மற்றும் 
💦12) திருக்கைத்துறை. - முடவன் துறை & பெலான் துறை 

🌟நிவா நதியை அப்பர், சுந்தரர், சம்பந்தர் மற்றும் சேக்கிழார் ஆகியோர் பல்வேறு பாடல்களில் போற்றியுள்ளனர். 

🌟சுந்தரர் தனது 'திருநெல்வயல் அரத்துறை' தேவார பதிகத்தில் இந்த நதியின் முக்கியத்துவத்தைப் பற்றி 11 பதிகங்களைப் பாடியுள்ளார். 

பஞ்சபூத தலங்களும் சப்ததுறை தலங்களும்

🌟இந்தக் கோயில்கள் 'துறை கோயில்கள்' (தமிழில் துறை என்றால் ஆற்றங்கரை என்று பொருள்) என்றும் அழைக்கப்படுகின்றன.

 🌟இவற்றுடன் முக்தி தலங்களான விருத்தாசலம், சிதம்பரம் தலங்களையும் இணைந்து தரிசித்து வர வருடத்தில் ஒருமுறை ஒரே நாளில் அனைத்து ஆலயங்களையும் சென்று குழுவாக தரிசிக்க  ஶ்ரீ அஷ்ட்ட பைரவர் வழிபாட்டுக் குழுவினர் ஆத்தூர் திரு மு.தேவராஜ் (9626746789) மற்றும் திரு D. ராஜா ( 9842740750) அவர்கள் ஏற்பாடு செய்து வருவதாக விளம்பரம் ஆலயத்தில் உள்ளது.

⛳#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

 🌻பஞ்சபூத தலங்கள் அனைத்தும் சில கி.மீ. தூரத்தில் அடுத்தடுத்து  நல்ல பாதை வசதிகளுடன் அமைத்திருப்பதால், ஒரு நாளில் 5 ஆலயங்களையும் தரிசித்துவிட முடியும்.

🌻பேளூர், ஏத்தாப்பூர், ஆத்தூர், ஆரகளூர்
மற்றும் கூகையூர் என்பன இவ்வூர்கள். இந்த வரிசைப்படியே தரிசிக்க இயலும்.

🌻ஒவ்வொரு ஊரிலும், மேலும் சில பழமையான சிவ ஆலயங்கள், பெருமைமிகு பெருமாள் ஆலயங்கள் அருகருகே அமைந்துள்ளது, 

🌻மேலும், வட சென்னிமலை, முத்துமலை முதலிய புகழ் பெற்ற முருகன் தலங்கள், இன்னும் பல சிறப்பான ஆலயங்களும் உண்டு, என்பதால் அவற்றையும் தரிசிக்க,  சரியாகத்திட்டமிடுதலும், வாகன வசதிகளும் இருத்தல் அவசியம்.

🌻சில ஆரகளுர், கூகையூர் பழமையான சிற்றூர் என்பதாலும், நிறைய புராதானமான ஆலயங்கள் இங்கு இருப்பதாலும் நடை திறக்கும் நேரம், மற்ற வசதிகள் ஏற்பாடுகள் சற்று சிரமம் ஏற்படலாம்,

🌻இறையருள் கூட்டி வைத்தால், நிச்சயம் பயணம் வெற்றியாக நிறைவேறும்,

🌻2017 ம் ஆண்டும், மீண்டும் 9.11.2025 அன்றும்
இந்த பயணம் வெற்றிகரமாக இறையருள்  கூட்டிவைத்தது.

🌻இந்த பயணம் - ஆலய விபரங்கள் குறித்த எமது அனுபவபதிவுகளையும் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
மேலும் கீழ்கண்ட எமது வலைதளங்கள் தங்களுக்கு உதவலாம். அதன் விபரங்கள் இணைப்புகள் கீழே குறிப்பிட்டுள்ளேன். 

