Friday, July 2, 2021

வழிமொழி திருவிராகம் - சம்பந்தர் இசையமுதம் - பதிவு 7 பாடல் 7

🙏🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♂️🙏

🗣️வாய்பேச்சுக் கோளாறு இன்றி நல்ல உரையாடல், குரல் வளம் நிச்சயம் கிடைக்க இப்பதிகம் உதவும்.
👱குழந்தைகளுக்கு அவசியம் கற்றுக்கொடுக்க வேண்டிய பாடல்
📚தமிழ் மொழி வளம் உயர்வு உணர்ந்து அறிய உதவும் அற்புத பதிகம் இது.

👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.

🌬️2. இப்பதிவுகளில் உள்ள தேவாரப் பாடல்களை குறைந்தபட்சம் இரண்டு முறைகளாவது வாய் விட்டு உச்சரித்து படித்தல் அவசியம்.

📚3. இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே. 

🌀ஞானசம்பந்தர் அருளிய அற்புத இசைத் தமிழ் பதிகங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.
இத்தகைய பாடல்கள் தமிழரின் இசை பொக்கிஷம்:
#திருவிராகம், #வழிமொழிதிருவிராகம்,
#வண்ணகம் #முடுக்கியல் #அடுக்கியல் 
இவை பற்றி முன்பதிவுகளில் சிந்தித்தோம்.
#வழிமொழிதிருவிராகம் பதிகப் பாடலையும் அதன் விளக்கங்களயும், சிறப்புகளையும் தொடர்ந்து இப்பதிவில் பார்ப்போம்.

🅾️#வழிமொழிதிருவிராகம்:
⏺️இலக்கணம் :
⏏️குற்றெழுத்துப் பயின்று வரும் முடுகிய ஓசையுடையதாய் அடி முதற்சீரின் இரண்டாம் எழுத்து சீர்தோறும் ஒன்றி வழியெதுகையால் வரத் தொடுப்பது இவ்வகையாம்.
(முடுகிய என்பது வேகமாக ஓடும் தாள அமைப்பு எனக் கொள்ளலாம்)

🔸இதன் ஓசை அமைப்பில் பாடல் 

தனனதன தனனதன தனனதன  
              தனனதன தனனதனனா

என அமைகிறது.

 🧿இப்பதிகத்தின் திருக்கடைக்காப்பில் (இறுதிப் பாடலில்) திருஞானசம்பந்தர் 'வழிமொழிகள் மொழி தகையவே' என்று குறிப்பிட்டு சிறப்பிப்பதாலே இந்தப் பதிகம் வழிமொழி திருவிராகம் என்னும் பெயர் சூட்டப்பட்டது.
🔵
🌟ஞானசம்பந்தர் அருளிய அற்புத இசைத் தமிழ் பதிகங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.

🔹சம்பந்தர் தேவாரம் மூன்றாம் திருமுறை: தலம்: திருப்பிரமபுரம்:
பதிகம்: 325 (67) 
பாடல்: 1-12 (714-725)
இந்தப் பதிகம் 12 பாடல்கள் கொண்டது.

🌟சீர்காழிப்பதியின் 12 பெயர்கள் வந்த வழியை - வரலாற்றிணை - விளக்கத் தக்க வகையில் அமைந்துள்ளது.

🌀சாதாரி என்ற பண் வகையினது.

பாடல் 7.

💠சிரபுரம் : திருமால் சிலம்பன் என்ற அசுரனை சிரம் அறுக்க, அந்த சிரம் இரு கிரகமாக நின்று வழிபட்டு நின்று பூசித்த தலம்.

✳️'ர' சீரில் அமைத்துள்ளார்.

பாடல். 720.

அரணையுறும் முரணர்பலர் மரணம்வர  
இரணம்மதில் அரமலிபடைக்
கரம்விசிறு விரகன்அமர் கரணனுயர் பரனெறிகொள் கரனதிடமாம்
பரவமுது விரவவிடல் புரளமுறும் அரவை யரி சிரம் அரியஅச்
சிரம்அரன சரணம்அவை பரவஇரு கிரகம் அமர் சிரபுரமதே.

                                         -03.325:07 (720)
பொருள் :
மும்மதில்களை அரணாகக் கொண்ட அசுரர்கள், பலரும் மாண்டு அழியுமாறும், இரணங்கள் கொண்டு நலியுமாறும் துன்புறுத்தினர். அத்தகைய தீயோரை அழித்துத் தன்னை அடைந்தவர்களைக் காப்பவரும், வலிமையான அரண் படையைக் கொண்டுள்ளவரும் நற்கதி அருளுபவரும் சிவபெருமான் ஆவார். அவர் வீற்றிருக்கும் இடமாவது, எல்லாராலும் போற்றப்படுகின்ற அமுதத்தைப் பாற்கடலில் இருந்து கடைந்து தருவித்த காலத்தில், தனக்கும் வேண்டும் எனப்பந்தியில் வந்த பாம்பின் சிரத்தினைத் திருமால் அரிந்து வீச, அச்சிரமானது அரனைச் சரணம் அடைந்து இரண்டு கிரகங்களாகப் பொலியும் சிரபுரம் ஆகும்.

