Saturday, July 10, 2021

வினாவுரை - சம்பந்தர் அமுதம் பதிவு 1. திருத்தெளிச்சேரி - 1.

#சம்பந்தர்அமுதம்
#தலப்பெருமை #பேரருட்திறன்
#வினாவுரை
              
🌈#அமுதப்பதிகங்கள்   
              அமைப்புச்சிறப்புகள்

 🔯திருஞானசம்பந்தரின் பதிக அமைப்பு முறை பற்றிய பொதுவான சில குறிப்புகள்:

🔱திருஞானசம்பந்தர் தம் திருப்பதிகப் பாடல்களில் ஒரு பக்கம் இறையருளின் அருட்செயல்பாடுகளை, அற்புதங்களை உணர்த்தியவர்; மறுபுறம், தமிழ் இலக்கியத்திற்கு பல்வேறு புதுமைகளையும் சிறப்புகளையும் கொண்ட புதுமையான பாடல்கள் அமைப்பையும் முதன்முதலில் கொண்டுவந்தார் என்பதும் வரலாறு.

🔱திருஞானசம்பந்தர் பெருமான் அருளிய பாடல்களில் தற்காலத்தில் நமக்குக் கிடைக்கப் பெற்றது 4146 பாடல்கள் மட்டுமே. 
🔱இவை 226 தலங்கள் பற்றியருளியது.
மொத்தம் 386 பதிகங்கள்.
ஒரு பதிகத்தில் 10, அல்லது 11 அல்லது 12 பாடல்கள் அமையப்பெற்றிருக்கின்றன.
🔱23 பண்களில் அமைக்கப் பெற்றுள்ளது.
 
#தலச்சிறப்பு _போற்றுதல்:

🌐ஞானசம்பந்தர், பாரதமெங்கும், குறிப்பாக தமிழகம் முழுதும் பல்லாயிரம் ஆலயங்களுக்கு சென்று பதிகங்கள் பாடி பல்வேறு அருட்செயல்களையும் புரிந்து, புற சமய நோய் நீக்கி, உண்மை இறையருளை உலகிற்கு நிலை நிறுத்தியவர்.

🏔️279 தலங்களில் அருளப் 
     பெற்றிருக்கின்றன. 

🛐7 பொது பதிகங்களாகும். 

இப்பதிகங்களை மொத்தம் முதல் மூன்று திருமுறைகளாகக் தொகுத்துள்ளர்கள்.

🥇முதல் திருமுறையில் 
135 தலப்பதிகங்கள் மற்றும் 
     1 பொதுப்பதிகம் மொத்தம் 136

🥈இரண்டாம் திருமுறையில்
120 தலப்பதிகங்கள் மற்றும் 
    2 பொதுப்பதிகங்கள் மொத்தம் 122

🥉மூன்றாம் திருமுறையில் 
121 தலப்பதிகங்கள் மற்றும் 
    4 பொதுப்பதிகங்கள் மொத்தம் 125

🌿கடைசியாகக் கிடைத்த 3 தல பதிகங்களும் ஆக 386 பதிகங்கள் அமைத்து மூன்று திருமுறைகளில் வழி. வைக்கப்பட்டுள்ளன.

💫⚡ ஒவ்வொரு பாடல்களிலும் தலத்தின் சிறப்பை, வளத்தை, பெருமையைக் குறித்து வருணனை செய்து போற்றுவது அற்புதமானது.

🙆‍♂️இது பற்றி மேலும், தனித் தனியாக தல ஆராய்ச்சிகள் பல செய்து தமிழ்நாட்டின் தலங்களின் தமிழரின் பெருமையை உயர்ந்த பன்பாட்டை, ஒப்பற்ற ஆன்மீக சிந்தனைகளை, அக்கால நாகரீக வாழ்வியல் முறைகளை, அற்புத மனித நேய செயல்பாடுகளைத் தம் பாடல்களில் நம் தமிழ் விரகனார் அருளியுள்ளதை, இவ் உலகம் முழுதும் விளங்குமாறு, வெளிவரச்செய்ய இன்னும் பல நூல்கள் வேண்டும்.

#வினாவுரை அமைப்பு என்றால் என்ன?
♻️இறைவன் சிறப்புகளை வினவுதல் போல கேள்வி எழுப்பி அதன் விடையை உட்பொருளாக உணர்த்தும் அமைப்பில் பாடல் அமைந்து வருவது. 
இது சம்பந்தப்பெருமானே தனது பாடலில் 'வினாவுரையாக' என்று அமைத்துள்ளார்.

