கோயம்புத்தூர் மாவட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மருதூர் எனும் ஊராட்சிக்குட்பட்ட குக்கிராமமான குருந்தமலையில் இக் கோயில் அமைந்துள்ளது.
கோயம்புத்தூர்-மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் (தேசிய நெடுஞ்சாலை 67) காரமடை வரை சென்று அங்கிருந்து இக்கோயிலுக்குச் செல்லலாம். மேட்டுப்பாளையத்திலிருந்தும் இக் கோயிலுக்குச் செல்லலாம்.
கோயில் அமைப்பு
குருந்தமலை அடிவாரத்தில் ஐந்துநிலை இராஜகோபுரத்துடன் கூடிய நுழைவாயிலைத் தொடர்ந்து மலையேறிச் செல்ல நன்கமைக்கப்பட்ட படிக்கட்டுகள் தொடங்குகின்றன.
படிக்கட்டுகளின் இருபுறமும் இராஜகம்பீர விநாயகர் சன்னிதி, கன்னிமார் சன்னிதி, நாகர் சன்னிதி, பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி சன்னிதி, இடும்பன், கடம்பன், வீரவாகு-மூவரின் சன்னிதிகள் உள்ளன. அவற்றைத் தாண்டியதும் படிக்கட்டுகளின் ஒருபுறம் காசிவிசுவநாதர் சன்னிதி விசாலாட்சியம்மனுக்குத் தனி சன்னிதியுடனும் மறுபுறம் தீபத்தூண் மற்றும் இராஜநாகலிங்க சன்னிதியும் அமைந்துள்ளது.
இவ்விருவர் சன்னிதிகளைச் சுற்றி சூரியன், பஞ்சாட்சர கணபதி, பஞ்சலிங்கம் சன்னிதி, வள்ளி-தேவானை உடனுறை சண்முகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேசுவரர், நவக்கிரக, காலபைரவர், சந்திரன் ஆகியோரின் சன்னிதிகள் உள்ளன.
காசிவிசுவநாதர் சன்னிதி தாண்டி மேலே குழந்தை வேலாயுதசாமி சன்னிதி இராஜகோபுரத்துடன் சுற்றுப் பிரகாரத்துடன் அமைந்துள்ளது. கருவறையில் மூலவர் குழந்தை வேலாயுதசாமி மேற்கு நோக்கியுள்ளார்.🌐
கோயில் வரலாறு
தல பெருமை கொங்கு நாட்டில் புகழ்பெற்ற வணிகர் சமுதாயம் 500ஆம் செட்டியார்கள் சுமார் 750 ஆண்டுகளுக்கு முன் இந்த கதை நடந்தாகக் கூறப்படுகிறது.500 ஆம் செட்டியார் சிலர் மிளகு ,இலவங்கம் கிராம்பு இவற்றை சேரநாட்டில் வாங்கி, அட்டபாடி ,குருந்தமலை ,பெள்ளாதி , சத்தியமங்கலம் வழியாக மைசூர் சென்று வணிகம் செய்தனர், அவ்வாறு ,ஒருதடவை பொதிமாடுகளில் மிளகு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்தபோது குருந்தமலை அடிவாரத்தில் தங்கி இருக்கிறார்கள் .
அப்பொழுது ஒரு சிறுவன் அங்கு வந்து இவைகள் என்னமூட்டைகள் என்று கேட்க ,வணிகர்கள் தவிட்டு மூட்டைகள் என்று கூறினாராம் ,சிறுவனும் ,ஓ தவிட்டு மூட்டைகளா என்று கேட்டுவிட்டுச் சென்றுவிட்டானாம். மறுநாள் வணிகர்கள்.மூட்டைகளைப் பிரித்துப்பார்த்தபோது அவை தவிட்டு மூட்டைகளாக இருந்தன .செட்டியார்கள் வருந்தி இது குருந்தைக்குமரனின் விளையாட்டு என்று உணர்ந்தனர்.
குருந்தமலை வந்து வணிகர்கள் வணங்கி வேண்டினர்.முருகன் மன்னித்து ,மீண்டும் அவற்றை மிளகு மூட்டைகளாக ஆகினான் ,செட்டியார்கள் குழுவின் தலைவராக இருந்த கங்காதரன் செட்டியார் குருந்தமலை முருகனுக்கே தம்மை முற்றிலுமாக அர்ப்பணித்துக் கொண்டார்
.மலையில் திருக்கோயில் அர்த்தமண்டபம்,சிவாலயம் முதலிய திருப்பணிகள் செய்துள்ளார். தம்முடைய ஒரே மகனுக்கும் குழந்தை வேல் என்று பெயர் சூட்டினார். பின்னர்,திருக்கோயிலுக்கு மேற்கில் உள்ள குகையில் இறங்கி சமாதி அடைந்துவிட்டாராம்.
ஆலயத்தில் தேர் திருவிழா பிரசித்தம்
கீழ் பகுதியில் அனுமன் சன்னதி உள்ளது அப்பகுதியில் இரண்டு மூன்று சுனைகள் உள்ளன.
உயரமான மலைக்குன்று சாலைகள் சிறப்பு. வாகனங்களில் சென்று ஆலயத்தை அடையலாம். சுமார் 100 படிகள் வசதியாக ஏறி தரிசனம் செய்யலாம். முதியோர்களும் ஏறிதரிசனம் செய்யலாம்.
மேல் பகுயிலிருந்து கீழ் புறநகர் பகுதிகள், இயற்கை அமைப்பும் சிறப்பு. குளியல் கழிவறைகள் ஏற்பாடு செய்யப்ட்டுள்ளது..மிகவும் அமைதியான மன உணர்வு.
13.09.25 சனிக்கிழமை
#சுப்ராம்ஆலயதரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#பிரதோஷக்குழுயாத்ரா 13.09.25
No comments:
Post a Comment