நன்றி🙏

🙏🏼🛕🛐🔱🙏🏼🛕🙇🏻🔱🙏🏼🛕🙇🏻🔱🙏🏼🛕🙇🏻🔱🙏🏼🛕🛐🔱
🛕ஆலயங்கள் சென்று ஆலய விழாக்களில்  சிறப்புடன் நேரில் சென்று அவசியம் கலந்து  கொண்டு தரிசித்து ஆலயம் வளர, உதவி செய்து, இறையருளும் ஞானமும், அருளும் பெற அன்புடன் வாழ்த்துகிறோம்.
🔱🙏🏼❤️🔱🙏🏼💜🔱🙏🏼💛🔱🙏🏼💙🔱🙏🏼🧡🔱
எமது வலைதள பதிவுகளைப் பின்தொடர்ந்து வரும் தங்களுக்கு மிகவும் நன்றி🇮🇳🙏
தொடருங்கள்....தொடர்பில் இருப்போம்......
🔱🙏🏼❤️🔱🙏🏼💜🔱🙏🏼💛🔱🙏🏼💙🔱🙏🏼🧡🔱
நன்றி🙏🏼
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
🔱🙏🏼❤️🔱🙏🏼💜🔱🙏🏼💛🔱🙏🏼💙🔱🙏🏼🧡🔱
💟ARATTAI - CHANNEL..
*_சுப்ராம். அருணாசலம்_* 
https://aratt.ai/@subbram_arunachalam

 *_சுப்ராம். அருணாசலம்*_ 
💟WHATSAPP CHANNEL....
ஆன்மீக பாரதம்
https://whatsapp.com/channel/0029Va5eOh59Bb67425WOR1A

💟FACE Book
ஆன்மீக பாரதம்
https://www.facebook.com/groups/1396741377679271/?ref=share&mibextid=NSMWBT


💟ஆலயம் தொழுவது சாலவும் நன்று
https://www.facebook.com/share/15XJLTLk9K/
https://whatsapp.com/channel/0029VbArVSVBA1f5tVIAiM04



💟Subbram Arunachalam :
https://www.facebook.com/share/15oHkTYQYm/

✅*_SUBBRAM_* 
https://subbramarunachalam.blogspot.com/?m=1

🔱🙏🏼🛕🛐🔱🙏🏼🛕🙇🏻🔱🙏🏼🛕🙇🏻🔱🙏🏼🛕🙇🏻🔱🙏🏼🛕🛐🔱

கோட்டை மாரியம்மன், சேலம்: - பிரதோஷிக்குழு யாத்ரா 8.11.25

கோட்டை மாரியம்மன், சேலம்

சேலம்: ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோயில் , 

⛳ சேலம், புதிய பேருந்து நிலையத்திலிருந்து கோயில் 3 கி.மீ தொலைவில் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

மூலவர் : கோட்டை மாரி அம்மன்;
ஸ்தல விருட்சம்: அரசு (போதி மரம்) 
தீர்த்தம்: மணிமுத்தாறு ஆறு.

⛳சேர மன்னர்கள் காலத்தில் அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோயில் கட்டப்பட்டது, ஏனெனில் தற்போதைய சேலம் மாவட்டம் அப்போது சேரநாட்டைச் சேர்ந்தது. பழங்காலத்தில் இந்த இடத்தில் ஒரு கோட்டை இருந்தது. அந்தக் கோட்டையில் அப்போதைய ஆட்சியாளர்கள் ஒரு பெருமாள் கோயில் மற்றும் மற்றொரு மாரியம்மன் கோயில் என இரண்டு கோயில்களைக் கட்டினார்கள். இந்தக் கோட்டை பின்னர் சேர மன்னர்களின் வீரர்களால் பாதுகாக்கப்பட்டது. 

🔱கோட்டை பெரிய மாரி என்று அழைக்கப்படும் மாரியம்மன் கோயில், ஆங்கிலேயர்களுக்கு முந்தைய காலத்தில் சேலம் கோட்டையின் காவல் தெய்வமாகும். இது சேலத்தில் உள்ள மிகப் பழமையான கோயில். காவல் தெய்வமான பெரிய மாரியம்மன், சேலம் மக்களால் பல தசாப்தங்களாக ஒன்றாக வழிபடப்பட்டு வந்தார்.

🔱 பின்னர் பெரிய மாரியம்மன் தெய்வம், புகழ்பெற்ற திருமணிமுத்து ஆறு (ஆற்றின்) கிழக்குக் கரையில் உள்ள தற்போதைய இடத்திற்கு, கனகசபை முதலியார், சிவசங்கர முதலியார் ஆகியோரால் கொண்டு வரப்பட்டது, பின்னர் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது, மேலும் சேலம் மாவட்ட மக்களால் பெரிய மாரியம்மன் தெய்வம் வழிபடப்படுகிறது.

🔱ஒருவர் எவ்வளவு பணக்காரராக இருந்தாலும், கடவுள் அல்லது தெய்வத்தின் முன் குனிந்து வணங்க வேண்டும் என்பதை வரையறுக்கும் ஒரு சிறிய கருவறையுடன் கூடிய மாநிலத்தின் ஒரே மாரியம்மன் கோயில் இதுவாக இருக்கலாம். 

