Tuesday, July 6, 2021

வழிமொழிதிருவிராகம் - சம்பந்தர் இசையமுதம் - பதிவு - 11 பாடல் 11

#திருமுறைகளில்_தமிழமுதம்:
#சம்பந்தர்_அமுதம்
#தமிழரின்பொக்கிஷம்:
பதிவு : 11

#வழிமொழி_திருவிராகம், பற்றிய பதிவு.
மூன்றம் திருமுறை பதிகம்: 325
பாடல் 11 பாடல்

🙏🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♂️🙏

👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.
🌬️2. இப்பதிவுகளில் உள்ள தேவாரப் பாடல்களை குறைந்தபட்சம் இரண்டு முறைகளாவது வாய் விட்டு உச்சரித்து படித்தல் அவசியம்.
📚3. இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே. 

🙇‍♂️நன்றி🙏

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
ஞானசம்பந்தர் அருளிய அற்புத இசைத் தமிழ் பதிகங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.

#தமிழரின்பொக்கிஷம்:

#திருவிராகம்,# வழிமொழிதிருவிராகம்,
#வண்ணகம்,#முடுக்கியல்,#அடுக்கியல் 
இவை பற்றி முன்பதிவுகளில் சிந்தித்தோம்.
தொடர்ந்து
#வழிமொழிதிருவிராகம் பதிகப் பாடல் விளக்கங்களயும், சிறப்புகளையும்
தொடர்ந்து இப்பதிவில் பார்ப்போம்.

📕மூன்றாம் திருமுறையில் வரும்
பாடல்கள்: 714 - 725
பதிகம் 325 தலம் திருப்பிரமபுரம்.
'சுரர் உலகு நரர்கள்பயில் தரணிதல'
எனத் தொடங்கும் பதிகப் பாடல்கள்.

⚜️வழிமொழி திருவிராகம் என்னும் வகை சேர்ந்தது.

🅾️#வழிமொழிதிருவிராகம்:

⏺️இலக்கணம் :
⏏️குற்றெழுத்துப் பயின்று வரும் முடுகிய ஓசையுடையதாய் அடி முதற்சீரின் இரண்டாம் எழுத்து சீர்தோறும் ஒன்றி வழியெதுகையால் வரத் தொடுப்பது இவ்வகையாம்.
(முடுகிய என்பது வேகமாக ஓடும் தாள அமைப்பு எனக் கொள்ளலாம்)

🔸இதன் ஓசை அமைப்பில் பாடல் 

தனனதன தனனதன தனனதன  
              தனனதன தனனதனனா

என அமைகிறது.

இப்பதிவில்,
இப்பதிகத்தின் 11 வது பாடல் விளக்கங்களையும் சிறப்புகளையும் பற்றி தொடர்ந்து சிந்திக்கலாம்.

🔵 இதில் திருஞானசம்பந்தர் 'வழிமொழிகள் மொழி தகையவே' என்று குறிப்பிட்டு சிறப்பிப்பதாலே இந்தப் பதிகம் வழிமொழி திருவிராகம் என்னும் பெயர் சூட்டப்பட்டது.

⏺️சந்தப்பாக்களின் சீர்களில் ஒவ்வொர் உயிரும் ஓரசை என்பதால் ஓசை நயமும் தாளமும் நிறைய அமைத்துள்ளதை நாம் சிந்திக்க வேண்டும்.

🔹திருஞானசம்பந்தப்பிள்ளையாரை முருகனின் திரு அவதாரமாகக் கொண்டவர் அருணகிரிநாதர். இதைக் குறிப்பிட்டு பாடல்கள் செய்துள்ளார். 

✔️இராமலிங்கசுவாமிகளும் இக்கருத்தை ஏற்கிறார்.

🔷இது போன்ற சந்தப் பாடல்களை கற்றுணர்ந்து அருணகிரியார் தம்முடைய திருப்புகழ் பாடல்களை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

⏺️இந்தப் பதிகம் 12 பாடல்கள் கொண்டது.

