Wednesday, September 24, 2025

ஆனைமலை - அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோவில் - கொங்குநாட்டுத்தலங்கள் - பிரதோஷக்குழு யாத்ரா 14.9.25

ஆனைமலை - அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோவில்,

ஆனைமலை - அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோவில்,  

தமிழ்நாட்டில், கோயம்புத்தூர் மாவட்டத்தின் பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் அமைந்துள்ளது. இந்த ஆலயம், ஆழியாறு சங்கமிக்கும் ஆனைமலைக் குன்றின் அடியில் அமைந்துள்ளது. மற்றும் பல பக்தர்களால் சக்தி வாய்ந்த அம்மன் கோயிலாகப் போற்றப்படுகிறது. 

கோயம்புத்தூர் - ஆனைமலை, - பொள்ளாச்சிக்கு தென்மேற்கே சுமார் 24 கி.மீ. தொலைவில் உள்ளது. 

கோவில் சிறப்பு:

இந்தக் கோயில், ஆனைமலைக் குன்றின் அடிவாரத்தில் ஆழியாறு சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது.

அம்மன் கோயில் அமைந்துள்ள பகுதி, ஒரு காலத்தில் மயானப் பகுதியாக இருந்ததாகவும், அதன் காரணமாகவே அம்மன் "மாசாணி" என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. 

பக்தர்களின் நம்பிக்கை:

மாசாணி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் என்றும், பக்தர்களின் கவலைகளையும், பயங்களையும் நீக்கி நல்வாழ்வை அருளும் தெய்வம் என்றும் நம்பப்படுகிறது.

பல பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை அம்மனிடம் சமர்ப்பித்து, மன அமைதியையும், நல்வாழ்வையும் பெற இங்கு வருகிறார்கள். 

பயண அனுபவ குறிப்புகள்.

14.09.25 காலையில் ஆலயம் சென்றோம்.

இந்தப் பகுதி முழுவதுமே, ஆலயப்பகுதி போலவே உள்ளது.

வாகனங்கள் ஆலயத்தின் இரண்டு புறங்களில் நல்ல வசதியாக நிறுத்த முடியும்.

ஏராளமான சிறு கடைகள் உண்டு. வளாகம் முழுதுமே கடைகளும், பக்தர்கள் மட்டுமே.பக்தர்கள் வசதியை முன்னிட்டு தனியாக குளியல் கழிவறைகள் பெரிய மண்டபத்துடன் கட்டியுள்ளார்கள்.

ஆலயம் முன்புறம் நிறைய இடம் உள்ளது.

7 நிலை ராஜகோபுரத்துடன் இணைக்கப்பட்ட மிகப்பெரிய மண்டப வளாகத்தில் 

வடக்கு நோக்கிய கருவரை மண்டபத்தில்

சயன கோலத்தில் மாசானி அம்மன். உள்ளங்கால் பாதம் தரிசனம் செய்யலாம்.

சிறிய அளவில் உற்சவர் சிலை முன்புறம் உள்ளது. இந்த அம்மனுக்கு மட்டும் , அபிஷேகம் நடைபெறுகிறது.

மண்டபத்தின் இருபக்கங்களிலும் (பொதுவழி, சிறப்பு வரி) வரிசை கம்பிகள் வழியாக உள்ளே சென்று அம்மன் தரிசனம் செய்ய வேண்டும்.

மிளகாய் அறைத்து பூசூம் இடம் அம்மன் முன்புறம் கிழக்குப் பகுதியிலேயே உள்ளது தனி வரிசை. கட்டணவரிகளும் உண்டு.

ஆலயம் பின்புறம் ஆறு ஓடுகிறது.

ஆற்றின் கரை ஓரத்தில் ஆற்றுவிநாயகர் ஆலயத்தில் சிவன், பெருமான், அனுமான் முதலிய சன்னதிகள் தனித்தனியாக உண்டு.

சிறு பொருட்கள், விளையாட்டு, ஆலய பூசை சாமான்கள் கடை ஏராளமாக உள்ளது.

மீள் தரிசனம். ஏற்கனவே வந்த போது இருந்த அமைப்பு முழுதும் மாற்றம்.

விரிவுபடுத்தப்பட்ட மண்டபங்கள், பக்தர்கள் தங்குமிடங்கள் என்று 

வளர்ந்து வருகிறது.

14.09.2025 #சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

No comments:

Post a Comment

திருஆவினன்குடி - குழந்தை வேலாயுத சுவாமி -பிரதோஷக்குழுயாத்ரா 14.9.25 - கொங்குநாட்டுத்தலங்கள்

திருஆவினன்குடி - குழந்தை வேலாயுத சுவாமி திருஆவினன்குடி - குழந்தைவேலாயுத சுவாமி திரு என்ற இலக்குமி தேவியும், ஆ என்ற காமதேனுவும், இனன் என்ற சூ...