🔱தாய் மாரியம்மன் ஈசன்யத்தை நோக்கி - வடகிழக்கு திசையை நோக்கி இருக்கிறார். மாரியம்மன் கருவறையில் ஒரு அரக்கனின் தலையில் தனது கால்களை வைத்து, தனது கால்களுக்குக் கீழே ஒரு தாமரை மொட்டை வைத்து அருள்பாலிக்கிறார். அடையாளமாக நிவேதனம் செய்வதற்குப் பதிலாக, இங்கே மாரியம்மனுக்கு நேரடியாக உணவளிக்கப்படுகிறது.

🔱இந்த தேவி மலைமாரி என்று அழைக்கப்படுகிறார். மாரி என்றால் மழை என்று பொருள். மழை பெய்யாதபோது, ​​பக்தர்கள் மழைக்காக இந்த தேவியிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்.

🔱 மழை பெய்யவும், வறட்சியிலிருந்து தங்களை காப்பாற்றவும், விவசாய விளைபொருட்களை உற்பத்தி செய்யவும், மலைமாரிக்கு அபிஷேகம் மற்றும் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. 

⛳கோயில் நேரம் தினமும் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், மீண்டும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் இருக்கும்.

⛳ ஆடித் திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருவார்கள், இந்தக் கோயிலின் மிக முக்கியமான மற்றும் பழமையான திருவிழா ஆடித் திருவிழா ஆகும், இதில் பூச்சாட்டு என்று அழைக்கப்படும் நிகழ்வு நடைபெறுகிறது. இந்தத் திருவிழாவின் போது, ​​சேலத்தில் உள்ள பிற மாரி அம்மன் கோயில்களுக்கு பூக்கள் இந்த கோயிலில் இருந்து மட்டுமே வழங்கப்படுகின்றன. இது 15 நாள் திருவிழா. கம்பம் நடுதல், அன்னை சக்தியை அழைத்தல், கரகம் - கையால் தொடாமல் தலையில் பானையுடன் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆடும் நாட்டுப்புற நடனம், ஆனால் உடல் அசைவுகளால் மட்டுமே சமநிலைப்படுத்துதல், உருளுதண்டம், மாரி அம்மன் மற்றும் மகா அபிஷேக்கிற்கு பொங்கல் வைத்தல் போன்ற பல நிகழ்ச்சிகள் இதில் அடங்கும்.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

🌟பழமையான இவ்வாலயம் சேலம் மாநகரின் நடுவில் உள்ளது.
🌟மத்தியப் பகுதியில் உள்ளதால் ஆலயம் சுற்றிலும் போக்குவரத்து பரபரப்பு உள்ளது.
🌟ஆலயம் முழுதும் கற்றளி நல்ல பராமரிப்பில் உள்ளது. 
🌟தூய்மையாக உள்ளது. ஏராளமான பக்தர்கள் தரிசனம். 
🌟ஆலயம் முன்மண்டபம் கொண்டது
ராஜகோபுரம் கிழக்குப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. 
🌟கோயில் பிரதான சாலையில் இருப்பதால், கார்களை நிறுத்துவதில் சிக்கல் உள்ளது. எனவே, அருகிலுள்ள சுகவனேஸ்வரர் கோயிலில் இறக்கிவிட்டு அங்கேயே நிறுத்த வேண்டும்
🌟புராதானமும், பக்தியும் வழிபாடுகளும் மிக்க பெருமை மிகு ஆலயம்; 
🌟சேலத்தின் முக்கிய அடையாளம்.

🙇நன்றி🙏
🛕#சுப்ராம்ஆலயதரிசனம் 8.11.2025🛐
# என்றும்அன்புடன்💟
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🙇🛕
#ஆன்மிகபரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🗻

⛳ #பிரதோஷேக்குழுயாத்ரா  - 
சேலம் 8, 9 நவம்பர், 2025.
🛕 #ஆன்மீகதலயாத்திரை:
நன்றி🙏
8.11.2025
🕊️🔱🛐🙏🇮🇳🙇⛳🛕🌏🗻

சுகவனேஸ்வரர் ஆலயம், சேலம், பிரதோஷ க்குழு யாத்ரா 8.11.2025

சுகவனேஸ்வரர் ஆலயம்,  சேலம்

மணிமுத்தாறு நதிக்கரையில் பீமன் வழிபட்ட ஐந்து சிவன் கோயில்கள்.