விளக்கம்:
அரணையுறும் - மதிலைப்பொருந்திய, முரணர் - திரிபுரத்தசுரர்களால். 
பலர் மரணம்வர - பலருக்கு மரணம் நேர. இரணம் - காயங்கள் முதலியன உண்டாக்கித் துன்புறுத்தும், 
மதில் - அம்மதிலின்மேல். 
அரமலி படை - அரத்தால் அராவப்பட்ட ஆயுதத்தை, 

கரம் - கையினால். 
விசிறு - ஏவிய, 
விரகன் - சமர்த்தனும், 
அமர் கரணன் தன்னை அடைந்தவருக்கு கரணங்களின் சேட்டையை அடக்குவிப்போனும். 
உயர்பரன் - யாவரினும் உயர்ந்த மேன்மை உடையவனும் ). 
நெறி கொள்கரன் அது - உபதேசிக்கும் முறையைக் கொண்ட திருக்கரத்தை உடையவனுமாகிய சிவபெருமானின், 
இடமாம் - தலமாகும். 

பரவு - துதிக்கத்தக்க. 
அமுது - அமிர்தம், 
விரவ - தனக்குக்கிடைக்கும்படி 
உறும் அரவை - பந்தியில் வந்த பாம்பை. விடல் - விடத்தோடு. 
புரளம் உறும் - புரளுதல் உறும், 
அரிசிரம் அரிய - திருமால் அதன்தலையை வெட்ட. 
அச்சிரம் - அந்தத் தலையானது, 
அரன் - சிவபெருமானது, 
சரணமவை - பாதங்களை, 
பரவ - துதித்ததினால் 
இருகிரகம் - இரண்டு கிரகங்களாக, 
அமர் - நவக்கிரக வரிசையில் அமரச்செய்த, 
சிரபுரம் - சிரபுரமாம். 

🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐
🎶மிக அற்புதமான பாடல். மிக மிக முக்கியமானது. 

🌟இப்பாடலை திரும்பத் திரும்ப ஒதிக்கொண்டுவந்தால் நாவிற்கும் உள்ளத்திற்கும் அருமருந்து. 

⏺️சந்தப்பாக்களின் சீர்களில் ஒவ்வொர் உயிரும் ஓரசை என்பதால் ஓசை நயமும் தாளமும் நிறைய அமைத்துள்ளதை நாம் சிந்திக்க வேண்டும்.
⏺️ ஒவ்வொறு பாடலிலும் சீர்காழி பதியின் பெயரில் வரும் ஒரு தமிழ் எழுத்தை பாடல் முழுதும் சிறப்புடன் சீர் அமைத்துள்ளது மிகவும் அற்புதமானது. 

🔷இது போன்ற சந்தப் பாடல்களை கற்றுணர்ந்து அருணகிரியார் தம்முடைய திருப்புகழ் பாடல்களை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

🔹திருஞானசம்பந்தப்பிள்ளையாரை முருகனின் திரு அவதாரமாகக் கொண்டவர் அருணகிரிநாதர். இதைக் குறிப்பிட்டு தம்பாடல்களில் சிறப்பு செய்துள்ளார். 

✔️இராமலிங்கசுவாமிகளும் இக்கருத்தை ஏற்கிறார்.

💠பிற்கால இசைத் தமிழ் இலக்கியத்தின் அடிப்படையாக அமைந்தப் பாடல்கள்

♦️அருட் செல்வர் தமிழ் விரகனார், திருஞானசம்பந்தரின் இறையருள் பெற்ற இப் பதிகப் பாடல்களை போற்றி பரவுதல் செய்வோம்.

📚பாடல்,பொருள்,விளக்கம் பல நூல், தரவுகளிலிருந்து தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

🛡️சிந்தனைக்கும் எட்டாத ஞானசம்பந்தரின் அற்புதத் தமிழின் இசைப்பாடல் சிறப்பை உணருவோம். இதுவே, தமிழரின்பொக்கிஷம்.

🙇‍♂️நன்றி🙏
🛐💚🕉️🧡☸️💜⚛️💙🔯💛🙏🙆🏼🙇🏼‍♂️
என்னமும் தகவல் ஆக்கமும், தொகுத்து வழங்குவது:

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
பதிவு: ஒன்று பாடல் 1
https://m.facebook.com/story.php?story_fbid=5787884447953431&id=100001957991710
பதிவு : இரண்டு : பாடல் 2
https://m.facebook.com/story.php?story_fbid=5795841430491066&id=100001957991710
பதிவு : மூன்று : பாடல் 3
https://m.facebook.com/story.php?story_fbid=5800911013317441&id=100001957991710
பதிவு : நான்கு: பாடல் 4
https://m.facebook.com/story.php?story_fbid=5805963462812196&id=100001957991710
பதிவு : ஐந்து: பாடல் 5
https://m.facebook.com/story.php?story_fbid=5810152739059935&id=100001957991710
பதிவு: ஆறு: பாடல் 6
https://m.facebook.com/story.php?story_fbid=5815070398568169&id=100001957991710

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்)பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம் #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024 #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️29. வைக்கம் சிவன் கோவில்(Vaikom Temple):

#KERALAYATRA2024 பகுதி - 5- வைக்கம் - (எர்னாகுளம்) பதிவு - 25 - #சுப்ராம்ஆலயதரிசனம்  #சுப்ராம்ஆலயதரிசனம் 13.8.2024  #பயணஅனுபவக்குறிப்புகள்🕊...