#சம்பந்தர்அமுதம்
#தலப்பெருமை #பேரருட்திறன்
#வினாவுரை
பதிவு : 11
🛐பக்தியால் தமிழும், தமிழால் பக்தியும் வளர்த்த தெய்வப்பிறவி, அருள் ஞானசம்பந்தரின் அற்புத பதிகங்களின் சிறப்புக்களின் சில துளிகள் பருகுவோம்.
⚜️வினாவுரை அமைப்பில் உள்ள பாடல்களைப் பற்றிய சிந்தனைகள்
🌈#அமுதப்பதிகங்கள்
அமைப்புச்சிறப்புகள்
பதிவு: 11
வினாவுரை அமைப்பு என்றால் என்ன?
♻️இறைவன் சிறப்புகளை வினவுதல் போல கேள்வி எழுப்பி அதன் விடையை உட்பொருளாக உணர்த்தும் அமைப்பில் பாடல் அமைந்து வருவது.
🛐1️⃣1️⃣
-எட்டுத்திக்கிலும், பொழில் சூழ விளங்கும் பதி எது?
வினா?
_இப்பதிகச் சிறப்பு யாது?
விளக்கம்:
இரண்டாம் திருமுறை
பதிகம்.2.139
தலம் - திருத்தெளிச்சேரி
பாடல் முதலடி: 'பூவலர்ந்தன
பண்: இந்தளம்
வினாவுரைப் பதிகம்
பாடல்: 11
திக்கு லாம்பொழில் சூழ்தெளிச் சேரி எம் செல்வனை
மிக்க காழியுண் ஞானசம் பந்தன் விளம்பிய
தக்க பாடல்கள் பத்தும் வல்லார்கள் தடமுடித்
தொக்க வானவர் சூழ இருப்பவர் சொல்லிலே.
பொருள் :
எட்டுத்திக்கிலும், பொழில் சூழ விளங்கும் தெளிச்சேரியில் வீற்றிருக்கும் எமது செல்வமாகிய பரமனை, எக்காலத்திலும் மிக்கு விளங்கும் காழிப் பகுதியில் விளங்கும் ஞானசம்பந்தன் விளம்பிய தகைமை பொருந்திய இத்திருப் பதிகத்தை மனதார நாவினால் சொல்லினாலே, புகழ் மிக்க தேவர்கள் சூழ விளங்குவார்கள்.
சிறப்பு:
இப்பதிகத்தினை மனதார நாவினால் சொல்லுதலை உணர்த்தும் வகையில் சொல்லிலே என்று குறிப்பிட்டுள்மை.
🛐ஞானசம்பந்தரின் பதிகச் சிறப்பு
ஒவ்வொரு பாடலும் 4 வரிகள், அதில் முதல் இரு வரிகளில்,
தலச்சிறப்பும், அடுத்த இரு வரிகளின் இறைவரின் அருட்சிறப்பும் வெளிப்படுத்தும் அற்புத பதிகம்.
முதல் இருவரிகளில் ......
1.திருத்தளிச்சேரி தலத்தின் இயற்கை வளம் பக்திச் சிறப்பும், மனிதர் மான்பும், குறிப்பிட்டு இப்பதியில் வசிப்பவரே - திருத்தெளிச்சேரியீர் என்ற இறைவரை விளித்தது.
அடுத்த இருவரிகளில்
2.இறைவரின் அருட்பேராற்றலை குறிப்பிட்டு, வியந்து வினவுகிறார்.
💥இதுகாறும், திருமுறையில் தமிழ் ஞானசம்பந்தர் அருளிய வினாவுரை அமைப்பு பதிகங்களை சிந்தித்தோம்.
🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி மூல நூல்களையும் , கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.
☸️இவைகளில் சில பதிகங்களின் சிறப்பு பற்றித் தனித்தனியாக சிலக்குறிப்புகளுடனும், பொருள் விளக்கமுடனும் அடியேன் சிந்தைக்கு எட்டியவரை பல்வேறு அறிஞர்கள், சான்றோர்கள் நூல்களிலிருந்து தொகுத்து சில துளிகளாக அவ்வப்போது வழங்கப்படுகிறது.
பருக விரும்புவோர்; பொறுமையுடன் சென்று முன்பதிவுகளைப் பார்க்கவும்.
🔯படித்துப் பலன் பெறுங்கள்.
தமிழின் வளத்தை, சிறப்பை, பக்திப் பெருமையை உணருங்கள்; உலகுக்கு உணர்த்துங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம்..... ......
🙏நன்றி🙇♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்🙇♂️🙏🙇♂️
🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽
முன்பதிவு :
https://m.facebook.com/story.php?story_fbid=5936540046421203&id=100001957991710
No comments:
Post a Comment