தலபுராணம்
🛕மணிமுத்தாறு நதிக்கரையில் அமைந்துள்ள ஐந்து சிவன் கோயில்கள் பீமன் வழிபட்ட இடங்களாகும். சேலத்தில் சுகவனேஸ்வரர், உத்தமசோழபுரத்தில் கரபுரநாதர், பில்லூரில் வீரட்டீஸ்வரர், மவுரெட்டியில் (பரமத்தி) பீமேஸ்வரர் மற்றும் நஞ்சை இடையாற்றில் திருவேணீஸ்வரர். ஐந்து கோயில்களிலும் ஒரே நேரத்தில் வழிபாடு செய்வது நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று உள்ளூர்வாசிகள் கருதுகின்றனர்.

🛕புராணத்தின் படி, பஞ்ச பாண்டவர்களின் பீமன் வேட்டையாடுவதற்காக காட்டைச் சுற்றிச் சென்றபோது, ​​ஒரு வலிமையான காண்டாமிருகம் தான் தனது இடத்தை ஆக்கிரமித்துவிட்டதாக நினைத்து அவருடன் சண்டையிடத் தொடங்கியது. பீமன் தனக்கு அத்தகைய நோக்கங்கள் இல்லை என்று அவரை நம்ப வைக்க முயன்று ஓடத் தொடங்கினான். வழியில் அவர் 5 இடங்களில் சிவனை வணங்கினார்
 (சேலத்தில் சுகவனேஸ்வரர், உத்தமசோழபுரத்தில் கரபுரநாதர்,
 பில்லூரில் வீரட்டீஸ்வரர்,
 மவுரெட்டியில் (பரமத்தி) பீமேஸ்வரர் மற்றும் 
நஞ்சை இடையாற்றில் திருவேணீஸ்வரர்). 

🛕பீமனால் அந்த விலங்கை வெல்ல முடியவில்லை. கடைசியில் பீமன் தனக்கு தீய எண்ணம் இருந்தால் தனது உடலை இரண்டு துண்டுகளாக உடைக்கட்டும் என்று சொன்னான். காண்டாமிருகம் சிவனிடம் திரும்பி அவரை ஆசீர்வதித்தது.

🛕மேலே உள்ள புராணத்தின் மற்றொரு பதிப்பு, பீமன் தனது உடல் வலிமையைப் பற்றி மிகவும் பெருமைப்பட்டதாகவும், சிவபெருமான் அவருக்கு பணிவைக் கற்பிக்க விரும்பினார் என்றும் கூறுகிறது. எனவே அவர் காண்டாமிருகத்தின் வடிவத்தில் வந்தார் என்பது குறிப்பு.

சுகவனேஸ்வரர் சுவாமி கோயில், சேலம்
அருள்மிகு சுகவனேஸ்வரர் சுவாமி திருக்கோயில், அக்ரஹாரம், சேலம், தமிழ்நாடு 636001 
அருள்மிகு சுகவனேஸ்வரர் சுவாமி திருக்கோயில், 

☘️தமிழ்நாட்டின் சேலத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. அருணகிரிநாதர் இக்கோயிலின் முருகப் பெருமானைப் புகழ்ந்து திருப்புகழ்ப் பாடல்களைப் பாடியுள்ளார். இந்த இடத்தின் வரலாற்றுப் பெயர்கள் சுகவனம் & சதுர்வேத மங்கலம்.

ஆலய சிறப்புகள் :

☘️மணிமுத்தாறு நதிக்கரையில் சுயம்பு லிங்கங்களைக் கொண்ட ஐந்து கோயில்களில் இதுவும் ஒன்றாகும். பீமாவால் வழிபடப்பட்டவை இவை. 

☘️திருப்புகழ் பாடல் பெற்ற தலம்

 ☘️சுக முனிவர் கிளி வடிவம் எடுத்து கோயிலில் வழிபட்டார். எனவே, இந்த இடம் சுகவனம் என்றும், சுகவனேஸ்வரர் என்றும் அறியப்பட்டது. அருணகிரியார் பாடல்களில் இந்த கோயில் குறிப்பிடப்பட்டுள்ளது, 

☘️ஆதிசேஷனுக்கு தரிசனம் அளித்த இறைவன், சேர மன்னர், தேவர்கள் போதி மரத்தின் (அரசமரம்) வடிவத்தில் இறைவனை வழிபடுவது 

☘️புகழ்பெற்ற தமிழ் பெண் கவிஞர் அவ்வையார் தனது வளர்ப்பு மகளின் திருமணத்தை நடத்துவது போன்ற நிகழ்வுகளுடன் இது இணைக்கப்பட்டுள்ளது.