🔱இந்த வினாவை அத்தலத்தில் உரையும் ஈசனை நோக்கியும்,
அத்தல ஈசனை வணங்கும் அடியார் நோக்கியும் வினவுதல் வழி ஈசன் சிறப்பை உரைத்ததும், அதை உணர்த்தும் பாங்கும் எண்ணினால் வியக்கவைக்கும்.

🔱இப்படி வரும் பாடல்களில் தலச்சிறப்பு, அடியார் பெருமை, இறைவன் அருட்பேராற்றல் வெளிப்படுத்தும் தமிழ் விரகனாரின் பாடல் பதிக அமைப்பு மிக அற்புதம்.

🔱பாடல் அமைப்பில் வினவுதல் போல முதலிருவரிகளில் தலச்சிறப்பு சுட்டி இறைவரை விளித்தும், அடுத்த இருவரிகளில் அவர்தம் அருட்பேராற்றலை வியந்து, வினாவுரைப்பாடல்களாக அருளிய அற்புத பதிகங்களைக் குறித்து சிந்திப்போம்.
1️⃣
வினா?
1. அலர்ந்த பூக்கள் கொண்டு தேவர்களால் முப்பொழுதும் வழிபடும் பதி எது?

வேடுவத்திருக்கோலம் கொண்டது ஏன்?
விளக்கம்:
இரண்டாம் திருமுறை 
பதிகம்.2.139
தலம் - திருத்தெளிச்சேரி 
பாடல் முதலடி: 'பூவலர்ந்தன
பண்: இந்தளம்
வினாவுரைப் பதிகம்
பாடல்: 1
பூவலர்ந்தன கொண்டு முப்பொதும் பொற்கழல் 
தேவர்வந்து வணங்குமிகு தெளிச்சேரியீர்

மேவருந் தொழிலாளொடு கேழற் பின் வேடனாம்
பாவ கங் கொடு நின்றது போலுநும் பான்மையே.

பொருள் :
முப்பொழுதும் தேவர் வந்து நின்கழல் வணங்கும் தெளிச்சேரிப்பெருமானே.
பன்றி வடிவ அரக்கனை அழித்து, வேடுவத்திருக்கோலம் பூண்டு உமாதேவியுடன் நின்ற பான்மை விந்தையதே.
(கேழல் = பன்றி)
சிறப்பு:
தேவர்களால் முப்பொழுதும் வழிபடும் சிறப்பு, அர்ச்சுருக்குப் பாசுபதம் அருள் புரிய பன்றி வடிவம் கொண்ட அசுரனை மாய்க்க எடுத்த எளிமைத் திருக்கோலம் வியந்தது.

🛐ஞானசம்பந்தரின் பதிகச் சிறப்பு
 ஒவ்வொரு பாடலும் 4 வரிகள், அதில் முதல் இரு வரிகளில், 
தலச்சிறப்பும், அடுத்த இரு வரிகளின் இறைவரின் அருட்சிறப்பும் வெளிப்படுத்தும் அற்புத பதிகம்.

🔯முதல் இருவரிகளில் ......

1.திருத்தளிச்சேரி தலத்தின் இயற்கை வளம் பக்திச் சிறப்பும், மனிதர் மான்பும், குறிப்பிட்டு இப்பதியில் வசிப்பவரே - திருத்தெளிச்சேரியீர் என்ற இறைவரை விளித்தது.

அடுத்த இருவரிகளில்
2.இறைவரின் அருட்பேராற்றலை குறிப்பிட்டு, வியந்து வினவுகிறார்

✡️இது ஒரு அறிமுக பதிவே மேற்படி மூல நூல்களையும் , கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

☸️இவைகளில் சில பதிகங்களின் சிறப்பு பற்றித் தனித்தனியாக சிலக்குறிப்புகளுடனும், பொருள் விளக்கமுடனும் அடியேன் சிந்தைக்கு எட்டியவரை பல்வேறு அறிஞர்கள், சான்றோர்கள் நூல்களிலிருந்து தொகுத்து சில துளிகளாக அவ்வப்போது வழங்கப்படுகிறது. 
பருக விரும்புவோர் ,பொறுமையுடன் சென்று முன்பதிவுகளைப் பார்க்கவும்.

🔯படித்துப் பலன் பெறுங்கள்.
 தமிழின் வளத்தை, சிறப்பை, பக்திப் பெருமையை உணருங்கள்; உலகுக்கு உணர்த்துங்கள்.

 தொடர்ந்து சிந்திப்போம்..... ......

🙏நன்றி🙇‍♂️     
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🙇‍♂️🙏🙇‍♂️🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽

No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...