கோவில்பாளையம் - காலகாலேஸ்வரர்
அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோயில் கோவை மாவட்டம், அன்னூர் வட்டம், சர்க்கார்சாமக்குளம் கிராமம், கோயில்பாளையத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் 13ம் நூற்றாண்டை சார்ந்ததாக கருதப்படுகிறது. இத்திருக்கோயிலின் மூலவர் அருள்மிகு காலகாலேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.திருக்கடவூரில் மார்கண்டேயர் உயிரைபறிக்க எமதர்மராஜன் முயன்றபோது சிவபெருமானால் தன் சக்தியை இழந்த எமதர்மராஜன் (காலன்) இத்திருக்கோயிலில் காலகாலேஸ்வரரை வழிபட்ட பின்பு இழந்த சக்தியை மீண்டும் பெற்றார். ஆயுள் ஹோமம், உக்ரஹர சாந்தி, சஷ்டியப்தபூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூர்ணாபிஷேகம்) போன்ற ஹோமங்கள் இத்திருக்கோயிலில் பிரசித்தி பெற்றதாகும். ஒவ்வொரு குருபெயர்ச்சி அன்றும் குரு இலட்ச்சார்ச்சனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.🛕
இது ஒரு சிவன் கோவில் ஆகும். இங்கு சிவன் காலகாலேசுவரராக எழுந்தருளியுள்ளார். இக்கோவிலின் அம்மன் கருணாகரவல்லி (பார்வதி). கொடிமரத்திற்கு அடுத்து வரும் நுழைவாயிலுக்குள் சென்றதும் இடப்புறம் சந்திரனுக்கும் வலப்புறம் சூரியனுக்கும் சிறியதாய் தனிச் சன்னிதிகள் உள்ளன. அடுத்து பலிபீடமும் நந்திதேவரும் உள்ளனர்.🌐
சுவாமி சன்னிதிக்கு இடப்புறம் அமைந்துள்ள கருணாகரவல்லி அம்மன் சன்னிதியின் முன்பகுதியில் இடப்புறம் பூதேவி, ஸ்ரீதேவியுடன் பெருமாளும் வலப்புறம் துர்க்கையும் உள்ளனர். சுவாமி சன்னிதிக்கும் அம்மன் சன்னிதிக்கும் இடையில் வள்ளி தெய்வானையுடன் முருகன் கால சுப்பிரமணியர் என்ற பெயருடன் தனிச் சன்னிதியில் காட்சி தருகிறார். சுவாமி சன்னிதியின் வெளிச்சுற்றுச் சுவரின் பின்புறத்தில் சண்டிகேசுவரருக்கு எதிரில் பிரம்மாவும் உள்ளார். இத்திருக்கோயில் உள்ளே கரிவரதராஜப்பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. சிவன் கோவிலில் விஷ்ணு, பிரம்மா இருவரும் வழிபடப்படுவது இக்கோவிலின் சிறப்பு.
தட்சினாமூர்த்தி மிகப்பெரிய அமைப்பு
கோவில் பிரகாரத்தில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நான்கு நாயன்மார்களின் திருவுருங்களும் தனியிடத்தில் அமைக்கப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது.🌐
தலவரலாறு
விசுவாமித்திரர் தவம் செய்து விசுவாமித்திர முனிவராக மாறிய கௌசிக மன்னர் இத்திருத்தலத்தில் யாகம் செய்ததால் கௌசிகபுரி எனும் பெயர் பெற்றது. யாகம் செய்த இடம் ’திருநீற்றுமேடு’ என்று வழங்கப்படுகின்றது.🌐
எமதேவர்
திருக்கடையூரில் மார்க்கண்டேயரையும் சிவபெருமானையும் அவமதித்ததற்குப் பரிகாரமாக சிவபெருமான் எமதேவனை கொங்கு நாட்டின் கோவில்பாளையத்தில் வழிபடக்கூற, அவ்வாறே இங்கு வந்து தமது தண்டத்தினால் பூமியை அழுத்தி தீர்த்தம் ஏற்படுத்தி, அதனை பயன்படுத்தி மண்ணைக்குழைத்து சிவலிங்கத் திருமேனி செய்து வழிபட்டு பலன் பெற்றார் எமதேவர். தரிசனமளித்த சிவபெருமானிடம் எமதேவர் திருக்கடையூரில் தரிசிப்போருக்குத் தரும் பலனை இத்தலத்தில் தரிசிப்போருக்கும் தர வேண்டினார்.சிவபெருமானும் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டதால் அன்றுமுதல் திருக்கடையூருக்கு இணையான திருத்தலமாக வழிபடப்படுகின்றது.🌐
கரிகால் சோழன்
காரணமின்றி ஓர் இளம் பன்றியைக் கொன்ற பாவம் தீர நாரதர் அறிவுரைப்படி இத்திருத்தலத்தில் வழிபட்டு பன்றியைக் கொன்ற பாவத்திலிருந்து விமோசனம் பெற்றார் மன்னர் கரிகாற் சோழன்.🌐
கரிகால் சோழர் வில், அம்புடன் கூடிய நஞ்சுண்டேஸ்வர சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து திருக்கோயிலைப் புனர்நிர்மாணம் செய்தார்🌐
சிறப்பு
திருக்கடையூர் ஆயுட்காலத்தை நீட்டிக்கும் சக்தி கொண்ட திருத்தலமாகப் பெருமை பெற்றாற்போல இத்திருத்தலம் திருக்கடையூருக்கு இணையாகக் கூறப்படுகின்றது.🌐
மேலும் சில குறிப்புகள்:
ஆலயம் முன்புறம் கல்தீபத்தூன் மண்டபம் உள்ளது.
3 நிலை ராஜகோபுரம் உள்ளது.
சுவாமி, முருகன், அம்பாள் தனித்த சன்னதிகள் அனைவரும் கிழக்குநோக்கிய அமைப்பு.
சுவாமி கருவரை சன்னதிக்கு முன்பு பெரிய நீண்ட மண்டபம் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றது.
பிரார்த்தனை தலமாக விளங்குவதால் அதற்குரிய பூசை முறைகளுக்கு குருக்கள்கள் இருப்பதால் கூட்டம் இருந்து கொண்டே உள்ளது.
ஆலய முன் பகுதியில் இடது புறம் அ/மி. வன்னியப் பெருமான் ஆலயமும், இடது புரத்தில் பொற்கொடியம்மன் ஆலயமும் இணைந்துள்ளன.
13.09.25 சனிக்கிழமை
#சுப்ராம்
13.09.25 சனிக்கிழமை
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#பிரதோஷக்குழுயாத்ரா 13.09.2025
#சுப்ராம்தரிசனம்
# கொங்குநாட்டுத்தலங்கள்
No comments:
Post a Comment