☘️மூலவர்: அருள்மிகு சுகவனேஸ்வரர்.(கிளி இக் கடவுளிடம் விருப்பம் கொள்வதால் கடவுளின் பெயர்) 
சுவாமியின்பிற பெயர்கள்: கிளி வனநாதர், பாபநாசர், பட்டேசுரர், நஹிசர், மும்முடிநாதர். 

☘️அம்பாள்: சொர்ணாம்பிகை, மரகதவல்லி, பட்சிவல்லி. ஸ்தல விருட்சம் : பத்திரி மரம்; தீர்த்தம் : அமண்டுகம்; 
☘️விநாயகர் : வலம்புரி விநாயகர் (இரட்டை விநாயகர்).இந்தக் கடவுள்கள் இந்தக் கோயிலின் "மும்மூர்த்திகள்".

☘️500 ஆண்டுகள் பழமையான இந்த சிவன் கோயில், கடந்த கால சேர, சோழ, பாண்டியர் ஆட்சியாளர்களின் வரலாற்றுச் சுவடுகளையும், அதன் கம்பீரமான கோபுரங்களுடன் கூடிய மைசூர் வம்சத்தின் வரலாற்றுச் சுவடுகளையும் தாங்கி நிற்கிறது. இந்த கோயில் தோட்டத்தில் பல வகையான பூக்கள், உயரமான தென்னை மற்றும் நூற்றுக்கணக்கான 'வில்வ' மரங்கள் உள்ளன.

தலபுராணம்
☘️புராணத்தின் படி, பிரம்மா தனது படைப்புகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை என்பதன் மர்மத்தைப் பற்றி சிலரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இந்த ரகசிய உரையாடலைக் கேட்ட பிரபல சிவ பக்தரான சுகர் முனிவர், ஞான தேவதையான சரஸ்வதியிடம் அதையே தெரிவித்தார். கோபமடைந்த பிரம்மா, சுகனை ஒரு கிளியாக மாறச் சபித்தார், மேலும் சாபவிமோசனமாக, பாபநாசம் பகுதியில் (தற்போது கோயில் பகுதி) சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்தால் சாபத்திலிருந்து விடுபடுவேன் என்று கூறினார். அவ்வாறே, சுகர் முனிவர் ஏராளமான கிளிகளுடன் இங்கு வந்து சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்யத் தொடங்கினார். 

🍀ஒரு வேட்டைக்காரர் அந்த இடத்திற்கு வந்து, எறும்புப் புற்றில் ஒளிந்திருந்த கிளிகளை விரட்ட விரும்பினார். சிவலிங்கத்தைப் பாதுகாக்க கிளி சுகர் தனது இறக்கையை விரித்தபோது, ​​வேட்டைக்காரர் எறும்புப் புற்றையும் சேர்த்து வெட்டினார். கிளி சுகர் தாக்கப்பட்டதால் அதிக இரத்தப்போக்கு மற்றும் மரணம் ஏற்பட்டது.
லிங்கத்திலிருந்து இரத்தமும் வெளியேறியது. உண்மையை உணர்ந்த வேட்டைக்காரர் தன்னைத்தானே மாய்த்துக் கொள்ள முற்பட்டார். இறைவன் அருள் பெற்றார். சுகர் முனிவரும் தனது சொந்த வடிவத்தைப் பெற்று, சுகவனேஸ்வரரின் பெயரால் இங்கே இருக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்;  இதனால் இந்த லிங்க இறைவர் சுகவனேஸ்வரர் என்பதாயிற்று.

ஆலய அமைப்பு:
🍀கோயில் கிழக்கு நோக்கி உள்ளது, கோயிலின் நுழைவாயில் தெற்கு நோக்கி உள்ளது. இந்த கோயிலின் முன் பக்கம் “திருநந்தி மண்டபம்” மற்றும் “முன் மண்டபம்” ஆகியவை நுழைவாயிலுக்கு முன்னால் அமைந்துள்ளன. விநாயகர் கோபுர நுழைவாயிலின் தெற்கே அமைந்துள்ளது.