⏹️சீர்காழிப்பதியின் 12 பெயர்கள் வந்த வழியை - வரலாற்றிணை - விளக்கத் தக்க வகையில் அமைந்துள்ளது.

🔹சாதாரி என்ற பண் வகையினது.
பாடல். 11 
💠கொச்சை: பராசர முனிவர் தனது உடல் கொச்சையான துர்நாற்றமும், பழியும் போகும் பொருட்டு பூசித்த தலம்.

✳️'ச்' என்ற சீர் அமைப்புள்ளது.

பாடல் : 11

நச்சரவு கச்செனவ சைச்சுமதி உச்சியின்மி லைச்சொருகையான்

மெய்ச்சிரம் அணைச்சு உலகில் நிச்சமிடு பிச்சையமர் பிச்சன் இடமாம்

மச்சமத நச்சிமதம் அச்சிறுமி யைச்செய்தவ அச்சவிரதக்

கொச்சைமுர வச்சர்பணி யச்சுரர்கள் நச்சிமிடை கொச்சைநகரே.

                                         - 3:325:11 (724)
பொருள் :

நஞ்சையுடைய பாம்பைக் கச்சாகக் கட்டி, சந்திரனைத் தலையிலே சூடி, ஒரு கையில் பிரமகபாலத்தைத் தாங்கி, உலகிலே நாடோறும் இடுகின்ற பிச்சையை விரும்பும் பித்தனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், மீன் நாற்றத்தை விரும்பும் மச்சகந்தியை வசமிழந்து ஆற்றினிடையில் புணர்ந்த கொச்சைத் தன்மைக்குக் கதறி அது நீங்க பராசரமுனிவர் வணங்க, தேவர்களும் விரும்பி அணுகும் கொச்சைவயம் எனப்படும் திருத்தலமாகும்.

விளக்கம்:
நச்சு அரவு - நஞ்சு அரவு, நஞ்சையுடைய பாம்பை : 
கச்சென - கச்சாக. 
அசைச்சு - அசைத்து - கட்டி, 
மதி - சந்திரனை, 
உச்சியில் - தலையில், 
மிலைச்சு - மிலைத்து, மிலைந்து, 
ஒரு கையான் - ஒரு கையில் 

மெய் - ( பிரமன் ) உடம்பினின்றும் ( கிள்ளிய ) 
சிரம் - தலையை, 
அணைச்சு - தாங்கி, 
உலகில் - உலகிலே, 
நிச்சம் - நாடோறும், 
இடு - இடுகின்ற, 
பிச்சை - பிச்சையை, 
அமர் - விரும்பும், 
பிச்சன் இடமாம் - பித்தனாகிய பெருமானின் இடமாகும். 

மச்சம் - மீனின். 
மதம் - நாற்றத்தை, 
நச்சி - விரும்பி. 
மதமச்சிறுமியை - வலையர் சிறுமியை, அச்சவரதம் - ( அச்சத்ததைத் தரும், விரதம் ) அச்சத்தைத் தரும் கொள்கையின் பயனாக நேர்ந்த.

கொச்சை - கொச்சைத் தன்மைக்கு. 
முரவு - கதறிய . 
அச்சர் - பராசர முனிவர். 
பணிய - வணங்க ( அதுகண்டு ) 
சுரர்கள் - தேவர்களும். 
மிடை - நெருங்குகின்ற

🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐
💠பிற்கால தமிழ் இலக்கியத்தின் அடிப்படையாகவும்,
✳️திருப்புகழ் என்றும்அருள் நூல் தந்த அருணகிரியார் முதலிய ஞானிகள் போற்றிய 
♦️அருட் செல்வர் திருஞானசம்பந்தரின் இறையருள் பெற்ற பதிகப் பாடல்களை போற்றி பரவுதல் செய்வோம்.
🙏நன்றி
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்.🙇‍♂️🙏🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
முன்பதிவு :
https://m.facebook.com/story.php?story_fbid=5833277866747422&id=100001957991710

No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...