Wednesday, September 24, 2025

அன்னியூர் - மன்னீஸ்வரர் - பிரதோஷக்குழு யாத்ரா 13.9.25 - கொங்குநாட்டுத்தலங்கள்

அன்னியூர் - மன்னீஸ்வரர்
இக்கோயிலின் மூலவராக மன்னீசுவரர் உள்ளார். இவர் அன்னீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். அன்னி என்ற வேடனுக்கு அருள் புரிந்ததால் அன்னீசுவரர் என்றும், பாவச் செயலைச் செய்த அவனை மன்னித்ததால் மன்னீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

இறைவி அருந்தவச்செல்வி ஆவார். 

வள்ளி வனமாக இருந்த இந்தப் பகுதியில் 

அன்னி என்ற வேடன் காட்டில் கிழங்கு வெட்ட முயன்ற போது, லிங்கம் வெட்டுப்பட்டு, ரத்தம் வர, சேர மன்னன் செய்தி அறிந்து மீட்க முயல, அசரீ ஒலித்து பறவை ரூபத்தில் காட்சியளித்ததாக புராணம்.  

சேரரும், ஆலயம் அமைக்க, கொங்கு சோழர்களாலும் மேம்படுத்தப்பட்டது.

ஆலயத்தில் முன் உள்ள கல்தூனில் புராண காட்சி

21 முறை ஆலயம் சுற்றி வந்தால், 21 தலைமுறை புன்னியம் என்பதால், ஆலயத்தில் சுவாமி வணங்கி சுற்றி வருகிறார்கள்.

வன்னி இக்கோயிலின் தல மரமாகும்.

 கோயிலின் தல தீர்த்தமாக அமராவதி உள்ளது. மார்கழியில் பிரமோற்சவம், சித்திரைப் பிறப்பு, வைகாசி பூசை, மகாசிவராத்திரி உள்ளிட்ட பல விழாக்கள் நடைபெறுகின்றன. அமாவாசையில் சிறப்பு பூசைகள் நடைபெறுகின்றன.🌐

கோயில் அமைப்பு

இக்கோயிலில் மூலவர் மன்னீஸ்வரர் சுயம்புவாக, மேற்கு நோக்கிய நிலையில் உள்ளார். அருந்தவச்செல்வி தனி சன்னதியில் மேற்கு நோக்கி உள்ளார். விமானம் கைலாச விமானமாக உள்ளது. திருச்சுற்றில் பைரவர், குரு பெரிய அமைப்பு, நடராஜர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், ஆஞ்சநேயர், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், நீலகண்ட நாயனார் ஆகியோர் உள்ளனர். வன்னி மரத்தின் கீழுள்ள சர்ப்பராசர் சன்னதியில் ஏழு நாகங்கள் உள்ளன.

இங்கு பஞ்ச லிங்கங்களும் உள்ளன.

இங்குக் கோயில் கோசாலை, கோயில் தேர், கோயில் கல்வெட்டு உள்ளன. இக்கோயிலில் ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.🌐

பூசைகள்

மார்கழி மாதம் தேர்த்திருவிழா 1 நாள் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மாசி மாதம் மஹாசிவராத்திரி திருவிழாவாக நடைபெறுகிறது. மார்கழி மாதம் தேர்த்திருவிழா 1 நாள் தேரோட்டம் நடைபெறுகிறது.🌐

அருகில் கரிவரதராஜ பெருமாள் ஆலயம் உள்ளது.

13.09.2025 சனிக்கிழமை
#சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 

#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#பிரதோஷக்குழுயாத்ரா 13.5.25

No comments:

Post a Comment

சுவாமிமலை முருகன் கோவில் (Arulmigu Swaminatha Swamy Temple) அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடு.

சுவாமிமலை முருகன் கோவில் (Arulmigu Swaminatha Swamy Temple) அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடு. ⛳தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே காவிரி ...