🍀இக்கோயிலின் தெய்வங்கள்: மகேஸ்வரி, கௌமாரி, வைணவி, வாராஹி, மஹேந்திரி, சாமுண்டி, தெற்குப் பகுதியில் அமைந்துள்ளன. இக்கோயிலின் மேற்குப் பகுதியில் வலம்புரி விநாயகர், (இரட்டை விநாயகர்) ஐயப்பன், தட்சிணாமூர்த்தி மற்றும் மேலே வரிசை கங்காள மூர்த்தி, காசி விஸ்வநாதர், சரஸ்வநாதர், கௌமாரி, பூஜா லக்ஷ்மி, பூவ லக்ஷ்மி தேவிகள்.வடக்கில் முருகன் வள்ளி, தெய்வானை சன்னதி  அமைந்துள்ளது.

 🍀"அர்த்த மண்டபத்திற்கு" பக்கத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் மூலவர் "அருள்மிகு சுகவனேஸ்வரர்" .

🍀நவக்கிரகத்தில் ராகுவும் சேவையும் தங்கள் இடங்களை மாற்றியது இந்தக் கோயிலின் சிறப்பு. எனவே இந்தக் கடவுளிடமிருந்து விருப்பம் பெறுபவர்களுக்கு வேலை மற்றும் திருமண வாய்ப்பு உள்ளது. 

🍀தல விருட்சம் இந்தக் கோயிலின் "பத்திரி மரம்" நந்தவனத்தில் அமைந்துள்ளது.

🍀இந்தக் கோயிலில் கிளிகளின் ராஜாவான சுக முனிவரால் வழிபடப்பட்டதாகக் கூறப்படும் சிவனின் உருவம் உள்ளது. 

🍀புனித கவிஞரான அவ்வையார் இங்கு அற்புதங்களைச் செய்ததாகவும், மூன்று பெரிய தமிழ் ராஜ்யங்களான சோழ, சேர மற்றும் பாண்டிய ராஜ்யங்களின் மன்னர்கள் அவ்வையாரின் வளர்ப்பு மகளின் திருமணத்தில் கலந்து கொள்ள இந்த கோயிலுக்கு வருகை தந்ததாகவும் கூறப்படுகிறது. 

🍀இந்தக் கோயிலின் பெருமைகளை சைவ புனித கவிஞர்கள் பாடியுள்ளனர். இந்தக் கோயில் சங்க காலத்திற்கு முந்தையது, 1000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று கூறப்படுகிறது.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

🌟பழமையான இவ்வாலயம் சேலம் மாநகரின் நடுவில் உள்ளது.
🌟வைகாசியில் தேர்திருவிழா பிரசித்தம்.
🌟மத்தியப் பகுதியில் உள்ளதால் ஆலயம் சுற்றிலும் போக்குவரத்து பரபரப்பு உள்ளது.
🌟ஆலயம் முழுதும் கற்றளி நல்ல பராமரிப்பில் உள்ளது. 
🌟தூய்மையாக உள்ளது. ஏராளமான பக்தர்கள் தரிசனம். 
🌟ஆலயம் முன்மண்டபம் கொண்டது
ராஜகோபுரம் கிழக்குப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. 
🌟ஆலயத்திற்குள் வடபுறம் பெரிய நந்தி சுதை வேலைப்பாடுகளுடனும், பிரதோஷ நந்தி கல் வேலைப்பாட்டிலும் தனித்தனியாக உள்ளன. 
🌟புராதானமும், பக்தியும் வழிபாடுகளும் மிக்க பெருமை மிகு ஆலயம்; 
🌟சேலத்தின் முக்கிய அடையாளம்.

🙇நன்றி🙏
🛕#சுப்ராம்ஆலயதரிசனம் 8.11.2025🛐
# என்றும்அன்புடன்💟
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🙇🛕
#ஆன்மிகபரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🗻

⛳ #பிரதோஷேக்குழுயாத்ரா  - 
சேலம் 8, 9 நவம்பர், 2025.
🛕 #ஆன்மீகதலயாத்திரை:
நன்றி🙏
8.11.2025
🕊️🔱🛐🙏🇮🇳🙇⛳🛕🌏🗻

உலகியநல்லூர் -அர்த்தநாரீஸ்வரர் கோயில் - சேலம் - பஞ்சபூத தலங்கள் அருகில் - பிரதோஷக் குழு யாத்ரா - 9.11.2025

உலகியநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயில்  🛕தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உலகியநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். 🛕அ...